Saturday, September 17, 2005

மதியின் கூழும் துளசியின் களியும்.

மதியோட கூழ், இங்கே நியூஸிவரை வந்து ஒரு கொசுவர்த்தி ஏத்திவச்சிருக்கு பார்த்தீங்களா? கூழுக்கு இருக்குற 'ரசிகர்களுக்காக' அங்கே போய் இவ்வளவு நீளமான பின்னூட்டம் இடறதுநல்லாவா இருக்கு? தனியா ஒரு பதிவு போட்டுரலாமுன்னுதான்..........( ஹை!!! இன்னைக்கு ஒரு பதிவும் ஆச்சு)



இங்கே தமிழ்நாட்டுலே செய்யற களி/கூழ் பற்றி சில வார்த்தை( எனக்குத் தெரிஞ்சது)



முதல்லே ஒரு நல்ல சட்டி/பாத்திரம் எடுத்து ஒரு டம்ளர் மாவுன்னா ரெண்டரை டம்ளர் தண்ணி ஊத்திகொதிக்க வச்சு, வீட்டிலே நொய் அரிசி( உடைஞ்ச அரிசி) இருந்தா ஒரு கைப்பிடி போட்டு வேக வைக்கணும்.நொய் இல்லேன்னா சாதாரண அரிசியே போடலாம். அது வெந்ததும் உப்பு சேர்த்துட்டு மாவைத் தூவிக்கிட்டேகிளறணும். நிறம் மாறி வெந்துகிட்டே மொத்தையா வரும். ஒரு பேசின்லே தண்ணியை ஊத்திட்டு அதைக்கொட்டிட்டு அந்த ஈர பேசின்லே இந்த வெந்த மாவை எடுத்துப்போட்டு பேஸினைச் சுழட்டுனா அப்படியேகளி உருண்டை ஃபார்ம் ஆயிரும். இதையே குழம்பு, கூட்டு இன்னும் பிடிச்சதோட சாப்புடலாம். பாக்கியானகளி உருண்டைய தண்ணி இருக்கற ஒரு பாத்திரத்துலே போட்டு வச்சுட்டு மறுநாள் பழைய சாதம் கரைச்சுக்குடிக்கிறதைப் போல நல்லாக் கட்டியில்லாமக் கரைச்சுட்டு, வெங்காயம் பொடியா நறுக்கிப் போட்டுத் தயிர்ஊத்திக் கரைச்சுக் குடிச்சா அது கூழ்.


அப்புறம் மாரியம்மனுக்கு நேர்ந்துக்கிட்டுக் கூழ் ஊத்துறவங்க செய்யறது வேற மாதிரி. அவுங்க கூழாவேசெஞ்சுருவாங்க. அதாவது தண்ணி நிறைய வச்சு ஒரு பாத்திரம் மாவுன்னா 4 பாத்திரம் தண்ணின்னு!அது வெந்து இறக்கறப்பவே கொழகொழன்னு கூழாவே இருக்கும். இதையும் முதல்நாள் இரவு செஞ்சுவச்சுட்டு மறுநாள் தயிர், வெங்காயம்,உப்பு எல்லாம் போட்டுக் கரைச்சு, திண்ணையிலே அண்டாவை வச்சுத் தெருவிலே போறவார ஜனங்களுக்குக் கொடுப்பாங்க.


இப்பெல்லாம் சென்னையிலே காலையிலே தள்ளுவண்டியிலே வச்சுக் கூழ் விற்பனை நடக்கறதா ஒரு பிரபலஎழுத்தாளரோட பதிவுகளில் இருந்து எனக்குத் தெரிய வந்திருக்கு.


எங்க பெரியஅக்கா கல்யாணம் கட்டுன புதுசுலே இந்தக் களியைச் செய்யறதுக்குத் தெரியாம ரொம்பக் கஷ்டப்பட்டுப்போனாங்களாம். எங்க மாமாவுக்கோ களி ரொம்பப் பிடிக்குமாம்.பக்கத்து வீட்டு அம்மாதான் அவுங்களுக்கு இந்த விஷயத்துலே டீச்சராம். அப்புறம் அக்கா களி செய்யும்போது பக்கத்துலே இருந்து பார்த்து நான் தெரிஞ்சுக்கிட்டேன்.ஆனா ஒரு நாளும் சமைச்சதில்லை. களிக்கு எங்க பக்கம் சொல்றது 'சங்கிட்டி'ன்னு!
இங்கே நியூஸி வந்தபிறகு, இந்தியன் ஸ்பைஸ் கடைகளிலே இந்தக் குரக்கன் மாவு பார்த்தேன். நம்ம இலங்கைநண்பர்கள் மூலமா அதுதான் நம்ம கேழ்வரகு மாவுன்னு தெரியவந்துச்சா, நாமும் செஞ்சு பார்க்கலாமுன்னு, ஒருநாள்செஞ்சு பார்த்தா, நல்லாவே வந்துச்சு.


