Thursday, March 25, 2010

க்ருஷ்ணா க்ருஷ்ணா............

சரோவர் வாசலைத் தாண்டி வெளியே வந்தால் நமக்கு இடப்புறம் பளிச் என்று வர்ணமடித்த அழகான ஒரு கோவில் இருக்கு. ஸ்ரீ தக்ஷின்முகி ப்ராச்சீன் ஹனுமான் மந்திர் சித்த பீடம் நுழைவு வாசல் அலங்காரத்தின் மேலே ரெண்டு பக்கமும் குரங்காரே இருக்கார். சிலைதான். ஆனால் சாமியாக இல்லை. வெறும் குரங்குகள். உள்ளே படம் எடுக்கத் தடை. பூஜாரியிடம் பேச்சுக் கொடுத்தேன். 'இது(வும்) ஆதிகாலத்தில் இருந்தே இருக்காம். அஞ்சாயிரம் வருசமாக்கூட இருக்கலாமாம். சின்ன சந்நிதிதான். ஆனால் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியதாம். பளிங்குச் சிலை. இங்கே வேண்டிக்கிட்டால் நம் மனசில் இருக்கும் விருப்பங்கள் (நியாயமானதாக இருந்தால்) கண்டிப்பாக நிறைவேறுமாம். நம் சித்தத்தின் படி எல்லாம் நடக்குமாம்.' அதானா சித்த பீடம்? மனம் போல் வாழ்வு!
கோவில் படு சுத்தமா இருக்கு. நல்ல நிர்வாகம் போல் இருக்கு. எதிர்வரிசையில் கடைகண்ணிகளுக்கு நடுவே இன்னொரு கோவில். ஸ்ரீ குரு கோரேஷ் நாத் மந்திர். உள்ளே எட்டிப் பார்த்தால் 'பண்டாரா' நடந்துக்கிட்டு இருக்கு. எல்லோருக்கும் சாப்பாடு போட்டுக்கிட்டு இருக்காங்க. பிர்லா மந்திர் ஒன்னு இருக்கேன்னு விசாரிச்சுக்கிட்டுப் பக்கவாட்டில் இருந்த தெருவுக்குள்ளே போனோம்.

பிர்லா குடும்பத்தினர் கட்டி வச்சுருக்கும் 'தேவா மந்திர்.' இங்கே சாதிப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் வரலாம். தொற்று நோய் உள்ளவர்களுக்கும் பிச்சைக்காரகளுக்கும் அனுமதி இல்லை. வழக்கமான லக்ஷ்மி நாராயணன் சிலை. மிகப்பெரிய ஹால் எல்லாம் பளிங்கு. பளிச்ன்னு சுத்தமா இருக்கு. இந்தக் கோவிலுக்கு நேர் எதிரில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கு. முகப்பில் தும்பிக்கையில் மாலையுடன் யானைகள்.
சரோவர் இருக்கும் சாலையில் ஏராளமான மடங்களும் அதைச் சேர்ந்த கோவில்களுமா இருக்கு வியாஸ் கௌடிய மடத்தின் ராதா கிருஷ்ணா மந்திர், பஞ்சமுக மஹாதேவ் மந்திர், கீதா மந்திர், மாதா பத்ரகாளி மந்திர், ஸ்ரீ ஸ்ரீ 1008 பாபா காலி கமலிவாலா பஞ்சாயத க்ஷேத்ரம்ன்னு ........... வெளியே பெயர்களை மட்டும் பார்த்துக்கிட்டே வந்தோம். ஒரு சின்ன ரவுண்டபௌட்டில் அர்ஜுன் சிலை இருக்கு.
கிருஷ்ணா ம்யூசியம் ஒன்னு இருக்கேன்னு நுழைஞ்சோம். குருக்ஷேத்ரா டெவலப்மெண்ட் போர்டு நிர்வகிக்குது. மூணடுக்குக் கட்டிடம். ஆறு கேலரிகள். குல்ஸாரிலால் நந்தா(இவர் நாட்டின் ரெண்டாவது & நாலாவது பிரதமர். ரெவ்வெண்டு வாரம் பதவியில் இருந்தார்) அவர்கள் தலைமையில் 1987 இல் திட்டம் போட்டு ஒரு ஹாலில் துவக்கியது (இப்ப அந்த ஹாலை லெக்ச்சர் ஹாலா பயன்படுத்தறாங்க) 1991 இல் புதுக் கட்டிடம் கட்டி ஆரம்பிச்சது. அப்புறம் நாலு வருசத்தில் பக்கத்துலேயே இன்னொரு கட்டிடம் கட்டி ரெண்டையும் இணைச்சு விஸ்தாரமா ஆக்கி வச்சுருக்காங்க.

