Thursday, February 08, 2007

பாமரளின் பார்வையில் பாட்டும் பரதமும் ( பகுதி 3)

"ஹலோ...... கிருஷ்ணகான சபாங்களா? சாயந்திரம் ஷோபனா டான்ஸ்க்கு டிக்கெட் கிடைக்குமா?"

" இப்ப இருக்கு"

இருக்குங்களா........... உங்க விலாசம் சொல்லுங்க, வந்து வாங்கிக்கறோம். எங்கே இருக்கு சபா?

"நம்பர் 20. மஹராஜபுரம் சந்தானம் ரோடு"

" எதாவது லேண்ட் மார்க் சொல்லுங்க. நான் ஜி.என். ( செட்டி) ரோடுலெ இருந்து வரணும்"

"பனகல் பார்க்குக்கு எதுத்தாப்பலே சாரதா வித்தியாலயா கேர்ள்ஸ் ஸ்கூலை ஒட்டி ஒருதெரு. அதுலே நேரா வந்தீங்கன்னா நம்பர் 20"

ஆட்டோகாரருக்கு விளக்கப்படுத்தி, பள்ளிக்கூடம் பக்கம் திரும்பும்போது, " இது கிரிப்பித் ரோடாச்சேம்மா,நீ என்னவோ பேர் சொல்றே?"

"இல்லைங்க இந்த ரோடுதான். இதோ பேர் பலகை இருக்கே,'மஹாராஜபுரம் சந்தானம் சாலை'ன்னு."

நானும் கோபாலும் ஆளுக்கொரு பக்கமாப் பார்த்துக்கிட்டு வர்றோம்.
ஆங்.......இதோ இருக்கு, வலக்கைப் பக்கம்.

"ஏம்மா......முப்பாத்தம்மன் கோயிலாண்டைன்னு சொல்லியிருக்கலாமுல்லே? நேரா இட்டாந்துருப்பெனே!"

"கோயில் எங்கேப்பா இருக்கு? "

"பின்னாலே திரும்பிப் பாரும்மா"

'ஸ்ரீ கிருஷ்ணகான சபா. துவக்கம்:1955' நுழைவாசலைக் கடந்து உள்ளெ போனா........முன் வெராந்தா நடுவிலே என்னவோ அலங்காரம். முதல்லெ டிக்கெட்டை வாங்கிட்டு வரலாம். ஐந்நூறா இல்லை முன்னூறா? முன்னூறே போதும்.

"ஏங்க, முப்பாத்தம்மன் கோயில் முன்னாலே'ன்னு சொல்லி இருக்கலாமே. கண்டு பிடிக்க ஈஸியா இருந்துருக்குமே"

"அப்படிச் சொன்னாலும் நிறையப்பேருக்குத் தெரியாது. அதான் அட்ரஸைச் சொல்றது"

ஹூம்...... அம்மன் மேல் என்ன கோவமோ :-)

முன் வெராந்தாவுலே ஒரு மேசையில் வீணை, தபேலா, வயலின் எல்லாம் மினியேச்சர்! பார்க்கக் கொள்ளை அழகு.

'ஏங்க , இது விற்பனைக்கா?' " இல்லீங்க. நாங்களே வாங்கினோம், அலங்காரத்துக்காக."
"இல்லையா? எங்கே கிடைக்கும்? ஸ்ருதிலயா, ராயப்பேட்டை ஹை ரோடுங்களா? "மனசுலே வச்சுக்கிட்டேன்.

சபா உள்ளெ பத்து மணிக்கச்சேரி நடந்துக்கிட்டு இருக்கு. வசுந்தரா ராஜகோபால், வயலின். ச்சும்மா ஒரு பத்துநிமிஷம் நின்னவாக்குலேயே கேட்டுட்டு வந்தோம்.

முப்பாத்தம்மன் கோயில் வாசல். ரெண்டு மூணு பூ வியாபாரத்துக்குப் பக்கத்துலே ஒரு பாத்திரத்துலே பால்.சாமிக்கு அபிஷேகம் செய்யவாம். பாலுக்குத் தவிக்கும் குழந்தைகள் இருக்கற நாட்டில், தன்மேலே பாலபிஷேகம் வேணுமுன்னு எந்த அம்மன் கேக்கும்? மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு.

