Monday, September 19, 2005

பனி மழை





படங்காட்டுனது போதும். நடக்கற வேலையைப் பாக்கலாமுன்னு நினைச்சா, எங்கே?


இதுலே தருமிவேற உனக்காச்சு எனக்காச்சுன்னு அறிகூவிக்கிட்டு இருக்கார்.


பொழுது விடிஞ்சதும் பார்த்தா 'ஸ்நோ' விழுந்துக்கிட்டு இருக்கு.


குளிர் காலம் முடிஞ்சிருச்சுன்னு நினைச்சது கனவாப் போச்சே(-:

செப்டம்பர் 19க்கு பனிமழை பொழிகிறது.


rest goes here


33 comments:

said...

அறை கூவல் இங்கே அறிகூவலாயிருச்சு.

எல்லாம் குளுருலே ஏற்பட்ட கை நடுக்கம்:-)
ஹுஹுஹுஹு.....

said...

தாமதமான பனிக்காலம் நம்ம மாநாட்ட பாதிச்சுரும்போலருக்கே?

said...

சுரேஷூ,

அங்கே எப்படி இருக்கு? குளுரா? ஸ்நோ வந்துருச்சா?

மாநாடு நல்லா நடக்கும். கவலை வேணாம். இங்கே நேத்து இருந்தது இண்ணைக்கு இருக்காது

அடடா என்னா தத்துவம்:-)

said...

நான் அலுவலகம் வந்தாச்சு. இனிமே என் பணியில (அதான் துளசிதளத்தில் பின்னூட்டம் போடுறது) இடையூறு 5 நாளைக்கு இருக்காது!!

இங்கே நல்ல வெய்யில் பீப்பிள்ஸ்!

said...

இங்க எப்ப ஸ்னோ விழுது? காத்துதான். நேரடியா அண்டார்டிகாலேர்ந்து வருதா இருக்ற எல்லா ஹீட்டரயும் போடவேண்டியிருக்கு. தத்துத்வதுல விவேகெல்லாம் பிச்ச வாங்கனும் போலருக்கே?

நீங்கதா வின்ஸ்டன் பீட்டரஸ கவுத்துட்டீங்கன்னு இங்க தமிழ் ரேடியோல
சொன்னாங்க உண்மையா?

said...

ஷ்ரேயா? அது என்ன 5 நாள்?

வாரம்பூரா ஸோ அண்ட் ஸோ லீவா?

சுரேஷூ,

இன்னிக்கு என்னமோ ஆயிருச்சு இங்கே.

இப்ப மழை ஆரம்பிச்சுருச்சு. கூடவே
ஹெய்ல் ஸ்டோனும் விழுது.

ஒரே களேபரம்.

ரேடியோலே சொல்லிட்டாங்களா? பேஷ் பேஷ்

said...

//இப்ப மழை ஆரம்பிச்சுருச்சு //

:O)

திங்கள் - வெள்ளி -> என் வலைப்பதிவு சேவைக்குரிய நாட்கள்.

ஸோ & ஸோ இன்றைக்கு மட்டுந்தான் leave. (அதுவே போதுமே எனக்கு!)

said...

ஜமாய்ங்க. ஏ.ஆர்.ஆர் பதிவு எப்ப?

said...

ஓஓ என் சாபம் "பழ"ிச்சிருச்சோ

said...

கணேஷூ,

இனி என்னத்தைப்பா சொல்றது?

நம்ம 'ஸ்பிரிங்கு ஃப்ளவர்ஸ்' எல்லாம் பனிமூடிக்கிடக்கே.

பொழைச்சுவந்தா புண்ணியம்.

விசுவோட ஒரு பழைய படத்துலே
கணேசா'ன்னு புஷ்பலதா( சம்பந்தி) கூப்புடறதை நினைவு படுத்தறேன்:-)

said...

எங்க ஊர்லே உச்சி வெயில் மண்டையைப் பொளந்திட்டு இருக்கு. நீங்க பனிக்கட்டி காட்டி வெறுப்பேத்தணுமா?

said...

நான் அலுவலகம் வந்தாச்சு. இனிமே என் பணியில (அதான் துளசிதளத்தில் பின்னூட்டம் போடுறது) இடையூறு 5 நாளைக்கு இருக்காது!!"
- ஏன் துளசி, இந்தப் பொண்ணு ஷ்ரேயா..கொஞ்சம் டூ மச்'தான் இல்ல?

தாணு,
இக்கரைக்கு அக்கரைப் பச்சை மாதிரி இருக்குமா, இல்ல, இந்த துளசி, சுரேஷ் இவ்ங்க எல்லாம் ரொம்ப enjoy பண்ணிட்டு நம்மட்ட சும்மாவாச்சுக்கும் 'பந்தா' காமிக்கிறாங்களா? தெரியலையே!

said...

