Saturday, September 24, 2005

வருஷம் ஒண்ணு!

இன்னையோட இந்த வலை பதியற தொழிலுக்கு(!) நான் வந்து ஒரு வயசாகுது. எப்பப் பார்த்தாலும் கணி முன்னாலேஉக்காந்துக்கிட்டு 'டொக்கு டொக்கு'ன்னு என்னத்தைத் தட்டிக்கிட்டு இருக்கா அம்மான்னு என் ரெண்டு பூனைங்களும் ஒரு லுக் விட்டுட்டுப் போறது இப்ப ரொம்ப சகஜமாப் போயிருச்சு.


இந்த ஒரு வருசத்துலே அரட்டை அடிச்சது போக உருப்படியா என்ன செஞ்சேன்னு பார்த்தா.....


பார்த்தா? ஒண்ணுமேயில்லைன்னுதான் சொல்லணும். 'ஸ்டாப் ஸ்டாப்' ஒரேடியா அடக்கி வாசிக்கறது வேணாம்.


போட்ட பதிவுகளிலே என் மனசுக்குப் பிடிச்சதுன்னு சொன்னா, ஃபிஜித் தீவுகளைப் பத்தி வந்த 21 பதிவுங்க,என்னுடைய செல்வங்களைப் பத்திவந்த 18 பதிவுங்க ( இதை நான் ஆரம்பிச்சது மரத்தடியிலே இருந்துதான்,அப்புறம் இங்கேயும் அங்கேயுமா பதிஞ்சுவச்சேன்) புத்தகமும் பழக்கமும் என்ற தலைப்புலே வந்த 5 பதிவுங்க,சிங்கைப் பயணக்கட்டுரையா வந்த ஒரு 10 பதிவுகன்னு சொல்லலாம். இதுலே ரொம்பப்பிடிச்சுப் போனதுஇந்த சிங்கைப் பயணம். காரணம் என்னன்னா, இந்த வலை உலகத்துலே எழுத்துமூலமே பரிச்சயப்பட்டிருந்தவுங்க சிலரை, நேருக்குநேராப் பார்த்தது!

முதல்முறையா சந்திச்சாலும், ரொம்ப நாள் பழக்கத்துலே இருக்குற நண்பர்களைச் சந்திச்ச ஒரு உணர்வு. கிட்டத்தட்ட, நம்மகூட வேலை செய்யறவங்களை தினம்தினம் பார்ப்பமே அது போல! ஏதோ விட்டகுறை தொட்டகுறையாஇருந்தது. பொதுவா எழுத்தாளன்/ளிக்கு அவுங்களோட இயல்பான முகம் ஒண்ணு, எழுத்தாலே அறியப்படுற முகம்ஒண்ணுன்னு இருக்கறதா, பரவலான அபிப்பிராயம் இருந்தாலும், அப்படி வேறுபடுத்திப் பார்க்க முடியாம, எழுத்தே தானாய்,தானே எழுத்தாவும் இருக்குற சிலரையும் தெரிஞ்சுக்கிட்டதுலே சந்தோஷம்தான்.என்னையும் ஒரு எழுத்துக்காரியா(!) மொதமொதல்லே ஏத்துக்கிட்டது மரத்தடிதான். அங்கே ஒரு ஆறுமாசம்,கூட்டுக்குடித்தனமா குடியிருந்துட்டு அப்புறம் தனிக்குடித்தனம் செய்ய ப்ளொக்கருக்கு வந்து, அப்படியே 'தமிழ்மணம்' ன்ற'அப்பார்ட்மெண்ட்'க்கும் வந்துட்டேன். செளகரியமாத்தான் இருக்கு.


நண்பர் காசி இந்த 'பில்டிங்'கை அருமையாக் கட்டி இலவசமா தமிழ்வலைஞர்களுக்கு கொடுத்திருக்கார். அவர்கூடசேர்ந்து சில நண்பர்கள் எதாவது மராமத்து, ரிப்பேர் வேலை,( தண்ணி வரலை, பவர் போயிருச்சு, லிஃப்ட் ரிப்பேர் இப்படிஎதாவது)எல்லாம் கவனமாப் பார்த்து செஞ்சுதராங்க. மதிதான் இந்தக் கட்டிடத்துக்கு 'இன்டீரியர் டெகரேட்டர்'. அபார்ட்மெண்ட்லே இருக்கறவங்களுக்கு என்ன மாதிரி தேவைங்க இருக்குன்னு பார்த்துச் செஞ்சுதராங்க.இந்த பில்டிங்குலே நிறைய இளவயது ஆட்கள் குடியிருக்காங்க. அவுங்கெல்லாம் தங்களுக்குத் தேவையான அல்ங்காரத்தைத் தானே செஞ்சுக்கற திறமை இருக்கறவங்க. என்னைமாதிரி கொஞ்சம் பழையகாலத்து ஆளுங்க இருக்காங்க பாருங்க அவுங்களுக்கு எல்லா உதவியும், (அலங்காரத்தைப் பொறுத்தவரைங்க)செஞ்சு குடுத்தது இவுங்கதானாம். ஒருத்தர்க்கு ஒருத்தர் எப்பவாவது இமெயிலிலே சந்திக்கறப்பப் பேசித் தெரிஞ்சுக்கிட்டது. காசிக்கும், மதிக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை.( பதிவாவே போட்டு அவுங்களைஅறுக்கவேண்டியதுதானா?:-))

இன்னும் நான் நேரிலே சந்திக்க இஷ்டப்படுற ஆக்கள் இங்கே நிறைய இருக்காங்க. வேளைதான் வரலை. ஆனாநட்பு வட்டம் பெருசாகிகிட்டே போகுது. இப்போ உலகத்துலே எந்த இடத்தைச் சொன்னாலும் அங்கே எனக்குத் தெரிஞ்சவுங்க(!) இருக்கறதா கோபால் கிட்டே பெருமையாச் சொல்லிக்கறேன். இதுலே சில 'பெருந்தலை'களும்உண்டு.


