Monday, July 10, 2006

அப்பாடா.... இனி உங்க பாடு.

கொஞ்ச நாளைக்கு முன்னாலே இங்கெ இந்தியன் ஹைகமிஷனர் விவகாரம்எழுதுனது யாருக்காவது நினைவு இருக்குதுங்களா? அதுக்கு இது ஃபாலோ அப். முந்தி எழுதுனது இங்கே இருக்கு.


அவரும் எப்படியாவது இங்கேயே இருக்கணுமுன்னு தலையாலெ தண்ணி குடிச்சுப்பார்த்தாருங்க. இந்திய அரசாங்கம் அவரோட, அவர் குடும்பத்தோட, அவரோட சொந்த வேலைக்குக் கொண்டுவந்தவரோட பாஸ்போர்ட்டுகளை யெல்லாம் ரத்து செஞ்சுருச்சு.


அவரோட மனைவி வேற ஒரு தனிப் பாஸ்போர்ட்டுலே இங்கே வசிக்க உரிமை கேட்டு விண்ணப்பம் கொடுத்துருந்தாங்க.


நம்ம நியூஸி இமிக்ரேஷன் சர்வீஸ், 'இங்கே இருக்கற
விதிமுறைகளுக்குப் புறம்பா நாங்க ஒண்ணும் செய்யமுடியாது. உங்க அரசாங்கம் உங்களைத் திரும்ப வரச்சொன்னா நீங்க போய்த்தான் ஆகணும். இல்லேன்னா 'ஓவர்ஸ்டே' செய்யறவங்களை இங்கே இருந்து எப்படி அப்புறப்படுத்தறமோ அதே போல உங்களையும் போலீஸ் உதவியோடு வெளியேற்ற வேண்டி இருக்கும்'னு சொல்லிருச்சு.


'உங்களுக்கு இங்கே வந்து குடியேறணுமுன்னா, உங்க நாட்டுலே இருந்து, எல்லாருக்கும் உள்ள விதிகள்படி மனு கொடுங்க. தகுதி இருந்தா ஒருவேளை உங்களுக்கு குடியுரிமை கிடைக்கலாமு'ன்னு நியூஸி குடியேற்ற இலாக்கா மந்திரி சொல்லிட்டார்.


ஆனாலும் இங்கே குடியுரிமை முறைகளிலே எதாவது ஓட்டையிருந்தா அதைப் பிடிச்சுக்கிட்டு அதுமூலமா இங்கேயே இருந்துருவாங்களோன்னு இங்கே இருக்கற இந்திய சமூகம் பயந்துக்கிட்டே இருந்துச்சாம்.


அங்கேயும் இந்திய அரசாங்க வெளியுறவுத் துறை இவரைக் கட்டாயமா வரச்சொல்லி மீண்டும் மீண்டும் வற்புறுத்தி, பாஸ்போர்ட் இல்லாம இந்தியா வந்து சேர, இவருக்கும் இவரைச் சேர்ந்தவங்களுக்கும் ஒரு எமர்ஜென்ஸி ட்ராவல் டாக்குமெண்ட் சர்ட்டிஃபிகேட் ( ஒரு குறிப்பிட்ட செக்டர்க்குள்ளெ மட்டும் செல்லுபடியாகும்)அனுப்பி வச்சிருக்கு.


வேற வழி இல்லாம கடைசியிலே போனமாசம் 17க்கு இங்கிருந்து கிளம்பிட்டார். ஏர்ப்போர்ட்டுலே வச்சுப் பத்திரிக்கை நிருபர்கள்கிட்டே,' இங்கே இந்தியன் ஹை கமிஷன்லே ஒரே ஊழல். அதைக் கண்டு பிடிச்சுட்டேன். அதனாலேதான் எனக்கு இப்படிக் கஷ்டம் வந்துருச்சு. எல்லாரும் எனக்கு எதிரா செயல் பட்டாங்க... ....இந்தியாவுலேயும் நான் இதையெல்லாம் சொல்லப்போறென். வெளியுறவு இலாகாவைச் சும்மா விடமாட்டேன்.அவுங்க மேலே மானநஷ்ட வழக்குப் போடுவேன்' இன்னும் என்னென்னமோ சொல்லிட்டுப் போயிருக்கார்.