அதுக்கப்புறம் என்னுடைய 'அறிவை' உபயோகிச்சு என்னுடைய வழக்கமான 'குறுக்கு வழி'லே இதை மைக்ரோ வேவ்அவன்லே செஞ்சு பார்த்தேன். சூப்பரா வந்துச்சு. வேலை மிச்சம்!


அதோட செய்முறை இதோ.


ஏற்கெனவே வீட்டுலே சாதம் இருந்தா இன்னும் நல்லது. அதுலே இருந்து மூணு/நாலு ஸ்பூன் சாதம் எடுத்துஒரு மைக்ரோவேவ் பாத்திரத்துலே போட்டுக்கணும். இப்ப மாவு ஒரு அரை டம்ளர் எடுத்து அதுலேயே சேர்க்கணும்.ஆச்சா, இப்ப ஒண்ணரை டம்ளர் தண்ணிஅதுலே ஊத்திக் கரைக்கணும். உப்பும், ஒரு டீஸ்பூன் எண்ணெய், (நல்லெண்ணையாஇருந்தா விசேஷம்) சேர்த்துக்கணும். ஒரு பத்து நிமிஷம் அப்படியே ஊறட்டும். அதுக்கப்புறம் அவன்லே அஞ்சு நிமிஷம் ஃபுல் பவர்( நம்மது 1100 வாட்) சூடாக்குனா நம்ம களி ரெடி! அதுலே மீந்தா, மறுநாள் கூழ்!
இங்கே இப்ப வறுத்தரைச்ச உளுத்தம் மாவு, புட்டு, இடியாப்பம் செய்ய சிகப்பரிசி மாவு ,வெள்ளை அரிசிமாவு(இதெல்லாம் ஏற்கெனவே வறுத்தது. அதனாலே வேலை மிச்சம் ஆஹா....) எல்லாம் கூடக் கிடைக்குது. இலங்கையிலே இருந்து இது மட்டுமில்லே இன்னும் கறிப்பவுடர், தேங்காய்ப் பால் பவுடர், ஈரமான புளி( இதுநல்லாவே இல்லை, ஒரே மண்ணு & ஒரு கெட்ட வாசனை) மால்தீவ் ஃபிஷ் இப்படிப் பலசாமான்கள் வர ஆரம்பிச்சிருச்சு.பல பேக்கட்டுகளில் தமிழிலே பேரும் எழுதியிருக்குறது, பார்க்க நல்லாவே இருக்கு.


இலங்கையிலே செய்யறமாதிரி மசாலா,இன்னும்பல நான் வெஜ் சாமான்களைச் சேர்த்துச் செய்யற வழக்கம் தமிழ்நாட்டுலேஅநேகமா இல்லைன்னு நினைக்கிறேன். விவரம் தெரிஞ்சவுங்க சொல்லுங்களேன்.


6 comments:

said...

http://kumili.yarl.net/archives/2005_08.html

இது ஈழத்து கூழ்,
மற்றது இனிப்பு கூழ் ஆடி கூழ் அதுவா மதி காச்சினவ எண்டு தெரியலை. படம் பாத்தா ஆடி கூழ் மாதிரி கிடக்கு

said...

எங்க ஊர் பக்கம் கருப்பட்டி களி சாப்பிட்டு இருக்கீங்களா! ரொம்ப சுவையா இருக்கும்.

said...

கருப்பட்டிக் களியும் சாப்பிட்டு இருக்கேன். அப்புரம் உளுந்தங்களின்னு ஒண்ணும் சாப்பிட்டு இருக்கேன். ஆளை அசத்தும்!

said...

இப்பத்தான் ஒரு 'பஞ்ச் டயலாக்' வருது.

களியைக் கூழாக்கலாம். ஆனா கூழை? களியாக்க முடியுமா?

சொல்லு ராசா!

said...

அக்கா

கூழைக் களியாக்கக் கூடாது..

(களியாக்கறதுன்ன கிண்டல் அடிக்கரது)

நம்ம வலைப்பதிவு பக்கம் ஆளயெ காணுமே

அன்புடன் விச்சு
neyvelivichu.blogspot.com

said...

விச்சு,
அப்பப்ப வந்து பார்த்துட்டுத்தான் போறேன். என்ன பின்னூட்டம் போடலை.
அதனாலே வாசலுக்கே வராம இருந்துட்டேன்னு சொல்றது அவ்வ்வளவா நல்லா இல்லே:-))))