அதிகாலையிலே உறக்கத்திலே இருந்து மனசு முழிச்சப்பவே 'இன்னைக்கு ஸ்ப்ரிங்கு'ன்னு
மண்டைக்குள்ளே ஒரே கூச்சல். ஆஹா செப்டம்பர் மாசம் முதல் தேதி. அதிகாரபூர்வமான
வசந்த காலம். குளிரை ஒரு மாதிரி சமாளிச்சாச்சு. இன்னும் ஆறு மாசம் கொண்டாட்டமே
கொண்டாட்டம்!!!!
இந்த வருசம் குளுர் பரவாயில்லை. ரொம்பவும் படுத்தாமப் போனதுபோல இருக்கு. ஒருவேளை
வெய்யிலைப் பார்த்தவுடனே பட்ட கஷ்டம் எல்லாம் மறந்துடுச்சோ? அதான் 'சூரியனைக் கண்ட
பனி போல'ன்னு உவமையெல்லாம் பெரியவுங்க ச்சும்மாவா சொல்லிவச்சிருக்காங்க?
எங்கே பார்த்தாலும் 'டாஃப்டில்' பூக்கள். நேத்துவரை $5.95க்கு வித்த இந்தப் பூங்கொத்து இன்னிக்கு
ஒரே ஒரு டாலர்! சூரியன் வந்தவுடவே, வீட்டுலேயும் வெளியேயும் செய்யவேண்டிய வேலைங்களும்
வந்துருச்சு. இனி ச்சும்மாச் சும்மா கணி ( இதுதான் சரியாமே?) முன்னாலே உக்காந்து ஓபி அடிக்கிற
தெல்லாம் நடக்காது(-:. மரியாதியா கொஞ்சம் வூட்டுவேலையும் செய்யணும்.
இந்தப் பக்கத்துலே 'ஓஸோன்'லே ஒரு பெரிய ஓட்டை இருக்காம். அமெரிக்கா தேசம் அளவு பெருசான
ஓட்டையாம். அதனாலே வெய்யில்லே இருந்து வர்ற UV கதிரோட பாதிப்பு கூடிடுதாம். பலபேருக்கு
ஸ்கின் கேன்சர் வந்துருது. ஒலகத்துலேயே இந்த ஸ்கின் கேன்சருக்கு மொத இடம் இங்கேதானாம்!
தொலைக்காட்சி, பத்திரிக்கை, இன்னும் வீட்டு வீட்டுக்கு வந்து போட்டுட்டுப் போற ஜங்க் மெயில்
எல்லாத்துலேயும் சகல இடத்திலும் விளம்பரம் வர ஆரம்பிச்சிருச்சு.
Slip Slop Slap And Wrap இதுதான் ஸ்லோகன்.
சன் ஸ்க்ரீன் க்ரீம் எப்படி, எந்த அளவு பூசிக்கணும், தலைக்குத் தொப்பி, கண்ணூக்கு கூலிங் க்ளாஸ்,
உடம்பை மூடிய உடை(!) இப்படின்னு அரசாங்கமும், கேன்சர் சொஸைட்டியும் சேர்ந்து சொல்லிக்கிட்டே
இருக்காங்க.
slipping on a shirt
sloping on sun screen
slapping on a hat
wrapping on sunglass
சூரியனைப் பார்க்க முடியாம ஊமை வெய்யிலா இருந்தாலும் இதையெல்லாம் காலையிலே 11 மணிமுதல்
மாலை 4 வரைக் கடைப்பிடிக்கணுமாம். முக்கியமா குழந்தைகளுக்கு இதைக் கட்டாயம் செஞ்சுவிடணும்.
அந்த வகையிலே ஆரம்பப் பள்ளியிலே டீச்சருங்க இதைக் கவனிச்சுச் செய்யறதைக் கட்டாயம் பாராட்டத்தான்
வேணும்.
எப்பவாவது 30 டிகிரி வெய்யில் வந்தாப் போச்சு, நம்மளைப் பாக்கறவங்கெல்லாம் சொல்றது, திஸ் ஈஸ் லைக்
இண்டியன் சம்மர்! நம்ம உடம்பும் இத்தனை வருசத்துலே, குளிருக்கு ஈடுகொடுத்துப் பழகிப்போய் இந்த முப்பதைத்
தாங்காதுன்னாலும் எல்லாருக்கும் வியாக்கியானம் சொல்லிக்கிட்டு நிக்கணுமான்னுட்டு, ஹி ஹின்னு அசட்டுச்
சிரிப்பு சிரிச்சிட்டுப் போகணும்!
நானும் போய் ஒரு தொப்பியை மாட்டிக்கிட்டு செடிகளுக்குத் தண்ணி ஊத்துற வேலையைப் பாக்கணும்.
இந்தப் பக்கம் இருக்கற ஆட்கள் எல்லாம், வசந்தம்&கோடை முடியுறவரைக்கும் கவனமா இருங்கோ!
Thursday, September 01, 2005
வசந்தம் வந்ததே!!!!!
