Tuesday, September 27, 2005

நியூஸிலாந்து. பகுதி 5

சட்டம், ஒழுங்கு, காவல்துறை.
********************************
எல்லா நாடுகளையும்போல் தான் இங்கே சட்டமும் ஒழுங்கும். ஆனால் இதற்கு உதவிபுரியும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், உண்மையாகவே 'உங்கள் நண்பன்'ஆக இருக்கிறார்கள். தமிழ் மற்றும்இந்தியத்திரைப்படங்களின் மூலம்,ஏன், ஆங்கிலப்படங்களில்கூடத்தான் நாம் காவலர்கள் என்று நினைத்தவுடன், மனதில் ஒரு படம் தெரிகிறது பாருங்கள். தோற்றத்திலும், உடை அமைப்பிலும் மட்டுமே நாம் நினைப்பது சரி.


ஆனால், பொதுவாக இங்குள்ள காவலர்களிடம் கைத்துப்பாக்கியெல்லாம் கிடையாது. துப்பாக்கி பயன்படுத்தும்பிரிவு ஒன்று தனியாக உள்ளது. தேவையெனில், அவர்கள் வரவழைக்கப்படுவர். இப்படித்தான் ஒரு இளைஞனை காவலர் சுட்டுவிட்டார். அவன், குடித்துவிட்டு,நடந்துபோகும்போதே ஒரு கடைத்தெருவில் எல்லாக் கடைகளின் கண்ணாடி ஜன்னல்களையும், அருகே இருந்த மற்ற வீடுகளின் கண்ணாடிகளையும் கையிலுள்ள தடியால் உடைத்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தான். இங்கே, சூரியவெளிச்சம் வேண்டிவீடுகளுட்பட எல்லாக் கட்டிடங்களிலும் கண்ணாடி மிகுதியாகப் பயன்படுத்தப் படுகிறது. அவனைப் பிடிக்கமுயன்று, முடியாமல், காவலருடன் நடந்த சண்டையில், எதிர்பாராத விதமாக குண்டடிபட்டு இறந்துவிட்டான்.ஊர் ஜனங்களெல்லாம் சேர்ந்து, அவனைக் காலில் சுடாமல், வேறு இடத்தில் சுட்டது தப்பு என்று கூச்சலிட்டு,அந்த பொலீஸ்காரரின் வேலைக்கே 'வேட்டு' வைத்துவிட்டார்கள். கொஞ்ச நாளில் அவனை ஏதோ 'தியாகி ரேஞ்சு'க்குஉயர்த்தின மாதிரி பேச்சு வந்தது. (நல்லவேளை அப்படியே அமுங்கிடுச்சு)


இங்கே காவலர்கள் பொதுவாக மனிதனை மனிதனாகவே நடத்துகின்றனர். முட்டிக்கு முட்டி தட்டுதல்,லாடம் கட்டுதல் போன்றவைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை! ஆனாலும் இங்கேயும் நம்ப முடியாதசம்பவம் ஒன்றும் நடந்துள்ளது!


கொஞ்ச நாளைக்கு முன்னால், ஒரு பெண், தன்னை ஒரு பொலீஸ் ஸ்டேஷனில், சில காவலர்கள்கற்பழித்துவிட்டனர் என்று குற்றம் சாட்டினார். இது அப்போது டி.வி. யில் செய்தியாக வந்தது. அட! இங்குமா? என்று செய்தியில் கவனம் செலுத்தினோம். இது 13 வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததுஎன்றும், இப்போதுதான் அந்தப்பெண் இதைபற்றிக் குற்றம் சாட்டுகிறார் என்றும் தெரியவந்தது.எத்தனை காலத்துக்குமுன் நிகழ்ந்தாலும், குற்றம் குற்றமே ( நக்கீரப் பரம்பரையோ)என்று தீர்ப்பு அளித்துஅந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்தக்காவலர்களை( இப்போது அவர்கள் பதவி உயர்வு பெற்று அதிகாரிகளாயிருந்தனர்)வேலை நீக்கம் செய்தது மட்டுமின்றி அவர்களுக்கு மேலும் தண்டனையும் வழங்கப்பட்டது.