அங்கே 18ந்தேதி காலை வந்து சேர்ந்துட்டாரு.

இனி உங்க பாடு.

46 comments:

said...

அட!!நடந்துடுச்சா இது.
எங்க பாடா?

இவங்களையெல்லாம் அனுப்ப ஏதாவது தனித்தீவு கண்டு பிடிக்கணுமே!!
அப்புறம் அதுவும் வேறு நாடாகிவிடும்.
சாமீ காப்பாத்து.

said...

//இந்தியன் ஹை கமிஷன்லே ஒரே ஊழல். அதைக் கண்டு பிடிச்சுட்டேன். அதனாலேதான் எனக்கு இப்படிக் கஷ்டம் வந்துருச்சு. எல்லாரும் எனக்கு எதிரா செயல் பட்டாங்க... ....இந்தியாவுலேயும் நான் இதையெல்லாம் சொல்லப்போறென். வெளியுறவு இலாகாவைச் சும்மா விடமாட்டேன்.அவுங்க மேலே மானநஷ்ட வழக்குப் போடுவேன்' //

துளசியக்கா,
நம்ம ஊரு அரசியல்வாதிங்க ஸ்டேட்மென்ட் விடுவதற்கு ... நம்ம ஊரு அதிகாரிங்ககிட்ட பிச்சை வாங்கனும். காலையில் இந்த பதிவைப் படித்துவிட்டு ... ஒரே சிரிப்பா இருக்கு :)))

said...

//இங்கே இந்தியன் ஹை கமிஷன்லே ஒரே ஊழல். அதைக் கண்டு பிடிச்சுட்டேன். அதனாலேதான் எனக்கு இப்படிக் கஷ்டம் வந்துருச்சு. //

அது சரி :)) அக்கா, இந்த மாதிரி ஆட்களை எல்லாம் எங்க ஊருக்கு அனுப்பி வச்சா நாங்க என்ன பண்றது?!! :)

said...

துளசி அக்கா,
தகவலுக்கு நன்றிகள்.

said...

மானு,

உங்க ஐடியா நல்லா இருக்கே. ஆள் இல்லாத தனித்தீவு கிடைக்குதான்னு பார்க்கலாமா?

said...

கோவி. கண்ணன்,

நல்லா சிரிச்சு சந்தோஷமா இருங்க. அதுதான் வாழ்க்கையின் பலன். எப்படியோ உங்க சிரிப்புக்கு இன்னிக்கு
நான் காரணமாயிட்டேன். சிரிக்க வச்ச புண்ணியம் கிடைச்சிருக்கு:-))))

said...

யம்மாடி பொன்ஸ்,

அவர் உங்க ஊராளுதாம்மா? அங்கிருந்து வந்தவர்தானே?அப்புறம் வேற எங்கே அனுப்பறதாம்? :-)))

said...

வாங்க வெற்றி.

வருகைக்கு நன்றி.

said...

இனிமே ஒழுங்க வந்து பின்னூட்டம் போடலை உங்களுக்கும் ஒரு எமர்ஜென்ஸி ட்ராவல் டாக்குமெண்ட் சர்ட்டிஃபிகேட்தான்.

ஞாபகம் இருக்கட்டும். :)

said...

கொத்ஸ்,
இப்படி மிரட்டி விரட்டி பின்னூட்டம் கேட்டா எப்படிப்பா?

சரி. அந்த ச(ர்)ட்டி பக்கெட் எல்லாம் அனுப்பவேணாம்.

மண்டூகமா நானே வரேன்(-:

said...

