Tuesday, April 06, 2010

பெங்களூரு வழியாக மங்களூரு

இந்த முறை கிங்ஃபிஷர் விமானம். சரியான நேரத்துக்குப் புறப்பட்டது. ரெட்டை இருக்கைகளோடு ஒல்லியா நீளமா மீன்கொத்தி மூக்கு போலவே இருந்துச்சு. வெஜிடபிள் ஸாண்ட்விச் ஒன்னும் 250 மி. தண்ணீரும் கொடுத்தாங்க. எங்க பக்கம் ஃபொக்காஸியா ப்ரெட்ன்னு ஒன்னு கிடைக்கும். அதைப்போல ஆனா பயங்கர குண்டாப் பெருசா இருந்துச்சு. உள்ளே கார்ன் ஃபில்லிங். காவாசி தின்னவே வாய் வலிச்சது.
அம்பது நிமிசத்துலே பெங்களூரு போயிட்டோம். ஒதுக்குப்புறமா ஏதோ ஒரு மூலையில் கொண்டுபோய் கிடப்பில் போட்டுட்டாங்க. பயணத்தைத் தொடர்பவர்கள் மட்டும் விக்குவிக்குன்னு உக்கார்ந்துக்கிட்டு பணியாளர்கள் பரபரன்னு சுத்தம் செய்யறதை 'வேடிக்கை' பார்த்துக்கிட்டு இருந்தோம்.
இந்த பராமரிப்பு, துப்புரவு செய்யும் விதத்தைப் பற்றி ஒரு டாக்குமெண்ட்ரிப் படம் வந்துருக்காம்.(கோபால் சொன்னார்) ஆளாளுக்கு ஒரு வேலை. படபடன்னு செஞ்சுட்டுச் சரசரன்னு போயிட்டாங்க. புது கேபின் க்ரூ வந்துச்சு. ஆனா சாப்பாடு? அதே பழசு. ஆனால் வேற சைஸ்:-) உள்ளெ ஃபில்லிங்கும் வேற! கோல்ஸ்லா. பறந்து போய்ச்சேர்ந்தப்ப மணி மூணடிச்சு அஞ்சு நிமிசம்.
சின்ன ஏர்ப்போர்ட்தான். அங்கே வருகைப் பகுதியில் கர்நாடகா அரசின் சுற்றுலாத்துறை டெஸ்க் இருந்துச்சு. இனிய முகத்துடன் வரவேற்றார் பணியில் இருந்தவர். இந்தப் பகுதி தக்ஷிண கன்னடாவாம். இந்த மாவட்டத்துக்கும் அடுத்துள்ள மாவட்டமான உடுப்பிக்கும் சேர்த்து ஒரு வரைபடம் கொடுத்தார். அதுலே முக்கிய இடங்கள், ஊர்கள் என்னென்ன இருக்கு, ஒவ்வொன்னுக்குமிடையில் உள்ள பயண தூரம், சின்னதா அவைகளைப் பற்றிய குறிப்புகள் எல்லாம் அழகா விவரமா இருக்கு. A4 சைஸ்லே எட்டுப் பக்கம். ரொம்ப சாதாரணக் காகிதத்தில் அச்சிட்டது. இதைவச்சுக்கிட்டே இந்தப் பயணம் பூராவும் நடத்த முடிஞ்சது.
எத்தனை நாள்? ரிலிஜியஸ் டூரா இல்லை, சரித்திரமா இல்லைன்னா சும்மா வேற வகை ஊர் சுற்றிப் பார்க்கவான்னு கேட்டு நல்ல விளக்கமும் கொடுத்தார். நெஜமாவே நல்ல உதவி. இதுமாதிரி நம்ம சென்னையில் ஏன் ஒரு ஏற்பாடும் இல்லைன்னு மனசுக்குள்ளே நொந்ததென்னமோ நிஜம்.