காவல் நிலையங்களும் மற்ற அலுவலகங்கள் போலவே இயங்குகின்றன. வாசலில் 'செண்ட்ரி'யெல்லாம்கிடையாது. வரவேற்பு அறையில் உட்கார ஆசனக்களும், நம் முறை வரும்வரை பொழுதுபோக்க வாரப்பத்திரிக்கைகளும், குழந்தைகள் விளையாட சில பொம்மை, மற்றும் விளையாட்டுப் பொருட்களுடன் கூடியதனியிடமும் உண்டு. இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்றால், நானும் ஒரு முறை காவல் நிலையம்செல்ல நேர்ந்தது.


ஒரு நாள் எங்கள் கடை வாசலில் ஒரு நியூஸிலாந்து 'பாஸ்போர்ட்' கீழே விழுந்திருந்தது. அது இன்னும் 9 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் நிலையிலும் இருந்தது. குடிமக்களின் கடமையின்படி, நான் பொலீஸ¤க்கு·போன் மூலம் தெரிவித்தேன். அந்த சம்பாஷணை இப்படி இருந்தது.


" ஒரு ·பாஸ்போர்ட்டைக் கண்டெடுத்தேன். நான் என்ன செய்ய வேண்டும்?"

" இங்கே கொண்டுவந்து ஒப்படைத்துவிடுங்கள்"

" பொலீஸ் ஸ்டேஷன் எங்கே இருக்கிறது?"

" நீங்கள் எங்கேயிருகின்றீர்கள்? நாளை, நீங்கள் கடை திறக்கப் போகும்போது கொடுத்துவிட்டுப் போகலாமே "

(இடம் சொல்லப்பட்டதும், எந்தக்காவல் நிலையம் அருகிலுள்ளது என்ற தகவல் கிடைக்கிறது.)

அவ்வளவுதூரம் என்னால் வரமுடியாது.நான் கடைக்குப் போகும் வழி அதுவல்ல. நீங்களே யாரையாவது அனுப்ப முடியுமா?

"இங்கே ஆட்கள் மிகவும் குறைவு. உங்களால் எப்போது முடியுமோ அப்போது கொண்டுவந்தால் போதும்"

"தொலைத்தவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படாதா?"

"அப்படியா? ஒன்று செய்யுங்கள். அதிலுள்ள எண்களைச் சொல்லுங்கள்.
யாராவது, தொலைத்துவிட்டதாக காவலரை அணுகினால் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன். அப்போது கொண்டுவரலாமே"

இது சரிப்படாது என்று, ஒரு வாரம் கழித்து வந்த வார இறுதியில், காவல் நிலையம் சென்றேன்.

வரவேற்பில், வந்த காரணம் சொல்லப்பட்டதும், ஒரு அதிகாரி, ஆசனத்தில் அமரச்செய்து, குடிக்க ஏதாவதுகா·பி, டீ வேண்டுமா என்று கேட்டு உபசரித்துவிட்டு, ஒரு படிமத்தில் விவரங்களைப் பதிந்து கொண்டார்.அந்தப் பாஸ்போர்ட் உரிமையாளருக்கு உங்கள் விலாசம் தரலாமா என்றும் கேட்டார். காரணம் ,அவர்கள்நமக்கு, நன்றிக் கடிதமோ, மலர்களோ அனுப்புவார்களாம். அவையெல்லாம் தேவையில்லை என்று சொன்னேன்.அதன் பின் ஒரு வாரம் சென்றபின், காவல் நிலையத்திலிருந்து, நன்றி தெரிவித்து ஒரு கடிதமும், உரிமையாளர்அந்த 'பாஸ்போர்ட்'டைப் பெற்றுக் கொண்ட விவரமும் இருந்தது.


இங்கே, காவல்துறை மிகவும் கவனமாக இருப்பது சாலை விதிகளிலும், போதை மருந்து விஷயத்திலும்தான்.மேலும், மது அருந்தும் உரிமையுள்ள வயதை பதினெட்டாகக் குறைத்திருப்பதால், இளவயதினர், அளவுக்குமீறீயஅளவில் மது அருந்திவிட்டு, வண்டி ஓட்டுவதைக் கண்காணிக்கிறார்கள். எல்லாம் தும்பை விட்டு வாலை பிடித்தகதைதான்.
லஞ்சம், ஊழல் இவைகள் இங்கே அநேகமாக் கிடையாது என்றே சொல்லலாம். ஆகையால் அதன் காரணங்களால்ஏற்படுகிற குற்றங்கள் இங்கே இல்லை.


இவ்வளவு ஏன்? இங்கே 'Tips' வாங்கும்/கொடுக்கும் வழக்கம்கூட இல்லை. அண்டை நாடானஆஸ்தராலியாவிலும்இதேதான்!


