Wednesday, July 01, 2009

தினம் ஒரு புதுப்பொண்ணைக் கட்டுனாக் கசக்குதா??.........(2009 பயணம் : பகுதி 38)

"இந்த மாலையைக் கழுத்துலே போட்டுண்ட்டுக் கோயிலை ஒம்போது தடவை சுத்தி வாங்கோ."

"எல்லோருமா?"

"இல்லை. நீங்க மட்டும் தான்"

அதானே..... எல்லோரும் சுத்துனா,கூட வந்த எல்லோருக்கும் இன்னொரு கல்யாணம் ஆயிருச்சுன்னா? ஒன்னை வச்சேப் படைக்கமுடியலைன்னு அவனவன் அழறான்:-)


" சுத்திட்டு இங்கே வரணுமா சாமி?"

" மாலையைக் கொண்டுபோய் வீட்டுலே பூஜை ரூமில் மாட்டிவையுங்க. கல்யாணம் ஆனவுடன் திரும்ப இந்த மாலையை இங்கே கொண்டு வாங்க"
நித்தியக் கல்யாணப்பெருமாள் சந்நிதியில் நிக்கிறோம். திருவிடந்தை ஆதிவராகப் பெருமாள் ஆலயம். அந்த 108 இல் இதுவும் ஒன்னு. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இங்கே பெருமாளுக்கு ரெண்டு 'கதைகள்' இருக்கு. சொல்றேன், சொன்னாக் கேட்டுக்கணும். சாமி விஷயம், ஆராயக்கூடாதுன்னாலும் மனசு இருக்கே.....குரங்கு. சொன்ன பேச்சைக் கேக்குதா?

முதல் கதையைப் பார்க்கலாம். பலி என்ற பெயரில் அசுர அரசன் ஒருத்தர் இருந்தார். (மகாபலி புரம்? இந்தப் பக்கம்தான் ஆண்டுருப்பார் போல) ரொம்ப நல்லவர், நல்லாட்சி கொடுத்துருக்கார். அவருடைய நண்பர்களான இன்னும் சில அரக்கர்கள் மாலி, சுமாலி, மால்யவன் என்ற மூவரும் தேவர்களோடு போர் புரிய இவரோட உதவியைக் கேட்டுருக்காங்க. என்ன போர் வேண்டிக்கிடக்கு? வெறும் அக்கப்போர்ன்னு சலிச்சுக்காதீங்க. நண்பர்கள் கூட்டமுன்னு ஒன்னு இருக்கே அவுங்களாலே உதவியும் வரும் உபத்திரவமும் வரும். பாவம் பலிச் சக்கரவர்த்தி. அவருக்குக் கிடைச்சது ரெண்டாவது.. 'சங்காதி நன்னாயால் கண்ணாடி வேண்டே' ன்னு மலையாளப்பழமொழி ஒன்னு நினைவுக்கு வருது.
முதலில் மனசாட்சிப்படி நடந்துக்கணுமுன்னு மாட்டேன்னுதான் சொல்லி இருக்கார். ஆனால் நண்பர்கள் கேட்டாங்களா? பிடுங்கி எடுத்துருக்காங்க போல. இவருக்குக் கெட்டகாலம். துஷ்டனைக்கண்டால் தூர விலகி இருக்கவேணாமோ! ஊஹூம்.....சண்டையில் அரக்கர்கள் ஜெயிச்சாங்கதான். ஆனால் தேவர்களைக் கொன்ற (?? அமிர்தம் உண்ண வகையில்லாத ஏழைத் தேவர்கள்) பாவம் பலியைப் பீடிச்சது. பாவம் போக்கிக்க பலி, தவம் செஞ்சார். மகா விஷ்ணு, போயிட்டுப்போறது போன்னு அவருக்குத் தரிசனம் தந்து விமோசனம் கொடுத்தார். பன்றியுடன் சேர்ந்த கன்று போல் கெட்டவங்களுடன் சேர்ந்துக் கெட்டுப்போயிட்டியேடா பாவி. உனக்கு பன்றிதான் லாயக்கு. அதனால் பன்றியாகவே தோன்றினால் ஆச்சுன்னு வராக ரூபத்தில் காட்சி கொடுத்துருக்கார் போல! அந்த இடம்தான் இது.

