Friday, May 24, 2013

கண்களுக்கு...........








நம்ப  கூவம் எப்போ இப்படி ஆகும்?





 குழந்தைகளின்  கைவண்ணம்!






 ஐ ஸோர் :(  மாடர்ன் ஆர்ட் என்ற வகையில் இப்படி ஒன்னைக்கொண்டு வந்து இயற்கையின் அழகையே கெடுத்து வச்சவர்  மட்டும்.... இப்போ  கண்ணுலே ஆப்டணும்.....  விக்டோரியா சதுக்கத்தில் வைக்கணும் என்று  ஏற்பாடு செய்திருந்த இந்த 'ஆர்ட்'  நிலநடுக்கம் வந்து  சதுக்கம் முழுசுமே பாதிக்கப்பட்டதால்  இங்கே வந்துருச்சாம்:(  கெட்ட சகுனமுன்னு நினைச்சுத் தூக்கிப் போட்டுருக்கக்கூடாதா?  அழகான குளத்தைக் கெடுத்த பாவம்  போய்ச் சேரட்டும்......... 


 

பூத்திருவிழாவுக்காக  ஒரு 13 தனிப்பட்ட அலங்காரங்கள் செஞ்சு வச்சு, விழா முடிஞ்சதும் அகற்றிடுவாங்க.


 மற்றபடி   தோட்டம் முழுசும் எப்போதும் அலங்காரமாகவே இருக்கும்.
 கோடை காலங்களில்   அழகு கூடுதல் என்பது என் எண்ணம்.  இங்கொருவர் அங்கொருவர்  என்று மக்களைப் பார்க்கலாமே தவிர ஏகாந்தமாக  இருக்கவும் சிந்திக்கவும் அருமையான  இடமிது.  நம்பலைன்னா கீழே உள்ள  படங்களே சாட்சி:-)))






















ஏறக்குறைய பாதித்  தோட்டம்  நிலம் ஆடுனதில்   அழிஞ்சு போச்சு. அதனால் புதுசா அமைக்கப்போகும் பகுதியில்  என்னென்ன வரப்போகுதுன்னு   விளக்கி இருக்காங்க. ரொம்ப மகிழ்ச்சியான சமாச்சாரம், தோட்டத்துக்குள்ளே ஒரு நூலகம்! ஏகாந்தமா இருந்து வாசிக்கலாம்!



39 comments:

said...

மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்... நன்றிகள் பல...

வாழ்த்துக்கள்...

said...

தலைப்பில் விருந்து என்கிற வார்த்தையைத்
தவிர்த்திருந்தாலும் பதிவில் அதைக் க(உ)ண்டு ரசித்தோம்
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க ரமணி.

ஆஹா.... விருந்து பலம்!!!

வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள்.

said...

கண்களுக்கும் கருத்துக்கும் விருந்து ..பாராட்டுக்கள்..

said...

மனதுக்கு ......

ப்பா எவ்ளோ அழகா இருக்கு!!! .
அந்த ரெண்டு குட்டீஸ் boட்ல very ச்சுவீட் , ஒரு பூவ பாத்துட்டு இதைவிட அழகா வேற பூ இருக்க முடியாதுனு நெனச்சுட்டே scroll பண்ணா வேற ஒன்னு அத விட அழகா.... அப்புறம் இன்னொன்னு .... கொள்ளை அழகு . நன்றிகள் பல .

said...

தோட்டத்துல நூலகமா... அடி சக்கை !! சூப்பர் தான் போங்க !!

said...

சில வாரங்களுக்கு முன் வீட்டில் ஒருவர் கராத்தே வகுப்பு இறுதிக்கட்ட தேர்வு என்று கொடைக்கானலில் என்று சொல்லியிருந்தார்கள். என்னையும் வலுக்கட்டாயமாக அம்மிணி இழுத்துக் கொண்டு சென்றார்.

கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆண்டு விட்டுச் சென்ற அத்தனை புனிதர்களும் கவனமாக இரண்டு துறைகளை முடிந்தவரைக்கும் கபளீகரம் செய்துள்ளனர்.

ஒன்று நூலகத்துறை
மற்றொன்று சுற்றுலாத்துறை.

தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை மூலமாக கோடி கோடியாக அள்ளமுடியும். ஆனால் அந்த வருமானம் அரசாங்கத்திற்குத்தானே போகும் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியல முதன் முதலாகச் சென்ற கொடைக்கானல் எனக்கு பரிதாபமாகத் தெரிந்தது.

உங்கள் படங்களைப் பார்த்த போது ஏக்கப் பெருமூச்சு தான் விட முடிகின்றது.

said...

அருமையான விருந்து! கூட்டமில்லாத் தோட்டத்திலே சுற்றி வருவது கூடுதல் மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.

said...

நேர்ல பாத்தாலும் இப்படி அழகா இருக்குமா?

said...

