Tuesday, July 04, 2006

ஆறப் போட்டுட்ட ஆறு.

இந்த ஆறு வெள்ளாட்டுக்கு என்னையும் சேர்த்துக்கிட்டாங்க பலர். (அதாவது ஒன்றுக்குமேற்பட்டவர்கள்ன்னா 'பலர்'தானே? அந்தக் கணக்குலே)
எழுதிறலாமுன்னு நினைச்சுக்கிட்டே ரொம்பத்தான் ஆறப்போட்டுட்டேன். இன்னும் விட்டேன்னா இந்த வெள்ளாட்டு 'பத்தாக' வர வாய்ப்புக் கொடுத்ததாப் போயிரும்.


எந்த ஆறைச் சொல்றது? எந்த ஆறை விடறது? இந்தக் குழப்பமே இன்னும் தீர்ந்தபாடில்லை.

பார்க்கவிரும்பும் ஆறு இடங்கள் வெளிநாட்டில்:


கங்கோத்தரி, கங்கை ஆறு...

தலைக்காவிரி

வள்ளுவர் சிலை கன்னியாகுமரி

ஜெய்ப்பூர் அரண்மனைகள்

ராஜஸ்த்தான் பாலைவனங்கள்



கோயில்கள்: வெளிநாட்டில்:


துவாரகை

கங்கைகொண்ட சோழபுரம்

உடுப்பி கிருஷ்ணன்

தர்மஸ்த்தலா

அம்ரித்ஸர் தங்கக்கோயில்

சந்திக்க விரும்பும் ஆறு எழுத்தாளர்கள்.( ஆமாம், சந்திச்சா என்ன பேசறது?)

சுஜாதா

கி.ராஜநாராயணன்

இரா. முருகன்

ஷங்கரநாராயணன்

ஜோதிர்லதா கிரிஜா

சந்திக்க விரும்பும் வலைப்பதிவாளர்கள்:

ஒருவர் (????) நீங்கலாக அனைவரையும் சந்திக்கத்தான் ஆசை.சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கலாம்.

உங்ககிட்டே எதாவது இதுவரை சொல்லாம விட்டுருந்தாத்தானே அதையெல்லாம் புதுசா இங்கே சேர்க்க?

கேக்கறீங்களோ இல்லையோ எல்லாத்தையும் ஒப்பிச்சாச்சு. அப்படியும் தேடித்துருவிப் பார்த்ததுலே கிடைச்சதுதான் இந்த மேலே இருக்கற விவரங்கள்.


ச்சும்மா 'ஆறு'ன்னு ஆறு பதிவுக்காக இருக்கே தவிர, அங்கங்கே 5 இல்லேன்னா 4 தான் இருக்கும்.பாக்கி விட்டது இன்னும் மனசுலே வரலை.


சம்பிரதாயமா நானும் ஆறு பேரைக் கூப்புடணுமா?


இதுவரை 'ஆறு'லே கலந்துக்காதவங்க 'ஆரு'வேணா வரலாம். இதுக்குப்போய் 'யாரு'ம் வெத்தலைபாக்கு வச்சு அழைக்கணுமா என்ன? எல்லாம் இன்ஃபார்மல்:-)

53 comments:

said...

வித்தியாசமான ஆறுப்பதிவு.

//உங்ககிட்டே எதாவது இதுவரை சொல்லாம விட்டுருந்தாத்தானே அதையெல்லாம் புதுசா இங்கே சேர்க்க?//

:))

said...

இங்க வந்து பொன்ஸ் ஏன் இப்படி ஆட்டம் போடுகிறார்?

said...

வெத்தலை பாக்கு வைச்சு அழைக்குணுமா?.

அப்படி யாரும் சொல்லவில்லை. அது உங்களை கவர்ந்த பதிவர்களை பாராட்டும் ஒரு வழி, அல்லது அங்கிகாரம் கொடுக்கும் வழி என்பதாகவே நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும்

said...

வருகைக்கு நன்றி வெற்றி

said...

சிபி,

பொன்ஸ் எங்கே ஆட்டம் போட்டாங்க? இப்ப ஆட்டம் போடறது நீங்கதான் :-))))
உங்களுக்காக காதல்காவியம் எல்லாம் போட்டுருக்கார் தெ.கா.

said...

அந்த ஒருவர் நான் தானே ;-)? ராஜஸ்த்தான் போன நிறையெ தண்ணீர் எடுத்துட்டுப் போங்க.

