Thursday, July 13, 2006

என் காதலே

பட விமரிசனம்தான். சி. டி.யைக் கையிலே எடுத்தப்பயே மனசு 'திக் திக்'னு இருந்துச்சு.தமிழ்ப்படமா? இல்லே எதாவது டப்பிங் சமாச்சாரமா? திக்திக் திக்திக் திக்திக்.....


அட்டையிலே யார் படம் இருக்கு? நாஸரைத் தவிர வேற யாரையுமே தெரியாது.ம்ம்ம்ம்ம் அப்படியும் சொல்லமுடியாது, இதோ செந்தில், இளவரசு, ஜனகராஜ், பாண்டு...அடடே ஆரத்தி கூட இருக்காங்களே.


'துணிஞ்சவளுக்குத் துக்கம் இல்லை'ன்ற மன உறுதியோட படத்தைப் போட்டேன்.


தமிழ்ப்படம்தான். அந்த வரைக்கும் ஒரு நிம்மதி.


தாயில்லாக் குழந்தையான நாயகனைத் தனியாளாக வளர்க்கும் அப்பா நாஸர்.மகன் காதல் வசப்பட்டதும், எங்கே தனக்கும் மகனுக்கும் இடையில் இருக்கற பாசத்துக்கு பங்கம் வந்துருமோன்னு துடிக்கிற தகப்பனோட கதை.


முடிவு? நானே சொன்னா எப்படி. நீங்களும் பாருங்க.ஆனா.... ஒண்ணுமட்டும் சொல்லிக்கறென்.முடிவு.... சுபம்!


நாயகன் புதுமுகம்- ரவி கணேஷ்


நாயகி புதுமுகம் - விகாஷினி


இயக்கம் -நவீன் கார்த்திக் ( வித்தியாசமான ஸ்பெல்லிங். சோதிடம்/ வாஸ்து?)


இசை புதுமுகம் - மெல்வின்( எல்லாரும் கேக்கறாங்களேன்னு பேரைக் கவனிச்சுப் பார்த்தேன்)


ஆர்த்தி- டபுள் ஆக்ட் கொடுக்குதூ...


பாட்டெல்லாம் நல்லா இருக்கான்னு கேக்காதீங்க. ஓட்டிட்டேன்:-)ஆனா எல்லா டூயட்டும் மலேசியாவுலே ஆடிட்டாங்க.( அதானே, நன்றின்னு ஒரு அரை டஜன் பேர் போட்டாங்களே)


கடைசிக் காட்சிக்கு, ஜஸ்ட் முந்தின காட்சி நல்லா இருக்கு.

இந்தவாரம் கலாய்த்தல் வாரமுன்னு சொன்னாங்க.


சரித்திரம் போரடிக்குதுன்னு சொல்ற அன்பு மாணவர்களுக்காக, இந்த வாரத்தை திரைப்பட வாரமா மாத்தி இருக்கு,ஒரு சேஞ்சுக்கு:-)))

42 comments:

said...

//இந்தவாரம் கலாய்த்தல் வாரமுன்னு சொன்னாங்க.//

இது யாரு சொன்னது?


//சரித்திரம் போரடிக்குதுன்னு சொல்ற அன்பு மாணவர்களுக்காக,//

இது யாரு சொன்னது?

//இந்த வாரத்தை திரைப்பட வாரமா மாத்தி இருக்கு,ஒரு சேஞ்சுக்கு:-)))//

இது யாரு சொன்னது?

said...

சரி, படம் பாக்கலாமா வேண்டாமே அதை சொல்லவே இல்லையே...

said...

மாணவர் மணமறியும் ட்டீச்சர் உலகத்திலே நீங்க மட்டும்தாங்க

said...

கொத்ஸ்,

இது என்ன சொன்னது யாரு.....?

தேவ ரகசியம். வெளியிலே சொல்லக்கூடாது.:-))))


ஆமாம். மக்கள்ஸ் எல்லாம் பேச்சைக் கேக்கறவங்களா எப்ப மாறுனோம்?
பார்க்கலாம்'னு சொல்லிட்டா உடனே பார்த்துருவமா?
இல்லே 'பார்க்க வேணாம்'னா பார்க்காமயே இருந்துருவமா?

