Sunday, September 04, 2005

தந்தைக்கோர் தினம்!

தந்தையர் தினம்.

இன்னைக்கு செப்டம்பர் முதல் ஞாயிறாச்சே!
இது இங்கே எங்களுக்கு தந்தையர்க்கான நாள்!!!
ரெண்டுவாரமா எங்கே பார்த்தலும் 'ஃபாதர்ஸ் டே சேல்' நடந்துக்கிட்டு இருக்கு.
அதுலேகூடப் பாருங்க அப்பான்னாலே வீட்டுக்கு வேண்டிய D.I.Y. Tools தான் அதிகம்.
இல்லைய்யா ஷேவர், ஆஃப்டர் ஷேவ் லோஷன் இப்படி ஏதாவுது.


அம்மாங்க நாளுக்கு இதே கதைதான். அடுக்களைக்கு வேண்டிய 'kitchen gadgets'
இல்லையா, உள்ளாடைங்க, வாசனை திரவியங்கள்.

அது என்ன ஆம்புளையின்னா 'டூல்ஸ்' பொம்பளையின்னா அடுக்களை சாமான்?
ஒலகம் பூராவும் இதுலே மட்டும் சிந்தனை ஒரே மாதிரியா இருக்கோ?

நேத்துச் சாயந்திரம்வரை கோபாலுக்கு ஒண்ணும் வாங்கலை. வீக்லி ஷாப்பிங் செய்யக்
கடைங்களுக்குப் போனப்ப எங்கே பாத்தாலும், 'அப்பா நாளை மறந்துறப்போறோமோ'ன்ற
பயத்துலே கடைக்குக் கடை ஒரே விளம்பரம்.

என்ன கிஃப்ட் வேணுமுன்னு கேட்டுப் பார்த்தேன். இவர் அதெல்லாம் ஒண்ணும் வேணாமுன்னு சொல்லிட்டார்.
ஒரு கடையிலே நல்ல பாத்டவல் ( ஸேல்லே )இருந்துச்சு. நல்லா இருக்கு. வாங்கிக்கலாமான்னு கேட்டார்.
உடனே ரெண்டு டவலை( அவர் காசுலேயே)வாங்கி, அந்தக் கேரி பேகை அவர் கையிலே கொடுத்து
'ஹேப்பி ஃபாதர்ஸ் டே'ன்னு சொல்லிட்டேன். புருவ நெரிப்போட ஒரு பார்வை பார்த்தாரா, சரி வேற எதாவது
செய்யணுமுன்னு தீர்மானிச்சுட்டு 'நாளைக்கு நீங்களே இந்த டவலை ( ஒரே ஒருதடவை மட்டும்) முதல்லே
உபயோகியுங்க, உங்களுக்கு முன்னுரிமை'ன்னு சொல்லியாச்சு!

அது பாருங்க 22 வருசத்துக்கு முன்னாலே ஃபாதர்ஸ் டே அன்னிக்கு ஒரு நல்ல கிஃப்ட் கொடுத்தாச்சு. இனி
ஆயுசு பூரா அதுவே தாராளம்ன்ற அளவுக்கு. அதைவிட வேற என்ன ஒசத்தியாக் கொடுக்கமுடியும்?

என் மகள்தான் அந்த கிரேட் கிஃப்ட். இந்த வருசம் அவ பிறந்த தேதியும் தந்தையர் தினமும் ஒரே நாளுலே வருது.

ஹேப்பி ஃபாதர்ஸ் டே!!!!!!

ஹேப்பி பர்த்டே மது!!!!!!


27 comments:

said...

அதென்னங்க எல்லா பொம்பளங்களும் இதே மாதிரி யோசிக்கிறீங்க வீட்டு பொருட்களை வைச்சே ஜல்லியடிக்கிறீங்க? நாங்கலெல்லாம் இப்பிடியா செய்யிறோம் நகை கடை பக்கம் போறதில்லியா உங்களுக்காக? போகட்டும் பெரிய மனசு பண்ணி எதாவது நல்ல கிப்டா வாங்கிக் கொடுங்க!!

உங்க மகளிடம் எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லுங்க..!

said...

மகளுக்கு வாழ்த்துச் சொன்னதுக்கு நன்றி டுபுக்கு.

வேற என்ன நல்லதா இருக்கு கொடுக்கன்னு பார்க்கணும்!

அதுசரி, உங்களுக்கு என்ன கிஃப்ட் கிடைச்சது? அதைச் சொல்லுங்க.

said...

நெகிழ்ச்சியான பதிவு.அன்பே அமைதி,நெகிழ்வும் கொண்டது.அது உலகை இயக்கும் விந்தையுங்கூட!வாழ்த்துக்கள் நலமுடன் இன்புற,அனைவருக்கும்தாம்!!
ஸ்ரீரங்கன்

said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீரங்கன்.

said...

Happy birthday Madhu.
Dubukku,
That is not true.

said...

நன்றி பத்மா.

said...

உங்கள் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

//அது என்ன ஆம்புளையின்னா 'டூல்ஸ்' பொம்பளையின்னா அடுக்களை சாமான்? //

இப்படி மட்டும் பேசறீங்களே.. அதென்ன பெண்கள் தினங்களுக்கு கிஃப்டாக் கொடுக்க நகையும் நட்டும், ஆண்கள் தினம்னா லோ பட்ஜெட்லே "துண்டு"ன்னு நாங்க எப்பவாவது கேட்டிருக்கோமா?

said...