ஒரு டம்ளர் தண்ணி அங்கே 25 பைசா, குடிச்சா உங்க வைத்துக்கு நான் பொருப்பில்லை :-)))

said...

பாலசந்தர் கணேசன்,


தப்பா எடுத்துக்கிட்டீங்களே.
நான் ஆரம்பத்துலே இருந்து சொல்றதேதான். நாமெல்லாம் ஒரே குடும்பம். இதுலே என்ன ஃபார்மாலிட்டி?

இதுவரை கலந்துக்காதவுங்க யார்வேணா வரலாம்.

அப்புறம் நீங்க சொன்ன

//அது உங்களை கவர்ந்த பதிவர்களை பாராட்டும்...//

இதுதான் கஷ்டம். எனக்கு எல்லாரையுமே பிடிக்கும். அதுலே வெறும் 6 பேருன்னா எப்படிங்க? (-:

said...

தெ.கா,

இங்கேயிருந்து தண்ணி எடுத்துக்கிட்டுப் போறது 'டென் மச்' இல்லையா?:-)))

said...

நீங்களும் அழகான ஆறு போட்டிருக்கிறீர்கள்!
.....உங்கள் பாணியில்!
நிறைய யோசித்திருக்கிறீர்கள்!
நன்றாக வந்திருக்கிறது!

said...

வாங்க SK.

இனிமே எதையும் முழுசுமாச் சொல்லாமக் கொஞ்சம் வச்சுக்கணும்.
இப்ப திடீர்னு 10 போடச் சொல்லிட்டாங்கன்னா? :-)))

said...

துளசியக்கா, ஆறு நல்ல போட்டு இருக்கீங்க. ஆற்றில் வெள்ளம் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் வெள்ளமும் இல்லை .. கள்ளமும் இல்லாத சிற்றோடை

said...

என்ன டீச்சர் இது இப்பிடி சுருக்கமா முடிச்சிட்டீங்க? ஆறப் போட்டாலும் அயிரையப் போடனும். ஊறப் போட்டாலும் ஊறுகாயப் போடனும்னு பழமொழியெல்லாம் இல்லியே!

கி.ராவைச் சந்திக்கும் ஆவல் எனக்கும் உண்டு. தர்மஸ்தலா நான் போயிருக்கிறேன். நல்ல இயற்கை எழில் கொஞ்சும் இடம்.

said...

வேலை அதிகமாச்சு....கான்செண்ட்ரேஷன்
குறைஞ்சிடுச்சா?
வெளிநாட்டில் னு போட்டுட்டு இந்திய ஆறுகள்,இடங்களைக்குறிப்பிடுறீங்க
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

said...

இதுவரை 'ஆறு'லே கலந்துக்காதவங்க 'ஆரு'வேணா வரலாம். இதுக்குப்போய் 'யாரு'ம் வெத்தலைபாக்கு வச்சு அழைக்கணுமா என்ன? //

அடடடா.. என்னடா துளசியோட நக்கல காணமேன்னு பார்த்தேன்..

ஆறு, ஆரு, யாருன்னு வார்த்தை விளையாட்டு விளையாடிட்டீங்க..

said...

//பார்க்கவிரும்பும் ஆறு இடங்கள் வெளிநாட்டில்://
//கோயில்கள்: வெளிநாட்டில்://
இது என்ன வெளிநாட்டில் என்று விட்டு ஒரேநாட்டில் உள்ளவையாக இருக்கிறதே!
உங்களுக்கும் எங்களுக்கும் பொதுவான வெளிநாடுகளை எடுத்துக் கொள்ளவில்லையா ?
NRI என்று புரிகிறது, ஏக்கமும் வெளிப்படுகிறது.நாங்கள் உள்நாட்டில் இருந்து கொண்டு க்ரைஸ்ட்சர்ச் பள்ளிக்கு வரலாமா என்று ஆசைப்படுகிறோம் :)

said...

கோவி. கண்ணன்,

இப்படி, உள்ளும் புறமும் ஒன்றேன்னு இருக்கறதும்கூட சிலசமயம் கஷ்டமாப்போயிருது.
அதுக்காக நம்ம சுபாவத்தை மாத்திக்க முடியுதா என்ன?

said...

ராகவன்,

சொல்லிக்கறதுக்கு ரொம்ப இல்லையேப்பா. அப்புறம் என்னத்தைன்னு சொல்றது?

said...