எதுக்காக பார்க்கவேணாம்னு சொன்னாங்க. அதுலே அப்படி என்ன இருக்குன்றதுக்காகவாவது
பார்ப்பமா இல்லையா?

எடுப்பார் கைப்புள்ளைகளா நாம்?

எந்த ஒரு விமரிசனமும் எழுதறவங்களுடைய சொந்தக் கருத்து. அதுக்கு
இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணுமா என்ன?

said...

//ஆர்த்தி- டபுள் ஆக்ட் கொடுக்குதூ...//
சின்னத் திரையாச்சே ... இரண்டு உருவமும் தெரிஞ்சுதா ? :)))

said...

//எடுப்பார் கைப்புள்ளைகளா நாம்?//

அக்கா, இதுல கைப்புள்ள ஏன் வர்றாரு? அவர் தான் இந்த சரித்திர க்ளாஸ் போர் அடிக்குதுன்னு சொன்ன மாணவனா?

said...

சிஜி,

மாணவர்கள் மணம்......?

'ஸ்பெல்லிங் மிஸ்டேக்'ன்னு நம்பட்டுமா?

'மனம்'ன்னுதானே சொல்ல வந்தீங்க?

said...

கோவி.கண்ணன்,

அதெல்லாம் நல்லாவே தெரியூதூஊஊஊஊஉ

நம்ம வீட்டுலே 42" ப்ளாஸ்மா.

said...

பொன்ஸ்,

இந்தக் கைப்புள்ளை நம்ம கைப்புள்ளெ உருவாகும் முந்தி( அதாவது எத்தனையோ நூத்துக்கணக்கான வருஷமாக)
இருந்து தொடர்ந்துவரும் பழமொழியாக்கும்.

வ.வா.ச. ஒரு விழிப்புணர்வோட இருக்கறதைப் பார்ராட்டுகின்றேன்:-)))

said...

//வ.வா.ச. ஒரு விழிப்புணர்வோட இருக்கறதைப் பார்ராட்டுகின்றேன்:-)))//

:))))))))))))))))))))))

அப்படியே எங்க சங்கத்துல சொல்லி ஏதாச்சும் பார்த்து போட்டுக் கொடுக்கச் சொல்லுங்க...

நாகை சிவா கிட்ட சொல்லிடாதீங்க.. அவர் வேற மாதிரி "போட்டுக் கொடுத்துடுவாரு" ;)

said...

தலைப்பைப் பார்க்கவும் நான் அக்காவின் முன் நிகழ்வாக்கும் என பார்த்தால் அது திரைப்படமா?

said...

துளசி, கலாய்த்தலும் நல்லாத்தான் இருக்குது.
இந்த வார்த்தை யாரு கண்டுபிடிச்சாங்க?
கே.பி.சுந்தராம்பாள் கேள்வி கேப்பாங்க என்ன என்ன என்ன
என்று.ஏம்பா இதுக்கு ஒரு வாரம் போட்டால் என்ன. கேள்வி பிறந்தது அன்று!!
ஆர்த்தினு ஒரு ஆக்டரெஸ்?
கன்னடக்காரங்களா?
அட ராமா ,, விசுவை விட பயங்கரமா குழப்பிட்டிங்களே. உங்க பதிலே ஒரு பதிவுதான்.

said...

யம்மாடி பொன்ஸ்,

அதெல்லாம் போட்டுக் கொடுக்க சொல்லலாம். அதுக்கு முன்னாலே, ஒரு குட்டியானையைப்
பத்தி தினமலர்லே வந்துருக்கு. பார்த்தீங்களா? அய்யடா..... ச்செல்லம்போல இருக்கு.
பாவம், அம்மா செத்துப்போச்சாம்(-:

said...

என்னார்,

வாங்க.

நம்ம விஷயமுன்னா இப்படி அரைப்பக்கத்துலே அடங்காது.
மெகா சீரியல்தான் :-))))

said...