கோயிலில் எதோ கட்டிட வேலை நடக்குது. செங்கல்லும், ஜல்லியுமாக் கொட்டி வச்சுருக்கு. சம தரையில் இல்லாம,கொஞ்சம் தாழ்வா இருக்குக் கருவறை. பூஜாரி, குனிஞ்சு போறார், வர்றார். ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் எக்கச்சக்கமா இருக்குமாம். சக்தி வாய்ந்த அம்மனாம்.

மத்தியானச் சாப்பாடு வழக்கம்போல 'கோமளவிலாஸ்'.

சாயங்காலம் நடனத்துக்குக் கிளம்பியாச்சு. உள்ளே போகுமுன்னாலே கேண்டீனைப் பார்வையிட்டா, அங்கே நம்ம'கீதா கஃபே'. பரிமாறும் கணேஷ் எனக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர். எப்ப வந்தீங்கன்னு கேட்டுக் கொஞ்சம் குசலம் விசாரிச்சார். இசைவிழா முடியும்வரை அவருக்கு இங்கே ட்யூட்டியாம். இட்டிலி, வடை, காபின்னு முடிச்சுக்கிட்டு,வெளியே 'ம்யூஸிக் சிடி' விற்பனையில் கொஞ்ச நேரம் மேய்ஞ்சு ரெண்டு பாட்டு சிடிக்கள் வாங்கினோம். இன்னும்மணி ஆகலையே........ உள்ளெ போலாமான்னு நினைச்சுப் போனா..............

அடடா......எப்படிக் கோட்டை விட்டுட்டேன்? பிரியா சிஸ்டர்ஸ் பாடிக்கிட்டு இருக்காங்க. அரைமணிநேரம் பாட்டுக் கேக்க வாய்ச்சது. அருமையாப் பாடினாங்க. அங்கே இங்கே சுத்தாம நேரா உள்ளே வந்துருக்கலாம்(-:
நடனம் ஆரம்பிக்குமுன்னே அரங்கத்தை நோட்டம் விட்டேன். ரொம்பப் பழையக் காலக்கட்டிடம். உள்ப்புற அலங்காரங்கள்னு ஒண்ணும் பிரமாதமா இல்லை. இந்த சபாவை ஆரம்பிச்சது மஹாராஜபுரம் சந்தானம் அவர்களாம்.கிரிஃபித் ரோடு இப்ப மகாராஜபுரம் சந்தானம் சாலையா மாறியதின் காரணம் இதுதானா?சில வருஷங்கள் ஹிந்திபிரச்சார் சபாக் கட்டிடத்தில் கலை நிகழ்ச்சிகளை நடந்துனாங்களாம். 1957-ல் சொந்தமா இப்ப இருக்கும் கட்டிடத்தைக் கட்டி இங்கே வந்துட்டாங்களாம். திரு. யக்ஞராமன் சபா செகரட்டரியாக தொடர்ந்து 40 வருஷம் இருந்துருக்காராம்! வசதிகள் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், இங்கே வந்து நிகழ்ச்சி கொடுக்கறதை ஒரு பெரிய கெளரவமா கலைஞர்கள் நினைக்கிறாங்களாம்.

பக்கத்து ஸீட் மாமி, சேலத்துலே இருந்து வந்துருக்காங்க, இந்த சங்கீத சீஸனுக்கு. சபா மெம்பர். வருஷம் ஆயிரம் ரூபாயாம். முந்தி மாம்பலத்துலே இருந்தப்ப எடுத்ததாம். வீட்டுக்காரர் ரிட்டயர் ஆன இப்பப் பத்து வருஷமா சேலத்துக்குப் போயிட்டாங்களாம். ஆனாலும் வருஷாவருஷம் வந்துருவாங்களாம். ஜாகை? சொந்தக்காரர்கள் வீடு:-)
முன்னூறு ரூபாய் டிக்கெட்டா? முன்னாலே போய் உக்காருங்கன்னு சொன்னாங்க. பரவாயில்லை, உங்ககூடவே இருக்கேன்னு சொல்லிட்டேன்.
பிரம்பு நாற்காலிகள்.சரிஞ்சு,அப்படியே குவிஞ்சு உக்கார்ந்துக்கலாம். ஆனா நம்ம வசதிக்கு ஒரு நாற்காலியை இழுக்கமுடியாது.நாலுநாலு நார்காலிகளாச் சேர்த்து கட்டை வச்சு அடிச்சிருக்காங்க!!!! நகர்த்தணுமுன்னா......... மூச்:-)

