Thursday, October 07, 2010

ஸ்நேகாலயம் போலாமா?

அட! ஸ்நேகத்துக்குன்னு ஒரு கோவிலா? ஆஹா.... வர்றேன்னு சொன்னதும் மாலை 7 மணிக்குக் 'கார்த்திக் ரெஸ்டாரண்டு'க்கு வந்துருங்கன்னார் ராஜசேகர். இங்கே நம்ம குணாவைப்பற்றிக் கொஞ்சம் சொல்லணும். கார்த்திக் ரெஸ்டாரண்ட் ஓனர். விருதுநகர் சொந்த ஊர். சண்டிகர் வந்து உணவகம் நடத்தறார். இவருக்கு உதவியா இவரோட தம்பிகள் இருக்காங்க. தம்பியுடையானல்லவா...படைக்கு அஞ்சுவதே இல்லை!

நாப்பத்தியேழாம் செக்டரில், அசப்பில் பார்க்க கடைபோல இருக்கும். ஆனால் உள்ளே நவீன வசதிகளுடன் நமக்கெல்லாம் 'ஆக்கி'ப்போடறார். நீராவியில் தான் முழுச்சமையலும் நடக்குது பரோட்டா, தோசை , வடைகளைத்தவிர! நம்ம சண்டிகர் முருகன் வழங்கும் சாப்பாடெல்லாம் இவர் கைமணம்தான்.

ஊரைவிட்டுத் தள்ளி ஒதுக்குப்புறமா இருக்கும் ஸ்நேகாலயாவுக்கு நாம் தனியாப்போனால் வழி கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். அதுவும் மாலை இருட்டில்..... ரொம்பச் சுத்தம்!

நாலைஞ்சு வண்டிகளில் ஏதோ விவிஐபிகளின் ஊர்வலம்போலப் போனோம். வண்டிகளின் தலையில் சிகப்பு விளக்கு இல்லாததுதான் ஒரே குறை. செக்யூரிட்டிகளுக்கு முன்னமே தகவல் சொல்லி இருப்பாங்க போல. உடனே உள்ளே போக அனுமதிச்சுக் கேட்டைத் திறந்தாங்க.

வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸ், பருப்புக்கூட்டு, இனிப்புக்குக் கேசரிதான் மெனு. மூணு செட்டுகளா தனித்தனியா பெரிய பாத்திரங்களில் உணவு. மூணு வெவ்வேற கட்டிடங்களில் கொண்டுபோய் இறக்கியாச்சு.
பெரிய வளாகம்தான். தனித்தனிக் கட்டிடங்களா ஏழெட்டு இருக்கு. நாம் முதலில் போனது பெண் குழந்தைகள் பிரிவு. எல்லோரும் டைனிங் ஹாலில் அங்கே இங்கேன்னு இருந்து வீட்டுப்பாடம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. கொஞ்சம் பெரிய குழந்தைகள் (ஒரு 13 இல்லை 14 வயசு இருக்கும்) சாப்பாட்டுத் தட்டுகளையெல்லாம் சுமந்துவந்து அங்கே இருக்கும் கிச்சன் மேடையில் வச்சவுடன், பிள்ளைகள் எல்லோரும் பக்கத்து ஹாலில் போய் வரிசையில் நின்னு கடவுள் வணக்கம் பாடினாங்க. சின்னதுக்கு ஒரு மூணு வயசு இருக்கும். இவுங்களைப் பார்த்துக்க ரெண்டு பெண்கள் ஒரு பிரிவுக்குன்னு வேலை செய்யறாங்க. மூணு ஷிஃப்ட்க்கு ஆறு பேர் மாறிமாறி வர்றாங்களாம். நீலக்கலர் சுடிதார் இவுங்களுக்கு யூனிஃபார்ம். ( காக்கி சுடி போட்ட போலீஸ்கூட இந்த ஊரில் பார்த்தேன்)
Snehalaya என்ற பெயரில் இயங்கும் இது a vocational training centre for street children. அரசாங்கம் ஏற்று நடத்தும் அமைப்பு. இதுக்குமுன்னே தனியார் நடத்தும் சில இடங்களுக்குப் போய்வந்த அனுபவத்தை வச்சுப் பார்த்தால் இங்கே பராமரிப்பு ரொம்ப நல்லாவே அதாவது நம்பமுடியாத அளவுக்கு நல்லாவே இருக்கு. பலவருசங்களுக்கு முன்னே அரசு நடத்தும் ஒரு ஹாஸ்டலுக்குப் போய்ப்பார்த்துட்டு, அந்த நிலையைக் கண்டு பயந்து போய் அழுதது நினைவுக்கு வருது. தாழ்த்தப்பட்ட இன மாணவர்களுக்கானது அது. அங்கே திடீர் பரிசோதனைக்குப்போன மாமாவுடன் ஒட்டிக்கிட்டுப்போனேன்.
இதுக்குப் பொறுப்பேற்று நடத்தும் மேனேஜர் அரசாங்க அதிகாரின்னாலும் ரொம்பத் தன்மையா நான் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொன்னார். எங்கிருந்து பிள்ளைகள் வர்றாங்க? எப்படி தெரிஞ்செடுக்கறீங்க? செலவு எல்லாத்தையும் யார் பார்த்துக்கறாங்க? எத்தனை பணியாட்கள் கேர் கிவர் என்ற பொறுப்பில் இருக்காங்க. இப்படித் தொணப்பிட்டேன். மனுசன் அசரலை போங்க.