வல்லி,

'கலாய்த்தல்' யாரோட கண்டுபிடிப்புன்னு தெரியலை. ஆளு மாத்திரம் கிடைக்கணும்....
அப்புறம் பாருங்க......

ஆர்த்தி ஒரு ச்சின்னப் பொண்ணுதான்.நிறையப் படங்களிலே வந்துருக்காங்க. கொஞ்சம்
பூசுனமாதிரி( நம்ம பதிவுலே குண்டு என்ற வார்த்தையை ban செஞ்சுட்டேன். நேத்தே
அது( ?) அதான் அந்த வார்த்தை 7 இடத்துலே வெடிச்சுடுச்சேப்பா) இருப்பாங்க.
சுருக்கமாச் சொன்னா என்னமாதிரி சைஸுன்னு சொல்லிக்கலாம்.

விக்ரம் ஜோதிகா நடிச்ச அருள்( சரியா?) படத்துலே ஜோதிகாவோட தங்கையா வருவாங்களே. அவுங்கதான்.

அவுங்களை எனக்குப் பிடிச்சிருக்குப்பா.

said...

//ஆர்த்தி ஒரு ச்சின்னப் பொண்ணுதான்.நிறையப் படங்களிலே வந்துருக்காங்க. கொஞ்சம்
பூசுனமாதிரி//
பூசுன மாதிரின்னு நீங்க பூசுறிங்க ... ஆர்த்தி பூசுன மாதிரி இல்லிங்க பூசனி மாதிரி.
நான் ஆர்த்தி ரசிகன் :)

said...

Today's target of Kovi.Kannan is Thulasi madam :-))

said...

இந்த படம் எல்லாம் நீங்க விமர்சனம் எழுதறதுக்குனே எடுக்குறாங்களா?(ஃப்ரீ வியூ பார்க்கும் போதே உங்களுக்கு ஒரு காப்பி அனுபிடுறாங்களோ)

//பாவம், அம்மா செத்துப்போச்சாம்(-: //

அதான் பெரியம்ம நீங்க, சின்னம்மா பொன்ஸ் இருக்கும்போது என்ன பாவம் -:))))

said...

தலைப்பை பாத்துட்டு ஏதோ உங்க காதல் கதையை சொல்லி இருப்பிங்கன்னு வந்தா ஒரு பழைய படத்தோட விமர்சனத்தை போட்டு இப்படி ஏமாத்திடிங்களே? ஆமா அது என்ன எங்க போனாலும் ஒரே யானை மயமா இருக்கு பாவம் அதுங்களை விட்டுங்க எவ்வளவு நேரம் தான் அதுங்களும் ஒரே இடத்துல ஓடிட்டும்/ஆட்டம் காட்டிட்டும் இருக்கும். :))

said...

கோவி.க,

ஆர்த்தி பிடிக்கும்--- பூசனி

ஏன்..... எப்படி...... எதுக்கு..... இப்படி....?

said...

நன்மனம்,

கலாய்த்தல் வாரத்துக்கு டார்கெட்டா?

said...

மனசு,

//?(ஃப்ரீ வியூ பார்க்கும் போதே உங்களுக்கு
ஒரு காப்பி அனுபிடுறாங்களோ)//

எடுக்கறதே ஒரே ஒரு காப்பிதான் :-)))))

said...

சந்தோஷ்,

மூணுநாளைக்கு முன்னாலே வந்த படம், பழைய படமா?
என்னங்க இது கொடுமையா இருக்கு?
( எந்த ஸ்டைலில் படிக்கணுமுன்னு தனியாச் சொல்லவேணாம் இல்லையா? ):-)))

said...

//என் காதலே
பட விமரிசனம்தான் // ம்ம் என்னமோன்னு வந்தா ..சப்புன்னு போச்சு.

//
அட்டையிலே யார் படம் இருக்கு? நாஸரைத் தவிர வேற யாரையுமே தெரியாது//

நமக்கு எல்லாம் வயசு ஆகிடுச்சு அக்கா.

