Wednesday, September 14, 2011

ஏய்....சைலன்ஸ்...... பேசிக்கிட்டு இருக்கொம்லெ!

இந்தான்னு கோபால் என் 'கையில்' கொடுத்ததை வாங்கி இப்படியும் அப்படியுமாத் திருப்பிப் பார்த்தேன்.

பறவை, மிருகம் ரெண்டும் இருக்கு. பறவைக்குக் கருடமூக்கு! கீழே மிருகம் நம்ம நேயடு! ஆஹா..... சிறிய திருவடியின் தலையில் பெரிய திருவடி தன் 'அடி'யை வச்சு இறக்கைகளை மடக்கி அடக்கமா உக்கார்ந்துருக்கு போல! சிறியவரின் முகம் அச்சு அசலா நாம் சுசீந்திரம் கோவிலில் பார்த்த பல்வரிசை காமிக்கும் அனுமன்!
பின்பக்கம் திருப்புனா....மீன் வடிவம். அதன் கீழே..... ஆந்தைக் கண்ணோ? ஆனால் மூக்கைப் பார்த்தால் வராஹம் போல இருக்கே! ஆஹா....... மச்ச, வராஹ அவதாரங்களா?

பீடத்தின் முன்பக்கம் Talking Stick. இடது வசம் Seek first to understand வலதில் Then tobe understood இப்படி வாசகங்கள். 'புரிந்து கொள்ளப்பார் அப்புறம் புரிய வைக்கப்பார்!' அட! உண்மைதானே. எவ்வளவு எளிமையா வாழ்க்கைத் தத்துவத்தைப் போதிக்கும் சொற்கள்!
வட அமெரிக்கப் பழங்குடிகள் ( சிகப்பிந்தியர்கள்???) இதை பயன்படுத்தும் வழக்கத்தை ஆதிகாலத்தில் உண்டாக்குனாங்களாம். பேசும் குச்சி! இதைக் கையில் வச்சுருக்கும் நபர் மட்டும் பேச, மற்றவர்கள் கேட்கணும். பொதுவா கூட்டத்தின் தலை(வர்) வச்சுக்கிட்டு இருப்பார். வேற யாராவது எதாவது சொல்ல நினைச்சால் இடையில் கூவி விளிக்காம குச்சி அவர்கள் கைக்கு வந்ததும் சொல்லவேண்டியதைச் சொல்லலாம். இதைத்தானே இப்போதும் விஜய் டிவி நீயா நானாவில் பார்க்கிறோம். குச்சிக்குப் பதிலா 'மைக்'கு:-)
பண்டைய காலத்தில் பழங்குடிகள் தலைமை, குச்சி மட்டுமே வச்சுக்கணுமுன்னு இல்லை. சங்கு கூடக் கையில் வச்சுக்கலாமாம். சங்கேந்தியவன்தான் தலைவன் என்ற வகையில் சங்கேந்திய ஒருவன் குருக்ஷேத்ராவில் சொன்னது இன்னிக்கு உலகம் பூராவும் பரவி பலமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஏராளமானவர்களுக்கு 'புரிதல்' உண்டாக்கி இருக்கு பாருங்க!!!!!!

பேசும் குச்சிகள் வெவ்வேற அளவு, வடிவம், அமைப்பு ன்னு வெவ்வேற காலங்களில் வந்துருக்கு, ஒரு குச்சியில் ரெண்டு பருந்து இறகுகளைக் கட்டிவிட்டாலும் போதுமாம். நம்ம 'கையில்' இருப்பது கொஞ்சம் மாடர்ன் வகையாக இருக்கலாம். தொழிற்சாலைத் தயாரிப்பு (சீனாவோ????. அப்படித்தானிருக்கணும்)
என் தீவிர ஆராய்ச்சியைப் பார்த்துட்டு 'டாக்கிங் ஸ்டிக்'ன்னு சொன்னார் கோபால்.

இதுதான் சொந்த செலவில் சூனியம் வச்சுக்கறது'...............

'குச்சி இப்போ யாரு கையிலே இருக்குன்னு கவனிக்கலையா! இனி இது ஒருக்கிலும் கைமாறச் சான்ஸே இல்லை' ன்னேன்:-)


31 comments:

said...

அறிந்துகொண்டேன் .

said...

//இதுதான் சொந்த செலவில் சூனியம் வச்சுக்கறது'.....//

இது பழக்கப்பட்ட ஒண்ணாச்சே :-))))

said...

நல்ல தகவல்

said...

என்று என் வலையில்

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..

said...

பேசும் குச்சிதான் இப்ப மைக் ஆகிவிட்டதா?
நல்ல தகவல்.நன்றி.

said...

பேசும் குச்சி! பள்ளியில் படிக்கும்போது, வாத்தியார் கையில குச்சி வைச்சுட்டு மிரட்டுவார், “அமைதியா இல்ல, நான் பேச மாட்டேன், என் கைல இருக்க குச்சிதான் பேசும்”னு... அது ஏனோ சம்பந்தமில்லாம நினைவுக்கு வருது...ல் :)

said...