Posted by துளசி கோபால் at 9/01/2005 01:51:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
வெயில் வருது வெயில் வருது குடை கொண்டு வா...
செப்டெம்பர் மாதம்..செப்டெம்பர் மாதம்!! (அப்ப வலைப்பதிவர் மாநாட்டுக்கு வர்றவங்க களிம்பு, குளிர்கண்ணாடி எல்லாம் தூக்கிட்டுத்தான் வரணும் போல! ;O)
என்ன்ன்னது..நீங்கதான் தோல் புத்து நோயில முதலா? அப்ப எத்தினையாவதாம் "வெய்யில்ல வறுபடுற" ஒஸ்ரேலியாக்காரர்ட இடம்?
இங்கே நான் கேள்விப்பட்ட வரை Slip Slop Slap தான். அதெப்படி சன் க்ளாஸை wrap பண்ண முடியும்?
ஷ்ரேயா
இந்த wrap இந்த வருசத்துப் புதூஊஊஊஊஊஊஊஊசு. நம்ம கேன்சர் சொஸைட்டி சொல்லிருச்சும்மா:-)
இங்கே நியூஸி ஓட்டைதான் ரொம்பப் பெருசு!
நம்பி,
நலமா? நிஜமாத்தாங்க மைல்டு !
உங்களுக்கு இங்கே இது மொதக் குளுருல்லே. அதான் ரொம்பவே குளுரா உனர்ந்திருக்கீங்க.
போகப்போகப் பாருங்களேன்!
ஸ்லோகன் = ஸ்லோகம்???
முதல் குளிர் தெரியாது என்பாங்களே! நம்பி ஹீட்டர் கிட்ட போகலே போலருக்கு! ;O)
ஷ்ரேயா ஸ்லோகம்னு வச்சுக்கலாம்.
நம்பி வீட்டுக்கு வந்த பவர் பில்லைப் பார்த்துட்டுச் சொல்லுங்க.
பாவம். ஹார்ட் அட்டாக் வர்ற அளவுக்கு ஆகியிருக்கும். எல்லாம் என்னோட அனுபவம்தான் பேசுது:-)
முதல் குளிர் முதல் பில்
துளசி நான் இருப்பது இந்தியாவில் ! டெல்லியில் !!
இந்த செப்டம்பரிலிருந்து இங்கு குளிர்காலம் ஆரம்பம். பாருங்க ஒரு ஆறு மாசம் ஆட்டி எடுத்துடும்.... என்ன செய்யப்போறேன்னு தெரியலையே.... உங்க பாடு தேவலை போல
கணேஷ்,
நாந்தாங்க இங்கே சதர்ன் ஹெமிஸ்பையரிலே இருந்து நார்த்துக்குக் குளிரை அனுப்புனது:-))))
போகட்டும் உங்களுக்கும் ஒரு மைல்டு வின்டர் அனுப்பவா?:-))))
சொட்டர், ஜாக்கெட் எல்லாம் தயார் பண்ணிருங்க.
அப்புறம் லாங் ஜான்ஸ்( நான் வச்சிருக்கர பேரு லைஃப் சேவர்!) இருக்கட்டும். சமாளிச்சுருவீங்க. ச்சின்ன வயசுதானே, பிரச்சனை இருக்காது.
நாங்கதான் (கிட்டத்தட்ட) மூன்றரை - நாலரை மாசம் குளிர் அனுபவிச்சுட்டோமே!
இனி சூரியன் நமஹ தான். :O)
அப்படி ஒரேடியா ஸ்வெட்டரைத் தூக்கி எறிஞ்சிட்டு இருக்க முடியாது. எப்பவும் உங்க கங்காரு போல ஒரு ஜெர்ஸியை தூக்கிக்கிட்டேத்தான் போகணும். இங்கே ஒரு நாளிலேயே ஃபோர் சீஸன்ஸ் பார்க்கலாம்.
அது ஒரு சல்யம்.
//உடம்பை மூடிய உடை(!) //
அதுவும் கோடை காலத்துல..? :)
அப்புறம்! கேள்விப்பட்டிருப்பீங்க! மெல்பேணில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமார் 30 வருசத்துக்கப்புறம் snow பெய்தது.. சில இடங்களில்!
நான் சரியாக குளிரும் போதெல்லாம் ஐரோப்பியரை கனேடியரை நினைச்சுக் கொள்ளுவன்.. அங்குள்ள குளிரை விடவா?
அப்புறம் ஷ்ரேயா இன்னும் இரண்டே வாரங்களில் சிட்னியில் ஒரு வலைப்பதிவர் மாநாடு நடக்க இருக்கிறது.
இதை பத்தி எங்கடை மெல்பேண் வலைப்பதிவர் கழகத்தின் தலைமைச் செயலகத்தில தொடர்ந்து meeting நடந்திட்டு வருது.
எங்க கழகத்தில இருந்து ஒரு பிரதிநிதியை அனுப்பி வைக்கிறம் சிட்னிக்கு.. இதைப் பத்தி ஆறுதலா சொல்லுறன்.
