Monday, July 11, 2011

அதென்னங்க.... பால் பூத்தும் லைட்டுக் கம்பமும் லேண்ட் மார்க்கா? ......... ((ராஜஸ்தான் பயணத்தொடர் 31)

ஊருக்குள்ளே வந்ததும் கூப்பிடுங்க வழி சொல்றோமுன்னு எல்லா ஊரிலும் இந்த ஒரே பாட்டுதான். நாம் கூப்பிட்டு, அக்கம்பக்கம் கண்களை ஓட்டி பெருசா இருக்கும் ஒரு அடையாளம் சொல்லி இந்த இடத்துலே இருக்கோமுன்னு புலம்பினாலும்.........சரியான ரோடு பெயர் ஒன்னும் சொல்லாம பால் பூத்து, ட்ரான்ஸ்ஃபார்மர்ன்னு லேண்ட் மார்க் கொடுக்கும்போது எரிச்சலாத்தான் இருக்கு. போதாததுக்கு சர்க்கிள் வழியா வாங்க.......... ஊரெல்லாம் சர்க்கிள் எந்த சர்க்கிள்ளுன்னு கண்டோம்?

போகட்டும் வாயிலே இருக்கு வழின்னா..... அவுங்க உச்சரிப்பு நமக்குப் புரியலை. நாம் பேசுவதோ............ சுத்தம்! ஒரு ஆட்டோக்காரரிடம் கேட்டதுக்கு இன்னும் முப்பது கிலோமீட்டர் போகணுமுன்னார். ஏற்கெனவே இருநூறு கிலோமீட்டர் லொங்குலொங்குன்னு வந்ததுக்கே மூணு மணி நேரத்துக்கு மேலே ஆயிருச்சு. திகைச்சு நின்னப்ப கடவுள் அனுப்புன ஆள் ஒருத்தர் அங்கே வந்து சேர்ந்தார். இவருக்கு அசைன்மெண்ட் இன்னிக்கு இது!

வந்தவழியே திரும்பிப்போங்க. ஒரு மால் போல ஒரு ஷாப்பிங் செண்ட்டர் இருக்கும் அதுக்குப் பக்கத்துலேயே பாதை இருக்குன்னார். அட! நானும் ஒரு ஷாப்பிங் செண்டரைப் பார்த்தேனே......... திரும்ப முடியாது ஒன் வே என்றதால் வேற வழியில் போய் தட்டுத்தடுமாறி ஒரு பள்ளிக்கூடத்துப் பக்கம் போயிட்டோம். ஷிஃப்ட் ஸ்கூல் என்றதால் போற பிள்ளைகள், வரும் பிள்ளைகள், கூட்டிப்போகவும் கொண்டுவிடவும் வந்த வண்டிகள்ன்னு களேபரம். கடைசியில் ஒருவழியா கட்டிடங்களுக்குள் செருகிவச்ச பாதைக்குள் நுழைஞ்சோம். காம்பவுண்டு சுவரில் ஹொட்டேலின் பெயர் இருக்கு.இதுக்குள்ளே......'என்னமாதிரி இடத்தைத் தெரிவு செஞ்சுருக்கீங்க? நல்லதே உங்க கண்ணில் படாதா'ன்னு தொணத்தொணன்னு கோபாலுக்கு அர்ச்சனை செஞ்சுக்கிட்டே மூஞ்சைத்தூக்கி வச்சுருந்தேன். 'நெட்லே பார்த்தப்ப நல்ல இடமாத்தான் தெரிஞ்சது'ன்றார். பாவம்.........
விஸ்தாரமான வரவேற்பில் நுழைஞ்சப்பக் கொஞ்சம் அசுவாரஸியமாத்தான் இருந்துச்சு. நமக்கான அறையை ஒதுக்கி அங்கே போக ஒரு வளைவுக்குள் நுழைஞ்சதும்.......... அட! இது அரண்மனையான்னு பிரமிப்பு! லிஃப்ட் எல்லாம் கிடையாது. படிகள் ஏறித்தான் போகணும். நமக்கு ரெண்டாவது மாடி. அறைக்குள் நுழைஞ்சு திரைச்சீலையை விலக்கினால் அரண்மனை சிறுத்தையின் தரிசனம்:-) ஓக்கே....நல்ல இடம்தான் என்ற திருப்தி எனக்கு! இது ஒரு ஹெரிட்டேஜ் ஹொட்டேல் RANBANKA PALACEன்னு பெயர்.