பின்ன என்னங்க. டீச்சர் வந்து டிக் மார்க் போடலைன்னா எனக்கு பரிட்சை எழுதின உணர்வே வரலையே. அதான் இப்படி. கோச்சிக்காதீங்க. :D

said...

//இங்கே இருக்கற இந்திய சமூகம் பயந்துக்கிட்டே இருந்துச்சாம்.//


துளசியக்காவும்,கோபால் சாருமா?

said...

இல்லீங்களெ மனசு.

நாம்தான் கிவியாகி 17 வருசமாச்சே.

said...

கிவியாகி....கிவியாகி..17 வருஷம்
ஆச்சே//
இப்பதான் என் குழப்பம் தீர்ந்தது

டோண்ட் வொர்ரி...இங்க அவர விட மன்னன்லாம் இருக்காங்க...ஒரு வழி பண்ணிடுவாங்க

said...

அவரும் எப்படியாவது இங்கேயே இருக்கணுமுன்னு தலையாலெ தண்ணி குடிச்சுப்பார்த்தாருங்க.//

என்னங்க இது நியூ.சி ஸ்டைல் எக்ஸ்பிரஷனா.. அவருக்கு தலை முழுசும் வாய்தான் போலருக்கு.. இருக்கட்டும் அதான் ரொம்ப பேசறாரு..

வாய்யான்னா வரணும் போய்யா போணும் இதுதானே அரசு தன்னோட அதிகாரிங்கக்கிட்டருந்து எதிர்பாக்குது.. அத விட்டுட்டு ஜாஸ்தி பேசினா.. இதான் கதி.

said...

வாங்க சிஜி.
என்ன மறுபடிக் கணக்கா?

இங்கே 3 வருஷம் P.R.லே இருந்தப்புறம் குடியுரிமை வாங்கிக்கலாம்.

கொஞ்சம் இடிக்கும் பார்த்துக்குங்க.:-)))))

மிஸ்டர் டோக்ராவை ஒரூ வழி பண்ணிருங்க.

said...

அன்னியலோகத்திற்கு நன்றி
மொத பதிவிலேர்ந்து (சுந்தர்)ஆரம்பிச்சேன்,,,ஆனா 2004/9 கடசி பதிவு "சூலுடநவு...." னு இருக்கு.
யு ட்டி எப் 8 போட்டு பார்த்துட்டேன்
ம்....ஊஹூம்...
ஒரு வேளை அந்த பதிவு ஏதும் பயங்கரமானதா இருந்து....அதிலேர்ந்து நான் தப்பிக்கனும்னு ஆண்டவன் இப்படி செஞ்சுட்டாரோ?

said...

இல்லீங்க துளசி, நீங்க நியூஸி குடியுரிமை வாங்கிட்டீங்க ன்றது இப்பதான் தெரியும்....முன்பே ஒரு
முறை இது மாதிரி கேட்டிருந்தேன்(ஆறு சம்பந்தமான பின்னூட்டத்தில்)
இப்ப க்ளியர் ஆச்சு......சரிதானே?

said...

திரும்ப வாராங்களா? வரட்டும். நல்லதுதான். இங்க ரொம்பப் பேரு அப்படித்தான் ரொம்பப் பேரு அப்படித்தான் இருக்காங்க. அதுனால பிரச்சனையில்லை.

said...

வாங்க டிபிஆர்ஜோ.