சிஜி,

இந்தியாவே எனக்கு வெளிநாடுதானேங்க. அப்ப அங்கே இருந்தப்ப ஒண்ணும் பார்க்கலை.
அதுக்கெல்லாம் நேரமும் இல்லை, காசும் இல்லை.

இப்ப உலகத்துலே எத்தனையோ இடங்களைப் பார்த்துட்டாலும், இந்தியாவுலே
பார்க்காத இடங்கள் மனசுக்குள்ளெ வந்துவந்து போகுது.

இந்தியாவை முழுசாப் பார்க்க ஒரு ஜென்மம் போதாது போல.

said...

டிபிஆர்ஜோ,

என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க? நக்கலுக்கும் எனக்கும் காத தூரமில்லையா? :-)))

said...

மணியன்,

அதாங்க வெளி'நாடுகளில்'ன்னு போடாம வெளி'நாட்டில்'னு போட்டது.

//நாங்கள் உள்நாட்டில் இருந்து கொண்டு க்ரைஸ்ட்சர்ச் பள்ளிக்கு
வரலாமா என்று ஆசைப்படுகிறோம் :) //

வாங்க, தாராளமா வாங்க.

said...

நல்ல இருக்கு மேடம்.நீங்கள் இப்போது இந்தியாவில் இல்லை என்பதற்காக மேற்க்கொள்ளப்பட்டவைகள் நன்று.

said...

naanum try panren intha aarai :-))

said...

//இந்தியாவை முழுசாப் பார்க்க ஒரு ஜென்மம் போதாது போல. //
கண்டிப்பாக, நமக்கு பக்கத்திலே இருப்பதால் அதன் அருமை புரியாமல் உள்ளோம்

said...

கட்டாயம் எழுத்தாளர்களைப் பார்க்க முடியும்.
மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றூப் பயணம் கூட நானும் வருவேன். போகவர கைடாக என்னைப் போட்டுவிடுங்கள்.

said...

அப்படியே இங்க வந்து பாருங்க!
கவலைகளை மறந்து சிரிக்க ஒரு அழைப்பிதழ் இருக்கு!

http://kalaaythal.blogspot.com/2006/07/004.html

said...

துளசியக்கா,

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் அரண்மனைகள், ஆஜ்மீர் பார்த்து இருக்கிறேன்.

நம்மூர் "தார்" பாலைவனம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டதற்கு குவைத்-பாலைவனத்தில் இருக்கிறேன். நம்மூர்ல பாலைவனம் கூட தனி அழகுதான்.

ஹரித்வாரில் வேகமாய் வரும் கங்கையில் நீராடுவது அருமையான அனுபவம். ரிஷிகேஷ் வரை போயிருக்கிறேன். கங்கோத்ரி போகவேண்டும்.

எழுத்தாளர்களில் சுஜாதாவை குவைத்தில் கண்டு பேசியிருக்கிறேன்.

பத்தாது.. இந்தியாவை முழுதும் பார்க்க ஒரு ஜென்மம் பத்தாதுதான்!


//இதுவரை 'ஆறு'லே கலந்துக்காதவங்க 'ஆரு'வேணா வரலாம். இதுக்குப்போய் 'யாரு'ம் வெத்தலைபாக்கு வச்சு அழைக்கணுமா என்ன? //

ஆகா அக்கா..என் மாதிரி புது வலைஞனுக்கு இது தானே "வெத்தலைபாக்கு வச்சு அழைக்கும் அழைப்பு"

விடுமுறையில் இந்தியாவுக்கு போகுமுன் ஆறு மாதிரி ஆறுகளைப் பதிஞ்சிருவோம்.

said...

உங்க பதிவில சொன்ன கோவில்கள், இடங்கள் அத்தனையும் நான் பார்த்தாச்சே. தர்மஸ்தாலா, உடுப்பி, அப்படியே கொல்லூர் போய் தங்கி பார்த்துட்டு வாங்க. சாப்பாடெல்லாம் இலவசமாவே கிடைக்கும்.

said...

துளசிக்கா

அப்படியே இங்க ஒரு நடை வந்துட்டு போங்க.

"ஆரு" கூட வந்தாலும் சரி.

said...

வாங்க ராம்.

நம்மூர்லேயே பார்க்க, செய்ய வேண்டியதுகள் நிறைய பாக்கி
இருக்குங்க. அதான்....இப்படி.

said...

கார்த்திகேயன்,

வாங்க வாங்க. சுகமா இருக்கீங்களா?

இப்படித்தாங்க நாமே முன்வந்து ஆட்டத்துலே கலந்துக்கணும்.