இந்தியா முழுசும் போய் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட அபூர்வமான கலைப் பொருட்களை சேகரம் பண்ணி இருக்காங்க. பெயிண்டிங்ஸ் பகுதியில் ராஜஸ்தானி, பஹாரி, தஞ்சாவூர், ஆந்திரா, ஒரிஸ்ஸா, பீஹார் ன்னு அப்படியே ஆளை மயக்கும் ஓவியங்கள். இப்ப இருப்பதுபோல் கம்யூனிகேஷன் இல்லாத காலத்துலே எப்படி இமயம் முதல் குமரிவரை ஒரே மாதிரி சாமியைப்பற்றிய எண்ணங்களும் சாமிக் கதைகளும் பரவுச்சுன்றது மஹா ஆச்சரியம்தான்.
பாரதப் போரில் அர்ஜுனனுக்கும் பீஷ்மருக்கும் சண்டை நடக்கும்போது, பீஷ்மரின் மேல் அம்பெய்து கொல்லத் தயங்கி நிற்கும் அர்ஜுனனிடம் கோச்சுக்கிட்டு , நானே பீஷ்மரைக் கொல்றேன்னு போகும்(ஆயுதம் எடுக்கமாட்டேன் என்று கொடுத்த வாக்கை மறந்த) ஜனார்த்தனன். 'ப்ரதிக்ஞை பங்கம்'

இவர் வேற குருக்ஷேத்ராவில் இடங்களைப் பார்க்கும்போதெல்லாம், மகாபாரதம் வெறும் கதை இல்லையா?! உண்மையா நடந்துருக்கும்போல இருக்கேன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். நடந்திருக்கும்தான். பங்காளிச்சண்டை. கொஞ்சம் சின்ன அளவில் நடந்துருக்கும். அதை எழுத்தாளனுக்குரிய கற்பனை வளம் சேர்த்து இன்னும் பெருசா உருவகப்படுத்தி இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் சுமார் 200 கதாபாத்திரங்களை அமைச்சு எங்கேயும் சிக்கல் சிடுங்கல் இல்லாமக் கதையைக் கொண்டு போனது அற்புதமே! இதுலே கடவுளின் அவதாரங்களையும், கிளைக்கதைகளையும், அங்கே நடந்த முன்வினைக்குத் தொடர்பா இங்கே நடந்ததையும் கோர்த்து வாங்கி...............அப்பப்பா..................... நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை!
சிலைகள் பலதும் கல், உலோகம், மரம், தந்தம் இப்படி வகைவகையா நிக்குது. கிருஷ்ணனை இடுப்பில் வச்சுக்கிட்டு இடக்கையால் அணைச்சுப் பிடிச்சுக்கிட்டு, வலக்கையால் சிறுவன் பலராமனின் கையைப்பிடிச்சு நிற்கும் யசோதையின் சிற்பம்.............. தூள்!
சென்னை ம்யூஸியத்துலேயும் ஏராளமான சிற்பங்கள் சேர்த்து வச்சுருக்காங்க. ஆனால்..... பராமரிப்பு ஒன்னும் சொல்றதுக்கில்லை. இந்த அழகிலே பழுது பார்க்கும் வேலை நடக்குதுன்னு மூணு கட்டிடங்களை அடைச்சு வச்சுருந்தாங்க. வெண்கலசிலைகள் இருக்கும் பகுதி மட்டும் பரவாயில்லை. வெளிநாட்டுக்காரர்கள் வருகை அதிகமா இருக்கும் பகுதின்னு அங்கே மட்டும் ஏஸி பண்ணி இருக்கு. இந்த இடத்தை முன்பு 'செத்தகாலேஜு'ன்னு சொல்வாங்க. அது அப்படியே உண்மையாகிப்போச்சே!:(