இவர் எப்படி நித்தியக் கல்யாணப்பெருமாள் ஆனாராம்?

காலவர்னு ஒரு ரிஷி இருந்துருக்கார். இவரோட தர்மபத்தினி குனி என்ற பெண்.
இவுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமான கதை இப்படிப்போகுது.

அன்மேரீட் நாட் அலவுடு இன் சொர்க்க(மா)ம். இது தெரியாம குனி என்ற பெயருள்ள ஒரு பொண்ணு, கலியாணம் கட்டுமுன்பே சொர்க்கத்துக்குப் போகணுமுன்னு தவமிருந்தாங்க. 'கேட்'க்கிட்டேயே நாரதர் சொல்லிட்டார் உள்ளே வரக்கூடாதுன்னு. திடீர் மாப்பிள்ளைக்கு எங்கே போகன்னு தேடுனதில்தான் திடீர் மாப்பிள்ளையா இந்த ரிஷி, காலவர் கிடைச்சார்.

இவுங்களுக்கு 360 குழந்தைகள் பிறந்தாங்க. அத்தனையும் பொண்ணு. காலவருக்குத் தெரியலை அஞ்சு பொண் பெற்றால் அரசனும் ஆண்டின்னு. இவர்தான் ஏற்கெனவே ஆண்டியாச்சே. பிந்தாஸா இருந்துட்டார். பொண்ணுங்களைக் கல்யாணம் கட்டி அனுப்பலாமுன்னா.......வசதி இல்லை. கடவுள் கொடுத்தார். ஆகையால் கடவுளே பொறுப்பெடுத்துக்கிடணுமுன்னு வேண்டிக்கிட்டாங்க. நம்ம மகாவிஷ்ணுவுக்கு யாரும் அழுது வேண்டுனாப் பிடிக்காது. மனசு அப்பfடியே இளகிரும்.

வாலிபனா வேஷம்(!) போட்டுக்கிட்டு காலவர் வீட்டுக்கு வந்தார். மூத்தமகளைக் கட்டிக்கிறேன்னு சொல்லி, உடனடியாக் கல்யாணமும் பண்ணிக்கிட்டார். கட்டுன கையோடக் கோயிலுக்குப் போனாங்க பொண்ணும் மாப்பிள்ளையும். அம்புட்டுதான்......மந்திரமோ மாயமோன்னு ரெண்டுபேரும் மறைஞ்சுட்டாங்க.

மறுநாள் ரெண்டாவது பொண்ணையும் கட்டறேன்னு போயிருக்கார். இப்பவும் நேத்துக் கதைபோலவே நடந்துருக்கு. மூணாம் நாள் மூணாவது பொண்ணு. இப்படியே 360 பொண்ணுங்களையும் அசராமக் கட்டிக்கிட்டார். எவ்வளோ கிடைத்தாலும் தாங்குவேன்னு....அம்புட்டு நல்லவர். அந்த அப்பா காலவரைப் பாருங்க. என்னடா....பொண்ணைக் காணோமேன்னு ஒரு பயம் வேணாம். பெத்ததுகளைக் கரையேத்துனாப் போதுமுன்னு இப்படியாப் பண்ணறது? ஊர் சனங்களை என்னான்னு சொல்றது? 'யோவ். எங்க பேட்டைப் பொண்ணு எங்கேய்யா?'ன்னு ஆரம்பத்துலேயே ஆட்டி வச்சுருக்கவேணாமா? தினம் கல்யாண விருந்துலே மொக்கிக்கிட்டு இருந்துருப்பாங்களோ...

மொத்தக் கூட்டத்தையும் ஏறக்கட்டுனதும்தான் பொண்ணுங்களைக் காணோமேன்னு கோயில் கருவறையில் போய்த் தேடுனார் காலவர். எல்லாப் பெண்களும் லக்ஷ்மி ரூபத்தில் ஜொலிக்க, அனைவரையும் ஒன்னாச் சேர்த்து ஒரே லக்ஷ்மியா ஆக்கித் தன் இடது மடியில் வச்சுக்கிட்டாராம் ஸ்ரீ விஷ்ணு. லக்ஷ்மியாகிய 'திரு' வுக்கு இடம் கொடுத்ததால் திருவிடந்தைன்னு பெயர் வந்த காரணம் சொல்லப்படுகிறது.
கதையின் இன்னொரு வர்ஷன் என்னன்னா.........

