ஒரு நாள் நம்ம மதிகிட்டே ஃபோன்லே பேசிக்கிட்டு இருந்தப்ப, 'நீங்க இருக்கற ஊரையும், நாட்டையும் பத்திஎழுதுங்களேன்'னு சொன்னாங்க. நானும் ரொம்ப மெத்தனமா, 'வேற ஒரு இணைய இதழ்லே ஏற்கெனவே ஒருதொடரா 13 வாரத்துக்கு எழுதியிருக்கேன். கடைசிப் பகுதி வெளியிடறதுக்கு முந்தி ஏதோ காரணத்தாலே அந்தஇதழ் அப்படியே நின்னு போச்சு'ன்னு சொன்னேன்.
அப்புறம் அந்த விஷயத்தை 'அசை' போட்டுக்கிட்டு இருந்தப்ப, என்னதான் எழுதினேன்னு மறுபடியும் பார்த்தேன்.ரொம்ப மேலோட்டமாத்தான் எழுதியிருக்கேன். ஒரு புது நாட்டுலே வந்து வசிக்கறப்ப, இல்லே வர்றதுக்கு முன்னாலே அந்த நாட்டைப் பத்தித் தெளிவாத் தெரிஞ்சுகிட்டா வர்றோம்?
அங்கே நம்மாளுங்க இருக்காங்களா, அரிசி, உப்புப் புளி மிளகாயெல்லாம் கிடைக்குதான்னு பார்த்தேனே தவிர,அங்கே வேற என்ன பாஷை இருக்கு, அவுங்க பழக்க வழக்கம் எப்படின்னெல்லாம் தெரிஞ்சுக்கத் தோணலை.'வெள்ளைக்காரங்க தேசம்( என்ன ஒரு தப்பான கணிப்பு!)தானே, எல்லாம் நம்ம இங்கிலீஷே போதும்'ன்றஒரு தைரியம். எங்க இவர் வேற குடும்பத்தோடு இங்கே நாங்க வர்றதுக்கு முன்னாலே,'ஒரு நடை(!) போய்ப் அங்கே ஃபேக்டரியெல்லாம் எந்த நிலைமையிலே இருக்குன்னு பார்க்கணும். அப்படிப் பார்த்துட்டுத்தான் கிடைச்ச மாற்றலை ஏத்துக்கிறதா வேணாமான்னு முடிவு செய்யணுமு'ன்னு சொல்லிக்கிட்டுஇருந்தார். நானும் ஒரு லிஸ்ட் கொடுத்தனுப்புனேன். இதுக்குதான் நான் எப்பவும் 'ரெடி' யாச்சே!
திரும்பிவந்தவுடனே 'ஊர் நல்லாத்தான் இருக்கு. எனக்கும் வேலை செய்யற இடம், அங்கே இருக்கற மத்தஆளுங்க எல்லாமும் பரவாயில்லை. குளுர்தான் கூடுதலா இருக்கு. அடுத்த மாசத்திலே இருந்து( இவர் போனதுஒரு ஆகஸ்ட் மாசம்) குளிர் குறைஞ்சுருமாம். வீடுங்களும் வசதியாத்தான் இருக்கு. கூட வேலை செய்யப்போறசிலருடைய வீடுகளுக்குப் போயிருந்தேன். இங்கே நாம ஃபேன் போட்டுக்கறமாதிரி அங்கே 'ஹீட்டர்ஸ்' போட்டுக்கணும்.அப்பக் குளிர் தெரியாது(!)ன்னு சொன்னார்.
அங்கே எல்லா வீடுகளும், தெருக்களும் அமைதியா இருக்கு. நீ எப்பப்பார்த்தாலும் மிக்ஸியிலே எதாவது அரைச்சுக்கிட்டுஇருக்கியே. அதை நினைச்சாத்தான் கவலையா இருக்கு,அக்கம்பக்கத்துலே சத்தம் கேக்குமேன்னு. சொல்லிக்கிட்டேஒரு ச்சின்ன டயரியைக் காமிச்சார். பப்படம், ச்சிக் பீஸ், ரைஸ், கறி பவுடர்..... இப்படி சில எழுதியிருந்துச்சு. என்னன்னாஇங்கே ஒரு பெரிய டிபார்ட்மென்ட்(டல்) ஸ்டோர்ஸ் போனாராம். அங்கே சகலமும் கிடைக்குமாம். இதெல்லாம் கூடஇருக்குதாம். அப்புறம் 'கிறைஸ்ட்சர்ச்'ன்னு ஒரு புத்தகம் நிறையப் படங்களோடு. பார்க்கறதுக்கே அட்டகாசமாஇருந்துச்சு. பெரிய பெரிய தோட்டங்களும், கலைநயத்தோடு கூடுன கட்டிடங்களும், கலர்க்கலராப் பூக்களுமா ஏதோதேவலோகம் போல( நான் எப்ப தேவலோகம் போனேன்னு கேக்காதீங்க) இருக்கு. அதுசரி. டூரிஸ்ட்டுங்களுக்காகபோடற புத்தகம் வேற எப்படி இருக்கும்? ஆனா அது அப்பத் தெரியலையே(-:
அதுக்கப்புறம் தான் ஒரு 'நல்ல விஷயம்' சொன்னார். 'எல்லாப் பெண்களும் கையிலே வைர மோதிரம் போட்டிருக்காங்க.உனக்கும் ஒண்ணு வாங்கிரலாம்'. ஆஹா யோகம் வந்திருக்குன்னு இருந்தேன். பாவம் இவர். என் நல்ல காலம்,வைரமோதிரம் போட்ட பெண்களை மாத்திரமே பார்த்திருக்கார்!
