Wednesday, July 05, 2006

நியூஸிலாந்து பகுதி 50


தமக்குத் தாமே திட்டம்.. ஏன் இங்கே இப்படி உடம்பு சரியில்லாம மக்கள் அவதிப்படறாங்க? கிராமம் இருக்கறஇடம் சரியில்லே. ரொம்ப ஈரம் தேங்குது. குளிர் காலம் வந்தாக் கேக்கவே வேணாம். ஈரம் இல்லாத நல்ல காய்ஞ்ச பூமிக்கு நம்ம கிராமத்தை மாத்திக்கணுமுன்னு இளவரசி பூஆ தீர்மானிச்சாங்க. எது நல்ல இடம்? இதுக்கு முன்னாலே இருந்த அரசருக்கு ஒரு வீடு கட்டுனாங்களே, அங்கேயே போயிரலாமுன்னு கிளம்புனாங்க. புதுசா அங்கே ஒரு பெரிய வீடுகட்டி அதுலேயே மக்களொடு இருக்கலாமுன்னு முடிவு செஞ்சாச்சு. மக்களுக்காக ஒரு இடம்.

ஆரோக்கியமானவாழ்க்கைமுறை. இதுக்கும் ஒரு பேர் இருந்துச்சு. மராய் ' டுராங்காவேவே மராய்'


வைக்காட்டோலே இருந்த மற்ற மவோரிக் குழுக்களுக்கும், பூரா நியூஸிலாந்து நாட்டுக்கும் முதல் மராய். ஆயிரம் வருசத்துக்கு முன்னாலே இங்கே வந்த முதல் மவோரிங்க குழு கம்யூனிட்டி ஹால் மாதிரி ஒரு இடம் உண்டாக்கிஅதுலேயே ராத்தங்கல் செஞ்சாங்களே, அதே மாதிரிதான் இதுவும். வழிவழியா மராய்க் கதைகளாக் கேட்டிருந்தது இப்ப நிஜமாவே உண்டாச்சு.


ஆனா, பண்டையக்காலம் போல இல்லாம, வெள்ளைக்கார நாகரீகத்துலே இருந்து பல நல்ல அம்சங்களை எடுத்துக்கிட்டாங்க.கழிவுநீர் வெளியேத்தற காவாய், நல்ல தண்ணீர் கிடைக்கறதுக்குக் குழாய் எல்லாம் வச்சு நவீன வசதிகளோடுள்ளமராய். இளவரசி, தன்னோட குடிமக்களையெல்லாம் கூப்புட்டு மவோரிகளுடைய வாழ்க்கை முறை, அந்தக் காலத்துக்கதைகள், பாட்டுக்கள், சரித்திர முக்கியத்துவம், பாரம்பரியம் இதெல்லாம் எடுத்துச் சொல்லி மக்களை ஊக்கப்படுத்தினாங்க.அப்பத்தான் நிறைய மவோரிகளுக்கு அவுங்க பின்புலம் எவ்வளவு மதிப்பு வாய்ந்ததா இருந்ததுன்னு புரிஞ்சதாம்.


மரத்துலே செதுக்கும் மவோரி சிற்பவேலைகள், மவோரிகளுடை நீளமான படகுகள் கட்டறவிதம் இதுக்கெல்லாம்கூட மறுவாழ்வு வந்துச்சு. இதோட விடாம, மவோரிப் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்குக் கட்டாயம் அனுப்பிப் படிக்கவைக்கணும், உடம்பு சரி இல்லாதப்ப டாக்டர்கிட்டே கொண்டு போய் காமிக்கணும்னு நல்ல கருத்தெல்லாம் சொல்லி தம் மக்களை நல்லபடி வழி நடத்துனாங்க. (இப்படி ஒரு தலைமை ஒவ்வொரு இனத்துக்கும் நாட்டுக்கும் கிடைச்சதுன்னா உலகமே எப்படி சொர்க்கமா மாறி இருக்கும்?)


அப்பெல்லாம் மவோரி இனத்துலே அப்பா,அம்மாத்தான் பொண்ணு பார்த்தோ, மாப்பிள்ளை பார்த்தோ அவுங்க புள்ளைங்களுக்குக் கல்யாணம் நடத்துவாங்களாம். பெற்றோர் ஏற்பாடு செய்யும் அரேஞ்சுடு மேரேஜ். இதுக்குப்பேர் டமாவ்(Taumau). தலைவருக்கு உதவிக்கு ஆள் தேவைப்படும் போது குழுவே துணையைத் தேர்ந்தெடுக்குமாம்.நம்ம இளவரசிக்கு 38 வயசானப்ப, அவுங்களைவிட வயசுலே ரொம்ப இளைவரைக் கல்யாணம் செஞ்சு வச்சாங்களாம்.மாப்பிள்ளையைக் கூப்புடறது டுமோகை Tumokai. இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? Worker/helper


சுயமுன்னேற்றம் கண்டு மக்கள் வாழ்க்கையிலே ஜெயிக்க ஆரம்பிச்சதும், அரசாங்கம் மெதுவா முன்வந்து உதவிக்கரம் நீட்டுச்சு. 1920, 1930களிலே மவோரிகளுக்கு குடி இருப்பும் கட்டிக் கொடுக்க ஆரம்பிச்சது. அவுங்க பிள்ளைங்க உயர்நிலைப்பள்ளிவரைக்கும் போக ஆரம்பிச்சாங்க. வசதிகளை முன்வச்சு மவோரிகள் கிராமத்தை விட்டு மெதுவா நகர்ப்புறங்களுக்கு மாற ஆரம்பிச்சதும் இப்பத்தான்.