ஆனானப்பட்ட அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பரவியுள்ள இந்த 'டிப்ஸ்' பழக்கம் இங்கே இல்லாததால், இதற்குப்பழகிபோன நாங்கள் மற்ற நாடுகளுக்குப் போனால், அங்கும் இதைபற்றிய எண்ணம் இல்லாது இருந்து விடுவோம்.டிப்ஸ் எதிர்பார்க்கும் ஆட்கள் எங்களை, 'சரியான கஞ்சப் பேர்வழி' என்ற பார்வை பார்க்கும் போதுதான் நாங்கள்விழித்துக் கொள்வோம். இதுபோல ஏளனப்பார்வைகள் ஏராளமாகப் பெற்ற அனுபவம் உண்டு!


நான் சென்ற வருடம் சென்னை வந்திருந்தபோது, அண்ணா சாலையில் ஒரு காவலரிடம் ஒரு விவரம் கேட்டபோதும் சரி,விமான நிலையத்திலும் சரி, நம் சென்னை நகரக் காவல்துறையினர், மிகவும் பண்போடுதான் நடந்துகொண்டனர். ஆனால்பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் வேறுமாதிரி இருக்கின்றன.


காவல்துறையில் வேலை செய்பவர்களில் பலர், இது மிகவும் மன அழுத்தம் ஏற்படுத்துகின்ற வேலையாக இருக்கிறது என்றுஅந்த வேலையை விட்டு விட்டு வேறு ஏதாவது தொழிலுக்குப் போய்விடுகிறார்கள். எங்கள் வீட்டுக்கு 'எலெக்ட்ரிகல்' வேலைக்குவரும் 'எலெக்ட்ரீஷியன்' முன்பு காவல்துறையில் காவலராக இருந்தவர்தான்!


காவல்துறையில் உயர்ந்த பதவியில் இருந்த அதிகாரியான,எங்கள் நண்பர், அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணம், அந்தவேலையை உதறித்தள்ளிவிட்டு, இப்போது, ஒரு சிறிய கம்பெனியில் 'ட்ரைவர்' வேலை செய்கின்றார். ஏனெனில் இந்த வேலையில்சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லையாம்!



இவ்வளவு ஏன்? ஒருமுறை இந்த நாட்டின் பிரதம மந்திரி, அவருடைய வேலையில் 'ஸ்ட்ரெஸ்'அதிகம் என்று ராஜினாமா செய்துவிட்டார்.இது எப்படி இருக்கு?


இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் இன்னொன்றும் நடந்துள்ளது. போன வாரம் நடந்தது இது.தொலைக்காட்சியில் வந்தது.
சிறையில் அடைக்கப்பட்ட சில கைதிகள் அவர்களுக்குத் தரப்பட்ட 'வசதிகள்' சரியில்லையென்று அரசங்கத்தின்மேல் வழக்குத் தொடுத்துஅதில் வெற்றியும் பெற்றிருக்கின்றனர். அவர்கள் உடற்பயிற்சி செய்யத் தோதான வசதிகள் மறுக்கப்பட்டனவாம். மேலும் அவர்கள் அறையில்நல்ல ஆரோக்கியமான காற்றோட்டம் இல்லையாம். அவர்களுக்கு $130000 ( இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 39 லட்சங்கள்!) வழங்கவேண்டும் என்று தீர்ப்பாகியுள்ளது.
இன்று அதிகாலை தொலைக்காட்சிச் செய்திகள் சொன்னது, இன்னும் சில கைதிகள் இதுபோல வழக்குத் தொடுக்கத் தயாராகிவிட்டனராம்!

செய்த தவறுக்கு தண்டனை இல்லையா சிறை வாழ்க்கை?

நன்றி: சங்கமம் 2004

17 comments:

said...

மனித உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதைச் சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

அப்பாடா!! நிறைய நாளைக்குப் பிறகு நான் தான் முதல் பின்னூட்டம் ;O)

said...

நன்றி ஷ்ரேயா.

'முதல்' ன்னா ஒரு ஸ்பெஷலா? :-)

said...

பின்னே! இவ்ளோ பக்கத்துலே இருந்து கொண்டு முதலாவதா பின்னூட்டம் போடலாட்டி எப்பிடி! :OD

கார்க்காரர் இன்னும் வரல்ல போல.

said...