//வாய்யான்னா வரணும் போய்யா போணும் இதுதானே அரசு தன்னோட
அதிகாரிங்கக்கிட்டருந்து எதிர்பாக்குது.. அத விட்டுட்டு ஜாஸ்தி பேசினா.. இதான் கதி. //

இப்படி இல்லீங்க. இவர் கொஞ்சம் மோசமா நடந்துக்கிட்டு ரெண்டு நாட்டோட நல்லுறவைச் சீர்கெடுக்கப்
பார்த்தார். அங்கே ஆரம்பிச்ச குழப்பங்கள்தான். அரசாங்க வீட்டைக் காலி செய்யாம அதுக்கும் ஒரு தகராறு.
புதுசா வந்து சார்ஜ் எடுத்துக்கிட்ட ஹைகமிஷனரும் வெளியே தங்க வேண்டியதாப் போச்சு.
இன்னும் பலவிஷயங்கள் கேள்விப்படறோம். ஆனா நாம இருக்கறது வேற ஊர் இல்லீங்களா? உறுதிப்பட்ட
செய்தியைத்தவிர மற்றதை நான் கணக்குலே எடுத்துக்கலை. அதுலே பலது வதந்தியாயும் இருக்கலாம்தானே?
என்னத்தைச் சொல்றது போங்க.

said...

சிஜி,

அது கடைசிப் பதிவு இல்லை. லிஸ்ட் கீழே இருந்து மேலே போகுது.
அப்ப என்கிட்டே கலப்பை 1 தான் இருந்துச்சு.:-))
அது வெறும் திஸ்கியிலே அடிக்கும். கலப்பை 2 வேணுமாம் யூனிகோடுக்கு.
இதெல்லாம் தெரியாம ஆரம்பிச்ச ப்ளொக்தான் நம்மது:-)))

இது ஏதோ ஏலியன் பாஷைன்னு இருந்துட்டீங்களா? கீழே அதோட
யூனிக்கோடு வெர்ஷன் இருக்கு பாருங்க.

இப்ப எடிட் செஞ்சு அதை மாத்தலாம். ஆனா ஆரம்பகாலத் தப்பு இருக்கட்டுமுன்னுதான்
அப்படியே விட்டு வைச்சேன்.

--------
வணக்கம்,


அனைவருக்கும் வணக்கம்.
தெரியாத்தனமா எதையோ 'க்ளிக்' செஞ்சு இதை ஆரம்பிச்சுட்டேன். உதவி
செய்யறதுக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க என்ற தைரியம்தான்!
எல்லோரும் கொஞ்சம் ஆலோசனைகளைச் சொல்லுங்க!
என்றும் அன்புடன்,துளசி
--------

said...

ராகவன்,

வலி குறைஞ்சிருக்கா?

வந்து சேர்ந்துட்டாருங்க அவர் இந்தியாவுக்கு. அங்கே என்ன நடக்குதுன்னு தெரியலை.
சேதி எதாவது ஆப்ட்டா எனக்கும் சொல்லுங்க.

said...

// துளசி கோபால் said...
ராகவன்,

வலி குறைஞ்சிருக்கா?

வந்து சேர்ந்துட்டாருங்க அவர் இந்தியாவுக்கு. அங்கே என்ன நடக்குதுன்னு தெரியலை.
சேதி எதாவது ஆப்ட்டா எனக்கும் சொல்லுங்க. //

வலி நல்லாக் கொறஞ்சிருக்கு டீச்சர்.

இந்தியாவுக்கு வந்துட்டாங்கள்ள...அப்ப விடுங்க..இங்க இது மாதிரி ஒவ்வொரு நாளும் ஆயிரம் நடக்குது...அதுனால இத யாரும் பெருசாவே எடுத்துக்க மாட்டாங்க.

said...

//இங்கே இந்தியன் ஹை கமிஷன்லே ஒரே ஊழல். அதைக் கண்டு பிடிச்சுட்டேன். அதனாலேதான் எனக்கு இப்படிக் கஷ்டம் வந்துருச்சு. எல்லாரும் எனக்கு எதிரா செயல் பட்டாங்க... ....இந்தியாவுலேயும் நான் இதையெல்லாம் சொல்லப்போறென். வெளியுறவு இலாகாவைச் சும்மா விடமாட்டேன்.//


துளசியக்கா,

பொதுவா இந்த அயல் நாட்டில் இந்திய தூதரக கமிஷனர் பதவிக்கு படித்த, பண்பான டிப்ளோமேட்களைத் தானே அனுப்புவார்கள்.

