வரவர எதுக்குத்தான் திட்டம் போடணுங்கற விவஸ்தையே இல்லாமப் போச்சு.இப்படித்தான் நான் மொதல்லெ நினைச்சேன், எங்க இவர் சொன்னதைக் கேட்டு.
உண்மையைச் சொல்லணுமுன்னா, முந்தியெல்லாம் நானே எல்லாத்துக்கும் திட்டம் போட்டு, பக்காவா ப்ளான் பண்ணிதான் எதையும் செய்வேன். ஒரு 50 பேருக்குச் சமையலை 'அசால்ட்டா' பண்ணனுமுன்னா ஒரு திட்டம் இருந்தாப் போதும், தனியாளாவே சமாளிச்சுரலாமுன்னு இருந்த ஆள்.
அதே போல எழுதிவச்சுக்கிட்டுச் செஞ்சும் இருக்கேன். என்ன ஒரு நாலு நாள் வேலை.
எங்க இவருக்கு ஆஃபீஸ்லே திட்டம் போட்டுப் போட்டு பழகிருச்சுபோல. இப்ப இப்படிச் சொல்றார்.
மொத்தம் மூணு திட்டம் போட்டுக்கணுமாம்.
முதல் திட்டம், 'வேலையிலே இருந்து ஓய்வு எடுத்துக்கிட்டா என்ன செய்யலாம்?'ங்கறது.
இது என்ன பெரிய கஷ்டம். வேற ஊருக்குப் போயிறலாம். இதைவிடக் குளிர் இல்லாம இருக்கறஇடம் எத்தனை இருக்கு. இது ஒரு கஷ்டமா?
இப்ப இருக்கற ஓட்டம் இல்லாம நிம்மதியா ரெண்டு வேளை வாக்கிங் போனமா, எளிமையான சாப்பாடா ஆக்கித் தின்னமா, அக்கம் பக்கம் கோயில்,குளமுன்னு இருந்தா அதையும் போய்ப் பார்த்தமான்னு நிம்மதியா இருக்கலாம்.
இதெல்லாம் சரிதான். வேலை இல்லைன்றதாலே மாசச் சம்பளமும் வராதுல்லே. அப்ப வருமானத்துக்கு வழி என்ன?
யோசிக்கணும். மொதல்லே எவ்வளவு வேணுங்கறது ஒரு பாயிண்ட்.
குறைக்கக்கூடிய செலவினம், கையேவைக்கமுடியாத செலவினம் எதுஎதுன்னு பார்க்கலாம்.
செலவு செய்தே தீரவேண்டிய கட்டாயங்கள்:
இருப்பிடம்- வீட்டு வாடகை. சரி, இவ்வளவுநாள் குப்பை கொட்டுனதுலே சொந்த வீடு அடிச்சுப்புடிச்சு வாங்கியாச்சுன்னுவச்சுக்குவோம். ஆனால் அதுக்கும் நகரசபைக்கு மாசாமாசம் வரி கட்டணும் இல்லையா.
மின்சாரம், கேஸ் ( குளிர் காலத்துலே கூடுதல் செலவு இருக்கு. வெய்யில் இருக்கற ஊரா இருந்தாலும் கதை இதேதான்ஃபேன், ஏ.சின்னு இருக்குமே)
கார் பெட்ரோல், 6 மாசத்து ஒருதடவை ஃபிட்னெஸ் வாங்குறது, வருஷா வருஷம் ரெஜிஸ்ட்ரேஷன் செலவு.
தொலைபேசி மாசக்கட்டணம். இப்ப இண்ட்டர்நெட் தொடர்பு. இல்லேன்னா எப்படி ப்ளொக் எழுதறதாம்? :-))))
இன்ஷூரன்ஸ். இதுதான் முக்கியமானதுகூட. வீட்டுக்கு, வீட்டுப் பொருட்களுக்கு, காருக்கு, ஹெல்த் ( ஆஸ்பத்திரிச் செலவைச் சமாளிக்கணுமே. வயசாகுதுல்லே? எப்ப என்ன வருமுன்னு யார் கண்டா? )
இன்னும் இந்தப் பகுதியிலே வேற என்ன வருதுன்னு கொஞ்சம் யோசிக்கணும்.
