Sunday, July 09, 2006

மனசுலே பட்டது.

பயந்துறாதீங்க. இது ஒரு சினிமா விமரிசனம். இந்தப் பேருலே எப்ப சினிமா வந்துச்சுன்னுகேக்கறீங்களா? வந்திருக்காதுன்னு நினைக்கறேன். ஒருவேளை வந்துச்சோ?


படத்தோட பேர் 'கை வந்த கலை'

ரொம்பச் சிக்கல் இல்லாத கதை.


நாயகன் பம்பரம் விடறான். எதுக்கு? அவுங்க அப்பாவுக்கு உதவியா இருக்க.
பம்பரக்குறி சொல்றவர் மகன்தான் நாயகன். குறி கேக்க வர்றவங்களுக்கு எவ்வளோ நேரம் ஒதுக்கணும்? அங்கேதான் பம்பரம் வருது. அது சுத்த ஆரம்பிச்சு நிக்கறவரைக்கும்தான் அவுங்களுக்கு ஜோசியம் சொல்லப்படும். நல்ல டைமர்!


அதெ விடுங்க. வழக்கம்போல ஒரு பொண்ணை நாயகன் காதலிக்க, அந்தப் பொண்ணு வழக்கம்போலநாயகனுடைய அத்தை மகளா இருக்கு. வழக்கம்போல அத்தைக்கும், அத்தையோட அப்பாவுக்கும் பேச்சு வார்த்தை இல்லை.


காரணம்?


வழக்கம்போல காதல்தான்.


வழக்கத்தில் இல்லாதவிதமா, அக்கிரஹாரத்துப் பையனைக் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு அங்கெயே மாமியாப் போயிட்டாங்க அத்தை.
அத்தையோட புருஷனை எங்கியோ பார்த்தாமாதிரி இருக்கேன்னு யோசிச்சேன். அட. நம்ம பாண்டியன்.அதாங்க அரிவாளாலே பென்சில் சீவுன பாண்டியன். மொகம் பொதுபொதுன்னு கிடக்கு. அம்பி நல்லாசமைக்கிறார். வாழைப்பழ தோசைகூட செய்யறாருன்னா பாருங்க.


அத்தைக்குப் போலீஸ் வேலை. சீதாவுக்கு போலீஸ் யூனிஃபார்ம் பொருத்தமாத்தான் இருக்கு.


இந்த ச்சார் செள பீஸ்(420) அப்பாகூட இருக்க வேணாமுன்னு சொல்லித் தாத்தா, சின்னமகன்கிட்டேநாயகனை( அவர் பேரனை) அனுப்பறார்.


சின்ன மகன்,'பாக்ஸ் ஆஃபீஸ்' தொழில் செய்யறார். அருமையான தொழில். எல்லாருக்கும் ஒருநாள் இல்லேன்னா ஒருநாள் எப்பவும் தேவைப்படும் பொருளை வாடகைக்குக் கொடுக்கும் தொழில். (எனக்கும் சில சந்தேகம் இருந்தது இந்த பாக்ஸைப் பத்தி. ஆனா தெளிவாப் புரிஞ்சு போச்சு இப்ப)
இந்தத் தொழிலை, கஸ்டமர்களொட தேவைக்கு ஏத்தபடி விரிவாக்கி நல்லபடியா நடத்துறார், நாயகன் தன்னோட'மூளை'யை உபயோகிச்சு.
நாயகனோட சித்தப்பா, பேசும்சக்தி இல்லாத பொண்ணைக் கல்யாணம் செஞ்சு அவர்வகையிலே சமூக சேவை செய்யறார்.பேசும் சக்தி இல்லாத சித்தியும் அவுங்க வகையிலே சமூக சேவை செய்யறாங்க.


கடைசியில் குடும்பம் பூரா சமாதானமாகி இளசுகளுக்குக் கல்யாணம் செஞ்சுவைக்க சம்மதம் தெரிவிக்கறாங்க.


