Saturday, March 28, 2009

எங்களுக்கு ஆச்சு. உங்களுக்கு?




எல்லாத்துக்கும் முந்திக்கொள்ளும் வழக்கப்படி இந்த பூமி நேரத்துக்கும் முந்திக்கிட்டோம். மேலும் எங்களுக்கு இப்போ 'டே லைட் சேவிங்ஸ்' இருப்பதால் இன்னும் ஒரு மணி நேரம் முன்பே பூமி நேரத்தைக் கடைப்பிடிச்சு எங்க பங்குக்குப் புவியைக் காப்பாத்தியாச்சு.

நம்ம கோகிதான் இருட்டுலே என்னமோ ஏதோன்னு பயந்துக்கிட்டு அப்பா மடிமேல் ஏறிப் படுத்துக் குறட்டைவிட்டு அப்படி ஒரு தூக்கம்.

ஏதோ நம்மால் ஆனது...இல்லீங்களா??

எங்க கடமையை ஆத்தியாச்சு. நீங்களும் ஆத்துங்க.

33 comments:

said...

ஓ.. எர்த் ஹவருக்கு "மீ த பஷ்டூ" நீங்கதானா டீச்சர்?

ஒரு சந்தேகம். கிரிக்கெட் மேட்ச் பாக்க போவீங்களா? டீவில உங்கள பாத்துக்கலாம்ல, அதனாலதான் கேட்டேன் :)

said...

எங்களுக்கு இன்னும் நேரம் வரலையே:)

கட்டாயம் செய்துட வேண்டியதுதான்.

ஏதோ நம்மால் ஆனது. வெளில வந்து வானம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்:0)

said...

இன்னும் 2 மணி நேரத்துல எங்களுக்கு. ;-)

said...

சரிங்க டீச்சர்.

said...

பூமி நேரத்துல நீங்களும் பங்கு எடுத்துக்கிட்டதுல மிக்க மகிழ்ச்சி.

எதோ நம்மாலான பங்களிப்பு :)

said...

டீச்சர் ஹோம் வொர்க் குடுத்தா செய்யாம இருக்க முடியுமா? சொல்லீட்டிங்கள்ல...செஞ்சிருவோம்...:0))

said...

எங்களுக்கு இனிமேலதான் டீச்சர். ஆனா எல்லாம் பம்மாத்து வேலை. எனிவே ஒரு ’ஐ ஒப்பனர்’ன்ங்கற அளவுல ஒத்துக்கலாம்.

said...

//எங்க கடமையை ஆத்தியாச்சு. நீங்களும் ஆத்துங்க.//

கண்டிப்பா டீச்சர்.. :)

said...

எங்க ஆபீஸில் லைட்டை அனைச்சா என்னை தாளிச்சு போடுவாங்க .....ம்ம்ம்ம்....சாரி

said...

அம்மா.,

சிங்கையில் விளக்கணைத்து, புவியை காத்துக்கொண்டிருக்கிறோம்.

சிங்கை நேரம் - இரவு 9.25

said...

கடமைன்னா அது எங்க டீச்சர் தான் ;)

said...

வாங்க வெண்பூ.

க்ரிக்கெட் மேட்ச் பார்க்கப் போகலை. அது வடக்குத் தீவில் நடக்குது. எங்கூர்லே நடப்பதை முந்தியெல்லாம் பர்த்துக்கிட்டுத்தான் இருந்தேன்.

இந்த 'மேட்ச் ஃபிக்ஸிங்' வந்துச்சுப் பாருங்க..... அன்னைக்கு விட்டவள்தான். இப்போ க்ரிக்கெட்டுன்னலே ஒரே வெறுப்பு.

தொலைக்காட்சியில் கூடப் பார்க்க விருப்பம் இல்லை.

said...

வாங்க வல்லி.

இப்படி எப்பவாவது வானத்தைப் பார்த்தால்தான் உண்டா?

மொட்டை மாடி, பயனில் இல்லையோ?

said...

வாங்க மை ஃப்ரெண்ட்.

மகிழ்ச்சி. கட்டாயம் அணைச்சுருங்க(விளக்கை)

said...

வாங்க நட்புடன் ஜமால்.

நல்ல பிள்ளை.

said...

வாங்க மகேஷ்.

பூமி, நமக்கு இன்னும் வேண்டி இருக்கே:-)))

said...

வாங்க அது சரி.

செஞ்சுட்டுச் சொல்லுங்க:-)

said...

// நீங்களும் ஆத்துங்க //


எங்க வீட்டுக்க்காரருக்கு காஃபியை ஆத்திக்குடிக்கவே டைம் இல்லையாம்.
என்னை ஆத்த சொல்றாரு. இதை எங்கன ஆத்தப்போறாரு ?

மீனாட்சி பாட்டி.
stamford, Connecticut, USA
http://vazhvuneri.blogspot.com

said...

வாங்க விஜய்.

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க?

உலகம் பூரா அந்த ஒரு மணி நேரம் புவியைப் பாதுகாக்க முயற்சி செய்யுதேப்பா.

ஆனா...வருசத்துக்கு, ஒரு மணி நேரம் போதவே போதாது. தினம் ஒரு மணி நேரமுன்னா நல்லா இருக்கும்.

ஓசைகள் அடங்கி, மெலிசான மெழுகுத்திரி ஒளியில் குடும்பத்தோடு பேசுவது இனிமையாத்தான் இருக்கு.