ஒரு இடத்துலே கோபால் காமிச்ச யானையின் அழகையும் அந்தக் கற்பனை வளத்தையும் என்னன்னு சொல்றது! பெண்களால் உருவான யானை. பெண் பொம்மைகள். துணிப் பொம்மைபோலத்தான் இருக்கு. நல்ல ஒல்லியான, உயரமான வாளிப்பான அம்சமான அழகான பெண்கள் அலங்கார உடைகளும் நகைநட்டுமா ஜொலிக்கிறாங்க.

யானையின் நாலு கால்களுக்கும் நாலு பெண்கள் நிக்கறாங்க. பின்புறக் கால்களுகிடையில் இன்னொரு பெண் முதுகைக் காமிச்சபடி இந்த இரண்டு கால்களையும் பிடிச்சு ஹைஜம்ப் பண்ணது போல் மேலெழும்பி ரெண்டு கைகளையும் விரிச்சு கால்ப் பெண்களின் தோளில் வச்சுருக்காள், இவள் கால் உட்புறமா இருக்கு. அழகான நீண்ட சடை(வரிசையா சடை வில்லை அலங்காரம் வேற!) யானையின் வால். முன்பக்கக் கால்களின் நடுவில் ஒரு பெண் திரும்பி நின்னு முதுகுப் பக்கம் வெளியில் காமிச்சபடி நிற்க, அவள் தலையில் இருந்து சரிகை வேலைப்பாடுடன் ஒரு நீண்ட துணி தும்பிக்கை டிஸைனில் தரைவரை தொங்குது. தலையில் மத்தகத்திக்கு முதுகை வளைச்சு ஒரு பெண் . உடல் பாகத்திலே ஏழெட்டுப் பெண்கள் குறுக்கிலே கால்மாடா தலைமாடாப் படுத்துருக்காங்க. தூரத்துலே இருந்து பார்க்கும்போது கண்ணாடிப்பெட்டிக்குள் நிற்கும் கம்பீரமான யானை. கிட்டப்போனால்தான்............எப்படி இப்படி........ ஒரு கற்பனை!

(எனக்குத்தான் சரியா விவரிச்சுச் சொல்லத் தெரியலை. ஒருமாதிரி கற்பனை பண்ணிப் பார்த்துக்குங்க, சரி வருதான்னு)

உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்றதால் நான் அப்படியே நொந்து, நொறுங்கி நூலானது இந்த யானைக்கு மட்டுமே. அடாடா............. செஞ்சவனுக்கு என்ன கொடுத்தாலும் தகும்!

ஒரு மாடியில் வஸுதேவர் குழந்தையைத் தலையில் தூக்கிக்கொண்டு நதியைக் கடந்து வர்றது, கண்ணனின் சிறுவயது விளையாட்டுக்கள், வெண்ணை திருடியது, கோவர்தனகிரியைக் குடையாகப் பிடிச்சது, காளிங்கன் தலையில் நர்த்தனம் செஞ்சது, கோபியருடன் கூடிக் கோலாட்டம் ஆடியது, கம்சனை வதம் செஞ்சதுன்னு பெரிய பெரிய கண்ணாடி மாடத்துக்குள்ளே லைஃப் சைஸ் சிலைகள். நாம் நடக்க நடக்க அங்கங்கே இருக்கும் சென்ஸார் லைட் 'டக்'னு மாடத்துக்குள்ளே வெளிச்சம் போட்டுக் காமிக்குது.

