Friday, September 16, 2005

வாத்துப் போட்டிக்கு




இந்த மாதிரி ஒரு வாத்துப் போட்டி இருக்கறது இப்பத்தான் தெரிஞ்சது. இதையும் சேர்த்துக்க முடியுமா?

இது எங்க ஊர்லே 'ஹேக்ளி பார்க்'லே எடுத்தது. ப்ரெட் மீந்து போனா கொண்டுபோய் 'டக் ஃபீடிங்' செய்யறதுதான்




33 comments:

said...

நான இந்த ஊருக்கு வந்த பின்னாடி ப்ரெடே வாத்துக்கு போடறதுக்காகதான் தயாரிக்கறாங்கன்னு நெச்சேன். எந்த பார்க்கல போனாலும் நாலு பேரு பாக்கெட் நெறையா ப்ரெட்ட வைச்சிக்கிட்டு வாத்துக்கும் இன்ன பிற பறவைக்கும் போடறது ரொம்ப வாடிக்கை. ஏதொ பாவம் அதுங்களுக்கும் பிடிச்சு போய் போட்டதெல்லாம் காலிபண்ணிடுதுங்க (இல்லேன்னா அடுத்த வாட்டி பார்க்குக்குள்ள போனாலே தலைல கொத்திடாதா?)
என்ன துளசி உங்க ஷ்டைல் கிட்ட வந்துட்டேன்ல?

said...

துளசி அக்கா,
சேர்த்துக் கொண்டு விட்டேன்.

said...

அங்கயே ஒரு வாத்து போட்டி நடக்குது போலருக்கு!

said...

நீங்கள் வாத்துப் போட்டி எண்டுறது வலைப்பதிவுகளில நடக்கிதையா அல்லது படத்திலிருக்கும் வாத்துகளுக்குள் நடப்பதையா?

said...

சுரேஷு,

//என்ன துளசி உங்க ஷ்டைல் கிட்ட வந்துட்டேன்ல? //

ஒரே ஊரு/நாடு லே இருக்கறவங்க இப்படி ஒண்ணுமண்ணா இருக்கறது சகஜமப்பா:-)

எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இன்னாட்டு மக்கள்....

said...

சின்னவரே,

நன்றி. பரிசைக் கொடுக்கறப்ப
இந்த அக்காவை மறந்துறாதீங்க.ஆமாம் சொல்லிப்புட்டேன்( மனோரமா ஸ்டைலில் வாசிக்கவும்:-)

said...

ஆமாங்க தங்கமணி,

வாழ்க்கையே பெரும் போராட்டமுன்னு இதுங்க சொல்லுதுங்களோ என்னவோ?

said...

கொழுவி,

ரெண்டு மூணு படமுன்னா அதுலே ஏதாவது ஒண்ணு தேறாதான்ற நப்பாசைதான்:-)

said...

ThuLasi
as I am a duck myself, I think I win the prixe without no competition.
try next time

said...

ஏங்க பத்மா,

நீங்களே 'டக்'ன்னு சொன்னா அப்ப நாங்கெல்லாம் யாரு?

அடக்கம்.ம்ம்ம்ம்ம்?

said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சிட்டுது.

நேற்று ஷ்ரேயா சொன்னா,
எப்பிடி பின்னூட்ட எண்ணிக்கைய அதிகரிக்க வைக்கிறதெண்டு துளசியம்மாவிட்டக் கேக்கச்சொல்லி.
இப்ப கேக்காமலேயே விளங்கீட்டு என்ன தந்திரம் பாவிக்கிறியளெண்டு.

said...

//அடக்கம்//

அதிலையே 'டக்' வந்திருதே!

சரியா பத்மா? :P :D

துளசீஈஈஈஈ, அடிக்காதீங்க.

வாத்துகள் பிரமாதம்.

வா(ழ்)த்துகள்

நான் வாத்துகள் மட்டுந்தான் போடலியே தவிர, மிச்ச மீதியெல்லாம் போட்டுட்டு இருக்கேன். ஒரு கை பாத்திர்ரதாத்தான் இருக்கேன். ;)

-மதி

said...

வசந்தன்,
//எப்பிடி பின்னூட்ட எண்ணிக்கைய அதிகரிக்க வைக்கிறதெண்டு...//

இப்படித்தானே?

பின்னூட்ட எண்ணிக்கையை வச்சு ஒரு பதிவை நல்லதெண்டோ சுமார் எண்டோ சொல்லமுடியுமா?

இப்பப் பாருங்க, நீங்க என்னை 'மதிச்சு' ஒரு பின்னூட்டம் போட்டனீங்கள்.
நானும் பதில் மரியாதை செய்ய வேண்டாமே?

எல்லாரும் போடப் போட ச்சும்மா இருந்துட்டு கடைசியிலே
'அனைவருக்கும் நன்றி'ன்னு சொன்னாநல்லாவாஇருக்கு?

said...

மதி,

வருகைக்கு நன்றி.
//துளசீஈஈஈஈ, அடிக்காதீங்க.//

இன்னும் 'ஈ' வர ஆரம்பிக்கலே மதி. இன்னும் டெம்ப்ரேச்சர் கூடலை.
அப்புறம் நிஜமாவே 'ஈஈஈஈஈ' அடிக்கற வேலை இருக்கு! ( சரியான கடி:-) இல்லே)

ஒரு கை என்ன நீங்க பலகையும் பார்க்கலாம்you are the boss:-)))

அடுக்கடுக்கா உங்க பதிவு நல்லா வந்துக்கிட்டு இருக்கு.
ஜமாயுங்க.

