Friday, September 09, 2005

ஒண்ணு புரியலைங்களே....

இந்தக் 'கத்ரீனா' வந்து போய் 11 நாளாயிடுச்சு. அழிவுகளைக் கண்கொண்டு பார்க்க முடியலை.
புள்ளையும் குட்டியுமா ஜனங்க படாதபாடுபடறது ரொம்பதுக்கமா இருக்கு.எனக்குப் புரியாதது என்னன்னா, ஏன் இறந்துபோனவங்களை இன்னும் அப்புறப்படுத்தாம இருக்காங்கன்றதுதான்.
சடலங்கள் அங்கங்கே மிதந்துக்கிட்டு இருக்கறது டிவி.யிலே பாக்கறப்பவே 'திக்'னு இருக்கே. நேரில் பாக்கறவங்க,
குறிப்பா ச்சின்னப்புள்ளைங்களுக்கு எப்படி இருக்கும்?

ஒரு 'டீஸண்ட் பரியல்' கொடுக்கமுடியலைன்னாலும் மொதல்லே சவங்களை எடுத்துறலாம்தானே? உயிரோடு
இருக்கறவங்களைக் காப்பாத்தறது முக்கியம்தான். இல்லேன்னு சொல்லலை. ஒரு பத்து குழு உயிரோடு இருக்கறவங்களைக்
காப்பாத்துனா, ஒரே ஒரு குழுவாவது மேற்படிக் காரியத்தைக் கவனிக்கக்கூடாதா?

ஒருவேளை கவனிச்சுக்கிட்டு இருந்தாலும், இந்த டி.வி.ங்கதான் 'சென்சேஷனல்'காட்சி வேணுமுன்னு திருப்பித்திருப்பி
இதையே காமிச்சுக்கிட்டு இருக்குதா?

இந்த இடத்துலே மனசு தன்னையறியாமலேயே சுனாமியாலே அழிஞ்சவங்களை நினைக்குது. இத்தனை நாள் விட்டு
வைக்காம அரசாங்கமும், மக்களுமா சேர்ந்து புதைக்கறதோ எரிக்கறதோ செஞ்சாங்களே.

எது எப்படியோ, அமெரிக்கா என்ற மாயாலோகத்துலேயும் இப்படியெல்லாம் இருக்குதுன்றதும், நம்ம கண்ணுக்கு
இதுவரை புலப்படாத அமெரிக்க ஏழ்மையும் ஆச்சரியமாயும் வருத்தமாயும் இருக்குது. இயற்கைக்கு முன்னாலே மனுஷன்
ஒண்ணுமேயில்லை.

ஆனா ஒண்ணுங்க, செத்தாலும் கவுரவமா போறதுக்கும் கொடுப்பினை வேணும்போல.


13 comments:

said...

Lack of Preparation?

said...

என்னங்க பாலா,

இந்தியா மட்டும் சுனாமிக்குத் தயாராவா இருந்துச்சு?

அமெரிக்கா மாதிரி ஒரு அட்வான்ஸ்டு நாட்டுலே?

இவ்வளவு ஏன்? இந்தோனேசியா?

said...

Disasters Waiting to Happen - 2 November 2004

said...

பயனுள்ள சுட்டி. நன்றி நவன்.

மீட்புப் பணிகள் அலட்சிய மனப்பான்மையோட நடக்கிற மாதிரி இருக்கு. ஒருவேளை அது தொ.கா வில (திருப்பித்திருப்பிக்) காட்டுறதைப் பாத்து எனக்குத்தான் அப்பிடித் தோணுதோ தெரியவில்லை.

எனக்கு விளங்காத ஒன்று: இப்படி ஒரு பள்ளத்தாக்கிலே, நீர்மட்டம் கொஞ்சம் உயர்ந்தாலே ஆபத்து என்கிற நிலையுள்ள இடத்திலே இந்த நகரம் ஏன் அமைக்கப்பட்டது?

said...

சுட்டிக்கு நன்றி நவன்.

ஷ்ரேயா சொன்னதுபோல மீண்டும் மீண்டும் காட்டி மனசை நோகடிச்சுட்டாங்களேப்பா.
நமக்கே இப்படின்னா உண்மையா பாதிக்கப்பட்டவங்களுக்கு?
ஐய்யோ

said...

சரி இலங்கை எந்தளவுகாலமாக போர்கொடுமையை சந்திச்சிட்டிருக்கு. ஏற்கனவே மக்கள் அன்றாட வாழ்வுக்கே தள்ளாடும் போது அதைக் குhட பொறுக்க முடியாமல் இந்த சுனாமி வந்த போது சகலதையும் கவனித்து முடித்தார்களே....! அதற்கு பிறகு தான் உலகு கைகொடுத்தது. அது வேறு. மனிதநேயமும் உடனடி ஆழுமைச்செயல்திறனும் எங்கே அதிகம் என்பது இப்போது புரிகிறது. வைத்தியர்களே செய்வது அறியாது திகைத்து நிற்பதை பாற்க குhடியதாக இருந்தது. என்ன அதிக ரென்சனாகும் பாதிக்கப்பட்டவர்களிற்கு மயக்க மருந்தை கொடுத்து தூங்க வைத்தால் போதுமா...? பாற்கிறபோது நமக்கே அழுகை வந்து விட்டது. என்ன கொடுமை. ஆறுதல் வாற்தைகளே அரு மருந்து. அதைவிட கொடுமை வைத்தியர்களே செய்வது அறியாது அழுவது தான். இவர்கள் எல்லாம் போர் கொடுமை குhடிய நாட்டு மக்களோடு பழகவேண்டியவர்களாக அவர்களை கவனித்து தமது திறமையை மன வைராக்கியத்தை வளற்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.பாதிக்கப்பட்டவர்கள் அழுகிறார்கள் அதைப்பாற்து தாதியரும் வைத்தியரும் கலங்குகிறார்கள். இதற்கான மீட்பு பணிகளுக்கு ஆள் உதவி மனத்தீரவீரம் நிறைந்தவர்கள் அதிகமாக தேவைப்படுகிறார்களோ என்னவோ? என்ன ஈழத்தவரையும் இந்தியரையும் கேட்டுப்பாக்கலாம் அல்லது அத்தகைய ஆளணியை ஈழத்தவரும் இந்தியரும் கொடுக்க முன்வரலாம்.