உடை:
இப்ப வேலைக்குப் போகாததாலே அஃபீஷியல் உடைகள் தேவைப்படாது. கேஷூவல் உடைகளே போதும்.இதுலே வேணுமுன்னா கொஞ்சம் செலவைக் குறைக்கலாம்.
உணவு:
இது எப்பவும் போலதான். வெளியே போய் சாப்புடறதை வேணாக் குறைச்சுக்கலாம். இண்டியன் ரெஸ்ட்டாரண்டுக்குன்னு ஒரு செட் மெனு வச்சுக்கிட்டு க்ரீம், முந்திரி அரைச்சுவிட்டுன்னு கொலஸ்ட்ரால் சமாச்சாரமா இருக்கறதைத் தின்னாம விட்டா என்ன குடி முழுகப்போகுது?
உணவுலே இன்னொரு முக்கியமான பிரிவு இருக்கு. இதை மட்டும் 'குரை'க்க முடியாது. அது நம்ம வீட்டுச்செல்லங்களுக்கு வாங்கற மியாவ், வள்வள் சாப்பாட்டு டின்கள். ( இவுங்களுக்கு வருசம் ஒருமுறை செக்கப்,ஊசி போடறது இதுக்கெல்லாம் தனிக் கணக்கு. நம்மளை மாதிரிதானே இதுகளும். வயசாச்சுன்னா மருந்துச் செலவுகொஞ்சம் கூடுதல்தான். அதுக்குன்னு விட்டுறலாமா? விட்டுறத்தான் முடியுமா?)
மத்த வீட்டுச் சாமான்கள் எல்லாம் இந்தப் பலசரக்கு பில்லுலயே சேர்த்துரலாம். சரியா?
இப்பச் சொல்லப்போறது இன்னொரு தனிக் கணக்கு:
அதான் ஊருக்குப் போய் வர்றது. சொந்தக் காசுலேதான் போய்வரணும். போறேன்னு அப்படியே கையை வீசிக்கிட்டுப் போயிறமுடியுமா? உறவுகளுக்கு வாங்கிட்டுப் போறது. ஊர்லேயெ இப்ப எல்லாமே கிடைக்குது. விலையும் மலிவு. ஆனாலும்கொஞ்சமாவது கொண்டு போகலைன்னா மரியாதை இல்லையே!
வருசாவருசம் இல்லைன்னாலும் ஒரு ஆபத்து அவசரமுன்னாப் போய்த்தானெ ஆகணும்?
உறவுகள் வீட்டு விசேஷத்துக்குப் போகமுடியலைன்னாலும், ரொம்ப நெருங்கிய சொந்தமுன்னா காசா அனுப்பிஒரு அட்டெண்டன்ஸ் கொடுக்கணும்.
இதெல்லாம் நாம எந்த நிலையில் இருந்தாலும் வேலை/ஓய்வு செய்யவேண்டியது.
கொஞ்சம் அப்படி ஓரமா உக்காந்து பேப்பரும் பேனாவும் எடுத்துக்கிட்டுக் கணக்குப் போட்டு வையுங்க. அப்படியே இதுக்கான வருமானம் எங்கே எப்படி வரப்போகுதுன்னும் பார்த்து வையுங்க.
இந்த முதல் திட்டம்தான் கொஞ்சம் பெருசு. மத்தது ரெண்டும் சின்ன அளவுதான். அதை அப்புறம் பார்க்கலாம்.
-------------------
இந்த 'திட்டம்' பதிவுகளுக்கான ஆலோசனைகளை நண்பர்கள் அவர்களொட 'பாய்ண்ட் ஆஃப் வியூ'லே சொல்லுங்க.சொல்வீங்கதானே?
