Monday, November 12, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 46

முடிவுரை:


ஒரு வீட்டை முழுசுமாக் கட்டி முடிக்கணுமுன்னா மொத்தம் 66 ஒப்பந்தக்காரர்கள் வேலை செய்யணுமாம். இங்கே பில்டிங் கம்பெனியில் சொன்னது. இவுங்க அத்தனைபேரையும் ஒப்பந்தம் செஞ்சுடறது ரொம்ப சுலபம். ஆனா ஒருங்கிணைச்சு வேலை வாங்கிக்கறதுதான்........ஹப்பா....தாவு தீர்ந்துரும். ரொம்பக் கஷ்டப்படாம இருக்கணுமுன்னா எதாவது ஒரு பில்டிங் கம்பெனிக்கு ஒப்பந்தம் போட்டுக் கட்டிமுடிச்சுக்கலாம். எல்லாம் அவுங்களே பார்த்துக்குவாங்க.


பில்டிங் கம்பெனிகள் இந்த வேலையைச் சாமர்த்தியமாச் செஞ்சுடறாங்க. அவுங்ககிட்டே இதுக்குன்னு ஒரு குழுவே இருக்கு. தொழில்முறையில் அவுங்களுக்கு வேலை வருசம் முழுசும் ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு இருந்துக் கிட்டேயிருக்கும். நாம் என்ன நூறு வீடாக் கட்டறோம்? கண்ணே கண்ணு அதுவும் ஒண்ணெ ஒண்ணு. இதே காரணம்தான் நல்லாத் தொழில் தெரிஞ்சவங்களைத் தேடறோமுன்னு சில சமயம் ஏமாந்து விழுந்துடறது(-:

நம்ம 'கதை'யின் போக்கில் கற்றதும் பெற்றதுமுன்னா அது இந்த அனுபவம்தான்.

இந்த வீட்டைக் கட்டுனதுலே எத்தனையோ பேரோட உழைப்பு இருக்கு! ஆனா பலபேர் இதைச் சரியாச் செய்யலை! இந்தக்
காரியத்தில் ஈடுபட்ட நமக்கு(ம்) பல படிப்பினைகள் கொஞ்சமாவா ஏற்பட்டுச்சு? ஒருவேளை இன்னோரு வீடு கட்டுனோம்ன்னு வையுங்க, (ஹா....)
அதுக்கு என்னென்ன செய்யலாம், என்னென்ன கூடாது, சாமான்கள் எங்கெங்கே வாங்கலாம், எங்கெங்கே கூடாதுன்னு பல விவரங்கள் சேகரிச்சாச்சு!

முதல்லே ப்ளான் பண்ணதிலே இருந்து ஆரம்பிக்கலாம்!( அய்யோ...வந்துட்டாடா வந்துட்டா.....)

பாய்ட் சேம்பர்லின்- நம்ம ஆர்கிடெக்ட் ட்ராஃப்ட்ஸ்மேன்:
நல்ல பையன்/ஆள். நம்பலாம். ஆனா அளவு டேப்பை வச்சிக்கிட்டு இவ்வளவு பெருசு, அவ்வளவு பெருசுன்னு சொல்றதைக் கணக்குலே
எடுக்கக்கூடாது. நம்ம கட்டடத்துலே ரொம்ப 'டைட்'டா இடம் வச்சிட்டார். தாராளமா இடம் விட்டாத்தானே சாமான்கள் போடறப்ப/வாங்கறப்ப
தகராறு வராது!

இதோ மத்த பட்டியல்.
ரொம்ப மோசம்! வேணவே வேணாம்` (இந்த விஷயத்துலே மட்டும் கெட்டதைக் கவனமா ஞாபகம் வச்சுக்கணும்)

பில்டர் க்ரேக்
ப்ளம்பர் மைக் matt
ஜிப் தேய்ச்ச ஆளுங்க ( க்ரேக் ஏற்பாடு செஞ்சவுங்க)
ரைலாக் ஜன்னல்/ஸ்லைடிங் கதவு
மெடல் க்ராஃப்ட்ஸ் (கூரைக்கண்ணாடி)
கே புல்லன்( மில்லர்ஸ்)
ஹப்பர் கார்பெட்

பரவாயில்லை. நல்லாவே செஞ்சு கொடுத்தாங்க என்ற வகையில் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு. அது இங்கே இப்ப முக்கியமில்லைன்றதாலெ போடலை.

