Monday, July 09, 2012

நிற்பவையே பறப்பவையே ஊர்வனவே......... (ப்ரிஸ்பேன் பயணம் 12)

சொப்பனம் எல்லாம் இல்லை. சின்ன மணிக்கண்களை அசைக்காமல் நட்டகண்ணனாய் இருந்தவைகளை ஒரு அவசரப்பார்வையுடன் கண்டு விலகினோம். எல்லாம் உள்நாட்டு சமாச்சாரங்கள்தான். இந்த ஜூ ஆரம்பத்தில் அஸ்ட்ராலியா ஸ்பெஷல் அனிமல்ஸ் வகைகளுக்கு என்றே இருந்தாலும் இப்ப புதுசா உலக விலங்குகளையும் சேர்த்துக்கணுமுன்னு ஆசியா, ஆஃப்ரிகான்னு கொஞ்சம் கொஞ்சமா விரிவடைஞ்சுக்கிட்டு இருக்கு.

 இருட்டுக் குகைகள் போல ஒளி குறைஞ்ச செயற்கை குகைகளுக்குள் கண்ணாடிச்சுவர்கள் பின்னே காய்ஞ்ச இலை. சருகுகளுக்குள்ளே ஒளிஞ்சு ஓய்வெடுத்துக்கிட்டு இருக்காங்க பூச்சிபொட்டு என்னும் பெயர் சொல்லாததுகள்.  என்ன சௌக்கியமான்னு  கேட்டது ஒன்னு;-)

 சாப்பாடு முடிச்சுட்டு மாடி இறங்கி வரும்போதே மாடிப்படி அருகில் ஒரு அசல் வெள்ளைக்காரர்(!) தனியாக இருந்தார்.

அவரைப்பார்ததும்தான் மற்றவர்களையும் பார்க்கணுமே என்ற நினைப்பு வந்துச்சு. நம்ம வீட்டில் கோபாலுக்குதான் இது கொஞ்சமும் பிடிக்காத(!!??) சமாச்சாரம். அதனாலேயே நானும் மகளும் விட்டுறக்கூடாதேன்னு அந்த குகைக்குள் ஓடினோம்:-)



 நம்ம சி.செயிலும் ஒரு முறை மகளுடன் கிண்டி குழந்தைகள் பூங்காவுக்குப் போனதையும், அங்கே பார்த்தவைகளையும் நினைவுக்குக் கொண்டுவந்தேன். படத்துலே பாருங்க..... கோபாலுக்கு பயம் துளியும் இல்லையாக்கும் கேட்டோ:-))))

 மணிகளைக் கோர்த்து வச்சதுபோல உடல் ஒருத்தருக்கு! Eastern Brown snake. பயங்கர விஷம்.

 மலைப்பாம்பு வகைகளில் மட்டும் டயமண்ட், க்ரீன், வோமா, கார்பெட், பர்மீஸ், வாட்டர், போஆ, ஸ்பாட்டட் ரெடிகுலேட்டட், ப்ளாக் ஹெட்டட் இப்படி 10 வகை!


 கொடிய விஷமுள்ள வகைகளில் 11 இல் இங்கே 6 இருக்கு! ! ஒவ்வொன்னும் என்ன மினுமினுப்புங்கறீங்க!!!! ஹைய்யோ!!!!



 இதையெல்லாம் பார்த்துக்கிட்டே எம்பாட்டுக்குப் போய்க்கிட்டு இருந்தவ கண்ணில் பட்டது  'வொம்பாட்'!

 பெருச்சாளி முகம், சின்னதா ஸாலிடா கால்கள். குண்டு உடம்பு, ஒரு மீடியம் சைஸ் பொமரேனியன் நாய் உயரம். இதுவும் ஆஸியில் மட்டுமே இருக்கும் இனம்.

 நான் பார்க்கும்போது பகல் சாப்பாட்டில் இருந்துச்சு. வெஜிடேரியன்தான். கால்களில் உள்ள நகங்கள் குழி பறிக்க ஏதுவா இருக்கு. குழி தோண்டி அதுக்குள்ளே வசிக்கும். பொதுவா காடுகளில் இருக்கும்போது பகலில் நடமாடுவது குறைவு. இரவு நேரத்தில் நடமாட்டம் அதிகம்.   தினம்  ஒரு பத்துவீட்டுக்காவது போய் பேசிட்டு வருமாம் இதுகள்.  இங்கே ஜூவில் இருப்பதால் பகல் வாழ்க்கைக்குப் பழக்கபட்டுருக்கு. Wombat என்ற பெயர் வந்தது இங்கத்து பூமி புத்திரர்களான அபாரிஜன் மக்கள் மொழியில் இருந்துதான்.