சீக்கிரம் உங்க 'ஆறை' போடுங்க. 'ஆறப்போட்டுறாதீங்க.'

said...

நாகை சிவா,

அதுதான். தூரப்பார்வை. கிட்டே இருக்கறது கண்ணுக்குத்தெரியாது:-))))

said...

மானு,

கைடு வேலைக்குச் சரியான ஆள்தான். வந்துடறேன். அப்படியே பேசிக்கிட்டே
போலாம்.

said...

வாங்க ஹரிஹரன்.

எப்ப ஊருக்குப் போறீங்க? சீக்கிரம் 6 போடுங்க. நம்மது ஒரே தமிழ்மணக்குடும்பம்.
வேறுபாடு பார்க்காம எல்லாரும் இந்த விளையாட்டில் கலந்துக்கலாம்.

said...

சிபி,

பித்தம் + ஆனந்தம் ரொம்பவே தலைக்கேறிப்போச்சா?

சரியான ஊர்தான் ஸ்வாமிஜி இருக்கறது:-)))))

said...

பத்மா,

எல்லா இடமும் பார்த்துட்டீங்களா? என்னப்பா, போறப்ப என்னையும் கூட்டிட்டுப்
போயிருக்கலாமுல்லே?:-)))

said...

// ஒருவர் (????) நீங்கலாக //
அது யாரா இருக்கும்ன்னு யோசிக்கவச்சி முடியை பிச்சுக்க வச்சிட்டீங்களே!

said...

அதானே, இன்னொரு டிரிப் போட்ட போச்சு. எப்ப போகலாம் சொல்லுங்க? பத்ரிநாத், ஜோதிர்ஷ்மட், ரிஷிகேஷ் எல்லாத்தையும் சேர்த்துக்கலாம். அந்த இடங்கள் கூட ரொம்ப அழகு.

said...

ஆழமான ஆறு வரும்னு பாத்தா, இப்படி ஓடை மாதிரி ஆகிருச்சே..
ஆரு வேணும்னாலும் ஆறுக்கு வரலாம்னு சொன்னீங்க பாருங்க அது உங்க பரந்த மனச காட்டுது..
எல்லோருக்கும் ஆறென்ன நூறே இருக்கலாம்..

பிகு:இ.கொ நம்ம பதிவுல வந்து உங்களுக்கு துளசிய தெரியுமா, நீங்க ஏன் அங்க வர்ரதில்லேன்னு கேட்டிருந்தார், அதுக்காகதான் இந்த பின்னூட்டம்னு சொல்ல வரல, நாம நம்ம பதிவுக்கு ஏத்தா மாதிரிதான் கம்னு இருப்போம், அது துளசிக்கும் தெரியும்னு சொன்னேன். சரிதானே?

said...

பெருசு,

அதுக்கென்ன, வந்தாப்போச்சு. ஒரு பெரிய கூட்டத்தையே கொண்டு வந்துருவேன்.
அப்புறம் 'பெருசா' சமைக்கவேண்டி இருக்கும். பரவாயில்லையா? :-)

said...

என்னங்க மதி,

அந்த ஒருவர்(?) ஏன் நானாவே இருக்கக்கூடாது? :-)))

said...

பத்மா,

அப்படீங்கறீங்க? போயிரலாம். என்னாத்துக்கு அந்தக் குறையை வச்சுக்கணும்?

said...

சுரேஷூ,

என்னது துளசியைத் தெரியு............மா...........வா..........?
நம்ம நியூஸி மாநாடு அறிக்கையைப் பற்றிப் படிக்காத இ.கொ.வை வன்மையாகக்
கண்டிக்கிறோம்'ன்னு ஒரு அறிக்கை விடவேண்டியதுதானே?

சவுண்டு கொடுக்கவேண்டிய சமயத்துலே சவுண்டு கொடுத்துரணும். இப்ப
இதுக்கெல்லாம் 'மெளனமா' இருக்கறது நல்லதுல்லை, ஆமாம்.

போட்டும். நம்ம ஆறு அவுத்துவிட்டாக் 'காட்டாறு' ஆயிரும். அதுக்குத்தான் கொஞ்சம்
அடக்கி வாசிக்கலாமுன்னு பார்த்தா அது 'நதி ஒன்று ஓடை ஆகிறது'ன்ற லெவல்லே வந்துருச்சு.

said...