மரத்தை அகற்றாமல் வெராந்தா கட்டி வச்சது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!

'ப' வடிவில் நீளமான வெராந்தாக்கள் ஓட அதன் ஒரு புறம் வரிசையா அறைகள். ஆண்ட்டீக் ஃபர்னிச்சர்கள். அலங்காரங்கள். ( ஆனாலும் புஷ்கர் பேலஸின் அழகுக்கு ஈடாகாது) கண்ணெதிரே பெரிய புல்வெளி. அதுலே ஒரு சதுர மேடை, (இங்கே மாலைநேரத்தில் கலைநிகழ்ச்சிகள் நடக்குமாம். பெட்டிகளைக் கொண்டுவந்த பணியாளர் சொன்னார்) தோட்டத்தில் உணவருந்தும் மேசைகளும் இருக்கைகளும். அதுக்கு அந்தப் பக்கம் ரெஸ்ட்டாரண்டு. மணி ஒன்னே முக்கால். சாப்பிடப்போனோம். ரெஸ்ட்டாரண்டை ஒட்டி இருந்த காம்பவுண்டு கேட்டுக்குப் பின்னால் நாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பார்த்த பள்ளிக்கூடம் இருக்கு! அட! தெரிஞ்சுருந்தால் .....காமணி மிச்சப்படுத்தி இருக்கலாம்:-)
ராஜாக்கள் வேட்டையாடி(??)க் கொண்டுவந்த சிறுத்தை, கரடி, புலித் தலைகள் உயிரில்லாத கண்களால் நம்மை முறைச்சுப் பார்த்தன. வீழ்ந்த சிங்கத்தின் அருகில் தைரியமா உக்கார்ந்துருக்கும் ராஜா! இறந்துபோன மிருகத்தின் உடலில் ஒரு காலை லேசாத் தூக்கி வச்ச போஸில் ராஜாக்கள் துப்பாக்கிக்களுடன். போகட்டும் யாரு கொன்னாலும் அது ராஜா கொன்ன மாதிரித்தானே? :-)

'ராயல் லஞ்சு' முடிச்சுக்கிட்டு. வந்தவுடன் வரவேற்பில் சொல்லி வச்சுருந்த வண்டியில் ஊர் சுத்தக் கிளம்பினோம். நேரம் குறைவா இருக்கும்போது உள்ளூர் வண்டித்தான் நல்லது. கைடு ஒருத்தர் வேணுமுன்னு சொன்னதுக்கு..... கோட்டையில் கிடைப்பாருன்னாங்க. அஞ்சு கி.மீ பயணம்(மேரங்கட் கோட்டை(Merangarh fort) ஒரு நூத்தியம்பது மீட்டர் உயரம் இருக்கும் கல்குன்றுகளின் மேல் கட்டப்பட்டிருக்கு. இதுக்கு மேலே கோட்டைச்சுவரின் உயரம் ஒரு நூற்றுப்பதினெட்டு அடி.!!! சில இடங்களில் மதில் சுவரின் அகலம் அறுபத்தியொன்பது அடி(களாம்) ஓ..... அதான் பீரங்கி குண்டுகளால்கூட தகர்க்க முடியலையா? ஒரு சுவத்துலே குண்டடிபட்ட காயங்கள் இருக்கு!
வளைஞ்சு போகும் மலைப்பாதையில் ஏறிக் கோட்டையின் அடித்தளத்தில் இருந்த கார்பார்க்லே இறக்கிவிட்டார் ட்ரைவர். அரைகிலோமீட்டர் நடந்துதான் கோட்டை வாசலுக்கு வரணும். மொத்தம் ஏழு வாசல்கள் இருக்குன்னாங்க. நுழைவுச்சீட்டு வாங்கும்போது லிஃப்டுலே ஏறிப்போகணுமான்னு கேட்டு என் வயித்தில் ஜில்லுன்னு மோர் வார்த்தார் கவுண்ட்டர்காரர். அதுக்குத் தனியா ஆளுக்கு இருவது ரூ. மத்தபடி ஒரு கேமெராவுக்கு நூறு. நுழைவுக்கு ஒரு ஆளுக்கு அம்பதுன்னுன்னு கட்டணங்கள்.
லிஃப்ட் எங்கே இருக்கோன்னு தேடிக்கிட்டே போறோம். கோவில் ஒன்னு கண்ணில் பட்டது.. உள்ளே ஏதோ சமாதி போல ஒன்னு! போரில் உயிர்நீத்த 'ஷாஹித் புரே கான்'னு எழுதிவச்சுருக்காங்க. அதைக் கடந்தால் ஒரு சின்னக்கோவில். பிள்ளையாரா இல்லை நந்தியான்னு சந்தேகமா ஒரு சாமி. உக்கார்ந்துருக்கும் போஸ் புள்ளையார் மாதிரிதான் இருக்கு!