முதல் பொண்ணுக்குப் பைசா செலவில்லாம மாப்பிள்ளை வீடு தேடிவந்ததும் காலவருக்கு ரொம்ப சந்தோஷம்.இன்னும் 359 இருக்கே. இவுங்களுக்கெல்லாம் இப்படி அதிர்ஷ்டம் கிடைக்குமா? யாராலே மெனெக்கெட்டு அலைஞ்சு மாப்பிள்ளை தேட முடியுது? பேசாம இந்த மாப்பிள்ளைக்கே எல்லாரையும் கட்டிக்கொடுத்துடலாமுன்னு மாப்பிள்ளைகிட்டே மன்றாடி இருக்கார். ஒன்னு வாங்கினால் மீதி இருக்கும் எல்லாமே இலவசம்.

விஷ்ணு பார்த்தார். ஒரே நாளில் முன்னூத்து அறுவதுமுறைத் தாலி கட்டுனா , கை என்னத்துக்கு ஆகும்? எனக்கு ஆட்சேபனையே இல்லை. ஆனால்.... ஒரு நாளைக்கு ஒரு கல்யாணமுன்னு வச்சுக்கலாம். புதுமாப்பிள்ளையாவே தினமும் இருந்தா என்னக் குறைஞ்சுடப்போகுது?
காம்ப்ரமைஸ் ஆச்சு. எல்லாம் முடிஞ்சபின் எல்லாரையும் சேர்த்து ஒரு அம்சமா ஆக்கிட்டார். அதானே 360 புடவை, அதுக்கு ஏத்த ஆக்ஸெஸரீஸ் வாங்கிக் கட்டுப்படி ஆகுமோ!!!

அப்பெல்லாம் வருசத்துக்கு 360 நாள்தான் போல. தெரிஞ்சுருந்தா இன்னும் அஞ்சு சேர்த்துப் பெத்துப்போட்டிருக்கலாம். இந்தக் காலவர் & குனி செட்.

தலபுராணங்களைத் தெரிஞ்சுக்கிட்டால் இப்படித்தான் சமயத்தில் தலை சுத்தறதுபோல் இருக்கும். இதையெல்லாம் ரொம்பக் கண்டுக்கக்கூடாது. கல்யாணமாகலையேன்னு ஏங்கும் பலருக்கு, இந்தக் கோவில் ஒருவித ஆசுவாசமும் ஆறுதலும் தருது என்பது மட்டும் சத்தியமான உண்மை.

பெருமாளுக்குக் கல்யாணம் ஆனதுபோல நமக்கும் ஒரு நாள் ஆகும் என்ற நம்பிக்கை இருக்கும்வரைக்கும் கலியாணத்துக்கு நிக்கும் இளைஞர் இளைஞிகள் பிரார்த்தனைக்கு வந்துக்கிட்டுத்தான் இருப்பாங்க. நாங்க அங்கே இருந்தக் கொஞ்ச நேரத்துலேயே மூணு பொண்களும், ரெண்டு பையர்களுமாக் கைகளில் மாலையுடன் வந்து, பட்டர் கடவுள் காலடியில் வச்சுப் பூஜிச்சுத் திரும்பக் கொடுத்த மாலையைக் கழுத்தில் அணிஞ்சுக் கோயிலைச் சுத்திவந்தாங்க. அதிலே ரெண்டு பொண்கள் ஒன்பது சுற்றில் எந்தச் சுற்றிலோ சிநேகமாகிப் பேசிக்கிட்டேச் சுத்தறதையும் கவனிச்சேன்.அதேபோல கலியாணம் முடிச்ச ஜோடிகள் ரெண்டு செட் மாலையும் கழுத்துமாச் சுவாமி தரிசனத்துக்கும் வந்ததையும் பார்த்தேன்.

நம்புனாத்தான் சாமி. நம்பிக்கைதான் வாழ்க்கை.

