ராத்திரிக்குக் கிளம்பணும். வந்ததுக்கு, எல்லாரையும் சந்திச்சோம், நல்லா சாப்புட்டோம், கல்யாணக் கொண்டாட்டங்களில் கலந்துக்கிட்டோம்.ஆனாலும் மிச்சம் மீதியையும் பார்க்காம விடமுடியுதா?
இன்னிக்கும் சார்ஜர் தகராறு. ஒரு மணி நேரம் சார்ஜ் ஆனாக்கூடப் போதுமாம். முருகனிடம் ஒரு சின்ன பேரம் பேசினேன். ஒன்னேகால் டாலர். குறிப்பிட்டக் கோணத்தில் சார்ஜ் ஆக ஆரம்பிச்சது. அலுங்காமக் குலுங்காமத் தரையில் வச்சேன். ஹைய்யா......
எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டுக் கிளம்பணும். புதுமாப்பிள்ளையும் பொண்ணும் நியூஸிக்குத்தான் தேன் நிலவுக்கு வர்றாங்க. தொலைபேசச் சொன்னேன். ஒன்பது மணியில் இருந்தே வண்டிகள் விமானநிலையம் போறதும் வாறதுமா இருக்கு. பக்கத்துத் தீவில் இன்னொரு கல்யாண நிச்சயதார்த்தம். நாப்பதுபேர் நிச்சயத்துக்குப் போறாங்க. சின்ன விமானம். 10 பேர்தான் போக முடியும். அதனாலே கிடைச்ச ப்ளைட்டைப் பிடிச்சுப் போகவேணும். கடைசி பேட்ச் மறுநாள் 4 மணிக்குக் கிளம்புது. நல்லவேளை 1 மணி நேர ப்ளைட் தான்.
அந்த மாப்பிள்ளைப் பையன் இங்கே ஆக்லாந்துதான். இங்கே இந்தக் கல்யாணத்துக்கு வந்துருக்கார். அர்விந்த் பையாவோட அண்ணன் பேரன். நிச்சயம் நாளை மாலை. கல்யாணம் நவம்பரில் இங்கே நியூஸியில். பெண்கள் கூட்டம் அப்படியே இங்கிருந்து அங்கே இடம் பெயரல். நிச்சயத்துக்கும் சமைக்கணுமே.......ப்பா....பாவமா இருக்கு.
மகளும் நண்பரும் 11 மணிக்கு ரூமைக் காலி செஞ்சுட்டு ஏர்ப்போர்ட் வந்துருவாங்க. பிக்கப் & ட்ராப்க்கு ஏற்பாடு ஏற்கெனவே இருக்கே. இதனால் ஒரு 45 நிமிசம் எங்களுக்கு மிச்சம். நாங்களும் போற வழியில் லௌடோகா போய், நமக்குத் தெரிஞ்சவங்களை பத்து நிமிசம் பார்த்துட்டுப் போகணும். இந்தக் குடும்பம்தான் முருகன் சிலைக்கு அந்தக் காலத்தில் தென்காசியில் ஏற்பாடு செஞ்சவுங்க.
'மூக்குச்சண்டை மீனா'ன்னு மகள் குழந்தையா இருக்கும்போது சொல்லிக்கிட்டு இருப்பாள். மசால்வடை பிரமாதமா இருக்கும். கடையின் பெயர் 'ஹாட் ஸ்நாக்ஸ்'. நாங்க அங்கே இருந்தப்ப ஆரம்பிச்ச கடை. இன்னும் நல்லாவே நடக்குது. ஓனர் மூணு வருசம் முன்பு இறந்துட்டார். ரெண்டு வடை வாங்கிச் சூடாத் தின்னுட்டு ரெண்டு வடை பொண்ணுக்குப் பார்ஸல் வாங்கிக்கிட்டேன். கடையில் இருந்த ஓனரின் பெண் எங்களைப் பார்த்துக்கிட்டே யோசனையா இருந்தாங்க.