வொர்க் பர்மிட் வாங்கி அனுப்பறோம். உடனே வந்து சேர்ந்திருங்கன்னு அங்கே சொன்னாங்களாம். ஆனா இவர்நிரந்தரமா வசிக்கிற உரிமை கிடைச்சால்தான் வருவேன்னு சொன்னதாலே அதுக்கு அனுமதி வாங்க சிலமாசம்காத்திருக்கும்படியா ஆச்சு. அப்பதான் நாங்க இருந்த ஃபிஜித் தீவுகளிலே ராணுவம் ஆட்சியைப் புடிச்சுக்கிட்டுஒரே அமர்க்களமா இருந்ததாலே அங்கே இருக்குற நியூஸிலாந்து ஹைகமிஷன் வேலைங்க எல்லாம் ரொம்பமெதுவா நடந்துக்கிட்டு இருந்தது. முக்கிய அதிகாரிகள் எல்லாம் இங்கே திரும்ப வந்துட்டாங்க. ஒரு மாதிரி நிலமை சரியாகி, எங்களைக் கூப்பிட்டு இன்டர்வியூ செஞ்சு, எங்க பாஸ்போட்டுகளிலே பி.ஆர்.ன்னு ஸ்டாம்புஅடிச்சு பிப்ரவரி மாசம் முதல் வாரத்துலே நாங்க இங்கே வர்றது உறுதியாச்சு. அப்பதான் என்னோட பிறந்தநாளும்வந்துச்சு. அடிச்சேன் பிரைஸ், அருமையான வைர மோதிரம்! இனி மூட்டை முடிச்சைக் கட்டவேண்டியதுதான்.
கிளம்பறதுக்கு ஒரு வாரம் இருக்கப்பவே வீட்டு சாமான்களையெல்லாம் அனுப்பிட்டோம். அதுலே அரிசி, பருப்பு, புளிமிளகாய்வத்தல் இப்படி ஏராளமான சாமான்களை வச்சுட்டோம். வந்தவுடனே சாப்பிடவேணாமா? கடைகண்ணியைத்தேடறவரை பட்டினியாவா இருக்கமுடியும்? அக்கம்பக்கம் மிக்ஸி சத்தம் கேட்டா வம்போன்னு பயந்துக்கிட்டு இட்டிலிக்குத்தொட்டுக்கறதுக்கு மொளகாப்பொடி நிறைய ,ஒரு ஆறுமாசம் வர்றமாதிரி அரைச்சே வச்சுட்டேன். இங்கத்துக் குளுருலேமாவு புளிக்காம இட்டிலி/தோசைக்கு 'டாட்டா' சொல்லவேண்டியதாப் போச்சு. அந்த ஆறு மாச ஸ்டாக் நமக்கு ரெண்டு வருசம் வந்துச்சுன்னா பாருங்களேன். என்னா, இங்கே இருக்குற வெதருக்கு சாமான்கள் ஒண்ணும் கெட்டுப்போறதில்லை!
இப்ப இந்த நாட்டுக்குள்ளே கொண்டுவர்ற பொருட்களுக்கு ஏகப்பட்டக் கட்டுப்பாடு இருக்கு. ஏர்போர்ட்லே 'நாய்' நம்ம பெட்டிங்களையெல்லாம் வாசனை பிடிச்சு, வேண்டாத சாமான் இருந்தாச் சொல்லிருது. ஆனா அப்ப அவ்வளவு கடுமை இல்லை.( இப்பத்தான் முழிச்சுக்கிட்டாங்க போலெ)
இந்த ஏர்போர்ட் நாய்ன்னதுன் இன்னொரு விஷயம் ஞாபகம் வந்துருச்சு. அப்புறமாச் சொல்லலாமுன்னு பார்த்தா...எங்கே?'மருந்து குடிக்கிறப்ப குரங்கை நினைக்காதே'தான். மனசுக்குள்ளெ உக்காந்துக்கிட்டுப் பிராண்டுது. சொல்லிடறேன்.ரரத்த்ரி தூங்கணுமில்லே.