இப்பெல்லாம் 'வலையிலே இருக்கு வழி'ன்றது புது மொழி(காப்பிரைட் எனக்கு)முதல்நாளே 'வலை' மூலமா ஒரு நாலு நாளைக்கு தங்க இடமும், ஊர் சுற்ற ஒரு வண்டிக்கும் ஏற்பாடு செஞ்சுருந்தோம். வண்டி வந்து காத்திருந்துச்சு. பிரஷாந்த் என்ற இளைஞர் வந்துருந்தார். விமானநிலையம் பாஜ்பே என்ற இடத்தில் இருக்கு, சிட்டியில் இருந்து முப்பத்தியேழு கிலோமீட்டர் தூரத்தில்.. ஹொட்டேல் பெயரைச் சொன்னதும் சமுத்திரத்தின் அருகில் இருக்கு. நல்ல இடமுன்னு சொன்னார். 'புதுசா ஒரு விமானநிலையம் பெருசா கட்டிக்கிட்டு இருக்காங்க, அதோ அங்கே பாருங்க'ன்னார்.
வழியெல்லாம் கேரள கிராமங்களை நினைவூட்டும் விதமா அதே ஓடு வேய்ந்த வீடுகள். தெருக்கள் எல்லாம் செம்மண் புழுதி. கூட்டமா நின்னுருந்த தெங்குகளும் தேக்குகளும் ரோஸ் பவுடர் போட்ட மாதிரி புழுதியை வாரி முகத்தில் அப்பிக்கிட்டு நின்னுச்சுங்க. மங்களூர் சிட்டிக்குள்ளே அங்கங்கே நம்ம சிநேகாவும் மாடல் பொண்ணுகளும் அலங்கார பூஷிதைகளா வைரம் தங்கம் வாங்கச்சொல்லிக்கிட்டு இருந்தாங்க. முக்காமணி நேரத்தில் ஹொட்டேல் போய் இறங்குனோம்.

முகத்தில் வந்து அடிச்சது குடலைப் பிடுங்கும் ஒரு நாத்தம்:( பதறிக்கிட்டு ரிஸப்ஷனுக்கு ஓடுனோம். நல்லவேளை அந்த 'சுகந்தம்' இங்கில்லை. வெளியில் வந்துருந்த குடலைத் திரும்பவும் உள்ளே அனுப்பிட்டு என்னப்பா இது இம்புட்டு நாத்தமுன்னா..... இங்கே போர்ட் ரொம்பப் பக்கத்துலே இருக்காம். ஆனா ஃபிஷ்ஷிங் போர்ட். போனவாரம் வடிவுடையாளைப் பார்க்கப் போனப்ப இதே மாதிரி ஒன்னு காசிமேடில் வந்துச்சே அதேதான்!

மூணாம் மாடியில் அறை. காரிடோர் முழுசும் ஒரே புகைநாத்தம். இதேதடா வம்பாப் போச்சு. தாஜ் க்ரூப்ன்னு சொன்னாங்க. இப்படியா? யக். நாலுநாள் தாங்கமாட்டேனே:(

'பரவாயில்லை. நாளைக்கு வேற இடம் பார்த்துக்கலாம். ஒரு பேக் அப் இருக்கட்டுமுன்னுதான் நாலுநாளைக்கு புக் பண்ணினேன்'னார் கோபால்.

'ஆமாம். நாளைக்குக் காலையில் காலி செஞ்சுட்டு ஊர் ஊராப் பார்த்துக்கிட்டே போய் அங்கங்கே தங்கிக்கலாம். நிறைய ஹொட்டேல்கள் விவரம் டூரிஸம் போர்டு கொடுத்துருக்கே'ன்னேன்

கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு மூக்கைப்பிடிச்சுக்கிட்டே காரிடோரைக் கடந்து ஓடி மின்தூக்கிக்குள் நுழைஞ்சேன். கீழே ரெஸ்டாரண்ட் இருக்கு. அங்கே போய் காஃபி ஒன்னு குடிக்கணும். பருப்புவடை இருக்குன்னதும் நான் வேணாமுன்னு தலையை ஆட்டுவதைக் கவனிக்காமல் கொண்டான்னுட்டார் கொண்டவர். சின்னச்சின்னதா எட்டு.
இதுக்குள்ளே ட்ராவல் கம்பெனி முதலாளி நம்மைப் பார்க்க வந்துட்டார். இது சைடு பிஸினெஸ்தான். புள்ளி ஒரு வக்கீல். தினேஷ் ராவ். வரைபடத்தைப் பிரிச்சுவச்சுக்கிட்டு நாலுநாளில் எங்கெங்கே போகலாம், எங்கே தங்கலாமுன்னு திட்டம் போட்டுக் கொடுத்தார். இன்னிக்கு இங்கே உள்ளூர் கோவில்களையெல்லாம் முடிச்சுக்குங்கோன்னார்.
நல்லதா ஒரு கோட்டை, திப்பு சுல்தான் கட்டுனது இருக்கு. ஆனால் இருட்டப்போகும் நிலையில் அது வேணாமுன்னு முடிவு செஞ்சோம். சிலகோவில்களைப் பத்திச் சொல்லிக்கிட்டே வந்தவர் 'ஷக்திநகரில் க்ருஷ்ணன் கோவில் இருக்கு. ரொம்ப அழகான கோவில். உங்களுக்குப் பிடிக்கும். அது கோபாலகிருஷ்ணன் கோவில்' ன்னதும் உடனே அங்கே போகணுமுன்னு பரபரத்தேன்.

