Friday, September 16, 2005

துள்ளும் காலம்.


என்னுடைய தனி தியேட்டரில் படம் போடறேன். வரமுடியாதவங்களுக்காக இதோ விமரிசனம்.
நடிகர் நடிகையர் பேருலே கொஞ்சமாவது தெரிஞ்சதுன்னா 'வினிதா'வைச் சொல்லலாம். அப்புறம்ஸ்ரீமன் வரார்.


கிராமத்துக்கதை. நாலு இளைஞர்(!)கள் மரத்தடிலே உக்காந்துக்கிட்டுப் போற வாரவங்களைக் கலாய்ச்சுக்கிட்டுஇருக்காங்க. அந்தக் கிராமத்துலே இருந்து ஒரேஒரு பொண்ணு பி.இ.. படிக்குது(அட!)


இந்தப் பசங்களும் காலேஜ்லே இடம் கிடைச்சு, டவுனுக்குப் படிக்கப்போயிடறாங்க.

கிராமத்துலே ஸ்ரீமன் மீட்டர் வட்டிக்கு பணம் கடன்கொடுத்து, வசூல் பண்ணிக்கிட்டு இருக்கார்.

வழக்கம்போல கதாநாயகி கார்லே காலேஜ்வாசல்லே வந்து இறங்குறது, ஒரு கூட்டம் அங்கே ஜொள்ளூவிட்டுக்கிட்டு உக்காந்து'ராக்'செய்யரது, அசட்டுத்தனமான லெக்சரர், முத்தின மூஞ்சுள்ள மாணவர்கள்னுதமிழ்சினிமாவோட இலக்கணத்தையொட்டி எல்லாம் தடம் பொறளாம நடக்குது.

காலேஜ்ன்னா இன்டர் காலேஜ் போட்டி/விழா இல்லாம இருக்குமா? கதாநாயகன் பாட்டுப் போட்டியிலேகலக்கிடறார். தமிழ் சினிமாவுலே பாட்டு எழுதற ஒருத்தர் (பேரு விவேகான்னு சொன்னாங்க) அப்புறம்அந்த ஊர் கலெக்டரம்மா இவுங்கெல்லாம் முக்கிய விருந்தினராக் கலந்துக்கிடறாங்க. யாரு ஜெயிச்சான்னுஉங்களுக்குத் தனியாச் சொல்லணுமாக்கும். மோஹினி ஆட்டத்துமேலே இயக்குனருக்கு என்ன கோபமோ?ஒரு பொண்ணு வந்து ஆடுது.

நாயகனோட அண்ணன் மிலிட்டரி மேன், ஊருக்குவராரு. முறைப்பொண்ணைப் பொண்ணு கேட்டுவாங்கன்னுபொண்ணோட அம்மாவே வந்து சொல்லிட்டுப் போறாங்க. இஞ்சிநீயரிங் படிச்ச பொண்ணு எஸ்.எஸ்.எல்.சிமிலிட்டரியை வேணாமுன்னு சொல்லி அவமானப்படுத்துது.
கதாநாயகனுக்குக் காதலில் நம்பிக்கையில்லை. இதைக் குடிச்சுட்டு உளறச் சொல்ல, நாயகி கேட்டுட்டாங்க.

பரீட்சை முடிஞ்சுருது. நாலுநண்பர்களிலே ரெண்டு பேர்மட்டும் பாஸ் செஞ்சுட்டாங்க. கதாநாயகன் ஃபெயிலு.பாஸ் செஞ்சவுங்க, இவனைக் கழட்டிவிட்டுட்டு மேற்படிப்புக்குப் போயிடறாங்க. ஃபெயிலான நண்பன் கண்ணாலம்கட்டிக்கிட்டு, அப்பாவோட வியாபாரத்துக்குப் போயிடறான். இப்ப இவன் தனி. கிராமத்துலே ஒரு நாய்கூட இவனைமதிக்கலே. இப்பத்தான் நான் நிமிந்து உக்காந்தேன். எதுக்கு? இன்னும் கொஞ்சநேரத்துலே படம் முடிஞ்சுருமேன்னு!

படிச்ச பொண்ணுக்குப் பெரிய இடம்(டாக்டர்) மாப்பிள்ளையா வருது. ஆனா, பொண்ணோட நிலம் மீட்டர்வட்டியாலேகைவிட்டுப் போச்சுன்னதும் கல்யாணம் நின்னுருது.

'பாக்கியை வெள்ளித்திரையில் காண்க'ன்னு கெத்தாச் சொல்லியிருப்பேன். ஆனா.....

நானே நேத்து இந்தப் படம் பார்த்துட்டு, கைவேற கால்வேற, தலைவேறன்னு துண்டுதுண்டாச் சிதறிக் கிடந்தேன்.சின்னச்சின்னத்துண்டா அறுத்துத்தள்ளிட்டாங்க. இந்த தண்டனை உங்களுக்கும் கொடுக்கணுமா? 'ஆமாம்னு சொல்லு. நீ பெற்ற இன்பம் உன் வலைக்கூட்டமும் பெறவேணாமா?'ன்னு மனசாட்சி ஒரு மூலையிலேநின்னுக்கிட்டுச் சொல்லுது. இது மனசாட்சியின் வில்லி சைடு.

நல்ல சைடு சொல்லுது, 'இவுங்க இந்தப் படத்தைப் பாக்கவா போறாங்க. நீயே கூட இந்தக் கதையை வேறமாதிரிவளைச்சுச் சொன்னாலும் தெரியவா போகுது. அப்பாவி மக்க. போனாப்போட்டும், மிச்சத்தையும் சொல்லிப்புடு.பொழைச்சுப் போகட்டும்'னு! சரி. நல்லது யாரு சொன்னாலும் கேட்டுக்கணுமில்லெ?