ஒரு சமயம் நானும் மகளும் சென்னையிலே இருந்து இங்கே தனியா வந்தோம்.இலந்தவடை'ன்னு ஒண்ணு இருக்கு தெரியுமா?மகளுக்கு அது ரொம்பவே பிடிக்கும். அதை அம்பிகா அப்பளம் டெப்போ லே நிறைய வாங்கி கைப்பையிலே வச்சுக்கிட்டுநாலைஞ்சு நாளாத் தின்னுக்கிட்டே இருந்தோம். அதோடயே சிங்கப்பூர் வந்து அங்கேயும் கொஞ்சம் தின்னோம். ரெண்டு நாளுஅங்கே சுத்தினப்ப, அங்கேயிருக்கற தீனிகளையும் விடலை. ஒருவழியா கிறைஸ்ட்சர்ச் வந்து சேர்ந்துட்டோம். ஏற்கெனவேநல்லா பேக் செஞ்சிருந்த தீனிகளை 'டிக்ளேர்' செஞ்சுறலாம். பிரச்சனையில்லை. பிளேன்லே இருந்து இம்மிகிரேஷன்வர்ற வழியெல்லாம் இங்கே கொண்டுவரக்கூடாத சாமான்கள் இருக்கான்னு பாரு. பிடிச்சுட்டா $10,000 அபராதம்னுஅறிவிப்பா இருக்குல்லே, அதைப் பார்த்துக்கிட்டே வர்றோம். மகள் சொன்னா, தலையெல்லாம் கலைஞ்சிருக்கு. ரெஸ்ட்ரூம்லே தலைவாரணும், சீப்பு தாங்க'ன்னு கேட்டாளா, சீப்பை எடுக்கக் கையை விடறேன், கையோடு வருதுஇலந்தவடை பேக்கெட். பக்காவான பேக் இல்லை. சும்மா பாலித்லீன் பேக். பேரு இல்லை, mfg & exp date ஒண்ணும்இல்லை. ச்சின்னதுதான். ரெண்டுலேயும் 12+12 வடை இருக்கு. தூக்கிக் கடாசிடலாம்னா மனசு வருதா. மகள் சொல்றா,இங்கே இது கிடைக்காதுல்லே. தெரிஞ்சிருந்தா ப்ளேன்லேயே தின்னுருப்பேன். அதான் நல்லா தூங்கிக்கிட்டு வந்தியேன்னுசொல்லிட்டு இப்பத் தின்னுடறயான்னு கேட்டேன். சரின்னாளா, ஆளுக்கு ஒரு பேக்ன்னு அவசர அவசரமாத் தின்னுட்டுஇமிகிரேஷன் வந்தப்ப, எல்லோரும் போயிட்டு காலியா இருக்கு. நாய் கிட்டே வந்து நின்னுது. ஹேண்ட் பேகைக்காமிச்சேனா, மோந்து பார்த்துட்டு என் கையை மெதுவா நக்குச்சு. கொஞ்சம் தடவிக் குடுத்து 'குட் பாய்' சொல்லிட்டுவெளியே வந்து, பெல்ட்டுலே தனியாச் சுத்திக்கிட்டு இருந்த பெட்டிங்களை எடுத்தோம்.
எங்களைக் கூட்டிட்டுப் போகவந்த கோபால், இதென்னடா எல்லோரும் வெளியே வந்துட்டாங்க. இவுங்களைக் காணலையேன்னு தவிச்சுக்கிட்டு இருந்தாராம்.
'இப்ப இங்கே கோடைகாலம். நல்ல வெய்யில் இருக்கு'ன்னு இவரோட ஆஃபீஸ்லே இருந்து ஃபோன்லே சொன்னாங்க.நாங்களும் ஹாயா வந்து இறங்கிட்டோம். விமானநிலையத்துக்குள்ளெ இருந்து வெளியே வந்தவுடனே 'ச்சில்'ன்னுகாத்து மூஞ்சுலே அறையுது. அங்கே மத்த ஆளுங்கெல்லாம் 'சம்மர் சம்மர்'னு அரை நிஜார் போட்டுக்கிட்டு அலையறாங்க.ஆத்தாடி, என்னமாக் குளுருதுன்னு நடுங்கிகிட்டே ஹோட்டலுக்குப் போய்ச் சேர்ந்தோம். கோடை காலம்னு சொல்லிஅங்கே எல்லா ரூம் ஹீட்டர்ஸ்ம் ஆஃப்லே இருக்கு. ரிசப்ஷன்லே தொணப்பினப்புறம் ஒரு ச்சின்ன ஹீட்டர் கொண்டுவந்து ரூம்லே வச்சுட்டுப் போனாங்க. அதைச் சுத்தி உக்காந்துக்கிட்டு இருந்தோம். இது கோடையாம்! அப்பக் குளிர்?
அப்புறம் ஒரு மாதிரியா இங்கே செட்டில் ஆகி இப்ப 18 வருசமாச்சு. இங்கே வெள்ளைக்காரங்களைத்தவிர இங்கத்துநேடிவ் ஆளுங்களான 'மவோரி இன'மக்களும் இருக்காங்க. அவுங்களுக்குன்னு தனி பாஷையும், கலாச்சாரமும்இருக்கு. இந்தப் பதினெட்டு வருசத்துலே மேலோட்டமா அவுங்களைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டதைத்தவிர, உண்மையானஆர்வத்தோட ஏதாவது அவுங்க மொழியைப் பேசவோ, அட்லீஸ்ட் பேசுனாப் புரிஞ்சுக்கவோ செஞ்சிருக்கேனா?
