Friday, September 16, 2005

பந்தியிலே சாப்பாடு?


இந்தப் பதிவு நம்ம மதிக்கு 'அர்ப்பணம்'!
நானும் ஒரு பந்தியோட பதிவைப் போட்டுத்தான் ஆகணுமுன்னு நினைக்கிற அளவுக்கு என்னைக் கொண்டுவந்துட்டீங்களே, இது நியாயமா?வலைப்பதிவுலே நாலு வரி இல்லேன்னா அது படத்தைத் தூக்கிருமாமே?
இப்ப கொஞ்சம் கொஞ்சமா விவரம் வருதில்லே. இதோ நாலு வரியை முடிச்சுட்டேன்.

17 comments:

said...

என்டே ம்ஹூம்.. நிங்கள் பொண் ஓணத்திண்டே ஓண சத்யாவானு, அல்லே! :O)

said...

ஷ்ரேயா,

அதே!

said...

இது சாப்பிட போட்ட பந்தியா இல்லே போட்டோ எடுக்கன்னு செட்டப் பண்ண பந்தியா? செம அழகா இருக்கே!

said...

தாணு,

இது இங்கே எங்க கேரளா அசோஸியேஷன் ஓணம் ஃபங்ஷனுக்கு இந்த முறை உண்மையாவே
வாழையிலை சாப்பாடுன்னு ஓணப்பதிவுலே சொல்லியிருந்தேனே, அப்ப எடுத்தது.
எல்லாரும் போய் உக்கார்றதுக்கு முந்தி:-)

said...

அடடா! பந்தியே இப்படியிருக்கே! இதுல முந்தியா போய் குந்தி இருந்தவங்களையும் போட்டோ பிடிச்சிருக்கலாமே.

இத்தனை வகையிருக்கே. என்னன்ன வெச்சாங்கன்னு ஒரு பட்டியல் போடுங்களேன்.

said...

ராகவன்,
//இதுல முந்தியா போய் குந்தி இருந்தவங்களையும் போட்டோ //

முந்தியே போனதும் நாங்க தானே! அப்புறம் எப்படி போட்டோ எடுக்கறது:-)

மொத்தம் 21 வகை. இருங்க ஞாபகப்படுத்திப் பார்க்கறேன்.

சாதம், சாம்பார், ரசம், மோர், கலத்துக்குபருப்பு & நெய்,எரிசேரி, புளிசேரி, ஓலன்,
அவியல், காளன், கூட்டுக்கறி, பீட்ரூட் பச்சடி, மாங்காய் கறி, பைனாப்பிள் பச்சடி,நாரங்காய் அச்சார்'
இஞ்சிக்கறி, நேந்திரம் உப்பேறி, கேபேஜ் தோரன், பழம், பப்படம்,அடப்பிரதமன், பால்பாயாசம்,ஜீரகவெள்ளம்.
அவ்வளவுதான்.

ஆனா பறிமாறுனவங்களைத்தவிர மத்த எல்லாரும் ஒரே பந்திதான்!

said...

அக்கா,
நல்லா வயித்தெரிச்சல் கொட்டிக்கீறீங்க இந்த மாதிரி வாழை இலை சாப்பாடெல்லாம் பத்தி போட்டு.

எத்தன ஐட்டம்னு சொன்னோன்ன ஒரு பாட்டு ஞாபகத்துக்கு வருது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணத்தில் போட்ட ஐட்டங்களை பத்தின "போஜனம் செய்ய வாருங்கள்" என்கிற பாட்டு. சூப்பரா இருக்கும்.

பாம்பே சகோதரிகளின் "கல்யாணப் பாடல்கள்" ஆல்பத்தில் வரும். கேட்டிருக்கீங்களா?

said...

அக்கா வாழை இலை என்ன ஒரே சீரா இருக்கு. தேர்ந்தெடுத்து ஒரே அளவாக வெட்டினார்களா? அல்லது செயற்கை (பிளாஸ்டிக்)இலைகளா?

said...

அக்கா நாக்குல எச்சில் ஊறுது... அப்படியே ஒரு அம்புகுறி போட்டு ஐயிட்டம் பேர சொல்லியிருக்கலாம் .. !!
நீங்க எடுத்த போட்டோவா இல்ல கோபால் சாரு எடுத்தாரா?

said...

ஐயோ ஞானபீடம் இல்லையே இப்போ

said...

ச்..சீ...எல்லாம் ஒரே புளிப்பு!!

எப்படித்தான் சாப்டாங்களோ!!

said...

ராமனாதன் தம்பி,

//பாம்பே சகோதரிகளின் "கல்யாணப் பாடல்கள்" ஆல்பத்தில் வரும்.
கேட்டிருக்கீங்களா?//

இல்லையே(-: அடுத்தமுறை இந்தியா போறப்ப வாங்கவேண்டிய 'லிஸ்ட்' கூடிக்கிட்டே போகுது.

said...

கல்வெட்டு,

'கழுகுக் கண்ணு' உமக்கு! இலையை மட்டும் பாத்தாப் போதாதா? இப்படி 'குட்டை' உடைக்க வச்சுட்டீங்களே:-)

இங்கே உண்மையான 'இலை'யை வரவழைக்க அனுமதி இல்லை. அரசாங்கம் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டு.
ஒரு ஆப்பிள் கூட, பக்கத்து நாடாட ஆஸ்தராலியாலே இருந்துகூடக் கொண்டுவரமுடியாது. 'நாய்'பிடிச்சிரும்.
ஃபைன் 200$. சிலசமயம் பத்தாயிரம் டாலர் வரை ஃபைன் போட்டுருவாங்க.

அதாலே எல்லாம் ஒரு வாழையிலை 'லுக்'தான். ஹி ஹி ஹி.....

said...

வீ.எம்,

இப்படி ஞானபீடம் இல்லையேன்னு நினைச்சு நீங்க மனம் கலங்குறதை நினைச்சு,
எனக்கு இன்னிக்கு 'களி'யே இறங்கலை போங்க.

கோபால் தான் எடுத்தார். இந்த காமெரா, டி.வி, டி.வி.டி ப்ளேயர் இத்தியாதி சாமான்களொட
ரிமோட் கண்ட்ரோல் எல்லாத்தையும் 'ஹாக்'பண்ணறதுலே ஆம்பிளைங்க கில்லாடிங்க இல்லே?

said...

தருமி,

ஆமாங்க. யாரு சாப்புடுவா? எனக்கும் இதே எண்ணம்தான்! கஷ்டப்பட்டு ஒரு புடி
புடிச்சுட்டு வந்தேன். என்ன செய்யறது? பேஜாராப் போச்சு:-)))))

said...

ஏனக்கா!
பந்தியில் யாரையும் காணவில்லை.
இருத்திப் பரிமாறுவதில்லையா??

said...

யோகன்,

பந்தியில் ஆக்கள் உக்கார்ந்த பிறகுதான் சோறு விளம்புனது. முதலில் கொஞ்சம் செட் செஞ்சப்ப எடுத்த படம் இது.

முதல்முறை வாழை இலை விருந்துன்னதும் படம் எடுக்க ஒரு ச்சாட்டம்தான்:-)