Wednesday, March 08, 2006

கொஞ்சம் கொஞ்சமா........

படிக்கவேண்டியது தலைக்குமேலே கிடக்கே, கொஞ்சம் கொஞ்சமா மேய்ஞ்சுரலாமுன்னுஆரம்பிச்சேன். நான் ஊருக்குப் போனபிறகு வந்த வாரங்களிலே நட்சத்திரப் பதிவை மட்டும்ஒரு பார்வை பார்த்துட்டு மேலே போகலாமுன்னு நினைச்சா........... 'ஒண்ணுக்கு ஒண்ணு வாங்கலை. எதுவுமே லேசுப்பட்டதில்லை'ன்னு கிடக்கு.


நம்ம குமரனோட வாரத்துலேதான் பயணப்பட வேண்டியதாப்போச்சு. அவரென்னன்னா ,'டென் தவுசண்ட்வாலா'மாதிரி, பத்தொம்போது ( இன்னைக்குக் கணக்குக்கு!) சரவெடி வெடிச்சுக்கிட்டு இருக்கார். ஒரு பதிவுக்கே 'சரக்கில்லாம' முறுக்கிக்கிட்டிருக்கற நான் எங்கே, இளங்கன்று பயமறியாதுன்னு சொல்றாப்போல முணுக்குன்னா பதிவு தொடங்கி விளாசற என் தம்பி( ஆமா, இப்பமட்டும் பாசம் பொத்துக்கிட்டு வருதோன்னு யாரோ அங்கே முணங்கறது உங்களுக்குக் கேக்குதா?) எங்கே?


பிப்ரவரி 5 ஆம் தேதிக்குன்னு ஒரு முக்கியத்துவம் இருக்கு. அன்னிக்குக் 'காதல்' பத்தி ஒரு நட்சத்திரப்பதிவு வந்திருக்கு.பதிவு, அதுலே சொல்லப்பட்ட விஷயம்,அது வந்த நாள்னு எல்லாம் சேர்ந்து ( எப்பன்றதா முக்கியம்?அட, அதை இப்பத்தான் படிச்சேங்க.) மனசு 'ஜிவ்'ன்னு பறந்து ஒரு ஆட்டம் ஆடித்தான் ஓஞ்சது.


'தாணு'வோட வாரம் மனசுக்குள்ளே நம்ம கல்லூரிக் காலத்தை கொண்டு வந்துச்சுன்னு பார்த்தா, அதுக்கப்புறம் வந்த 'சிவா'வோடபுராணம் கிராமத்தைக் கண்ணுலே கொண்டுவந்து நிக்க வச்சது. அடடாடா... என்னமா எழுதறப்பா தம்பி. கள்ளமில்லாதமனுஷங்களைப் பத்திப் படிக்கறப்பவே கண்ணுலெ குளம் கட்டிக்கிச்சு. நாகரீகம்னு சொல்லி எதையெல்லாம் இழந்துட்டோமுன்னு நினைச்சா வர்ற துக்கம் இருக்கே..... கொன்னுட்டப்பா சிவா!


மோகன்தாஸ், காதலர் தினத்தைப் பத்தி எழுதுனப்பவே நைஸா அவரோட காதல் அனுபவங்களையும் சொல்லிட்டார்.கூடவே அம்மா செண்ட்டிமெண்ட், துளசி அம்மா( அம்மான்னு சொன்னா நான் அடிக்க வரமாட்டேனாமே! நியூஸியிலே இருந்து புனேவுக்குக் கை நீளாதாமா? ஆனா நான் புனேவிலே இருந்த ஆள். நமக்கும் அங்கே ஒரு கூட்டம் இருக்கு என்பதைஇங்கே சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். பாருங்க, இவரோட பதிவைப் படிச்சதும் ஏதோ பேச்சுப் போட்டிக்கு வந்தாப்புலேவார்த்தைங்க வந்துவுழுது!)ன்னு சொல்லிக்கிட்டு இருக்கறதையும் பார்த்தேன்.