இவுங்க அமைப்பில் 18 வயசுக்குமேல் இருப்பவர்கள் தனிக்கட்டிடங்களில் இருக்காங்க. இப்போ நாம் பார்க்க வந்திருப்பது 18க்குக் கீழ் இருக்கும் பிள்ளைகள். மொத்தம் 240 பேர். அதுலே 160 பேர் ஆண்கள். 80 பேர் பெண்கள். ஆச்சரியமாப்போச்சு எனக்கு! அட்லீஸ்ட் இதுலேயாவது 33 சதமானம் கொடுத்தீங்களேன்னதும் திகைச்சுப்போனவர்..... அட..ஆமாம். அப்படி அமைஞ்சுபோச்சு இல்லேன்னு சிரிச்சார்.
80 பேர் ஒரு கட்டிடமுன்னு மூணு கட்டிடங்களில் இப்போ பிள்ளைகள் இருக்காங்க. கட்டிடத்துக்கு 6 பேர்ன்னு ரெவ்வெண்டுபேரா மூணு ஷிப்டுக்கு வந்து போறாங்க கேர் கிவர் என்னும் உதவியாளர்கள்.. காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சதும் பள்ளிக்கூட வயசுலே இருக்கும் பிள்ளைகள் அக்கம்பக்கம் இருக்கும் செக்டர்களில் பள்ளிக்கூடம் கிளம்பிப்போறாங்க. கொஞ்சம் தூரமா இருக்கும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகள் பஸ் பிடிச்சுப்போய் மாலையில் திரும்பி வர்றாங்க. மத்தியான சாப்பாடு கையோடு கொண்டு போறதுதான்.

சின்னப்பிள்ளைகள் இங்கேயே ஒன்னோடொன்னு விளையாடிக்கிட்டுப் பொழுதைப் போக்கிருதுங்க. ட்யூட்டியில் இருக்கும் பணியாட்கள் அவுங்கமேலே ஒரு கண்ணு வச்சுக்கிட்டே மற்ற வேலைகளைப் பார்த்துக்குறாங்க. துணிமணிகளைத் துவைக்க ஒவ்வொரு ப்ளாக்குக்கும் வாஷிங் மெஷின்கள் இருக்கு. துணிதுவைச்சுப்போட்டு, தரை பெருக்கிச் சுத்தம் செய்ய பகலில் வேலைக்குன்னு தனியா ஆட்கள் வந்து போறாங்க. சமையலுக்கும் இப்படியே ஆட்கள் வந்து சமைச்சு வச்சுட்டுப்போறாங்க. கிச்சன் சாமான்களைக் கழுவத் தனியா ஆட்கள் உண்டு.