ஒரு பத்து நிமிஷம் கிடைச்சாலும் போதும், ஓடிவந்து யார் என்ன எழுதியிருக்காங்கன்னு பார்க்கற வழக்கம் வந்துருக்கு.முந்தி இப்படித்தான் டிவி.யே கதின்னு இருந்தேன். ஒருவழியா அந்த அடிக்ஷன்லே இருந்து வெளியே தப்பி வந்துட்டேன்னுஇருந்தப்ப, இப்படி இந்த அடிக்ஷன் வந்துருச்சு. ஆனா இதுலே இருந்து தப்பிக்கணுமுன்னு நினைக்கலை. இது 'நேரம்விழுங்கி'ன்னாலும் மனசுக்கு சந்தோஷமாத்தான் இருக்கு. அதுலேயும் ஒரு பதிவைப் போட்டுட்டு, அதைப் படிச்சவுங்கஎதாவது பின்னூட்டம் கொடுத்துருக்காங்களான்னு ஓடிப் போய் பாக்கறப்ப, எதாவது இருந்தா அதுத் தனி மகிழ்ச்சி.


எல்லாரும் அக்கா அக்கான்னு கூப்புட்டு எழுதறப்ப ஏதோ ரத்தபந்தம் இருக்கற சொந்தங்களோட இருக்கற உணர்வுவந்துருது. இந்தச் சின்னவயசுக்காரங்ககூட நானும் சேர்ந்துக்கிட்டு சிலசமயம் படம் காட்டுறதும், கலாய்க்கறதுமாகூத்தடிச்சுக்கிட்டு இருக்கேன். எங்கியோ ஒரு கோடியிலே வசிக்கிறோமேன்னு இருந்த தனிமையுணர்வு கூடபோயேபோச்!


நான் இன்னும் கத்துக்கவேண்டியது நிறைய இருக்கு. மொதல்லே தமிழை ஒழுங்கா எழுதக் கத்துக்கணும். அப்புறம்உங்க 'ஹரியண்ணா' சொன்னதுபோல( எனக்குத்தான்) !!!!!!! இதை கொஞ்சமா, (குழம்புலே பெருங்காயம் சேர்க்கறமாதிரியா?)உபயோகிக்கணும். ஏகப்பட்ட !!!!!!! அள்ளித் தெளிச்சுடறேன்னும், அது அங்கங்கே 'ஸ்பீட் ப்ரேக்கரா' இருக்குன்னும்சொன்னார். கவனமாத்தான் இருக்கேன். ஆனாலும்.............!


எழுத ஆரம்பிச்சுட்டு, அப்படியே ஓரங்கட்டி வச்சிருக்கறதையெல்லாம் எடுத்து தூசிதட்டி,திரும்ப ஆரம்பிக்கணும்.ரெண்டு ரெண்டரை வருசத்துக்கு முன்னே நான் எழுதி, நானே படிச்சிட்டு 'கப்சுப்'ன்னு இருந்ததையெல்லாம் திரும்ப எடுத்து உங்களைச்சோதிக்கலாமான்னும் ஒரு நினைப்பு அப்பப்ப வருது. பார்க்கலாம், மனசுலே தைரியம் வருதான்னு?


இன்னொரு முக்கியமான பாயிண்ட். வலவளன்னு எழுதிக்கிட்டுப் போகாம 'நறுக்'குன்னு நாலே வார்த்தையிலேசொல்ல வந்ததைச் சொல்லமுடியுமான்னு பார்க்கணும்.( இதையே எப்படி நீட்டிட்டேன் பார்த்தீங்களா?)


சுருங்கச் சொல்லி?

ம்ம் ஊஹூம்.....

இதுவரைக்கும் போட்ட பதிவுங்க இதோட 192

இந்தப் பதினோரு மாசத்துலே நம்ம வீட்டுக்கு வந்தவுங்க 32453

அதென்ன பதினோரு மாசம்? ஒரு மாசம் கழிச்சுத்தானே 'கவுன்டர்' வந்தாரு.

கடந்து வந்தது எல்லாமே மலர் தூவுனதா இல்லை. ஆனா இந்த சந்தோஷமான நேரத்துலே என்னத்துக்குக் கெட்டதைநினைக்கணும்? நான் மறந்துட்டேன்.

பெரியோர்களே, தம்பிகளே, தங்கைகளே இதுவரை தந்த ஆதரவுக்கு நிஜமாவே நன்றி. எல்லாரும் நல்லா இருங்க.

என்றும் அன்புடன்,

துளசி.
24/09/05105 comments:

said...

(பெரிய) அக்காவிற்கு
வாழ்த்துக்கள்.

( அடுத்த கோடையில் நியூஸி க்கு ஒரு ட் ரிப் இருக்கு. அப்ப தெரியும் நிஜமாவே
உங்க சமையல் ருசியை ! )

said...

ஆஹா... வாங்க, வாங்க.

அடுத்த கோடை? 2006 ஆ?

இன்னும் ரெண்டு மாசம், டிஸம்பர்லே இருந்து கோடை ஆரம்பிக்குது.

said...

கலக்கோ கலக்குன்னு கலக்குங்க எழுத்துக்காரி. இயல்பான சினேகமான நடை உங்களுது. தொடர்ந்து எழுதுங்க.

அப்படியே விட்டுப்போன கதையெழுதும் பழக்கத்தையும் தொடருங்க[ஷ்ரேயா கவனத்துக்கு. எழுதியாச்சா ஆச்சா ஆச்சான்னு கேக்கற பொறுப்பு இனி உங்களுது! ;)]

வாழ்த்துகளுடன்,
மதி

said...

வாழ்த்துகள் துளசிக்கா,

இன்னும் நிறைய எழுதுங்கள்.

அன்புடன்
சுந்தர்.

said...

உங்களோட எழுத்துகளில் ஒரு பாசமும், பிச்சைப்பாத்திரம் சுரேஷ் சொன்ன மாதிரி "சொகமும்" இருக்கிறது.
அக்கா நீங்க நல்லா இருக்கனும். நிறைய எழுதுங்க.

said...

துளசி
வாழ்த்துக்கள். நீங்கள் மனதிலிருந்து இயற்கையாக பேசுவது போல எழுதுவது நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்

said...

கலக்கோ கலக்குன்னு கலக்குங்க எழுத்துக்காரி. இயல்பான சினேகமான நடை உங்களுது. தொடர்ந்து எழுதுங்க.

-இதான் நானும் சொல்றது!

said...

துளசியக்கா,
வாழ்த்துக்கள்.

said...

\\எல்லாரும் அக்கா அக்கான்னு கூப்புட்டு எழுதறப்ப ஏதோ ரத்தபந்தம் இருக்கற சொந்தங்களோட இருக்கற உணர்வுவந்துருது\\

Sithiiiiiiii....:)nanum valthuran

said...