அம்மா எப்படி இருக்காங்கன்னு கேட்டதும்....."வேர் ஈஸ் த லிட்டில் கேர்ள்.? கோபால் அங்கிள்தானே?" ஞாபகம் வந்துருச்சு:-)))) மாடியில் அம்மாவைப் போய்ப் பார்த்தோம். மதுரைக்காரவுக. எல்லாருக்கும் வயசாகிப்போச்சு. ஆச்சே 20 வருசம்.
வர்ற வழியில் ஒரு பலகை போட்டு அதுமேலே நாலைஞ்சு கிண்ணம் நிறைச்சு என்னவோ வித்துக்கிட்டு இருக்காங்க ஒரு ஃபிஜியன் அம்மா. நண்டும் சிண்டுமா மூணு குழந்தைகள் வேற. இலந்தைப் பழம். ஒரு டாலராம். வாங்கிக்கிட்டேன். நம்ம பசங்க சாப்புட்டுப் பார்க்கட்டுமே. ரெண்டு டாலர் கொடுத்தா மீதி ஒரு டாலர் சில்லரை அந்தம்மாட்டே இல்லை. ஒரு டாலர்கூட கையில் இல்லாம என்னத்தை வித்து, பிள்ளைங்களை வளர்த்து.......பரவாயில்லே. பாக்கி தரவேணாமுன்னு சொன்னாலும் பதறிப்போகுது அவுங்களுக்கு. வேணாம் வேணாமுன்னுத் தலையைத் தலையை ஆட்டுறாங்க.... ஏழ்மையிலும் நேர்மை.
அப்பப்பார்த்து அந்தப் பக்கம் இன்னுமொரு ஃபிஜியன் பெண் கையில் ரெண்டு துண்டு, மூணடி நீளக் கரும்பைவச்சுக்கிட்டு, வேடிக்கைப் பார்த்துக்கிட்டே எங்களைக் கடந்து போகுது. கரும்பு விலைக்குத் தர்றயான்னு கேட்டேன். சட்னு ரெண்டையும் என்கிட்டே நீட்டுது. காசு வேணாமாம். தின்னுக்கோங்குது. ஒரு துண்டு போதும். இங்கிருந்து ஒரு டாலர் வாங்கிக்கோன்னு சொன்னால்....காசு வேணவே வேணாங்குது அந்தம்மா. 'அப்படீன்னா எனக்குக் கரும்பு வேணாமு'ன்னு நான் ஆரம்பிச்சதும் சமாதானமாயிருச்சு. நம்மூர் கிராமங்களில் பிரியத்தோடு இப்படிச் சட்னு எடுத்துக்கொடுக்கும் எத்தனைபேரை சின்னவயசுக் காலங்களில் சந்திச்சுருக்கேன். அதெல்லாம் ஒரு கணம் மனசில் வந்து போச்சு. வெள்ளந்தியா இருக்கும் கிராம மக்கள். மகளின் நண்பர் அதிர்ஷ்டசாலிதான். ருசி பார்க்க நினைச்சது கிடைச்சுருச்சு பாருங்க.
அடிச்சுப்பிடிச்சு வந்து, ஏர்ப்போர்ட்டில் காத்துருந்தவங்களையும் ஏத்திக்கிட்டு டெனாராத் தீவுக்கு வழிகாட்டிப் பலகை காமிக்கும் வழியில் போனா..... இதுக்கு முந்தி இங்கேயெல்லாம் வந்துருக்கோமோன்னு நினைவு. ஆமாவாம். இந்தப் பக்கமெல்லாம் பிக்னிக் வந்துருக்கோம். இந்த இடம் நினைவு இருக்கா? பஸிபிக் கடலில் குழந்தையின் காட்டன் நாப்கின்னை அலசின ஆள் நானாகத்தான் இருப்பேன்.. இந்த இடம் தாண்டுனதும் சதுப்புநிலக் காடுகள் போல் ஒரு mangroves உள்ள இடமும் அதுக்கு அந்தப் பக்கம் ஸ்வாம்ப் போல இருந்த தீவையும் தான் இப்ப மாற்றி அமைச்சு இருக்காங்க. போர்ட் டெனாரா. வெளிநாட்டு பெரிய ஹோட்டேல் செயின்கள் ஏழெட்டுச் சேர்ந்து தீவுக்குப் பாலம் கட்டி வெள்ளை மணலைக் குவிச்சு டெவெலப் பண்ணி இருக்கு.