எலலாத்துலேயும் பெஸ்ட்ன்னு சொல்லணுமுன்னா
வெஸ்ட் லேக் டிம்பர்ஸ்.

அதைவிட இன்னும் ரொம்ப உசத்தியாச் சொல்லணுமுன்னா அது நம்ம கிங்தான்.

கிங் ஒண்ணும் ச்சீப் கிடையாது. ஆனா ஒரு வேலையைச் சொல்லிட்டு நாம் நிம்மதியாத் தூங்கிறலாம். அதை மனசுக்குள்ளெ போட்டு ஊறவச்சு சரியா முடிச்சுக் கொடுத்துடுவார் கிங். நம்பி ஒரு வேலையை ஒப்படைக்கலாம்.
இந்த வீட்டைப் பொறுத்தமட்டில் இது அவருக்கு ஒரு 'பெட் ப்ராஜெக்ட்.' எனிதிங் எனிடைம்ன்னும் சொல்லலாம்.

ஒரு குரல் கூப்புட்டாப்போதும், பெத்தபிள்ளையாட்டம் ஓடி வந்துடறார்.
இப்பக்கூட நம்ம அடுக்களைப்பக்கத்து டெக் வேலை அவர்தான் செஞ்சுக்கிட்டு இருக்கார். பழைய வீட்டுலே சன் ரூமில் இருந்து கழட்டுன ஸ்லைடிங் டோர் போட்டாச்சு. இன்னும் பாக்கி இருக்கும் இடத்துக்கு சைட் பேனல்ஸ் செஞ்சு கொண்டுவருவார். அநேகமா இந்த வாரம் முடியறதுக்குள்ளே வேலை முடிஞ்சாலும் ஆச்சரியமே இல்லை. அதான் தூங்க மாட்டாரே......
படம்......

இந்த டெக் வேலையா இல்லை ஆட்டோமாடிக் கேட்டான்னு 'ச்சீட்டுக் குலுக்குனதில்' ஜெயிச்சது 'கேட்'! குளிர்காலத்துலே, வண்டியைவிட்டு இறங்கிக் கேட்டைத்திறந்து.......அப்புறம் மூடின்னு சிலசமயம் எரிச்சலாவும் ஆயிருது. ஸ்லைடிங் கேட்டுக்கு சரியானபடி இடம் அமையலை. இதுக்கும் நம்ம கராஜ் டோர் போட்ட டாமினேட்டர்கிட்டேயே வேலையைக் கொடுத்தோம்.
எதோ சவுத் ஆஃப்ரிக்காலே செஞ்சதுன்னு ஒரு யூனிட்டைப் போட்டாங்க. அது பங்குக்கு நம்ம அலக்கழிச்சது அதுவும். வண்டியை வெளியெ எடுத்துட்டு, ரிமோட்டை அமுக்குனா, மூடுனா நம்ம அதிர்ஷ்டம். நாலைஞ்சுதடவை 'நிபுணர்கள்' வந்து பார்த்துட்டுப் போனாங்க!!!

இந்த விஷயத்தில் என்னைக்கும் இல்லாத அதிசயமா, கோபாலுக்கே கோவம் வந்துருச்சு. 'சரி பண்ணமுடியலைன்னா கழட்டி எடுத்துக்கிட்டுப் போங்க'ன்னு சொல்லிட்டார். பாவம், அந்த ஆளு (Carl )கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர் போல.( நமக்கே பயந்துட்டார்ன்னா பாருங்களேன்!) மறுநாளே இன்னொரு (ச்சீன) நிபுணரோட ஆஜரானார். இந்தமுறை சரி செஞ்சுட்டாங்கன்னுதான் நினைக்கறேன்( டச் வுட்!) ரெண்டு மாசமா ஒழுங்கா இருக்கு.