அடடாடா,
இப்படிப் போயிட்டுவர்ரதுக்குள்ளே இத்தனை அன்பு மனங்கள் வந்துட்டுப் போயிருக்கீங்க.
மதி, சுந்தர், கல்வெட்டு, பத்மா, தங்கமணி,பரணி, சிநேகிதி,
மனம்கனிந்த நன்றி

வசந்தன் கவனிக்கவும்:
பின்னூட்ட # ஏற்றப்படவில்லை:-)

said...

அடடே துளசியக்கா..

ஹாப்பி பர்த்டே- உங்க வலைப்பூவுக்கு.

குறும்புத்தனத்தையும், ஹாஸ்யத்தையும், சின்னபுள்ள மனசையும் இத்த்னை வயசிலயும் ( எத்த்னை..? :-) ) இழக்காம காப்பாத்தி வச்சிருக்கிங்களே..அந்த மனசுக்கு ஒரு ராயல் சல்யூட்டுடன் வாழ்த்துக்கள்.

இதுல கூட பாருங்க..
//அதென்ன பதினோரு மாசம்? ஒரு மாசம் கழிச்சுத்தானே 'கவுன்டர்' வந்தாரு.//

அப்ப செட்டியார், முதலியார், பிள்ளைவாள், சாஸ்திரிகள் எல்லாம் எப்ப வந்தாங்க..?? :-) னு சிடுமூஞ்சியான எனக்கே கேக்கத்தோணுது.

நல்லா இருங்கம்மு...!!!

said...

வாழ்த்துக்கள் துளசிக்கா

////
கலக்கோ கலக்குன்னு கலக்குங்க எழுத்துக்காரி. இயல்பான சினேகமான நடை உங்களுது. தொடர்ந்து எழுதுங்க.
-இதான் நானும் சொல்றது!
////
நானும்தான்

said...

மூக்கு,
நீங்க முசுடா? சிடு'மூஞ்சி' மட்டும்தானே? மனசு இல்லையே?

வாழ்த்துக்கு நன்றி.

சோழநாடன்,

நன்றிங்க.

வசந்தன், மீண்டும் கவனிக்கவும்.

said...

வாழ்த்துக்கள் துளசி அக்கா !!!

நிறைய எழுதுங்க....

said...

வாழ்த்துக்கள் பாட்டீடீ...

எல்லாரும் கூப்பிடுற மாதிரி அக்காவா!!!!!! வயசுக்கேத்த (என் வயசு :: தான்யாவே என்ன தம்பின்னுதான் கூப்பிடுறா) மாத்ரி உங்கள நான் பாட்டின்னு இல்ல நான் கூப்பிடுறது... என்ன பத்தி தனியா சொல்லாம விட்டுட்டீங்களே...

said...

எத்தனை ஊர் தண்ணி குடிச்சாலும்., சிறுவாணித் தண்ணி ஒரு தனி சுவை இல்லையா?., அது போன்றது உங்கள் எழுத்து 1 வருடம் பருகியும்., புது சுவை மாறாமல்...! தொடர்ந்து கலக்குங்க... கலக்குவிங்க....!

said...

முகமூடிப் பேரா,

வாழ்த்துக்கு நன்றி. இன்னைக்குக் கணக்குலே 742 பேருன்னு தமிழ்மண(ன)ம் சொல்லுது. எல்லாப் பேரையும் எழுதுனா அதுவே ஒரு பதிவாயிரும் இல்லே?( ஐடியா நல்லா இருக்கே)

மரமே,

வாழ்த்தியதுக்கு நன்றி. இதோ கலக்கிட்டேன்( சிறுவாணித் தண்ணீயை)

said...

இன்னும் நிறையப் பதிவுகள் எழுத வாழ்த்து!

said...

டிசே,

நன்றி. படிக்க ரெடியா?

said...

// 742 பேருன்னு தமிழ்மண(ன)ம் சொல்லுது. எல்லாப் பேரையும் எழுதுனா //

எல்லாப்பேருமா உங்கள பாட்டீன்னு கூப்பிட்டாங்க.. நாம் மட்டுந்தானே.. அதனாலதான் தனி மென்ஷன்...

(பாருங்க ஒரு பின்னூட்டம் வேற ஏத்தியிருக்கேன்)

said...

உங்க வீடு கலகலவென்று இருக்கு துளசி. இப்படியே தொடர்ந்து இருக்க வாழ்த்துக்கள்.

said...

முகமூடி....ம்ம்ம்ம்ம்ம்ம்


நன்றி அருணா

வ.மீ.க.

said...

வ.மீ.க.??
???!!!??

said...

வ மீ க

வருங்கால மீனவர் கட்சி தலைவர்

வட்டியில் மீந்த களி

வயசு மீனா கண்ணோடது

வயசுக்கு மீறிய கருத்து

வராதே மீண்டும் கருத்தோட

said...

அன்பின் துளசி,
வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள்
சூரியனோட போட்டி போட்டு எழுதித் தள்றீங்க. இங்க தினமும் வரேன்.
இப்போதெல்லாம் வீட்டில் வேலையே ஆவதில்லை. ஏன் தெரியுமா,.. உங்க பதிவுகளப் படிக்கறதுலயே நேரம் போயிடறதே,.. கலகலவென்ற உங்களின் எழுத்து/நடை விசிறி, ஜெ

said...

சின்னவரே,

ஊஹூம்... ஒண்ணுகூடத் தேறலை.

அருணா, அது வந்து..

வசந்தன் மீண்டும் கவனிக்கவும்

( பின்னூட்ட எண்ணிக்கையை ஏத்தலேன்னு சொல்றதுக்கு)

ஆனா என்ன பிரயோஜனம்?

இப்படி வேற வழியிலே எண்ணிக்கை ஏறிடும்போல இருக்கே:-))

said...

நன்றி ஜெயந்தி.

உங்களுக்கு 100 ஆயுசு. இப்பத்தான் கோபால் வந்தார்.

தனிமடல் அப்புறமாப் போடறேன்.

said...

வாழ்த்துக்கள் அக்கா,

சரி, உங்களுக்கு ஓர் சந்தோசமான செய்தி, கேரளாவில் யானைகளுக்கு மதம் பிடிப்பதை கண்டறிவதற்காக ஏதோ ஒரு கருவி கண்டுபிடித்துள்ளார்களாம், இந்த வாரத்து தினத்தந்தியில் பார்த்தது. முடிந்தால் அனுப்பி வைக்கிறேன்

said...

