Thursday, September 01, 2005

குமுதம் ?

இந்த வார சுஜாதா கேள்வி பதிலை நெட்டிலோ, இல்லை நேரா புத்தகம் வாங்கியோ
எல்லாரும் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

இப்ப சொல்லப்போற விஷயம் சுஜாதாவைப் பற்றி இல்லை. அந்தப் பகுதிக்குப் போட்டிருக்கிற
படத்தைப் பத்தி!இங்கே நியூஸியில் இருக்கும் பழங்குடி மக்கள்( இப்பவும் இருக்காங்க. ஒரேடியா பழங்குடின்னு
போயிறலை) படத்தைப் போட்டிருக்காங்க.
'மவோரிகள்' னு சொல்லப்படுற இவுங்கதான் இங்கே வெள்ளைக்காரர்கள் 165 வருசத்துக்கு முன்னாலே வந்தப்ப
இங்கே இருந்தவுங்க. இவுங்களும் வந்தேறிகள்தான் . ஆனா அது கன காலத்துக்கு முன்னாலே!

முகத்தில் பச்சைக் குத்திக்கிறது இவுங்களோட பழக்கம். இவுங்களைப் பொறுத்தவரை பச்சை குத்திக்கிறது ஒரு
புனிதமான விஷயம். பச்சைக் குத்திக்கிட்டதாலே மட்டும் இவுங்க காட்டுமிராண்டியா ஆயிட்டமாதிரி 'குமுதம்'
ஒரு படத்தை 'காட்டு மனுஷ'னுக்கான 'கேள்வி'க்குப் போட்டிருக்கு.

இது சரியா? ஒண்ணும் புரியலையேப்பா!


12 comments:

said...

ஏங்க, கடல் ஏன் நீலமா இருக்குன்னு யாராவது கேட்டா, அதுக்கு ரெண்டு வரில பதிலும், கடல்ல குளிக்கிற ஒரு பெண்ணோட நீச்சலுடை படத்த ரெண்டு பக்கத்துக்கும் போடுற குமுதத்துக்கு மவோரிகள் பத்தியெல்லாம் தெரிஞ்சிருக்கனுமுன்னு நீங்க நினைக்கிறது உங்களுக்கே ரொம்ப டூ மச்சா தெரியல

said...

கேள்வி பதில் நான் வாசிக்கவில்லை.

முகமூடிட கேள்வி நியாயமானதா படுது!! ஆனா இப்பிடியே "இது குமுதம் ஸ்டைல்" என்று விட்டுட்டா எங்க போய் முடியுமோ!

அதனால மவோரிகள் சங்கத்துக்கு சொல்லி குமுதத்துக்கு கண்டனக் கடிதம் போடச் சொல்லுங்க. (canoesல கண்டனப் பேரணி போனா இப்போதைக்கு குமுதம் அலுவலகத்தைப் போய் அடையாது!! ;O)

said...

முகமூடி, ஷ்ரேயா நன்றி.
ஆனாலும் ஒரு வேற்று நாட்டோட கலாச்சாரத்தைக் கிண்டல் செய்யாம இருந்திருக்கலாம்தானே?

ஷ்ரேயா,

கண்டனக்கடிதம்?

நான் எப்ப இவுங்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து, குமுதம் படிக்க வச்சு, அப்புறம் கண்டனக்கடிதம் எழுதச்சொல்லித்தந்து.....

பார்க்கலாம். என்னவோப்பா படத்தைப் பார்த்தவுடனே மனசுக்குள்ளெ 'ச்ச்வுக்'ன்னுச்சு!

said...

குமதம் பண்றது இருக்கட்டும், விகடன்ல க.பெ.ல சம்பந்தமே இல்லாம ஒரு பொண்ணோட படம் போடற அளவுக்கு "மக்கள்" இதைத்தான் விரும்புகிறார்கள்ன்னு இதுக்கு ஒரு வியாபார வியாக்கியானம் வேற.

வாழ்க உங்க "இன" பற்று. உங்கள வாழ்த்தி ஒரு 'ஹக்கா' ஆடிரவேண்டிதுதான்.

said...

சுரேஷூ,

புது 'ஹாக்கா' வந்துருக்கு. பார்க்கலையா? போனவாரம் நடந்த ரக்பி ( சவுத் ஆஃப்ரிக்காகூட நடந்துச்சே அது) மேட்சுலே செஞ்சது!
அதையே ஆடுங்க!

said...

தெரியாதவங்களுக்காக: ஹக்கா

said...

//புது 'ஹாக்கா' வந்துருக்கு. பார்க்கலையா? //

really?

said...

வேல் ரைடர் பார்த்திருக்கீங்களா துளசி? நல்ல படம்!

ஹக்கா டான்ஸ், நான் ஹொனலூலுல பார்த்திருக்கேன். அம்சமா இருக்கும். :)

பிரபுவுக்கு உங்க நாட்டில ஒரு நண்பர் இருக்காங்க. அவங்க கணவர், மௌரி இனத்தவர். நிறைய விதயம் பகிர்ந்துகிட்டு இருக்காங்க. நீங்களும் உங்களுக்குத் தெரிந்த விதயங்களை எழுதுங்களேன். உதா: ஹக்கா நடனம்.

-மதி

said...

ஹக்கா பாத்தோம்ல. ஏற்கனவே இருந்ததுதான் ஆல் பிளாக்ஸ்க்குகாக கொஞ்சம் வார்த்தைகளை சேத்துருக்காங்க. என்ன போங்க தானா ஆடினத பாத்தா கோவத்துல சட்டையெல்லாம் கிழிச்சுருவாரு போல இருந்தது. (தோத்து போனா ஒரு நல்ல காரண்மிருக்கு இப்போ, ஹக்கா ஆடியே நாங்க டையர்டா போயிட்டோம் அப்பறமெங்க விளையாடுரது?)

said...

மதி,
ஐடியா கொடுத்ததுக்கு நன்றி.
ஆஹா... எழுதிட்டாப் போச்சு!

எப்படி இருக்கீங்க மதி?

நீங்க தனிமடல் எல்லாம் இப்ப பாக்குறதில்லையாக்கும்?

said...

துளசி
சமீபத்தில் ஒரு பின்னூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன் இவர்கள் எல்லாம் கலாசாரத்தில் பிந்தங்கியவர்கள் என்றும் நாம் உலகிலேயே முன்னனி வாய்ப்பதாகவும் யாரொ எழுதியதை படித்தேன். இதைப்பற்றி நான் விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறே.......................ன்

said...

நன்றி பத்மா.
எழுதுங்க. காத்திருக்கொம்.