மதுரையைவிடக் கொஞ்சம் சின்ன ஊராத் தெரியுது மங்களூர். இந்த ஊருக்குப் பெயர்கொடுத்த மங்களாதேவி கோவிலுக்கு முதலில் போனோம். (நாங்க பூனாவில் இருக்கும்போது கீழ்தளத்தில் குடி இருந்த உப்பாவும் உம்மாவும் மங்கலாபுரமுன்னுதான் எப்பவும் சொல்வாங்க. அவுங்க தலசேரிக்காரர்கள். மங்கலாபுரம் தீவண்டியா, நமக்குப் போகேண்டது)
கோவில் நல்ல பழசு. பத்தாம் நூற்றாண்டு. அப்போ இது துளு நாடு.(இப்பவும் அங்கத்து ஜனங்கள் துளு பேசறாங்க. நம்ம ட்ரைவர் பிரஷாந்த் துளு பேசுவாராம். அரைகுறையா ஹிந்தி பேசறார். இங்கிலிபீசு...சுத்தம். எப்படியோ சமாளிச்சுட்டோமுன்னு வையுங்க. ஆள் அசப்பில் ராம் பட ஜீவா மாதிரி. சின்ன வயசுதான். 23.) அரசர் குந்தவர்மா ஆட்சி. மச்சேந்திரநாதா, கோரக்நாதான்னு ரெண்டு ரிஷிகள் நேத்ரவதி ஆற்றைத் தாண்டி மங்கலாபுரம் வர்றாங்க. (அவுங்க ஆறு தாண்டுன இடத்துக்கு கோரக்தாண்டான்னு பெயராம்) இங்கேதான் கபிலமகரிஷியின் ஆஸ்ரமம் முன்பொரு காலத்துலே இருந்துருக்கு.

ரிஷிகள் வந்துருப்பதைக் கேள்விப்பட்ட அரசர் குந்தவர்மா, நேரில் வந்து அவுங்களை வணங்கி வரவேற்று, 'எதுனாச்சும் உதவி வேணுமுன்னா சொல்லுங்க'ன்னார். அப்போதான் அவுங்க கபிலாஸ்ரமத்தைப் பற்றிச் சொல்லி, இந்த புண்ணீய பூமியில் நாங்க ஒரு ஆஸ்ரமம் கட்டிப் பூஜை செய்யலாமுன்னு இருக்கோம். அதுக்குண்டான இடத்தைத் தரணுமுன்னு கேட்டாங்க. முந்திக்காலத்துலே மங்களாதேவி கோவில்கூட இங்கே இருந்துச்சுன்னும் சொன்னதும் ராஜாவுக்கு ஆச்சரியமாப் போச்சு, 'நம்ம நாடு இவ்வளவு சிறப்பானதா?'ன்னு. சம்பவம் நடந்த இடங்களை ராஜாவுக்குக் காமிச்சாங்க.

கொசுவத்தி பத்தவச்சாச்சு, ராஜாவுக்கு !


தொடரும்........................:-)

35 comments:

said...

//'புதுசா ஒரு விமானநிலையம் பெருசா கட்டிக்கிட்டு இருக்காங்க, அதோ அங்கே பாருங்க'ன்னார்.//

அந்த ஓட்டு வீடுதான் புது விமானநிலையமா... ஆஹா!!! நல்ல வசதியாத்தான் இருக்கும் போலிருக்கு :-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆனாலும் இந்த அக்குறும்பு ஆகாதுப்பா:-))))))

said...

நான் கேக்க நினச்சத சாரல் முந்திகிட்டாங்க

ஆரம்பமே சூப்பர்

said...

:)

said...