குமரேஸ்,

இங்கே நம்ம வீட்டுலே இருக்குற பொம்மையானைங்களுக்குப் பிடிக்கிற மதத்தையும் அந்தக் கருவி கண்டு பிடிக்குமா?:-)))

தாராளமா அனுப்பிவையுங்க. ஆமாம், அனுப்பறேன்னு சொன்னது அந்தக் கருவியைத்தானே?

பி.கு. இங்கே எங்க ஊர்லே தனியா யானைன்னு ஒண்ணு இல்லை. நான் மட்டும்தான்:-)

said...

'அடேங்கப்பா! துளசி'க்கு... உங்க அப்பார்ட்மெண்ட் எப்பவும் இப்படியே சந்தோஷமாய் இருக்க வாழ்த்துகள்.

-------
ரெண்டு ரெண்டரை வருசத்துக்கு முன்னே நான் எழுதி, நானே படிச்சிட்டு 'கப்சுப்'ன்னு இருந்ததையெல்லாம் திரும்ப எடுத்து உங்களைச்சோதிக்கலாமான்னும் ஒரு நினைப்பு அப்பப்ப வருது.
-------
இதை சீக்கிரம் ஆரம்பிங்க.

நிர்மலா.

said...

துளசி ஒரு வருஷமா....... ம்ம்ம்ம் இன்னும் நீங்க நூறு வருஷம் வலைப்பதிவு செய்ய விரும்புகிறேன்.

said...

நிர்மலா

நன்றிங்க. கொஞ்சம் பொறுங்க மனதிலே எல்லோருக்கும் உறுதி வரட்டும். அப்புறம் எடுத்துவிடலாம்:-)

கணேசா,

நன்றிங்க.

இன்னும் நூறா?

தாங்குமா?


வ.மீ.க.

said...

துளசிக்கா..மனமார்ந்த வாழ்த்துக்கள்! தன்யாவுக்காக ஒரு தனி பதிவே போட்ட உங்க அன்பை மறக்க முடியுமா?

பரவாயில்லை..100 பதிவை தொடறதுக்கு முன்னாலேயே தம்பிங்க உங்களுக்கு 'பின்னூட்ட நாயகி'பட்டம் கொடுத்துட்டாங்க! எந்த நேரத்துலே எனக்கு கொடுத்தாங்களோ பின்னூட்டம் நோஞ்சானாயிடுச்சு!!! :-)

said...

ரம்யா,
இது உங்களுக்கே நல்லா இருக்கா?
இது அடுக்குமா?

இது நியாயமா?

நீதி கேக்க இப்பவே புறப்படுறேன்.

இப்ப எதுக்கு இந்த வீராவேசம் & புலம்பல்ஸ்?

என்ன சொல்லியிருக்கீங்க? நல்லா யோசிச்சு, வேணாம் உங்க பின்னூட்டத்தையே படிச்சுப் பாருங்க.

100 பதிவைத் தொடறதுக்கு முன்னாலேயா?

ஐய்யோ இப்படிக் கவுத்திட்டீங்களே.....

இது 192 வது பதிவாச்சேம்மா

ஹூம்ஹூம்...அழறேன்....

said...

அக்கா...மன்னிச்சிக்கோங்க!!! இவரு வேற ஊர்லே இல்லையா..பசங்க கொஞ்சம் (கொஞ்சமா, நிறையவே) படுத்திகிட்டிருக்காங்க இன்னைக்கு..அதான் அவசரத்துலே அப்படி எழுதிட்டேன்!!

said...

சரி ரம்யா,
அவசரத்துலே வெறும் நூறை தானே விட்டீங்க. 192 ஐயும் விட்டிருந்தா? :-)

மன்னிச்சிட்டேன் ரம்யா. இப்ப என்ன நடந்துபோச்சு.
என்ன எதாவது செஞ்சாத்தான் மனசு ஆறுமாவா?

அப்ப ஒரு கிரீடமோ ஒட்டியாணமோ எது குறைஞ்சவிலையோ அதை வாங்கி அனுப்புங்க:-)

said...

வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!

இயல்பான சினேகமான நடை உங்களுது. தொடர்ந்து எழுதுங்க.

-இதான் நானும் சொல்றது!

said...
This comment has been removed by a blog administrator.
said...

வருஷம் கூடினாலும்
வயது கூடுவதில்லை சிலருக்கு
கேலிசெய்து கடுப்பேத்தினாலும்
கண்டுகொள்வதில்லை அவற்றை

அக்காவோ பாட்டியோ
அழைத்தவர்கள் அனைவரையும்
அரவணைத்து கலந்துரையாடி
அடடா, நம்ம துளசிக்கு ஈடு யார்??

மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்
தாணு
(அனிவர்சரிக்கு சிறப்பு விருந்து இல்லையா?)

said...

அக்காவிற்கு வாழ்த்துக்கள்.

இன்னும் நிறைய எழுதுங்கள்.

said...

அக்காவிற்கு வாழ்த்துக்கள்.
தொடருங்கள்.

said...

பாலா, கார்த்திக் & ஜெயசந்திரன்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

என்னைச் சுத்திச் சம்பவங்கள் நடக்கறப்ப எழுதாம இருக்க முடியுதா?

said...

தாணு,

விருந்துப் படத்தைப்போட ஆசைதான்.
நீங்க 'டயட்' சார்ட்டைக் கொண்டு வந்துட்டா?:-)

said...

அது என்னங்க..உங்க வீட்டுக்கு நாங்க வந்தாலும், நீங்க அடுத்த வீட்டுக்கு போனாலும் 'ஏரியாவே'கலகலப்பா ஆயிடுது.

வாழ்த்துக்கள்.

அப்புறம், வேற என்னங்க? திருஷ்டி சுத்திப் போடுங்க!

said...

டீச்சர்,
அது என்ன tag-board? ஒரே martian language-ல இருக்கு?

அது சரி, பதினோரு மாச 'கவுண்டர்' என்னென்னு தெரியுதௌ...ஆனா அதுக்கு 'கவுண்டர்' எங்கே..கண்ணுக்கே தெரியலை. அப்புறம் எப்படி பின்னூட்ட எண்ணிக்கை தெரியுது உங்களுக்கு..? டீச்சர்னா...டீச்சர்தான்! க்.கை.நா.- நான்; தெரியும்தானே..?

said...

கடந்து வந்தது எல்லாமே மலர் தூவுனதா இல்லை. //

- உங்களுக்கு கூடவா அப்படி...?

said...