இவர் நம்ம சென்னை மாநகராட்சி கமிஷனரா வர எல்லாத்தகுதியும் இருக்கு. கராத்தே தியாகராஜன் பாவம் கூடுதலாக உஷராக இருக்கணும்

said...

ராகவன்,
உடம்பைப் பார்த்துக்குங்க.

said...

ஹரிஹரன்,

படிச்சவங்க எல்லாருக்கும் பக்குவம் வந்துருதா என்ன?

இவர் இப்படி.

said...

என்னங்க துளசி
17 வருஷம் முந்தி செஞ்ச நன்மைக்கு
இப்ப ஈடு கட்டிட்டீங்களா

said...

சிஜி,

என்னங்க இது?

நான் இங்கே குடியுரிமை வாங்குனது
உங்களுக்கு நன்மையாத் தெரியுதே?

அப்படியாவது இந்திய ஜனத்தொகையிலே ஒண்ணு போச்சுன்றதுக்கா? :-)

said...

சற்று நேரம் முன்னால் இந்தியாவிலேயே உயர் தரமுடையது என்று சொல்லப்படும் ஒரு தொழில் நுட்பக் கழகத்தில் வேலை பார்க்கும் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அந்த நிறுவனத்துக்காக அரசு செலவளிக்கும் பணத்தில் ஒரு பெரிய பகுதி ஊழலிலும், நேர விரயத்திலும் செலவளிவதாகச் சொன்னார்.

நம்முடைய அயல்நாட்டு தூதரகங்களும் இதே மாதிரிதான், விரயங்கள் ஏராளம். வேறு குற்றம் சொல்லப்படாத தூதரகங்களிலேயே பண விரயம் வயிறெரியச் செய்யும். எப்படி வாழும் மக்களின் பணத்தை எடுத்து நமக்கு செலவளிக்கிறார்கள் என்று இந்த மெத்தப் படித்த மேதாவிகள் ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால்தானே! அவ்வப்போது இது மாதிரி "திறமை" இல்லாது மாட்டிக் கொள்ளும் நபர்கள் மட்டும் கல்லெறிக்காளாகிறார்கள்.

இதற்கெல்லாம் இஸ்லாமிய தண்டச் சட்டம்தான் சரி என்று தோன்றுகிறது. மனசாட்சி இல்லாத பாவிகள்.

மா சிவகுமார்

said...

யோகன்,

நம்மாளுங்க விமானத்துலே ஏற முந்தி அந்த ஊழலை அங்கேயே விட்டுட்டு வரலாம்.
ஆனா...............?

said...

வாங்க சிவகுமார்.

தண்டனையைப் பொறுத்தவரை நம்ம நாடுகூட கொஞ்சம் கடுமைதான். நீதிபதி தண்டனையைச்
சொல்றதுக்கு முந்தியே போலீஸ் கொஞ்சம் பதம் பார்த்துருதே.( ஆனா இது சாதாரண
ஜனங்களுக்குத்தான். பெரிய முதலைகளுக்கு இல்லைன்றது வேற விஷயம்)

இங்கே போலீஸ், மக்கள் மேலே கை வைக்க முடியாது. அவுங்ககிட்டே துப்பாக்கிகூடக் கிடையாது.

போனவாரம், போதை மருந்து பயன்படுத்தற ஒருத்தர், காசுக்காகக் கடைக்காரரைஅடிச்சுட்டார்.

நீதிபதி சொல்லிட்டார்,' போதைமருந்து கிடைக்காத அவஸ்தையிலே செஞ்சது இது. தப்பு இல்லை'ன்னு.

இது எப்படி இருக்கு?

said...

துளசி மேடம்,

கடைசியில் எங்குகிட்டயே தள்ளிவிட்டுடீங்களா?