துறைமுக வசதிகள் (உல்லாசப் படகுகளுக்கு மட்டும்) ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், 18 ஹோல்ஸ் கோல்ஃப் மைதானம், பத்து டென்னிஸ் கோர்ட், சர்வீஸ்டு அப்பார்ட்மெண்ட்ஸ் இப்படி வெளிநாட்டு லெவலுக்கு வந்துருக்கு. கல்யாணம் பண்ணிக்கன்னே ஒரு வெட்டிங் சாப்பல் wedding chapel. உள்நாட்டுப் பங்குகளும் வேணுமுன்னு ஆரம்பிச்ச புதுசுலே இன்வெஸ்ட்மெண்ட் பண்ணுங்கன்னு கூவிக்கூவி வித்துருக்காங்க. நாடு இருந்த 'நிலையாமை'யான நிலையில் யாரும் அவ்வளவா முன்வரலை. வெறும் பதினைஞ்சு ஆயிரத்துக்கு இன்வெஸ்ட்மெண்ட் ப்ளாட்ஸ் கிடைச்சதாம். அதுலே பணத்தை முடக்குனா, வருசத்துக்கு ஒரு வாரம் இலவசமாத் தங்கிக்கலாம். இப்ப அதே இடங்கள் முக்கால் மில்லியனுக்கு விலை போகுது. மால்தாரியா இருந்தா அங்கே ஒன்னு வாங்கிப்போட்டுக்கிட்டு அக்கடான்னு இருக்கலாம். தனிவீடுகளும் இருக்கு. எல்லாவீட்டுக்கும் பின்னால் செயற்கை ஆறு. படகு நிறுத்தி வச்சுக்கவாம். முன்னால் போனாக் காரு, பின்னாலே போனால் படகு. மஜாதான்:-)
ஷாப்பிங் ஏரியாவில் ஜனங்களுக்கு வரவேற்புமாதிரி மூணுபேர் உக்காந்து பாடிக்கிட்டும், கிதார் வாசிச்சுக்கிட்டும் இருந்தாங்க.
பகல் சாப்பாட்டுக்குத் தேடுனதுலே ஒரு பிட்ஸா கடை கிடைச்சது. நா(ண்)டி ஸ்பெஷல் வெஜி. பிட்ஸா. பிரமாண்டமான ஸைஸுலே வந்துச்சு. ஆனால் தேசலா இருந்தது.
சூப்பர் மார்கெட்டுலே நுழைஞ்சேன். தீ பிடிக்கும் விலை.
நியூஸிக் காய்கறிகளை ஒரு பார்வை பார்த்துக்கிட்டேன். ஹாலிடே மூடில் இருந்து ஆர்டுனரி மூடுக்கு வரணும் இல்லையா? மறுநாளிலிருந்து சமைக்கணுமே. ஜில்லுன்னு ஒரு (குடி)தண்ணீர் மட்டும் வாங்கினேன்.