ஊஹூம்... இல்லவே இல்லை. காரணத்தை யோசிச்சுப் பார்த்தா, எல்லோருமே இங்கிலீஷ் பேசிடறாங்க. மவோரிஇன மக்களும் நம்மகிட்டே ஆங்கிலமே பேசறதாலே,இதுவரை பிரச்சனையை நேரிடலை. 100 சதமானம் மவோரிரத்தம் உள்ளவங்க( ஏங்க எல்லா ரத்தமும் ஒண்ணுதானே? சிகப்பு?) இப்ப இல்லவே இல்லையாம். வெள்ளையரோடுதிருமணம் செஞ்சுக்கிட்டவங்களாலே ஒரு கலப்பினமா இருக்காங்களாம் இவுங்க. ஆனாலும் அவுங்க மூதாதையர்எந்த 'ஈவி'யோ ( க்ரூப்) அதுலே இவுங்களைச் சேர்த்துருவாங்களாம். முப்பாட்டனுக்கு முப்பாட்டன்/முப்பாட்டிமவோரியா இருந்தாலும் போதுமாம். அப்படி எதுக்கு இனம் காட்டிக்கணும்? காரணம் இருக்கே! கிடைக்கிற சலுகைகள்!!இதைப் பத்தி அப்புறம் விலாவரியாச் சொல்றேன்.
இப்ப இவுங்க 'முழிச்சுகிட்டாங்க'. தங்களுடைய மொழியைக் காப்பாத்தணுமுன்னும், கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கணுமுன்னும் தீர்மானிச்சுட்டாங்க. ஒரு டெலிவிஷன் ச்சேனல் கூடத்( மக்கள் வரிப்பணத்துலே) தொடங்கியிருக்காங்க. தவறுதலாஅந்தச் ச்சேனலைப் போட்டாலும், என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்காம உடனே வேற இடத்துக்குத் தாவிருவேன்.எல்லாரும் அப்படித்தானாம். நண்பர்கள் வட்டத்துலே பேசும்போது சொன்னது!
நாங்க வந்த புதுசுலே ச்சின்னப்புள்ளைங்களுக்காகவே போடற பகல் நிகழ்ச்சிகளிலே 'கஹங்காரியோ'ன்னு ஒருஅரைமணி நேரம் மவோரியும் ஆங்கிலமுமா கலந்து வந்துச்சு. அப்புறம் கொஞ்ச நாளுலே அது நின்னு போச்சு.
இப்பத்தான் உண்மையான ஆர்வம் இவுங்களைப் பத்தித் தெரிஞ்சிக்கணுமுன்னு வந்திருக்கு. மொத வேலையாஎங்க லைப்ரரிக்குப் போய் நிறைய புத்தகங்களை அள்ளிக்கிட்டு வந்தேன். அதென்ன 'எங்க லைப்ரரி?'நானு ஒரு ச்ச்சின்னப் பசங்களுக்காகவே இருக்குற லைப்ரரியிலே வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன். அங்கே ரொம்ப சிம்பிள் வழியிலே இந்தக் கலாச்சாரம் பத்தி எழுதுன புத்தகங்கள் நிறைய இருக்கு. எல்லாமே 'ஈஸி ரீடிங்'
இது எல்லாத்தையும் மேய்ஞ்சிட்டு, உங்களுக்குச் சொல்லப்போறேன். அதுவரைக்கும் எல்லாம் சத்தம் கித்தம்போடாம, நான் ( மேலோட்டமா) எழுதுன தொடர் கட்டுரையை( 'வியாஸம்' னு பாரதியார் சொல்றார். இந்த வார்த்தைஎனக்கு பிடிச்சுப் போச்சு!) பதிவாப் போடப்போறேன். அது முடிஞ்சவுடன் புது வியாஸம் தொடரும்:-)
என்ன சரிதானே?
ஒண்ணு சொல்ல விட்டுப் போச்சே. நீங்கப் படிக்கப்போறதோட 'நடை' கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்/இருக்கலாம்.வேற ஒரு இதழுக்கு அனுப்பறமேன்னு கொஞ்சம் 'நடையை மாத்திப் பாத்தேன்'. அதையெல்லாம் கண்டுகிடாதீங்க..
Tuesday, September 20, 2005
நியூஸிலாந்து. பகுதி 1
Posted by துளசி கோபால் at 9/20/2005 09:53:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
நல்ல தொடர், வாழ்த்துக்கள்.
ஆரம்பிங்க... சந்தோஷமா கதை கேக்கிறோம்...
//இங்கே இருக்குற வெதருக்கு சாமான்கள் ஒண்ணும் கெட்டுப்போறதில்லை!
அதான் பார்த்தேனே என்னவோ சேர்-லாம் ஃபீரிசர்ல வச்சமாதிரி.
எப்படித்தான் இருக்கிறீங்களோ - எங்களுக்கு ஃபிரிஜ் (குளிர்பதனப்பெட்டி) திறந்தாலே சளி பிடிச்சுடுது:)
//ரெண்டுலேயும் 12+12 வடை
//ஆளுக்கு ஒரு பேக்ன்னு அவசர அவசரமாத் தின்னுட்டுஇமிகிரேஷன் வந்தப்ப,
நல்ல அம்மா, நல்ல பொண்ணு...
(இது இரண்டாவது முறையா சொல்றேன்னு நினைக்கிறேன்...)
aathadi unagalluku avalo peria ponnu irukka?
துளசி
குழிப்பந்து ஆட்டக்காரர் ஜேசன் கேம்பெல்
" மவோரி " இனத்தவரா..
நன்றாக ஆரம்பித்துள்ளீர்கள்..நன்றி
நல்ல தொடக்கம் துளசி.