நம்ம மீனா கூட இங்கே கோயில் சுத்துனதாக் கேள்வி. இப்பப் பாருங்க இந்த மாசம் கல்யாணம் ஆகப்போகுது.
கோயில் ரொம்பப் பழசுதான். ஒரு ஆயிரத்தைஞ்ஞூறு வருசங்கள் ஆகி இருக்கலாம். உள்ளே படங்கள் எடுக்க அனுமதி இல்லை. வெளியே ஒரு மண்டபத்தூண்களில் தசாவதாரமும் செதுக்கி வச்சுருக்காங்க. ரொம்ப அழகா இருக்கு. இங்கிருந்து ஒரு 18 கிலோமீட்டர் போனா மகாபலிபுரம் வந்துரும்.
இங்கே எப்பப் போனேன்? அதான் தக்ஷிண சித்ரா விலிருந்து கிளம்பிப் பகல் சாப்பாட்டுக்கு அறுசுவை அரசுக்குப் போனோம். கிட்டத்தட்ட மூணுமணியாயிருச்சு. டிஃபனும் ரெடியாகலை. ரெண்டுங்கெட்டான் வேளையாப் போச்சு. இருக்கறதைக் கொடுங்கன்னு வாங்கினதுதான். சிலாகிக்கரமாதிரி ஒன்னும் இல்லை. ஆனாலும் நம்ம பசி ருசியும் அறியுதே:-)


சாப்பாடு ஆனதும்தான் இவ்வளவு தூரம் வந்தோமே கோயிலுக்கும் போயிட்டுப்போகலாமுன்னு அண்ணன் சொன்னார். நாங்க போகவும் கோயில் திறக்கவும் சரியா இருந்துச்சு. திரை போட்டு உள்ளே பூஜை நடந்துக்கிட்டு இருக்கும்போது, காத்திருக்கும் பொறுமை இல்லாத இளைஞர் ஒருத்தர் கற்பூர வில்லைகளைப் படிக்கருகில் தானாய் ஏத்திக் கும்பிட்டுக்கிட்டு இருந்தார். சமீபகாலமாய்க் கோவில்களில் கற்பூரத்துக்குத் தடைன்னு நான் கேள்விப்பட்டுருந்தேன்.

நந்தி வாங்கிக்கலாம்
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். கேள்விப்பட்டது மெய்யா இல்லை பொய்யா?

தொடரும்.......:-)

41 comments:

said...

டீச்சர்

தலைப்பு வச்சே இழுத்துட்டு வந்துட்டியள் ...


(உங்க எழுத்து சொல்லவும் வேனுமா)


கடைசியா ஒரு கேள்வி வேறயா ...


சீக்கிரம் பதில் கிடைக்கும் ;)

Anonymous said...

//பிந்தாஸா இருந்துட்டார்///
பிந்தாஸ் - விளக்கம் தேவை.

அது சரி, உங்களுக்கு எந்த உண்மை தெரியணும்?

said...

வாங்க நட்புடன் ஜமால்.

பதிலா? இன்னொரு கேள்வியில்லே கேட்டுட்டாங்க நம்ம அம்மிணி:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

பிந்தாஸ்= don't care

கோவில்களில் கற்பூரம் ஏத்த அனுமதி உண்டா, இல்லையா?

said...

தல புராணக் கதைகள் அருமை. அதுக்கு நீங்கக் இடை இடையே தொடுத்த நகைச்சுவைகள் கலக்கல்.

யாருக்குமே தெரியல......கல்யாணம் பண்ணிக்கிறது ஈசி.....கஷ்டமெல்லாம் அதுக்கப்பறம் தான்னு

Anonymous said...

எனக்கென்னமோ அப்படி ஒரு தடை இருந்தா நல்லதுன்னுதான் தோணுது. சாமிக்கு முன்னாடி கற்பூரம் கொளுத்தி கருப்படிச்சு வைச்சிருப்பாங்க. அப்படி கற்பூரம் ஏத்தி சாமி கும்பிடணும்னு தோணினா கற்பூரம் காட்ட ஒரு தட்டையும் கொண்டு வரணும்னு ஒரு சட்டம் போடலாம். கற்பூரம் காட்டி முடிஞ்சதும் வீட்டுக்கே கொண்டு போலாம். சாமிக்கு முன்னாடி கருப்பா ஆகாதில்ல.

said...

கட்டுரை அருமை. நகைச்சுவையில் அசத்துறீங்க.
//கடவுள் கொடுத்தார். ஆகையால் கடவுளே பொறுப்பெடுத்துக்கிடணுமுன்னு வேண்டிக்கிட்டாங்க//
அதானே.. மரத்தை வச்சவந்தான் தண்ணி ஊத்தணும்.
காலவர் கில்லாடிதான். பிந்தாஸ் ரஹக்கே பகவான்கோ தாமாத் பனாதியா:-))))))

said...