சரி விடுங்க நாங்க பார்த்துகொள்கிறோம்...

said...

வாங்க சிவபாலன்,

எங்கிருந்து வந்ததோ அது அங்கேயே திரும்பிப் போக வேண்டும் என்பது 'விதி முறை' தானே?

said...

எப்படியோ எல்லாரும் சேர்ந்து அனுப்ப்பி வச்சுட்டீங்க!
இந்த மாதிரி ஆளுங்க எங்கே போனாலும் ஒழுங்கா இருக்க மாட்டாங்க!

மத்தபடி கொத்தனார் சொன்னதைத்தான் நானும் சொல்ல நினைக்கிறேன்!
நம்ம பக்கமே வர மாட்டேன்றீங்க!
நல்லா இருங்க!
:));

ஆட்டோ அனுப்பணுமா?

said...

என்னங்க SK,

எல்லாம் வந்துக்கிட்டுத்தான் இருக்கொம். பின்னூட்டம் போடலைன்னா வரலைன்னு அர்த்தமா?

இங்கெ இருக்கற குளுருக்கு ஆட்டொ சரிப்படாது. பேசாம காரையே அனுப்புங்க. ஹீட்டர் வேலை செய்யுதான்னு
செக் பண்ணிட்டு அனுப்புங்க.

said...

அப்பப்ப ஒரு பின்னூட்டம் போட்டா ஆறுதலா இருக்கும்ல!

said...

//ஆட்டோ அனுப்பணுமா?//

புது வீடு வாங்கச் சொல்லி வாழ்த்தறாரு.

புரியலையா? நம்ம திறனாய்வு பதிவுல புது விளக்கம் பாருங்க..

said...

SK,

அதுக்கென்ன? போட்டுட்டாப் போச்சு.

said...

கொத்ஸ்,

இந்த வீட்டைக் கட்டி முடிச்சு இப்பத்தான் கொஞ்சம் அக்கடான்னு உக்கார்ந்தேன். உடனே வீடு மாத்தணுமுன்னா?
அதுக்கு அந்த 'ஆட்டோ'வையே ஃபேஸ் பண்ணலாம்:-))))

said...

ஆஹா! ஆட்டோக்காரரே வந்துட்டாரா!
அப்ப நிச்சயம் புது வீடுதான்!
கொத்தனார் வேற இலவசம்!!

said...

என்னங்க SK,

இப்படிப் பயமுறுத்துறீங்க?
மறுபடி சாமான்செட்டையெல்லாம் மூட்டைகட்டி அங்கே கொண்டு வைக்க
நீங்கெல்லாம்தான் வரணும். ஆமா...:-)))

said...

அப்படியெல்லம் ஆக விட்டுருவோமா?
கன்டிப்பா வந்துருவோம்ல!
டிக்கெட் அனுப்பாமலா போயிடுவீங்க!

ஹி ஹி!

said...

இந்த மாதிரி ஆளுங்க 'மூஞ்சை' பார்க்கணும்னு எனக்கு எப்பவுமே ஆசை. அது முடியாதுன்னாலும் இந்த மாதிரி ஆளுங்க பேரையாவது போடுங்களேன்; தப்பில்லை.

said...

தருமி,

உங்களுக்காக படத்தைப் போட்டாப் போச்சு.
ஸ்கேன் பண்ணிட்டு போடறேன்.

said...

இங்கேயும் இவங்களை ஏதாவது செய்ய முடியும்னு நினைக்கிறீங்க ;-(

திருந்த முடியாத திருத்த முடியாத கை விட்ட கேசுங்க துளசிம்மா

இனி யார் பாடோ யாரறிவார்?????

said...

மது,

அப்டீங்கறீங்க? பார்த்து.... நாளைக்கு எலெக்ஷன்லே நின்னு மந்திரி ஆயிறப்போறார்:-))))