கோட்டை வருமுன் இந்த இடத்தில் ஒரு சாமியார் தனியா இருந்தராம். பெயர் ச்சீரியாநாத். கோட்டை வேலை ஆரம்பிச்சதும் இடத்தை காலி பண்ணனுமேன்ற கோபத்தில்( சாமியாருக்குக் கோபம் தகுமோ?) இந்த இடத்துக்குத் தண்ணிப்பஞ்சம் வரட்டுமுன்னு சபிச்சுட்டாராம். ராஜா ரொம்ப வேண்டிக் கேட்டுக்கிட்டு இங்கேயே தங்கிக்கச் சொன்னாராம். அவருக்காகவே இந்தக் கோவில். அப்புறம் நரபலி ஒன்னு கொடுத்துத் தண்ணீர் பஞ்சம் ஓரளவு தீர்ந்ததாம். தானே 'பலி'யாக முன்வந்தவரின் குடும்பத்துக்கு ராஜா சொத்துக்கள் எழுதிவச்சாராம்.
மூச்சிளைக்க ஏற்றத்தில் ஏறினபிறகு அங்கே இருக்கும் பணியாளர் சொல்றார் நாம் டிக்கெட் வாங்குனதுக்குப் பக்கத்துலேயே லிஃப்டுக்கான கதவு இருக்காம். சரிவுலே பரபரன்னு இறங்கி லிஃப்டுக்குள் ஏறி தடதடன்னு மேலே போனோம். உச்சிக்குக் கொண்டு விட்டுருது. ஒன்வேதான். அங்கிருந்து ஒவ்வொன்னாப் பார்த்துக்கிட்டே கீழே இறங்கி வரணும்.
பறவைப் பார்வை பார்த்தால் கோட்டையின் கீழ்தளத்து வெளிப்புறப் பிரகாரத்தில் சின்னதும் பெருசுமா ஏகப்பட்ட பீரங்கிகள் ஊரைப் பார்த்த மாதிரி! கோட்டைக்குள் வரும் வாசலும் ஊர்ந்துவரும் மனிதர்களுமா நல்ல நடமாட்டம். நீல வீடுகளாவா இருக்கு? என்னன்னு விசாரிக்கணும்.


ராவ் ஜோதா என்ற ராத்தோர் வம்ச மன்னர் 1459 வது வருசம் நிர்மாணிச்ச ஊர் இது. அதான் ஜோத்புரி, மார்வார் சமஸ்தானத்தைச் சேர்ந்தது இந்த ஏரியா. மார்வாருக்கு அப்போ தலைநகரமா இருந்தது மாண்டோர். இது நம்ம மண்டோதரி அதாங்க மிஸஸ் ராவணன் பிறந்த ஊர். ஜோத்பூரில் இருந்து வடமேற்கா முப்பது கிமீ போனால் மாண்டோர் வந்துரும். எனக்கு ரொம்ப ஆசையா இருந்துச்சு அங்கே போகணுமுன்னு. பழைய காலத்துக் கோவில்கள் குமிஞ்சு கிடக்கும் ஊர். ஆனால் நமக்கு அங்கே போகக் கொடுப்பனை இல்லை. இங்கே ஜோத்பூரில் ஒரே ஒருநாள் தங்கல் என்பதால் .............ப்ச்......