நம்ம பெங்களூர் ஜெயந்த் செஞ்சு கொடுத்த மாடல் வீடு இது. இந்த வீடு
இப்ப ஷோ கேஸ்லே இருக்கு. நம்ம வீட்டுக்கு வர்ற பிள்ளைங்க, இதைப் பார்த்தா ஆச்சரியத்தோட,
இந்த வீடுதான் இந்த வீடா? ன்னு கேக்கறப்போ ஜெயந்தை நினைச்சுக்கறதுதான்.

முன்பக்கம்
வடக்குப்பார்த்தது
தென் திசையில்

கிழக்கு(வாசல்)
மேலே இருப்பது நிழல்ன்னா கீழே நிஜம்:-))))



நம்ம கொத்ஸ் போன பதிவு பின்னூட்டத்தில் சொன்னதுபோல செஞ்ச வேலையை நினைச்சா எனக்கே பிரமிப்பா இருக்கு. நானா ......!!

எந்த வீட்டிலுமே 'இனி செய்யறதுக்கு ஒண்ணுமே இல்லை'ன்னு இருக்காது. ஹோம் இம்ப்ரூவ்மெண்ட்ன்னு எதுனாச்சும் இருக்கும். ஊரே அப்படி இருக்கும்போது நாமும் அந்த ஓட்டத்துலே ஓடணும்தானே?

நம்ம பழைய வீட்டை ஒரு கிண்டர்கார்டன் பள்ளிக்குக் கொடுத்திருக்கோம். (அதைப்பத்தி இன்னொருநாள் சொல்றேன்) அதனோட உள்புறத்தை மாற்றி அமைச்சப்ப எடுத்த சாமான்கள் எல்லாம் அங்கேயே கராஜ்லெ இருக்கு. இந்த வீட்டுக்கு எதாவது பொருத்தமா இருக்குமுன்னு நினைச்சா, அப்பப்ப அங்கேபோய் எடுத்துக்கிட்டு வர்றதுதான்:-))))

அந்தக் காலத்துலெ போற போக்குலே 'வீட்டைக் கட்டிப்பார்' னு ஒரு வரி சொல்லிவச்சுட்டுப் போனவங்களைக் கையெடுத்துக் கும்பிடணும். அப்படியும்
நாம் அதை நம்புனோமா? அது என்னான்னு பார்க்கலாமுன்னு உரலுக்குள்ளே தலையை விட்டுக்கறோம்:-)

இனிமேயாவது நிம்மதியா இருக்கலாமுன்னா எப்படி? அதான் தோட்டம், மெயிண்டனன்ஸ்ன்னு பல பிடுங்கல்கள் வந்துருதே. கோபால் உள்ளூரில் இருக்கும்போது அவர் பங்குக்குச் செய்யாமல் விட்ட வேலைகளை வாங்கிக்கணும். மறுபாதிக்கு உண்மையான பொருள் இதுதானேங்க:-)))

அப்படிக் கல்நெஞ்சுக்காரியா நான்? கொஞ்சமா ஒய்வெடுக்கவும் விடுவேன்.:-)))

இதுவரைப் பொறுமையாக் கூடவே வந்த உங்க எல்லாருக்கும் நன்றி.

அடுத்த வீடு கட்டும்போது சொல்லி அனுப்பறேன். எல்லாருமாச் சேர்ந்தே கட்டலாம். மறக்காம வந்துருங்க:-)))))

வணக்கம்.

31 comments:

Anonymous said...

//இந்த விஷயத்தில் என்னைக்கும் இல்லாத அதிசயமா, கோபாலுக்கே கோவம் வந்துருச்சு. 'சரி பண்ணமுடியலைன்னா கழட்டி எடுத்துக்கிட்டுப் போங்க'ன்னு சொல்லிட்டார்//எல்லார் கிட்டயும் கோபத்தை காட்ட முடியுமா என்ன கோபால் சாரால(அதாவது உங்க கிட்ட) அப்பறம் அவர் கதி!!!:)


அடுத்த வீடு கட்ட ஆரம்பிச்சாசா?

said...