ப்ளூக் கலரில் இருக்கும் பூலா Bula பஸ்களில் ஏறிச் சுத்துங்க. முற்றிலும் இலவசமுன்னு படிச்சுப் படிச்சுச் சொல்லி அனுப்புனாங்க அர்விந்த் பையா மனைவி. புல் குடிசை மாதிரி மேற்கூரை கட்டுன ஷட்டில் பஸ்கள். தீவைச் சுத்திச் சுத்தி இருக்கும் எல்லா ஹோட்டல்களுக்கும் போய் வருது. மக்கள் எங்கே வேணுமுன்னாலும் ஏறி எங்கே வேணுமுன்னாலும் இறங்கிக்கலாம். பொதுவாவே எல்லாக் கட்டிடங்களிலும் புல்கூரைகளை ஒரு அலங்காரமாப் போட்டு வச்சுருக்காங்க. தீவுகளில் இருக்கும் ஏழைக் குடிசைகளாம்:-)
பழையகாலத்து அக்கிரஹாரத்து வீடுகளில் முன்வாசலில் நின்னு பார்த்தா........கொல்லைப்புறத் தோட்டம் தெரியுமே அதைப்போல ஹோட்டல் லாபியில் இருந்து நேராப் பின்னாலே கடல் தெரியுது. ஒவ்வொன்னும் ஒவ்வொரு அழகு, ஒவ்வொரு டிசைனு. கடற்கரை மணல் ஓரமாவே போனோமுன்னா எல்லா வீட்டுக் கொல்லைப்புறங்களையும் பார்த்துக்கிட்டே நடக்கலாம். விதவிதமான டிஸைன்களில் நீச்சல்குளங்கள். அநேகமா எல்லா ஹோட்டல்களிலும் வெள்ளைக்காரச் சுற்றுலாப் பயணிகள் நிறைஞ்சு வழியுறாங்க. நாங்க போன சீஸனும் மிட் விண்டர் காலமாச்சே. ஒரு வேளை இதனாலும் இருக்கலாம். விண்டர் எஸ்கேப்பு:-) விருந்தினர்களுக்குப் பொழுது போகணுமேன்னு கடலையொட்டிய விளையாட்டுகள். வாசலில் நின்னு இன்முகத்தோடு அனைவரையும் வரவேற்கும் பணியாளர்கள். நாள் முழுசும் சுற்றுலான்னு உள்ளூர் வெளியூர் மக்கள் கூட்டம்.
Adrenalin Watersports. மனுஷனுக்கு பயத்துலே கத்தணுமாம். குடல்வந்து வாய்க்குள்ளே விழுந்தாப்போல அலறணுமாம். FLYING FISHன்னு ஒன்னு. கையில் பிடிச்சுக்க வாகாய் ஒன்னுமே இல்லாத ரப்பர்/ ப்ளாஸ்டிக் மிதவை. அதுலே உக்கார்ந்துக்கிட்டுக் காலை மட்டும் கீழே இருக்கும் பட்டையில் நுழைச்சுக்கணும். இதை ஒரு விசைப்படகு வேகமா இழுத்துக்கிட்டுப் போகும். அந்த வேகத்துக்கு இது துள்ளித் துடிச்சு, மேலேயும் கீழேயுமாப் பறந்து விழுந்துன்னு......அதுலே இருக்கும் மக்கள் கத்திக் கதறி..... இதுக்கு 29 டாலர் டிக்கெட்:-)))))
நான் மட்டும் இந்த விளையாட்டை நிர்வகிக்கும் ஆளா இருந்தா...... அவுங்களுக்கு லைஃப் ஜாக்கெட் போடும்போதே....வாய்க்கும் ஒரு ப்ளாஸ்டர் போட்டு இருப்பேன். இப்பக் கத்துங்க பார்க்கலாமுன்னு.....:-))))
அழகாச் சின்னதா ஒரு சர்ச். பூஜை தினமும் நடக்குதான்னு தெரியாது. ஆனா கல்யாணத்துக்குன்னே கட்டி விட்டுருக்கு. ஹாலிடேயில் வந்தமா, கல்யாணம் செஞ்சுக்கிட்டு அப்படியே ஹனிமூனையும் முடிச்சுக்கிட்டுப் போகலாமான்னு நல்ல வசதி. ஒரு கோர்ட்டும் இருந்துட்டா வாழ்க்கை இன்னும் நிம்மதியா இருக்கும்.
வெய்யில் காயறோமுன்னு பலர் இருந்தாலும் ஒரு சிலர் இது பொதுஜனங்களுக்கும் ஆக்ஸெஸ் இருக்கும் பீச் என்பதை மறந்து போயிட்டாங்க. குழந்தைகளும் சின்னப்பசங்களும் திடுக்கிட்டுப்போன மாதிரி இருந்துச்சு. இது எதையும் கண்டுக்காம பாரில், ரெஸ்டாரண்டில் வேலை செய்றவங்க கருமமே கண்ணாயினாருன்னு கொண்டுவந்து தேடித்தேடி விளம்பிக்கிட்டு இருந்தாங்க.
ஃபிஜியன்கள்தான் எல்லா வேலைகளிலும் இருக்காங்க. ஒரு பேபி சிட்டர் கூட பிள்ளைங்களைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. ஓய்வறைகள் எல்லாம் பளிச்.
