Friday, November 01, 2013

ஹைய்யோ!!! என்னப்பா... இது? இவ்ளோ கூட்டமா!!!

Pyrotechnic மூலம்  அரங்கில் பட்டாஸ் கொளுத்தினாங்க.  முதலில் இங்கேயும் தாஜ்மஹல்தான்:-) குளிரில் போய் நிக்காமல் உக்கார்ந்த இடத்தில் இருந்தே பார்ப்பதும் நல்லாத்தான் இருக்கு.  இப்ப இங்கே புதுசா ஆரம்பிச்சுப் பரவும் சமாச்சாரம் இது. பொதுவா  பெரிய நாடகங்கள், இசை நிகழ்ச்சின்னு  குறைந்த பட்சம் இருநூறு டாலர் டிக்கெட் காட்சிகளில் நடக்கும் சமாச்சாரம் இப்போ பொது மேடைகளுக்கு வந்துருக்கு!  (1984-ல் மைக்கேல் ஜாக்ஸன் அவருடைய ஷோ ஒன்னில் இந்த Pyrotechnic பயன்படுத்தினாராம்.

இந்த டெக்னிக் கற்றுக்கொள்ள ரெண்டு நாள்  பயிற்சி வகுப்பு இங்கே எங்கூரில் நடத்தறாங்க. $ 2150 தான்  கோர்ஸ் சார்ஜ்.  வருசத்துலே ரெண்டே முறை ரெவ்வெண்டு நாட்கள் வகுப்பு.

'கணேஷ் வந்தனா'வுடன் நிகழ்ச்சி ஆரம்பிச்சது.  அப்புறம் வழக்கமான  பாலிவுட் டான்ஸ்கள்.  பாங்ரா நடனங்கள், குஜராத்தி கர்பா, கேரளாவின் திருவாதிரைக் களி, மராத்தி லாவணி நடனம், நாடன் பாட்டு ஃப்ரம் கேரளா, 100 years of Indian Cinema ன்னு   தொடர்ந்து வந்த நிகழ்ச்சியில்  இடைக்கிடை  பட்டாஸ் டிஸ்ப்ளே.

காம்பியரிங்  ஸ்டைலுன்னு ஒன்னு  சமீபத்துலே தொடங்கி இருக்கே அதை அனுசரித்து   ரெண்டு பேர் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தறோமுன்னு  மேடைக்கு வந்து பார்வையாளர்களை  அறுத்துத் தள்ளிட்டாங்க.  நம்ம ஊர் பரதநாட்டிய பள்ளி ஒரு ஐட்டம் செஞ்சாங்க. அதை ஏற்கெனவே ப்ரோக்ராம் புத்தகத்தில்  'தில்லான். டமில்  ஃபோக் டான்ஸ்'ன்னு போட்டு வச்சுருக்காங்க. மேடையில் அறிவிச்சது,    'இண்டியன்   ஃபோக் டான்ஸ் ஃப்ரம் த லேண்ட் ஆஃப் ரஜினி'   பாவம் அந்த டீச்சர்:(  லால்குடி ஜயராமன் அவர்களின் தில்லானா பட்ட பாடு!

நிகழ்ச்சிக்குப்பிறகு அவரைப் பார்த்தபோது ,  பரத நாட்டியத்தைப்போய் இப்படி இண்டியன் ஃபோக் டான்ஸ்ன்னு சொல்லிட்டாங்களேன்னா........   ஐயோ இண்டியான்னா சொன்னாங்க. நான்  ஸ்ரீலங்கன் ஆச்சேன்னாங்க. போதுண்டா சாமின்னு இருந்தது எனக்கு.  அப்படியே நடனம் நல்லா இருந்ததான்னு கேட்டவரிடம், அடுத்த முறை ஒரு சேஞ்சுக்கு பாலமுரளியின் தில்லானா ஆடுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.