1940-ல் எட்டு உயர்நிலைப்பள்ளிக்கூடம் மவோரிகளுக்காகவே வெவ்வேற டவுன்களிலே கட்டிக் கொடுத்தாங்க.விவசாயம் செய்ய விருப்பம் இருந்த மவோரிகளுக்கு அரசு கடனுதவியும் ஏற்பாடு செஞ்சது. மவோரிகளோடு சண்டைபோட்டு அநியாயமா பிடுங்குன நிலங்களில் கொஞ்சத்தைத் திருப்பியும் தந்தது அரசு.


மொதமொதல்லே 1769லே கேப்டன் குக் இங்கே வந்தப்ப மவோரிகள் ஜனத்தொகை ஒரு லட்சம் இருந்துச்சாம். சண்டை,சச்சரவு, நோய்ன்னு ஜனங்க பல வழியிலேயும் மடிய ஆரம்பிச்சு 1901லே பாதிக்கும் கீழே போயிருந்தது ஜனம். வெறும் 45,500 பேர்தான். அடுத்த 35 வருசத்துலே இவுங்க ஜனத்தொகை 82,000 ஆச்சு.


இதுக்கிடையிலே இன்னொரு உலக மகா யுத்தம் வந்துச்சு.
ரெண்டாம் உலக மகா யுத்தத்துலேயும் கலந்துக்கிட்டு விளாசி இருக்காங்க. ஆனாலும் முதல் போர்லே ஆனஅளவுக்கு உயிர்ச்சேதாரம் இல்லாம திரும்புனாங்க.


மத்த உலகநாடுகளிலே நடக்கற மாதிரிதான் இங்கேயும் ஏற்றமும் இறக்கமுமாதான் இருந்துச்சு. இதுக்குள்ளெ மின்சாரம் பரவலாக் கிடைச்சதாலே பண்ணை வேலைகள், தொழிற்சாலைகள்னு சிறப்பா வேலைகள் செய்ய முடிஞ்சது.அரசாங்கம் பெரிய அணைகள் கட்டி மின்சார உற்பத்தி செய்ய ஆரம்பிச்சது.


1950களிலே வாழ்க்கைத்தரம் ரொம்ப உயர்ந்து நவநாகரீக வசதிகளோடு மக்கள் இருந்தாங்க. பண்னை வேலைகளுக்கு மெஷின்கள் வந்துருச்சு. குதிரைகளையெல்லாம் ஓரங்கட்டினாங்க. ஆனா, அதுகளை அப்படியே விட்டுறாம சவாரிசெய்ய, ரேஸ் குதிரைப் பண்ணைன்னு ஆரம்பிச்சாங்க. குதிரைப் பந்தயமும் விருப்பமாயிருச்சு.பந்தயக்குதிரைகளை வளர்த்து அண்டை நாடான ஆஸ்தராலியா வரைக் கொண்டுபோய் பந்தயத்துலே கலந்துக்கறாங்க.


படிப்பு முக்கியமுன்னு உணர்ந்து பல்கலைக் கழகங்கள் நல்லபடியா செயல்பட்டுச்சு.

படம்: இளவரசி பு ஆ

10 comments:

said...

வளர்ச்சிப்பாதையில் தளிர் நடை
போட ஆரம்பிச்சுட்டாங்க..இனி எல்லாம் முன்னேற்றம்தான்

said...

வாங்க சிஜி.

//இனி எல்லாம் முன்னேற்றம்தான் //

அப்டீங்கறிங்க?

said...

சிரிப்பதற்காக அழைப்பிதழ்.

http://kalaaythal.blogspot.com/2006/07/004.html

said...

மாப்பிள்ளையைக் கூப்புடறது டுமோகை Tumokai. இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? Worker/helper//

அதாவது எங்களுக்கு மரியாதையா வேலை இல்லன்னா உதவி செஞ்சிட்டு போயிருன்னு சொல்லியிருக்காங்க?

ஹூம்.. இப்ப மட்டும் என்ன வாழுதாம்.. அதான நடக்குது:(

said...

//மாப்பிள்ளையைக் கூப்புடறது டுமோகை Tumokai. இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? Worker/helper//
சரியாத்தான் சொல்லியிருக்காய்ங்க!

said...

மணியன் & டிபிஆர்ஜோ,

அதெப்படிங்க உங்க ரெண்டு பேருக்கும் ஒரே சந்தேகம் வந்துருக்கு.

நம்ம ஊர்லே மாட்டுப்பெண்( மாற்றுபெண்) ன்னு சொல்லி மருமகளை வேலை வாங்கலையா.
அதேதான் இங்கே ரிவர்ஸ்:-))))

இது சதர்ன் ஹெமெஸ்பியராச்சே:-)

said...

துளசி ,இப்படிக்கூட ராஜ்யம் நடந்ததா? ஹெல்பர் நல்லாவே இருந்து இருப்பார்.
பின்ன. அவ்வளவு அன்பான தலைமைக்கு உதவி செய்யரவங்களுக்கும் நல்லதுதான் நடக்கும்.
நம்ம இல்லியா இப்போ/:-)

said...

வாங்க மானு.

//நம்ம இல்லியா இப்போ/:-)//

போட்டீங்களே ஒரு போடு!

நமக்கும் ஒரு வகையிலே ஹெல்ப்பர்ஸ் இருக்காங்கதான்:-)))

said...

//படம்: இளவரசி பு ஆ//

அப்படின்னா புரட்சி ஆட்சியாளர் அப்படின்னுதானே பொருள்?

said...

கொத்ஸ்,

இந்த பு ஆதான் புவ்வாவுக்கு வழி காமிச்சவங்க. பு(வ்) ஆ