நாலுமணிக்குக் கிளம்பி நாண்டி டவுன் வந்து கோயிலுக்குப் போனோம். இந்த முறை மகளும் உள்ளே வர முடிஞ்சது. சாமிக்குச் சொன்னதைச் செஞ்சுட்டு,
அங்கே கோயிலில் கத்தியைக் கேட்டு வாங்கினேன். கரும்பை வெட்டிப் பசங்களுக்குத் தந்தோம். முதல் முறையாகக் கரும்பைச் சுவைச்ச நண்பர், 'டேஸ்ட் லைக் ஷுகர்' ன்னு கரெக்ட்டாக் கண்டுபிடிச்சுச் சொன்னார்:-))))
கோயில் சுவரில் இருந்த சித்திரங்களைக் காமிச்சு மகள், 'இதை நம்ம பூனை வரைஞ்சுருக்கு'ன்னதும் பார்த்தால்...... ...ஆமாம். 'கோபாலகிருஷ்ணன், மைலாப்பூர் 'ன்னு போட்டுருக்கு. மண்டபத்தின் விதானங்களில் சித்திர வேலை அழகு.
பழைய பூசாரியை(உள்ளூர்க்காரர்)ப் பார்த்தோம். பழைய நினைவுகளின் பகிர்தல்கள். பழைய கோவிலில் இருந்து மூலவரை இடம் பெயர்க்க எடுத்தபோது அப்படியே தூள் தூளா உடைஞ்சுருச்சாம். ஏற்கெனவே கால் உடைஞ்சு வந்தவராச்சே.... இத்தனை வருசம் தாக்குப்பிடிச்சதே கூடுதலோ?
சாமி சிலை உடைஞ்சப்ப இவர் அப்படி அழுதாருன்னு தோழி சொல்லி இருந்தாங்க. அதைப் பற்றிக்கேட்டேன். அங்கே இருந்த அருள்சக்தியை அப்படியே இங்கே கொண்டுவந்து ஆவாஹனம் செஞ்சாங்களாம்.?????????
ஏதோ ஒரு நம்பிக்கை. மனுசனை வாழவைக்க இதுவும் தேவைதானே?உடைஞ்ச சிலை? கடலில் கொண்டுபோய்ச் சேர்த்தாங்களாம்.
அஞ்சேமுக்காலுக்கு வண்டியைத் திருப்பிக் கொடுப்பதாப் பேச்சு. அவுங்க சொன்ன இடத்தைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு, பார்க்கிங்லாட்டைச் சுத்திச்சுத்தி வந்துக்கிட்டு இருக்கோம். ஆஃபீஸ் முன்னாலேன்னு சொன்னா ஆபீஸ் முன்னாலே இருக்கும் பார்க்கிங் தளத்தைக் காசு கொடுத்துச் சுத்திப்பார்த்தப் பெருமை முற்றிலும் எங்களுக்கே:-))))
லவுஞ்சில்போய் காஃபி, ஸ்நாக்ஸ் எல்லாம் முடிச்சுக்கிட்டு, ட்யூட்டிஃப்ரீ வேடிக்கைப் பார்த்தோம். ஒரு வீடியோ கெமெரா ரொம்பக் க்யூட்டா அட்டகாசமா இருக்கு. புத்தரின் போதனையை நினைவில் கொண்டுவந்தேன். தோழிகளுக்குக் கொடுக்க சில மரச்சாமான்கள் வாங்குனதோடு சரி.
இங்கே வந்து இறங்கும்போது நள்ளிரவு பனிரெண்டரை மணி. சம்பிரதாயங்கள் முடிச்சு டாக்ஸி பிடிக்க வெளியே வந்தால்........ ஆயிரம் ஊசி நறுக். குளிரான குளிர். வீட்டுக்குவந்து படுக்கையில் விழும்போது ரெண்டு மணி. காலையில் ஒன்பதுக்கு கோபாலகிருஷ்ணனைக் கூப்பிட்டுவரணும்...........
ஏழுமணிக்கு ஏதோ உருட்டும் சப்தம். அரைக்கண்ணில் பார்த்தால் நம்ம கோபால் நடுக்கத்தோட நிக்கறார்!!!!!
