பயங்கரவாதத்துக்கு உதவுகிறது பாகிஸ்தான்: மன்மோகன் சிங்
இலங்கை மோதல் : 17 பேர் பலி
வெளிநாட்டுஊழியருக்கான தீர்வை உயர்கிறது
சில்லறை வர்த்தக்த் துறையை மேம்படுத்தும் கல்வி உபகாரச் சம்பளத்திட்டம்
காரில் கத்தி பழகும் தளபதி
சமயச் செய்திகள்
நொடித்துப்போனவர்களின் எண்ணிக்கை உயர்வு
காசி மாபெரும் தமிழ்-ஆங்கில புத்தகக் கண்காட்சி
தமிழ்மொழிப்பாடக் கருத்தரங்கு
தமிழ் பயிற்சித்தாள்
வலுவான ஆய்வு ஆராய்ச்சித்துறை தேவை
புருணை சுல்தானின் 60வது பிறந்தநாள் விழா
மாணவர் புதிர்ப்போட்டி இறுதிச் சுற்று
சிங்கப்பூர்-தென் கொரியா கடற்துறை காவல் பயிற்சி ( படம்)
ஹாங்காங் தலைமை நிர்வாகி சிங்கப்பூர் வருகை
தங்கள் தனித்துவத்தை உணரவேண்டும்
ஐந்து ஆண்டுகளாக $40 மி. நன்கொடைகள் தேக்கம்
லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்
டிக் சென்னி மீது சி.ஐ.ஏ முன்னாள் அதிகாரி வழக்கு
ரகசிய ஆவணங்களை மலேசியா வெளியிட்டது
வட கொரியாவுக்கு எதிராக தீர்மானம்: விட்டுக் கொடுக்க ஜப்பான் விருப்பம்
அதிபர் புஷ் சுவைத்து சாப்பிட்ட உணவு
மின்னலுக்கு சீனாவில் 82 பேர் பலி
கன்னியாகுமரியில் மீண்டும் கடல் சீற்றம்
மாமனாரின் காதைக் கடித்து துப்பிய மருமகள்
பெட்ரோல், டீசல் உயர்வை மாநில அரசு தடுக்கலாம்: விஜயகாந்த்
ஈரோட்டில் மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு பள்ளி செல்லும் பிள்ளைகள் ( படம்)
'ஓசி' பயணம்: ரூபாய் 2 லட்சம் அபராதம் வசூல்
குழந்தைகள் முட்டையை எப்படி சாப்பிட வேண்டும் என ஆசிரியர்கள் பாடம் நடத்தினர் ( படம்)
தொடக்கநிலை 6-க்கான தமிழ்ப் பயிற்சிதாளின் பதில்கள்
உங்கள் அதிர்ஷ்டம்
சிங்கப்பூர் தமிழர் சங்கம்- குண்டலிணி யோகா மையம் நடத்தும் காயகல்ப பயிற்சி( மருந்து அல்ல)
கிராமங்களில் மருத்துவர்கள் 1 ஆண்டு கட்டாயப் பணி மத்திய அமைச்சர் அன்புமணி தகவல்
"ஸ்ரீநகர் குண்டுவெடிப்பு: தீவிரவாதிகள் தலைவனுக்கு வலைவீச்சு"
நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு: கேரள நீர்ப்பாசன அமைச்சர் உறுதி
பீகாரில் மழை, வெள்ளம்: 2 லட்சம் பேர் பாதிப்பு
மிஸ் போபால் அழகிப் போட்டி ( படம்)
துப்பாக்கி தோட்டாக்களுடன் போலிசார் கைது
பெண்கள் மீது கற்பழிப்பு வழக்கு தொடர முடியாது உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு
திருப்பதிக்கு வந்துள்ள மறைமுக ஆபத்துகள் தகவல்கள் ஊர்ஜிதம்
Mayhem in Mumbai
Morgue watchman's long wait
On way to make delivery,18-year-old boy loses both legs
As 15- hour ordeal ends, the pain begins
Sachin keeps veil on his plan to heal Mumbai's blast wounds
victims in hospital ( 2 pictures)
தொலைக்காட்சி ( நிகழ்ச்சி விவரங்கள்)
திரை விமர்சனம்:" இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி"
"வீராசாமி" திரைக்காக டி.ராஜேந்தருடன், மும்தாஜ்.( படம்)
திரை துணுக்குகள்
இன்னொரு பரமக்குடி
நாணயச் செலாவணி
தங்கம் 7.93 கிராம் S $ 277.00 1 கிராம் S $ 35.00
மின் மினி Classified
தீவிர பாதுகாப்புடன் தொடரும் பயணம்
முட்டைகளை வீசியவர் கைது
30 மணி நேரம் பணிபுரிந்த மருத்துவர்கள்
கோவா ரூ. 1 கோடி உதவி
கலவரம் வெடிக்கும் ஆபத்து: முஸ்லீம் தலைவர்கள்
பா.ஜ.க. பிரசாரம்
காலை நேரப் பரபரப்பில் மும்பைவாசிகள் ரயிலில் ( படம்)
மனநேய அமைப்பு உணவு வழங்கும் ( படம்)
ஆமாம், இதெல்லாம் என்ன? அட, ஒண்ணுமில்லீங்க. நேத்து சிங்கை தமிழ் முரசு( Vioce of the Community) சனி 15 7 2006 (50 காசு) பத்திரிக்கையில் வந்த தலைப்புச் செய்திகள்.