வா(ழ்)த்துக்கு நன்றி:-))))))))

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

இங்க விளம்பரம் பண்றத தவிர வேற வழியே இல்லை.

துளசி அக்கா சொன்ன
போட்டி இங்க நடக்குதுங்கோ !

said...

ரொம்ப நாளாச்சி விளம்பரம் பண்ணி...

ப்ரம்மனின் இருப்பிடம், வாத்தின் துளைப்படம்

said...

சொல்ல மறந்த காதை ::

இங்கு ஒரு போட்டி உள்ளது... அறிவு ஜீவிகளுக்கு மட்டும்...
கலந்து கொ(ல்)ள்வீர், பரிசு வெல்வீர்

said...

அது சரி இந்த "வாத்து மடையன் வாத்து மடையன்" ன்னு அடிக்கடி என்னை நிறைய பேர் திட்டறாங்க அதனோட அர்த்தமென்ன??

said...

கணேஷ்,
அதை நீங்க 'வாத்துப் போட்டி' நடத்தறவர்கிட்டேல்லெ கேக்கணும்.
பதில் கிடைச்சா எனக்கும் சொல்லுங்க:-))

said...

உங்களை யாராவது அப்பிடி ஏசுறாங்களா?

said...

துளசி
ஈ அடிக்கறதுக்கு இந்தியா வந்திடாதீங்க. அதை நேஷனல் பறவையாக்கணும்னு கமல் ஒரு பேட்டியில் பரிந்துரைச்சிருக்காரு!

said...

இதுவரைக்கும் இல்லே ஷ்ரேயா, இனிமே யாராவது திட்டுனா?

said...

தாணு,

இங்கெ இருக்கற ஈயை லேசுப்பட்டதுன்னு நினைக்காதீங்க. ஒண்ணொண்ணூம்
பெரிய சைஸு. நம்ம ஊர் ஈ நாலஞ்சு சேர்ந்த அளவு.
( இங்கெ இருக்கற ஆட்களைப் போல!)

said...

// அது சரி இந்த "வாத்து மடையன் வாத்து மடையன்" ன்னு அடிக்கடி என்னை நிறைய பேர் திட்டறாங்க அதனோட அர்த்தமென்ன?? //

அத எங்கிட்ட கேளுங்க கணேஷ். சும்மா எங்கையாவது பாத்துச் சுட்டாக்கூட தன்னைத்தான் சுட்டதா நெனச்சு கீழ விழுந்துருமாம். கொஞ்ச நேரங்கழிச்சி தான் உயிரோட இருக்குறத கண்டு பிடிச்சிப் பறக்குமாம். புரிஞ்சதா?

said...

ராகவன்,

:)))))))))))))))))))))))))

said...

துளசி
நம்மகிட்ட அடக்கம் கிடையாது. அதுதான் உண்மை. கொஞ்சம்மதி: நல்ல மூட்ல இருக்கீங்க போலருக்கே.

said...

முகமூடி மற்றும் சின்னவனின் போட்டிகளுக்கு ஒரே பதிவுல இரண்டு வாத்துகளை அடிச்சிருக்கேன் அக்கா... பாத்துட்டு அப்புறம் பரிசு யாருக்குன்னு 'fix' செஞ்சுடலாம்..

:-)

said...

//'வாத்துப் போட்டி' நடத்தறவர்கிட்டேல்லெ


இது நியாயமா ? அடுக்குமா ?
வாத்து படமா போடறவங்களை விட்டு அத சேகரித்து போட்ட என்னை மாட்டி விடறீங்களே ?

said...

பத்மா.

நிஜமாவே நேத்து மதி சீக்கிரத்துலே 'மலை'ஏறலே!

அடக்கம் எங்ககிட்டே இல்லைன்னு அப்ப அந்தக்காலத்துலே புலம்புனது யாரு தெரியுமா?

நம்ம ஹாஸ்டல் வார்டன்! பாவம்.


இணையக்குசும்பரே,
இனிய குசும்பரா இருக்கீங்களா?:-))

சின்னவரே,

ஒரு போட்டி வைக்கரதுக்கு முன்னாலே விலாவரியா அதோட ஹிஸ்டரி/ஜ்யாகரஃபி எல்லாம் தெரிஞ்சுக்கத் தாவலையா? :-))))

பின்னூட்டம் கூட்டாததை வசந்தன் கவனிக்க:-)))

said...

அக்கா!
இவை வாத்துக்களா??
தாராவா???
ஈழத்தில் duck ஐ தாரா என்போம்.
இவை duckஆ goose ஆ...

பிரான்சில் இவற்றை canard(கனா)- duck, oie(உவா)- goose என்கிறார்களே!!
அதாவது இப்படத்தில் உள்ளவற்றை வித்தியாசப்படுத்தியே கூறுகிறார்கள்.

said...

வாங்க யோகன்.

விதவிதமா இருக்கு இங்கே வாத்துகள். மாண்ட்ரெக்ன்னுகூட ஒரு வகை இருக்காம்.

ச்சீனர்கள் பிடிச்சுக்கிட்டு போனதை இப்பக் கட்டுப்படுத்தி வச்சுருக்கு.