ஷோபனாவின் நடனம் தொடங்கியாச்சு. படத்துலே இருக்கற மாதிரி இல்லாம இன்னும் ச்சின்ன உருவமா இருக்காங்க.நடனத்தைப்பத்தி சொல்ல வேற ஒண்ணும் இல்லை. பிரமாதம். சம்பிரதாயமான நடனம். நடனம் முடிஞ்சதும் ஸ்டேஜ் ஓரமா உக்கார்ந்தாங்க,இடுப்பைப் பிடிச்சிக்கிட்டு. முகத்துலே ஒரு லேசான வலியோ? கொஞ்ச நேரம் பேசிக்கிட்டுஇருந்தேன். முதுகுவலி இருக்காம். கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியதாப் போச்சுன்னாங்க. என்னதான் அட்டகாசமான மேக்கப் போட்டுருந்தாலும் வயசு முகத்தில் தெரிய ஆரம்பிச்சிருக்கு(-:

அங்கே இன்னொரு பரிச்சியமான முகத்தையும் பார்த்தேன். உடம்பு முன்னைக்கு இப்போது............ சுருக்கமாச் சொன்னா என்னை மாதிரி:-)
"நீங்க சித்ரா தானே? எப்படி இருக்கீங்க? ரொம்ப வருஷத்துக்கு முன்னே உங்க நடனம் பார்த்துருக்கேன், பிஜியில்"

" அப்படியா !!....... ரொம்ப வருஷமாச்சு. பத்துப்பதினைஞ்சு வருஷம் இருக்குமே"

" இருபத்தி மூணு வருஷமாகப் போகுது. அது 1984 ஃபிப்ரவரி"

" அட! எப்படி இவ்வளவு கரெக்ட்டா ஞாபகம் வச்சுருக்கீங்க?"

" ஆறே மாசக் கைக்குழந்தையைத் தூக்கிக்கிட்டு 22 மைல் பயணம் பண்ணி உங்க நடனம் பார்க்க ஓடி வந்தது அப்படிச் சீக்கிரம் மறந்துருமா?"

வியப்பும் சிரிப்பும் முகத்தில். நல்ல களையான முகம். அழகு அப்படிக் குறைஞ்சு போயிரலை.

" அப்ப உங்களைப் படம் எடுக்க விட்டுப்போச்சு. அதனாலே இப்ப எடுத்துக்கப்போறென்:-)"

"நாளைக்கு என்னோட ப்ரோக்ராம் இங்கே இருக்கு. வருவீங்களா?"

" அப்படியா? தெரியாதே. வர முயற்சி செய்வோம்"

மறுநாள் போக முடியலை.
பாட்டு, நடனத்துக்கு அப்புறம் நாடகம் தானே?


20 comments:

said...

\\" அட! எப்படி இவ்வளவு கரெக்ட்டா ஞாபகம் வச்சுருக்கீங்க?" //

யானை பிரியை ஆச்சே நீங்க..யானைக்கு ஞாபக சக்தி நிறையவாம்:))

said...

வாங்க முத்துலட்சுமி.
கரெக்ட்டாப் பாயிண்டைப் புடிச்சிட்டீங்க:-)))

said...

அடுத்த முறை ஊருக்கு போவதற்குள் அட்லீஸ்ட் சென்னை தெருகளின் மேப் இணையத்தில் வந்துவிடும்,தைரியமாக ஆட்டோகாரரிடம் பேசலாம்.
பெரிய சேர்!! அதுக்கு கட்டை வேறு.சேரின் எடையைவிட கட்டையின் எடை அதிகமாக இருக்கும் போல் இருக்கு.

said...

வாங்க குமார்.

சென்னை நகரத்தில் தெருக்களின் பழைய பேரையும், இப்ப து என்ன தெருவா பேர் மாறி இருக்குன்றதையும்
நம்ம 'சென்னைப்பட்டினம்' குழு ஒரு பதிவாப் போட்டாங்கன்னாக் கூட நல்லா இருக்கும்.