டீச்சர்..

பழசைக் கிளறிட்டீங்களே..!

இப்பத்தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நானும் அந்தக் கோவிலுக்கு போய் மாலையும், கழுத்துமா கியூல நின்னு பெருமாள்கிட்ட ஒரு டீல் பேசிட்டு வந்திருக்கேன்..

என்ன.. ஏதுன்னுல்லாம் கேக்கப்படாது சொல்லிட்டேன்..

9 தடவை சுத்தணும்னாங்க.. சுத்திட்டேன்..

என்னமோ போங்க..!

said...

நல்ல நகைச்சுவையோடு எழுதியிருக்கீங்க.

கற்பூரம் ஏற்ற சில வருடங்களாகவே தடை இருக்கிறது. நீங்கள் அர்ச்சகர் கூட விளக்கு வைத்தே ஆரத்தி காட்டுவதை கவனித்து இருப்பீர்கள்.

Reason: karpooam is a petroleum product causing pollution.

நம்ப மக்கள் கிடைத்த இடத்தில் எல்லாம் கற்பூரம் ஏத்தி கரி ஆக்கிக் கொண்டு இருந்தது இப்போ குறைந்து இருக்கிறது. ஆனாலும் சிலர் விடக் கண்டனாக ஏற்றி விட்டுத் தான் செல்கிறார்கள்.

said...

சாமி கதை நல்லாருந்ததோ என்னமோ உங்க எழுத்து நடை சூப்பர்...

சாமிலிருந்து ஆசாமி வரைக்கும் பல கட்டு நடக்குது...ஒரு பொண்ணுக்கு கூட ரெண்டாவது சாய்ஸே கிடையாதா?

ஏரிக்கும் கேள்விக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?

said...

கற்பூரம் ஏற்றத் தடைன்னு தான் நினைக்கிறேன்.இங்கு இருக்கும் பல கோவில்களில் நெய் தீபம்தான். நானும் வீட்டிலே கூட கற்பூரம் ஏற்றுவதை விட்டு நெய் விளக்குத்தான் காட்டி பூஜை செய்வேன்.

கோவிலில் ஆகாது என்றால் வீட்டுக்கும் அதேதானே!!

:)))

said...

'சங்காதி நன்னாயால் கண்ணாடி வேண்டே' -

சங்காதி நன்னாயால் கண்ணாடி வேண்டா.

said...

எல்லாரும் சேந்து கசக்குனா என்ன ஆவறது டீச்சர்.

said...

//தினம் கல்யாண விருந்துலே மொக்கிக்கிட்டு இருந்துருப்பாங்களோ...//

'ராமே ஆண்டாலும், ராவனெ ஆண்டாலும்' கதை அப்ப இருந்தேவா ?! :))

வழக்கம் போல படங்களும், நகைச்சுவை கலந்த செய்திகளும் அருமை.

said...

வாங்க கோவியாரே.

பட்டவங்க சொன்னாக் கேக்குறாய்ங்களா?

நெருப்பு சுடுமுன்னு சொன்னால் கேட்டுக்காம, எப்படி எங்கே சுடுமுன்னு 'தீக்குள் கையை வைத்துத் தீண்டும் இன்பம் தேடுவது 'மானிட ஜென்மத்துக்கு விதியாம்:-))))

said...

சின்ன அம்மிணி,

பொரிய கோவில்களில் நெய்த்தீபம்தான்.
சிறு தேவதைகளுக்கு இன்னமும் கற்பூரம்தான் பிடிக்குதுன்னு சத்தியம் செய்வாங்களோ என்னமோ!

கரியும் புகையும் வேணாம்தானேப்பா.
கரி அடுப்பை விட்டு மனுசன் கேஸ் அடுப்புக்கு மாறியாச்சு. ஆனால் சாமிகள்...... பாவம்ப்பா.

said...

வாங்க ஐம்கூல்.

//காலவர் கில்லாடிதான்//

இல்லையா பின்னே? மனுசன் 360 பெத்துருக்காருன்னா பாருங்களேன்.
அசராம அடிச்சு விளையாடுறது என்பது இப்படித்தான்:-)

said...

