Wednesday, October 24, 2012

நவராத்ரிக்கு நட்ட நடுவில் ஒரு தீவாலி!!!!" ஏய்...யாரங்கே... நாளைக்கு தீவாலி கொண்டாடிக்கோ."

"என்னங்க ஏமான்... இப்பதான் நவராத்ரி ஆரம்பிச்சுச் சரியா அஞ்சாம் நாள் விழா நடந்துக்கிட்டு இருக்கு. இப்பப்போய்.... இன்னிக்கு பஞ்சமி. அடுத்த அமாவாசை வரைக்கும் காத்திருக்கலாமே..."

"ஏய்.... காசு தர்றவன் நான். உதவிக்கு(??) ஒரு ஆள் தர்றவன் நான். உனக்கு பண்டிகை கொண்டாடிக்கணுமா வேணாமா? நல்லா யோசிச்சு சட்னு பதில் சொல்லு."

"அது இல்லைங்க ஏமான்.... பண்டிகைக்கு சில சாஸ்த்திரம் விதிகள் இப்படி இருக்குல்லே......."

"உங்க ஆளுங்க மட்டும் கொண்டாடிக்கிட்டாப் போதுமுன்னா அது சரி. இப்ப நாடே கொண்டாடப்போகுது. மத்த ஊர்களில்  கொஞ்சம் சீக்கிரமா முடிச்சுடறோம். போனாப்போகுதுன்னு  இந்த ஊருலே  ரெண்டு வாரம் பிந்தி வச்சுருக்கேன். என்ன சொல்றே? வேணுமா வேணாமா?"


குபேரன் சொல்லைத் தட்ட முடியுதா?

 "  சரிங்க ஏமான். எல்லாம் உங்க விருப்பம் போலவே செஞ்சுறலாம்."

நியூஸிலாந்து தொழிலாளர் தின அரசு விடுமுறை எப்பவும் அக்டோபர் மூணாவது வாரக்கடைசியில் லாங் வீக் எண்டா வரும். அன்னிக்கு வச்சுக்கலாம் விழாவைன்னுட்டாங்க.

" அக்டோபர் முதல்வாரக்கடைசியில் ஆக்லாந்து நகரிலும், ரெண்டாவது வாரக்கடைசியில் வெலிங்டன் நகரிலும் கொண்டாடறாங்க.  உங்க அதிர்ஷ்டம் லாங்வீக்கெண்டா கிடைச்சுருச்சு!!!!"

"சரிங்க ஏமான். சரிங்க ஏமான்."


நாலு மாசத்துக்கு முன்னே (22 ஜூலை 2012)  'மீட்டிங் வச்சுருக்கு  வா' ன்னதும் போனோம். நல்ல மழையும் குளிருமான மாலை நேரம். எங்களுக்கு இங்கே விண்ட்டர் சீஸன். அதுவும் மிட் விண்ட்டர்.  சிட்டிக் கவுன்ஸில் ஏற்பாடு செஞ்ச ஈவண்ட் மேனேஜர், மீட்டிங் நடக்கப்போகும் ஹால் சாவியைக் கொண்டு வர மறந்துட்டேன்னு அசட்டுச் சிரிப்பு சிரிச்சதும்....

அபுக்ன்னு இருந்துச்சு. கிழிஞ்சது போ....முதல்நாள் அழகே இப்படீன்னா.... நாங்கெல்லாம் அப்போதான் ஜுரத்தில் விழுந்து எந்திரிச்ச ஆளுங்க.  ரெண்டு மணி நேரம் மழையில் நிக்க யாராலே முடியும்? நீங்களே பேசிட்டு மெயிலில் சேதி அனுப்புங்கன்னுட்டு எல்லோரும் கிளம்பிப் போயாச்சு.

1997 வது வருசம் இன்டியன்  சோஸியல் அண்ட் கல்ச்சுரல் க்ளப் ஆரம்பிச்சதுலே இருந்து  சிட்டிக்கவுன்ஸில் தீபாவளி கொண்டாட ஃபண்டிங் கொடுத்து வருது. தலைமை மாறி மாறிப்போய் கடைசியில் தேசிய குணத்தைத் தூக்கிப்பிடிக்கும் மக்கள் ஆட்சிக்கு வந்து ......  போதுண்டா சாமின்னு ஆனதெல்லாம்  இங்கே பார்த்துக்குங்க.  

காசுன்னதும் ஆட்டையைப்போட்டாங்கன்னு புகார் எல்லாம் கொடுத்து வக்கில் நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்கு ஆட்டையைப்போடாத(?) மக்கள் பிரிவு ஜரூராச்சுன்னதும் சிட்டிக் கவுன்ஸில்  நாங்களே ஒரு ஈவண்ட் மேனேஜரை ஏற்பாடு செய்யறோம். அவுங்க பேச்சையாவது கேட்டு நடங்கன்னுருச்சு.


இவ்ளோ கலாட்டாக்களுக்கு நடுவுலே நிலநடுக்கம் வந்து,  ஊரே பாதிக்கும் மேலே காணாமப்போனக்  காரணத்தால் 2010, 2011 வருசங்களில் தீபாவளிக் கொண்டாட்டம் ஒன்னும் நடக்கலை:(

அப்புறம் இன்னொரு மீட்டிங். இது GOPIO வுக்காக. Global Organaisation of people of Indian Origin. (இப்படித்தான் ஆளாளுக்கு ஒன்னு தொடங்கிருவாங்க)

என்னென்ன செய்யலாமுன்னு ஐடியா கொடுங்கன்னதும் தீபாவளிக்குக் கோலம் போடலாம். அதையே சில்ரன்ஸ் ஆக்டிவிட்டியா வச்சுக்கலாமுன்னு  வாயை விட்டது தப்பாப் போயிருச்சு. ஆமாமாம். நல்ல ஐடியான்னு ஊக்குவிச்சு அதுக்கு என்னென்ன பொருட்கள் வேணுமுன்னு லிஸ்ட் கொடுங்க. வாங்கிறலாமுன்னாங்க.

நிறைய மீட்டிங்ஸ் அந்த ஈவண்ட் மேனேஜரோடு நடந்துச்சு. க்ராஃப்ட் ஸ்டால், சாப்பாட்டுக்கடைகள், இந்திய சமாச்சாரங்கள் விற்பனை செய்யும் கடைகள் இப்படி (வடநாட்டு வழக்கப்படி மேளா) அததுக்கு உண்டான ஏற்பாடுகள், கடை போட கட்டணம் எல்லாம் முடிவு செஞ்சாங்க.

நிலநடுக்கம் வந்தால் மக்கள் தப்பிச்சு ஓட வசதியான இடம் வேணுமேன்னு தேடுனதிலே எங்கூர் CBS Arena முதல்முறையா பப்ளிக் ஃபங்ஷன் நடத்திக்க இடம் (வாடகைக்குத்தான்) தரேன்னுச்சு. இண்டோர் ஸ்டேடியம் என்பதால்  குளிர் வாட்டாதுன்னு  எங்களுக்கு (அல்ப )சந்தோஷம் வேற! நாலாயிரம் சதுர மீட்டர் பரப்பளவு இருக்கே!

இந்த வருசம் நம்ம குடும்ப விழா சம்பந்தமா பயணம் இருந்ததால் நீங்க செய்யறதை செஞ்சுக்குங்க. கொண்டாட்ட சமயத்துலே வந்து கலந்துக்கறோமுன்னு சொல்லி இருந்தோம்.

வந்து பார்த்தப்ப தீவாலி 2012 என்ற பெயர்  Abacus Institute of Studies - Diwali 2012.ன்னு மாறி இருக்கு. ஸ்பான்ஸார்களை தேடுனப்ப இவுங்க பெயர் ரைட்ஸ் கொடுங்கன்னு சொல்லி நல்லதா ஒரு தொகை கொடுத்தாங்கன்னு விவரம் கிடைச்சது. உள்ளுர் வங்கி, ட்ராவல் பிஸினெஸ் இப்படி இன்னும் சில பேர்  ஸ்பான்ஸார் லிஸ்ட்டுலே ஒரு பக்கமா சேர்ந்துக்கிட்டாங்க.கூடுதலா  காசு வந்தா சிட்டிக் கவுன்ஸில் வேணாமுன்னா சொல்லும்.