என்னது அதுக்குள்ள ஸ்பிரிங்கா... இங்க 105 F.. இன்னும் 2 மாசம் ஸம்மர்தான்
சயந்தன், தனியஞ்சல்(mazhaipenn.shreya at gmail dot com) போடும் அல்லது பதிவாயாவது போடும்.அப்பத்தான் எங்க எப்ப சந்திக்கலாம் என்டெல்லாம் தீர்மானிக்கலாம்! :O)
துளசி நாங்களும் அப்பிடித்தான் எப்பிடியும் Septermber கடைசி/October தொடக்கம் வரை குளிர் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனா குறைஞ்சு கொண்டே போகும் என்பது சின்ன சந்தோசம்!:OD
(கடவுளே ARRahman இசை நிகழ்ச்சிக்கு குளிரக் கூடாதே!)
//முழிச்சப்பவே 'இன்னைக்கு ஸ்ப்ரிங்கு'ன்னு
மண்டைக்குள்ளே ஒரே கூச்சல்.//
ஓ!! அப்போ நாளைக்கு முழிக்கறப்ப "ஸ்க்ரூ"(screw) னு கூச்சல் வருமா??
//உக்காந்து ஓபி அடிக்கிற//
அக்கா, எவ்ளோ தெகிரியமிருந்தா எங்க அம்மாவோட நம்பிக்கைக்கு பாத்திரமான எங்க அண்ணன் ஓபி (ஓ பன்னிர்செல்வம்) ய அடிப்பீங்க?
ஹ்ம்ம்ம்.. குளிரு, ஜில் ... இந்த வார்த்தை எல்லாம் வலைப்பூவுல தான் பார்த்து சந்தோஷபடனும்.. வேற என்ன பன்றது...நாம எல்லாம் சென்னைவாசிங்க அக்கா..
அந்த வெயிலுக்கே கூலிங்க்ளாஸ் , சன் ஸ்கிரின்... அப்படினா, சென்னை வெயிலுக்கு..நம்ம பூரா உடம்பையும் அந்த சன் ஸ்க்ரின்ல தான் செய்யனும்..
துளசிக்கா நல்லா கொண்டாடுங்க.
இங்க இளவேனிற்காலம் (வசந்தம்) போயி கோடை வாட்டி இப்போது இலையுதிர்கால வாசலில் வந்து நிற்கிறோம்.
சயந்தன்,
//உடம்பை மூடிய உடை(!) //
//அதுவும் கோடை காலத்துல..? :)//
கொஞ்சம் வெய்யிலைப் பாத்தாப் போதும் ஒரேடியா ஆடைக் குறைப்பு செஞ்சுடறவங்க இருக்காங்க இங்கே. அவுங்களுக்குத்தான் முதுகுபூரா சன் பர்ன் வந்து அப்படியே மெலெனோமா வந்துருதாம். அதுக்காகத்தான்
கொஞ்சம் மூடிக்கச் சொல்றாங்க.மெலிசான உடையாலே:-)
முகமூடி,
105 F.. ஆ? இங்கெ அவ்வளவெல்லாம் போகாது! 85 வந்தாவே கூப்பாடுதான். ஆனாலும் எப்பவும் அண்டார்ட்டிக்கா விலே இருந்து வர்ற காத்து வந்து அந்த சூட்டையும் விரட்டிடுதேப்பா?
வீ.எம்,
இன்னைக்குக் கண்ணு முழிச்சப்ப 'ஸ்க்ரூ'ன்னு கூச்சல் வரலையேப்பா? அங்கே உங்களுக்கு வந்துச்சோ என்னவோ:-)
கல்வெட்டு, நன்றி.
ஆமாம் இங்கெ என்ன பண்ணறீங்க?
நான் அங்கே உங்க வீட்டு வாசல்லே வளைக்காப்பு பாக்க நின்னுக்கிட்டு இருக்கேன்!
ஷ்ரேயா,
இது என்ன அக்கிரமம்? இன்னும் ரெண்டே வாரத்துலெ சிட்னியிலே வலை மகாநாடா? முந்திக்கிறங்களா?
ஹா ஹா.. நாங்கள் பொடியங்கள் பாருங்கோ.. எதையும் செய்யிறதில ஒரு வேகமிருக்கும்.. மற்றது.. நாங்கள் எதையும் சொல்ல மாட்டம்.. ஆனா செய்து காட்டுவம்..
வேறையும் நிறைய முடிவுகள் எடுத்திருக்கிறம். என்ரை வலைப்பதிவை பாருங்கோ.. தகவல்களுக்கு
சயந்தன்,
அப்ப சிட்னியை 'முடிச்சிட்டு'
இங்கே நியூஸிக்கும் வாங்கோ.
உங்கமாதிரி வேகமும் விவேகமும் உள்ளவங்க இங்கே தேவையா இருக்கு.
இது பகிடி இல்லே.
//ரெண்டே வாரத்துலெ சிட்னியிலே வலை மகாநாடா//
எங்கே எப்ப சந்திக்கிறது சயந்தன்?
Post a Comment