பிள்ளைகள் சாப்பிட்ட தட்டுக்களை மாத்திரம் கொஞ்சம் பெரிய பிள்ளைகள் (ஏழெட்டு வயசு இருக்கலாம்) முறைபோட்டுக்கிட்டுக் கழுவி வைக்கிறாங்க. ஆனால் சுத்தம் போதாது. (இதைக் கடைசியாத்தான் பார்த்தேன். மறுநாள் காலையில் வேலைக்கு வரும் பணியாளர்கள் அதை நல்லாத் தேய்ச்சுக் கழுவிருவாங்கன்னு நம்புவோமாக)
கீழ்தளத்தில் சாப்பாட்டு அறை, லாண்டரி, மருத்துவர்கள் வந்து பரிசோதிக்கும் அறைன்னு இருக்கு. துவைச்ச துணிகளை இஸ்த்திரி போட, கிழிஞ்ச துணிமணிகளை ரிப்பேர் செய்ய தைய்யல் மெஷீன் இப்படி வசதிகள் இருக்கு. மேல்தளங்களில் பெரிய பெரிய அறைகள், டார்மிட்டரி போல. பனிரெண்டு பேர் தூங்கலாம். கட்டில்கள் போட்டு பெட்ஷீட் விரிச்சு அருமையா நீட்டா இருக்கு. ஒவ்வொரு அறைக்கும் ஒரு பாத்ரூம் என்ற கணக்கில் கட்டி விட்டுருக்காங்க. மூணு மாடிகள். ஒம்போது அறைகள்.


வாரம் மூணு முறை மருத்துவர்கள் வந்து போறாங்க. இடையில் எதானும் சுகக்கேடுன்னா பொது மருத்துவ மனைதான். நாங்க போனதுக்கு முதல்நாள் ஒரு பெண்குழந்தை தவறிப்போச்சுன்னு கொஞ்சம் வருத்தமான முகத்தோடு இருந்தாங்க ட்யூட்டி கேர் கிவர்கள். விவரம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டதும் எனக்கே பேஜாராப் போயிருச்சு. அஞ்சே வயசு. வாந்தி வந்துருக்குன்னு ஓடி இருக்கு. எங்கே வாஷ்பேஸினுக்குப் போறதுக்குள்ளே சிந்திருமோன்னு வாயை இறுக மூடிக்கிட்டு ஓடுனதில் அது அப்படியே மூச்சுக்குழாய்க்குள் போயிருச்சு. ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு ஓடி அட்மிட் பண்ணினாங்களாம். ஆனால்...............ப்ச்

சில பிள்ளைகளுக்குச் சொந்தக்காரங்க தாத்தா பாட்டின்னு யாராவது வந்து பார்த்துக்கிட்டு போகவும் இங்கே அனுமதிக்கிறாங்க. பள்ளிப்படிப்பு முடிச்சவங்களுக்கு தொழிற்கல்வியா பயிற்சி வகுப்புக்களில் சேர்த்து விடறாங்க. வேலைக்குப்போய் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் அவுங்க வெளியிலே போய் தங்கித் தங்கள் வாழ்க்கையைத் தானே பார்த்துக்குவாங்க. பெண்கள் தையல் வேலைகளுக்கான பயிற்சிக்குப் போறாங்களாம். மேல் கொண்டு படிக்கவைக்க முடியுமுன்னால் இன்னும் நல்ல வேலைகளுக்குப் போகலாம். அதுக்கான ஏற்பாடுகள் இன்னும் இங்கே தொடங்கலைன்னாங்க.
கண்ணாடி போட்டுருப்பவர் நம்ம செல்வராஜ் ஐபிஎஸ். அவருக்கு இடதுபக்கம் 'ஆல் இன் ஆல்' ராஜசேகர்