துளசி இன்னும் பல பதிவுகள் இட்டு, பின்னூட்டம் பற்பல பெற்று (கூடவே நல்ல ஒட்டியானமும் பெற்று) எங்களை சிந்திக்க, மகிழ்விக்க வைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்.

said...

அட என்னக்கா நீங்க... நல்லா பார்த்தீங்களோ... இப்பத்தான் ஒரு வருஷம் ஆகுதா!? ரொம்ப நாளா உங்க பேச்சைக்கேட்கற ஃபீலிங்க்:)

வாழ்த்த வயதில்லை... அதனால் வாழ்த்துகிறேன்.
இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு எங்க கூட பேசிண்டே இருங்க... பாராட்டுக்கள்.

அதோடு, சூடம் சுத்திப் போட்டுடுங்க கண்ணு பட்டுடப் போறது.

(பி.கு:
//அப்ப ஒரு கிரீடமோ ஒட்டியாணமோ எது குறைஞ்சவிலையோ அதை வாங்கி அனுப்புங்க:-)

கொஞ்ச நாளைக்கு இதுமாதிரி கேட்கறதை விடுங்க... நீங்க கேட்டுட்டே இருக்கிறீங்க தங்க விலை கூடிட்டே போகுதாம். கடந்த வாரத்தில் சிங்கையில் கடந்த 15 வருடங்களில் இல்லாத வரலாறு காணாத விலையேற்றம்னு செய்தில சொன்னாங்க...)

said...

many more happy returns of the day
keep on blogging
cheers

said...

தருமி,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

கலகலப்புக்கு என்ன பஞ்சம்? 'யானை' புகுந்த வெங்கலக்கடைன்னு கேட்டதில்லையா?

நம்ம பதிவை அங்கே செவ்வாய்க்கிரக வாசிகள் கூடப் படிக்கறதாலே அவுங்களுக்காகவே
இந்த martian language மொழிமாற்றம் செய்யவேண்டியதாப் போச்சு:-)

என்கோடிங்குலே போய் யூனிகோடனை( நன்றி. காசி) செலக்ட் செஞ்சா தமிழ் வரும்
நான் உங்களை விட பெரிய க.கை.நா. டீச்சர்ன்றதாலே ஒரு 'கெத்தா' இருக்கேன்.

அதென்ன உங்களுக்குமா? நான் என்ன அப்படி ஒரு ஸ்பெஷலா?


டி ராஜ்,

அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

ரவி ஸ்ரீநிவாஸ்,

நன்றிங்க.

அன்பு,

சூடம் கொளுத்தி யார்மேலே போடறது? அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க இங்கே ஏதோ 'கல்ட்' ஆளுங்க
இருக்காங்கன்னு சந்தேகப்படறதுக்கா?

வீட்டுக்குள்ளெ சாம்பிராணி போட்டாலும் 'ஃபயர்' அலாரம் கத்திருதுல்லெ:-)

நன்றி அன்பு.

பி.கு: தங்கம் விலை ஏறுனதை நானும் பார்த்தேன். ஏதோ நம்மாலானது.

வ.மீ.க.

said...

ஒரு வருடத்தில் 192 பதிவுகளா? GREAT! வாழ்த்துகள்.

மென்மேலும் பதிவுகளும் பின்னூட்டமிட்டும் வாழ வாழ்த்துகிறேன்.

தம்பி,
எம்.கே.

said...

யெக்கோவ்... அதுக்குள்ள ஒரு வருசமாச்சாயிருச்சா...? தம்பி கும்புட்டுக்குறேன். எப்பதான் எங்களப் பாக்க உங்க ஊருக்கு வரப்போறீங்க?

said...

துளசி, 192 பதிவுகள் இருக்கட்டும், மினிமம் பின்னூட்ட கியாரண்டியும் உங்க பதிவுகளுக்குத்தான்னு வலைப்பதிவு ஆய்வுக் குறிப்பு சொல்லுதாமே. :) பெரிய குடும்பம் ஆயிட்டீங்க. நிஜமாவே ஆச்சரியாமாவும் மகிழ்ச்சியாவும் இருக்கு உங்க வளர்ச்சி. நீங்க அவசியம் கொண்டாட வேண்டிய நிகழ்வுதான். நானும் சேர்ந்துக்கறேன்.

said...

குமார் அண்டு முருகா,

நன்றி தம்பிகளே! குமாரைப் பார்த்தாச்சு. அவுங்க வூட்டு அம்மாவைத்தான் இன்னும்
பார்க்க நேரம் வரலை.
இந்தியாவரும்போது முடிஞ்ச அளவுக்கு 'நம்ம குடும்பத்தைக்' கண்டுக்கிடணும்.
( அப்படியே நம்ம சாப்பாட்டுக் கவலையும் தீர்ந்துரும், இல்லே?) :-))))))

ஜெயஸ்ரீ,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

மெய்யாலுமா வலைப்பதிவு ஆய்வுக்குறிப்பு இப்படி சொல்லுது. மினிமம் 1 ன்னு வச்சாலும்
அங்கே ஒரு 2 பின்னூட்டம் கேரண்டியாச்சே, ஒண்ணு ஷ்ரேயாவோடதும் அதுக்கு மறுபடி
நான் தர்றதுமுன்னு:-)))

இந்தப் பதிவுக்கு இன்னும் ஷ்ரேயாகிட்டே இருந்துவரலை, ஏன்னா நான் போட்டது சனிக்கிழமை.
அவுங்களுக்கு லீவு. இன்னும் ரெண்டே மணிநேரம்தான், பதில் அனுப்ப.


வ.மீ.க. ( பல்லைக்கடிக்கிற சத்தம் கேக்குதே)

said...

தொடர்ந்து கலக்கலாக இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்!

said...

அக்கா,
வாழ்த்துக்கள்...

புது டிசைன் நல்லாருக்கு. ஆனாலும் ஆனக்குட்டி ரெண்டும் ரொம்பத்தான் ஆட்டம் போடுதுங்க..

said...

வாழ்த்துக்கள்!!

//ஷ்ரேயா கவனத்துக்கு. எழுதியாச்சா ஆச்சா ஆச்சான்னு கேக்கற பொறுப்பு இனி உங்களுது! ;)]//

no worries மதி! :OD

said...

தம்பி ராமநாதன்,

நன்றி.

இந்த யானைங்களுக்குக் கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி (அக்கா மாதிரியே,இல்லே?)