தொடரும்.............:-)
Tuesday, August 19, 2008
டெனாரா டெனாரா.... மீரு பாக உன்னாரா? (ஃபிஜிப் பயணம் பகுதி 8)
Posted by துளசி கோபால் at 8/19/2008 03:31:00 PM
Labels: Fiji Islands, Port Denarau, அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
Fiji வரவேண்டும் போல இருக்கிறது.
வாங்க குடுகுடுப்பை.
'நல்ல காலம் வருது'
'நல்ல காலம் வருது'
'நல்ல காலம் வருது'
'நல்ல காலம் வருது'
'நல்ல காலம் வருது'
ஜக்கம்மா நம்ம குடுகுடுப்பைக்கு
'நல்ல காலம் வருது'
அருமை டீச்சர்...உங்க கூடவே வந்து சுத்திப் பார்த்த மாதிரியே உணர்றேன்.
அந்த இலந்தைப் பழம் படத்தையும் போட்டிருக்கலாம். நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை. :(
பீச் போட்டோ எங்க? :))
வாங்க ரிஷான்.
சிலசமயம் கையில் கெமெரா இருந்தும் படம் எடுக்கத் தவறியப் பல தருணங்களில் இதுவும் ஒன்னு(-:
வாங்க கொத்ஸ்.
ஆஹா..... கோபாலுக்குக் கண்பட்டை கொண்டுபோகலையேன்னு எனக்கு இருந்துச்சு.
சரி. போகட்டும் உங்களுக்காக ஒரு படம் (அதான் பீச்)இணைச்சிருக்கேன் கூடுதலாக.
பதிவின் முதலில் வருது:-)
எஞ்சாய்:-)))))
அடுத்த வெக்கேஷன் ஃபிஜி தான், சும்மா இருந்த எங்களை ஆசை காட்டி விட்டுட்டீங்க :)
அருமையான புகைப்படங்கள்
நாங்களும் பிஜி தீவை நல்லா சுத்தி பார்த்தாச்சு... :)
///எம்.ரிஷான் ஷெரீப் said...
அருமை டீச்சர்...உங்க கூடவே வந்து சுத்திப் பார்த்த மாதிரியே உணர்றேன்.
அந்த இலந்தைப் பழம் படத்தையும் போட்டிருக்கலாம். நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை. :(///
என்ன ரிஷான் இலந்தை பார்த்ததில்லையா? ....... :(
//என்ன ரிஷான் இலந்தை பார்த்ததில்லையா? ....... :( //
இல்லை தமிழ் பிரியன். எங்கள் ஊரில் இல்லை. புகைப்படம் இருந்தால் அனுப்பிவையுங்களேன்.
rishanshareef@gmail.com
சூப்பர், கோபால் குளிருக்கு இதமா ஒரு காப்பி கிடைக்குமா?னு உங்களை பாத்ருபாரு, சரி, வழக்கம் போல நாமே கலந்துக்குவோம்னு கிச்சனுகுள்ள வந்ருப்பாரு. கரக்ட்டா? :))
@கொத்ஸ், எனக்கு தனி மெயிலில் வந்ததே, உங்களுக்கு வரலையா? :p
வாங்க க.ஜூ.
பிஜிவரை வரும்போது இங்கேயும் ஒரு எட்டு, எட்டிப் பார்த்துட்டுப்போங்க.
வாங்க தமிழ் பிரியன்.
கூடவே வந்ததுக்கு நன்றி.
வாங்க அம்பி.
காஃபி கேட்டுருந்தாத்தான் பிரச்சனை இல்லையே......
சின்னச்சின்ன விசயங்கள் ..சுவாரசியங்கள்ள பெரிசு..
எனக்கு ரொம்ப பிடிச்ச வரி புத்தரின் போதனை.. :)
வாங்க கயலு.
சின்னச்சின்ன சுவாரசியங்கள்தான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டுப் போகுது:-))))
<==
ambi said...