வாங்க உண்மைத் தமிழன்.

என்ன ஏதுன்னு கேக்க மாட்டோம்.
அதான் எங்கப்பன் குதிருக்குள் இல்லை:-)

சீக்கிரம் கடவுளைக் கண்ட கூட்டத்தில் கலக்கணுமுன்னு மனமார வாழ்த்துக்கின்றேன்.

said...

வாங்க மங்கை.

அந்த விடாக்கண்டர்களுக்கு எப்படித்தான்
புரிய வைக்கிறது(-:

said...

வாங்க சிந்து.

வெளிநாடுகளில் ரெண்டாங்கட்டுன்னு இல்லை எத்தனை கட்டும் நடக்குது. ஏன்னா....

பெண்களும் ஒரு சகபிறவின்னு ஆண்கள் ஒத்துக்கிட்டாங்க.

இங்கேயும் பணம் & புகழ் படைத்தவங்களுக்கு நோ ப்ராப்ளம்.

மிடில் க்ளாஸ்ன்னு ஒன்னு மிடில்லே மாட்டிக்கிட்டு முழிக்குது.
சமூகமும் விளக்கெண்ணெயோ ஏதோ ஒன்னு ஊத்திக்கிட்டுக் கண்கொட்டாமப் பார்க்குது. அதுதான் பிரச்சனை.

said...

கடசிக் கேள்வி பிரியலையேம்மா.
எந்தக் கோவிலுக்குப் போனீங்க. முதலில் திருவிடவெந்தை.
அறுசுவைக்கப்புறமா இன்னோரு கோவிலா. ஞ்ஞேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ:)


ஆகக் கூடி 36 வருஷத்துக்கு முன்னால போகவேண்டிய கோவிலுக்கு இப்பப் போயிட்டு வந்துட்டீங்க,.:)))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

நம்மூட்டுலே கூட தீபம்தான். அதுவும் எண்ணெய். எது கிடைக்குதோ அது.

said...

ஐயோ மனசு,

தெற்று பற்றிப்போயி. டைப்பிங் எர்ரர் கேட்டோ!

பறஞ்ஞதினு நன்னி.

said...

வாங்க சதங்கா.

கதைகள் திரேதாயுகத்துலேயே ஆரம்பிச்சுருச்சு. மனுசன் தோன்றுனதும் கதைகளும் கூடவே பிறப்பெடுத்தாச்சு:-)))

said...

வாங்க வல்லி.

வேக்கப் ப்ளீஸ்.

முதலில் அறுசுவை. அப்புறம்தான் சாமி.

அப்பப் போகாததால்தான் 'நல்ல புருஷன்' வாய்ச்சதுன்னு சொல்லிக்கலாமா?:-))))

said...

வாங்க குடுகுடுப்பை.

அதான் பதறிப்போன விஷ்ணு, எல்லாத்தையும் ஒன்னா ஆக்கிட்டாரே:-)

said...

ஆகா இந்த கோவிலா!!!...எங்க வுட்டுலையும் இந்த கோவிலுக்கு (எங்க அக்காங்களுக்கு) எல்லாம் போனாங்க. இப்போ அவுங்க கையில ஆளுக்கு ரெண்டு புள்ளைங்க...பட் அது இந்த கோவில் தான் காரணமான்னு தெரியல..ஆனாலும் நம்பிட்டாங்க :)

அப்புறம் ரெண்டு கதையும் சூப்பரு...கலக்கிட்டாரு பெருமாளு ;)

said...

// காலவருக்குத் தெரியலை அஞ்சு பொண் பெற்றால் அரசனும் ஆண்டின்னு. இவர்தான் ஏற்கெனவே ஆண்டியாச்சே //

இந்தக்கால காலவர் எல்லாமே இரண்டாவது பொண்ணு புறந்தாலே ஆண்டியாயிடுறாங்களே !

அது இருக்கட்டும். எப்பவோ 1970 லே நடந்ததுன்னு நினைக்கிறேன். சுவாரசியமான உண்மைக்கதை.
அந்தக் காலத்துலே எங்க வீட்டுக்காரருக்கு ஒரு ஃப்ரன்டு. பேரு ராமசாமியோ குப்புசாமியோ ஞாபகம் இல்ல.
மூத்தது பெண். அழகா வஸந்தா என்று பெயர் வைத்தார்கள். இரண்டாவதும் பொண். பரவாயில்லை என்று மனசைத் தேத்திக்
கொண்டு அதற்குப் பெயர் ஸ்வேதா என்று வைத்தார்கள். அடுத்த மூன்று வருஷத்திலே பிறந்த அடுத்ததும் பொண்ணு தான்.
சரின்னு அதுக்கு கீதான்னு பெயர் வைச்சாங்க.