ராஜஸ்தான் மாநிலம் உருவானபோது இந்த சமஸ்தானமும் இணைஞ்சுக்கிட்டதால் இப்ப இது ராஜஸ்தான் மாநிலத்தின் ரெண்டாவது பெரிய நகரம். ராஜா ஆண்ட ஊர் என்பதால் கோட்டை கொத்தளம் இருக்கு. அந்தக் கோட்டையில்தான் இப்போ நாம் சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்கோம். ஒரு பக்கம் ஊர் இருக்கும் திசையில் கண்ணை ஓட்டுனா.....
வீடுகளுக்கெல்லாம் நீலக்கலர் அடிச்சு வச்சுருக்காங்க. என்னடா இது...... ஜெய்ப்பூர் பிங்க் சிட்டி என்றதால் ஜோத்பூர் ப்ளூ சிட்டியோன்னு விசாரிச்சால்....... இதுக்கு முந்திக் காலத்துலே, ப்ரம்மபுரின்னு பெயராம். ப்ராமணர்கள் நிறைந்த பகுதியாம். அந்தணர்களுக்கு நீலக்கலர் பிடிக்கும் என்பதால் எல்லாம் நீலமா இருக்காம்!!!!!!!!!! நமக்கு கைடு கிடைக்கலை பாருங்க....... திரும்பி வரும்போது நம்ம காரோட்டி சொன்ன வாக்குகள்.

தொடரும்..........................:-)20 comments:

said...

பட்டையைக் காணோம் :(

தமிழ்மணத்தில் சேர்க்கும் வேலை இப்போ மிச்சம்!!!!

said...

துள்சி,

//தொணத்தொணன்னு கோபாலுக்கு அர்ச்சனை செஞ்சுக்கிட்டே மூஞ்சைத்தூக்கி வச்சுருந்தேன்.//

உலகம் சுற்றும் வாலிபியை(?!)பாத்து பாத்து சோம்பப்படாமல் எல்லா இடங்களுக்கும் கூடிச் செல்லும் கோபாலுக்கு என் பாரட்டுக்கள்!!

ஸோ...நோ 'தொணதொண'
நோ 'அர்ச்சனை'
நோ 'மூஞ்சைத்தூக்கி'
சேரியா?

said...

தமிழ்மணம் பத்தி இப்பெல்லாம் கவலைப் படுவதில்லை. பதிவு எழுதினோமா...போஸ்ட் பண்ணினோமா...
படிக்கிறவங்க படிக்கட்டும், அம்புடுதேன்.

said...

//தொணத்தொணன்னு கோபாலுக்கு அர்ச்சனை செஞ்சுக்கிட்டே மூஞ்சைத்தூக்கி வச்சுருந்தேன். 'நெட்லே பார்த்தப்ப நல்ல இடமாத்தான் தெரிஞ்சது'ன்றார். பாவம்//

பாவம்,.. ஒரு நல்ல மனுஷருக்கு எத்தனை சோதனைகள் :-)))))))).

ஆனாலும், இதையெல்லாம் பொறுத்துக்கிட்டு எங்களுக்கு தகவல் சொல்றதுக்காகவே உங்களை எல்லா இடங்களுக்கும் கூட்டிட்டுப்போற அந்த நல்ல மனசுக்கு வாழ்த்துகள் :-))))))))))))))))

said...

//தொணத்தொணன்னு கோபாலுக்கு அர்ச்சனை செஞ்சுக்கிட்டே மூஞ்சைத்தூக்கி வச்சுருந்தேன். 'நெட்லே பார்த்தப்ப நல்ல இடமாத்தான் தெரிஞ்சது'ன்றார். பாவம்//

எப்பவுமே நல்லவங்களுக்குத் தான் சோதனை அதிகம் வரும்கிறது உண்மை போல... :)))

நீலக்கலர் வீடுகளா! புதுசா இருக்கே... கேரளத்திலும், தமிழகத்தின் சில இடங்களிலும் இப்போது வீடுகளின் வெளிப்புறங்களுக்கு வாஸ்து பார்த்து வண்ணம் அடிக்கிறார்களாம். அதனால் விதம்விதமான கலர்கள் காணக்கிடைக்கிறது. அது போல இங்கேயும் ஏதாவது இருக்கும்போல....

said...

கூடவே வந்து பார்க்கிற மாதிரியான நடையில் அமர்க்களமா போகுது இந்த பயணம் , நன்றி பகிர்ந்ததற்கு

said...

நீலக்கலர் வீடுகளா!
வித்தியாசமாக இருக்கிறதே!!

said...

நீலம் நல்ல கலர்தானே. அழகா இருக்குப்பா.

நீங்க ஏறி இறங்கின இடங்களைப் பார்க்கும்போதே மூச்சு இறைக்குது.

எனக்கும் தமிழ்மணம் பட்டை போயி ரொம்ப நாளாச்சு. சரி ஆளைவிடு.

எழுதறதை எழுதலாம்னு விட்டுட்டேன்

said...