இவரோட ஹாக்கர்/க்ராக்கர் பதிவு பயனுள்ளதாக இருந்துச்சு. அதான் பெரியவங்க சொல்லிட்டுப் போயிட்டாங்களேப்பா,'வல்லவனுக்குவல்லவன் இந்த வையகத்திலுண்டு'ன்னு! 'நீ தடுக்குலே பாய்ஞ்சா நான் கோலத்துலே பாய்வேன்'னு இருக்கணும்போலெ. இதெல்லாம்யாருக்குத் தெரியுது....ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். 'சுருட்டு'பத்தி எழுதுனதும் நல்லா இருந்துச்சு. அது எனக்குப் புதுச் செய்தியும் கூட.சிங்கர் (ஒரு மரியாதைதான்!) பதிவைவிட அவரோட படம் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. என்ன இருந்தாலும் நான் பூனைவிரும்பி இல்லையா?அவருக்கு வந்த பின்னூட்டத்துலே'எண்டமூரி விரேந்திரனாத்'னு சொல்லி துளசிதளத்தைக் குறிப்பிட்டு இருந்தாங்கஒரு அனானி, இல்லே? போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு சரித்திரக்கதைகள், கொலைகதைன்னு கலக்கிட்டாருப்பா.


நம்ம பச்சோந்தியின் வாரம் வேற விதமா இருந்தது.அப்படியே படிக்காம ரெண்டு மூணு முறை திருப்பித் திருப்பிப்படிக்கவேண்டியதாப் போச்சு. சமூகவியலாளர், நமக்கிருக்கும் திருட்டு புத்தி(!)ன்னு பலவிஷயங்களைத் தெரிஞ்சுக்கமுடிஞ்சது.


நகந்து நகந்து 'நிலா'வோட வாரத்துலே பாதியிலே வந்து சேர்ந்துக்கிட்டேன். போட்டி, தேர்தல்னு ஜமாய்ச்சுட்டாங்க.ஆனாலும்'பெற்றோருக்குச் சுயப் பரிசோதனை'ன்னு போட்ட பதிவு சூப்பர்ங்க. கடைசியாப் போட்ட விடைபெறும் பதிவும் மனசைக் கலக்கிடுச்சு.


ஸ்ருசல் இந்த வாரம் கலக்கிக்கிட்டு இருக்கார். அறிமுகத்துக்காக போட்டிருக்கற படம் அருமை!


எப்படியோ 'சாவி'கிடைச்சிருச்சு. நேத்துத் தண்ணி குடிச்சுட்டு கணினி ரூமுக்கு வந்தப்ப 'சட்'னு மூளை(!)யில் ஒரு பொறி( இல்லே பொரி யா?)சாவி வச்ச இடமோன்னு ஒரு இடத்தைப் போய்ப் பார்த்தேன். சாவிக்கொத்துகள் உட்கார்ந்திருந்தன.( இதுக்குத்தான் அடிக்கடி தண்ணி அடிக்கணும்போல)
இன்னொரு முக்கியமான விஷயமும் சொல்லிடறேன். போன பதிவுலே வந்த 'டெர்ரகோட்டா புள்ளையார்' மண்டபத்துலே கிடைச்சார்.இதுமட்டுமில்லாம இன்னும் பல புள்ளையார்களையும் தந்தார், அந்த மண்டபத்துலே புலம்பிக்கிட்டு இருக்கறவர்.இதுக்குத்தான் நாம் ஒரு 'தீம்' வச்சுக்கணும். நமக்கு என்ன பரிசு கொடுக்கணுமுன்னு மத்தவங்க யோசிச்சுக் கஷ்டப்படக்கூடாதுல்லெ?


எல்லோரும் நல்லா இருங்க. நம்ம டிபிஆர் ஜோசஃப் ஃபைலை நாளைக்கு எடுத்துக்கணும்:-)

35 comments:

said...

நிறைய நிறயாவே பழைய போர்ஷன் எல்லாம்
கவர் பண்றிங்களே...டீச்சரா, கொக்கா..!

said...

என்ன செய்யறதுங்க தருமி. டீச்சருன்னாலும் அர்ரியர்ஸ் வச்சுக்கிட்டு இருக்கலாமா?
நியாயமுன்னா எல்லாருக்கும் தானே? மாணவர்களுக்கு மட்டும் வேறு சட்டமா?