இன்னொரு இடத்துலே இதே போல இன்னும் பெரிய மாடங்களில் பாரதப்போர் காட்சிகள். அபிமன்யூ சக்கரவியூகத்துலே பெரிய தலைகளுக்கு நடுவில் மாட்டிக்கிட்டு நிற்கும் காட்சியில் 'ஐயோ'ன்னு மனசு கரைஞ்சு போகுது.
இன்னொரு பெரிய காட்சி பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடக்கிறார். ராஜ தர்மத்தைப் பற்றிச் சொல்றார். முக்கிய பாத்திரங்கள் எல்லோரும் காந்தாரி, குந்தி உள்படச் சுத்தி நிக்கறாங்க. தலையில் க்ரீடத்தோடு த்ருதராஷ்ட்ரன் கண் மூடி(அதான் பார்வை இல்லையே) நிக்கிறார். சூப்பர் ஸீன்!
ஏனோதானோன்னு இல்லாமல் ரொம்ப கவனத்தோடு இந்த இடத்தை ஒழுங்காப் பராமரிப்பவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கத்தான் வேணும். படங்களுக்காகவும், 'அந்த யானை'க்காகவும் ஒரு புத்தகம் வாங்கினேன். உங்க அதிர்ஷ்டம் 'யானை' யைக் காணோம்!

போனாப்போகுது. இதைப் பாருங்க. சினிமாக்காரர் பேச்சைக் கேட்டால்தான் என்ன?

19 comments:

said...

சென்னை ம்யூஸியத்துலேயும் ஏராளமான சிற்பங்கள் சேர்த்து வச்சுருக்காங்க. ஆனால்..... பராமரிப்பு ஒன்னும் சொல்றதுக்கில்லை. இந்த அழகிலே பழுது பார்க்கும் வேலை நடக்குதுன்னு மூணு கட்டிடங்களை அடைச்சு வச்சுருந்தாங்க. வெண்கலசிலைகள் இருக்கும் பகுதி மட்டும் பரவாயில்லை. வெளிநாட்டுக்காரர்கள் வருகை அதிகமா இருக்கும் பகுதின்னு அங்கே மட்டும் ஏஸி பண்ணி இருக்கு. இந்த இடத்தை முன்பு 'செத்தகாலேஜு'ன்னு சொல்வாங்க. அது அப்படியே உண்மையாகிப்போச்சே!:(


எனக்கு தீராத ஆச்சரியம். இந்த மென்மையின் தன்மையை வலியாக்கி படிப்பவரை யோசிக்க வைக்க உங்களால் மட்டும் தான் முடியுமோ?

இதுவும் ஒரு வகையில் காந்தி சொன்ன அஹிம்சை தான்.
புலம்பல் இல்லாமல் அக்கறையற்று ஒதுங்காமல் உள் வாங்கியதை மிக நாகரிகமாக படைப்பில் தரும் உங்கள் ஒவ்வொரு தலைப்பும், எழுதுகின்ற எழுத்தைப் போலவே வாழ்க்கையும் இருக்கும் என்பது உறுதி.

said...

யப்பா..எவ்வளவு தகவல்கள்.

டீச்சர் சூப்பர்.

படங்கள் எடுத்த கோபாலுக்கும் வாழ்த்துகள்.

said...

வாங்க ஜோதிஜி.

முந்தியெல்லாம் பட்டணம் வந்தா உயிர்க்காலேஜ், செத்தகாலேஜ் பார்க்கணுமுன்னு சனங்க சொல்லுவாங்க. இது ஜூவும் ம்யூஸியமும்தான்.

எவ்வளோ சிம்பிளான சொற்ப்ரயோகம் பாருங்க!!!!

இறந்த விலங்குகளின் எலும்புக்கூடுகள் ஒருவேளை பெயர்க்காரணமா இருக்கலாம்.

அங்கே கேமெராவுக்கு டிக்கெட் வாங்குனோமான்னு நம்மைக் கண்காணிக்கும் தீவிரத்தில் கொஞ்சம் பராமரிப்புக்கும் ஒதுக்கலாம்.

கண்ணாடிப்பெட்டிகளைச் சும்மா துடைச்சால்கூட போதும். ஆனால்.... ஸ்டூல் போட்டு உக்காந்து பேப்பர் படிக்கவே நேரம் சரியா இருக்கு. பாவம். அவுங்கதான் என்ன செய்வாங்க,இல்லையா?

said...

வாங்க சூர்யா.

//
படங்கள் எடுத்த கோபாலுக்கும் வாழ்த்துகள். //

அட! இது எப்போலேந்து!!!!!!!!!

நான் துணிக்கடைக்கும் நகைக்கடைக்கும் போகும்போதுதான் உண்மையில் 'படம் எடுப்பார்' :-)))))

said...