ஷ்ரேயா,
வந்தாச்சா. மொதப் பின்னூட்டம் போடறவங்க கடைசியாப் போடறமாதிரி ஆயிடுச்சுல்லெ?

வாழ்த்துக்கு நன்றி.

வ.மீ.க

said...

வ.மீ.க???
திங்கள் காலையிலே இந்த சுருக்கமெல்லாம் சொல்லாதீங்க! சிட்னியில "இயற்கையா" மழை பெய்யுது, நித்திரை moodல இருக்கிறன். மூளைக்கு வேலை வைக்காதீங்க துளசி! ;O).

சனி-ஞாயிறு இந்தப்பக்கம் வருவதேயில்ல. எழுதிக் குவிச்சு (வழக்கம் போல) பின்னூட்டமும் வாங்கிட்டீங்க.

இதப் பாத்தீங்களா, எப்பிடி சொல்லிட்டுப் போயிருக்காங்க என்று?
அது இன்றைக்கு உண்மையாகிடாம இருக்க, நான் கொஞ்சம் வேலை செய்துட்டு வர்றன்! :OD

said...

அப்புறமா நேரம் கிடைக்கிறப்ப(!) பின்னூட்டங்களைப் படிச்சா தெரிஞ்சிரும்.
சரி. போனாப்போவுது ,
வ.மீ.க.
வசந்தன் மீண்டும் கவனிக்கவும்.

said...

இராதாகிருஷ்ணன்,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

said...

Many Congratualtions !!!.
Enjoyed your posts and comments.
Please continue your posts and comments.

said...

வாழ்த்துகள் துளசியம்மா. என்னுடைய தாயார் நிலையில் இருப்பதால் அம்மா எண்று கூப்பிடலாம்தானே!

உங்கள் பதிவுகள் இன்னும் பல்கிப் பெருக வேண்டும். நாங்கள் படித்து இன்புற வேண்டும்.

வாழ்த்துகள்,
கோ.இராகவன்

said...

hold at 9000,

ஏம்ப்பா, இப்படியெல்லாம் பேரு வச்சுக்கிட்டா எப்படிக் கூப்புடறது?

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

ராகவன்,

தாராளமா அம்மான்னு கூப்புடலாம். ஒருத்தர் பாட்டின்னுவேற கூப்புடறார். (அது இன்னும் என் பொண்ணுக்குத் தெரியாது)

வாழ்த்துக்களுக்கு நன்றி.

வ.மீ.க.

said...

பின்னூட்ட # ஏறிட்டேதான் போகுது.

நீங்களும் //வ.மீ.க//போட்டுட்டேதான் இருக்கீங்க. வசந்தன் தான் கவனிக்கிற மாதிரிக் காணல்ல. :O)

said...
This comment has been removed by a blog administrator.
said...

அன்பு துளசிம்மா

வெள்ளிவிழா கொண்டாடும் மகளின் வாழ்த்துக்கள்

உங்களின் விடாத எழுத்துப் பணி உங்களுக்கு எழுத்துக்காரி என்ற தமிழின் புது அடைமொழி பெற்றுத் தந்ததுக்கு பிடிங்க இன்னொரு மலர்க்கொத்து

உலகத் தமிழ் வரலாற்றிலேயே முதல் எழுத்துக்காரி நீங்கதான்.

இத காசியும்,மதியும் தமிழ்மணத்துல தனியா போட்டு கௌரவிக்கலாம்னு நினைக்கிறேன்

அன்புடன்
மதுமிதா

said...

வாழ்த்துக்கள் வலையுலக சூப்பர் ஸ்டார்-க்கு.

said...

என் அண்ணன் முகமூடியின் பாட்டிக்கு வாழ்த்துக்கள்.

நான் ஊர்லே இல்லை அதனால கவனிக்க விட்டுப் போயி லேட்டா சொல்லறேன்.

லேட்டா சொன்னாலும் லேடெஸ்ட்டா சொல்லறவந்தான்......!!!!!!!!!!!!!!!!!!!!!!!! (போதுமா ஆச்சரியக்குறி?)

said...

மகளே மதுமிதா,

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

அனாமிகா மெய்யப்பன்,

என்னங்க பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டீங்க. வேணாங்க.
'துளசியக்கா'வே பிடிச்சிருக்கு.

நன்றிங்க.

சுரேஷ்,

என்ன ஆச்சு இப்படிப் பினாத்திட்டீங்க:-)

ஊருலே எல்லாரும் நலமா சுரேஷ்?

வாழ்த்தியதுக்கு நன்றிங்க.

ஹரியண்ணன் பக்கத்துலே இல்லைதானே? அப்ப இன்னும் கொஞ்சம்
!!!!! போடலாம்:-)

வ.மீ.க.

said...

துளசியக்கா,

வாழ்த்துக்கள். இன்னிக்கு தான் இந்தப் பதிவைப் பாத்தேன்

நிஜம்மா ஒரு வருசந்தான் முடிஞ்சிச்சா ? பல வருசமா நீங்க எழுதிக்கிட்டு இருக்க மாதிரி ஒரு எண்ணம்.

திடீர்னு வீடு மாறி வந்துட்டோமோன்னு நெனச்சேன். புதுசா யானைப் படமெல்லாம் காட்டுறீங்களா...

கலக்குங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
(போதும் இதுக்கு மேல ! போட்டா தாங்காது. விட்ருவோம்)

said...
This comment has been removed by a blog administrator.
said...

வாங்க வாங்க புது மாப்பிள்ளை.

கல்யாணம் அட்டகாசமா நடந்துச்சுன்னு கேள்விப்பட்டேன்.

தண்ணி ஹைதராபாது வந்தாச்சா? புதுக்குடித்தனம் எப்படிப்போகுது?

வூட்டுலே கேட்டதாச் சொல்லுங்க.

அ.சொ.வி.

தண்ணி= தம்பி பெண்டாட்டி

said...

துளசியக்கா,

எல்லாம் அருமையாப் போகுதுங்க..
தண்ணி= தம்பி பெண்டாட்டி => இது எங்க வீட்லயும் ஏற்கனவே உபயோகிக்கும் சொல்.

அ.சொ.வி. = ??? புது மாப்ளை கிட்ட இப்படியெல்லாம் புதிர் போட்டா பாவமில்லைங்களா?

said...