கண்ணைகவரும் மலர்களின் படங்கள் !!!!!!
ஆமாங்கா அந்த மாடர்ன் ஆர்ட் கெடுக்குது குளத்தின் அழகை .
இங்கே எங்களுக்கு ஜூலை தான் மலர் திருவிழா ....

said...

ஏகப்பட்ட சந்தோஷத்தைக் கொடுக்கும் பூக்கள்.எத்தனை விதம்பா.!
இத்தனை அழகுக்கும் கேடு வரக்கூடாதுனு அந்த மாடர்ன் ஆர்ட்டை வைத்திருக்கிறார்கள். :)
உண்மையாகவெ என் களுக்கு பசுமையாக மருத்துவம் கிடைத்தது துளசிமா.

said...

நீங்க போட்டோ போட்டிருக்கிற தோட்டத்திலே
ஒரு பதிவர் மா நாடு நடத்தினா
நாங்க ஒரு நூறு பேரு

மொத்தமா விசா வாங்கிட்டு வருவோம் இல்லயா ?

எப்படி ஐடியா ?

அது இருக்கட்டும். எப்ப கூவம் இப்படி ஆகும் அப்படின்னு கேட்டு இருக்கீக...

3013 மே 25 ந்தேதி ஆகும் அப்படின்னு ப்ரச்னம் சொல்லுது.

சுப்பு தாத்தா.

said...

wonderful........

said...

கண்ணுக்கு விருந்தளித்து மனத்துக்கு இதமளிக்கும் அழகுப் பூக்கள். அவற்றை நேர்த்தியாகப் படம்பிடித்து பார்வைக்களித்தக் கைகளுக்குப் பாராட்டுகள்.

said...

கண்ணுக்கு விருந்து மனதுக்கு நிறைவு.
அழகான விருந்து படைத்த உங்களுக்கு நன்றி துளசி.

said...

யம்மாடி..முதல் இரண்டு படத்தைப்பார்த்து மெய்மறந்து போய்ட்டேன் துளசிம்மா.சூப்ப்ப்ப்ப்ப்ப்பர்.

said...

நேர்ல பாத்தாலும் இப்படி அழகா இருக்குமா?


ஏனிந்த சந்தேகம்.

இயற்கையை மக்கள் மட்டுமல்ல. அந்த நாட்டு அரசாங்கமும் அந்த அளவுக்கு நேசிக்கின்றது.

இவர் எழுதிய நியூசிலாந்து புத்தகம் படித்தால் உங்களுக்குப் புரியும்

said...

பூக்களெல்லாம் அழகு கொஞ்சுது..

மாடர்ன் ஆர்ட்!! சகிக்கலை.

said...

வண்ணப்பூக்களின் தோட்டங்கள் கொள்ளை அழகு.

பிடித்துத்தந்த உங்களுக்கு நன்றி.

அதற்குள் நுர்ல்நிலையம் அருமையான ஐடியா.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் இனிய நன்றிகள்.

said...

வாங்க சசி கலா.

கண்ணுக்கு அலுக்கவே அலுக்காதவைகள் வரிசையில் பூக்களும் இடம் இருக்கே!

தோட்டத்தில் நூலகத்துக்கு ஆச்சரியமா? அப்போ பீச்லே இருக்கும் நூலகத்துக்கு என்ன சொல்லப்போறீங்க!!!

உயரமான மாடிக் கட்டிடத்தில் கடலைப் பார்த்தபடி இருக்கும் ராக்ஷஸ கண்ணாடி ஜன்னல்களுக்கு எதிரில் வரிசையா வச்சுருக்கும் இருக்கைகளில் காலைத்தூக்கி மேஜையில்போட்டபடி ஹெட்செட் போட்டுக்கிட்டு பாட்டுக்கேட்டுக்கிட்டே தூங்கும் மக்களை இங்கே பார்க்கலாம். இந்த மக்கள் யாரும் இந்தியருமில்லை, வெள்ளைக்காரர்களும் இல்லை. அப்ப யாரா இருக்குமுன்னு ஊகிச்சுச் சொல்லுங்க பார்க்கலாம்.

இங்கெல்லாம் நூலகத்தில் டிவிடி, ம்யூஸிக், கணினி எல்லாம் இலவசமாப் பயன்படுத்திக்க அருமையான வசதிகள் இருக்கு.

said...

வாங்க ஜோதிஜி.

//தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை மூலமாக கோடி கோடியாக அள்ளமுடியும்.//

இது சத்தியமான உண்மை!

தமிழ்நாட்டில் மட்டுமில்லை இந்தியா முழுசும் குறிப்பாக மோட்சபுரிகளான ஆன்மீகச் சுற்றுலாத் தலங்கள் இருக்கும் அழகைப் பார்த்தால்..... நெஞ்சு வெடிச்சுத்தான் போகுது:(

கொடைக்கனால் இதுவரை போனதில்லை. நீங்கள் சொல்வதைப் பார்த்தால்.... உல்லாசமோ ஆன்மீகமோ எல்லாத்தலங்களின் கதியும் இதுதானா? ஒன்னுபோலவே மோசமாகவே 'பராமரிக்கப்படுகிறது' போல:(

said...