ஆனா, டீச்சர்ன்றதாலே ரொம்பவே ஜனங்க கண்டுக்க மாட்டாங்கன்னு நினைச்சுக்கிட்டுக்
கொஞ்சம் அப்படி இப்படின்னு மெயின் போர்ஷனைக் கவர் செஞ்சுட்டுப் போயிரலாமுன்னுதான்......
என்ன சொல்றீங்க? சரியா?

said...

பாசம் பொத்துக்கிட்டு வந்ததுக்கும் என் நட்சத்திரப் பதிவுகளைப் படிச்சதுக்கும் ரொம்ப நன்றி துளசிக்கா.

said...

குமரன்,
குடும்பத்துக்குள்ளே எதுக்கு இந்த 'நன்றி'ன்னு பெரிய வார்த்தையெல்லாம் ?
நம்ம பதிவுலெ வந்து + குத்துப் போட்டா போதாதா? அப்படியே + குத்துக்கு கொஞ்சம்
கேன்வாஸ் செய்யலாம்தானே? அதான் ஓட்டுக் கேட்ட அனுபவம் இருக்குல்லே?:-)))

said...

Amma, gone througth this one. No time. Will write more...

said...

எங்கே அக்கா? + குத்து போடறதுக்கு பட்டை தெரியணுமே. உங்க பதிவுல பட்டை தெரியலையே. ஏன்?

said...

அடக் கடவுளே,

இந்தப் 'பட்டை' என் கண்களுக்கு மட்டும் தெரியும் மர்மம் என்னவோ?

மோகன் தாஸ்,

நேரம் கிடைக்கறப்ப எழுதுங்க.( பின்னூட்டம் வந்தாச் சரி!)

said...

நட்சத்திரம் எல்லாம் படிக்கறீங்க. எங்கள மாதிரி சின்ன பசங்களையும் பாருங்க. மறந்துறாதீங்க.

said...

பட்டை இப்ப தெரியுது அக்கா. +ம் போட்டாச்சு. :-)

said...

என்னங்க இ.கொ,

நட்சத்திரங்கள் எல்லாம் பளபளான்னு ஜொலிச்சுக் கூப்புடறப்போ பார்க்காம இருக்க முடியுதா? உங்களையெல்லாம்
கண்டுக்கலைன்னு நீங்களாவே நினைச்சுக்கிட்டீங்களாக்கும்? அடப்போங்க, நீங்க ஒண்ணு.

குமரன்,

பட்டை தெரிஞ்சுடுச்சா? எங்கே, என் நெத்தியிலா?:-)

said...

துளசி அக்கா! எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா..இப்படி ஊருக்கு போய்ட்டு வந்தவுடன் எல்லோருடைய நட்சத்திர பதிவையும் படிச்சி பாராட்டறீங்களே..ரொம்ப சந்தோசம்..
//** கொன்னுட்டப்பா சிவா **// நன்றி..நன்றி :-))..பெரியவங்க வாயால பாராட்டு கேக்குறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்..என்ன நாஞ்சொல்றது :-)).

said...

அக்கா, நான் "தமிழ் மனத்துக்கு" புதுசு. எங்க போய் நட்சத்திரப் பதிவுகளைப் படிக்கணும்?

said...

கார்த்திக்,

மொதல்லே தமிழ்மணம் முகப்புப் பக்கத்தைத் திறந்துக்கணும்.
அதுலே மேலெயே இப்படி இருக்கும். அழுத்தமான க்ரீம்கலர் பட்டை.

முகப்பு இந்த நிமிடம்... நட்சத்திரப் பதிவு வாசகர் பரிந்துரை உதவி இடுகைகள் பதிவுகள் மன்றம் உதவி/தகவல்
அதுலே நட்சத்திரப்பதிவு இடத்தை க்ளிக் செஞ்சாத்தெரியும் ஒரு மாயாலோகம். முழுப்பட்டியலையும் கூடப்
பார்க்கலாம்.