சூப்பர், கோபால் குளிருக்கு இதமா ஒரு காப்பி கிடைக்குமா?னு உங்களை பாத்ருபாரு, சரி, வழக்கம் போல நாமே கலந்துக்குவோம்னு கிச்சனுகுள்ள வந்ருப்பாரு. கரக்ட்டா? :))
==>
அதானே.
அருமை டீச்சர்..
Fantastic round-up of Fiji.
////என்ன ரிஷான் இலந்தை பார்த்ததில்லையா? ....... :( //
இல்லை தமிழ் பிரியன். எங்கள் ஊரில் இல்லை. புகைப்படம் இருந்தால் அனுப்பிவையுங்களேன்.//
http://farm1.static.flickr.com/169/433676849_d73c5dec41.jpg
கோயில் சுவரில் இருந்த சித்திரங்களைக் காமிச்சு மகள், 'இதை நம்ம பூனை வரைஞ்சுருக்கு'ன்னதும் பார்த்தால்...... ...ஆமாம். 'கோபாலகிருஷ்ணன், மைலாப்பூர் 'ன்னு போட்டுருக்கு. மண்டபத்தின் விதானங்களில் சித்திர வேலை அழகு.
ஆமாம்,நாந்தான் அந்தச் சித்திரத்தை உங்க பேருக்கு அனுப்பினேன்.:)
ஏம்பா ஃபிஜிலியும் லாண்ட் வாங்கிப் போட்டா என்ன/. நல்ல ஐடியாவா இருக்கே.
வாவ்..
அழகான சிவப்புக் காய்கள்.
புகைப்படத்திற்கு நன்றி இந்தியன் :)
வாங்க சாமான்யன் சிவா.
ரொம்பத் தாமதமாப் பதில் தருகிறேன். மன்னிக்கணும்.
எதுக்கு நடுங்குனாருன்னு எழுதணும்.
செஞ்சுறலாம்:-)
வாங்க இந்தியன்.
இலந்தை அனுப்புனதுக்கு நன்றி. ஆனா இதுலேயும் ரெண்டு வகை இருக்கே.
நாட்டுக்காய், சீமைக்காய்ன்னு:-)
வாங்க வல்லி.
சித்திரம் நீங்களா அனுப்பினீங்க.... இருக்கும் இருக்கும். அதான் சித்திர ராமாயணம் சொன்ன அனுபவம்:-))))
ஃபிஜியிலே நிலம் வாங்கும் அளவு ஐவேஜ் இல்லையேப்பா. ச்சீச்சீ.... அந்த பழம்/நிலம் புளிக்கும்:-)))
ரிஷான்.
சீமை இலந்தைன்னு ஒன்னு இருக்கு. சாதாரண இலந்தையைவிட சைஸு பெருசா இருக்கும். வட்ட உருண்டையா இல்லாமக் கொஞ்சம் நீள உருண்டையா
இருக்கும்.
உங்க தலைப்பில் "தெலுங்கு மணம்" அடிக்குதுங்க, திருமதி.கோபால்! :-)
வாங்க வருண்காரு.
தெலுகு கூட ஒரு திராவிட மொழிதானேங்க? அதான் அப்படியே வந்துருது:-))))
பாகலேதா? அர்த்தமாயிந்தா?
***துளசி கோபால் said...
வாங்க வருண்காரு.
தெலுகு கூட ஒரு திராவிட மொழிதானேங்க? அதான் அப்படியே வந்துருது:-))))
* பாகலேதா?
#அர்த்தமாயிந்தா? ***
ஆமாங்க, திராவிட மொழிதான். அதனால்தான் "மணக்கிறது" என்றேன்!
* சால பாகுந்தி!
# அர்த்தமாயிந்தி!
பி கு: உங்களுக்காக கஷ்டப்பட்டு தெலுகு கற்று வந்து பதில் சொல்றேன். ஏதாவது தவறு இருந்தால் திருத்திவிடுங்கள் தயவுசெய்து! :)
வருண் காரு,
இந்தத் தெலுங்கு மொழி ரொம்ப ரிச்சானதுப்பா. எல்லாருக்கும் உடனே கா(ர்)ரு கொடுத்துருவாங்க.
பாஸ் மார்க்கைவிடக் கூடுதலாவே வாங்கிட்டீங்க.
பலே பலே
Post a Comment