அடுத்த பதின்மூன்று பதிவுகளுக்கும் சுட்டி கொடுத்துவிட்டு ஆரம்பியுங்களேன்.
சேரியமாகச் சொல்வதானால், எனக்கு உங்களுடைய அந்தத் தொடர் பிடிக்கவில்லை. நீங்கள் நீங்களாகத் தெரியவில்லை. கூடவே ரொம்ப ரொம்ப மேலோட்டமாக இருந்துச்சு.
புதுசாத் தொடங்கிருங்க துளசிக்கா. இப்போதைய நடையிலேயே!
என்ன சொல்றீங்க???
-மதி
நன்றி அன்பு.
( நம்ம ஸ்டைல்லே தனித்தனியா நன்றி சொல்லணும். மனுஷங்களை மதிக்கத்தாவலை?)
என்னம்மா சிநேகிதி, கொழந்தைப் புள்ளையா இருக்கியேம்மா. அடி, ஆத்தீ
என் பொண்ணுக்கு 22 வயச்சாச்சு.
வாசன்,
குழிப்பந்து + கோல்ஃப்தானே?
மைக்கேல் கேம்பெல் தானே நீங்க கேக்கறது?
அவர் கொஞ்சம் ஃபஸிபிக் மவோரி மிக்ஸ்னு சொன்னாங்க.
மதி,
நீங்க தான் இதை ஆரம்பிச்சதுக்கேக் காரணம்.
நல்லா வருதா?
ச்சுட்டி கொடுக்க முடியலை. அந்த 'சைட்டே' காலி. ஒண்ணும் எடுக்க முடியாது போல.
திரும்ப எழுதக் கொஞ்சம் சோம்பல்.
இன்னொரு நடை ( வாத்து நடை) மக்களுக்குத் தெரியட்டுமே. அதுமோசமா இருக்கறதாலே இப்பத்து நடையை பாராட்டமாட்டாங்களா:-))))
எல்லாம் ஒரு நப்பாசைதான்.
என்ன சொல்றீங்க மதி?
good beginning, interesting, add your family photos in future write ups
நன்றி ரவி.குடும்பப் படங்களா?
ம்ம்ம்ம்ம்ம் போட்டாப் போச்சு.
ரெண்டு யஜமானர்கள் இருக்காங்களே. என்னைக் கவனமா வேலை வாங்க.
அவுங்கதான் மொதல்லே வரணும்:-)))
//நாய் கிட்டே வந்து நின்னுது. ஹேண்ட் பேகைக்காமிச்சேனா, மோந்து பார்த்துட்டு என் கையை மெதுவா நக்குச்சு. கொஞ்சம் தடவிக் குடுத்து 'குட் பாய்' சொல்லிட்டுவெளியே //
சுங்க அதிகாரிகள் முகத்தைப் பாக்கல்லயா நீங்க? :O)
காலை வணக்கம் ஷ்ரேயா,
வந்தாச்சா?
சுங்க அதிகாரிகள்?
இங்கே இன்னும் மனுஷராத்தான் இருக்காங்க எல்லா அதிகாரிகளும்.
கூட்டம் ரொம்ப இல்லையே:-)
வந்தாச்சு!
"நான் வந்துட்டேன்!!" என்று போடலாம்னுதான் பார்த்தேன். ஆனா தருமி காதிலே இன்னும் புகை படிஞ்சிடுமே என்றுதான் போடல்ல!! ;O)
//இங்கே இன்னும் மனுஷராத்தான் இருக்காங்க எல்லா அதிகாரிகளும்.//
அதை கேட்கல்ல துளசி, நாய் உங்க கைய நக்கிச்சுத்தானே, இப்படிப் பழக்கிய நாய்கள் இலகுவில் "சேராது". சுங்க அதிகாரிகள் (Customs officers) அந்தப் பாசக் "காட்சியை" அதிசயமாப் பாத்தாங்களா என்று கேட்க நினைத்தேன்.
இத.. இத.. இதத்தான் எதிர்பார்த்தேன். நல்ல ஆரம்பம். தொடருங்கள். உங்களுடைய பேச்சுத்தமிழ் நடை சில இடங்களில் கி.ராஜநாராயணின் 'சொகமான' நடையை நினைவுப்படுத்துகிறது.
மதி/ஷ்ரேயா,
சேரியமாகச் சொல்வதானால்,
அப்படின்னா என்ன?
சுருக்கமாக அல்லது சௌகரியமாக என்றா அல்லது வேறு அர்த்தமா!?
அப்புறம் துளசிக்கா,
மனுஷங்களை மதிக்கத்தாவலை?
ஏதோ புரிஞ்சுண்டேன்... இருந்தாலும் நீங்களே சொல்லிடுங்க.
சுரேஷ் கண்ணன்,
நன்றி. பேச்சுத்தமிழ்லே ஒரு ஒட்டும் உரவும் இருக்கறதை மறுக்கமுடியாதுங்களே.
//சில இடங்களில் கி.ராஜநாராயணின் 'சொகமான' நடையை நினைவுப்படுத்துகிறது. //
ஐய்யோ, அவரு எங்கே நான் எங்கே!