 நம்ம கொஆலா இருக்கு பாருங்க, அதுக்கு இது தூரத்துச் சொந்தம். அதே போலவே கருத்தரிச்ச 35 நாளில் ஜோயி பார்க்க அச்சு அசலா ஜெல்லிபீன் முட்டாய் போலவே இருக்குமாம். எடையும் ரெண்டு கிராம் இருந்தால் அதிகம். கொஆலா போலவே குழந்தை வளர்க்கும் பை உள்ள சிங்காரின்னாலும் கொஆலாவுக்கு இருப்பதைப்போலத் தலைகீழா இந்தப் பை இல்லை! கங்காருவுக்கு இருப்பதுபோல் மேல்பக்கம் திறப்பு.

 எதுக்கு இப்படி? குழி தோண்டும்போது பையின் திறப்பு கீழ் நோக்கி இருந்தால் குழந்தை விழுந்துறாதா? பத்து மாசத்தில் இந்தக்குழந்தை முழு வளர்ச்சி அடைஞ்ச பிறகும் மேலும் ஒரு அஞ்சு மாசம் பை வாசம் பண்ணிட்டுத்தான் இடத்தைக் காலி பண்ணும்.

 நல்லா வளர்ந்த வொம்பாட் 30 , 35 கிலோ எடையும் ரெண்டரை அடி உசரமும் இருக்கும். காட்டில் வளர்கின்றவை ஒரு 15 வருசம் ஆயுசு போட்டுருக்கும். இங்கே காப்பகத்தில் வளர்பவை இன்னும் அதிகப்படி ஆயுளை நீட்டி வச்சு 20 வயசு வரை இருக்குதுகள். காட்டுலே இரை தேடி அலையணும். இங்கே மணி அடிச்சா சோறு இல்லையோ!!!!!





 பறவைகளுக்கான இடத்துக்கு டபுள் கேட்டைத் திறந்து போகணும். ஒரு கேட்டைத் திறந்து மூடிட்டு அப்புறம் நாலடி எடுத்து வச்சு அடுத்த கதவுக்குப் போகணும். ஒரே சமயம் ரெண்டு செட் கதவுகளையும் திறக்கக்கூடாது. உள்ளிருக்கும் பறவைகள் வெளியே போயிட்டால் வம்பு! பெரிய காடு போல் இருக்கும் பகுதி ஏராளமான மரங்கள் நீரோடைகள் எல்லாம் இருக்கு. ரொம்ப உயரத்துலே மரங்கள் எல்லாத்துக்கும் மேலே வலை அடிச்சு வச்சுருக்காங்க. பறவைகளுக்கு வலை இருப்பது தெரிஞ்சுருக்க வாய்ப்பே இல்லை!










அங்கங்கே மரக்கிளைகளில் கட்டித்தூக்கி இருக்கும் அமைப்புகளில் பறவைகளுக்கான உணவுகள் வச்சுருக்காங்க. பசிக்கும்போது பறந்துவந்து தின்னுட்டுப் போயிறலாம். அந்தந்த இனங்கள் மட்டுமே கூடிக்கூடிப் பேசிக்கிட்டு இருக்குதுகள். புறான்னா புறாவோடு, கிளின்னா கிளியோடு! 



150 வகை பறவைகள் இருக்குன்னு சொல்றாங்க. கிளிகள் ஒவ்வொன்னும் அட்டகாசமான நிறங்களில்! ஆஸி பறவையான Kookaburra கூக்கபுர்ராகூட இருக்கு. இது மனுசனைப்போல சிரிக்கும்:-) ஹாஹா..... இது போடும் சப்தம் மனித இனத்தின் சிரிப்பைப்போல கேட்குமாம். சிரி சிரின்னால் அது பேசாம நம்மைப் பார்த்துட்டுச் சும்மா இருந்துச்சு. இதே பறவை இன்னும் பெரிய சைஸில் நியூகினி நாட்டில் இருப்பதாகக் கேள்வி. உண்மையைச் சொன்னால் இது மீன்கொத்திப் பறவையினம்தான். 