குச்சி இல்லாட்டியும் அங்க "மீனாக்ஷி" ஆட்சி தான் என்பது எங்களுக்கு நல்லா தெரியும். உங்க கையில ஒரு invisible கிளி இருக்கே! :-)

said...

பேசும் குச்சி யார் கையில் இருக்கோ அவங்க பேசுவாங்க. இது நல்லாயிருக்கே!!!!

பேசும் குச்சியின் வடிவமைப்பு ரொம்ப நல்லாயிருக்குங்க.

said...

குச்சி இப்போ யாரு கையிலே இருக்குன்னு கவனிக்கலையா! இனி இது ஒருக்கிலும் கைமாறச் சான்ஸே இல்லை' ன்னேன்:-)//

அதானே.. :)) நீங்க பேசுங்க..

said...

பேசுங்குச்சி:)
எழுதும் குச்சி அடுத்தாப்புல கிடைக்குமோ:)

என்ன விவரம் !!! அவங்களுக்கு.
அதிகாரம் இருக்கறவங்க கையில வந்ததும்
அது தானா பேச ஆரம்பிச்சுடுமோ என்னவோ:)

said...

பேசும் குச்சி நல்ல தகவல், புகைப்படம் நல்ல விளக்கம்.

said...

'குச்சி இப்போ யாரு கையிலே இருக்குன்னு கவனிக்கலையா! இனி இது ஒருக்கிலும் கைமாறச் சான்ஸே இல்லை' ன்னேன்:-)

வெல் டன்! பாராட்டுக்கள்.
வாயுள்ள பிள்ளை பிழைக்குமே!!

said...

//'குச்சி இப்போ யாரு கையிலே இருக்குன்னு கவனிக்கலையா! இனி இது ஒருக்கிலும் கைமாறச் சான்ஸே இல்லை' ன்னேன்:-)//

:-))))

said...

// குச்சி இப்போ யாரு கையிலே இருக்குன்னு கவனிக்கலையா! இனி இது ஒருக்கிலும் கைமாறச் சான்ஸே இல்லை' ன்னேன்:-)//

அங்ஙன எப்படியோ தெரியல. இங்ஙன 21.ஜனவரி 1968 அன்னிக்கு போன குச்சி இன்னிக்கும் என் கையிலே
திரும்பி வல்ல.

சுப்பு ரத்தினம்.

said...

வாங்க நட்சத்திரமே!

வரவுக்கு நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆணினத்தின் பிரதிநிதி:-)))))

said...

வாங்க ராஜபாட்டை ராஜா.

வரவுக்கும் சுட்டிக்கும் நன்றி.

அதிலும் கடைசி வரி சூப்பர்:-))))

said...

வாங்க ராம்வி.

ஆமாம்....அப்படித்தானே? ;-)))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

குச்சி எப்பவும் பேசிக்கிட்டுதான் இருக்குல்லே:-))))

said...

வாங்க டாடி அப்பா.

கோபாலும் மருதைக்காரர்தானே? கிளி அவர் கண்ணுக்குத் தெரியாமலா இருந்துருக்கும்:-))))))

said...

வாங்க கோவை2தில்லி.

கண்டங்கண்டத்துக்கு வெவ்வேற வடிவமைப்பு. நம்மது ஆஸி நியூஸி.

said...

வாங்க கயலு.

பெண்குலத்துச் சார்பாக......... நானிருக்கேன். நோ ஒர்ரீஸ்:-)))))

said...

வாங்க வல்லி.

விட்டால்...தானாப் பதிவு எழுதச் சொல்லலாமா?

said...

வாங்க டொக்டர் ஐயா.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

முந்திக் கொள்வ்வது பந்திக்கு மட்டுமில்லை:-)))))

said...

வாங்க ரிஷான்.

சிரிப்பாணிக்கு நன்றி.

உங்களை நினைச்சு ஒருபடம் போட்டுருக்கேன் இன்றையப் பதிவில்:-)))))

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

மீனாட்சி அக்காவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

அக்கா....விட்டுறாதீங்க:-)))

said...

'குச்சி இப்போ யாரு கையிலே இருக்குன்னு கவனிக்கலையா! இனி இது ஒருக்கிலும் கைமாறச் சான்ஸே இல்லை' ன்னேன்:-)

teacher neengalum unga kusumpum.

kuchi unga kaiyil irunhthalum gopal sir gopal sir than. asaikka mudiyathu. kuchi mattumthan unga kaiyila. aanna unga manasum ithayamum avaru kaiyila...

ithu eppadi irukku. unmaithaane

said...

நன்றாக இருக்கிறது.

குச்சி இல்லாமலே மாட்டிக்கிட்ட திரு.கோபால் இப்போ குச்சியையும் வாங்கிக் குடுத்து நல்லாக மாட்டிக் கொண்டாரே :)))

said...

வாங்க பித்தனின் வாக்கு.

ஹைய்யோம் ஹைய்யோ!!!!! நீங்க சொன்னது 37 வருசமா உண்மைதான்!

said...

வாங்க மாதேவி.

சொ செ சூ வச்சுக்கறதில் கோபாலை யாரும் மிஞ்சவே முடியாது:-)))))