Thursday, August 28, 2008

ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டி

இதுக்கு என்ன பெயர் வைக்கலாமுன்னு குழப்பமா இருந்துச்சு. பப்பாதி, சிவசக்தி, அர்த்தநாரி, சரிசமம், அரையும் அரையும், நீ பாதி நான் பாதி இப்படிச் சிலது மனசுலே வந்து போச்சுங்க. வம்புவேணாம் பேசாமத் தமிழில் வச்சுறலாமுன்னு ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டி....
தேர்ந்தெடுத்தேன்:-)
வாங்குன புதுசு


நீள உருண்டைக்கல் போல இருக்கு. அது முளைக்கும்போதே சரி பாதியாப் பிளந்து வர்றதுக்கு வசதியா நடுக்கோடு லேசாத் தெரியுது. இது நம்மகிட்டே இல்லையே...புதுமாதிரியா இருக்கேன்னு ஒன்னு மூனு மாசம் முந்தி வாங்கிவந்தேன். வரும்போது இருந்த நடுக்கோடு, நம்ம வீட்டு விவகாரம் பார்த்துருச்சுபோல.கற்பூரப் புத்தி. மெல்ல எழுபது முப்பதா ஆகி இருக்கு இப்ப. யார் எழுபதுன்னு உங்களுக்குக் குழப்பம் இருக்கவே இருக்காதுன்னு நம்பறேன்.பரிசல்காரன் ஒரு இடத்துலே அவருடைய துணிகளுக்கு உமா அதிக இடம் ஒதுக்கி வைப்பாங்கன்னு எழுதி இருந்தாருல்லே. அதை நான் ஞாபகமா மறந்துட்டேன்:-)))) குற்ற உணர்ச்சி, அது, இதுன்னு மனசு குழம்பக்கூடாது பாருங்க!!!


போனவாரம் இன்னும் மலிவாவும், மொட்டோடவும் ஒன்னு இருக்கேன்னு விட மனசில்லாமல் வாங்கியாந்தேன். நேத்து பூப் பூத்துருச்சு.அழகான பூவா இல்லைன்றது வேற..... ஆனா அதுக்கு ஈடு செய்யும்விதமா அந்தத் தண்டுக்குள்ளே சூரிய ஒளி ஊடுருவி வந்தது நல்லா இருக்கு.இதோ நான் பெற்ற இன்பம், உங்களுக்கும்:-))))


28 comments:

said...

மேடம் உங்க பதிவு தமிழ்மணத்துல இருந்து திறந்தா வர மாட்டேங்குது :-(

said...

இது நல்லா இருக்கே!! அது சரி என்ன பிரச்சனை? தமிழ்மண முகப்பில் இருந்து சொடுக்கினா பதிவைக் காணோமேன்னு சொல்லுதே!

said...

//தண்டுக்குள்ளே சூரிய ஒளி ஊடுருவி வந்தது நல்லா இருக்கு.//

லைட் போட்ட மாதிரி

மேடம் புகைப்படத்தில் உள்ள பொருள் வெட்டப்படாமல் எடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் (நடுவில் வரும்படி அமைத்து)

said...

வாங்க கிரி

என்னமோ ஆகிப்போயிருக்கு(-:

//நடுவில் வரும்படி அமைத்து..//

இதுக்கெல்லாம் 'வரும்படி' ஒன்னும் வர்றதில்லை:-))))))

said...

வாங்க கொத்ஸ்.

தமிழ்மணத்துலே சேர்க்கவே முடியலை. புது இடுகை ஒன்னுமில்லைன்னு சாதிச்சது.

அதான் மொத்த இடுகையையும் ட்லீட் செஞ்சு மறுபடி பப்ளிஷ் செஞ்சேன்.

இப்ப என்னன்னா டிலீட் ஆனதைக் காமிக்குது. இடுகை இல்லைன்னு சொல்லும்போது அங்கே காமிக்கும்'துளசி தளம்' க்ளிக்கினால் இடுகை வருது. ஒரே மாயாபஜார்:-)))

said...

அந்த சூரிய ஒளியுடன் இருக்கும் படம் அழகு! PIT போட்டிக்கு எடுத்து வைத்து இருக்கலாம்.
தமிழ்மணத்தில் வேறு முகவரி காட்டுகின்றது.

said...

வாங்க தமிழ் பிரியன்.

இந்தப் பிட்டுக்காரங்க ரொம்ப மோசம். நம்மகிட்டே இருக்கும் படத்துக்கேத்த 'தலைப்பு' கொடுக்கறதே இல்லை:-)))

இன்னிக்குத் தமிழ்மணம் துளசிதளத்துடன் 'டூ' விட்டுருக்கு!!!!

said...

//இதுக்கு என்ன பெயர் வைக்கலாமுன்னு குழப்பமா இருந்துச்சு. பப்பாதி, சிவசக்தி, அர்த்தநாரி, சரிசமம், அரையும் அரையும், நீ பாதி நான் பாதி இப்படிச் சிலது மனசுலே வந்து போச்சுங்க. வம்புவேணாம் பேசாமத் தமிழில் வச்சுறலாமுன்னு ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டி....
தேர்ந்தெடுத்தேன்:-)//

துளசி அம்மா,
இயற்கையில் இருக்கும் இந்த பிரிவுகள் உண்மையிலேயே வியப்பளிப்பவை, 5 நட்சத்திரத்தை
தாளில் வெட்ட எவ்வளவு கணக்கெல்லாம் போட்டு துண்டுறோம், ஐந்து இதழ் பூக்களைப் பார்க்கும் போது எல்லாம் சம அளவாக அளந்து வைத்தது போல் பூத்திருக்கும், ஒற்றைப் படை இதழ்களை உடைய பூக்களைப் பார்க்கும் போது எனக்கு சிலிர்ப்பே சிலிர்க்கும்.