ராஜஸ்தான் பயணத்தொடர் அருமை.
குழந்தைகளுக்கான உலக சினிமா,பெண்களுக்கான உலகசினிமா
குடும்பத்தோடு பார்க்க முடிகின்ற உலக சினிமா எல்லாவற்றையும் எழுதி வருகிறேன்.
தற்ப்போதைய பதிவு நாயகன்,தேவர்மகன் படங்களின் தாய்...காட்பாதர்.

said...

ராஜா ராணியை பலஸ்க்குத்தானே கூட்டிட்டுப் போயிருக்கிறார்:)
நடுமுற்றம் வடிவாக இருக்கிறது.

பெரிய கோட்டையாக இருக்கிறது. கோட்டைச்சுவரின் உயரமே 118 அடி

ஆ!!

said...

வாங்க நானானி.

ஓக்கே! அக்ரீட். இனி நோ மோர் மூஞ்சி தூக்கிங்:-))))

சேரியா? .......சேரி!

தமிழ்மணம் கவலையை நானும் விட்டொழிச்சாச்சு!

said...

வாங்க அமைதிச்சாரல்.

வரவர கோபாலுக்கு ஆதரவு கூடிக்கிட்டே போகுது! பின்னூட்டங்களைப் படிச்சவர் 'காலரை' தூக்கி விட்டு ஒரு பார்வை பார்த்தார் பாருங்க:-))))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அவருக்குச் சோதனைக் காலம் ஆரம்பிச்சே 37 வருசமாச்சு!

நீலக்கலர் அடிச்சால் ஒருவேளை வீட்டுக்குள் குளுமையா இருக்கலாமோ என்னவோ?
இங்கே அடிக்கும் மொட்டை வெய்யிலுக்கு இதம் தேவைப்படுதே!

ஒருவேளை.......... நீலச்சாயம் நரி கதையா( மூன்றாம் பிறை)இருக்கலாமோ!!!!!

said...

வாங்க ஏ ஆர் ஆர்.

இது நம்ம சரித்திர வகுப்பு டூர். எல்லோரும் கூடவே வரணும். அதான்...:-)

said...

வாங்க கோவை2தில்லி.

வித்தியாசமா இருந்தால்தான் மதிப்புன்னு அப்பவே தெரிஞ்சுருக்கு அவுங்களுக்கு!!!!!

said...

வாங்க உலக சினிமா ரசிகரே!

முதல் வருகைக்கு நன்றி.

உங்க பக்கம் இதோ வர்றேன்.

சினிமாவையும் தமிழனையும் பிரிக்க முடியுமா!!!!

said...

வாங்க வல்லி.

நல்லவேளை ஒரே நீலமா இல்லாம இளநீலம், முதுநீலம்(?)ன்னு அடிச்சு வச்சுருக்காங்க. நீலக் கூட்டமா இருப்பதும் ஒரு அழகுதான்:-)

//எழுதறதை எழுதலாம்னு விட்டுட்டேன்//

எழுதுவதை மட்டும் விட்டுறக்கூடாது என்பதுதான் இதனால் அறியப்படும் நீதி:-)

said...

வாங்க மாதேவி.

ராஜாவுக்கு, ராணியின் காலை உடைப்பதில் அப்படி என்ன மகிழ்ச்சியோ!!!!!!

said...

வழியிலேயே என்ன ? உள்ளபோய் மொத்தமா திட்டிரலாம்ன்னு நினைச்சிருந்தீங்கன்னா.. கொஞ்சம் உங்க எனர்ஜியாச்சும் மிச்சமாகி இருக்கும். :)

நீலக்கலர் - நம்ம ஊருகளில் சுண்ணாம்புல நீலக்கலரைச் சேர்த்து நீலமாத்தானே வீடு இருக்கும்..குளிர்ச்சிக்காகத்தான் இருக்க்குமோ?

said...

வாங்க கயலு.

பயணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?

மொத்தமால்லாம் சேர்த்து வைக்க இது என்ன பொக்கிஷமா? அப்பப்ப கொஞ்சம் எடுத்துவிடலைன்னா....ப்ரெஷர் கூடிப்போய் வெடிச்சுடாது? :-)

நம்மூர்லே நீலம் சேர்ப்பது கூடுதல் வெளுப்புக்காக. துணிக்கு நீலம் போடுவோமே அதைப்போல். இவ்வளவு நீலமாவா இருக்கு நம்மூர் சுவர்கள்?