எல்லாம் நான் பெற்ற இன்பம் இவ் வலையகமும் பெறட்டும் என்ற நல்லெண்ணம்தான்.
செய்தித்தாள் உபயம்: கோபால்
Sunday, July 16, 2006
நேற்று....
Posted by துளசி கோபால் at 7/16/2006 01:10:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
துளசி,
நான் காலையில காப்பிய குடிச்சிட்டு ஒரு பத்து நிமிஷம் ஒக்காந்து ஹிந்து, பைனான்ஷியல் எக்ஸ்ப்ரஸ் ரெண்டோட தலைப்புகளை மட்டும் பார்த்துட்டு வாக் போவேன்..
வந்தா பரபரப்பா ஆஃபீஸ்.. அங்கருக்கற இந்தியன் எக்ஸ்ப்ரஸ், எக்னாமிக் டைம்ஸ்.. ஒரு தலைப்பு ஓட்டம்.
அப்புறம் ராத்திரி வந்து ஒரு அரைமணி நேரம் விலாவாரியா முக்கியமான செய்திகளை வாசிக்கறது..
அதனால டெய்லி இந்த மாதிரி ஒருத்தர் வெறும் தலைப்பு செய்திகள மட்டும் போட்டா எவ்வளவு நல்லாருக்கும் நினைச்சேன்.. நீங்க போட்டுட்டீங்க.. வாழ்க:)
ஆமாங்க டிபிஆர்ஜோ. இவர் இப்போதான் சிங்கையிலிருந்து வந்தார். அங்கத்து சனிக்கிழமைப் பேப்பர் கொண்டு
வந்திருந்தார்.
இன்னொரு நாட்டுத் தமிழ்ப் பத்திரிக்கை எப்படி இருக்குன்னு கோடி காமிக்கலாமேன்னு தோணுச்சு. அதான்.....
தூள்ஸ் துளசி டைம்ஸ் இன்று ஆரம்பம்.
தினம் வருமா.
வீக்லியா?
என்ன
பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்?
நன்றி நன்றி.
தூள்ஸ் துளசி டைம்ஸ் இன்று ஆரம்பம்.
தினம் வருமா.
வீக்லியா?
என்ன
பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்?
நன்றி நன்றி.
துளசியக்கா,
எல்லோரும் சேர்ந்து உங்களை செய்திப் பத்திரிகை நடத்த வைத்து விடுவார்கள் போகிருக்கிறதே! நானும் சேர்ந்து கொள்கிறேன். தினசரி நீங்கள் படிக்கும் செய்தித் தலைப்புகளை ஒரு டைஜஸ்டாக உங்கள் நடையில் தாருங்களேன். பலருக்கு உதவியாக இருக்கும்.
அன்புடன்,
மா சிவகுமார்
பேப்பரெல்லாம் ஒரே ஓட்டமா மூனு நாலு நிமிசத்துல படிக்கிறதுதான். அதுக்கு மேல ஒன்னுமில்லை. ஏதாவது புத்தகம் கித்தகம் கெடைச்சாப் படிக்கிறது. வலைப்பூ படிக்கிறது அவ்வளவுதான்.
நீங்க என்னடான்னா எல்லாச் செய்தியையும் படிச்சிட்டுத் தலைப்புச் செய்தியைக் குடுத்திருக்கீங்க. ஏங்க? இதுவும் பள்ளிக்கூடப் பாடமா?
//பத்திரிக்கையில் வந்த தலைப்புச் செய்திகள்.//
தலைப்புச் செய்திகளே, இவ்வளவா..........