உடுப்பி கிருஷ்ணரை நோக்கிய பயணமா ? தாய் மூகாம்பிகை மற்றும் சிருங்ககிரி சாரதாவும் புனிதப்பயணத்தில் உண்டா ? தென் கனரா நாட்டுத்தலங்களைக் குறித்த உங்கள் பயண அனுபவங்களை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

said...

பின்ன வேற என்ன நினைப்பாங்க. குட்டி விமானங்கள் வந்திறங்கற இடமா இருக்கும்னு நானா சமாதானம் செய்துகிட்டேன்:)

ராம் பட ஜீவா பயங்கரமா இருப்பாரே. எதுக்கும் ப்ரஷாந்த் படத்தைப் போடுங்க. பார்த்துட்டு சொல்லறேன்:)

said...

அடடா..ஒரு வார்த்தை சொல்லியிருக்க/கமெண்ட்ல சொல்லியிருந்தாக் கூட நான் சில ஏற்பாடுகளைப் பண்ணிக் கொடுத்திருப்பேன்?.. :(...முடிந்தால் உங்களை சந்தித்தும் இருக்கலாம்...

said...

//மதுரையைவிடக் கொஞ்சம் சின்ன ஊராத் தெரியுது மங்களூர். //

இன்னுமா?உடுப்பியெல்லாம் வெளி ஊர்லதான் பிரபலம்.அந்த ஊரு அமைதியா தூங்கிகிட்டு இருந்தது நான் மங்களூர் வழியா கோவா போகும் போது.எல்லாத்துலயும் பெங்களூரு முந்திகிச்சி துவக்கம் முதலே.

said...

கிங் உள்ளூர் சேவைக்கு ஓகே தான் போல...ஆனா வெளிநாடுக்கு வேலைக்காது போல.

இங்க ஓட்டல் பிரச்சனையா....அய்யோ!

Anonymous said...

சின்ன சின்ன வடைக்கு எவ்வளோ சட்னி

said...

சட்னியா அது? நான் படத்தை மட்டும் முதல்ல பாத்தப்போ, தயிர்சாதமும், வடையுமா - நல்ல காம்பினேஷன்னு நினைச்சுகிட்டேன். ஹி.. ஹி..

said...

வாங்க எல் கே.

அந்த ஓட்டுவீடு ஏர் இண்டியாவுக்கான எக்ஸ்க்ளூஸிவ் டெர்மினல்,சரியா?

said...

வருகைக்கு நன்றி விதூஷ்

said...

வாங்க மணியன்.

இதெல்லாம் இல்லாமலா? அஞ்சுலே கிடைச்சதையெல்லாம் விடலை.

கண்கள் கண்டதைக் கண்டபடி எழுதத்தானே வேணும்:-)

said...

வாங்க வல்லி.

ஜீவா, ப்ரஷாந்த் இப்படி நடிகர் கூட்டம்தான்:-)))))

போட்டால் ஆச்சு:-)

said...

வாங்க மதுரையம்பதி.

வெறும் 24 மணி நேர நோட்டீஸ். அதுலே தையல் பிரிக்கவே எட்டுமணி நேரம்.

அந்த நிமிஷத்துக்கு வேற எதுவுமே தோணலை.

said...

வாங்க ராஜநடராஜன்.

தமிழ்க்காரனை கன்னடக்காரன் அடிக்கிறான்னு முந்தி சேதிகள் கேட்டதில்
கொஞ்சம் கலவரமா இருந்துச்சு. அ.வியாதிகள் பண்ணும் வேலை

ஆனால், சென்னைவாசிகளுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு (தரிசனம்) கிடைச்சது.

said...

வாங்க கோபி.

உள்ளூர் ராஜா வெளியூர்லே விலைபோக மாட்டான்:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

தேங்காய்தான் கொட்டிக்கிடக்கே. சட்னியா அரைச்சு ஊத்தறாங்க:-)

எம்புட்டுத் தாளிப்பு பார்த்தீங்களா!!!!

அதுவும் கடலைப்பருப்பு போட்டு!

said...

வாங்க ஹுஸைனம்மா.