கல்ச்சுரல் டெமோ ஸ்டாலுக்கு பொறுப்பு ஏத்துக்கிட்டவங்க  ஒரு நாலைஞ்சு முறை ஃபோன் செஞ்சு  கோலத்துக்கு தயாரான்னு விசாரிச்சாங்க. ரங்கோலி போட ஒரு வட இந்தியத் தோழி கிடைச்சாங்க. நானும் இன்ஸ்ட்டண்ட் ரங்கோலி அச்சுகள் சில கிரியிலே இருந்தும், வள்ளுவர் கோட்டத்துலே சில வருசத்துக்கு முன்னே நடந்த ஓணத்திருவிழாவிலும் வீட்டு உபயோகத்துக்காக வாங்கி வச்சுருந்தேன். நம்ம வீட்டுலே ரெண்டு மூணு கோலப்புத்தகங்கள் வேற இருக்கே!!! சமாளிச்சுடலாம்.

கலர்ப்பொடிகள், அரிசிமாவு, பிள்ளைங்க கோலம் போட்டுப் பழக வெள்ளைத்தாள் ஒரு ரீம், கலர்க்கலரா ஃபெல்ட் பேனாக்கள் வேணுமுன்னு சொன்னேன். ஹோலி கொண்டாட வாங்குன கலர்ப்பொடிகள் இருக்கு. அரிசிமாவு வாங்கியாறேன்னு சொல்லி ஒரு நாள் பேப்பர் அண்ட் ஃபெல்ட் பேனாக்களைக் கொண்டுவந்து கொடுத்துட்டு அப்படியே கோலம் போட்டு வைக்க பலகைகள் நாலைஞ்சு கொடுத்துட்டுப் போனாங்க. கலர் பவுடர்?

வோ தோ ஹோ  ஜாயேகா......

கொண்டாட்ட நாள் வந்ததும்  போய்ச் சேர்ந்தோம்.  கோபால்  வரவர முன் ஜாக்கிரதை முத்தண்ணா ஆகிட்டார்.  கோலம், தென்னிந்திய கலைகள்ன்னு கொஞ்சம் வலையில் தேடி நாலைஞ்சு கோலப்படங்களும், பரதநாட்டியக் கலைஞர், கதகளி ஆட்டக்காரர், தஞ்சைக்கோவில், மீனாட்சி அம்மன் கோவில் இப்படி  ஏழெட்டுப் படங்களை ஏ3 யில் ப்ரிண்ட் எடுத்து வச்சதையும் எடுத்துக்கிட்டார்.

மதியம் மூணு மணிக்கு விழா தொடங்குது. பகல் பனிரெண்டரைக்கே வந்துருங்கன்னு தகவல்.  அவசரக்கோலம் அள்ளித் தெளிசாலாகாதா?  சாப்பாட்டுக்கடைன்னா முன் ஏற்பாடுகள்  அதிகம். நம்மது வெறும் டெமோதானே?  ரெண்டு மணிக்குப்போய்ச் சேர்ந்தோம்.  கூடாரம் கூடாரமாப்போட்டு  பாதி ஸ்டேடியத்தை நிரப்பி இருந்தாங்க. எல்லாம் ஓப்பன் கூடாரவகைகள்.

வெறும் டெமோவுக்குன்னு நம்ம ஸ்டால் மட்டும் இல்லாம, புடவை கட்டுவது எப்படி? தலையில் டர்பன் சுற்றுவது எப்படின்னு  சிலதும் ஒடிஸ்ஸி  நடனம், பரதநாட்டியம் இப்படி ரெண்டு மூணுக்கும் இடம் ஒதுக்கி இருந்துச்சு. இந்திய உடை வகைகள்ன்னு ஒரு நிகழ்ச்சி வேற வச்சுருந்தாங்க.  பாவாடை தாவணி வேணுமுன்னதால் மகளுடையதைக் கடன் கொடுத்தேன்.