( ஆனாலும் இப்படி திடீர்ன்னு ஒரு பாராட்டு வந்தா சொகமாத்தான் இருக்கு)
துளசி டீச்சர்,
நான் இப்போவும் நியூசி பத்தி ஹிஸ்டரி, ஜியோகிராஃபி, ஆந்த்ரோபாலஜி உங்கட்ட படிக்கப்போற சந்தோஷத்தில இருக்கேன்.
இப்படிக்கு
உங்கள் மாணவன்,
தருமி
டீச்சர் அந்த ஷ்ரேயா பொண்ணு என்ன சும்மா சும்மா வம்புக்கு இழுக்குது; சொல்லி வைங்க டீச்சர்.
அன்பு அன்பு,
'மதிக்கத்தாவலை?'
'மதிப்பது தேவை இல்லையா?'ன்னு கேக்கறதோட
சுருக்கம். பேச்சுவழக்கு.
மனிதர்களை மதிக்க வேணும். இல்லையா?
மத்ததுக்கு மதி/ஷ்ரேயா சொல்வாங்க.
ஒட்டும் உறவும் லே இந்த உறவு மட்டும் தவறாக உரவிட்டது.
மன்னிக்கணும்.
டீச்சர்..டீச்சர்,
இந்த இலந்தவடைன்னா என்ன? எங்க ஊரு பக்கம் கிடைக்குமா? இலந்த பழத்துக்கும் இதுக்கும் தொடர்பு உண்டுதானே?
ரவி சீனிவாஸ் சொன்னதைப் படிச்சதும் ஒண்ணு தோணிச்சு. நம்ம எல்லோரும் ஒருத்தர ஒருத்தர் 'மூஞ்சி' தெரிஞ்சு இருந்தா நல்லா இருக்காதான்னு. ஏன்னா, மூஞ்சியப் பாத்து பேசுன்னு பெரியவங்க சொல்லுவாங்கல்ல. தமிழ்மண நிர்வாகிகள் எல்லாரும் 'மூஞ்சி' காமிச்சாதான் 'ஆட்டைக்கு சேத்துக்குவோம்'னு சொன்னா எப்படியிருக்கும்?
துளசி,
'ஆட்டைக்கு சேத்துக்குவோம்'னு சொன்னதும் என் பதிவில 'இந்து மதம்' பற்றிய பகுதியில நீங்கள் வந்து 'ஆட்டை'க்குச் சேரலியே; ஏன்?
தருமி,
காலையிலே வகுப்புக்கு வந்தவுடனே என்ன கலாட்டா? நீங்கதான் ஷ்ரேயாவை
அடிக்கடி மிரட்டுறதா அந்தப் பொண்ணு நேத்து சொல்லுச்சே.
இன்னொருக்கா இப்படிச் செஞ்சா 'பெஞ்சு மேலே ஏறி நிக்க வைப்பேன்' தெரியுமா?
இப்பப் பாடத்தை ஒழுங்காக் கவனிக்கணும். ஹிஸ்டரி, ஜியோக்ராஃபி, ஆந்த்ரோபாலஜி
மட்டுமில்லை, ரிலிஜியஸ் ஸ்டடீஸ் கூட இருக்கு. எல்லாத்தையும் நானே எடுக்கப்போறேன்.
முடிச்சவுடனே பரீட்சை வைப்பேன். இதுலே பாஸ் மார்க் வாங்குனாதான் அடுத்தவருசம்
மேல்வகுப்பு. சொல்லிட்டேன்,ஆமா.
டீச்சரக்கா,
நேத்திய க்ளாசுக்கு இன்னிக்கு 'பிரஸெண்ட் மிஸ்' சொல்லிடறேன்..
முன்னாடிலாம், நியுஸிலாந்துல ஒரு கிரிக்கெட் டீம் இருக்கறது மட்டுந்தான் தெரியும்.
பீட்டர் ஜாக்ஸன் புண்ணியத்தில் தான் இத்துனூண்டு ஊரிலேயும் இத்தனை அழகான்னு பிரமிப்பாவும் ஒரு தடவையாவது பார்த்துட்டு வந்துடணும்னு ஆர்வமாவும் இருக்கு.
கேக்க மறந்துட்டேனே, அவருக்கு இன்னும் அங்கே கோயில் கட்டலியா?
நல்லாருக்கு நடையும், தொனியுm.
தொடருங்க!
>>>இந்த இலந்தவடைன்னா என்ன? இலந்த பழத்துக்கும் இதுக்கும் தொடர்பு உண்டுதானே?
இது நேற்றே வந்த சந்தேகம். வீட்ல கேட்டு அவங்களுக்கும் தெரியல. இருந்தாலும் தோராயமா உளுந்தவடை சைஸ்ல இருக்கும்னு நெனச்சுண்டேன்:)
>>>முடிச்சவுடனே பரீட்சை வைப்பேன். இதுலே பாஸ் மார்க் வாங்குனாதான் அடுத்தவருசம்
மேல்வகுப்பு. சொல்லிட்டேன்,ஆமா.
பரிச்சல நாங்க பாதிப்பேர் ஃபெயிலான டீச்சரம்மா அடுத்த தொடர் ஆரம்பிக்கமுடியாது. சொல்லிட்டேன்,ஆமா.