இந்தக் கல்யாணம் நடந்ததா?........................ வெள்ளித்திரையில் காண்க.


முக்கிய நடிகர்கள்:


சித்தப்பா- பாண்டியராஜன்.


நாயகன் - ப்ரீத் ( பாண்டியராஜனின் மகன்)


நாயகி - ஸ்ருதி ( முந்தி குழந்தை நட்சத்திரமா வந்துருக்காங்களாம்)


420 அப்பா - மணிவண்ணன்


தாத்தா- வினுச்சக்ரவர்த்தி.


இப்பச் சொல்றேன் என் மனசுலே என்ன பட்டதுன்னு.


பழைய நடிகர்கள் வாரிசுகளைக் களம் இறக்கறாங்க. செய்யட்டும். இப்பத்தான் பாக்கியராஜ், மகளைப் படத்தில் பார்த்தோம்.அந்தக் கதையும் நல்லா இருக்குன்னாலும், ஓட்டைங்க நிறைய இருக்கு. அதைப் பத்தி இன்னொரு சமயம்.....


இந்தப் படத்துலே எந்தத் தொழில் செஞ்சாலும் நேர்மையாச் செய்யணும்னு ஒரு மெசேஜ் இருக்கு.நாயகன் நல்லா துறுதுறுன்னு இருக்கார். முகத்துலே நல்ல லட்சணம். நடிப்பும் நல்லாவே இருக்கு.படத்தோட ஆரம்பத்துலேயே முறைப்படி சண்டை கத்துக்கிறார் ஒரு வாத்தியார்கிட்டே. அதனாலே சண்டைக்காட்சிகளில் பாய்ஞ்சுபாய்ஞ்சு அடிக்கறப்ப வித்தியாசமாத் தெரியலை.( தேவை இல்லாம புதுப்பேட்டைப் படத்தோட காட்சிகள் மனசுலே வந்து போகுது. அந்தப் படத்துக்கு இது எவ்வளவோ மேல்)


ஒரு ட்விஸ்ட்டும் இல்லாத சீதாசாதா( ஹிந்தி)வான கதை. பெரிய எதிர்பார்ப்பு கிடையாது.


ஜனகராஜ், ரேவதி, வெண்ணிற ஆடை மூர்த்தின்னு பலர் தலைகாமிச்சுட்டுப் போனாங்க.

எனக்குப் பிடிச்ச காட்சி.


ஒரு நிமிஷம் மட்டுமே வரும் பாம்பு டான்ஸ். என்னமா ஆடுது அந்தச் சின்னப் பொண்ணு. சூப்பர்.


லொகேஷன் அருமையா இருக்குங்க. ஆறு, பக்கத்துலேயே அழகான மண்டபம். கொஞ்ச தூரத்துலே தெரியும் ஆத்துப்பாலம்ன்னு அட்டகாசம். எந்த ஊரோ?


நல்ல படம்தான். பார்க்கலாம் ஒருதடவை.

30 comments:

said...

படத்தில் நாயகியை முதன்முதல் கண்டதுமே, எங்கயோ பார்த்த முகமாக்கிடக்கே என்று யோசிக்கத் தொடங்கினேன். படம் முடிவதற்குள் கண்டுபிடித்துவிட்டேன்.
தஙகர் பச்சானின் 'அழகி'யில் வந்த சின்னவயசு நாயகிதானே?
அழகி இப்பதான் பார்த்த மாதிரிக்கிடக்கு. அதற்குள்ளாக நாயகியா?

சாயிபாபா செய்வதாகச் சொல்லி சில விசயங்களை மணவண்ணன் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். பெரும்பாலும் அவற்றைப் புகுத்தி அவரது சாமியார் திருவிளையாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

said...

பாடம் நடத்தச் சொன்னா அத விட்டுட்டு படம் பாக்கறது, அப்புறம் அதைப் பத்தி கிளாஸில் வந்து கதை சொல்லறது. அப்புறம் பசங்க எப்படி உருப்படுவாங்க.