எங்களுக்கு ஒதுக்கி இருந்த கூடாரத்துலே கொண்டு போன கோலவகைகளை மேசையில் பரப்பி, கோல பார்டர்கள் வச்சு அலங்கரிச்சு,  கோபால் கொண்டுவந்த போஸ்ட்டர்களை வச்சு அலங்கரிச்சுட்டோம்.  வட இந்தியத்தோழி  மோனிகா,  பலகையில்  சாக்பீஸால் வரைஞ்சுகிட்டு வந்துருந்தாங்க.  அதுலே கலர்ப்பொடி போட்டு நிரப்பணும்.

பனிரெண்டரைக்கே வந்துருவேன். நீங்களும் வந்துருங்கன்னு சொன்ன  நம்ம ஏற்பாட்டாளர் ஆளையே காணோம். ரெண்டரைக்கு  வந்தவங்க அவுங்க பாட்டுக்கு  நம்ம ஸ்டாலைக் கடந்து  மேடை ஏற்பாடுகள் நடக்கும் இடத்துக்குப் போறாங்க. பவுடர் பவுடர்ன்னு  கூவறோம்.  என்ன பவுடர்ன்னு திருப்பிக் கேக்கறாங்க.  நான் தென்னிந்தியக் கோலம். கையால் வரைஞ்சு காமிச்சுருவேன். நார்த் இந்தியா ரங்கோலி?  பாவம். மோனிகா..........  பயந்துபோய் நிக்கறாங்க.

 "நானா கொண்டு வரணும்?  "

அடப்பாவி............. சொன்னது ஒன்னும் நினைவில்லையா? 

 "வோ தோ ஹோ  ஜாயேகா...... "

 "கபி?  தின் கதம் ஹோனேகே பாத்?  "

" ஓ.....  ஹோ  ஜாயேகா...... "

ரெண்டரைக்கே மக்கள்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க.  நம்ம ஸ்டால் பக்கம் ஆட்கள் பார்வையிட வர்றாங்க.  கோலம்போடு கோலம் போடுன்னு கோபால் கூவ.... பரபரன்னு ஒரு அஞ்சாறு  வெள்ளைப் பேப்பர்களில்  சின்னச்சின்னக் கோலமா வரைஞ்சு தள்ளிட்டேன்.  சின்னப்புள்ளைகளை வாவான்னு கூப்பிட்டு கோலம் போட்டுப்பாருங்கன்னு ஊக்கு விக்கறார் கோபால். அதுகள் முழிக்க,  சுலபமான கோலம் சொல்லித் தரேன்னு , ரெண்டு புள்ளி, மூணு புள்ளி வகைகளில் ஆரம்பிச்சேன். ஒரு புள்ளின்னா இன்னும் சுலபமா இருந்துருக்கும்!!
 எங்க பேட்டை பார்லிமெண்ட் அங்கம் மீகன் வுட்ஸ் வந்துருந்தாங்க. கோலம் போட வராதாம்!!!! சரி... அப்ப போஸ் கொடுத்துட்டுப் போங்க:-))))அங்கே  இங்கேன்னு பாய்ஞ்சு இண்டியன் கடை போட்டுருக்கும் அஷோக்கிடம் சொல்லி அவர் கடையிலிருந்து  கலர் வருமுன்னு சொல்லிட்டு போயிட்டாங்க.  இண்டியன் க்ளப் தலைவி கலர் போட்ட அரிசிகளை நாலைஞ்சு கிண்ணங்களில் கொண்டு வந்ததும் கொஞ்சம் உசுரு வந்துச்சு.  மோனிகாவிடம் கொடுத்தேன்.  பிள்ளைகளும்  அரிசியை எடுத்து  ரங்கோலி போட ஆரம்பிச்சு பலகை கொஞ்சம் கொஞ்சமா  அழகாகிக்கிட்டே இருந்துச்சு.இதுக்கிடையிலே   இந்தப் பகுதியிலேயே ஒரு ஓரமா  சின்னதா ஒரு மேடையில்  புடவை ஷோ, பரத நாட்டியம் ஷோ, பாலிவுட் டான்ஸ்,பாங்ரா டான்ஸ்ன்னு   நடக்குது.  மக்கள் கூட்டம் மேடையைச் சுத்தி. நமக்கோ...பாட்டுச் சத்தம் கேக்குதே தவிர  ஒன்னுமே தெரியலை.  தெரிஞ்சதெல்லாம்  பார்வையாளர் முதுகுகளே!