தாணு & தருமி,


வெய்யிலா இருந்தாலும் 'உஸ் உஸ்'ன்னுக்கிட்டு தண்ணி குடிச்சுக்கிட்டே
( அதான் டாக்குட்டர்ங்கெல்லாம் சொல்றாங்களே 2 லிட்டர் தண்ணி ஒரு நாளைக்குக்
குடிக்கணுமுன்னு) வீட்டு வேலையாவது செய்யலாம்.இந்தக் குளுருலே வேலையே
ஓடமாட்டேங்குதே(-: தண்ணித்தாகமும் எடுக்கறதே இல்லை.

ஹீட்டர்க்கிட்டே உக்காந்துக்கிட்டு ச்சும்மா இருக்கறப்ப டி.வி யோ அல்லது எதாவது
சினிமாவையோ ஓடவிடுறதுதானே முறை? அப்ப கண்ணு பாக்க சொல்ல வாய் ச்சும்மா இருக்குமா?
எதையாவது அரைக்கச் சொல்லுது. அப்ப ஏன் உடம்பு 'குண்ட'டிக்காது?
குளுருமே ஒரு அளவோடிருந்தா தொலையட்டுமுன்னு விட்டுறலாம்.ஆனா.... 2 டிகிரியிலே எப்படி?
மத்த நாடுகள் போல இங்கே வீடுகளிலே 'சென்ட்ரல் ஹீட்டிங்' கிடையாதே.

நம்ம வீட்டுலே ஹீட் பம்ப் தான். கட்டை போட்டு எரிச்சா நல்ல சூடு வரும். ஸ்மோக் ப்ராப்ளம்னு
இப்ப எங்க ஊர்லே கட்டை பர்னருக்குத் தடா.

1992 ஆகஸ்ட் 20க்கு இந்தமாதிரி ஒண்ணு வந்துச்சு. இன்னிக்கு ஸ்கூல். ஆஃபீஸ் எல்லாமே லீவுதான்.
ரோடு தெரிஞ்சாதானே, வேலைக்கு வண்டியிலேயாவது வரமுடியும்?

நாளைக்கு எப்படி இருக்கப்போகுதோ?

பேசாம நீங்க எல்லாம் ஜூலை, ஆகஸ்ட்லே ஒரு இங்கே ட்ரிப் அடியுங்க.
அப்பத்தெரிஞ்சக்கலாமே பந்தாவா என்னன்னு?

போட்டுங்க தருமி இந்த ஷ்ரேயாப் பொண்ணு. நான் இல்லேன்னா அதுக்குக் கையொடிஞ்சமாதிரி
இருக்காதா?:-))))))

said...

//ஆனா.... 2 டிகிரியிலே எப்படி?//

ரெண்டு டிகிரிக்கே இப்படி சலிச்சுக்கிறீங்களே.. :(

ஆனா சொல்லுங்க, மத்தியானக் குளிருக்கு நல்லா தயிர் சாதத்தில் சுடச்சுட தக்காளி ரசத்த கலந்து, அதில் கொஞ்சம் ஆவக்காயும் மிக்ஸ் பண்ணி குளுகுளுன்னு அடிச்சிட்டு, ஏதாவது ஒரு படத்தயும் தட்டிவிட்டுட்டு, ஹெவியான போர்வைக்குள்ள போய் புகுந்துகிட்டா, வெளியே வரவே தோணாது... :))

//இங்கே வீடுகளிலே 'சென்ட்ரல் ஹீட்டிங்' கிடையாதே.//
அய்யோ! அப்ப நியுஸில குளிர்காலத்தில சாதாரண மக்கள்லாம் என்ன பண்ணுவாங்க பாவம்? ஹீட்டர் வேலை செய்யும்போதே இப்படிக் குளிருதே எனக்கெல்லாம்...

said...

சின்னவரே,

ஒளிவட்டம்( ச்சின்னதா இருந்தாலும் பரவாயில்லே!) போட்டதுக்கு 'தேங்க்ஸ்பா

said...

//அய்யோ! அப்ப நியுஸில குளிர்காலத்தில சாதாரண மக்கள்லாம் என்ன பண்ணுவாங்க பாவம்? //

எங்களைப்போல இருக்கற சாதரண மக்கள் எல்லாருமே கேஸ் ஹீட்டர்ஸ், ஆயில் காலம்(ன்),
ஃபேன் ஹீட்டர்ஸ்னு வச்சுக் காலத்தை ஓட்டறதுதான்.