இதுக்கே ஒரு ஸ்ட்ரைக் செய்யணும். எங்க நாங்க ஸ்ட்ரைக் செஞ்சு உங்க வேலை போயிருமோன்னு சும்மா இருக்கோம். புரிஞ்சுதா?

said...

துளசி, யதார்த்தமான விமரிசனம்.
நமக்கு யாரும் பணம் கொடுத்து எழுத சொல்லறது இல்லை.
நல்ல வேளை.
யெய்யா, படம் பாக்கப் போறேனு ஒரு வார்த்தை சொன்ன நாங்க வந்துர மாட்டோம்.?
ம்!பாண்டிய ராஜ் படத்திலே நேத்திக்கு ஆண்பாவம் டிவிலே வந்தது. அதெ மண்டபம், ஆறு, படித்துறையிலே எடுத்து இருப்பாங்களா இருக்கும்.
நீங்க டிரிப் வரும் போது இந்த மாதிரி வயல்வெளி, குணா குகை, ஆறு மேல நடக்கிறது, எல்லாம் பார்க்கலாமா?யோசிச்சு சொல்லுங்க,.

said...

துளசியக்கா,

பாண்டியனை இங்க 'பகுடு' பாண்டியன்னுதான் சொல்லறாங்க!

23ம் புலிகேசி படத்தின் உங்க விமரிசனத்தை எதிர்பார்க்கிறேன்! :)))

said...

கை வந்த கலை,புதுப்பேட்டை,பாரிஜாதம்......

வேற எதவது பாக்கி இருக்கா?

said...

சரி நான் அந்த படத்தைப்பார்த்து விட்டு சொல்கிறேன்

said...

முட்டைக்கண் பாண்டியராஜன் படம்தானே....சென்சார்ட்டே விழிபிதுங்குது
மிருகநல சங்கத்திடம் சான்றிதழ்
பெறனுமாம். சான்றிதழ் அளிக்கக்கூடிய
அதிகாரி போஸ்ட் காலியா இருக்காம்...
நம்ம கைப்புள்ளையோட "இம்சை அரசன் 23 வது புலிகேசி"க்கும் இதே சிக்கல்... இந்தியா முழுதும் சுமார் 95 படங்க'ள் இந்த சர்டிபிகேட் இல்லாம ரிலீஸ் ஆகாமெ இருக்காம்

said...

மேடம்,
இந்த படம் இங்அயும் வந்தது, நானும் பாத்தேன். நல்ல விமர்சனம்.

//நாயகனோட சித்தப்பா, பேசும்சக்தி இல்லாத பொண்ணைக் கல்யாணம் செஞ்சு அவர்வகையிலே சமூக சேவை செய்யறார்.//

அது சமூக சேவையெல்லாம் இல்லீங்க... வாழ்க்கைல நிம்மதியா இருக்கணும்னு முடிவுபண்ணி இப்படி செஞ்சிருக்கார் ;)

said...

வசந்தன்,

வாங்க வாங்க.

//'அழகி'யில் வந்த சின்னவயசு நாயகிதானே?...//

அந்தப் பொண்ணா? தகவலுக்கு நன்றி. 'எங்கியோ பார்த்துருக்கேனே'ன்னு
நானும் யோசிச்சேன்.

said...

கொத்ஸ்,

இது சரித்திர வகுப்பு இல்லை.

'மாரல் இன்ஸ்ட்ரக்ஷன்' வகுப்பு ? :-))))
இல்லேன்னா விஷூவல் ஆர்ட்? :-)))

ஒரே டீச்சர் ரெண்டு சப்ஜெக்ட் எடுக்கக்கூடாதா? :-)))

said...

