Saturday, July 29, 2006

எனக்கு வயசு 150.

இன்னிக்கு பர்த்டே கொண்டாட்டம். ஒரு வாரமா கட்டாயம் வாங்க,வாங்கன்னு கூப்புட்டுக்கிட்டு இருந்தாங்க. ரெண்டு நாளா டிவியிலேயும் வந்து அழைச்சாங்க. காலையிலே 11 மணி முதல் சாயந்திரம் 6 வரை கொண்டாட்டமே கொண்டாட்டம். போகாம இருக்க முடியுமா?


நாங்க போய்ச் சேரும்போதே கேக் வெட்டி முடிச்சுப் பத்து நிமிஷம் ஆயிருச்சு. கார் பார்க்கிங்தான் கஷ்டமாப்போச்சு. 'ஹொய்ங் ஹொய்ங்'ன்னு வளைஞ்சு வளைஞ்சு ஒவ்வொரு மாடியாப்போய் கடைசியிலே பத்தாவது மாடியில்தான் இடம் கிடைச்சது.


பிறந்தநாள் எங்க ஊருக்குத்தாங்க. விக்டோரியா மகாராணிதான் அந்தக் காலத்துலே வெள்ளையர்கள் குடியேறிய காலனிகளில் முக்கிய நகரமுன்னு நினைக்கிற ஊர்களுக்கு நகர அந்தஸ்து வழங்குவாங்களாம். அப்படி அந்தஸ்த்து வாங்கி இன்னியோட 150 வருசமாச்சு நியூஸியில் கிறைஸ்ட்சர்ச் நகரத்துக்கு.


150 மீட்டர் நீளம் கேக் செஞ்சு வெட்டியிருக்காங்க. உள்ளெ நுழைஞ்சதும் ஆளுங்களுக்கு கேக். ஏனோதானோன்னு செய்யாம அருமையா ருசி. நிறைய வால்நட்ஸ் போட்டு ஒயிட் சாக்கலேட் ஐஸிங் செஞ்ச ஃப்ரூட் கேக்.


ஒரு பக்கம் குச்சிக்காலுலே உயரமா நடக்கற பசங்க. மேடையிலே கார்டன் சிட்டி பேண்ட் பாடிக்கிட்டு இருக்கு.ச்சின்ன புள்ளைங்களுக்கு லைன் ஸ்கிப்பிங், பஞ்சி ஜம்ப், க்ளவுன்கள், நதியில் படகு ஓட்டும் பண்ட்டர்ஸ், மவோரிகள் போல முகத்தில் பச்சை குத்தி இருக்கும் இளசுகள் இப்படி வினோதங்கள் ஏராளம்.


இதுலே கொண்டாட்டத்துக்காக ஃபேன்ஸி ட்ரெஸ் போட்டி அறிவிச்சிருந்தாங்க. அதுக்காக இன்னும் பல விதமா உடை உடுத்துன ஆட்கள்ன்னு ரொம்ப கலகலன்னு இருந்துச்சு. எங்க ஊர் கதீட்ரல் உள்ளெ வழக்கமா போட்டோ எடுக்கணுமுன்னா கேமெராவுக்கு ஒரு சார்ஜ் 4$ அடைக்கணும். இன்னிக்கு விசேஷம் பாருங்க, அதனால் எல்லாம் இலவசம்.

இலவசமுன்னா இது மட்டுமா, நெஸ்காஃபிக் காரங்க இலவசமா காபி தந்துக்கிட்டு இருந்தாங்க. வரிசை ரொம்ப நீளமா இருந்துச்சு. ஏன் இருக்காது? கிட்டத்தட்ட ஒரு லட்சம்பேர் அங்கெ கூடி இருந்தோமே! ஊரின் மொத்த ஜனத்தில் மூணில் ஒரு பங்கு! "வரிசையில் நிக்கவேணாமா? அப்ப இந்தா புடி. ஆறு கப் காபிக்குத் தேவையானமூணு விதங்களிலே காப்பிபொடி. வூட்டுலே போய் போட்டுக் குடிச்சுக்கோ"ன்னு சொல்லிக்கிட்டு காப்பித்தூள் எடுத்துக் கொடுத்துக்கிட்டே இருக்காங்க ஒரு பக்கத்துலே! வாங்கியாரலைன்னா மனசுக்கு நல்லாவா இருக்கும்? ரெண்டு பொதி நமக்கு.