படிச்ச பொண்ணுக்குத் தன்அம்மாவுக்கு இதயநோயிருக்குன்றதும், தன்னோட படிப்புக்காகத்தான் நிலம் அடமானம் போச்சுன்றதும்தெரிஞ்சுபோய், தாய் சொல்ற ஆளைக் கல்யாணம் கட்டிக்கிடறேன்னு சொல்லி அழுவுது. பாவம்!
மிலிட்டரிக்கார் சமாதானம் சொல்லி, தன்னைவிடக்கூடப் படிச்ச, பி.எஸ்சி ஃபெயில் தம்பிக்கு அந்தப் பொண்ணைக்கட்டிவைக்கிறார். சுபம்.
இதுலே வினிதா என்னவா வராங்க? மிலிட்டரிக்கும், நாயகனுக்கும் தாயா இருந்து குடும்பத்துக்காக உழைக்கிறடீச்சர் அக்கா. நல்லா குண்டடிச்சு இருக்காங்க. அவுங்க காசு, அவுங்க சாப்புடறாங்க.நாம யார் இதைச் சொல்ல?
கதாநாயகன் சேட்டுப் பையர். பேசறதைவச்சும், நிறத்தைவச்சும் சுலபமாக் கண்டுபிடிச்சிரலாம். அவுங்க கிட்டேதானேகாசு இருக்கு, சொந்தமா ( பணம் கொடுத்து)நடிக்க. அவர் பேரு ஷங்கர். நாயகி/கள் பேரு என்னன்னு யாருங்கே அங்கே கேக்கறது?இப்ப அதுவா நமக்கு முக்கியம்? வுடுங்க.

அடடா, படத்துலே இருக்கற 'மெசேஜ்' பத்தி இன்னும் சொல்லலையில்லெ. அது யாருங்க குறுக்கே குறுக்கே'அப்படிக்கூட ஒண்ணு இருக்கா'ன்னு கேக்கறது? சொல்றேன் இருங்க. அருமையான ரெண்டு மெசேஜ் இருக்கு.

1. படிக்கிறப்ப எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் செஞ்சாலும், படிக்கிறதைக் கோட்டைவிட்டா நீங்க ஃபெயில்ஆயிருவீங்க.

2. கூடக்கூத்தாடுற நண்பர்கள் எல்லாம் கவனமாப் படிச்சுட்டு, அவுங்க பாஸ் ஆனதும் உங்களைக் கழட்டிவிட்டுட்டுமேற்படிப்பு படிக்கப் போயிருவாங்க( எல்லாரும் என் நண்பன் சுப்ரமணியா என்ன? இது அடுத்தகதைக்கு அஸ்திவாரம்?)

சரி. தப்பிச்சேன், பிழைச்சேன்னு ஓடி அவுங்கவுங்க சோலியைப் பாருங்க. அடுத்த பிளேடோடு விரைவில் வருவேன்.

பி.கு: இதுக்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம்? ஒண்ணுமில்லை,
நேத்துதான் படம் காட்டப் படிச்சேன். அதான் பழகிப்பாக்கறேன்.

இது இங்கே வசந்தகாலத்தில் மரங்கள் பூத்துக் குலுங்குது!


10 comments:

said...

துளசி அக்கா, படம் நல்லா இருக்குது, காரை நிறுத்தி எடுத்திருந்த இன்னும் நல்ல இருந்திருக்குமே.

said...

எங்கெ, தம்பி?

கொஞ்சம் 'நிறுத்துங்க'ன்னு உங்க மாமாட்டே சொன்னா ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சுத்தான் நிறுத்துவார்!

said...

போட்ட படம் வாத்து படமாய் இருந்தால் நம்ம
போட்டியிலாவது சேர்த்துக்கிட்டு இருக்கலாம் .

பூ படங்கள் நல்ல படமா எடுத்து போடுங்கள்

said...

இஙே டொன் ப்ரட்மனின் சொந் ஊருக்கு ஒரு முறை ட்ரைவ் போனோம். அப்ப அஙேயும் இப்பிடி இதே மரங்கள்தான் பூத்துக் குலுங்கினது. இந்த முறையும் அதுக்காகவே போகணும்

பி.கு: மனச்சாட்சியின் நல்ல பக்கத்தின் சொல்லைக் கேட்டதற்கு நன்றி. :O)

said...

என்னடா ஆளைக்காணமேன்னு நினைச்சேன்:-)

வசந்தன் கிட்டே என்ன சொன்னீங்க? பின்னுட்டம் பற்றி:-)

said...

எப்பிடி பின்னூட்ட எண்ணிக்கையை அதிகரிக்கலாம்னு பேசிய போது சொன்னது: உங்கட உத்தியைக் கடைப்பிடிக்கலாமென்று.

said...

நற நற நற நற.......


ஷ்ரேயா புரிஞ்சதா? :-)))))))

said...

(பயத்திலே ஓடி ஒளித்துக் கொண்டே)..

ம்ம்ம்..புரிஞ்சுது!
(தலைவர் கேட்டா எல்லாத்தையுமே சொல்லக் கூடாதென்டு இப்பத்தான் தெரிஞ்சுது, இந்த ஒருதரம் மன்னியுங்க)

said...

அழகான படத்தைப் போட்டுட்டு அதைக் கெடுக்கறதுக்கு ஒரு கதை வேறே தேடிப் பிடிச்சீங்களா?

said...

ஏங்க தாணு,

படம் பார்த்து/கேட்டு/படிச்சு நொந்து போயிருக்கற மனசைத் தேத்தத்தான் ஒரு
நல்ல படம் போட்டேன். புத்துணர்ச்சி வரலையா?