செய்த தவறுக்கு "தண்டனை" என்பது - தவறு!. உண்ர்ந்து மறுமுறை செய்யாமலிருத்தல்/திருந்துதல். அதற்கு உண்டான ஆயத்தங்களுக்கு (சிந்தனை) நேரம்.... இப்படி எடுத்துக்கொள்ளலாம். என் தாழ்மையான கருத்து.

Physical hurt by violence can only be punishment!

said...

துளசியம்மா, இந்தச் செய்திகள் உண்மையிலேயே புருவம் உயர்த்த வைக்கின்றன.

ஆனால் ஒரு விஷயம். சிறை என்பது தவறு செய்தவர் திருந்துவதற்குச் சிந்திக்க இடம் கொடுக்கும் இடம். அங்கு அவர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் ஓரளவு நாகரீகமாகவே இருக்க வேண்டும்.

அதற்காக உடற்பயிற்சி செய்ய கருவிகள் இல்லையென்றால் கேட்டு வாங்க வேண்டும். இவர்கள் கோர்ட்டில் கேட்டு வாங்கியிருக்கிறார்கள். பணப்பை வீங்கியிருக்கின்றார்கள்.

said...

//இவ்வளவு ஏன்? இங்கே 'Tips' வாங்கும்/கொடுக்கும் வழக்கம்கூட இல்லை. அண்டை நாடானஆஸ்தராலியாவிலும்இதேதான்!//

புதிய செய்தி. படித்தவுடன் ஒரே ஆச்சர்யம்.

//இவ்வளவு ஏன்? ஒருமுறை இந்த நாட்டின் பிரதம மந்திரி, அவருடைய வேலையில் 'ஸ்ட்ரெஸ்'அதிகம் என்று ராஜினாமா செய்துவிட்டார்.//

நம்ம ஊர்த்தலைவர்கள் எல்லாம் மிகப்பெரிரிரிரிரிரிரிய "ஸ்ட்ரெஸ்" தாங்கிகள். அவர்களுக்கு எதையும் நாட்டுக்காகத் தாங்கும் வலிமை( தள்ளாத வயதிலும்) உண்டு. பதவியை just ஒரு வேலையாக நினைக்கும் பாங்கு பாராட்டத்தக்கது.

காவல்துறை,
அமெரிக்காவிலும் எனக்கு இது போன்ற நல்ல அனுபவங்கள் ஏற்பட்டது உண்டு. தமிழகத்தில் காவல்துறை என்றாலே பயம்தான். நல்லவர்களும் உண்டு, ஆனால் "காவல்துறை உங்கள் நண்பன்" என்பது விளம்பரத்தில் மட்டுமே

said...

அக்கா,
நியுஸி போலீஸ் நல்லவர்கள் போல. தெருவில் பாஸ்போர்ட் கிடைத்ததாக சொன்னீர்கள். உங்க ஊர்ல பாஸ்போர்ட் மாதிரி போட்டோ ஐடி ஏதாவது எப்போதும் எடுத்துண்டு தான் வெளியே போகணுமா?

ஏனென்றால், இங்கே ரஷ்யாவில் இந்த நாட்டினர் உட்பட எல்லோரும் எல்லா சமயத்திலேயும் பாஸ்போர்ட் வைத்திருக்கவேண்டும். (ரஷ்யர்களுக்கு ரெண்டு பாஸ்போர்ட். உள்நாட்டு பாஸ்போர்ட் என்பது தனி!) நமக்கு நம்மூர் பாஸ்போர்ட். அதில் ரஷ்ய உள்துறை அமைச்சகம் வழங்கும் தங்கும் உரிமை ஸ்டாம்ப் எந்நேரமும் இருக்கவேண்டும். ராண்டமாக சோதிப்பார்கள். அப்போது படு பவ்யம். மரியாதை. சல்யூட்டெல்லாம் கூட வைப்பார்கள். அது இல்லையென்றால்... படுத்திவிடுவார்கள்.

நம்மூர் போலிஸும் நான் பார்த்தவரை நல்ல மரியாதையுடன் தான் நடந்துகொள்கிறார்கள். இந்த முறை அரியலூரில், வழி தெரியாததால் ஒரு இளம் காவலரை வழி கேட்டோம். அதற்கு அரசு செலவில், தன் புல்லட்டில் எங்களுக்கு பைலட் மாதிரி சில கி.மி வந்து சரியான ரோடை காட்டி விட்டுத்தான் சென்றார்.

நியுஸி மாதிரியே சந்திரன், மார்ஸ் பத்தியெல்லாம் ஒரு தொடர் போடுங்களேன்.. இல்லேன்னா சங்க கால மதுர.. ரொம்ப ஓவரா போயிடுச்சுல்ல.. அப்பீட்... :)

said...