வல்லி,

அந்த ஆண்பாவம் சில ஸீன்களையும் படத்துலே சேர்த்திருந்தார் பாண்டியராஜன்:-)))
நல்ல ஐடியாதான். ஆமாம்.இந்த லொகேஷன் எந்த ஊருப்பா? போகலாமா? நான் ரெடி.

said...

இளவஞ்சி,

அதுக்குள்ளேயா உங்க வலைமாநாடு முடிஞ்சிருச்சு? சாப்பாடெல்லாம் பலமா?

அதென்ன பகுடு? விளக்கம் ப்ளீஸ்.

புலிகேசி இன்னும் வரலை. அடுத்த வாரம் ஆக்லாந்து தியேட்டர் ரிலீஸ் இருக்கு.

நமக்குத்தான் இங்கே தமிழ்படத்துக்குத் தியேட்டர் பாக்கியம் இல்லை(-:

said...

மனசு,

இருக்கு இன்னும் நாலு படங்கள். அதுலே ரெண்டு கட்டாயம் நீங்க பார்க்க ச்சான்ஸே இல்லை.
பார்த்துட்டு எழுதிறமாட்டேனா என்ன? :-)))

said...

என்னார்,

வாங்க வாங்க. எங்கே இந்தப் பக்கம்? நல்லா இருக்கீங்களா?

பார்த்துட்டுச் சொல்லுங்க.

said...

சிஜி,

இந்தப் படத்துலே எங்கேங்க மிருகம் வருது?
அந்தப் 'பாம்பு ' டான்ஸ் ஆடுனது ஒரு ச்சின்னப் பொண்ணுங்க:-)))))

said...

அருள்குமார்,

மொதல்லே ஒரு பாயிண்ட்.

சின்னப் பையனா இருக்கப்ப அட்டகாசமா இருக்கீங்க. பொண்ணு வீட்டுக்குக் கொடுத்தனுப்ப
தூசி தட்டி எடுத்துவச்சீங்களா? :-))))

//அது சமூக சேவையெல்லாம் இல்லீங்க... வாழ்க்கைல நிம்மதியா இருக்கணும்னு
முடிவுபண்ணி இப்படி செஞ்சிருக்கார் ;) //

கடைசியிலே நிம்மதிக்கு வழி கண்டுபிடிச்சுட்டீங்களே:-))))

said...

மிஸ், எப்படி மிஸ் பண்ணாம எல்லா படத்தையும் பொருமையா பாத்து விமர்சனம் எழுதனம்னு கிளாஸ் எடுத்ததுக்கு நன்றி:-)

குஸ்தினு ஒரு படம் வந்திருக்கு பாருங்க அதுல சங்கத்து ஆள கைப்புள்ள கலாக்கிறாரு என்னனு கேளுங்க!!! (படத்த இன்னும் முழுசா பாக்கல...)

said...

நன்மனம்,

குஸ்தி...யா? எப்ப வந்துச்சு?

நமக்கு இன்னும் வரலை. வந்தவுடனே பார்த்தாப் போச்சு:-)

பொறுமை என்னும் நகை நாம் எல்லோரும் அணியணுமுன்னு 'யாரோ' சொல்லிட்டுப் போயிருக்கறது நினைவில்லையா?:-)

said...

படம் பாத்தீங்களா? நான் பாக்கலை. ஆனா காட்சிகளைப் பார்த்தேன். வினுசக்கரவர்த்தி சிறப்பாக நடிச்சிருக்காரு. பாண்டியனைச் சென்னை விமான நிலையத்தில் பார்த்தேன். குண்டாகி, முடி விழுந்து, தொப்பை விழுந்து, பார்க்கவே வித்தியாசமாக இருந்தார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் பெண் ஏன் இவ்வளவு ஓவர்-ஆக்டிங் செய்கிறார் என்று தெரியவில்லை. மூக்குத்தி வேறு பொருத்தமில்லாமல். சில கோணங்களில் முகபாவங்கள் பயமுறுத்துகின்றன.