ஸ்டார்பக்லே வேற, இலவசக் காஃபி நடந்துக்கிட்டு இருக்கு. மக்கள்ஸ் குஷியோட உலாத்தறாங்க. எங்கூர்லே 'ச்சலிஸ்'ன்னு ஒரு அலங்காரம் வச்சிருக்காங்க. நீங்க சில தமிழ் சினிமாவுலேகூடப் பார்த்திருக்கலாம். ஸ்டீல் அலங்காரம். அதுபோல ஒண்ணு செஞ்சு தலை அலங்காரமா வச்சுக்கிட்டு இருந்த ஒரு பெல்லி டான்ஸர்தான் கூட்டத்தை ஒட்டு மொத்தமா தன் பக்கம் இழுத்துக்கிட்டு இருந்தாங்க. அவுங்களொட நானும் நின்னு ஒரு படம் எடுத்துக்கிட்டேன்.


ஒயின் பாட்டில் கார்க்குகளாலேயே ஒரு சட்டை செஞ்சு போட்டுக்கிட்டு, திராட்சைப் பழங்களால் ஒரு அலங்காரம்.நியூஸி லேம்ப் உல்(lamb wool) அலங்காரமுன்னு நிஜமான ஒரு ஆட்டுக்குட்டி, இன்னும் விதவிதமான தலை/தொப்பிஅலங்காரமுன்னு அசல் திருவிழாக் கோலாகலம். பத்தாயிரம்பேரை ஒருமிச்சுப் பார்த்தா புண்ணியமாமே. இப்ப அதுபோல பத்து மடங்கு புண்ணியம் சம்பாரிச்சுக்கிட்டுப் படங்கள் எடுத்துக்கிட்டு இப்பத்தான் வீடுவந்து சேர்ந்தோம்.


படங்கள் இங்கே.


ச்சும்மா சொல்லக்கூடாது அழகான நகரம்தான். இன்னிக்குன்னு பார்த்து சூரியனும் கொஞ்சம் கருணை காமிச்சார்.பத்து டிகிரிதான். ஆனாலும் அவர் வந்ததே பெருசு.


ஹேப்பி பர்த்டே கிறைஸ்ட்சர்ச்.

35 comments:

said...

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ மிருத்துக்குத்தான் பிறந்த நாள் என்று நினைத்தேன் பிறகு தான் தெரிந்தது சுதந்திரம் பெற்ற நாள் என்று
படங்கள் நன்றாக உள்ளது

said...

வாங்க என்னார்.

//ஏதோ மிருத்துக்குத்தான் //

மிருகத்துக்குன்னு சொல்ல வந்தீங்கன்னு நினைக்கிறேன். சரியா?( துளசின்னதும் யானையோ
பூனையோ நினைவுக்கு வந்துருது இல்லே? :-))) )

இங்கே இந்த நகரத்துக்கு முதல் முதலா கப்பலே 214 பேர் 1850லே வந்து இறங்கினாங்க.
அதுக்கு ஆறு வருசம் கழிச்சு மாட்சிமை தாங்கிய மகாராணி விக்டோரியா, இந்த ஊருக்கு
நகரம் என்ற அந்தஸ்த்து கொடுத்தாங்க. இது நடந்து இன்னிக்கு 150 வருசமாச்சு. அதுதாங்க
கொண்டாட்டம்.

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இது நியூசி 54 இல்லையா ?

said...

லேடிஸ் வயதை சொல்லமாட்டேர்களே என்று ஆவலோடு வந்தேன். ம்ம்
படங்கள் ஏமாற்றவில்லை :)

said...

வாங்க மணியன்.

வாழ்த்துகளுக்கு நன்றி. இதுவும் ஒரு சரித்திரம்தான். ஆனாலும் அப்பப்ப இதுமாதிரி நியூஸி நியூஸ் இடைசெருகலா
போட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். நல்லதோ பொல்லாததோ, சம்பவங்கள் நடக்கறப்பச் சுடச் சுடப் போட்டாத்தானே நல்லது

1987 லே இருக்கற நியூஸி 53 ஐ 1988 லே இருந்து தொடருவதுதானே ஒரு முறையும் கூட. இல்லீங்களா?

said...