நம்ம ஸ்டாலில் மட்டும் கூட்டம் குறையவே இல்லை. பசங்களுக்கு ஆக்டிவிட்டி ஒருத்தர் மாத்தி ஒருத்தர்ன்னு என்பதால்  வந்துக்கிட்டே இருக்காங்க.  நானும் கோலம் சொல்லிக்கொடுத்து அவுங்களையே வரையவிட்டு  அந்தக் காகிதத்தை அவுங்களுக்கே கொடுத்துக்கிட்டு இருந்தேன்.  மூணு முதல் அஞ்சு வரைதான் நமக்கு டெமோ என்பதால்  அப்புறம் பார்த்துக்கிட்டாப் போச்சுன்னு தோணல்.கேரளா கிளப் # 2  ஸ்டாலில் புதுசா இருந்த ஆப்பச் சட்டி!!!

என்னால் ஸ்டாலை விட்டு நகர முடியலைன்னு கோபால் போய் படங்கள் எடுத்துக்கிட்டு வந்தார். அவருக்கு நன்றிகள்.,

பதிவின் நீளம் கருதி, மீதி நாளை:-)28 comments:

said...

நல்ல மோனிகா. இப்படித் தவிக்க வைச்சாங்களே:(
பிள்ளைகளோட கைவண்ணத்தை நீங்க பார்க்கற விதம் சூப்பர்.யப்பா என்ன பொறுமை உங்களுக்கு. அங்கயே காலவலி வந்திருக்கும். ஆனால் கோல வண்ணங்கள் அழகு.டீவாலி பிரமாதம் தான். சாப்பாடு பற்றி அடுத்த பதிவில் வரும் என்று ஆவலோடு எதிபார்க்கிறேன்:)

said...


கொஞ்சம் பட்டாசும் வாணவேடிக்கையும் கூடவே இருந்தா
எப்படி இருக்கு பாருங்க...

மீனாட்சி பாட்டி.


See Here.

said...

தீவாலியை நன்றாகக் கொண்டாடி விட்டீர்கள், துளசி எங்களுக்கு முன்பாகவே!
பட்டாசு வெடிக்கக் கூடாதா உங்க ஊர்ல?

படங்கள் நன்றாக இருக்கின்றன.

இன்னிக்குத் தான் இங்க விஜயதசமி.
அதனால உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்களுக்கும் விஜயதசமி தின வாழ்த்துக்கள்.

அடுத்த பதிவில் மீதியை படிக்கக் காத்திருக்கும்
ரஞ்ஜனி

said...

கொண்டாடடுறதுதான் பெருசு. அது எப்ப இருந்தா என்ன.. எல்லோரும் கொண்டாடுவோம்...தீவாலி பேரைச் சொல்லி... நல்லோர்கள் வாழ்வை எண்ணி... எல்லோரும் கொண்டாடுவோம்.

அந்தக் கோலம் கான்செப்ட் சூப்பர். அந்தக் கொழந்தைகளுக்குப் புதுசா புதிர் மாதிரி (சுடோகு போல) இருந்திருக்கும். ஒரு புள்ளிக் கோலம் உண்டே. சுத்தி வட்டம் போடனும். தொடங்குன இடத்துல வட்டம் முடியனும். அதுவும் கஷ்டந்தானே ;)

ஆப்பச்சட்டி ரொம்ப வித்யாசமாயிட்டு உண்டு. வட்ட ஆப்பம் பிடிக்காம பலகோண ஆப்பத்துக்கு மலையாளிகள் மாறிக்கிட்டாங்களா?

said...