//இயக்கம் -நவீன் கார்த்திக் ( வித்தியாசமான ஸ்பெல்லிங். சோதிடம்/ வாஸ்து ?)//
எப்ப இருந்து நம்ம மக்கள் பேருக்கெல்லாம் வாஸ்துப் பார்க்க ஆரம்பிச்சாங்க?

said...

இப்படி ஒரு தமிழ் படமா.. அறிமுகப் படித்தினதுக்கு நன்றி துளசி...

said...

அடடே... கல்வெட்டு.

வாங்க வாங்க. நலமா?

அதென்ன நமக்கு வயசாயிப் போச்சுன்னுட்டீங்க..... இந்த அஸின், பிஸின், நயந்தாரா எல்லாம்
தெரியுதேங்க :-))))

வாஸ்துதான் இப்ப 'எங்கும் எதிலும்'னு இருக்காமே.அப்பப் பேருக்கு இருக்காதுங்களா?

said...

வாங்க கார்த்திகேயன்.

தமிழ்ப் படம்தான்.

ச்சும்மா ஒருக்கா பார்த்து வைக்கலாம்.

said...

இப்பிடி ஒரு படமா? கேள்விப்பட்டதேயில்லையே! எந்த வருசம் வந்தது? உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக வர வாய்ப்பு இருக்கும் போலத் தெரியுது.

said...

சரித்திரம் போரடிக்குதுன்னு சொல்ற அன்பு மாணவர்களுக்காக, இந்த வாரத்தை திரைப்பட வாரமா மாத்தி இருக்கு,ஒரு சேஞ்சுக்கு//

பாத்து டீச்சர்.. இதுவே நல்லாருக்குன்னு இப்படியே எழுதுங்கன்னு சொல்லிரப் போறாங்க..

said...

ராகவன்,

படத்தோட கவர்லே 'Not for sale in India'ன்னு இருக்கு.( எல்லாப் படத்துக்கும் இருக்கறதுதான்)
ஒருவேளை படமும் இப்படி 'உங்களுக்காக' இல்லை போல:-))))

said...

வாங்க டிபிஆர்ஜோ.

நம்ம வகுப்பு மாணவர்கள் இப்படியெல்லாம் சொல்ல மாட்டாங்கன்ற ஒரு நம்பிக்கைதான்:-))))

அப்பப்ப நாமெ ஒரு ப்ரேக் விட்டா, அவுங்க வகுப்புக்கு ஒரேடியா மட்டம் அடிக்க மாட்டங்கதானே? :-))))
நானும் அட்டெண்டன்ஸ் காமிக்கணுமில்லே:-))

said...

துளசியக்கா,

இன்னொரு 'காவேரி'மாதிரி யான ஒரிஜினல் தமிழ்ப்படம் மாதிரி ஒரு ஃபீலிங் எனக்கு வர்றதாலே பார்க்கிறதில்லைன்னு ஒரு முடிவுக்கு வர உங்க 'ரிவ்யூ' உதவிகரமா இருக்கு.

said...

அந்தக் காலத்தில் ஆசிரியை எங்களுக்கு கணக்குப் போடச் சொல்லிவிட்டு கதைப்புத்தகத்தில் ஆழ்ந்தால் இன்று நீங்கள் திரைப்படங்களில் ! நல்லவேளை அசைன்மென்ட் கொடுக்காமல் கதை சொல்கிறீர்களே, அந்த வரை பரவாயில்லை :)

//அவர் தான் இந்த சரித்திர க்ளாஸ் போர் அடிக்குதுன்னு சொன்ன மாணவனா?//
அவரே சரித்திரநாயகனாக ஆனதாகக் கேள்வி ?

said...

மனம்...மனம்

மனம்...மனம்
மனம்...மனம்
மனம்...மனம்
மனம்...மனம்

said...

ஹரிஹரன்,

படங்கள் விஷயத்துலே நான் 'உத(வும்)விக் கரமா இருக்கேனா? அந்தப் படங்களின்
தயாரிப்பாளர் & பார்ட்டிங்களோட சாபம் ஒண்ணும் வராதுல்லே?:-))

said...