வாங்க ஜிகே.

அது ஏங்க //லேடிஸ் வயதை சொல்லமாட்டேர்களே ...//
இப்பெல்லாம் யாருக்கும் லேடீஸ் பயப்படறது இல்லை. வயசைச் சொல்ல புது டெக்னிக்
வந்துருச்சுல்லே.

என்னையே எடுத்துக்குங்க 50+ :-))))))

படங்கள் எடுத்துட்டு வீட்டுக்கு வந்து கம்ப்யூட்டர்லே காப்பி பண்ணுனா 99 படங்கள்ன்னு சொல்லுது:-))))

ஃப்ளிக்கர் 16 படத்துக்குமேலே போடவிடாது. அதான் ஒரு 16 மட்டும் போட்டு விட்டேன்.

நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி:-))))

said...

துளசி அக்கா நேற்றைக்கு முந்தைய தினம்தான் தங்களின் எல்லா பதிவுகளையும் படித்து முடித்தேன். இப்பதிவில் இருக்கும் புகைப்படங்கள் ப்ளிக்ர் இல் இருப்பதால் என்னால் பார்க்க முடியவில்லை(அரபு அமீரகத்தில் அதற்க்கு தடை) பரவாயில்லை நான் ப்ராக்ஸி பயன்படுத்தி பார்த்துக் கொள்கிறேன்

said...

வாங்க மகேந்திரன்.

//நேற்றைக்கு முந்தைய தினம்தான் தங்களின் எல்லா பதிவுகளையும் படித்து முடித்தேன்...//

அதைப் பத்திச் சொல்றதுக்கு ஒண்ணும் இல்லையா?

ரெண்டு படங்களை இதுலே போட்டுருக்கேன். சுட்டி இதோ. முடிஞ்சாப் பாருங்க.
http://i7.tinypic.com/21b82yo.jpg


http://i7.tinypic.com/21b87dj.jpg

said...

அட 150 தானா ஆச்சு? இன்னும் கொஞ்சம் அதிகமா இருக்குமேனு சந்தேகத்தோட படிச்சா....
வாவ் கிறைஸ்ட்சர்ச் நகருக்கு 150..கிறைஸ்ட்சர்ச்சையும் கிறைஸ்ட்சர்ச்வாசிகளையும் வாழ்க வாழ்க என் வாழ்த்துகிறேன்....சிஜி

said...

வாங்க சிஜி.

நன்றி.
ஆமாம், போட்டோவெல்லாம் பார்த்தீங்களா? அதைப் பத்தி ஒண்ணும் சொல்லலை(-:

said...

அதப் பத்தி சொல்ல என்ன்னக்கா இருக்கு ? நான் என்ன எழுதுனாலும் அது உங்க எழுத்துக்கு ஈடாகாது மிக சுவாரஸ்யமான் மனதைத் தொடும் அன்பு வழியும் எழுத்து, எனக்கு மிகவும் பிடித்ததாலேயே அத்தனை பதிவுகளையும் ஒரே நாளில் படித்தேன் அதிலும் மஃபின் நாய்குட்டி பற்றி ஒன்னு ..... எனக்கும் நாய்களையும் உங்களைப் போல் பூனைகளையும் மிகப் பிடிக்கும் எனக்கு பிடித்த ஆறு பதிவில் கூட அதை எழுதியிருந்தேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
http://paarima.blogspot.com/2006/06/blog-post_19.html

said...

துளசின்னாலே யானையோ பூனையோவா?
அப்ப ரெண்டு காலமா?
போட்டோ எல்லாம் ப்ரமாதம். என்ன கொஞ்சம் கேக் அனுப்பி இருக்கலாம்.
இதுக்காகவே உங்க ஊருக்கு வரப்போரேன்.
யார் கிட்டயும் சொல்லாதீங்க.
சுகர் சுகர்னு கத்துவாங்க.அது யாருங்க ஒரு ப்ரௌன் கலர்லே டிரெஸ் போட்ட லேடி? நம்ம ஊரு அழகியா:-))))

said...