கவனமாப் பார்த்தீங்கன்னா நான்கூட இருப்பேன்( கவனமாப் பாருங்க. சும்மா ஒரு விளம்பரம்தான்!ஹிஹிஹிஹி)

அப்படியே படிச்சுட்டுப் பின்னூட்டம் போடவேண்டியதுதான்.

எல்லாம், நீங்க நட்சத்திரமா ஆகறப்பக் கஷ்டப்பக்கூடாதுல்லே, அதுக்குக் கொடுக்கற டிரெயினிங்தான். சரியா?

said...

சிவா சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும்

said...

அருமையாக எல்லா நட்சத்திர வார பதிவுகளையும் ரத்தினச் சுருக்கம் என்பார்களே அதுபோல விமர்சித்தது அருமை.

said...

அது சரி நியூசிலாந்து பகுதி எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்..??

said...

வருகைக்கு நன்றி பச்சோந்தி.


உதயகுமார்,

நியூஸி சரித்திரத்தைச் ச்சீக்கிரமாத் தொடரணும். அதுக்கு நிறையப் படிக்கவேண்டியிருக்கு. எடுத்தேன் கவிழ்த்தேன்னு
சரித்திரத்தை எழுதக்கூடாதுல்லே?

ஊர்போய்வந்ததைச் சுருக்கமா நாலு பதிவு (!) போட்டுட்டு வகுப்புக்கு ஓடணும்.

said...

//ஊர்போய்வந்ததைச் சுருக்கமா நாலு பதிவு (!) போட்டுட்டு வகுப்புக்கு ஓடணும்.//

இதனை ஆவலுடன் எதிர் நோக்கும்
உங்கள் அன்புத் தம்பி
இளங்கன்று
குமரன். :-)

said...

ungaLukku kashtam vaikkak kuudaathu enRu wiinnga puRappathilirunthu varumvarai waan onRumee ezuthavillai!!! ;O)

said...

அடடா ஷ்ரேயா,

அப்ப இந்த 5 வாரமா ஆஃபீஸ்லே வேலையை மட்டும் பார்த்தீங்கன்னு சேதி வந்துச்சே அது நிஜம்தானா?:-)))

சிநேகிதி போட்ட 'ஊட்டத்தை' மாடு விரட்டியும் இதுவரை இங்கே வரலையே! ஒரு வேளை நடந்து வருதா?
சரி, பதிலைச் சொல்லிட்டாப்போகுது, 'வந்துட்டேன் கண்ணு'.

said...

ப்ளாக்கர் சந்திப்புகளை எங்கள் பார்வை கோணங்களிலிருந்து எழுதியுள்ளோம். உங்கள் தரப்பிலிருந்து எப்போது எழுதுவதாக உத்தேசம். மேலும் என் பதிவுகளை எப்போது பார்ப்பதாக உத்தேசம்?

ப்ளாக்கர் பின்னூட்டங்களை மட்டும் நீங்கள் அனுமதிப்பதால் என் டிஸ்ப்ளே பெயர் மற்றும் எண் மேட்ச் ஆகின்றனவா எனப் பார்க்கவும். என் போட்டோவும் வர வேண்டும். அப்போதுதான் உண்மையான டோண்டு பின்னூட்ட்மிட்டான் என்று பொருள்.

இப்பின்னூட்டட்ர்ஹ்தின் நகல் என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/12022006.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

அடடே!! வந்து..முதல் பதிவு.. போட்டு இத்தனை நாளாச்சு ..ம்ம் வழக்கம் போல தாமதமா..

உங்களின் சந்திப்புக்களை புகைப்படங்களை!இளவஞ்சி, தருமி இருவர் பதிவிலும் பார்த்தேன்!
அட்டகாசமா இருந்துச்சு!

இனி நீங்கள் போடப்போகும் பதிவுகளையும் ஆஆஆஆஆஆஆஆஆவலோஓஓஓஓஓஓடு எதிர் பார்த்திருக்கிறேன் துளசி :)

said...

நன்றி அக்கா...

said...