ஆஹா , வணக்கம் போட்டு மங்களம் பாடியாச்சா, உங்க வீடு போலவே தொடரும் அருமை! ஆரம்பத்தில் வரலைனாலும் முடிவில் வந்துட்டேன்!

வீட்டைக்கட்டிப்பார்னு சொன்னாலும், கட்டிப்பார்ப்பது அலைச்சால் என்றாலும், நாமே பார்த்து பார்த்து கட்டியது என்ற மன நிறைவுக்கு , தரும் விலை அவை எல்லாம். என்னதான் பில்டர் கையில சாவிய தந்தாலும், அவன் எதோ எமாற்றிய உணர்வே கடைசிவரைக்கும் வரும், அதுவே கஷ்டப்பட்டு கட்டிய நாமே முன் நின்று கட்டிய வீட்டில் சில பல குறைகள் தென்பட்டாலும், பெரிதாக தெரியாது.மொத்தத்தில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும்.

எனவே சலித்துக்கொள்ள வேண்டாம், அடுத்த வீட்டுக்கு பூமி பூஜை போடுங்க! :-))(நல்லா பொழுது போவுமே உங்களுக்கு)

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

அதெல்லாம் கட்ட ஆரம்பிக்கறதுக்கு முன்னாலெயே சொல்லிருவொம்லெ.

லீவு எடுத்துக்கிட்டு வந்து சேரணும்,ஆமா:-)))

said...

வாங்க வவ்வால்.

சரியான டைமிங்:-)))))

நினைச்சுப் பார்த்துச் சிரிக்கும் நிறைய சம்பவங்களும் கிடைச்சது. அதே சமயம் நீங்க சொன்ன மனத்திருப்தியும்தான்;-)))

said...

நல்வாழ்த்துகள் துளசி - கோபாலுக்கும் தான்.

வாழ்வில் ஒரு அரிய சாதனை செய்திருக்கிறீர்கள். முழு ஈடுபாட்டுடன் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும், அது முழுமை அடைந்த உடன், ஏற்படும் திருப்தி, மன மகிழ்ச்சி இவைகளுக்கெல்லாம் ஈடு இணை கிடையாது. சிறு சிறு குறைகள் இல்லை எனில் அது செயலே அல்ல. 100 percent perefection - ஆசைப்படலாம் - நிறைவேறாது. 99.99 வரை தான் வரும்.

said...

வீடு கட்டிமுடிச்சதை சொல்லிட்டீங்க!
கிரஹப்பிரவேசம்-புதுமனைபுகுவிழா,
நியூஸி ஸ்டைலும் சொல்லிடுங்க...
அப்பதான் இப்பதிவு முழுமை பெறும்...
முன்கூட்டியே வாழ்த்துக்களை சொல்லிட்டேன்!

said...

சும்மா சொல்லக்கூடாது, வீடு சூப்பர்..எல்லாம் நாமே பார்த்து வாங்கி அதி குடியிருப்பது ஒரு சுகம் என்னாதான் கஸ்ட்டப்பட்டாலும்..

said...

அட முடிவுரையில் நம்ம பேரும் மென்ஷன் பண்ணி இருக்கே!! ரொம்ப நன்றி ரீச்சர்.

நாம வீடு கட்டும் போது சொல்லி அனுப்பிடறோம். நீங்களே கூட இருந்து.... ஹிஹி...

said...

துளசி, வீடு கட்டின அதிசயம் இன்னும் நீங்கலை.

சிஜி சார் சொல்றது போல பெரிய யாகம் செய்து முடித்த மாதிரி இருக்கு.
புதுமனை புகு விழா போட்டோ வேணுமே:)))போட்டோக்கள் மிக அருமை துளசி.
என்ன போஸ் கொடுக்கிறான் இந்த ஜிகே!!!!

நடு போட்டோல இருக்கிறது பூனியா??
இத்தனை தீவிர முயற்சி எடுத்து,அதற்கு கணக்கும் வைத்து,
எழுதி,இப்பப் பொறுமையா சொல்லிட்டீங்க.