எனக்குத் தயிர் சாதத்துக்கு வாழைப்பழம், அச்சு வெல்லம், தேங்காய்ச் சில் தான் பிடிக்கும்:-)

said...

south karnataka அருமையான சுற்றுலா மையம். நாங்கள் போன வருஷம் போயிருந்தோம் (http://sugumar.com/blog/?p=32) ஒரு unusual விசயம் - உடுப்பி, மங்களூர், கோவர்னா அசைவம் அதுவும் மீன் வகைகள் அருமை - நான் சோற்றைவிட மீன் தான் அதிகம் தின்றேன். அப்புறம் low profile serenity தான் கர்நாடகாவின் சிறப்புன்னு நான் நினைக்கிறேன்...

said...

//வெளியில் வந்துருந்த குடலைத் திரும்பவும் உள்ளே அனுப்பிட்டு//Only you can write like this!!! Reading your blog completes our day! We get to see Gopal Sir's picture first day itself!!

said...

நல்லா இருக்கு கட்டுரைகள். சொல்லுங்க. நான் போவதுக்கு உங்க குறிப்புக்களை குறிச்சு வைச்சுக்கிறேன். அந்த வடையும் தயிர் சாதம் சூப்பர். லெமன் ஊறுகாய் இல்லையா?

said...

வாங்க சுகுமார்.

ஷார்ட் & ஸ்வீட்டாப் பாய்ண்டை மட்டும் எழுதி இருக்கீங்க!!!!

சின்னவயசுலே சுற்றுலா போறது ரொம்பவே ஜாலி.

ஒரு பதினைஞ்சு வருசத்துக்கு முன்னே ஸ்ரவணபெளகுலா, பேலூர், ஹளபேடு போனோம்.

கஷ்டமில்லாம மலைஏற முடிஞ்சது அப்போ!

said...

வாங்க சந்தியா.

கோபால் சார் ஃபோட்டோ ஒரு எவிடென்ஸுக்குத்தான். யார் ஃபோட்டொக்ராஃபர்ன்னு தெரியணுமுல்லே:-)


ஆமாம். அது என் குடலாச்சே. நாந்தானே திருப்பி உள்ளெ தள்ளனும்:-)

said...

வாங்க பித்தனின் வாக்கு.

தயிர்சாதம்..... நோ நோ.

அது சலவைச் சட்டினி!

said...

உள்ளேன் டீச்சர்

http://www.virutcham.com

said...

வாங்க விருட்சம்.

உள்ளே வந்து உக்காருங்க. மரம் நடக்காதா என்ன;-)))))

said...

//'வலையிலே இருக்கு வழி'ன்றது புது மொழி//

கலக்கல். நல்லாதான் இருக்கு. நெசந்தான். கூகுள் மேப்பை மொபைல் கேமராவில் சுட்டு, அதை வைத்து தான் ரயில் நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு நடந்தே போனேன் பாரிசில்.

said...

வாங்க கோவியார்.

கூகுள் மேப் இல்லாத காலத்துலே ஈஃபிள் டவருக்கு வழியை ஆக்ஷனில் கேட்டுப்போனது நினைவுக்கு வருது.

இப்போ வலையில் எல்லாமே ஈஸி பீஸின்னு இருக்கு:-)

said...

மங்களூர்,துளு நாடு இரண்டும் பார்த்தாயிற்று.நன்றி.

said...

வாங்க மாதேவி.

கூடவே வாங்க. இன்னும் இடம் பார்க்கலாம்:-))))

said...

//அந்த ஓட்டு வீடுதான் புது விமானநிலையமா... ஆஹா!!! நல்ல வசதியாத்தான் இருக்கும் போலிருக்கு :-))))

//ஆனாலும் இந்த அக்குறும்பு ஆகாதுப்பா:-))))))//

//நான் கேக்க நினச்சத சாரல் முந்திகிட்டாங்க//

//குட்டி விமானங்கள் வந்திறங்கற இடமா இருக்கும்னு நானா சமாதானம் செய்துகிட்டேன்:)//

நல்ல, சூப்பர் காமெடி!!

said...

//சின்ன சின்ன வடைக்கு எவ்வளோ சட்னி//

இல்லை சின்ன அம்மணி, அவ்ளோ சட்னிக்குத்தான் சின்னச்சின்ன வடை!!!!

said...

வாங்க நானானி.

'படம் பார்த்துக் கதை சொல்லு'ன்னு தலைப்பு வச்சுருக்கலாம் நம்ம பதிவுக்கு:-)))))

சட்னி தலையில் இருக்கும் தாளிப்பின் அளவைப் பார்த்தீங்களா!!!!