அ.சொ.வி. = ???
அருஞ் சொல் பொருள்விளக்கம்

பு.மா.கி.இ.பு.ஓ.பா?
:::)

said...

a
வாழ்த்துக்கள் அக்கா.. !

வெற்றிகரமான 5 வருடம் கொண்டாட வாழ்த்துக்கள்..

அக்கா , ஒரே குறை.. எவ்ளோ பதிவுல கோபால் சாரை மயக்கம் போட வெச்சீங்க.. ஓட வெச்சீங்க.. அழ வெச்சீங்க.. ஒட்டியானம் வாங்க வெச்சீங்க.. சாப்பாட்டு பந்திய போட்டோ எடுக்க வெச்சீங்க..

இந்த பதிவுல அவரை கண்டுக்கலயே.. அவரை பற்றி ஒரு 2 வரி எழுதி இருக்கலாம்... ஹ்ம்ம்ம்ம்ம்

said...

தாமதமாகத் தான் உங்க வீட்டுக்கு வந்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.

said...

Peanut gallery -க்கு வாழ்த்துக்கள் :-)

said...

வீ.எம்,

முதல் பதிவு ஆரம்பிச்சதே 'கோபாலின் பிறந்தநாளில்தான்'. அதனாலே இப்ப ஒரு வருடம்
ஆச்சுன்னு சொன்ன அன்னிக்கும் அவரோட பிறந்தநாள்தானே?

வாழ்த்துக்களுக்கு நன்றி.

ராம்கி,

உங்க தலைவர் மாதிரி,'லேட்டாவந்தாலும் லேட்டஸ்ட்டா' வந்துட்டீங்களா?

வாழ்த்துக்களுக்கு நன்றி.

கார்த்திக்ராமாஸ்

அதென்ன Peanut gallery ?

வாழ்த்துக்களுக்கு நன்றி

வ.மீ.க.
வசந்தனுக்கு இந்தப் பக்கத்தைத் திறக்க முடியலையாம்(-:

said...

//ராம்கி,

உங்க தலைவர் மாதிரி,'லேட்டாவந்தாலும் லேட்டஸ்ட்டா' வந்துட்டீங்களா?//
துளசி கோபால், நான் அவரில்லை.
அவர் பெயர் Ramki என்று பின்னூட்டத்தில் தெரியும். எனது பெயர் ராம்கி என்று தெரியும். ஆனாலும் தெரிந்த ஒன்றைத் தெரியாத மாதிரி பிழையாகப் போட்டு அதைத் திருத்த ரெண்டு மூன்று பின்னூட்டங்கள் என்று பின்னூட்ட நாயகியின் பின்னூட்டம் அதிகரிக்கும் பாணியே தனி!
நகைமுகம் போடவில்லை என்றால் சீரியஸ் கமெண்ட் என்று ஆகிவிடுமோ?

போச்சு போச்சு.. இடம் தெரியாம நகை முகம்னு போட்டு விட்டேன். சிரிமுகம்னு போட்டிருக்கலாம்.
எனது பதிவு
http://stationbench.blospot.com

said...

அடடா,

நீங்க அந்த ராம்கியா?

சரி. எப்படியோ பின்னூட்ட எண்ணிக்கை ஒண்ணு ஏறிடுச்சுல்லே:-)

இங்கே ஒருதடவை நம்ம இந்தியா ரெய்ல்வே ஸ்டேஷன் லே நிஜமாவே வச்சிருந்த ஸ்டேஷன் பெஞ்சு விற்பனைக்கு வந்தது.
அருமையான மரம்.

விலை ரொம்ப கூடுதல். நம்ம பட்ஜெட்டுலே அடங்கலே(-:

போகட்டும். இனிஒருக்கில்வந்தாப் பார்க்கலாம்.

said...

துளசியக்கா.. கலக்கறீங்க...(நல்ல வேளை... இப்போவாவது சொன்னேன்.. இல்லைன்னா இந்த வாழ்த்து அடுத்தவருசத்துக்குன்னு ஆகியிருக்கும்! :) )

பல்லாண்டுகள் பல பதிவுகளிட்டு சிறக்க வாழ்த்துக்கள்!!!

said...

துளசியக்கா,
எப்போதும் உங்க பதிவுகளைப் படிச்சா ஒரு உற்சாகமும் அன்னியோன்யமும் வரும்!
பல்லாண்டு இது போல கலக்குங்க!

said...

இளவஞ்சி,

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

அடுத்தவருசத்துக்கும் இதையே வச்சுரவா?
இந்தக் கணக்குலே வாழ்த்துசொன்ன( அடுத்த வருசத்துக்கு)மொத ஆளு நீங்க:-)

ஜோ,

மிகவும் நன்றிங்க.

என்னடா இன்னும் நம்ம தம்பிங்க( வரவேண்டியவுங்க)சிலர் இன்னும் வீட்டுக்கு வரலியேன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.

said...

வாழ்த்துகள் துளசியக்கா, இன்றைய தினமலரில் உங்கள் தளம் பற்றிய செய்தி வந்துள்ளது, அதற்கும் வாழ்த்துகள்

http://www.dinamalar.com/2005oct01/flash.asp

நன்றி

said...

குழலி,

வாழ்த்துக்களுக்கும், தகவலுக்கும் நன்றிங்க.
நீங்க குறிப்பிடலைன்னா தினமலர் செய்தியைக் கவனிச்சிருக்க சான்ஸ் இல்லை.

நன்றி, எல்லாத்துக்கும்.

என்றும் அன்புடன்,
அக்கா

said...

Congrats Akka!!!

said...

பாண்டி,

நன்றி தம்பி. நல்லா இருக்கீங்களா?

said...

அன்பு அம்மையீர்,
தினமலர் கண்டு தங்களின் தளத்திற்கு வந்து பாராட்டுகளைப் படித்து அயர்ந்துவிட்டேன்.
இளைய தலமுறைக்கு முதிய தலைமுறை சளைத்தது இல்லையென சாதிப்பின் மூலம் காட்டிய தங்களைப் பாராட்டத் தாமதமாக வந்து, சொற்களின்றித் தவிக்கிறேன்.
வாழ்க. வளர்க. பதிவுகள் பெருகுக.
ஞானவெட்டியான்
திண்டுக்கல்(தமிழகம்)

said...

அன்புள்ள ஞானவெட்டியாரே,

உங்கள் வரவு நல்வரவாகுக. பாராட்டியதற்கு நன்றி.
எல்லாம் தங்களைப் போலுள்ள பெரியவர்களின் ஆசீர்வாதம்.