வாவ்... தீவாளி இப்பவே வந்தாச்சா அங்கே...

சுண்டல்-கேசரிகளுக்கு நடுவே எங்களுக்குப் பலவித பக்ஷணங்கள் இங்கே கிடைக்கப்போகுது. நாளைக்கும் வரேன்! :)

said...

அதற்குள் அங்கே தீவாளியா...?

படங்கள் அருமை...

விழாக்கால வாழ்த்துக்கள்...

நன்றி...

said...

சின்னக் கைகள் போடும் வண்ணக் கோலங்கள். மகிழ்ச்சியாக இருக்கின்றது.

ஆகா! புதிய அப்பச்சட்டியா நன்றாக இருக்கின்றதே. தீபாவளி விருந்து சாப்பிடத் தயாராகிவிட்டோம்.

said...

விஜயதசமி -தீவாளி - வாழ்த்துக்கள்.

said...

கோலம் ஜுப்பர். நீங்க நடத்துன புடவைக்கடைக்கும் அந்தப்பேர்தானே வெச்சுருந்தீங்க :-)

கோலம் கான்செப்ட் வொர்க்கவுட் ஆச்சுன்னா தீவாளிக்கு முன்னாடி வொர்க் ஷாப்பும் நடத்தலாமே. நம்ம இந்தியக் குழந்தைகளுக்கு கோலம் பழக இன்னும் உதவியாயிருக்கும்.

said...

அவ்ளோ தான் இனிமே டிசம்பர் வரைக்கும் வாராவாரம் தீவ்ளி தானே.. ஹைய்யோ ஹைய்யோ.

said...

என்ன ஆச்சரியமா இருக்கே இப்பவே தீபாவளியா!
பரவாயில்லை விவரணம் அருமை. ரசித்தேன். படங்களும் நன்று. கோபால் சாருக்கு நன்றியுடன் உங்களுக்கும்.
அன்புடன் வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

said...

தீபாவளி அதுக்குள்ள அங்க வந்துருச்சா!!!

நியூசியில் பூவெல்லாம் வெச்சு கலக்கறீங்க டீச்சர்.....:)

கலர் அரிசி கோலம் அழகா இருக்கு.
அடுத்து சாப்பாடா? வந்துடறேன்...

said...

ஹேப்பி தீவாளி!

கோலகலமாக நடத்திய கோலம் போடுகிற இவண்ட் சுவாரஸ்யம். ஐந்து புள்ளி கோலத்தில் ஆரம்பித்த காலம் நினைவுக்கு வருகிறது. ஒரு புள்ளியில்.. ஆமா எவ்வளவு ஈஸி:)!

said...

happy divali?????????????????????????????

said...

வாங்க வல்லி.

மோனிகாவும் என்னோட சேர்ந்து (கொஞ்சம்) தவிச்சாங்க:-)

சாப்பாடு ஒன்னும் பிரமாதம் இல்லை. அதுக்கு நம்ம வீட்டு பூஜைக்குச் செஞ்ச சாப்பாடே நல்லா இருந்தது!

said...

வாங்க மீனாட்சி அக்கா.

எங்களுக்காக பட்டாஸ் வேடிக்கை காமிச்சதுக்கு நன்றிக்கா. இதுகூட மூணுவருசத்துக்கு முந்தியது.

நவம்பர் ஒன்னு வரணும் எங்களுக்குப் பட்டாஸ் கடையில் வர. அஞ்சாம்தேதி மாலை 6மணிக்கு முன்னே பட்டாஸ் கடை க்ளோஸ் ஆகிரும். அதுக்கப்புறம் நோ சேல்ஸ்.

கொஞ்சம் வாங்கி வச்சுக்குவோம்....நம்ம அசல் தீபாவளிக்குக் கொளுத்த. நோ சவுண்ட். ஒன்லி வெளிச்சம் பூ மழை காமிக்கும் வகைதான். இங்கே வெடிகள் விக்கமாட்டாங்க.

said...