என்னைமாதிரி பழைய ஆளுங்களுக்கு இது ஒரு பிரச்சனையா இருக்கு.

அதுவும் நம்மூர் ஆட்டோக்காரர் ஒருத்தர்கிட்டே ****** சாலைன்னு சொன்னதுக்கு அவர்
அதும்பேரு ***** ரோடுன்னு சொன்னார்:-))))

said...

அக்கா அந்த கோமளவிலாஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்...

said...

வாங்க மீனாபிரியா.

ஜெமினி ப்ளை ஓவர் கீழே பார்க் ஹோட்டல் இருக்கு பாருங்க, அதையொட்டியே வந்தா இடதுகைப் பக்கமா
ஒரு ரோடு பிரியும். கோடம்பாக்கம் ஹைரோடுன்னு நினைக்கிறேன். அதுலெ ஆரம்பத்துலெயே இருக்கு.

அவுங்களே 'கேஞ்சஸ் ஃபைன் டைனிங்' பேஸ்மெண்ட்டுலே வச்சிருக்காங்க. அங்கே புஃபே இருக்கு.
அதுவும் நல்லாவே இருக்கும். 3 கோர்ஸ் மீல்.

இன்னும் ரெண்டு கிளையும் இருக்காம் ராதாகிருஷ்ணன் சாலை, அப்புறம் வேற எங்கியோ:-)

said...

//ஜெமினி ப்ளை ஓவர் கீழே பார்க் ஹோட்டல் இருக்கு பாருங்க, அதையொட்டியே வந்தா இடதுகைப் பக்கமா
ஒரு ரோடு பிரியும். கோடம்பாக்கம் ஹைரோடுன்னு நினைக்கிறேன். அதுலெ ஆரம்பத்துலெயே இருக்கு.

அவுங்களே 'கேஞ்சஸ் ஃபைன் டைனிங்' பேஸ்மெண்ட்டுலே வச்சிருக்காங்க. அங்கே புஃபே இருக்கு.
அதுவும் நல்லாவே இருக்கும். 3 கோர்ஸ் மீல்.//

துளசியக்கா,

பதிவில் ரொம்பவே பிடித்தது வாழைஇலையில் சராமாரியா சாப்பாடு இருந்ததுதான்.

முகவரி விபரங்களுக்கு ஸ்பெஷல் தேங்ஸ். அடுத்த முறை சரவணபவன் மோனொடனியிலிருந்து விடுபட்டுக்கலாம் :-))

பதிவு பேசும் டான்சு பத்தி ஏதும் தெரியாது சொன்னா அது உடான்சு:-))

எனவே எனக்கு நன்கு தெரிந்த சாப்பாடு மேட்டரை டச் செஞ்சது!

said...

கோமளவிலாஸ்,முப்பாத்தம்மன்,கிருஷ்ணகான சபாவா.
சித்ராவுக்கும் நமக்கும் எவ்வளவு பொருத்தம் பாத்தீங்களா.:-)
க்ரிஃபித் ரோடு தான் தெரியும். எனக்கே அது மஹராஜபுரம் சாலைன்னா தெரியாது.
ஷோபனா முகத்திலேயே அசதி தெரியுது.
ஆடாமல் இருக்க முடியாது இல்ல?
பாவம்தான்.

said...

அடுத்த முறை உங்களுக்கு VIP PASS கிருஷ்ண காண சபாவில் நிச்சயம் உண்டு அக்கா. நான் ஏற்பாடு செய்கிறேன். 300/- ரொம்ப அதிகம். சென்னை மேப் (தெருக்கள் உட்பட) எல்லா பெரிய புத்தக கடைகளிலும் கிடைக்கிறது.

said...

சென்னை தமிழ்....மரியாதை பொங்குது

said...

வாங்க வல்லி.
இதுக்குத்தான் 'பழைய பேர் & புதிய பேர்' லிஸ்ட் யாராவது ச்சென்னைவாசிகள்
தொகுத்துப் போட்டா நல்லா இருக்கும்:-)

said...

வாங்க ஸ்ரீவித்யா.