இங்கே நியூஸிக்கு அந்தக் காலத்துலே புலம் பெயர்ந்தவங்க விவசாயிகளே. அதான்லே அங்கே ஃபார்ம் லே எரிச்ச மாதிரியே கட்டைங்களை போட்டு எரிச்சுக்கிட்டு இருந்து அதையே ஒரு ஸ்டாண்டர்ட் ப்ராக்டீஸ் செஞ்சுட்டாங்க.

இப்ப ஹீட் பம்பு வர ஆரம்பிச்சிருக்கு.

said...

//ஏன் துளசி, இந்தப் பொண்ணு ஷ்ரேயா..கொஞ்சம் டூ மச்'தான் இல்ல?//

தருமி.. இப்பிடிப் புகையறது உங்களுக்கே சரியாப் படுதா???

//நான் இல்லேன்னா அதுக்குக் கையொடிஞ்சமாதிரி
இருக்காதா?:-)))))) //

திறந்த வாய் இன்னும் மூடல்ல!(நல்ல காலம், ஈ ஒன்றும் அலுவலகத்துலே இல்ல!)

said...

ஷ்ரேயா,
அனுப்பி வைக்கவா?

said...

ஐயோ! வேணாம்.

என்ன, அதுக்கிடையில உங்க ஊர்ல summerக்குரிய குண்டு குண்டு ஈக்கள் (blow fly) வந்திட்டுதா?

said...

இன்னும் அந்த குண்டு வரலை. ஆனா கொஞ்சம்
ச்சின்னது வருது. நேத்து லீவு விட்டுருச்சு.

நம்ம பசங்களை விஸிட் செய்யத்தான் இதுங்க வருது. அந்தச் சாப்பாட்டு வாசனையா?

said...

இருக்கும்.
zzzzzzzzzனு இரைஞ்சுட்டே பறக்கும்! :O(

said...

// கணேசா'ன்னு புஷ்பலதா( சம்பந்தி) கூப்புடறதை நினைவு படுத்தறேன்:-) //

அது "டெளரி கல்யாணம்"


கவலைப் படாதீங்க துளசி.... உங்க "ஸ்பிரிங்கு ஃப்ளவர்ஸ்" எல்லாம் பிழைச்சு வந்திடும்...

said...

ஏதோ உங்க ஆசீர்வாதம் பலிக்கட்டும் 'கணேசா'

said...

அடாடா என்ன பனிமழை........இங்க பெங்களூருல பனிக்கு எங்க போக. ஏதோ ஒருவாரம் அடிச்ச வெயிலுக்கு இன்னைக்குதான் லேசா மழை பேஞ்சிருக்கு. அதுல மனச தேத்திக்கிற வேண்டியதுதான்.

ஆனா குளிருக்கெல்லாம் வத்தக்குழம்புதான் பெட்டர். கூட ரெண்டு அப்பளம் மட்டும் போதும். அசைவாளா இருந்தா சுர்ருன்னு கோழிச்சாறு காச்சிக்கிற வேண்டியதுதான்.

said...

ராகவன்,
இந்த வத்தக்குழம்பு ரைட்.
ஒரு நாளு, ஒரு வாரம்ன்னா பரவாயில்லே.
ஒரேடியா 4 மாசம்ன்னா?

அதையுமே யாரு செய்யறது? அதான் குளுருலே 'புளி' கரைக்க முடியாமக் கை முடங்கிக் கிடக்கே:-)))

said...

அதுவும் உண்மைதான். தெனமுமா வத்தக் குழம்பு.......அந்த ஊர்க்காரங்க என்ன செய்ராங்கன்னு கேக்கக்கூடாதா?

said...

ராகவன்,
பயந்துட்டீங்களா? குளுர் ஒரு பக்கம் இருந்தாலும் வக்கணையாத் தின்னாம இருக்க முடியுதா?
நமக்கெல்லாம் நாக்கு கொஞ்சம் நீளமாச்சே:-)))

இருக்கற இடத்துக்குத் தகுந்தமாதிரி மாத்திக்கிட்டேன், ரெண்டு நாளைக்கு ஒருதடவை 'தயிர் தோய்க்கிறது'
வாராவாரம் மாவு அரைச்சு வச்சுக்கறதுன்னு.
இங்கே ஹாட் ஏர் அவன் ஒண்ணு கிடைக்குது. எண்ணெய் இல்லாம ஃபிங்கர் சிப்ஸ் எல்லாம் செய்யலாமுன்னு
டிவி.லே காமிச்சான். அது ஒண்ணு வாங்கினேன். சிப்ஸை விடுங்க. அதோட உபயோகம் ஏராளம்.
தயிர் தோய்க்க, மாவு புளிக்க, பேல்பூரிக்கு நமத்துப் போன பொரியை மறுபடி க்ரஞ்சியாக்கன்னு.
இப்ப அது மண்டையைப் போட்டா ஓடணும் இன்னொண்ணூ வாங்கிக்க.