Friday, July 14, 2006
திட்டம் 1 பகுதி 1
Posted by துளசி கோபால் at 7/14/2006 03:08:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
என்னமோ எல்லாமே நம்ம கட்டுப்பாட்டிலே இயங்குற மாதிரியில்லே திட்டம் போட்றீங்க
"நீர்வழிப்படூஉம் புனை போல் ஆருயிர்.." படிச்சதில்லையா
வாங்க சிஜி.
எதுவும் நம்ம கையிலே இல்லைன்றது உண்மைன்னாலும், பல விஷயங்களுக்குத் திட்டம்
போடத்தானெ வேண்டி இருக்கு.
நாம போடறதைப் போட்டே ஆகணும். அதுக்கப்புறம் ஆண்டவன் விட்ட வழி.
ஒரு பதிவு போடறதுக்கே, என்ன எழுதப்போறொமுன்னு மனசுக்குள்ளெ திட்டம் போட்டுத்தானெ
ஆரம்பிக்கிறோம்.
'யத்தனம், பிரயத்தனம், தெய்வத்தனம்'னு எங்க பாட்டி சொல்வாங்க. அதாவது ஒரு காரியமுன்னா
முதல்லே அதைப் பத்தி யோசிக்கணும். அப்புறம் அதை நிறைவேத்த முயற்சிக்கணும். அதுக்கப்புறம் நம்ம
முயற்சி நியாயமானதா இருந்தா தெய்வத்தின் அருள் கிடைக்கும்னு அர்த்தமாம்.
அப்புறம் 'புனை ' சரியா? 'புணை'ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். தமிழ் தெரிஞ்சவுங்க சொல்லணும்:-)))
என்னங்க திடீருன்னு இப்படி ஒரு பதிவு? கலாய்த்தல் வாரத்தின் தொடர்ச்சியா? இந்த பதிவ நல்லா திட்டம் போட்டுத்தான் போட்டு இருக்கீங்க.
எனக்கு வர கோபத்திக்கு உங்களை நல்லா திட்டத்தான் தோணுது. :)
//உணவு//
இத குறைக்க முடியுமா!!!!!!!!!
மசால் வடை என்ன விலை விக்குது????
திட்டம் வேணும் துளசி.திட்டம் போடாமல் எப்படி இயங்க முடியும்.நிறைவேத்தறது வேணா கடவுள் கையிலேனு சொல்லலாம்.சேமிப்பு முதலில்
செலவுகள் அப்புறம்.செலவுகளை நீங்களே வகைப் படித்திட்டீங்க.
பணம் ஒதுக்கீடு செய்யறதும் உங்களுக்குத்தான் தெரியும்.
அசையா சொத்து வாங்கிடணும்.சிறுகக் கட்டிப் பெருக வாழ் என்பது எனக்கு ரொம்பப் பிடித்தது.
நன்றி துளசி
ன ண மாத்றதிலே ஏமாந்துவிடுகிறேன்
கொத்ஸ்,
திட்டெல்லாம் வேணாம். திட்டம் மட்டும் போதும். உங்க
கருத்துக்களைச் சொல்லுங்க.
மனசு,
ஏங்க சும்மா இருக்க மாட்டீங்களா? இப்ப எதுக்கு அனாவசியமா
'மசால்வடை' எல்லாம் ஞாபகப்படுத்திக்கிட்டு?
இங்கே அதுக்கெல்லாம் கொடுப்பனை கிடையாது. நானே செஞ்சாத்தான் உண்டு.
சிக்கனம் கருதி இனி அதை வீட்டுலெ செய்யப்போறதில்லையாக்கும்:-))))))
மானு,
உங்க அனுபவம், கருத்து எல்லாம் சொல்லுங்களேன்.
ஆமாம், அந்தப் படம் நல்லா இருக்கேப்பா:-))))
சிஜி,
வலையிலே 'எழுத்துப் பிழை'ன்னு ஒருத்தர் புதுசா வந்துருக்காராம். நாமதான் கவனமா
இருக்கணும்
இந்த வாரம் டீச்சர் சினிமா பார்த்தபடி இருப்பாங்க, நாம் ஓய்வெடுக்கலாம் என்றால் அசைன்மென்ட் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்களே :)
சமையலில் எவ்வளவு போடவேண்டும் என்றால் ஒரு 'திட்டமா' போடவேண்டியதுதான் என்கிற எங்களுக்கு இத்தனை கிராம் என்று எடை போட்டு சமையல் செய்கிற மேற்கத்தி திட்டங்கள் சரிவராது. ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்று கிடைத்த ஓய்வூதியத்தில் வாழ்ந்து கொள்ள வேண்டியதுதான்.