நான் எழுதுவேன் என்று எனக்கே தெரியாது!

ஆனாலும் எழுதுவது பிடித்திருக்கிறது.

மீண்டும் நன்றி.

said...

பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம். நானே ஒரு புழு. சூத்திரதாரி ஆட்டுகிறான். ஒத்தை விரல் ஆடுகிறது. கணினியில் ஏதோ விழுகிறது. அனுப்புகிறேன்.

நான் ஒரு கிழம். ஒரு விரலால் கொத்திக் கொத்தி ஒரு blog க்கும் ஒரு வலைத்தளமும் உண்டாக்கி இருக்கிறேன். ஞானம், ஞானம்ன்னு ஒரு கிழவன் புலம்பிக்கிட்டிருக்கான்னு ஒருத்தரும் நம்ம பக்கம் வரதில்லே. வடிவு அமைக்க உதவ ஆள் இல்லை. நண்பர் திரு காசிக்கு உதவி கேட்டு ஒரு மின்னஞ்சல் 4 மாதத்திற்கு முன் அனுப்பினேன். பதில் இல்லை. உதவ எந்தப் புண்ணியவானாச்சும் கிடைச்சா தேவலை. ஆண்டவன் விட்ட வழி. ஏதோ என் நடையை மாற்றி உங்கள் நடைக்கு வர முயற்ச்சி செஞ்சிருக்கேன். பரவாயில்லையா?
அன்பு,
ஞானவெட்டியான்

said...

யக்கோவ்,

கொஞ்ச நாளு அப்பிடி இப்பிடி'ன்னு பிஸியாய்ப் போயிட்டன். வாழ்த்துக்கள். நிறைய நீறைவா எழுதுங்கோ!!!

செஞ்சுரி அடிச்சிடுவோமா? :-)

said...

ஞானவெட்டியாரே,

என்னங்க இது? புழு, கிழம்(பழம்)ன்னு கவிதை எழுதறிங்க?

இந்த நடையிலே வந்துட்டீங்கல்லே. அப்பாடா... இப்பத்தான்
ரொம்ப அன்னியோன்யமா இருக்கு. பேச்சுநடையிலே இல்லாம இலக்கணமா/இலக்கியமா
இருந்தா சுத்தி உக்காந்துக்கிட்டுக் கதைபேசற/கதை கேக்கற உணர்வு போயிருதுங்களே.

ஞானம் ஞானம்ன்னு புலம்பறதே ஒரு அஞ்ஞானமாப் போயிருச்சோ?

எல்லாத்துக்கும் நேரம் காலம் வரணுமா இல்லையா? நான் கூட
ஒரு கணினி கை நாட்டுங்க. தொழிலே தெரியாதப்ப எங்கேயிருந்து நுட்பம் தெரியப்போகுது?

இந்தப் புலம்பல் நம்ம 'காசி'யோட காதுக்குப் போகுதான்னு பார்க்கலாம்.
இந்தத் தொழில்நுட்பத்துலே கில்லாடிங்க நிறையப்பேர் இங்கே இருக்காங்க. என்ன அவுங்க
பார்வை 'ஞானம்'மேலே இன்னும் வுழலை(-:

குசும்ப்ஸ்,

வாங்க. நலமா? அதென்ன அப்படி செஞ்சுரி அடிக்கலாமான்னு கேட்டுட்டீங்க? 200 நாட் அவுட்ன்னு
இருக்கேன் இப்ப:-)

said...

அன்பு அம்மையீர்,
கட்டை பொட்டுன்னு போறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் கொட்டி விடலாம் என்ற அவசரத்துடன் கூடிய அங்கலாய்ப்பு.
ஆத்தா கடைக்கண் பார்வை ஞானத்தின்மேல் விழுந்தாத்தான் நடக்கும்.
அவள் "சித்தம்" எப்படியோ?
அன்பு
ஞானவெட்டியான்

said...

அன்பு அம்மையீர்,
அதுக்குள்ள ஆத்தா மீனாட்சி கண்ணு முழிச்சுப் பாத்துட்டா. மதுரைப் பாண்டியனையே எனக்கு மின்னஞ்சல் போடச் சொல்லி அவரும் போட்டுட்டார்.
"துளசி தளம்" அவளுடைய அண்ணன் வீடாச்சே. மாமாவும் மருகனின் துன்பத்தைப் போக்கிவிட்டார்.
சுபம்
அன்பு
ஞானவெட்டியான்

said...

யக்கோவ் நான் பின்னூட்டத்துல செஞ்சுரி அடிச்சுடலாமான்னு கேட்டேன்.

said...

குசும்ப்ஸ்,

தாராளமா செஞ்சுரி அடிச்சுரலாம்.
ரெடியா?

said...

இதோ இன்னொரு உபரி. இன்னும் இரண்டு தான் நூறு அடிக்க. :-))

said...

தெண்டூல்கர் மாதிரி அடிச்சு ஆடற ஆளில்லை நம்ம கவாஸ்கர். நின்னு நிதானமா ஆடி செஞ்சுரி எடுக்கணும் இல்லே?
99 நாட் அவுட்.
நெர்வஸ்ஸா இருக்கேப்பா:-)சிகிரி

said...

அன்பு மதுரை அரசு பாண்டியரே,
நான் அனுப்பிய மின்னஞ்சல்கள் எல்லாம் சுவற்றில் அடித்த பந்தாய்த் திரும்பி வருகின்றன்வே? என் செய்வேன்?
(துளசி அம்மயார் பொருத்து அருளவும்)
அன்பு
ஞானவெட்டியான்

said...

செஞ்ச்சரீ..ஈஈ..ஈ..ஈ!!!!!!! ;O)

said...

:-)))))))))))))))))))))))))))))))))))))))

said...

டபுள் செஞ்சுரிக்கு முயற்சி செய்யறீங்களா?

said...

Congratulations on 100 !.
I think similar congratulations and Thanks giving will take this to the next 100.

said...

தேங்ஸ் உஷா.

ஹோல்ட் அட் 9000,

அதெப்படிங்க அடுத்த 100? உங்க பேரைப் போலவே ஒம்பதாயிரத்துக்கு முயற்சிக்கவேணாமா?

டி ராஜ்,

வாங்க வாங்க, இந்த ஜோதியிலே கலந்துக்கிட்டுஒம்பதாயிரத்தை நோக்கி 'வீரப்பயணம்' போவோம்.