Monday, January 24, 2011

பட்டிக்காட்டாள் முட்டாய் கடையைப் பார்த்தா............

நகைக்கடையோ, துணிக்கடையோ எனக்குப் பிரச்சனையே இல்லை. ஆனால் எதை எடுக்க, எதை விட்டுடன்னு மயங்கி நிற்பது புத்தகக் கடைகளில்தான். மனசுக்குள்ளே குறிச்சு வைக்கும் லிஸ்ட் எல்லாம் அப்படியே மாயமாப் போயிரும் உள்ளே நுழைஞ்சதும்.

எங்கூர்லே எங்க நூலகத்துக்குப் புத்தகம் தெரிஞ்செடுத்து வாங்கும் மூவர் கமிட்டியில் நானும் ஒருத்தி. குழந்தைகளுக்கான நூலகம் என்றதால் படம், கருத்து, கதை சொல்லிய விதம், ப்ரிண்ட் சைஸ், புத்தக வடிவமைப்பு, எந்த வயதுக்கேற்ற குழந்தைகளுக்கானதோ அதை அவர்களால் கையில் பிடிச்சு ஹேண்டில் செய்ய முடியுமா, அட்டைப்படம் குழந்தைகளைக் கவரும் விதத்தில் இருக்கா? இப்படிப் பலகோணங்களில் கவனிச்சுத் தெரிவு செய்யணும். பிறந்த குழந்தை முதல் ஒரு வயசு வரைன்னா புத்தகம் தண்ணீரில் விழுந்தாலும் சேதம் ஆகாம இருக்கும்படியும் அளவு பெருசா இல்லாமல் ரொம்பக் குட்டியாவும் இல்லாமல், பக்கங்கள் ஆறு அல்லது எட்டு இருக்கும்படியான போர்டு புக் என்பவைதான் சரியாக இருக்கும். குட்டிக் கைகள் கிழிச்சுப்போட உஷாரா இருக்குமே:-))))

இதெல்லாம் அடுத்தவங்களுக்கு வாங்கும்போது. தனக்குத் தனக்குன்னா......
நம்ம பேட்டையின் மாலுக்குப் போகும்போது, அங்கிருக்கும் புத்தகக்கடைகளில் ( மாலுக்கு ரெண்டு புத்தகக் கடைகள் கேரண்டீ) ஒருமுறை புரட்டிப் பார்த்துட்டு பெரியவங்களுக்கான நூலகத்தில் அந்தப் புத்தகம் இருக்கான்னு பார்த்துட்டு, இல்லைன்னா ஒரு ரிக்கொஸ்ட் போட்டு வச்சாப் போதும். நூலகம் அதை வாங்கிட்டு நமக்கு போன் செஞ்சு 'நீ கேட்டது வந்துருக்கு. வந்து எடுத்துக்கிட்டுப் போ'ன்னுவாங்க. நாலு வாரம் வச்சுக்கலாம். ஏற்கெனவே இருந்து, வெளியே யாராவது எடுத்துப்போயிருந்தால் அதுக்கும் நமக்கு அது தேவைன்னு ஒரு ரிக்கொஸ்ட் போட்டு வச்சால் அது வந்தவுடன் நம்மைக் கூப்பிட்டுச் சொல்வாங்க. ஆன் லைன்லே கூட ரிக்கொஸ்ட் போட்டுக்கலாம். நூலகங்கள் ரொம்ப நல்ல முறையில் நடப்பதால் தனியாக் காசு போட்டு வாங்கிக்கணும் என்ற அவசியமே இல்லை. அப்படியும் வாங்கித்தான் ஆகணும் என்ற தேவை இருந்தால் பழைய புத்தகக்கடையில் சின்ன விலைக்குக் கிடைக்கும். வாங்கிப் படிச்ச யாராவது படிச்சு முடிச்சதும் ஸ்ப்ரிங் க்ளீனிங்ன்னு பழையபுத்தகக் கடையில் தள்ளி விட்டுருவாங்க. என்ன.... சில மாசங்கள் பொறுத்துருக்கணும், அவ்ளோதான்.

நமக்கான வரவேற்பா ரெண்டு யானைகளும் புள்ளையாருமா புத்தக அடுக்குக்கு மேலே இருந்து 'வா வா' ன்னு கூப்புடறாங்க புதுப்புத்தக உலகில்:-)

தமிழ்ப்புத்தகங்கள் வேணுமுன்னா நமக்குச் சென்னையை விட்டால் வேற கதி இல்லை. எவ்வளவு காசு செலவு செய்யறோம் என்பதைவிட எவ்வளவு கனம் இருக்கும் என்ற ஒரே கவலைதான். இருக்கும் 20 கிலோவில் அஞ்சு கிலோவுக்கு மேல் வாங்கிக்க முடியாது.