நாள் கணக்கில் பொறுமையாக சிறகில் டாட்டு ஓவியம் வரைந்து கொண்டு கூட்டை விட்டு வெளியே வந்து என்னைப் பார் என் அழகைப் பார் என்று படபடத்துக் காட்டும் பாருங்க பட்டாம் பூச்சி.....அப்பாப்பா....

said...

தமிழ்மணத்தில்
PAGE NOT FOUND னு காட்டுது.
ஏன்? கா வுட்டுட்டீங்களா?

said...

கொள்ளை அழகு... உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகு...

said...

எங்க உங்க பதிவைக்காட்டலன்னாலும் எல்லாரும் வழி கண்டுபிடிச்சு வந்துடறோம் பார்த்தீங்களா..?

ஒளி ஊடுருவி வருவதெல்லாம் கவனிச்சு எடுத்துருக்கீங்க நீங்க ஒரு ஒளி ஓவியை.. :)

Anonymous said...

இதுக்கு பேர்தான் என்ன, 50-50 க்ராக்ஜாக் பிஸ்கட் மாதிரி நல்லாத்தான் இருக்கு.

said...

//அந்தத் தண்டுக்குள்ளே சூரிய ஒளி ஊடுருவி வந்தது நல்லா இருக்கு.//
படம் சூப்பர்!!துள்சி! தமிழ்பிரியன் சொன்னா மாதிரி ஆகஸ்ட்'தலைப்பில்லா'பிட்டுக்கு நல்லாயிருந்திருக்கும்.
இது காயா,பழமா, சாப்பிடலாமா(என் புத்தி அப்படித்தான் போகும்)?
'வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு' என்பது போல் நல்லாருக்கு. நாங்கெல்லாம் பார்க்க முடியாதவைகளையெல்லாம் தேடிப்பிடித்து எங்கள் கண்களுக்கு விருந்தாக்கும் துள்சி!!நல்லாருங்க!!!

said...

ஃபிஃப்ட்டி ஃபிஃப்டியே நல்லா இருக்கு.
படம் அதி சுந்தர்.
இது என்ன செடிதானே:)

said...

aakaa துளசிக்கே பிரச்னையா

சரி சரி - சரியாய்டும் - சரியாச்சுக்ல்லே

said...

வாங்க கோவியாரே.

இயற்கையை மிஞ்ச ஆள் இருக்கா என்ன?

அதாலேதான் இயற்கையை வழிபட ஆரம்பிச்ச மனுஷன் அப்படியே விட்டுவைக்காம......
மதம் பிடிச்சு மதத்தை உருவாக்கிட்டான்(-:

said...

வாங்க சிஜி.

என்னதான் அன்பான உறவுன்னு சொன்னாலும் ஒரு சில வினாடிகளுக்குக் கோபம், சண்டைன்னு வராதா?

said...

வாங்க அமுதா.

//கொள்ளை அழகு..//

உங்க பெயரை விடவா? :-))))

said...

வாங்க கயலு.

பதிவர் ஆனபிறகு 'கவனம்' சிதறுவதில்லை:-)))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

பெயர்தான் பிடிபடலை.....
பேசாம 'துளசியும் கோபாலும்' னு வச்சுடவா?:-)))))

said...

வாங்க நானானி.

காக்டெஸ் வகைச் செடிதான். பூதானே வந்துருக்கு. காய்ச்சுப் பழம் வந்தா(???) பார்க்கலாம். ஆனால் எனக்குப் பிடிச்ச பலா, மா இப்படி இருக்காதுல்லே!!!!

விதவிதமான வகைகள் கிடைக்குதுப்பா.

ஆசையாத்தான் இருக்கு. லிவிங் ஸ்டோன் பார்த்துருக்கீங்களா?

said...

வாங்க வல்லி.

சக்கூலண்ட் வகையில் கொட்டிக்கிடப்பதில் இது ஒன்னு.

said...

வாங்க சீனா.

அது என்ன கே????
துளசிக்கே........

போராடி செயிப்பதுதான் வாழ்க்கையின் ஆனந்தமாம்:-)

said...

//யார் எழுபதுன்னு உங்களுக்குக் குழப்பம் இருக்கவே இருக்காதுன்னு நம்பறேன்.//

இல்லவே இல்ல!

said...

டீச்சர் பூ அழகு..அதிலும் சூரியக் கதிர்கள் உள்ளே போகும் போது..வாவ்..அசத்திட்டீங்க..

அந்த பூ பேரு என்ன டீச்சர்? கீழ உள்ள அந்தக் காய் என்ன?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

குட் கேர்ள். இப்படித்தான் வகுப்பிலே சந்தேகம் இல்லாமத் தெளிவா இருக்கணும்:-)

said...

வாங்க ரிஷான்.

பூவுக்குப் பெயரென்ன வேண்டிக்கிடக்கு? பூ பூதான்:-)

ஏதோ ஒரு சக்கூலண்ட் வகை.

அது காய் இல்லைப்பா. இலை:-)))

said...

இதுவரை பார்த்ததில்லை இப்பூவை.
வித்தியாசமாக இருக்கு.