துளசி மேடம் இப்படி கூட ஆறு போடலாமா!!! ஆறப் போட்டுட்டதை சொல்லவில்லை, ஆறு எழுதன விதத்தை சொல்லறேன்! சூப்பருங்க! என்னை அருள், 6 வழிச்சல்கள் போட கூப்பிட்டு இருக்காரு. இது மாதிரி எழுத பார்ப்போம் :)))

//

சந்திக்க விரும்பும் வலைப்பதிவாளர்கள்:

ஒருவர் (????) நீங்கலாக அனைவரையும் சந்திக்கத்தான் ஆசை.சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கலாம்.//

யாருங்க அந்த ஒருவர்?? Hope i am not that one ;)

நட்புடன்,

ஜெயசங்கர்

said...

ஜெயசங்கர்,

இது நம்ம 'ஆறு'. அதனாலே எப்படிவேணுமுன்னாலும் போடலாம்:-)))))
பார்க்கறதுக்கு 'ஆறு'மாதிரி இருக்கணும். அவ்வளோதான்.

said...

ஆனாலும், நீங்கள் சந்திக்க விரும்பும் ஆறு எழுத்தாளர்கள் லிஸ்ட்ல என்ன விட்டுட்டீங்களே :(

said...

அருள்குமார்,

நாமெல்லாம் 'எழுத்தாளர்' லிஸ்ட்டுலே வந்துட்டோமா?

பேஷ் பேஷ்!

எப்பலே இருந்து?

தெரியாமப்போச்சேப்பா? (-:

said...

//ஆமாம், சந்திச்சா என்ன பேசறது//
கரெக்டான கேள்விக்கா..
இது சொன்ன உடனே எனக்கு நினைவு வருது... நான் வலைபதிவுக்கு வந்த புதுசுல மதுரை போனப்போ தருமியைப் பார்க்கலாம்னு நம்பர் எல்லாம் வாங்கி வச்சேன்.. அப்போ அவர் இந்த ஜோசியம் மாதிரி பதிவெல்லாம் எழுதிகிட்டு இருந்தாரு.. அப்போ அதெல்லாம் நான் படிச்சதே இல்லை... இவ்ளோ சீரியஸான எழுத்தாளரைப் பார்த்தா, என்ன பேசுறதுன்னு சந்தேகத்துலயே அவரைச் சந்திக்காம வந்துட்டேன்..
ம்ம்.. இன்னும் நீண்ட காலத் திட்டமாவே இருக்கு அவரைச் சந்திக்கிறது... :)

said...

பொன்ஸ்,

நம்ம 'தருமி' பத்துன சந்தேகத்தை விடுங்க. அவர் நம்மளைப்போலவே
ஜாலியான டைப் தான்.
பழகுவதற்கு இனியவர்தான். கட்டாயமா, சந்தர்ப்பம் கிடைச்சா விட்டுறாதீங்க.

said...

என்ன டீச்சர், மழை சரியா பெய்யலையா? ஆறு அடங்காம ஓடறதுக்குப் பதிலா அடக்கமா ஓடுதே?

அப்புறம் நான் கேட்டதுனால வரலைன்னு கிவியன் பெருந்தன்மையா சொல்லிட்டாரு இல்ல. அதுக்காக நான் பட்டமா கேட்டேன். அதை விட்டுப்புட்டு கண்டிக்கிறேன், தண்டிக்கிறேன்னுகிட்டு....

said...

சரி. லேட்டா வந்ததாலே நானே இன்னொண்ணு போட்டு 50 ஆக்கறேன்.

said...

ஏம்ப்பா கொத்ஸ்,
அப்பப்ப இப்படி அறிக்கைகள் ( வன்மையாகக் கண்டிக்கிறேன்னு) விட்டாத்தானே நானும்
ஒரு அரசியல்வாதியா ஆக முடியும்?
மெதுவா ஒரு எம்.பி.யாவாவது ஆனாதானே நல்லது? வயசாச்சு. வியாதி வெக்கை படுத்தும்போது
நல்ல சிகிச்சையாவது கிடைக்குமுல்லே?

பின்னூட்ட நம்பரைக் கண்காணிப்புலே வச்சுக்கறதுதான் நல்லது.( இல்லையா?)

said...

துளசிம்மா!
நானும் வந்திட்டேன்.

கோடை வெயிலுக்கு ஆறின் வெள்ளம் பத்தேல்லம்மா.

said...

மலைநாடான்,

கோடை வெயிலா.........?

இங்கே குளிர் வாட்டி எடுக்குதேங்க.
அதான் நம்ம ஆறும் ஃப்ரீஸ் ஆயிருச்சு:-)))