மானு,

வாங்க வாங்க. எந்த போட்டோப்பா நீங்க சொல்ற ப்ரவுன் கலர் ட்ரெஸ் லேடி? நான் ஒருக்காப் பார்த்தும்
கண்டு பிடிக்க முடியலையே அந்த 'ப்ரவுனை?'(-:

அதான் முந்தியே சொன்னேன் இல்லையா... யானை வளர்க்க ஐவேஜ் இல்லாததாலெ பூனை வளர்க்கறேன்னு:-)))

said...

மகேந்திரன்,

இந்த மிருகங்கள்தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம அன்பை நிஜமாவே திருப்பித் தருது. நம்ம உடையோ, பொருளோ,
வேற அந்தஸ்த்தோ ஒண்ணும் கணக்கு வைக்காம இருக்குதுங்க. அதனால்தான் எனக்கு இவுங்கமேலே அபார அன்பு.
இன்னொரு மிருகநேசனைப் பார்த்ததில் ரொம்பவே சந்தோஷம்.

said...

இங்கே ஒரு கவிதை
http://mahendhiran.blogspot.com/2006/05/blog-post_27.html

இங்கே ஒரு நூலக அனுபவம்
http://paarima.blogspot.com/2006/07/blog-post_28.html

said...

சாரி வ்பிங்கர் சிலிப்பாயிடுத்து மிருகத்துக்குத்தான்
துளசின்னா எங்க ஊரின் பெயர் துளசிமாநாடு துழாய்க்குடி

said...

அட என்னப்பா. எங்க சினேகிதிப்பா. துளசினு பேரு.
அதான் ப்ரவுன் கலர் டிரெஸ் லேடி.:-))))))

said...

நல்ல விவரிப்பு. கொண்டாட்டங்களுக்கு இழுத்துக் கொண்டு போய் விட்டீர்கள். அதுவும் அந்த கேக் பற்றிய விபரங்கள் மிகச் சுவையாக இருந்தன :-)

நீங்க என்ன ஃபேன்ஸி டிரெஸ் எதுவும் முயற்சி பண்ணவில்லையா?

அன்புடன்,

மா சிவகுமார்

said...

எவ்வளவு நீளத்துக்கு கேக் செய்றதுன்னு யோசிச்சி, எங்க ஊரு பொறந்த நாள் விழா வேண்டான்னு முடிவு செஞ்சிட்டோம்.

said...

படங்கள் அருமை அக்கா.. நல்ல வித்தியாசமான கொண்டாட்டம்.

said...

மகேந்திரன்,

சுட்டிக்கு நன்றி.

said...

என்னார்,

நீங்க துழாய்குடியா? இங்கே நிறையபேர் இருக்காங்க உங்க ஊர்லே இருந்து:-))))

said...

மானு,

அது கறுப்பு ட்ரெஸ்ப்பா. 'ப்ரவுண் ஸ்கின்'னு சொல்லி இருந்தா தடுமாறாம மொதல்லேயே
கண்டுபிடிச்சிருப்பேனே:-))))

ஆமாம். அவுங்க உங்க சிநேகிதிதாங்க.

said...

வாங்க சிவகுமார்.
//நீங்க என்ன ஃபேன்ஸி டிரெஸ் எதுவும் முயற்சி பண்ணவில்லையா?//

சரியாப்போச்சு. நான் போட்டுக்கிட்டு இருந்த சல்வார் கமீஸ் அங்கே ஃபேன்ஸி ட்ரெஸ்
வகையைச் சேர்ந்ததுதான்:-)))))

said...

தருமி,
நமக்கெதுக்குங்க இந்த கேக், பீக்கெல்லாம்?

ஆயிரம் வருஷமோ, ரெண்டாயிரம் வருஷமோ அதுக்கேத்த மாதிரி, நம்மூர்
பெண்கள் கிட்டே சொல்லிட்டா, கோயிலைச் சுத்தி பொங்கப் பானை வச்சு தமிழ்நாட்டு
ஸ்டைலிலே சக்கரைப் பொங்கல் பண்ணிறமாட்டோமா?

கொண்டாட்டத்துக்குக் கொண்டாட்டம் & சாமி வழிபாட்டுக்கும் ஆச்சு.

said...