பாதர்ஸ் டே இல்லையோ? உங்கள் மகள்தானே பரிசு பற்றி கவலைப்பட வேண்டும் :-) அதுசரி, பிறந்தநாளுக்கு என்ன பரிசு என்று சொல்லவில்லையே :-) உங்கள் மகள் என்றும் நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துக்கள் துளசி.

said...

WISH YOU A VERY HAPPY BIRTHDAY, MADHU

said...

நன்றி சுரேஷ்.

இங்கே நியூஸியிலே நமக்கேது தங்கம்? எல்லாம் ஒம்போது கேரட். (சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்)

சரி துண்டு வேணாம். 'சடா'வா இருக்கற ஆஃப்டர்ஷேவ் லோஷன் பரவாயில்லையா?

said...

வாழ்த்துக்களுக்கு நன்றி அருணா.

புள்ளைங்க கொடுக்குதுன்னாலும் இதுதான் சாக்குன்னு அப்பாங்க மனைவிகிட்டே இருந்தும் பரிசு வாங்கிக்கற கலாச்சாரம் வந்துருச்சே!

மகள் அப்பாவுக்குக் கொடுத்தது ஒரு செட் டி.விடி,
செய்ன்ஃபீல்ட்.

மகளுக்குப் பிறந்தநாள் பரிசா
ஒரு நெட்பால் ஷூ. ஒரு பேட்மின்டன் மட்டை, புது உடுப்புவாங்கிக்கக் காசு, ஒரு கிறீஸ்டல் ஆர்ட் இப்படி.
அவ ஸ்போர்ட்ஸ் இன்ட்ரஸ்ட் உள்ள ஆளு.

said...

தருமி,
நன்றி.

said...

" 'சடா'வா இருக்கற ஆஃப்டர்ஷேவ் லோஷன் "

அது என்ன 'சடா'...?

said...

அடடே இன்னிக்கு உங்க ஊர்ல தந்தையர் தினமா? ஒரு அருமையான கவிதையைப் போட நாள் தேடிட்டு இருந்தேன். நீங்க கொடுத்திட்டீங்க. தாங்க்ஸ் துளசி! :)

மதுவிற்கும் அவளோட அம்மா & அப்பாவிற்கும் வாழ்த்துகள்!

அன்புடன்,
மதி

said...

மதுவுக்கு எமது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

தந்தையரை இழந்த மகள்கள் கணவனில்தானே அப்பாவைப் பார்க்கிறோம். சந்தடி சாக்கில் அப்பா.டாடின்னு கணவரைக் கொஞ்சும்போது, பரிசு வாங்கித் தருவதில் மட்டும் என்ன தப்பு? நீங்கள் செய்தது சரிதான்.

said...

வாழ்த்துக்கு நன்றி மதி. தனிமடல் பாருங்க.

said...

தருமி,

வட இந்தியா வீரப் பயணம் போயிட்டு இந்தி கத்துக்காம வந்துட்டீங்களே:-)

'சடா'ன்னா ஒண்ணுக்கும் உபயோகமில்லாதது. அழுகுல், ரோடுலே வீசி எறியத்தான் லாயக்கு இப்படி பல அர்த்தங்களிலே சொல்ற பேச்சு வழக்கு வார்த்தை ஹிந்தியிலே!

said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கலை!

said...

மஞ்சுளா,
வாழ்த்துக்களுக்கு நன்றி.

said...

தாணு,

சப்போர்ட்டு செஞ்சதுக்கு தேங்க்ஸ்ங்க.

said...

மதுக்கு (சில மணிநேரங்கள் பிந்திய) பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பல Cups பெற்று சந்தோசமா வாழட்டும்! :O)

said...

ஷ்ரேயா,

வீக் எண்ட் எப்படிப் போச்சு?

என்னடா ஆளைக்காணோமே, இன்னிக்கு லீவோன்னு நினைச்சேன்.

வாழ்த்துக்கு நன்றி

said...

unfortunately no holidays/leave! :O(

//வீக் எண்ட் எப்படிப் போச்சு?//

வழமையான மாதிரி தூக்கத்துலே 1/2 வாசியும் சாப்பாடு, விசிட்டிங், சுழட்டல்லே மீதியும்! :O)

நீங்க எப்பிடி? மகளுக்கு பார்ட்டியா?

said...

ஷ்ரேயா,
தனிமடல் பாருங்க.

said...

துளசிக்கா, மதுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

கோபால் ஸாருக்கு நல்லா ஒரு டின்னர் சமைச்சு நீங்க இன்ப அதிர்ச்சி கொடுக்கலாமே??

said...

வாழ்த்துக்கு நன்றி ரம்யா.

கோபால் ஸாருக்கு 'தினமுமே ரெண்டு வேளை இன்ப அதிர்ச்சி'கொடுத்துக்கிட்டுத்தான் இருக்குறது. ஒரு மாறுதலுக்கு வேணுமுன்னா 'துன்ப அதிர்ச்சி' கொடுக்கலாம்:-)