தருமி, அன்பு,
இலந்தம் பழம், மிளகாய், உப்பு எல்லாம் சேத்து இடிச்சு ஒரு ச்சின்ன வட்டமா ரெண்டு
இஞ்சு விட்டத்துலே வட்டமா தட்டிக் காயவைச்சு எடுப்பாங்க( அப்படின்னு நினைக்கிறேன்)
// மூஞ்சியப் பாத்து பேசுன்னு பெரியவங்க சொல்லுவாங்கல்ல. //
மூஞ்சியைப் பாத்த பயத்துலே பேச்சு நின்னு போச்சுன்னா?
இந்துமதம் ஆட்டைக்கு வரமுடியலை. ஏன்னா எனக்கு நிஜமாவெ 'மதம்' பிடிச்சிருச்சு.
என்னைச் சுத்தி இத்தனை யானை இருக்கறப்பப் பிடிக்காம இருக்குமா?
தங்கமணி,
நன்றி. ஆரம்பிச்சுட்டேன்,ஆனா பயமா இருக்கு.
உணர்வுலே எழுதறது வேற, படிச்சுப் பார்த்து ஆளுங்களைப் பேசவிட்டுக் கேட்டு
எழுதறது வேற இல்லே? பாக்கலாம் எவ்வளவுதூரம் எழுதமுடியுமுன்னு!
டாக்குட்டர் தம்பி,
உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கோம். வந்தவுடனே நாள் பார்த்து
குழி தோண்டவேண்டியதுதான், அடிக்கல் நாட்ட.
எதுக்கா? கோயில் கட்ட வேணாம்?
பீட்டருக்குப் பக்கத்துலேயே ச்சின்னதா எனக்கும் ஒண்ணு கட்டிட்டாத் தேவலைன்னு
இருக்கு:-)))
சரி சரி. வம்புக்கு வராம, இடத்துலே போய் உக்காந்து பாடத்தைக் கவனியுங்க.
தருமிவேற ஆந்த்ரோபாலஜின்னு ஆடிக்கிட்டு இருக்கார்.
அன்பு,
//பரிச்சல நாங்க பாதிப்பேர் ஃபெயிலான டீச்சரம்மா அடுத்த தொடர் ஆரம்பிக்கமுடியாது.
சொல்லிட்டேன்,ஆமா. //
டீச்சரை மிரட்டுற பசங்க இங்கே, நியூஸியிலே மட்டும்தான் இருக்காங்கன்னு தப்பா நினைச்சுட்டேன்.
மூஞ்சியைப் பாத்த பயத்துலே பேச்சு நின்னு போச்சுன்னா?"
அந்த பயம் எனக்குதான் உண்டுன்னு நினச்சேன்
துளசி
இப்பத்தான் படிச்சேன். நியுஜெர்ஸியில் இலந்தவடை கிடைக்குது. வாங்கி அனுப்பட்டுமா?
அதென்னா நீங்க ஒரு universal அக்கா ஆயிட்டீங்க.
நல்ல தொடர்...துளசிக்கா கலக்குங்க.
//பாவம் இவர். என் நல்ல காலம்,வைரமோதிரம் போட்ட பெண்களை மாத்திரமே பார்த்திருக்கார்!//
அய்யோ பாவம் கோபால் !!
தேன் துளி said... //அதென்னா நீங்க ஒரு universal அக்கா ஆயிட்டீங்க.//
என்ன இப்படிக் கேட்டுட்டீங்க?
அக்கா துளசி
சின்ன அக்கா ரம்யா
அப்படீன்னு பட்டத்தை வாரி வழங்கிகிட்டு இருக்காங்க இங்க.
நாள்முழுக்க மிக்சி சுத்தறதை விட்டுட்டு எங்க காதுலே பூ சுத்தறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க, ஜமாய்ங்க! உங்க யூஷுவல் `சாப்பாட்டு' விபரங்களை விலாவாரியா எழுதிடுங்க.
தருமி,
அது 'பேச்சு' இல்லே. தப்பா ஒரு 'ஏ'காரத்தை விடுட்டேன் பாத்தீங்களா?
'பேச்சே' நின்னுபோச்சுன்னா?
பத்மா,
இலந்தவடை அங்கே கிடைக்குதா? பேஷ் பேஷ். அப்ப கொஞ்ச நாளுலே
இங்கேயும் கிடைக்கக்கூடும். நம்ம ஊர்லே இலந்தவடையின் மகாத்மியம் தெரிஞ்சத்
தமிழ்க்குடும்பம் ரெண்டு மூணுதான்(-:
அனுப்பறேன்னு சொன்னதே திருப்தியா இருக்கு. நன்றி.
இந்த 'universal அக்கா' பத்திதான் இப்பச் சின்னவன் பதிவுலே
.//தி ஒன் அண்ட் ஒன்லியா இருந்த இந்த 'அக்கா'வுக்குப் போட்டியா ச்சின்னதும்
பெருசுமா அக்காக்கள் உருவாகி வர்றதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்:-)//
இப்படிப் புலம்பிட்டு வந்தேன். மனுஷனைத் 'தனித்தன்மையோடவும் புகழோடவும்' இருக்க
விடமாட்டாங்களே.
கல்வெட்டு,
நன்றிங்க. அக்கா பேரை இன்னும் கல்வெட்டுலே செதுக்கலையா?