இப்பதான் உள்நாட்டு வாசமாச்சேன்னு போனவருசமும் நியூ புக்லேண்ட்ஸ் போய் மேய்ஞ்சுட்டு வந்தேன். இந்தப் பயணத்திலும் வருசக்கடைசி நாளில் போனேன். பொதுவா புத்தகத்திருவிழாவில் வாங்கறதில்லை. நாம் சென்னை வரும் சமயம் புத்தகத்திருவிழா நடக்கணுமே அதைச் சொல்லுங்க. இதுவரை ரெண்டே முறைதான் திருவிழா பார்த்துருக்கேன்:(

இந்தக் கடைக்கே பட்டிக்காட்டாளுன்னா..புத்தகத்திருவிழாவில் .......அம்மாடா......... கண்ணு பிதுங்கி வெளி வராதது என் முன்னோர் செஞ்ச புண்ணியம்!
கண்ணில் பட்டவைகளைப் பார்த்து அங்கே சில அங்கே சிலன்னு பொறுக்கி வச்சுக்கிட்டு இருக்கேன். கோபால் இன்னொரு அடுக்குலே தீவிரமா என்னமோ தேடறார். என்னவா இருக்குமுன்னு பார்த்தால்............. நம்ம புத்தகங்கள் இருக்கான்னு தேடறாராம்:-)))))) தேடியது கிடைச்சதும் ஒரு (அல்ப) சந்தோஷம் அவர் முகத்தில்.

இரவில் கொஞ்ச நேரம் படிக்கன்னு தோழி வீட்டில் இருந்து சுஜாதாவின் தேர்ந்தெடுத்த கதைகள் முதல் பாகம் எடுத்து வந்தேன். தினம் ஒன்னு ரெண்டுன்னு 20 கதைகளைத்தான் படிச்சு முடிச்சுருந்தேன். நைஸா ஆட்டையைப் போட்டுருக்கலாம். தோழிதானேன்னு............. ஆனால் அதுலே சுஜாதா கையெழுத்துப் போட்டுக் கொடுத்துருக்கார். அபேஸ் செஞ்சால் நியாயமே இல்லை.

கடையில் தேடுனப்ப முதல் தொகுதி கிடைக்கலை. போனாப்போகுதுன்னு விட்டுட்டு வாங்கிய புத்தகங்கள் பட்டியலைப் பாருங்க. முட்டாய்க்கடையைக் கண்டு மிரண்டு நிற்கும் மனநிலையில் புத்தகங்களை தலைப்பின் கவர்ச்சிக்காக, அட்டைப்படத்துக்காக, மனசில் வந்துபோன எழுத்தாளர்களுக்காக, முன்னே எப்பவோ படிக்கணுமுன்னு நினைச்சதுக்காக, தெரிந்த பெயர்களுக்காக, விஷ்ணுபுரம் வாசிப்பு முடிஞ்சு தோழியுடன் சின்ன விமரிசனம் செஞ்சப்ப, 'நீங்க பின் தொடரும் நிழலின் குரல்' முதல்லே வாசிச்சுட்டு அப்புறம் விஷ்ணுபுரம் வாசிக்கனும் என்ற பரிந்துரைக்காகன்னு வாங்குனதுதான். இந்தப் பயணத்துலே கலந்துகிட்டப் புத்தக வெளியீடுகளில் வாங்கிய சில புத்தகங்களையும் கடைசியில் சேர்த்துருக்கேன்.

கடைசியில் இருக்கும் பக்திப்பரவசம் எல்லாம் கோபால் வாங்கியிருக்கார். (ஆனாலும் மனுஷருக்கு ஆழ்ந்த பக்தி இருக்கு, கேட்டோ!!)சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 2

பின் தொடரும் நிழலின் குரல் ஜெ.மோ

வண்ணதாசன் முத்துக்கள் பத்து

தலைகீழ் விகிதங்கள் நாஞ்சில் நாடன்

பூமியின் பாதிவயது அ.முத்துலிங்கம்

கூப்பிடுவது எமனாக இருக்கலாம் வாமு கோமு

மாலை நேரத்து மயக்கம் பாலகுமாரன்

தப்பித்தால் தப்பில்லை : சுஜாதா


டிசம்பர் தர்பார் எல்லேராம்

சாப்பாட்டு புராணம் சமஸ்

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது எஸ் ரா

கஜராஜன் குருவாயூர் கேசவன்

பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ்


குமுதம் வினா விடை கிருபானந்த வாரியார்

பாடிக்களித்த 12 பேர்

நலம்தரும் நாராயணீயம்

பக்தி ஸுதா

தெய்வீக துதிப்பாடல்கள்

மகாலக்ஷ்மி வழிபாடு

Learn Tamil in 30 days

Learn Himdi in 30 days


புத்தக வெளியீடுகளில் வாங்கியவை

ஒப்பனையில் ஒளிர்ந்திடும் உலகம்: முருகேசபாண்டியன்

இப்போது அவை இங்கு வருவது இல்லை: கிருஷ்ணன்ரஞ்சனா


துயில்: எஸ் ராசென்னை ஏர்ப்போர்ட்டில் காத்துருந்த போது வாங்குனது.