//300/- ரொம்ப அதிகம். //
அப்டீங்கறீங்க? எல்லா இடத்திலும் 500, 300ன்றதுதான் இப்ப
இருக்குபோல இருக்கேம்மா.

VIP PASS கசக்குமா என்ன? வந்துடறேன்:-))))

said...

மங்கை,

ச்சென்னை பாஷையோட மகிமையே வேறயாச்சே!
அந்தவரைக்கும் 'என்னாம்மே' தப்பாச் சொல்றே? ன்னு
சொல்லாம இருந்தாரு பாருங்க:-)))

said...

வாங்க ஹரிஹரன்.

இந்த 'கோமளவிலாஸ்' நம்ம சிங்கை கோமளவிலாஸின் கிளைதான்.
விலை மட்டும் அங்கேயைவிட இந்தியாவில் மலிவு.
ஒரு விலைப்பட்டியல்கூட கொண்டு வந்துருக்கேன்:-)
சவுத் இண்டியன் மீல்ஸ் 42 ரூபாய்தான். ஸ்பெஷல்ன்னா இன்னும்
10 ரூபாய் கூடுதல். எதுக்கு? கொஞ்சம் வடாம், மோர்மிளகாய் எல்லாம்
பொரிச்சு தருவாங்க.:-))))

said...

ஹீம், கோமள விலாஸ் சாப்பாடு படம்தான் பெரிசா தெரியுது!, இப்ப எல்லாம் ப்ளாஸ்டிக் கப்களை அதிகமா பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. அது நல்லதில்லை அல்லவா...

said...

வாங்க ஜீவா.

சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாத வேற எதாவது இந்த ப்ளாஸ்டிக்குக்கு பதிலா
சீக்கிரம் வந்தா நல்லதுதான்.

யூஸ் & த்ரோவாவும் இருக்கணும். அப்பதான் சுத்தமாவாச்சும் இருக்கும்.

said...

//
சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாத வேற எதாவது இந்த ப்ளாஸ்டிக்குக்கு பதிலா
சீக்கிரம் வந்தா நல்லதுதான்.

யூஸ் & த்ரோவாவும் இருக்கணும். அப்பதான் சுத்தமாவாச்சும் இருக்கும்.//

என்ன டீச்சர், இப்படிச் சொல்லறீங்க? அதுக்குத்தான் நம்ம ஆளுங்க இலையில் தொன்னை செய்வாங்க. ஆனா அதை எல்லாம் நாம மதிக்காம விட்டாச்சே! சமீபத்தில் வாழை மட்டையில் கப் ப்ளேட் எல்லாம் செய்திருப்பதைப் பார்த்தேன். அது கூட நல்ல விஷயம்தான். நாமெல்லாம்தான் கொஞ்சம் விலை பார்க்காமல் வாங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

said...

வாங்க கொத்ஸ்.

//வாழை மட்டையில் கப் ப்ளேட் எல்லாம் செய்திருப்பதைப் பார்த்தேன்.//

முருகன் இட்டிலிக்கடையில் இலையில் செஞ்ச தொன்னையில் பரிமாறுனாங்க.
எல்லாக் கடைகளிலும் இப்படி வந்துட்டா நல்லாதான் இருக்கும்.

// நாமெல்லாம்தான் கொஞ்சம் விலை பார்க்காமல் வாங்கி //

இங்கே அதெல்லாம் ஏதுப்பா? (-:
ஊர்லே மக்கள்ஸ் இதுக்கு மாறினால்தான் உண்டு.

said...

முத்துலெட்சுமி சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு - உண்மையிலேயே நீங்க யானெ தான். உருவத்திலே இல்லீங்க - நினைவாற்றல்லே.

83 லே மக பிறக்குறா - 84 லெ 6 மாசம் - என்ன நினைவாற்றல்.

ம்ம்ம் - கோமள விலாஸ் சாப்பாடு படம் வாய்லே ஊறுது - நானும் சாப்பிட்டு இருக்கேன்.

பாராட்டுகள்

said...

ஷோபனாவோட நடனத்தை விட கோமள விலாஸ் சாப்பாடு எல்லோர் கவனத்தையும் கவர்ந்துவிட்டது.
இப்போதும் கோமளவிலாஸ் அங்கேயே இருக்கிறதா?