கதாநாயகன் சிறுவன். பாண்டியராஜனை இமிடேட் செய்கிறார். முழியிலிருந்து குரல் வரை.

நீங்க சொல்ற இடம் திற்பரப்பு அருவிப் பக்கம். நாகர்கோயில் மாவட்டம். நல்ல அருமையான எடம்.

இதுவரை பார்த்த காட்சிகளிலிருந்து ரசித்தவை, வினு சக்கரவர்த்தியின் நடிப்பு, லொக்கேஷன்.

said...

ராகவன்,

லொகேஷன் பேர் சொன்னதுக்கு நன்றி.

கதாநாயகி, ச்சின்னப்பொண்ணு. அதான் ஒண்ணும் சொல்லாம ச்சும்மா இருந்துட்டேன்.
கொஞ்சம் பெரிய மூக்கா வேற இருந்துச்சு. வளரவளர சரியாயிரும்,இல்லே?
பாண்டியராஜன் மகந்தானே. அப்பாவைப்போல் பிள்ளை:-)))
அப்பாவை விட நிறம் ஒரு மாத்துக் கம்மியாத் தெரியறார்.

said...

அந்த படத்திற்கு சென்சார் ட்ர்புளுங்க
அதான் எனக்குத் தெரியும்

said...

துளசியக்கா,

நேத்துதான் வீட்ல நச்சு தாங்காம இங்க வீடியோ லைப்ரரிலேர்ந்து பாரிஜாதமும், கை வந்த கலையும் எடுத்து வந்தேன்.

நான் பெரும்பாலும் செய்திகள் தான் பார்ப்பது, நம்ம தமிழ் ஹீரோக்கள் காலால் உதைத்து ஆலமரத்தையே உதைபந்தாக்கி க்ராபிக்ஸில் வில்லனை பந்தாடும் காட்சிகள், ரத்தவாடை அடிக்கும் அருவாக் காட்சிகள்னு ஆனபின் படமே 2-3 வருஷமா பாக்கிறதே இல்லை.

இந்த வாரம் டிவி முன்னாடி உக்காரலாம்னு க்யாரண்டி தர்ரீங்க நீங்க.

said...

சிஜி,

இங்கே தமிழ்படத்துக்கு நான் தான் சென்ஸார் போர்டு:-))))

said...

ஹரிஹரன்,
எனெக்கென்னமோ பாரிஜாதத்தைவிட கைவந்த கலை பிடிச்சிருக்கு.

ருசிகள் பலவிதம்.

said...

//பொண்ணு வீட்டுக்குக் கொடுத்தனுப்ப
தூசி தட்டி எடுத்துவச்சீங்களா? :-))))//

அட! இது கூட நல்ல ஐடியாவா இருக்கே :)

//'அழகி'யில் வந்த சின்னவயசு நாயகிதானே?...//

அழகில மட்டும் இல்லங்க, ரமணால நம்ம கேப்டன் பொண்ணு கூட சண்ட போடற friend/ பரதநாட்டியம் ஆடற பொண்ணும் இவங்கதான்!

said...

amma
u can download the movies from www.tamilterminal.com, www.tamilblood.tk, www.sweetmiche.com, www.uyirvani.com, www.rose4you.dk,www.lankasri.com like sites :) all new movies :)those sites are only for us like people who are not staying in tamilnadu and not able to watch the tamil movies also...thats that:)
srishiv...:)

said...

அருள் குமார்,
ரமணாவுலே கேப்டனைத்தவிர வேற யாருமே நினைவில் இல்லை(-:

said...

Thanks Shiva

said...

படத்துல காமெடி எப்படி! அத சொல்லவே இல்லயே

said...

நாகை சிவா,

காமெடி நல்லாத்தான் இருக்கு.

பம்பரக்குறி சொல்றது, பாண்டியராஜன் பிஸினெஸ் எல்லாம்
நல்லாத்தான் இருக்கு.