கரையோர முதலைகள் பாலகுமாரன்

இனி நேரம் உண்டாக்கிக்கணும் ஒன்னொன்னா வாசிச்சு முடிக்க. அடுத்த கொள்முதல் அநேகமா நாடு திரும்பும் சமயமாக இருக்கலாம்.


கைக்கடக்கமா ரெண்டு புத்தகப் பைகளைத் தூக்கிக்கிட்டு அடுத்துப் போனது ஒரு 'உண்மையான பெரியவர்' வீட்டுக்கு.


30 comments:

said...

Happy Reading Thulasi amma... :)

( ekalappai is mischievous today awwwww)

said...

enjoy teacher!

said...

சரி வெயிட் அதிகம் இருக்குமுன்னா கிளம்பும் போது படிச்சு முடிச்சதை (எனக்கு) பரிசளிச்சிடுங்க.. :))

said...

NEW BOOK LANDS PHONE NUMBER=
009144 28158171
www.newbooklands.com

said...

பயணக்கதை போலவே புத்தகக்கதையும் சுவராசியமா இருந்தது.

said...

வலைபதிவுகளில் பெரும்பாலும் உங்களைப் போன்று தாங்கள் வாங்கிய புத்தகங்களைப் பற்றி படித்தேன் ரசித்தேன். இப்படித்தான் காசு இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு சமயத்தில் புத்தகமா வாங்கி குவித்தேன். விலையைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. பெரும்பாலும் நேரம் வைத்து படித்தும் விடுவேன். ஆனால் புத்தகங்கள் சேரச் சேர ஒரு கவலையும் வந்து விடுகின்றது. இப்போது குழந்தைகளின் புத்தகங்கள், அவர்கள் கேட்கும் பாடம் இல்லாத புத்தகங்கள் வேறு இடத்தை அடைக்க உட்கார இடம் இல்லாமல் வீட்டுக்காரம்மாவுக்குத்தான் ரொம்ப கஷ்டமாயிருக்கு. குழந்தைகளைப் போலவே இந்த புத்தக காதலும் இப்போதும் தான் யோசிக்க வைத்துக் கொண்டுருக்கிறது. ஒரு வருடமாக எதுவும் வாங்குவதில்லை. தேடும் குறிப்பிட்ட புத்தகங்களை மட்டும் இராஜராஜன் சென்னையில் இருந்து வாங்கி அனுப்பி வைத்து விடுகிறார். காரணம் திருப்பூரில் வாங்கப்போனால் கூடவே நாலைந்து புத்தகங்கள் இயல்பாகவே கையில் வந்து உட்காரந்து அடம்பிடிக்க போதுமடா சாமி என்கிற மனோநிலை வந்துவிட்டது. அதுதான் சுற்றிலும் ஏராளமான அனுபவ புத்தகங்கள் தான் திறந்தபடியே தானே இருக்கிறது. இதை விட இனிமேல் காகித எழுத்துக்கள் என்ன கற்றுத்தரப் போகின்றது.

சரிதானா?

said...

நல்ல கலெக்ஷன்ஸ் துளசியக்கா..

said...

Enjoy your reading.....!!!!

said...

ஜோதிஜி சொல்வதைஅப்படியே ஆமோதிக்கிறேன்..
நானே வீட்டுக்காரம்மா ஆகிவிட்டதால்;)

said...

நல்ல புத்தகங்கள்!

முத்துலெட்சுமி சொன்னது போல, சண்டிகார் போகிற வழியில் தில்லியில் கொடுத்திடலாமே :)))

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_24.html

said...

ஹாஹாஹா அப்பிடியே போற வழியில் எல்லாம் படிச்ச புத்தகங்களை கொடுத்திட்டா லக்கேஜ் குறைஞ்சுடும் துளசி..:))

said...

நன்றாக இருக்கு. புத்தக மிட்டாய்கள் :)

said...