ஒடிஸா குழு முகமூடி நடனம் என்று ரெண்டு  ஐட்டம் ஆடுனாங்க. ஆடுமுன் அதற்கான விளக்கம் ஒன்னும்கொடுக்கலை.  Trinetra Chhau Dance Centre இண்டியன் கவுன்ஸில் ஃபார் ஆர்ட் அண்ட் கல்ச்சர் ரிலேஷன்ஸ்  வகையில் இப்போ  நியூஸியில்  முக்கிய நகர தீபாவளியில் ஆடி மகிழ்விக்க வந்துருக்காங்க.  நாம்  எடுத்த படங்களும் சரியா வரலை:(இந்தவகை நடனங்களை சண்டிகர் வாழ்க்கையில் சிலமுறை பார்த்திருக்கிறேன்.  காவடி போல பெரிய அளவில் உள்ளமுகமூடிகளை வச்சு ஆடுவாங்க.  இதற்கான இசையும் அட்டகாசமாக ஒரு கிராமியத்தனத்துடன் இருக்கும்.   பெரிய முரசு போன்ற ட்ரம், சின்ன கெட்டில் ட்ரம்ஸ், ரெட்டை நாயனம் போல ஒரு வகை ஷனாய்ன்னு ...... ஒருவேளை வெளிநாடுகளுக்கு  அவற்றையெல்லாம் கொண்டு வர சிக்கலிருந்ததோ என்னவோ!

மேலே உள்ள படம் சண்டிகரில் எடுத்தது.

மொத்தம் முப்பத்தி மூணு ஐட்டங்களில்   முதல் ரெண்டு மூணு முடிஞ்சதும் மேயரும்,  மற்ற சில கவுன்ஸிலர்களும்,  ஓசைப்படாமல் எழுந்து போயிட்டாங்க.  ஒவ்வொரு  மூணாவது  நிகழ்ச்சியும் பாங்ராவா இருக்கும்படி 'பார்த்து' அமைச்சிருந்தாங்க போல.  பாங்ரான்னு அறிவிச்ச அடுத்த விநாடியே  அரங்கத்தில்   அங்கங்கே இருக்கும் அத்தனை பஞ்சாபிகளும் வேலை மெனெக்கெட  இறங்கிப்போய்  மேடைக்கு முன்னே இருக்கும் இடத்தில் குவிஞ்சு நின்னு  கூடவே ஆடுறாங்க.  சோம்பல் என்பதே இல்லை. இருட்டானாலும்  டோண்ட் கேர். ஆடியே ஆகணும். எதோ ரிச்சுவல் மாதிரி  ஒவ்வொரு முறையும் வந்து ஆடிட்டு இருக்கைக்குத் திரும்பியது ,  ஒற்றுமையைக் காமிக்குதோ?

பாலிவுட் டான்ஸ் என்ற பெயரில்  எல்லா நடனக்குழுவும் தனித்தனியா வந்து லுங்கி டான்ஸ் ஆடிட்டுப் போனாங்க. சலிப்பா இருந்துச்சு.  போதாக்குறைக்கு   பேஷன் ஷோ  என்ற பெயரில்  அங்கங்கே கேப் ஃபில்லர் போல நாலைஞ்சு முறை. ஆனாலும் ஃபிஜி இண்டியன்ஸ் நடத்திய ஜல்ஸா அளவுக்கு இது மனதைக் கவரவில்லை:( மராத்தி லாவணி மொத்தத்தில் சூப்பர்!  பூனா வாழ்க்கை நினைவுக்கு வந்தது!
நம்மூரில்முதல்முறையா ஆடி இருக்காங்க. வெல் டன்!

ஒன்னு சொல்லணும், இந்த வருச  இண்டியன் க்ளப் செயற்குழு அட்டகாசமா  எல்லா ஏற்பாடுகளையும்  பண்ணி இருந்தாங்க.  உழைப்பு நல்லாத் தெரிஞ்சது.  ஒடிஸா குழுவைத் தவிர்த்து ஆடியவர்கள் அனைவரும் தொழில்முறை ஆட்டக்காரர்கள் அல்ல.  ஆறுமாசம்  வீக் எண்டுகள் தவறாமல் பயிற்சி எடுத்துருக்காங்க.  ரெண்டு கேரளா க்ளப்பும் தனித்தனி கடைகளும் ஐட்டங்களுமா ஜமாய்ச்சாங்க.

மக்கள் வருகை  இருபதாயிரமுன்னு  மைக்கிலே சொன்னதை நாம் பொருட்படுத்த  வேண்டாம். அவ்ளோ கூட்டம் இங்கே ஏது?   நாம் ரெண்டால் வகுத்துக்கலாம். பிரச்சனை இல்லை:-)   அந்தப் பத்தாயிரத்தை  மீண்டும்  ரெண்டால் வகுத்தால் நம்மாட்கள்.  இவ்ளோ இந்தியர்களை ஒருசேரப் பார்ப்பது இதுவே முதல் முறை!  நிறையப் புது முகங்கள்.  பஞ்சாப், ஆந்திரா, கேரளா என்னும் வரிசையில் இருக்கலாம்.