என்னங்க மணியன்,
இப்படிச் சொல்லிட்டீங்க. இது எல்லாருக்கும் உள்ளதுதானே?
கிடைக்கறதுலே இருப்போம்ன்னா, எதைஎதைக் குறைச்சுக்கலாமுன்னு
தெரியணும் இல்லையா?
அங்கேயாவது பரவாயில்லை. பிள்ளைங்க பார்த்துக்குவாங்க. இங்கே அப்படியெல்லாம்
ஒண்ணும் கிடையாது. எல்லாமே தாமாய் தான்.
இப்பச் சொல்லுங்க.
டீச்சர், ஒங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன். கேட்டுக்கோங்க. இதெல்லாம் என்னோட நீண்டகால அனுபவங்கள்ள தெரிஞ்சிக்கிட்டது. உங்களுக்கும் பயனா இருக்கும்.
திட்டம் போட்டா அது பெரும்பாலும் நிறைவேறாமப் போகும். எந்தத் திட்டத்தையும் போட்டா அத மீற பல திட்டங்களும் வரும். அதவிடச் சிறந்தது திட்டமே போடாம இருக்கிறது. எந்தத் திட்டமும் போடாதீங்க. எதுவும் நடக்காது. எதுவும் மீறாது. எல்லாம் கைக்குள்ள இருக்கும்.
உங்க பதிவு யோசிக்க வைச்சது...முதல்ல பேப்பரும் பேனாவும் எடுத்துக்கிட்டு உக்காந்து போடலாமுனு தோனுச்சு...அதுக்கு அப்புறம் தான் இது கொஞ்சம் காலம் ஓடினதுக்கு அப்புறம் செய்துக்கலாம் என்று தோன்றியது...
////இந்த 'திட்டம்' பதிவுகளுக்கான ஆலோசனைகளை நண்பர்கள் அவர்களொட 'பாய்ண்ட் ஆஃப் வியூ'லே சொல்லுங்க.சொல்வீங்கதானே?////
இது என்ன....மிரட்டி பின்னூட்ட வைக்கும் யுக்தியா ? ஹி ஹி
படம் நல்லா இருக்கா.
பொன்ஸ் கிட்ட கேட்டேன்.
ஐடியா கொடுத்துச்சு.
ஆடறது கிடைக்கலியே.
எங்க வாழ்க்கை எப்போதும் மற்றவர் திட்டத்திலே தான் ஓடுதுப்பா.
அதுக்கு மிஞ்சி சேத்து வச்சது குட்வில் தான்.
செலவைக் கட்டுப்படுத்த எத்தனையொ வழி.ஆனால் நம்ம ஊரிலே ஆரோக்கியத்துக்கு நிறைய விலை கொடுக்கணும். வீட்டு மெயிண்டினன்ஸ்(தண்ணீர் மோட்டார்,எலெக்ரிசிடி,போன்) ,மனுஷங்க, மருந்து ,கல்யாணங்கள்,தெய்வம்,பித்ருக்கள் என்று நீளும் லிஸ்ட்.
இத்தனைக்கும் நாங்கள் சினிமா ,டிராமா,கச்சேரி போகாதவங்க.கடவுளே ! என்னைக் கணக்குப் பாக்க வைச்சுட்டிங்களெ.
ஆளை விடு சாமி.
ராகவன்,
திட்டமிடாமல் எப்படிப்பா? தினப்படி சமையலுக்கே என்ன செய்யலாமுன்னு யோசிக்க வேண்டி இருக்கே!
நாம போடறதைப் போட்டால்தானே ஒரு கைடுலைன் கிடைக்கும்.