உங்க வர்ணனையே அந்த யானை எப்படி இருக்கும்னு வரைஞ்சு காட்டுகிறது துளசி .
நம்ம ஊரு மியூசியம் இருந்த கம்பீரம் என்ன, இப்ப இருக்கற நிலைமை என்ன! இப்படித்தன் எல்லாத்தையும் கை நழுவ விட்டு விட்டுப் புதிசா கட்டறேன்னு ஆரம்பிப்பாங்க. பழைய உயிர் அதுல இருக்காது.
சண்டிகரில் குருக்ஷேத்ரம் படு சுத்தமாக இருக்கிறதே துளசி.
நம் ஊர் மட்டும் இப்படி ஆவதற்கு என்ன காரணம். அலட்சியம்தான்.

said...

அருமை அருமை. முக்கியமா படங்கள் அற்புதம்

said...

The elephant was described very well in your words..Pictures are as usual super. I now know why Gopal Sir isnt appearing in any pictures! :P

said...

உங்கள் பயணம், அனுபவம், சொல்லிய விதம் எல்லாமுமே அருமை.
//இப்ப இருப்பதுபோல் கம்யூனிகேஷன் இல்லாத காலத்துலே எப்படி இமயம் முதல் குமரிவரை ஒரே மாதிரி சாமியைப்பற்றிய எண்ணங்களும் சாமிக் கதைகளும் பரவுச்சுன்றது மஹா ஆச்சரியம்தான்.//
இந்த ஆச்சர்யங்கள் நமக்கு பல கோவில்களில் கிடைக்கும். இங்கே சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தம் பக்கத்தில் ஒரு புராதான சிவன் மற்றும் பெருமாள் கோவில் இருக்கு( லவ குசா வழிபட்ட இடம் ). நீங்கள் கூட பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. அங்குள்ள சரபேஸ்வரர் மண்டபத்தில் , ராமாயண சிற்பங்களும், மகாபாரத சிற்பங்களும் காணலாம். ராமாயணத்தின் தொடர்ச்சி பல கோவில்களின் காணப் பெற்றுஆச்சர்யப் பட்டு இருக்கிறேன்.

said...

வாங்க ஜீவ்ஸ்.

போட்டோக்காரரே சொன்னதும் கொஞ்சம் யோசனையா இருக்கு!

படங்கள் 6 முதல் 10 வரை இருக்கும் அஞ்சையும் சொல்றீங்கன்னு நினைக்கிறேன்.

அது......... அங்கே வாங்குன புத்தகத்துலே இருந்து ஸ்கேன் பண்ணிப்போட்டது. புத்தகத்தின் அட்டைப் படத்தையும் போட்டுருக்கேன் பாருங்க.

said...

வாங்க சந்தியா.

கோபால் சார் படத்துலே இல்லேன்னா அதுக்கு இப்படி ஒரு 'மறை' பொருள் இருக்கா? அச்சச்சோ!!!!!

அந்த அர்ஜுன் சிலை(மட்டும்) கோபால் எடுத்த படம்.

said...

வாங்க விருட்சம்.

ஒருமுறை போய்வந்தேன். கீழே சுட்டி இருக்கு,பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2009/10/blog-post.html

said...

வாங்க வல்லி.

உண்மைதான்ப்பா. சென்னை ம்யூஸியத்துலே ஒரு நரகம் பொம்மை செட் வச்சுருப்பாங்க. அங்கே கொடுக்கும்(?) தண்டனைகள் எல்லாம் விவரமா இருக்கும். எண்ணெய்க் கொப்பரையில் முக்கி எடுப்பது, முள் கம்பியால் விளாசுவதுன்னு குரூரமா இருக்கும். பயத்தோடு அதைப் பார்த்து ரசிப்பேன் சின்னவயசுலே!

இப்போ மகள் வந்தப்ப, அதைச் சொன்னதும் அவளுக்கு அதைப் பார்த்தே ஆகணுமுன்னு ஒரே ஆசை. போனோம். அதெல்லாம் அங்கே இப்போ இல்லவே இல்லை.

தனியா நரகமுன்னு வேற ஒன்னு எதுக்குன்னு எடுத்தாட்டங்க போல!

said...