வாங்க ராமலக்ஷ்மி.

தங்கையின் அழகை அக்கா பாராட்டுவது அருமை!

ஆளரவமற்ற இடங்களை இன்னொருநாள் தனியாகப் போடறேன்:-)))

said...

வாங்க xyz.

கேமெரா சொல்வது உண்மை இல்லையோ!!!!!

said...

வாங்க ஏஞ்சலீன்.

ஆமாம்ப்பா.... அது என்ன மாடர்ன் ஆர்ட்டோ:(((((((

உங்க மலர்த் திருவிழாவுக்கு அட்வான்ஸ் வாழ்த்து(க்)கள்.

கோடை காலக் கொண்டாட்டங்களை ரசிச்சு அனுபவிக்கத்தான் வேணும்.

said...

வாங்க வல்லி.

சரியாச் சொன்னீங்க. உண்மையில் அதை திருஷ்டி பரிகாரமாத்தான் வச்சுருக்காங்க போல!!!!

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

நூறு பேருன்னா.... எங்க ஊருக்கு மாபெரும் கூட்டமாச்சே!!!!

சூப்பர் ஐடியா!!!! விரைவில் நிறைவேறணும்!

அப்ப இன்னும் நூறே ஆண்டுகளில் சூப்பர் கூவமா!!!!!! வாவ்.....

said...

வாங்க ஜயதேவ் தாஸ்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

வாங்க கீதமஞ்சரி.

பாராட்டுகளுக்கு கைகளின் /\

said...

வாங்க கோமதி அரசு.

உங்கள் ரசிப்புக்கு எங்கள் நன்றிகள்.

said...

வாங்க ஸாதிகா.

ஊர் முழுசும் நெளிஞ்சு வளைஞ்சு பல பாலங்களுக்கடியில் ஓடும் நதி இது.

அதென்னவோப்பா....... சுத்தமாவே இருக்கு எப்பப் பார்த்தாலும்!!!!

உங்கள் ரசனைக்கு என் பாராட்டுகள்.

said...

நன்றி ஜோதிஜி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அது திருஷ்டி (பூசணி) ஆர்ட்:-)))

said...

வாங்க மாதேவி.

வருகைக்கும் ரசிப்புக்கும் என் நன்றிகள்ப்பா.

said...

நான் யூகிச்சதுவரை பாத்தா penguin , sealion தான் ஆனா கால் மேல கால் போட்டபடினா எப்பிடி .... அதனால நீங்களே சொல்லிடுங்க ..

said...

நீண்ட நாளைக்கப்புறம் உங்கள் தளத்திற்கு வந்தேன். நீங்கள் ஊருக்கு போயிருப்பது தெரிந்தது. நீங்கள் திரும்பி வருவதற்குள் பழைய பதிவுகளைப் படித்து விட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

கண்களுக்கு நீங்கள் அளித்த விருந்தை ரொம்பவும் ரசித்தேன்.

உங்கள் பயணம் இனிமையான பயணமாக அமையட்டும்.

said...

என்ன அப்படியே உத்து பார்த்துண்டு இருக்கீக... என்று இந்த கிழவி பக்கத்துலே வந்தாள்


என்னிக்காவது ஒரு நாளைக்கு இது மாதிரி ஒரு இடத்துக்கு போயி ஏகாந்த சூழ் நிலையிலே ....... என்றேன்.


என்ன விட்டுட்டா ...? என்றாள்.


உன்னை மட்டும் இல்ல உலகத்தையே விட்டுட்டு,.... இது நான்.


உங்களாலே முடியாதுங்க...


ஏன் அப்படி சொல்றே...


அமெரிக்கா வந்தப்புறமும், உங்க பிரண்ட்ஸ் வலைக்கு போயி அவுக என்ன எழுதிராக பாத்துக்கிட்டு தானே இருக்கீக..


ஆமாம்.


ஏகாந்தமாய் இருக்கிறது அப்படிங்கறது மனசுலே எதையும் பற்றி நினைக்காம இருக்கற விஷயம்.


உன்னைசுத்தி ஆயிரம் இருந்தாலும் அதை கவனிக்காம நீங்க பாட்டிலே உங்கள் சோலிய பாத்துகிட்டு இருந்தா அதுவே ஏகாந்தம்


உனக்கு இருக்கிற விவேகம் எனக்கு இல்லையே...


சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
New Jersey.

said...

படங்களுடன் அருமையான பதிவு, தொடர வாழ்த்துக்கள் !

நீங்கள் சிங்கப்பூர் வந்து இருந்தீர்களா ?! நான் இரண்டு வாரமாக இங்குதான் இருக்கிறேன், ஆஹா உங்களை சந்திக்க முடியாமல் போனதே....