மானு,
நீங்க என்னப்பா பத்திரிக்கைக்குப் பேரே வச்சிட்டீங்க.
அதுவும் நல்லாதான் இருக்கு:-))))
டைய்லி, வீக்லி, மந்த்லி எல்லாம் கிடையாது.
எப்பக் கிடைக்குதோ அப்ப:-)))
வாங்க சிவகுமார்.
இங்கே ஏதுங்க தமிழ்ப் பத்திரிக்கை? (-:
இன்னிக்குத்தான் கோபால் திரும்பிவந்தார். நேத்து சிங்கையில் ஃப்ளைட் ஏறினப்ப,
அங்கிருந்து கொண்டு வந்த தமிழ் முரசு தான் இது.
பொட்டலம் கட்டி வந்த பேப்பரைக்கூட விடமாட்டேன், ஒரு காலத்துலெ. இப்ப முழுசா
ஒரு பத்திரிக்கையும் கிடைச்சு, கூடவே ஒரு ப்ளொக்கும் இருந்தாக் கேக்கணுமா...? :-)))
ராகவன்,
வாங்க. பயந்துட்டீங்களா? இதெல்லாம் பாடம் கிடையாது. நாளைக்கு நியூஸி வகுப்பு இருக்கு.
நாகை சிவா.
கொட்டை எழுத்துலெ வந்தா செய்தித் தலைப்பு தானே?
மொத்தம் 10 பக்கம். அதுலேதான் இவ்வளவும் இருக்கு. இது இல்லாம தனியார் விளம்பரங்கள் உண்டு.
அதையெல்லாம் விட்டுட்டேன்:-)))
துளசியக்கா,
அஞ்சாத நிருபர் வீரபத்ரன் மாதிரி ஹெவி ந்யூஸ் ரிப்போர்டிங்!
அது சரி நீங்க "ஹேண்டா சிவிக்" லேர்ந்து பஜாஜ் M80கு எப்ப மாறுனீங்க?
:-)))
துளசி,
****************
//பத்திரிக்கையில் வந்த தலைப்புச் செய்திகள்.//
தலைப்புச் செய்திகளே, இவ்வளவா..........
***************
அதே !
கட் & பேஸ்டா, இல்ல மொத்தமும் தட்டச்சு பண்ணீங்களா ? நன்றி.
//மிஸ் போபால் அழகிப் போட்டி ( படம்
மும்தாஜ்.( படம்)//
படம் போட்ருக்கலாம்....ஹி...ஹி..
//தனியார் விளம்பரங்கள் உண்டு.
அதையெல்லாம் விட்டுட்டேன்:-))) //
நல்லவேளை நாங்க தப்பிச்சோம்
:))))
ஹரிஹரன்,
பஜாஜ்க்கு மாறுனது ஜஸ்ட் ஒரு சேஞ்சுக்கு :-))))
பாலா,
ரியல் பேப்பர் இது. கோபால் கொண்டு வந்தது. நேத்துப் பேப்பர்தான் . தமிழ் முரசு.
எங்கே இருந்து கட் & பேஸ்ட் ? எல்லாம் கைவலிக்க தட்டச்சுதான்.
மொத்தம் 10 பக்கம்.
மனசு,
ப்ளாக் & ஒயிட் போட்டொதான். நல்லாவும் இல்லை. இல்லேன்னா ஸ்கேன் செஞ்சு போட்டுருப்பேன்:-))))
நாகை சிவா,
அப்படியெல்லாம் அவ்வளோ சீக்கிரம் கஷ்டப்படுத்தமாட்டேன். தெய்வம் நின்று கொல்லுமாம்.:-)))
இன்றைய தலைப்புச் செய்திகள் வாசிப்பது துளசியக்கா.
என்னார்,
ஒரே ஒரு திருத்தம்.
இன்றைக்கு 'மட்டும்' ன்னு இருக்கணும்:-))))))
வணக்க்க்க்க்க்க்க்க்க்கம்ம்ம்ம்ம்ம்ம்.
செய்திகள் வாசிப்பவர் திருமதி கோபால்.
செய்திகளை வரலாறாகக் கொடுப்பதில் வல்லவர்.
ஆமாம்,, "விலாவாரியாக' அர்த்தம் என்னப்பா?
மானு,
வாங்க. விலாவரியாப் பேசலாம்.
விஸ்தரிச்சு ன்னு அர்த்தம்ப்பா:-))))
என்ன துளசி,
போன ரெண்டு நாளா பதிவு ஒன்னையும் போடலையா?
Post a Comment