//நம்மூர் போலிஸும் நான் பார்த்தவரை நல்ல மரியாதையுடன் தான் நடந்துகொள்கிறார்கள். இந்த முறை அரியலூரில், வழி தெரியாததால் ஒரு இளம் காவலரை வழி கேட்டோம். அதற்கு அரசு செலவில், தன் புல்லட்டில் எங்களுக்கு பைலட் மாதிரி சில கி.மி வந்து சரியான ரோடை காட்டி விட்டுத்தான் சென்றார்.//

இராமநாதன்,
நீங்கள் சொல்வது உண்மைதான். என்னவென்றால் உங்களுக்கு கிடைத்த மரியாதை ஒரு சாதாரண நடைப் பயணிக்குக் கிடைக்காது. ஆள்,தோற்றம்,செல்வாக்கு மற்றும் பணம் போன்றவைகளுக்குத் தகுந்தவாறு கவனிப்பு இருக்கும். இது காவல் துறையில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பார்க்கலாம்.

said...

ஷ்ரேயா,

கார்க்காரர் வந்துட்டார். கவலை வேணாம்.

தாசரதி,

உங்கள் கருத்துக்கு நன்றி.

ஒரு சிலர்தான் சிறைவாழ்க்கைக்குப் பின் திருந்திவாழ நினைக்கிறது.
( நம்ம சமூகம் அப்படி சிறைக்குப் போய்வந்தவரை எந்தக் கண்ணோட்டத்துலே பாக்குதுன்றது தனிக்கதை.)

said...

ராகவன்,

நீங்க சொல்ரது மிகச் சரி. ஆனா
இங்கே எல்லாம் ஒரு மாதிரி எக்ஸ்ட்ரீம்தான்.
ஏற்கெனவே சிறையிலே இருக்குற வசதிகளே ஏராளம்.
எனக்கே அங்கேபோய் ஜாலியா இருக்கலாமுன்னு சிலசமயம் தோணுது.

( என் நண்பர் இங்கே ஜெயிலில் வேலை செய்யறார்)

said...

ஆமாங்க கல்வெட்டு.
இந்த 'டிப்ஸ்' விஷயத்துலே வேறு நாடுக்ளிலே கொடுக்காம இருந்துட்டு கிடைச்ச பார்வை இருக்கே.....

'பதவி எனக்கொரு தூசு. ஊதித்தள்ளீருவேன்'னு மேடைப் பேச்செல்லாம் நம்மூருலே இருக்குல்லே?

said...

ராமநாதன்,

பாஸ்போர்ட் எல்லாம் எப்பவும் கையிலே வேணாம். அப்படிக் கேட்டா வீட்டுலே இருக்கு,நாளைக்குக் கொண்டுவந்து காமிக்கட்டுமான்னு கேக்கலாம். இதுவரை அப்படி யாரும் கேக்கலை( 18 வருஷம்)

சங்க காலம் வேணாம்....எங்க பாட்டியை சந்திச்சா, இப்படிப் பொழுதுவிடிஞ்சு பொழுதுபோனா சினிமாப் பாக்கரதுக்கே குட்டு /திட்டு விழும்.

சந்திரன் கூடவேணாம். ஆளுங்க போய் வந்துட்டாங்க. நான் செவ்வாய், புதன், வியாழன் வெள்ளி போவேன். சனி வேணாம்:-)

said...

ராகு கேது கேதுட தம்பிய எல்லாம் (அதான் நெப்டியூன் யுரேனஸ், ப்ளூட்டோ) விட்டுட்டீங்களே! ;O)

வசந்தன் கவனிக்கவும்: பின்னூட்ட எண்ணிக்கை எகிற ஆரம்பிக்கிறது! :OD

said...

ஷ்ரேயா,

வசந்தன் எங்கே கவனிக்கறது?
கடுமையாப் பின்னூட்டம் போட தப்பான இடத்துக்கில்லே போய்க்கிட்டு இருக்காரு.

said...

:O)
அவருக்கு தெரிஞ்சா சரி!

said...

பின்னூட்டம் போட தப்பான இடத்துக்கில்லே போய்க்கிட்டு இருக்காரு"

இல்லியே, அவரு எம்பக்கம் வந்து நாளாச்சே..

said...

தருமி,
அந்த ' தப்பான இடம்' உங்களுதுதானா? :-))