அடுத்தபகுதிக்குள்ளே நுழைஞ்சால் அது முதலைகள்.  அமெரிக்கன் அலிகேட்டர்ஸ் வகைகள் இருக்கும் பகுதி. நல்ல தாரளமான இடமும் நமக்குப் பார்வையிடவும் உக்கார்ந்து கவனிக்கவும் வசதியோடு இருக்கு.

 தெரிஞ்சோ தெரியாமலோ திரும்பித் திரும்பி கங்காரு கொஆலா பகுதிகளுக்குள்ளேயே போறோமேன்னு எதிர்த்திசையில் போனால்.... நம்ம ஹெர்ரியட் ஆமையார் நிதானமா நடைபோட்டுக்கிட்டு இருந்தார்.

 சும்மா கண்காட்சிக்குன்னு வைக்காமல் அழிந்து போகும் அபாயம் இருக்கும் விலங்கு பறவை இனங்களைக் காப்பாற்றுவதோடு இவைகளைப்பற்றிய அறிவுகளை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கணும் என்பதில் உறுதியா செயல்படுது இந்த நிறுவனம். Conservation &; Education

 பள்ளிப்பிள்ளைகளுக்காக ஏகப்பட்ட வகையில் திட்டங்கள் வச்சுருக்காங்க. நமக்கு வேணுமுன்னா எதாவது ஒன்னை தத்து எடுத்துக்கலாம். அதுக்காக வீட்டுக்குக் கூட்டியாந்து வளர்க்க முடியாது கேட்டோ:-))))


 தொடரும்..............:-)

18 comments:

said...

//பெருச்சாளி முகம், சின்னதா ஸாலிடா கால்கள். குண்டு உடம்பு, ஒரு மீடியம் சைஸ் பொமரேனியன் நாய் உயரம். இதுவும் ஆஸியில் மட்டுமே இருக்கும் இனம்//

இதப் பேசாம புள்ளையார் வாகனம் ஆக்கி இருக்கலாம், பிள்ளையார் (தொப்பை) சைசுக்கு பெருச்சாளி எம்மாத்திரம், சிலர் மூஞ்சூர் தான் வாகனம் என்றும் சொல்கிறார்கள் தாங்குமா ?
:)

said...

வாங்க கோவியாரே!

ஆஹா... ஐடியா சூப்பர்! எனக்குத் தோணாமப் போச்சே!!!!!

இது ஆஸி வகை என்பதால் நம்ம பக்கங்களில் இதெல்லாம் இருப்பதே தெரிஞ்சுருக்காது.

புள்ளையார் வந்த கையோடு சட்ன்னு கண்ணில் பட்டது மூஞ்சூறோ என்னமோ!!!!

said...

எத்தனை எத்தனை உயிரினங்கள்.... அழிந்து போன பலவும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

இருப்பவற்றையாவது பாதுக்காக்கும் எண்ணம் இருந்தால் நல்லது!

சுவாரசியாமான பகிர்வு.

said...

//புள்ளையார் வந்த கையோடு சட்ன்னு கண்ணில் பட்டது மூஞ்சூறோ என்னமோ!!!!//

அதெல்லாம் தெரியாது,

ஆனால் ஒரு சில நாட்களில் பகலில் பார்க்கும் மூஞ்சூறுகளுக்கு முதுகில் யானைக்கு முதுகில் கம்பளம் விரித்தது போல் சாம்பல் வண்ணத்தில் நிறமாற்றம் இருக்கும். அதைப் பார்த்துட்டு பெரியவங்க சொல்லுவாங்க, 'ராத்திரி பிள்ளையார் இதன் மீது தான் சுற்றி இருப்பார்'

said...

கூண்டுக்குள் வெள்ளைக்காரரைப் பார்த்ததும் ஹாரிபாட்டர் முதல்பாகம் நினைவுக்கு வர்றதைத் தவிர்க்க முடியலை :-))

//ஒவ்வொன்னும் என்ன மினுமினுப்புங்கறீங்க!!!//

இந்த அழகுக்காகத்தானே மனுஷன் அதுங்களை தோலை உரிச்சுடறான் :-(

said...

Why this kolaveri?

ஏன் இப்படி?
நல்லா தானே இருந்தது?உங்க பதிவ ஓபன் பண்ணதும் படம் டவுன்லோட் ஆக கொஞ்ச நேரம் ஆச்சு,ஓபன் ஆனதும் அப்படியே நேர கமெண்ட்ஸ் கு வந்துட்டேன்.இவ்ளோ பாம்பு படமா போடுவாங்க?அடுத்த பதிவாவது என்ன மாதிரி ஆளுங்க பயபடதாதா போடுங்க.

said...