என்னதான் இருந்தாலும், ஒரு பையன் இல்லையேன்னு ஒரு குறை அவங்க மனசுலே இருந்தாப்போலே. ஒரு நாளைக்கு
எங்க வீட்டுக்காரருகிட்டே வந்து ஜாதகத்தைக் காமிச்சு எங்களுக்கு பையன் உண்டா இல்லையா, தீர்மானமாச் சொல்லிப்போடுங்கோ
அப்படின்னு கேட்டுட்டாங்க. ...

நான்கூட , என்ன ... ஆணா, பெண்ணா என்பது புருசன், மனைவி நினைக்கிறபடியா இருக்கும்னு நினைச்சிகிட்டேன்.

அப்ப எங்க வீட்டுக்காரரு, சமயோசிதமா சொல்றாரு.

அடேய் ! ராம சாமி ! மூத்தபெண் வஸந்தா. 2வது ஸ்வேதா. 3வது கீதா. அப்படித்தானே !

ஆமாம். என்றார் நண்பர்.
நீ வேண்டிக்கிட்டபடிதானே பிறந்திருக்கு என்றார்.
அது எப்படின்னு அவர் ஆச்சரியமா கேட்க, இவரு, உன் பொண்ணு பெயரெல்லாம் பாரு. தா, தா அப்படின்னே கேட்கறே !
ஆண்டவன் நீ கேட்கறபடியே கொடுத்திட்டு இருக்காரு.
அதனாலேதான் இப்படி ஆச்சு. நீ தா, தா அப்படின்னு பெயரை முடிச்சா அப்படித்தான் இருக்கும்.

அப்ப நான் என்ன செய்யணும்னு அவரு இன்னொசென்டா கேட்டாரு.
ஒன்னு செய்யு. அடுத்ததும் பொண்ணாப் பிறந்தால் மதி ( போதும் என்று அர்த்தம்) அப்படின்னு பெயர் வை.

அப்ப அடுத்ததும் பொண்ணுதானா !
அத ஆண்டவன்லே சொல்லணும். அப்படின்னார்.

மீ.பா.
http://arthamullavalaipathivugal.blogspot.com

said...

//'சங்காதி நன்னாயால் கண்ணாடி வேண்டே'//
//பிந்தாஸ்//

இப்படியெல்லாம் போட்டாத் தான் பதிவுல தாளிச்ச வாசம் வீசுது டீச்சர்! :)

அப்புறம் எனக்கு ஒரு பெரீய்ய்ய சந்தேகம் டீச்சர்.
இந்தப் பெருமாள், 360 பேரையும் மொதல்லயே ஒன்னாக்கி, ஒரே ஒருத்தரா கட்டக் கூடாதோ?
எதுக்கு தனித் தனியாக் கட்டி, அப்புறம் ஒன்னாக்கினாரு? :)))

said...

திருவிடந்தை = திரு + இட + எந்தை

பொதுவா திருமகள் வலப்புறம் தான் இருப்பாங்க! ஆனால் இங்கே மூலவர் ஆதி வராகப் பெருமாள், அன்னையை இடப் பக்கம் ஏந்தியுள்ளார்! அதான் திரு+இட+எந்தை!

மாப்பிள்ளை பன்றி முகம்-ன்னா அப்பா பொண்ணு கொடுப்பாரா?
மணக் கோலத்தில் இருப்பது மூலவர் அல்ல!

உற்சவரான நித்ய கல்யாணப் பெருமாள் தான் 360 கல்யாணங்கள் கண்டருள்வது! தினப்படி கல்யாணோற்சவமும் உண்டு!

said...

அன்னமும் மீனும் ஆமையும் அரியும்
ஆய எம் மாயனே. அருளாய்,
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் "இடவெந்தை" எந்தை பிரானை,

மன்னுமா மாட மங்கையர் தலைவன்
மானவேல் கலியன் வாய் ஒலிகள்,
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
பழவினை பற்றறுப் பாரே

- திருமங்கையாழ்வாரின் திருவிடந்தைப் பாசுரம்

said...