இன்னிக்கு என்ன விசேஷமுன்னு நாங்க வந்திருக்கோம்? சண்டிகர் முருகன், ஆடிஅம்மாவாசையை முன்னிட்டுத் தமிழ்மன்றம் என்ற தமிழ்ச்சங்கத்தின் மூலம் பசங்களுக்குச் சோறு போட்டார். பித்ருக்களைப் ப்ரீதி பண்ணும் கைங்கர்யம். இங்கே ஹரியானா போலீஸில் இருக்கும் நம்ம ஊர் ஐ ஜி பி. செல்வராஜ் ஐ ஏ எஸ் (சேலத்துக்காரர்)அவர்களும் எங்களோடு வந்து பிள்ளைகளுக்குச் சாப்பாடு பரிமாறினார். நம்ம கோபால், தமிழ்மன்றக் காரியதரிசி ஆல் இன் ஆல் ராஜசேகர், அவருடைய பிள்ளைகள் எல்லோரும் தட்டுகளில் சாப்பாட்டைக் கோரியெடுத்து விளம்ப, பெரிய குழந்தைகள் , அதைக் கொண்டுபோய் சின்னக்குழந்தைகளுக்கு முன்னால் வச்சாங்க. மற்ற குழந்தைகள் எல்லாம் வரிசையில் வந்து தட்டுக்களை வாங்கிப்போனாங்க.
அருமையா டைனிங் டேபிள்கள், பெஞ்சுகள், நாற்காலிகள் எல்லாம் இருக்கு. மேசையில் இருக்கும் தட்டு, கைக்கு எட்டாத பிஞ்சுகளை மேஜையிலேயே ஏத்தி உக்கார வச்சுட்டாங்க.

நல்ல கவனிப்புலே பிள்ளைகள் இருக்காங்கன்றதை அவுங்க முகமே சொல்லுது. கோபால்கிட்டே பேசறதுக்குன்னே ஒரு சின்னக்கூட்டம் அவரைப் பின் தொடர்ந்து போய்க்கிட்டு இருந்துச்சு:-( குழந்தைகள் என்ன படிக்கிறாங்க, என்ன பேருன்னு இவர் விசாரிச்சதே அவுங்களுக்கு மகிழ்ச்சியா இருந்துருக்கும்போல.
ட்யூட்டியில் இருக்கும் கேர் கிவர்களிடம் கொஞ்சநேரம் விவரம் எல்லாம் நான் விசாரிச்சுக்கிட்டு இருந்தேன். மனநிறைவோடு வேலை செய்யறாங்கன்னு தெரிஞ்சது. அரசாங்கமே எல்லாச் செலவுகளையும் செஞ்சுருதாம். சம்பளமும் நல்லாக் கிடைக்குதாம். ஒரு அரசு அமைப்பு இப்படியெல்லாம் செய்யுதான்னு நான் வாயைப் பிளந்து நின்னதுதான் நெஜம்.
வாஷ் பேஸின் எல்லாம் படு சுத்தமா இருக்குது.

வீடு திரும்பும்போது என் மனசில் மகிழ்ச்சி இருந்தாலும்.........ஊரில் இருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒரு 240 குடும்பம் ஒவ்வொரு பிள்ளைகளைத் தங்கள் குடும்பத்தில் ஏத்துக்கிட்டா எவ்வளவு நல்லா இருக்கும் ........ .... நல்லாத்தான் இருக்கும். ஆனால் நடக்கும் காரியமில்லைன்னார் கோபால். நல்ல கவனிப்பு. அதுக்கே பாராட்டணுமுன்னு சொன்னார்.
ஆகஸ்டு பதினைஞ்சுக்குக் காலையில் கொடி ஏத்தும் விழாவுக்கும் தமிழ்மன்றம் போய்க் கலந்துக்கிட்டு பிள்ளைகளுக்குக் காலை உணவும் வழங்குனாங்க. நாந்தான் அழைப்பு இருந்தும் போக முடியாமப்போச்சு.



22 comments:

said...

நிறைவான பதிவு.. மனம் மகிழ்ந்தது..

நல்ல காரியம் செய்ய கொடுத்து வெச்சிருக்கணும்..

நீங்க பாக்கிய்சாலி அம்மா..

said...

மனம் நிறைவான மகிழ்ச்சியான பதிவு அக்கா!!

said...

படிக்கவே சந்தோஷமா இருக்கு டீச்சர்.

அரசு அமைப்பு இவ்வளவு நேர்த்தியா இருக்கா? ஆச்சர்யம் தான்.

said...

அரசு அமைப்பு நல்லபடியா நடப்பதே
ஆச்சரியப்படவேண்டிய நிலையாகிப்போச்சும்ஹ்ம்..
அந்த குழந்தையைப்பத்தி படிச்சு
மனசு சங்கடமாகிடுச்சு துளசி..:(

said...

வாங்க சாந்தி.