said...

விடியலின் கீதம்,

தங்கள் கருத்து சிந்திக்கவேண்டியது.

நமக்குத்தான் துன்பங்களைக் சகித்து சகித்து ஒரு மனப்பக்குவம் வந்துருச்சோ?

நன்றி.

said...

//எது எப்படியோ, அமெரிக்கா என்ற மாயாலோகத்துலேயும் இப்படியெல்லாம் இருக்குதுன்றதும், நம்ம கண்ணுக்கு
இதுவரை புலப்படாத அமெரிக்க ஏழ்மையும் ஆச்சரியமாயும் வருத்தமாயும் இருக்குது. இயற்கைக்கு முன்னாலே மனுஷன்
ஒண்ணுமேயில்லை.//

நல்ல பதிவு துளசி. தொலைக்காட்சியில் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து. அமெரிக்க மக்கள் சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்று சொன்னபோது. நாம் பட்ட பாடு நினைவில் வந்தது இடப்பெயர்வால். இது கூட அவர்களிற்கும் ஒரு அனுபவம். மற்றநாடுகளில் இடப்பெயர்வு துன்பங்களை. வெளியில் இருந்து பார்த்தவர்கள். அனுபவத்தினூடு காண்கிறார்கள்.

said...

//அதை விட கொடுமை வைத்தியர்களே செய்வதறியாது அழுவதுதான்// மீட்பு உதவிக்கு மனத் தீவிரம் உள்ளவர்கள் தேவைப்படுகிறார்களோ என்னவோ?//
நிச்சயமான உண்மை. சாகப்போகும் உயிரிடத்தில் கூட புன்னகையுடன் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டியது மருத்துவரின் கடமை. இளகிய மனது இருக்கலாம்,ஆனால் பாறையடியில் உள்ள நீர்போல்தான் இருக்கவேண்டும். இலங்கையின் சிறு குழந்தைகூட மனத்திண்மையுடன் இருப்பது, அவர்களைச் சுற்றி நடக்கும் அவலங்களின் பாதிப்பு பார்த்துதான்.

said...

கயல்விழி,

இதுலேகூட ஏற்கெனவே முடிவு செஞ்சு இடம் மாறுறதுலே மனக்கஷ்டம்தான் இருக்கும். ஆனா திடீர்னு இடம்பெயறணுமுன்னு சொன்னா?

வீடுன்றது சாமான்கள் மட்டுமா? நம்ம நினைவுகளும்தானே?

நானும் சிலசமயம் நினைப்பேன், உடனே ஒரு அரைமணியிலே காலி செஞ்சு போகணுமுன்னா எதை எடுப்பேன் எதை விடுவேன்?

என்னதான் ஃபயர் ட்ரில் செஞ்சாலும் உயிரைக் காப்பாத்திக்க ஓடமுடியுமே தவிர?

பாஸ்போட்டு பையை மட்டும் தனியா வச்சுக்கணும். இல்லே?

said...

ஆமாங்க தாணு.

மனுஷனுக்குக் கல்நெஞ்சு வந்துர்றது கஷ்டங்களைப் பார்த்துப் பார்த்துத்தான். இல்லே?

said...

இம்மாதிரிப் பிணங்களை அப்புறப்படுத்தாது தாமதிப்பதையும், மீட்புப் பணிகளுக்கு வந்தவர்களே கலங்குவதைப் பார்க்கும் போதும், பேரழிவுப் புயல் மற்றும் பெரிய விபத்துகளில் நம் ஆர்.எஸ்.எஸ். ஆறும் பணிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அரசு அலுவலகர்களே அம்மாதிரித் தருணங்களில் அவர்களுக்கு அழைப்பு விடுப்பதும் அவர்களும் கடைமை உணர்வுடன் பிணங்களை ஜாதி மதம் பார்க்காது அப்புறப்படுத்துவதும், எல்லா உதவிகளையும் அவர்கள் செய்த பிறகு அரசு அமைப்புகளும் மீடியாக்களும் அவர்கள் பங்கை இருட்டடிப்பு செய்வதும் எல்லாமே ஒவ்வொரு முறையும் விளையாட்டுப் போல நடக்கின்றன என்பதும் இச்சமயத்தில் நினைவுக்கு வந்து தொலைக்கின்றனவே.

இது பற்றி நான் எழுதிய பதிவு இதோ. பார்க்க:

http://dondu.blogspot.com/2005/01/rss-conspiracy-of-silence.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

நீங்க சொல்றது ரொம்பச் சரி.

நன்றி டோண்டு அவர்களே.

என்றும் அன்புடன்,
துள்சி