ஊர்வன:
அழ்காய் இருக்கிறாய்.. உதறல் எடுக்கிறது.. :)

/ ஒரு கேட்டைத் திறந்து மூடிட்டு அப்புறம் நாலடி எடுத்து வச்சு அடுத்த கதவுக்குப் போகணும். ஒரே சமயம் ரெண்டு செட் கதவுகளையும் திறக்கக்கூடாது. /

இயற்கையான சூழலைப் பறவைகளுக்குத் தரவும் பராமரிக்கவும் உதவும் இவ்வகை ஏற்பாட்டை பல இடங்களில் இப்போது காண முடிகிறது.

said...

kookaburra and the birds are so chweet!
The parrots.. lovely.

Appreciate the zoo authorities , for thoughtful inclusion of other regions too!

said...

பாம்பையும் ரசித்து ரசித்துப் படம்பிடித்திருப்பதென்ன? மினுமினுக்கும் அதன் அழகை வர்ணிப்பதென்ன? வகைகளை விலாவாரியாய் சொல்லி விளக்குவதென்ன? பார்ப்பதோடு இல்லாமல் ஒவ்வொன்றைப் பற்றியும் அழகாய் விவரித்து அவற்றைப் பற்றிய அறிவை எங்களுக்கு உண்டாக்கும் வகையில் நீங்கள் ஒரு என்சைக்ளோபீடியா மேடம். வெறுமனே பார்த்து ரசிக்க மட்டுமே தெரிந்த எனக்கு அவற்றைப் பற்றிய விவரங்களையும் திரட்டி ரசிக்கவேண்டும் என்னும் மனப்பான்மையை உருவாக்கும் வகையிலான உங்கள் எழுத்துக்கு என் தலைதாழ்ந்த வணக்கம். பாராட்டுகள் மேடம்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருங்கால சந்ததிகளுக்குக் காண்பிக்கவாவது, அழியும் அபாயத்தில் இருக்கும் உயிரினங்களைக் காப்பாற்றி வைப்பது கடமைகளில் ஒன்றுதானே!

said...

கோவியாரே,

மூஞ்சுறு முதுகில் உக்காரும் சைசுக்கு தன்னைச் சுருக்கிக்கப் புள்ளையாருக்குத் தெரியாதா என்ன?

அதிலும் விரிப்பெல்லாம் போட்டு ஜோரா சவாரியா!!!

பெரியவங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும். பெரியவங்க சொன்னால் அது பெருமாள் சொன்னது போல!

said...

வாங்க அமைதிச்சாரல்.

உண்மைதான். அழகே ஒரு ஆபத்தா இருக்கு!

மனுசத்தோல்தான் எதுக்கும் பயன் இல்லை:(

said...

வாங்க விஜி.

படையே நடுங்கும்போது பதிவர்(கள்) நடுங்க மாட்டாங்களா?

அதான் கடையில் கூட்டமே இல்ல:-)

சரி சரி. பயம் தெளிஞ்சு வீரம் வரட்டும். கோவிலுக்குப்போறோம் இன்னிக்கு.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நல்ல விஷயங்களை பிற நாடுகளில் இருந்து கத்துக்கிட்டால் தப்பே இல்லை!

இயற்கைச்சூழல் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டியதுதானே!

said...

வாங்க வெற்றிமகள்.

உண்மைதான். ஜூ நிர்வாகத்தைக் கட்டாயம் பாராட்டத்தான் வேணும்.

நன்றிப்பா.

said...

வாங்க கீதமஞ்சரி.

ரசித்துப் படிக்கிறீங்க! இனிய நன்றிகள்.

தெரிஞ்ச பெயர் தெரியாத விவரங்கள் ஏராளம் இல்லையோ!

போற போக்கில் கொஞ்சம் சொல்லிக்கிட்டே போறதுதான். ஆர்வம் இருப்பவர்கள் இன்னும் தேடிப்பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்தானே.

நம் கடன் ஊக்கு விப்பது-))))

said...

கூக்கபுர்ரா பறவை படிக்கும்போது நம்மையும் சிரிக்க வைத்து விடுகின்றது.

said...

வாங்க மாதேவி.

எனக்குச் சிரிச்சுக் காட்டலைப்பா. அதான் நாங்களே அதைப்பார்த்துச் சிரிச்சுட்டு வந்தோம்:-))))