ரொம்ப நல்லா ஆரோக்கியத்தோட சந்தோஷமா தீர்க்காயுசுடன் இருக்க வாழ்த்துக்கள்.

said...

கொஞ்ச நாள் இந்த பக்கம் காண முடியாத அளவுக்கு சென்னையில் சுற்றிக்கொண்டு இருக்கேன்.
முடியும் போதே அடுத்த தொடருக்கு அடி போட்டுடீங்க போல் இருக்கு??

said...

வாங்க சீனா.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

100% பெர்ஃபக்ஷன் எங்கேயுமே கிடையாதுன்றதைத்தான் கடவுளே காமிக்கறாரே:-)
அதான் ஒண்ணு இருந்தால் ஒண்ணு இல்லேன்னு!

said...

வாங்க சிஜி.

கிரகப்பிரவேசமுன்னு ஒண்ணும் தனியா வைக்கலை. பால் காய்ச்சுனதோட சரி.

நியூஸி ஸ்டைலுன்னா 'ஹவுஸ் வார்மிங்'தான். நம்ம எலிநோர் & ஜான், ஃபிலிப் & ஈவ்லின், இன்னும் ஒரு நண்பர் குடும்பமுன்னு ஒரு நாள் தேனீர் விருந்து. என்னுடைய லைப்ரரி நண்பர்கள்ன்னு இன்னொருநாள் இதெ போல.

அவ்வளவுதான்.................

ஒருசமயம் பதிவர் ஒருவர் குடும்பத்துடன் வந்திருந்தார்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாங்க அரவிந்தன்.

நீங்க சொன்னது ரொம்பச் சரி.

கஷடப்பட்டாலும் திருப்தியாத்தான் இருக்கு.

நீங்க இந்தப் பதிவைத் தொடர்ந்து படிச்சதுக்கு நன்றி.

said...

வாங்க கொத்ஸ்.

வகுப்பைக் கவனிச்சுக்கிட்ட க்ளாஸ் லீடரை நினைவு வச்சுக்கணுமா இல்லையா?

வீடு கட்டறப்பச் சொல்லுங்க. அதெல்லாம் ஜமாய்ச்சுப்புடலாம்:-))))

said...

வாங்க வல்லி.

அது நம்ம பக்கத்து வீட்டு ஆலி(வர்). கேட் திறந்தாப்போதும். வேலியைத்தாண்டி குதிச்சிரும் இந்த வெள்ளாடு:-))))
ஆடுமாதிரிதான் சுருட்டை ரோமம்:-))))

பூனி ப்ரவுண் கலர் பூனை;-)))

மனப்பூர்வமான ஆசிகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க குமார்.

தீபாவளிக்கு ச்சென்னை விசிட்?

குடும்பத்தோடு மகிழ்ச்சியா இருந்துட்டு வாங்க. வீடும் பதிவும் ஓடியாபோகுது? :-))))

said...

வீடு ரொம்ப அழகா இருக்கு. எனக்கும் ஊஞ்சல்னா ரொம்ப பிடிக்கும். இங்கே நல்ல ஊஞ்சல் கிடைக்கிறதில்லை. இந்தியாவில் இருந்து கொண்டு வந்தா, குளிர்காலத்தில விரிசல் வந்துடுது. உங்க வீட்டுக்கு வந்தா ஊஞ்சல் ஆடலாம்னு சொல்லுங்க.

said...

முடிச்சுட்டாங்கய்யா...முடிச்சுட்டாங்கய்யா...ன்னு கத்தலாம் போல இருக்கு. பதிவை இல்லை. வீட்டை கட்டி முடிச்சதைத்தான்.

'கல்யாணத்தை முடிச்சுட்டு வீட்டைக் கட்டிப்பார்'னு சொல்லலாம்தானே...

said...