ரமணி,

வாங்க இந்தப் பக்கம் ஒருதடவை. நல்ல ஊர்தான்.படத்துலே பார்த்ததை நேரில் பார்த்தாப் போச்சு:-))))
சிட்டிக் கவுன்சில் நல்லா செலவு பண்ணுச்சு( எல்லாம் நாம் கொடுக்கற வீட்டு வரிதான்)

said...

ஓஹோ. இருக்கிற ஊர்ரு எங்க சினேகிதியை வேற மாதிரி பார்க்க வைக்கிறதோ/

நான் அழகினு சொன்னது உங்களைத்தான்.!:-))
உங்க ஊரில வந்து பொங்கல் வச்சு லுலுலூஊனு குலவை போட்டா எப்படி இருக்கும்?

said...

மானு,

//உங்க ஊரில வந்து பொங்கல் வச்சு லுலுலூஊனு குலவை
போட்டா எப்படி இருக்கும்?//

ஐடியா சூப்பர். வாங்க அதையும் செஞ்சுட்டாப் போது. அன்னிக்கு உள்ளூர் பேப்பர்
ஹெட்லைன் நாம்தான்:-))))))

said...

ஹேப்பி பர்த்டே கிறைஸ்ட்சர்ச்.

துளசிம்மா புண்ணியம் எங்களுக்கும் சேர்த்துதானே

///
ஏனோதானோன்னு செய்யாம அருமையா ருசி. நிறைய வால்நட்ஸ் போட்டு ஒயிட் சாக்கலேட் ஐஸிங் செஞ்ச ஃப்ரூட் கேக்.
///

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

said...

ஆஹா.... மது.
வராதவுங்க வந்துருக்கீங்க.
உங்களுக்குப் புண்ணியம் மட்டுமென்ன,
சுவையான கேக்கும் தந்தாச்சு.:-))))

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கிறைஸ்ட்சர்ச். நீடு வாழ வாழ்த்துகிறேன்.

மக்கள் திருவிழா போல கூட்டம் கூட்டமாகக் கூடி மகிழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

எல்லாமே ஃபிரியா குடுத்திருக்காங்க...அதுலயும் அந்தக் கேக்கு...எனக்கும் வேணும்னு மனசு கேக்குதே...

எவ்வளவு பெரிய தொப்பி...அதுக்குள்ள அரமூட்ட பருப்பு வைக்கலாம் போல இருக்கே....

said...

வாங்க ராகவன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

கேக் உண்மைக்குமே நல்லா இருந்துச்சு. ரொம்ப ஜெனரஸ் செர்விங். நல்லாத்தான்
ப்ளான் பண்ணிச் செஞ்சிருக்காங்க. அன்னிக்கு எல்லாவேலையும் வாலண்டியர்கள்தான்
செஞ்சாங்க. அதுக்கே பாராட்டலாம்.

150 வருஷக் கொண்டாட்டமுன்னு ஒரு ட்ராம் பெட்டிக்குள்ளே 150பேரை ஏத்துனாங்களாம்.
மூச்சு முட்டி இருக்கும்,இல்லே:-))))

எல்லாமே ஃபன்!

said...

பிறந்தநாள் எங்க ஊருக்குத்தாங்க.//

அதான் தலைப்பை பார்த்ததுமே தெரியுதே.. பின்னே ஆம்பளைக்கும் பொம்பளைக்குமா 150 பி.நா வருது..

அது சரி துளசின்னா ஆனையோ பூனையோ ஞாபகத்துக்கு வரும்?

said...

என்னங்க டிபிஆர்ஜோ,

இப்படி // பின்னே ஆம்பளைக்கும் பொம்பளைக்குமா 150 பி.நா வருது..// சொல்லிட்டீங்க?

அப்ப 'தலைவர்' களுக்குக் கொண்டாடுவது என்னவாம்?

said...

arumai arumai - 150 வது பிறந்தநாள் - நாட்டுக்குப் பிறந்த நாள் - நாட்டு மக்கள் எல்லாம் மகிழ

4 டாலர் மிச்சம் - நெஸ்கேப் - ஒரு வாரத்துக்கு ஓசி - கேக் வால்நட்ஸ் = நீங்க ஏன் போனீங்கன்னு தெரிஞ்சு போச்சே - அங்கெல்லாம் கார் பார்க்கிங் பிராப்ளம் தான்