தாணு,
நல்லால்லே ஆமாம். இப்படிக் காதை நீட்டிக்கிட்டு இருந்தா பூ சுத்தாம? :-)))))
சாப்பாடுன்னா உங்களுக்கு அவ்வளவு கேவலமாப் போச்சா? பொழுது விடிஞ்சதும்
'இன்னிக்கு என்ன சமைக்கலாம்?' னு உங்க மனசுக்குள்ளெ ஒரு நாளும் ஓடுனதில்லையா?
கோட்டி வித்தலு கூட்டிக்குறைக்கு(தெலுங்கு) எங்க பாட்டியின் பொன்மொழி
ஒருநாள் உணவை ஒழிஎன்றால் ஒழியாய் ( தமிழ்) அவ்வையார்.
வசந்தனுக்கு,
தனித்தனியாப் பதில் சொல்லி பின்னூட்டத்தின் எண்ணிக்கையை ஏற்றாமல் இருப்பதைக்
கவனிக்கவில்லையா?
அய்யோ அக்கா,
சாப்பாடுன்னா கேவலமா? நீங்க வேற..
இங்க வந்தப்புறம் காலையில எழுந்தோன்ன முதக் கேள்வியே இன்னிக்கி ராத்திரி என்ன சமைக்கிறதுங்கறதுதான்.. பெரிசா சாய்ஸ் ஒன்னும் கிடையாது..குழம்பா, சாம்பாரா இல்ல வட இந்திய curry-ஆ.. இத முடிவு பண்ணி அதுக்கு என்ன காய்கறி வாங்கறதுன்னு முடிவு பண்றதுக்குள்ளேயே மண்ட வெடிச்சுருது..
இந்த மாதிரி சொந்த நளபாகம் ஆரம்பிச்சோன்ன தான் வீட்டிலேல்லாம் பொம்பளங்க பொழுதுவிடிஞ்சு பொழுதுபோனா இந்த ஒரே வேலையை தினந்தினமும் செய்யறாங்கன்னு நினச்சு வியப்பா இருக்கு! மரியாதையும் வருது!
சாப்பாட்ட விட்டுறாதீங்க..நியுஸி பத்தியும் எழுதிகிட்டே தொடர்ந்து சாப்பாட்ட பத்தியும் எழுதுங்க..
வாசிக்க நன்றாக உள்ளது, தொடருங்கள்.
இதையே விகடன்ல எழுதுனீங்கன்னு வச்சுக்குங்க, தொடர் முடிச்சதும் ஒரு புத்தகமா போட்டுத் தாக்கிடுவாங்க ;-)
தம்பி ராமநாதன்,
உங்களுக்குத் தெரியுது இந்த 'சோத்து மகிமை'! ஆனா நம்ம தாணுவுக்கு?
ஒருவேளை, அவுங்க சாப்பாடு தினம்தினம் ஓட்டலில் இருந்து வருதோ? ஒரே சந்தேகமா இருக்கேப்பா.
மிஸ்!!!... தருமி முறைக்கிறார்!
அன்பு - எனக்கு அ.சொ.பொ எல்லாத்துக்கும் தெரியும்னு நினைச்சிட்டீங்களா? சத்தியமா எனக்குத்தெரியாதால மதி வந்து சொல்லுவா. இல்லாட்டி வசந்தன்! (ஏன் துளசி தளத்திலே கொஞ்சப் பின்னூட்டம் missing என்டு பாக்க வரும்போது) ;O)
இராதா கிருஷ்ணன்,
விகடனுக்கு எழுதறதா? 'எடிட் 'செய்யறோமுன்னு சொல்லி நாப்பது வரியை நாலாக்கிருவாங்களே.
இப்பப் பாருங்க, நம்ம வீட்டுலேயே பதிஞ்சா, மக்களுக்கு நாம என்ன சொல்ல வரோம்ங்கறது
போய்ச் சேந்துராதா?
புத்தகம் போட்டுறலாம். பிரச்சனை இல்லை. இப்பெல்லாம் புதுசுபுதுசா வந்துருக்கற
பதிப்பகங்களிலே அருமையா போட்டுத்தராங்க. ஆனா.....
வாங்குறது யாரு?
என்ன இப்பிடிச் சொல்லிட்டீங்க! நான் இருக்கிறேனே!
ஷ்ரேயா, இப்படி சொல்வீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை. என்ன 'ஒரு இன்ப அதிர்ச்சி!'
சரி, ஒரு ஆயிரம் ப்ரிண்ட் உங்களுக்குச் சொல்லிறவா?
போதுமா, இல்லே இன்னும் கூட வேணுமா?
போதும் போதும். ஆயிரம் புத்தகங்களையும் வாசிச்சு முடிக்கணுமே!! :O)
(முதல் பிரதியிலே மட்டும்தான் நீங்க கையெழுத்திடணும், அந்தப்பிரதியை எனக்குத் தரணும்!)
//(முதல் பிரதியிலே மட்டும்தான் நீங்க கையெழுத்திடணும், அந்தப்பிரதியை எனக்குத் தரணும்!)//
அப்ப மத்ததுலே? நீங்களே கையெழுத்துப் போட்டுருவீங்களா?:-))))))
First copy பெறுமதி தெரியாதா உங்களுக்கு, அதுவும் எழுதியவரின் கையெழுத்தோடயே! (நல்லதாப் போச்சு!) :O)
Post a Comment