//என்னோட நீண்டகால அனுபவங்கள்ள தெரிஞ்சிக்கிட்டது..//
:-))))))) எங்க கல்யாணம் ஆனகாலத்துலே நீங்க பொறந்துகூட இருக்கமாட்டீங்க.
சின்னவயசுலே பரவாயில்லைப்பா. 50+ ஆச்சுன்னா கொஞ்சம் யோசிக்கவேண்டி இருக்கே.
வாங்க செந்தழல் ரவி. ( பேரே தகதகன்னு இருக்கு)
//மிரட்டி பின்னூட்ட வைக்கும் யுக்தியா ? ...//
ஐய்யய்யோ... அதெல்லாம் கிடையாது. நான் எப்பவும் பின்னூட்டத்தை வச்சுப் பதிவை
மதிப்பிடமாட்டேன். பின்னூட்ட எண்ணிக்கைக்கு எதுக்கு இவ்வளோ முக்கியத்துவம்
இருக்குன்னுகூட புரியலை.
அது போட்டும்.
ராகவனுக்குச் சொன்னதுபோல, சின்ன வயசுக்காரங்களுக்குப் பரவாயில்லை. எங்களை
மாதிரி வயசு போனவங்களுக்கு ஒரு ப்ளான் கட்டாயம் வேணும்தான்.
இப்ப உயில் எழுதிவைக்கறோமே அது போலன்னு வச்சுக்குங்களேன்.
விளையாட்டுக்குக் கேக்கலைப்பா. பலவேறு கருத்துக்கள் தெரியவந்தா ஆராய்ஞ்சு பார்த்து
எது சரிப்பட்டுவருமுன்னு தெரிஞ்சக்கத்தான்.
வல்லி,
என்னங்க நீங்களும் இப்படி ஜகா வாங்கிட்டீங்க? :-)))
துளசி,
நானும் என் மனைவியும்கூட அடிக்கடி இப்படி சிந்திப்போம்.
மூத்த பொண்ணெ வெளிநாட்ல குடுத்தாச்சி. அது அடிச்சி புடிச்சி வருசத்துக்கு ஒரு தடவ வரும். அப்புறம் அதுவே ரெண்டு வருசம், மூனு, நாலு வருசத்துக்கு ஒருதரம்னு குறைஞ்சிக்கிட்டே போயிரும்.
சின்னதுக்கு எங்க அமையுமோ தெரியலை.
அப்புறம் நாம ரெண்டு பேரும் என்ன செய்யப்போறோம் எங்க இருக்கப் போறோம்னு எல்லாம் பேசிக்குவோம்.
வருமானத்த பத்தி இதுவரைக்கும் நினைக்கல. ஏன்னா சென்ன மாதிரி ஊருங்கள்ல அதுக்கு நிறையவே வழியிருக்கு.
ஆனா நாம நெனச்செதெல்லாம் செய்யணும்.. நீங்க சொன்னா மாதிரி எது இருக்கோ இல்லையோ ஒரு லாப் டாப், நெட் வசதி நிச்சயமா இருக்கணும்..
எழுதறது ஒரு பைத்தியமாயிருச்சில்லே.. அத எப்படி விடறது?
வாங்க டிபிஆர்ஜோ.
இங்கேயும் எங்களுக்கு இதுதான் இப்போதையக் கவலை. பொண்ணு இங்கேயே கல்யாணம் கட்டிக்கும். இங்கெல்லாம்
புள்ளைங்க பெற்றொர்களைப் பார்த்துக்கணும்ங்கற கான்சப்ட் இல்லை. அவுங்கவுங்க வாழ்க்கை தனி.
ஆமாம், சென்னை மாதிரி ஊர்களிலெ வருமானத்துக்குக் கவலை இல்லைன்னா.... எப்படி?
அதைக் கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்களேன்.
நீங்க பேங்க் அதிகாரின்றதாலே பணத்தை முதலீடு செஞ்சாவெ போதுமான வருமானம் வர ச்சான்ஸ்
இருக்கா என்ன?
Post a Comment