வாங்க கோபி.

இன்னொரு கோவிலும் இருக்குபோல திருமணஞ்சேரி ன்னு நினைக்கிறேன்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. சாமியை நம்புனவுடன் கொஞ்சம் தன்னம்பிக்கையும் வந்துருது. அதுக்காகத்தானே கோவில்கள் என்ற கான்ஸெப்ட் வந்துருக்கு.

அக்காக்களுக்கும், குட்டீஸ்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

இன்னிக்கு உங்க பொறந்த நாளாமே?

இனிய வாழ்த்து(க்)கள்ப்பா

said...

வாங்க மீனாட்சி அக்கா.

சூப்பர் கதை போங்க:-))))

மங்களமுன்னு பெயர் வைக்கச் சொல்லலையா?

என் தோழி மங்களத்துக்கு ரெண்டு தங்க ஒரு தம்பி:-)

said...

வாங்க கே ஆர் எஸ்.

ஒவ்வொரு பொண்ணுக்கும் கல்யாணக் கனவுன்னு ஒன்னு இருக்கேப்பா. அந்த நாளில் அவுங்கதானே மெயின் கேர்ல்.

அதுக்குண்டான அடை ஆபரண அலங்காரங்கள்னு எத்தனை இருக்கு ரசிக்க. அதையெல்லாம் விட்டுட்டு ஒரே நாளில் மொத்தையா ஆக்கிட்டா நெஞ்சுக்குழி ஆசை என்னாவது?

அதான் எம் பெருமாள், கைத்தலம் பெற்றக் கனாக் கண்ட அவுங்க கனவை அழிக்காம விட்டார்.

வெல் டன் விஷ்ணு:-)

said...

என்னடா ஆழ்வார் வந்துட்டு, பேதைகளின் கனவறியாப் பேதமையோடு, வேற ஒன்னும் சொல்லாமப்போயிட்டாரேன்னு பார்த்தேன்.

பன்றிக்கு எதுக்குக் கல்யாணம்? அதான் காய்ச்சலா இருக்கோ?

நன்றிப்பா பாசுரங்களுக்கு.

said...

நல்லா கத சொன்னீங்க டீச்சர்..

:))

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இப்பத்தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நானும் அந்தக் கோவிலுக்கு போய் மாலையும், கழுத்துமா கியூல நின்னு பெருமாள்கிட்ட ஒரு டீல் பேசிட்டு வந்திருக்கேன//

உங்க போண்டா சந்திப்புல இத பத்தி சொல்லாம மறச்சுட்டார் பாத்தீங்களா!!

கற்பூரம் ஏத்த கூடாதுனு சட்டம் எதும் போடல.. பெரிய கோயில்களில அப்படி முடிவு பண்ணியிருக்காங்க.. அதே பெரிய கோவிலகளில கொஞ்சம் ஓரமா உக்காந்து இருக்கிற தெய்வஙளுக்கு நம்ம ஆளுங்க கற்பூரத்த காட்டிடுவாங்க..

said...

வாங்க தீப்பெட்டி.

பதில் சொல்லக் கொஞ்சம் பிந்திப்போச்சு (-:

கோவில்கோவிலா சுத்துனா ஏது நேரம்?:-)

என்னதான் டீச்சர்ன்னாலும் ஒம்போது சுத்து விவரத்தைச் சொல்லக் கொஞ்சம் இப்படி அப்படி இருக்காதா உ.த.வுக்கு?

அதுவுமில்லாம அவரை எங்கே பேச விட்டேன்?:-))))

said...

கோர்க்கப்பட்ட படங்கள் ஒன்றே போதும், உங்களது பார்வை விசாலத்தை பறைசாற்ற, அடுத்த ஐடியா வந்து விட்டது. ஜோதிஜி.

said...

வாங்க ஜோதி'ஜி'

முதல்முறையா வந்துருக்கீங்க போல!
நலமா?

ஐடியா வந்துட்டா விடக்கூடாது ஆமாம்:-))))

said...

புகைப்படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி

said...

வாங்க ஞானசேகரன்.

படிச்சதுக்கும் ரசிச்சதுக்கும் நன்றிங்க.