// குமரன் (Kumaran) said...
எங்கே அக்கா? + குத்து போடறதுக்கு பட்டை தெரியணுமே. உங்க பதிவுல பட்டை தெரியலையே. ஏன்?
//

முதலில் அப்படித்தான் எனக்குத் தெரியவில்லையே என்று எழுதணும். உடனே எனக்குத் தெரிகிறதே என்று சிலர் எழுதுவார்கள். பிறகு ஆமாம் ஆமாம் எனக்கும் தெரிகிறது என்று எழுதணும்.

இதெல்லாம் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வழி என்று மண்டபத்தில் ஒருவர் சொல்லிக்கொடுத்துள்ளார்.

குமரன் அடிக்க வரும் முன் உடு ஜூட்
:-))

said...

என்னங்க டோண்டு நலமா?

அதெல்லாம் 'எலிக்குட்டி'யை வச்சுப் பார்த்துடுவொம்லெ!

பதிவு இனிமேத்தாங்க எழுதணும். உங்க பதிவுகள் சிலதையும் படிச்சுக்கிட்டு இருக்கேன்.

said...

அடடே மீனா,

வணக்கம். நலமா? நீங்க ரெண்டு மாசத்துக்கு முன்னாலே போட்ட மயிலை இப்பத்தான் பார்த்தேன்.
ஊர்சுத்திக்கிட்டு இருந்தேங்க.

ரொம்ப எதிர்பார்க்காதீங்க. சொதப்பிடப்போறேனோ என்னவோ?

said...

கார்த்திக்,
# ஏத்துனதுக்கு நன்றி.

said...

லதா,

ஆமா, ஒரு கலையை வளக்க விடமாட்டீங்களாக்கும்? இருங்க இருங்க. உங்க ஊருக்கு வர்றப்பக் கண்டுக்கிடறேன்.

said...

நான் இந்த விளையாட்டுக்கு புச்சு. நம்ம ப்ளாக்கையும் பாத்து மார்க் போடுங்களேன்...

mahamosam.blogspot.com

said...

தண்ணி குடிச்சா சாவி கிடைக்குமா????????

இதென்ன புதுக்கலையா இருக்கு
கலை வளர்க்கும்கலைகளின் அரசி துளசி

வளருங்க

said...

மது,
//கலை வளர்க்கும்கலைகளின் அரசி துளசி//

நீங்கவேற. இங்கே நான் சாவியைக் காணோமுன்னு செஞ்ச கலாட்டாவைப் பார்த்து 'கொலை'விழாமப்
போனது பாக்கியம்!

said...

நம்ம டிபிஆர் ஜோசஃப் ஃபைலை நாளைக்கு எடுத்துக்கணும்:-)//

அப்ப்ப்ப்ப்பா.. என்னடா நம்மளப்பத்தி ஒன்னுமே சொல்லலையேன்னு பார்த்தேன்..

ஆனாலும் ஒரே பதிவுல நீங்க இல்லாதப்போ வந்ததையெல்லாம் கவர் பண்ணி..

நீங்க பின்னூட்ட ராணிதாங்க..

உங்களுன்னு ஒரு ரசிகர் மன்றத்த ஆரம்பிச்சற வேண்டியதுதான்..

said...

டிபிஆர் ஜோ,

ஏங்க, இன்னிக்கு நிலவரப்படி நீங்கதான் 'மெகாதொடர்(கதை) மன்னன்'! உங்களை வுட்டுர முடியுமா?
நீங்களே சொல்லுங்க.

தினத்தந்தியிலே வர்ற 'சிந்துபாத்' ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்குது. ஐய்யோ... ஏன்னு தெரியலையே?:-))))

ஆமாம், என்னவோ ரசிகர்மன்றமுன்னு காதுலே வுழுந்ததே.......

வேணாங்க அதை 'நற்பணி மன்றம்'ன்னு மாத்திக்கலாங்களா?

said...

துளசி! உலகம் சுற்றிய வாலிபி ஊர் வந்து சேர்ந்ததுக்கு வாழ்த்துக்கள். மகளிர் தினத்தன்றுதான் முதல் பதிவு போடணும்னு இருந்தீங்களா?

said...

வாங்க தாணு,

எப்படி இருக்கீங்க? மகளிர் தினத்துக்குத்தான் தமிழ்மணம் பக்கம் வரணுமுன்னு விரதங்களா?