கடவுளாப் பார்த்துக் கூப்பிட்டுப் போனாருன்னுதான் சொல்லணும்ப்பா.

said...

வாங்க மேனகா.

எனக்கு மகிழ்ச்சிதான் அதான் உங்களோடெல்லாம் பகிர்ந்துக்கிட்டேன்.

said...

வாங்க நான் ஆதவன்.

அதே ஆச்சரியம்தான் எனக்கும்!

said...

வாங்க கயலு.


ஊழல்களையே பார்த்துப் பழக்கப்பட்டக் கண்களுக்கு வியப்புதான்!

பாவம்ப்பா...அந்தக் குழந்தை.... ப்ச்:(

said...

நிறைவாக நடாத்துவது மகிழ்ச்சியைத் தருகிறது.

ஊரில் இருந்தபோது மாதத்திற்கு ஒருதடவை முதியோர், சிறுவர்களுக்கான இல்லத்திற்கு நிறுவனமாகச் சென்று நாங்களே சமைத்துக்கொடுத்து அவர்களுடன் உணவருந்தி வருவோம். "ஸ்நேகாலயம்" படிக்கும்போது அவையெல்லாம் தோன்றின.

said...

ஸ்நேகாலயம் என்றதும் அதுவும் ஒரு ஆலயம் என்று நினைத்தேன்,இதனைப்பார்த்ததும் கோவிலுக்கு சென்ற மன நிறைவு கிடைத்தது டீச்சர்.

said...

அந்த அரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்;)

Anonymous said...

அரசு அமைப்பு இவ்ளோ சிறப்பான முறையில இருக்கு. ரொம்ப மகிழ்ச்சிய இருக்கு.

said...

இந்த மாதிரி ஒரு அமைப்பு இவ்வளவு நல்லா நடக்கிறதே நிறைவா இருக்கு துளசி. பிள்ளைங்களும் கோபாலும் நிக்கிற படமே நல்லா இருக்கு. இந்தக் குழந்தைகள் வளர்ந்து இன்னும் நல்லது செய்வர்கள் என்ற நம்பிக்கையும் வருகிறது.
நீங்க போய் வந்து எங்களுக்குச் சொன்னது இன்னும் மகிழ்ச்சி.

said...

மனசுக்கு நிறைவான பகிர்வு துளசியக்கா..

said...

புகழ் தேடி அலையும் கூட்டத்திற்கு மத்தியில் நீங்கள் எப்போதுமே ஒரு புதிர் தான்.

நல்வாழ்த்துகள்.

said...

வாங்க மாதேவி.

நம்மால் ஆன உடலுழைப்பை இந்தமாதிரி நிறுவனங்களுக்குக் கொடுக்கும்போது மனசுக்கு ரொம்பத் திருப்தியா இருக்குதே. அதுதான் பரிசு.

said...

வாங்க சுமதி.

ரொம்பச்சரி. இதுவும் கோயில்தான். சின்னச்சின்னதா 240 சாமிகள்.

said...

வாங்க கோபி.

என்னாலுமே நம்ப முடியாமத்தான் இருந்துச்சு! பாராட்டுகள் அவர்களுக்குத் தகும்.

said...

வாங்க குவெய்த் தமிழன்.

மனசாட்சி உள்ள மனிதர்கள் அரசு நிறுவனத்தில் இருந்தால் எல்லாம் அழகாக நடைபெறும் என்பதுக்கு இது ஒரு அத்தாட்சி.

said...

வாங்க வல்லி.

நீங்க சொன்னதே எனக்கு இன்னும் மகிழ்ச்சியைத் தருதுப்பா. ஆனால்.... அநாதைகள் என்ற நிலை யாருக்குமே வராமல் அனைவருக்கும் குடும்பம் கிடைக்கணுமுன்னு பிராத்தனைதான்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வருகைக்கு நன்றிப்பா. எனக்கும் மனசு நிறைஞ்சுருக்கு.

said...

வாங்க ஜோதிஜி.

இதுலே நமக்கு என்ன புகழ் இருக்கு? அரசு நிறுவனம் தானேன்னு அலட்சியமா இல்லாம எல்லாத்தையும் பார்த்துக் கவனிச்சுச் செய்யறவங்களுக்குதானே உண்மையான புகழ்!!!