புத்தக வடிவில் படிப்பது என்பது இங்கு வந்த பிறகு குறைந்துவிட்டது, எல்லாம் இணையவழி புத்தகம்தான் டிச்சர்.

said...

நல்லா கடுப்பேத்துறீங்க... நடக்கட்டும் நடக்கட்டும்..

ஜோதிஜி சொல்வது கொஞ்சம் உறுத்துது.. கண் திறந்தும் காண மறுக்கிறேனோ?

said...

வாங்க சாந்தி.

நன்றிப்பா.

ஆமாம். கலப்பை சிலசமயம் ஒத்துழைக்க மறுக்குது.

என் தமிழைப் பார்த்து 'ஆடிப் போயிருக்கோ'ன்னு நினைச்சுக்குவேன்:)

said...

வாங்க பொற்கொடி.

நன்றிப்பா.

said...

வாங்க கயலு.

இந்த முறை வெயிட் பிரச்சினை இருக்காது.

கண்டெயினர் தூக்கிட்டுப்போகும்:-)

said...

வாங்க ராம்ஜி_யாஹூ.

தொலைபேசி எண் உதவிக்கு நன்றி.

said...

வாங்க தமிழ் உதயம்.

வாழ்க்கையில் (திரும்பிப் பார்க்கும்போது) எதுதான் சுவாரசியமில்லை:-)))))

said...

வாங்க ஜோதிஜி.

குறைஞ்சபட்சம் தமிழ்நாட்டுலேயாவது படிச்சு முடிச்ச(இனி வேண்டாத)வைகளை வேற யாருக்காவது இலவசமாத் தூக்கிக் கொடுத்துறமுடியும். என்னைப்போன்றவர்களை நினைச்சுப் பாருங்க........ எனக்கப்புறம் இவைகளைச் சீண்ட ஆள் இல்லை.
அங்கே வேற யாருக்கும் இதன் 'மதிப்பு'ம் தெரியாது.
கடைசியில் ரீசைக்கிளிங்ன்னு dump க்குத்தான் போகும்.

எங்கூர்லே செய்தித்தாளெல்லாம் படிச்சுட்டு பொதி கட்டி வச்சுட்டா நகர சபை குப்பை வண்டி எடுத்துக்கிட்டுப்போகும். இந்தியாமாதிரி பழைய பேப்பர்களை விற்க முடியாது.

இந்தவகையில் சிங்கைத்தமிழர்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள்.
நூலகத்துலேயே எடுத்துப் படிச்சுக்கலாம்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அப்படி ஒரேடியா நல்ல கலெக்ஷன்னு சொல்ல முடியாது.
அட்டை பார்த்து ஏமாந்து வாங்குனது(ம்) உண்டு:(

said...

வாங்க சித்ரா.

நன்றிப்பா.

said...

வாங்க வல்லி.

ஜோதிஜி சொல்வது முற்றிலும் உண்மை.
ஆனால்.......... ஆசை யாரை விட்டது?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சண்டிகர் டு தில்லி போகும்போது கொடுக்கலாமுன்னாலும்..... உங்க ஊருக்குள்ளே வர்றதுக்குள் தாவு தீர்ந்து போகுதே:(

said...

வாங்க தேனே.

பயங்கர டிமாண்டா இருக்கேப்பா இங்கே:-)

பேசாம சண்டிகர் தமிழ்மன்றதுக்கு தரலாமா?

said...

வாங்க மாதேவி.

புத்தக மிட்டாய்கள்:-))))))

உண்மையாவே புத்த்க மிட்டாய்கள் என்னிடத்தில் இருக்குப்பா. எல்லாம் மார்சிபானில் செஞ்சது.

அப்பப் பார்க்கலைன்னா இப்போ பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2008/09/blog-post_5623.html

said...

வாங்க சுமதி.

ஆமாம்ப்பா. காலமும் வாழும் இடமும் மாறிப்போச்சே:(

said...

வாங்க அப்பாதுரை.

ஜோதிஜி சொன்னது உண்மைன்னாலும்.........மனசுக்கு மகிழ்ச்சிதரும் ஒரு விஷயத்துக்கு கொஞ்சம் மெனெக்கெடத்தான் வேணும்.

அதுவும் தமிழ்ப்புத்தகங்கள் கிடைக்காத உலகத்தின் ஒரு பகுதியில் இருந்தால் வேற வழி என்ன?

என்னோட 3 புத்தகங்கள் (இதுவரை ) வந்துருக்குன்னு சொல்லிக்கவா:-))))

said...

ஆமா பார்த்திட்டேன். ரொம்ப நன்றாகவே இருக்கு.

said...

பார்த்தீங்களா மாதேவி!!!!

டாங்கீஸ்ப்பா:-)