எட்டரை மணியாகுதே. எதாவது சாப்பிடலாமுன்னு  அடுத்த பகுதிக்குப்போனால் நம்ம தோசைக் கடையில்தான்  வரிசை கட்டி நின்னு வாங்குது சனம்.  வேறெதாவது  சாப்பிடலாம்னு பார்த்தால் பாவ்பாஜி இருக்கு. பேல்பூரி, பானி பூரி எல்லாம் காலி.  கேரளா க்ளப் ஜஸ்ட்டின் , நம்மைப் பார்த்ததும் கையோடு இழுத்துக்கொண்டு போய் கடையில் விட்டார். தோசை, சட்டினி சாம்பார், ஆளுக்கொரு  மேங்கோ லஸ்ஸி.  சாப்பிட்டு முடிச்சுக் காசு கொடுத்தால்..... யாருமே வாங்கிக்க மாட்டேங்கறாங்க. ஒரே குடும்பத்துலே காசு எதுக்குன்னு பதில் வருது!

ஓசிச் சாப்பாட்டுடன் தீபாவளி ரெண்டு இனிதே முடிந்தது.

நாளையும் மற்ற நாளும் ப்ரைவேட் தீபாவளி.  நாலு  இடத்தில் கொண்டாடணும்.  நாளை பகல் நம்ம வீட்டில், மாலை இன்னொரு தோழி வீட்டில் பூஜை. ஞாயிறு இன்னொரு தோழி வீட்டில் பாட்லக் லஞ்சு. அன்று மாலை கோவிலில் இப்படி.

 இவ்ளோ பிஸியா இருந்தாலும்  இருட்டுனதும்  கொஞ்சம் கம்பி மத்தாப்பு (போன வருச ஸ்டாக்)  கொளுத்தணும்.டே லைட் ஸேவிங்ஸ் இருக்கு. இருட்ட எப்படியும் பத்தாகிரும்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்து(க்)கள்.

PINகுறிப்பு : ஒரு வாரம் தீபாவளி விடுமுறை விட்டுறலாமா?  விரலுக்கு ஓய்வு வேணுமாம்:-)
13 comments:

said...

படங்கள் அட்டகாசம் .
உங்களுக்கும் கோபாலுக்கும் எங்கள் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்.

said...

ரசித்தேன்...

இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

said...

அட்டகாசம்தான் போங்க!

said...

வண்ணமயமான பகிர்வு... படங்களுடன் செய்திகளையும் ரசித்தேன்....

இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள் டீச்சர்.. விரலுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்க...

Anonymous said...

நாங்களும் கண்டு ரசித்தோம்.
புகைப்படங்கள் அழகு.

said...

கண்ணைக் கவரும் புகைப்படங்களுடன் தீபாவளியை அட்டகாசமாகக் கொண்டாடி இருக்கிறீர்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

said...

அக்கா!
கலக்கல் தீபாவளி கொண்டாட்டம்.
உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

said...

மங்களம் பொங்கும் திருநாளாக
மனதினில் இந்நாள் நிலைத்திடவே
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
அனைவருக்கும் என் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

said...

அருமையானதோர் பதிவு

said...


'இண்டியன்னா சொன்னாங்க நான் ஸ்ரீலங்காவாச்சே!'.. ஒசைப்படாமல் இடையே புகுந்த நகைவெடி.. first class!

said...

ஹைய்யோ.. லாவணியும் பாங்க்ராவும். எனக்கு ரொம்பப் பிடிக்கும் :-)

said...

இனிய தீபாவளி வாழ்த்துகள் டீச்சர்.

எவ்வளவு பெரிய நிகழ்ச்சி. எத்தனை பெரிய ஆட்டங்கள்.

என்னதான் இருந்தாலும் இந்த விஷயத்துல தமிழ்நாடும் கர்நாடகவும் வேஸ்ட்டு போல.

நீங்க நலமடஞ்சு நிறைய பதிவுகள் எழுதுறது மகிழ்ச்சியா இருக்கு :)

said...

சூப்பர் கொண்டாட்டம். கண்டு மகிழ்ந்தோம்.

இனிய வாழ்த்துகள்.