துளசி அக்கா.. வாழ்த்துக்கள்..அப்பறம் அடுத்த வீடு கட்டர வர காத்திருக்காம ,அடிக்கடி பதிவுகள போடுங்க..அத்தான் நல்லா சூப்பரா எழுதரீங்களே..
// அப்படிக் கல்நெஞ்சுக்காரியா நான்? கொஞ்சமா ஒய்வெடுக்கவும் விடுவேன்.:-)))//
ஹா..ஹா..

said...

வாங்க பத்மா.

ஊஞ்சலில் உக்கார்ந்து ஆடிக்கிட்டே அருமையான(?) தமிழ்ப்படம் பார்க்கலாம்:-))))

உள்ளூரில் பலகை மட்டும் செஞ்சுக்கலாம் பத்மா. மத்த ஃபிட்டிங்ஸ் இந்தியாவில் இருந்து கொண்டுபோகலாம்.

உங்கூர்லெ ஒரு 'கிங்' இருக்காரான்னு பாருங்க:-)

said...

வாங்க ஆடுமாடு.

//'கல்யாணத்தை முடிச்சுட்டு வீட்டைக் கட்டிப்பார்'னு சொல்லலாம்தானே...//

தாராளமா......
கல்யாணத்துக்கு முன்னாலெ (?) காதல் என்ற சொல்லைச் சேர்த்துக்கலாமா? ;-))))

said...

வாங்க ரசிகன்.

ரொம்ப எழுதிட்டமாதிரி இருக்கு. புதுப்பதிவுகளுக்கு என்ன அவசரம்?

கொஞ்சம் ஓய்வு தேவை.

ரெண்டுநாள் போகட்டுமெ:-)))

said...

வீடுன்னா சும்மாவா இருக்கு. அடடா. நல்லபடி கெட்டி முடிச்சாச்சு. நல்லாருக்கு வீடு. என்னுடைய வாழ்த்துகள்.

said...

வாங்க ராகவன்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

ஆடம்பரமான வீடு இல்லை. ஆனா அமைதியான வீடு. நம்ம ஜிகே கூட குரல் எழும்பாமத்தான் பேசுவான்;-)

said...

வாழ்த்துக்கள் டீச்சர்...வீடு அழகாக இருக்கு :)

said...

அஸ்திவாரத்திலேருந்து ஆன்டெனா வரைக்கும் நாமே பார்த்து பார்த்து கட்டினா, முடிஞ்ச பிறகு நமக்குக் கிடைக்குமே அந்த திருப்திக்கு ஈடே இல்லீங்க.
வாழ்த்துக்கள் துளசி

said...

வாங்க கோபிநாத்.


வாழ்த்து(க்)களுக்கு நன்றி.
அழகா இருக்குன்னு சொன்னது இன்னும் சந்தோஷம்.

said...

வாங்க கோமதி.

நன்றி.

நீங்க சொல்றது ரொம்பச்சரி. வீட்டோடு கூடவே வளர்ந்த ஒரு உணர்வுதான்:-)

உங்க பதிவுலே எழுதுனீங்க பாருங்க ஒரு சுமீத் மிக்ஸியோடு இங்கிலாந்து வந்து இறங்கினோமுன்னு. அதைப்படிச்சவுடன் அட! என்னைப்போல ஒரு ஆத்மான்னு நினைச்சுக்கிட்டேன்.
என்ன ஒண்ணு, நம்மது எதோ ஒரு சின்ன லோகல் ப்ராண்ட். சுமீத் அளவுக்கு அப்ப ஐவேஜ் எல்லாம் இல்லை:-))))
ஆச்சு அது 26 வருசம்.

said...

மாடல்வீடும் ஒரிஜினலும் பக்கத்துபக்கத்துல சூப்பர்ரா உங்க சாதனையை சொல்லுது ...

said...

வாங்க முத்துலெட்சுமி.

சாதனைன்னு சொல்லிட்டீங்க.

உங்க வீடு கட்டும்போடு உதவிக்கு வரவா?

said...

Happy to have travelled all the pain you took to build this home, I brough 800 square feet flat, but i had hard time running around from the basement till the furnishing, so many problem, but nothing compared to what u did :)))

You are very inspiring women!
All the best in everything you do and I am waiting for ur next post