அதேபோல 'டிஹைட்ரேட்டர்' வாங்கி இப்ப அதுலே வடாம் எல்லாம் பிழிஞ்சாறது.
அப்புறம் இருக்கவே இருக்கு ஃப்ரீஸர். நிறைய செஞ்சு ச்சின்னசின்ன டப்பாலே விட்டு
வச்சிட்டா, இஷ்டம் போல சப்ளை.

அடை மாவு மொதக் கொண்டு ஃப்ரீஸர்லே இருக்கு.

மொத்தத்துலே கொஞ்சம் சோம்பல் படலைன்னா,'குறையொன்றுமில்லை
மறை மூர்த்தி கண்ணா'தான்.

said...

அடேங்கப்பா! உங்களை இல்லத்து அரசிகளின் அரசின்னு சொல்லலாமா? சரியாத்தானிருக்கும்.

புளியெல்லாம் இப்ப பேஸ்டாவே வருது. வாங்கி பிதுக்கிக்கிட்டா புளிக்குழம்பு. இல்லைன்னா வெண்டக்காக் குழம்பு.

அது சரி. கேப்பைப் புட்டு செஞ்சி வெங்காயம் பச்ச மொளகா போட்டுத் தாளிச்சிச் சாப்பிட்டாலும் குளிருக்கு இதமா இருக்கும்.

said...

புளிப் பேஸ்ட்டைவிட ஒரு நாள் புளியை கொஞ்சம் அதிகமாப் போட்டுக் கரைச்சுட்டு( நான் மிக்ஸியிலே
போட்டு அரைச்சுடுவேன். சக்கையாப் பிழியறதுக்கு)
அதை ஃப்ரீஸர்லே ஐஸ் க்யூப்ஸ் பண்ணி வச்சுக்கிட்டா, குழம்பு, ரசத்துலே அப்பப்ப
நாலஞ்சுன்னு 'எறிய' செளகரியமா இருக்கும்.

தாணுவுக்கும், ராமநாதனுக்கும் பயந்துக்கிட்டே இதையெல்லாம் எழுதவேண்டியிருக்கு:-)))

நேரம் சேமிக்க ஒரு பதிவு முந்தி மரத்தடியிலே போட்டுருந்தேன். அதை வேணா ஒரு மீள்பதிவாப் போடட்டுமா?

said...

// புளிப் பேஸ்ட்டைவிட ஒரு நாள் புளியை கொஞ்சம் அதிகமாப் போட்டுக் கரைச்சுட்டு( நான் மிக்ஸியிலே
போட்டு அரைச்சுடுவேன். சக்கையாப் பிழியறதுக்கு)
அதை ஃப்ரீஸர்லே ஐஸ் க்யூப்ஸ் பண்ணி வச்சுக்கிட்டா, குழம்பு, ரசத்துலே அப்பப்ப
நாலஞ்சுன்னு 'எறிய' செளகரியமா இருக்கும். //

அட இது நல்ல டெக்னிக்கா இருக்கே.........ஆயிரம் வகை கண்டுபிடித்த அபூர்வ சிந்தாமணி பட்டமே ஒங்களுக்குக் குடுக்கலாம். குடுக்கலாம் என்ன? மனசார குடுக்கிறேன்னே வெச்சுக்குங்க.

said...

ராகவன்,
இதுக்கே பட்டம் கொடுத்துட்டா எப்படி?

இதுலேபோய்ப் பார்த்துட்டு அப்புறமா கொடுங்க.

http://www.maraththadi.com/article.asp?id=1822

said...

சிகாகோ ஆட்களுக்கேவா..? இருங்க அடுத்த மாசம் படம் போட்டுர்றேன்..

இப்பத்தான் மெதுவா குளிர் ஆரம்பம்.. வீட்ல எல்லாருக்கும் சளி.

தும்மலுடன்...
சிறில் அலெக்ஸ்
:)

said...

வாங்க சிறில்.

தனி வீட்டுக்குப்போனதும் தலைகால் புரியலையா? :-)))))

ச்சும்மா...............

பனிமழை ரெண்டு வருசம் முன்பு இதே நாள்:-)
( கொசுவத்தி கொளுத்துக)

இன்னிக்கு அதாவது உண்மையான இன்றைக்கு 13 டிகிரின்னு
சொல்லி இருக்காங்க. நம்பிட்டேன்:-)