நல்ல கட்டுரைகள் எல்லாப் பதிவையும் படித்தேன். மிக அருமை. ஒரு இடத்தை தவிர,

// இவர் வேற குருக்ஷேத்ராவில் இடங்களைப் பார்க்கும்போதெல்லாம், மகாபாரதம் வெறும் கதை இல்லையா?! உண்மையா நடந்துருக்கும்போல இருக்கேன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். நடந்திருக்கும்தான். பங்காளிச்சண்டை. கொஞ்சம் சின்ன அளவில் நடந்துருக்கும். அதை எழுத்தாளனுக்குரிய கற்பனை வளம் சேர்த்து இன்னும் பெருசா உருவகப்படுத்தி இருக்கலாம். //

என்ன டீச்சர் இப்படி சொல்லிட்டிங்க, ஏறக்குறைய மொத்த பாரதமும் கலந்து கொண்ட போர் அது. எல்லா நாட்டு மன்னர்களும் எதாது ஒரு அணியில் கலந்து கொண்டனர். இரு நாட்டு மன்னர்கள்தான் கலந்து கொள்ளவில்லை. ஒன்று துவாரகையின் அரசர் பலராமர் இன்னேருவர் நம்ம ஆளு பாண்டிய மன்னன். பலராமர் கலந்து கொள்ள வில்லை என்றாலும் யாதவப் படைகள் சாத்தகியின் தலைமயில் துரியோதனுக்கு ஆதரவாக சண்டை போட்டது. பாண்டிய மன்னர் சண்டையில் நடுனிலை வகித்தார் என்றாலும் பாண்டியப் படைகள் சண்டைப் போடுவர்கள் எல்லாருக்கும் (இரண்டு பக்கத்துக்கும்)சோறு போட்டார்கள், ஆதலால் அவர் பெருஞ்சோறு படைத்த பெருவழுதி என்று அழைக்கப்படுகின்றார். இப்படி மொத்த பாரதமும் சண்டை போட்ட இடம் அது.

அங்கு உபயோகித்த சக்தி மிக்க அழிவு ஆயுதங்களால் இன்னமும் அங்கு எட்டடி உயரத்துக்கு மேலே மரங்களைப் பார்க்க முடியாது என்றும், இன்னமும் மயானமாக (சூன்யமாக காட்சியளிக்கின்றெது என்பார்கள்(உண்மையா)

said...

oh my! Azhagana varnanai anthantha idathukkay kootikittu pohuthu! Now i believe ur words madam! U r indeed addicted ! posting a new blog daily it seems!!! Keep going. U rock!

said...

Neenga sonna yaniyum, poonaiyum nallavay irukku! :):)

said...

வாங்க பித்தனின் வாக்கு.

விதர்ப்ப தேசத்து அரசன் ருக்மன் ( கண்ணனின் மச்சான்)கூட போரில் கலந்துக்கலையே. மறந்துட்டீங்களா?

நீங்கள் சொன்ன பாண்டியனைப் பற்றியும் வாசிச்சு இருக்கேன்.

ஆமாம்..... டீச்சருக்குச் சொந்தக் கருத்துன்னு ஒன்னு இருக்கலாகாதா?


மரங்கள் உசரமாத்தான் வளர்ந்து இருக்கு. வீர்யம் தீர்ந்து போயிருக்கலாம். கலி காலமாச்சே!

said...

வாங்க குடை.

நிறைய எழுதவேண்டியவை பாக்கியா நிக்குது. இருக்கும் காலமோ கொஞ்சம். அதான் கூடியவரை போஸ்டிங்ஸ் தினம் போடறேன். " சார்...போஸ்ட்"

அதுவும் வீக் எண்ட் லீவு:-)

இந்தத் தொடரை முடிச்சுட்டு, 1500 கையில் எடுக்கலாமான்னு யோசனை.

நியூஸி திரும்புனா ரொம்ப பிஸி ஆகிரும்.

சரியான அடிக்ஷந்தான். ஆனா.... வெளிவரத் தோணலை!

said...

கிருஸ்ணா ம்யூஸியம், ஹனுமான் மந்திர் அனைத்தும் நன்று.

said...

வாங்க மாதேவி.

வருகைக்கு நன்றி