வாங்க ரஞ்சனி.

வெடி வகைகள் ஆபத்துன்னு அனுமதி இல்லை. சிட்டிக் கவுன்ஸில் ஒரு பொது இடத்தில் ஆர்கனைஸ்ட் ஃப்யர் ஒர்க்ஸ் வேடிக்கை காமிக்கும் எங்க கைஃபாக்ஸ் தினத்துக்கு.

அதைப்போய்ப் பார்த்துக்கலாம்.

கை ஃபாக்ஸ் கூடுதல் விவரம் இந்தச் சுட்டியில்.

http://thulasidhalam.blogspot.com/2008/11/blog-post_04.html

said...

வாங்க ஜீரா.

ஆஹா.... அந்தப் பாட்டு கோபாலுக்கு ஃபேவரிட். ஆனா ஊன்னா இதைப் பாடிருவார்:-))))

மூணு புள்ளிக்கு பசங்க தலையாலே தண்ணி குடிச்சுருச்சு:-))))

எலெக்ட்ரிக் ஆப்பம் எப்படி வருதுன்னு நின்னு பார்க்கலைன்னு எனக்கு குறை இப்போ:(

said...

வாங்க வெங்கட்.

இங்கே தீபாவளி பக்ஷணங்கள் பொதுவா இல்லை:(

நம்ம வீட்டில் விஜயதசமி பூஜைக்குத்தான் கொஞ்சம் வகைவகையா சாப்பாடு.

வேணுமுன்னா சொல்லுங்க:-)))

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நாள் கிழமை எல்லாம் பார்க்க மாட்டோம். வார இறுதி வந்துட்டால் தீவாளி:-))))

ஒரு வருசம் 11 முறை தீபாவளி கொண்டாடுனோம்.

நில நடுக்கம் வந்த பிறகு எல்லாக் கொண்டாட்டமும் குறைஞ்சு போச்சு:(

said...

வாங்க மாதேவி.

சின்னக்கைகள் அற்புதமே!

கிளம்பி வாங்க.சேர்ந்தே கொண்டாடுவோம்!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வொர்க்‌ஷாப் எல்லாம் வேலைக்காகாது.

இந்தியக்குழந்தைகளை ஒன்றுதிரட்டல் இங்கே மகா கஷ்டம்.

குழந்தைகளை பெற்றோர்தானே கூட்டி வரணும். எல்லோருக்கும் அவுங்கவுங்க மாநிலம், மொழின்னு பிரிவுகள் மனசுக்குள்ளே இருக்கே:(

said...

வாங்க பொற்கொடி.

அய்ய...... கண்ணு வைக்காதீங்கப்பா:-) இந்த வருசம் நாலே நாலுமுறைதான். அதுவும் நவம்பர் 14 வரைதான்.

said...

வாங்க வேதா.

டேட் லைனில் உக்கார்ந்துருக்கேன். அதான் எல்லாத்துக்கும் முந்திக்குவேன்.:-)))

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

கலந்துகிடந்த கலர் அரிசியை குப்பையில் போடச் சொல்லிட்டு வந்துட்டேன். அப்புறமாத்தான் ஒரு தோணல். எடுத்து வச்சுருந்தா அடுத்த விசேஷத்துக்கு புதுக்கலரா ஒன்னு இருந்துருக்குமேன்னு.....

இனிமேல் தினமும் பூச்சூடிக்கலாமுன்னு வாங்கியாந்தது. உங்கூரில் இருந்து ராக்கொடி கூட வாங்கியாந்தேன்ப்பா. தமிழர் பண்பாடைக் காப்பாத்தத் துணிஞ்சுட்டேன்:-)))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

சின்னக்காவுக்கு ஒரு மூணு புள்ளிக்கோலம்தவிர வேறொன்னும் வராது. தினம் அதே அதே. அந்த நினைவு அன்னிக்குப்பூரா இருந்துச்சு.

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க நான்.

தினம் தினம் தீபாவளி என்ற கணக்கில் அன்று தீவாலி:-)))