Wednesday, September 21, 2005

நம்ம பத்ரிதானே?

இந்த வாரக் குமுதத்துலே தகவல் பகுதியிலே ஒரு கேள்வி.
மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அறிமுகம் செய்யற 10,000 ரூபாய் கம்ப்யூட்டரின் தரம்என்ன? எங்கே கிடைக்கும்?ன்னு.
இதுக்குக் கணினி வல்லுநர் பத்ரி சேஷாத்ரி பதில் சொல்லியிருக்கார். அது இங்கே.
http://www.kumudam.com/hotmain.php
பேரை பார்த்தவுடனே நம்ம பத்ரிதானோன்னு ஒரு ச்சின்ன சந்தேகம்.
தெரிஞ்சவுங்க சொல்லுங்களேன் ப்ளீஸ். பத்ரியேகூட சொல்லலாம்:-)))9 comments:

said...

துளசி அக்கா,
முழுப்பெயரையும் ,சொல்லியிருக்கிற விஷயங்களையும் வைத்துப் பார்த்தால் கண்டிப்பாக அவராகத்தான் இருக்குமென தோன்றுகிறது.

said...

ஜோ,

நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனாலும்....

கன்ஃப்ர்ம் செஞ்சுக்கத்தான்.

நமக்குத் தெரிஞ்சவங்க 'பேரு' கூடப் பத்திரிக்கையிலே பார்க்கறப்ப எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்குது, இல்லெ?

said...

பார்த்த ஞாபகம் இல்லையோ...!?

said...

இப்படியே ஆளாளுக்கு யூகம் விட்டுட்ருந்தா எப்படி? சம்பந்தப்பட்ட ஆள்ட்ட விசாரிக்க வேண்டாமா? அவரும் இந்த பதிவ கண்டுக்கிட்ட மாதிரி தெரில

said...

அது அவருதான். இதையொட்டி மயூரன் ஒரு பதிவு போட்டிருக்கிறார் ஏற்கெனவே.

said...

ஆஹா.... என்னமோ கோளாறு ஆயிருச்சுப்போல.
தமிழ்மணம் அப்படியே ச்சும்மா நின்னுருச்சு.

ஷ்ரேயாவும் தனிமடலிலே புலம்பிட்டு வீட்டுக்குப் போயிட்டாங்க.

சரி விஷயத்துக்கு வரேன்.

மயூரனோட பதிவை எப்படியோ விட்டுட்டு இருக்கேன்(-:

நினைவூட்டிய அன்புக்கும் தருமிக்கும் நன்றிகள்.

சுரேஷு,

அவர் பதிவுகளுக்குப் பதில் போடறது வழக்கமில்லையாம். இதை
மயூரனோட பதிவுலே பின்னூட்டத்திலே பார்த்தேன்.

பரவாயில்லை. ஆள் அவர்தானேன்னுதானே சந்தேகம். இப்ப நிவர்த்தியாயிடுச்சுல்லே.
விடுங்க.

said...

நானும் பார்த்ததும் அப்படித்தான் நினைச்சேன். //அவர் பதிவுகளுக்கு பதில் போடறது பழக்கமில்லையாம்// ஏன் துளசி? ஒருவேளை அவரோட பதிவுகளை மட்டும் அஸிஸ்டெண்ட் டைப் அடிச்சுருவாங்களோ? பதில் அவரே அடிக்கணுமில்லே!

said...

அக்கா,
கொஞ்சம் பொறுங்க, கூடிய சீக்கிரம் இன்று முதல் சூ.ஸ்டார் நடிக்கும் ஷங்கர் இயக்கத்தில் AVM ன் சிவாஜி னு உலக முழுக்க எல்லா பேப்பர்லயும் வரப்போகுது ... அப்போ எவ்ளோ சந்தோஷம் படபோறீங்க பாருங்க..

ஒரு விளம்பர இடைவெளி... டொய்ங்க்...
வீ எம் இன் அரட்டை அரங்கத்தில் ஒரு புது புகைப்பட பதிவு வந்துள்ளது..
டொய்ங்........

கருத்து தொடருகிறது..
அப்பவும் இதே மாதிரி நம்ம V M தம்பி யா .... பதிவு போட்டுகிட்டு இருக்காதீங்க..அதான் இப்பவே சொல்லிட்டேன்... !

said...

அவர் நம்ம பத்ரிதான். இப்ப அவர் ஊருலே இல்லை.
பின்னூட்டம் போடமாட்டேன்னு
அவரே வந்து நம்மகிட்டே சொன்னாரா?
அன்னானிங்க இப்படி ஏதாவது எழுதுறதையெல்லாம் நம்மவேணாம்'னு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து சேதி வந்திருக்கு.

அதனாலே இது சம்பந்தமான கேள்விபதில் நிகழ்ச்சியை
இத்துடன் முடித்துக் கொள்ளலாம்:-)

பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி.