Saturday, July 22, 2006

எவ்ரிடே மனிதர்கள் -10 ரெட்டி

வேற வீடு பார்க்கணும்...

சரிசரி. ரெட்டி கிட்டே கேக்கலாம்

பண்ணைக்குப் போய் ஆடு வெட்டிக்கிட்டு வரலாமா?

சரிசரி. ரெட்டி கிட்டே கேக்கலாம்

ஃப்ரீஸர் வேலை செய்யலையேங்க.....

சரிசரி. ரெட்டி கிட்டே கேக்கலாம்

ஒரு கார் கொஞ்சம் மலிவா வாங்கணுமே....

சரிசரி. ரெட்டி கிட்டே கேக்கலாம்

இப்படி ஆன்னா ஊன்னா எல்லாத்துக்கும் ரெட்டிகிட்டேதான் கேட்டுக்கிட்டு இருந்தாங்க, கேட்டுக்கிட்டு இருந்தோம்.

தாடி, மீசைன்னு முரட்டுத்தனமான தோற்றம். சாலிட்டா இருப்பார். சுருட்டை முடி. அதுலே எப்பவும் ஒரு தொப்பி.அழகான ரெண்டு பெண் குழந்தைகள். அதுலே ஒன்னு அம்மாவைப்போல. அம்மா வேறு இனம். அப்பா இந்தியர்.ச்சின்னப்பொண்ணு இந்தியச்
சாயல். நான் முதல்முதல்லே சந்திச்சப்ப எட்டும், ஆறும் வயசு. மனைவி இங்கே நர்ஸ் வேலை செய்யறாங்க. இவர்? ஸ்டூடண்ட்! வக்கீலுக்குப் படிக்கிறார். படிக்கிறார் படிக்கிறார் படிச்சுக்கிட்டே இருக்கிறார்.


இங்கே ஸ்டூடண்ட் விசாவுலே வர்றவங்க கல்யாணம் ஆனவங்களா இருந்தா மனைவி, குழந்தையைக் கொண்டுவரலாமுன்னு இருக்கு. அதைப் பயன்படுத்தித்தான் நர்ஸா இருந்த மனைவியையும், குழந்தைகளையும் கொண்டு வந்திருந்தார்.


அப்ப ( அப்பன்னா ஒரு 20 வருசத்துக்கு முந்தி) நிறைய இந்திய மாணவர்களுக்கு பிஜி அரசாங்கம் ஸ்காலர்ஷிப் கொடுத்து இங்கே படிக்க அனுப்பிக்கிட்டு இருந்துச்சு. அப்படி வந்த ச்சின்னவயசுப் பையன்களுக்கு இவர்தான்'குரு'. குடும்பஸ்தர். தனியா இருக்கற 17, 18 வயசுப்பசங்க தங்கள் குடும்பத்தைப் பிரிஞ்சு இருக்கற சோகத்தை இவர் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் இருக்கறதுலே ஓரளவு மறந்துருவாங்க. எதோ பெரியப்பா சித்தப்பா, அண்ணன் வீட்டுக்கு வந்தமாதிரி ஒரு உணர்வுதான்.


நாங்க இங்கே வர்றதுக்கு முன்னாலே எங்க இவர் மட்டும் தனியா ஒருதடவை இங்கத்து நிலமையைக் கண்டுக்கிட்டுப் போகலாமுன்னு வந்திருந்தார். அப்ப தற்செயலா 'மேற்படிக் கூட்டத்து' மாணவர் சிலரை ஒரு கடையிலே சந்திச்சாராம்.நாந்தான் பலசரக்கு சாமான் லிஸ்டைக் கொடுத்து, அதெல்லாம் கிடைக்குதான்னு பார்த்துட்டு வரச் சொல்லி இருந்தேனே.நமக்கு வேண்டியது ஒண்ணுமே இல்லேன்னா, வந்துட்டு வெறுங்காசை வச்சுக்கிட்டு என்ன செய்ய?


இந்த மாணவர்கள் இவரை நேரா 'குரு'கிட்டேக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. இவர் திரும்பி வந்தவுடன், ரெட்டியைப் பத்திச் சொன்னதைக் கேட்டவுடன் எனக்குப் பலாப்பழம் ஞாபகம் வந்தது. பார்க்கக் கடினம். ஆனால் நல்ல சிநேகமான மனசு.அப்புறம் நேரில் சந்திச்சது ஏர்ப்போர்ட்டில் வச்சு. நாங்கள் வந்து இறங்கறோம், வரவேற்கக் காத்திருந்தது ஒரு ஏழெட்டுப் பேர் கொண்ட மாணவர் கூட்டம். நடுநாயகமா நம்ம ரெட்டி. 'டக்'னு தெரிஞ்சு போச்சு இவர்தான் அவர்ன்னு!


இந்த ஆன்னா ஊன்னா கூட்டத்துலே ஐக்கியம் ஆயிட்டோம். நமக்கும் ரெட்டி இல்லைன்னா ஒரு வேலையும் நடக்காதுன்னு ஆயிருச்சு. நம்முடைய வெல் விஷர்.' நல்ல கார்'தான். வாங்கிரலா'முன்னு சொன்னா அதுக்கு அப்பீலே இல்லை.இப்படித்தான் எனக்கு ஒரு கார் வாங்க உதவி செஞ்சார். அதோடு நான் பட்ட பாடு.... அப்பப்பா.... தனியா ஒரு புத்தகமேபோட்டுறலாம்:-))))


அவருக்கு எல்லாப் பொருட்களைப் பத்தியும் விவரமாத் தெரிஞ்சிருக்குமுன்னு, நாங்க கண்ணை மூடிக்கிட்டு அவரை நம்பிக்கிட்டு இருந்தோம்.


ஒவ்வொரு சனிக்கிழமையும் பக்கத்துலே இருக்கற பண்ணைகளிலே போய் காய்கறிகள் வாங்கிவருவோம். அப்பெல்லாம் சனிக்கிழமை அரைநாள் மட்டுமே கடைகண்ணிகள். பகல் ஒரு மணிக்கப்புறம் தெருவே 'ஜிலோ'ன்னு இருக்கும்.மறுநாளும் இப்படியே அதே 'ஜிலோ'. 44 மணிநேரம் போயித் திங்கள் வந்தால்தான் கடைத்திறப்பு. பண்ணையிலே இருந்து வர்ற வழியிலே அப்படியே ரெட்டி வீட்டுக்கும் ஒரு விஸிட். அப்புறம் இதுவே வாலாயமாப் போச்சு.


எப்பப் போனாலும் வாயில் சிகெரெட்டோட டிவி முன்னாலே தனியா உக்கார்ந்து இருப்பார். சிலநாள் சமையல் நடந்துக்கிட்டு இருக்கும். குழம்பு வாசனை தெருவரைக்கும் மணக்கும். என்ன மசாலா போடறாங்கன்னு நினைப்பேன்.


பெரியமகள், நம்மைப் பார்த்ததும் டீ போட்டுக்கிட்டு வந்து வைக்கும். வெள்ளைக்கார டீ. சக்கரை தனியா, பால் தனியா, டீ டிகாஷன் தனியான்னு. இங்கெல்லாம் டீ போடறதா இருந்தா வெள்ளைக்கார நண்பர்கள் வந்தா நம்ம வீட்டுலேயும் இப்படித்தான். ஆனா நம்மாட்கள் வந்தா 'ஹிந்துஸ்த்தானீ ச்சாயா'!!!


கேக்கறதும் இப்படித்தான், "கோரா( வெள்ளைக்காரர்) டீயா? ஹிந்துஸ்த்தானி டீயா? ":-))))


பெரியமகள் சத்தமாப் பேசி நாங்க கேட்டதே இல்லை. ரொம்ப பயந்த சுபாவம். அப்பாகிட்டே பேசுதான்னே தெரியாது.


வீட்டுப் பின்பக்கம் எல்லாம் வாஷிங் மெஷின்கள் கிடக்கும். ட்ரைவேயில் எப்போதும் ரெண்டு மூணு கார்கள்.ரிப்பேர் செஞ்சு விக்கறாராம். இதுலேயே கிடந்தால் எப்பப் படிப்பாராம்? படிக்கிற லட்சணமொண்ணும் தெரியலை.
நாள் போகப்போக அங்கே எதோ சரியில்லைன்ற உணர்வு வந்துக்கிட்டு இருந்துச்சு. அம்மா எங்கே என்று கேட்டால்வேலைக்குப் போயிருப்பதாக பதில் வரும். வார இறுதியில் வேலைக்குப் போனால் சம்பளம் கொஞ்சம் கூடுதலா வருமே!


ஒருநாள் திடீர்ன்னு வீட்டை விக்கப்போறதாச் சொன்னார். வித்துட்டு? ஒரு டெய்ரி வாங்கப் போறாராம். அதுகூடவே வீடும் இருக்கும். கடையைப் பார்த்துக்கிட்டா வருமானம் வருமே! வீட்டுக்கு வீடும் ஆச்சு.


இபெல்லாம் வாரம் ஒருதடவை ரெட்டியோட கடைக்கு விஸிட். தேவை இல்லைன்னாலும், ஒரு பிஸ்கெட் பாக்கெட்டாவது வாங்குவோம். பிஸினெஸ் நடக்கட்டுமேன்னு.


ஒரு மூணுமாசம் இப்படியே போச்சு. என்னவோ வேலைகளில் ரெண்டு மூணுவாரம் தொடர்ந்து எங்களால் போக முடியலை. ஆனா நியூஸ் வந்துருச்சு.


ரெட்டி இந்தக் கடையை வித்துட்டார். ஓ அப்படியா? இப்ப என்ன செய்யப் போறாராம்?


ஒருநாள் அவரோட மனைவியைத் தற்செயலா ஒரு சூப்பர் மார்கெட்டில் சந்திச்சேன். எப்படி இருக்காங்க,இப்ப என்ன செய்யறாருன்னு கேட்டப்ப வந்த பதில் 'யாருக்குத் தெரியும்? அவர் எங்களையெல்லாம் விட்டுட்டு ஆஸ்தராலியா போயிட்டார்'


"ஓஓஓஓ... அப்ப நீங்க எப்ப அங்கே மாறப்போறீங்க? "


"நாங்க இங்கே தான் இருப்போம்"


"அப்ப அவர் அங்கே தனியா இருக்காரா? படிக்கப்போயிருக்காரா, இல்லே வேலை எதாவது....."


" இன்னொரு பொம்பளையோட நாட்டை விட்டுப் போயிட்டார். அவுங்களுக்கு 3 பிள்ளைங்கஇருக்காங்க. குடும்பத்தோட ஜாலியாத்தான் இருப்பார்"


"நிஜமா? ரெட்டியா அப்படிச் செஞ்சார்? "


" ஆமாம். எல்லாத்தையும் வித்துட்டு எங்களுக்கு ஒண்ணுமே கொடுக்காம போயிட்டார்"


எங்களுக்கும் தெரியும், இதுவரை வீட்டுச் செலவு, வீடு வாங்கிய செலவுன்னு எல்லாத்துக்கும் அவரோட மனைவியோட பேங்க் பேலன்ஸ்தான் உதவியா இருந்துச்சு.


இதையே வேற யாராவது சொல்லி இருந்தா நம்பி இருக்க மாட்டோம். சொன்னது அவரோட மனைவின்றதாலே நம்பும்படியா ஆச்சு. கொஞ்ச நாளைக்கு அப்புறம் இந்த மாணவர் கூட்டத்துலே சிலரைச் சந்திச்சோம். நடந்ததுஉண்மையா? அவருக்குச் 'சின்னவீடு' இருந்ததா? ன்னு கேட்டால் பசங்க சிரிக்கிறானுங்க. எல்லாம் ஏற்கெனவேதெரியுமாம். குருவாச்சேன்னு வாயைத் திறக்காமல் இருந்தாங்களாம்.


அடப்பாவிங்களா? முதல்லேயே அவர் மனைவிகிட்டேயாவது சொல்லி இருந்தால் அவுங்க முழிச்சுக்கிட்டு இருந்திருப்பாங்க. இல்லையா?


மெளனமாகத் தலைகுனிஞ்சுக்கிட்டு இருந்தாங்க பசங்க.


எப்படிங்க...........எப்படி இதெல்லாம்?


ரொம்ப நல்லவங்கன்னு நாம் நம்பி இருக்கறவங்க இப்படிச் செஞ்சுட்டுப் போயிட்டதுலே எங்களுக்கெல்லாம் பயங்கர ஷாக்.


எங்களுக்கே இப்படின்னா, அவரோட மனைவி, குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்? இத்தனைக்கும், அந்தம்மா அவுங்களோட மொத்த சேவிங்ஸ், இதுக்கு முந்தி அவுங்க நாட்டுலே அரசாங்க வேலையில் இருந்தப்ப கிடைச்ச பிராவிடண்ட் ஃபண்ட் அது இதுன்னு எல்லாத்தையும் இங்கே மாத்திக் கொண்டு வந்திருந்தாங்க. எல்லாத்தையும்தான் இவர்கிட்டே இழந்துட்டு நிக்கிறாங்களே.


அப்ப 18 வருஷத் தாம்பத்தியத்துக்கு அர்த்தமே இல்லையா? கணவனை எதுவரை நம்பலாமுன்றதுக்கும் கணக்கு இருக்கா என்ன?


போனவாரம், அவர் மனைவி(???) வீட்டுக்கு வந்திருந்தாங்க. பிள்ளைகள் இப்போ படிச்சு முடிச்சுட்டு வேலை செய்யறாங்களாம், அதே ஆஸ்தராலியாவில். ரெண்டு பேருமே கல்யாணம் செஞ்சுக்கப் பயப்படறாங்களாம்.


'அப்பா மாதிரி ஆயிட்டா?'


என்ன மாதிரி பயத்தை பசங்க மனசுலே விதைச்சுட்டார் பாருங்க.


உலகத்துலே எல்லாருமேவா இப்படி இருப்பாங்க. லட்சத்துலே ஒண்ணுன்னு சொல்லலாமா?


'போன கஷ்டம் போச்சு. இனி எல்லாம் சுபம்'னு பொண்ணுங்க கிட்டே சொல்லுங்கன்னு சொல்லி அனுப்புனேன்.


மனோ தைரியம்தானே வாழ்க்கை. இல்லீங்களா?
----------


அடுத்தவாரம் : பானு அண்ணி
------------


நன்றி: தமிழோவியம்

22 comments:

said...

ரெட்டிகாரு இப்படி ரெட்டை வாழ்க்கை வாழ்ந்திருக்காரே! நமது 'கணவனே கண்கண்ட தெய்வம்' டைப் கூட்டுக் குடும்பத்திற்குத் தான் சரி. அதுவும் ஊரைவிட்டு ஊரில் தனிக்குடித்தனம் நடத்துவோர் சற்று கவனமாகத் தான் இருக்க வேண்டும்.

said...

அருகாமையில் இருப்போரை வைத்துதான் உலகத்தைப் புரிந்து கொள்ளுகின்றோம்
இளம் வயதில் ஏற்படும் பதிவுகளை மாற்றுவது கஷ்டம்

said...

வாங்க மணியன்.

கணவன் மனைவி உறவில் நம்பிக்கைதானேங்க முக்கியம்.

நம்புனாத்தானே அது வாழ்க்கை.

எங்களுக்கு இப்பக்கூட, அவரை நினைச்சா 'ஷாக்'தான்.

said...

சிஜி,
அந்தப் பொண்ணுங்கதான் மனசுலே பலமா பாதிக்கப்பட்டிருக்காங்க.

நினைச்சா எங்களுக்கும் கவலையாத்தான் இருக்கு.

said...

//இப்படித்தான் எனக்கு ஒரு கார் வாங்க உதவி செஞ்சார். அதோடு நான் பட்ட பாடு.... அப்பப்பா.... தனியா ஒரு புத்தகமேபோட்டுறலாம்:-))))//


இதுக்கு பேர்தான் உள்குத்தாக்கா?

-:)))))))

said...

மனசு,

அவருக்குக் காரைப் பத்தித் தெரியுமுன்னு நாங்க நம்பிக்கிட்டு இருந்ததை எங்கெ போய்ச் சொல்ல?:-))))

said...

//மனோ தைரியம்தானே வாழ்க்கை. இல்லீங்களா?//
ஆமாங்க.

இருந்தாலும் நீங்க பலதரப்பட்ட மனிதர்களை உங்கள் வாழ்க்கையில் சந்தித்து உள்ளீர்கள் போல....

ரெட்டி போல் சில உண்டு. நானும் பார்த்து இருக்கின்றேன்.

said...

நாகை சிவா,

நேரில் சந்திச்சது போதாதுன்னு இப்ப
வலையிலும் பல வகை மனிதர்களைச் சந்திச்சுக்கிட்டு இருக்கேன்:-)))))

said...

//வலையிலும் பல வகை மனிதர்களைச் சந்திச்சுக்கிட்டு இருக்கேன்:-)))))//
நல்லது தானேங்க. என்ன போல நல்லவர்களை வல்லவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துக்கு அந்த இறைவனுக்கு தான் நீங்க நன்றி சொல்லனும்.

said...

நல்ல ரெட்டி! இந்த மாதிரி எல்லாம் தெரிஞ்ச ஆட்கள் கிட்ட மாட்டிக்கிட்ட அனுபவம் எல்லாருக்குமே இருக்குமுன்னு நினைக்கிறேன்.

said...

"ரோட்டு மேல காரு"விமர்சனம் எப்ப
வரும்? உங்களாலெ எழுத முடியலேன்னா நான் எழுதட்டுமா?தமிழகத் திரை அரங்குகளீல் 50 மணித்துளிகள் வெற்றீமுரசு கொட்டிய ஒரு திரைப்படத்தை நீங்க புறக்கணிப்பது நியாயமா?

said...

நாகை சிவா.
கண்டிப்பா இறைவனுக்கு நன்றி சொல்லணும். சொல்லிக்கிட்டும் இருக்கோம்.

said...

கொத்ஸ்,

இதெல்லாம் 'உலகப்பொது' விஷயங்கள்தான்.

said...

சிஜி,

'பார்க்காத படத்துக்கு விமரிசனம் எழுதறது இல்லேன்னு ஒரு விரதம்.'

பேசாம நீங்களே எழுதுங்க. ரொம்ப நாளா பதிவு ஒண்ணும் போடலையே நீங்களும்.

said...

//கண்டிப்பா இறைவனுக்கு நன்றி சொல்லணும். சொல்லிக்கிட்டும் இருக்கோம். //
ஹிஹி....ரொம்ப தாங்கஸ்ங்க

said...

//வக்கீலுக்குப் படிக்கிறார். படிக்கிறார் படிக்கிறார் படிச்சுக்கிட்டே இருக்கிறார்.//

அங்க போய் படிப்ப தொடங்கறாரோ என்னமோ?

என்னிக்காச்சும் ஒருநாள் தான் செஞ்ச பாவத்துக்கு அனுபவிப்பார்

said...

வாங்க தம்பி.

'தெய்வம் நின்று கொல்லும்' ன்னு சொல்றது சரிதான்னு சொன்னாலும்,
இவர் இப்படி அம்போன்னு விட்டுட்டுப் போனப்ப குடும்பம் எப்படித் தவிச்சிருக்கும்?

நினைச்சாலே 'பகீர்'னு இருக்கு.

said...

துளசி,
எத்தனையோ துரோகத்தைக் கூட ஜீரணம் ப்ண்ணிடலாம்.
கணவன் செய்கிறது,மஹ பெரிய வல்தான்.
அதுவும் பெண் குழந்தைகள் ரொம்பப் பாதிக்கப்படும்.

said...

ரொம்ப நல்லவங்கன்னு நாம் நம்பி இருக்கறவங்க இப்படிச் செஞ்சுட்டுப் போயிட்டதுலே ..//

நம்பிக்கைங்கற வார்த்தைய ஒரு தமிழ்படத்துல நம்பி 'கை' வைக்கறதுன்னு அர்த்தம் சொல்வாங்க..

அத ரெட்டி பாத்துருப்பார்னு நினைக்கேன்..

said...

வல்லி,

வாங்க. இதுலே கணவன் மனைவின்னு பாகுபாடு கிடையாது. 'துணை 'செய்கிற துரோகம்.
நாம துணையா நினைச்சவங்க செய்யறது மன்னிக்கவும் மறக்கவும் முடியாததுதான். இல்லையா?

said...

என்னங்க டிபிஆர்ஜோ இப்படிச் சொல்லிட்டீங்க. இந்தப் படத்தை
ஹிந்தியிலே 'டப்' பண்ணிட்டாங்களா என்ன? :-))))

said...

ஆமாம், துளசி ரெண்டு பேரும் நம்பி தான் இருக்கணும். அந்தப் பொண்ணுங்க நல்லா வந்தா சரி.பாதிப் பின்னூட்டமா அது போயிடுத்து.
அதான் மீதிப் பின்னூட்டம் இதோ.