மணியன்,

வாங்க. மும்பை நிலை ஓரளவு சரியாச்சுன்னு படிச்சேன். மக்கள் மனநிலைஎப்படி இருக்குங்க?

'அந்த' மாணவன் 'இவர்' இல்லைங்களே.


தமிழரையும் சினிமாவையும் பிரிக்கமுடியாதுங்களே :-))))

said...

சிஜி,

பேராசிரியர்........எப்படி வகுப்பை நடத்துனாருன்னு கோடி காமிச்சீங்களா? :-)))))))

( நம்ம பதிவுலே ஒரு புதுமை வந்துருக்கு பார்த்தீங்களா? கட்டம் கட்டுன பெட்டியிலே!)

said...

இந்த படத்தோட போஸ்டரை 2 செகண்ட் பாக்கறதுக்கே ரொம்ப போர் அடிக்குதுன்னு கேள்விபட்டேன்..

நீங்க எப்படிங்க இந்த படத்தை எல்லாம் முழுசா பாக்கறீங்க???

said...

வாங்க கப்பி பய.

என்ன செய்யறதுங்க? நானும் சொல்லலைன்னா இப்படிப் படம் வந்த விவரம் யாருக்காவது தெரியுமாங்க?

எல்லாம் ஒரு 'சமூக சேவை'தான் :-)))

said...

//துளசி கோபால் said...
கோவி.க,

ஆர்த்தி பிடிக்கும்--- பூசனி

ஏன்..... எப்படி...... எதுக்கு..... இப்படி....?
//
(ஏன்)குண்டா இருக்கவுங்கள கிண்டலடிக்கிறது பிடிக்கும் ... (எப்படி) குண்டா இருக்கிறவங்களே அடுத்தவங்கள கிண்டலடிக்கிறது ரொம்ப பிடிக்கும். (இதுக்கு) ஆர்த்தி சன் டிவி டாப் டென் பாடல்கள் நிகழ்சியில் சும்மா பூந்து வெளயாடுவாங்க. (இப்படி) அவுங்க நகைச்சுவை டைமிங்காக இருக்கும். செவ்வாய் கிழமை மிஸ் பண்ணுவதில்லை :))))
நீங்க நாலு கேள்வி நறுக்குன்னு கேட்டதுக்கு நாலு சிரிப்பான்

said...

கோவி.க,

நன்றி. நம்ம வல்லி தான் இந்த ஆர்த்தி கன்னட நடிகையான்னு கேட்டுருந்தாங்க.
சன் டிவி டாப் 10லே வர்றாங்களா? தமிழ் எப்படிப் பேசறாங்க?
டிவிக்கு ஒரு ஸ்டைல் இருக்கே அதேபோலவா

said...

//கோவி.க,

நன்றி. நம்ம வல்லி தான் இந்த ஆர்த்தி கன்னட நடிகையான்னு கேட்டுருந்தாங்க.
சன் டிவி டாப் 10லே வர்றாங்களா? தமிழ் எப்படிப் பேசறாங்க?
டிவிக்கு ஒரு ஸ்டைல் இருக்கே அதேபோலவா //
துளசியக்கா,
அவுங்க சத்திரியன் படத்தில் விஜயகாந்துக்கு மகளா நடிச்சிருப்பாங்க... அவுங்க சன் டீவியால தான் இவ்வளவு தூரத்துக்கு பாப்புலர் ஆனாங்க. கொஞ்ஜம் கட்டைக்குரலால். நல்ல உச்சரிப்பு ... குறிப்பா ஆண்களை கிண்டலடிப்பாங்க. செவ்வாய் கிழமையில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கும் மறு ஒளிபரப்பாக சனிக்கிழமை 11 மணிக்கும் சன் டீவி டாப் டென்னில் ( எதாவது தமிழ் சினிமாவை உல்டா பண்ணும் காமடி) யில் வருவார்கள். இந்த நிகழ்ச்சி 3 வருடத்துக்கு மேலாக சன் டிவியில் நடந்து வருகிறது