மின்சாரம்தான் சத்தத்துக்கே காரணம்(-:

said...

வாங்க ரிஷான்.

ஆத்துங்க ஆத்துங்க:-)

said...

வாங்க பாபு.

தாளிக்கப்படாமல் முதலில் வேலையைக் காப்பாத்திக்குங்க:-)

said...

வாங்க அப்பாவி முரு.

கூட இருப்பதற்கு நன்றி.

said...

வாங்க கோபி.

வகுப்புக்கு 'ரோல் மாடல்' டீச்சர்தானே?

said...

வாங்க மீனாட்சி அக்கா.

வணக்கம். நலமா?

அவர் ஆத்தாட்டாப் போகுதுக்கா. நீங்க காஃபி ஆத்துன கையோடே இதையும் ஒரு ஆத்து ஆத்துனால் ஆச்சு!

எல்லாம் பெண்கள் கையிலேதானாம் அக்கா. சொல்லி வச்சுட்டுப்போயிருக்காங்க பாருங்க.

'ஆவதும் பெண்ணாலே' ன்னு:-)

said...

//மின்சாரம்தான் சத்தத்துக்கே காரணம்//(-:

இதை நான் ஒத்துக்கறேன் டீச்சர்,ஒரு அரை மணி நேரம் கரண்ட் இல்லைனா வீடும் சுற்றுப் புறமும் எவ்ளோ அமைதியா இருக்கு,தவிர டி.வி பார்க்கறது ,கம்பியூட்டரைத் தட்டறது ...பாட்டு கேட்கறது இதெல்லாம் இல்லாம வீட்ல ஒருத்தருக்கொருத்தர் நிதானமா மூஞ்சியப் பார்த்து பேசிக்கக் கூட இந்த கரண்டை சும்மா ஒரு நாலு நாளைக்கு மட்டும் சுத்தமா கட் பண்ணினா தேவலாம் தான். குறைந்த பட்சம் தொடர்ந்து ஒரு ரெண்டு....மூணு நாளைக்கேனும்!!!!

said...

பூமி நேரத்தைக் கடைப்பிடிச்சு எங்க பங்குக்கு நாங்களும் பூமியைக் காப்பாத்தியாச்சு டீச்சர்!

வீட்டுல தேவை இல்லாத விளக்கைத் தான் அணைக்கச் சொன்னாங்க!
ஆனா இங்கே எல்லாத்தையும் அணைச்சி, அதுக்குப் பதிலா அகல் ஏத்தி வச்சி, மார்ச் மாசக் கார்த்திகை தீபம் கொண்டாடியாச்சி! :)

மாசா மாசம் பண்ணாக் கூட நல்லாத் தான் இருக்கும்! இந்தக் குட்டி விளக்குகள் அவ்வளவு ரம்மியமானவை!

said...

எங்களுக்கு ஆச்சு.. :)

said...

வாங்க மிஸஸ்.தேவ்,

//இந்த கரண்டை சும்மா ஒரு நாலு நாளைக்கு மட்டும் சுத்தமா கட் பண்ணினா தேவலாம் தான். //

ஐயோ.... இது ரொம்ப டேஞ்சர். ஃப்ரீஸர் சாமான்கள் எல்லாம் கோவிந்தா.....

பொழப்பை ஓட்டுவது எனக்குக் கஷ்டம்ப்பா.

தமிழ்நாட்டுலே.... தினமும் அரசாங்கத்தின் புண்ணியத்தில் பூமியைக் காப்பாத்தப் பாடுபடறாங்களே!

said...

வாங்க கே ஆர் எஸ்.

மெழுகுத்திரி, சின்ன சிம்னி விளக்கு இதெல்லாம் இங்கே ரொமான்ஸோட சம்பந்தப் படுத்திட்டாங்கப்பா:-)))

மாசம் ஒருக்கா....ரொமாண்டிக் டின்னர்தானா அங்கே!!!!!

said...

வாங்க கயலு.

அண்ணாத்தை என்ன சொன்னார்?

said...

நல்லாக் கேட்டீங்க தனியா பதிவு போடலாம் அதை.. அண்ணாத்தை பம்மிப்போய் உக்காந்திருந்தார்.. ஜிகே வாட்டம் :)

said...

Vanakkam teacher,

Unga method follow panni, naanum engay friendsum velakkai anachuttu koilkku ponom.

Ana parunga koil ulla pogum podhu 9:00 ayudichu , adhukulla "Nadai" sathradhukkaga velakku ellam potanga.

Ana ellam edhathileyum theeba vilakku erinchuttu erundhudhu - naangadhaan miss pannitom :(

Ana payasam kedachudhu ,boomai kapthinadhukku gift maari :P

Ponadhu pillyaar koil
Angeyum 2 periya yaanai silai
Ungalapathi friends kittey sollama erukka mudiyalai :)

said...

மேடம் என் பய்யனுக்கு போட்டு இருந்த மின்விசிறி மற்றும் பிரிட்ஜ் தவிர்த்து எல்லாமே ஆஃப் செய்தாச்சு..

எங்க வீட்டு பக்கம் அப்படி ஒன்னும் எல்லோரும் பின்பற்றின மாதிரி தெரியல..

ஒருவேளை "சிட்டி ஹால்" பக்கம் போய் இருந்தா தெரிந்து இருக்கும்