Friday, July 21, 2006

மதுரையில் கோமா

இதுவரைக்கும் மதுரையிலே 4 கோமா வுழுந்துருச்சு. ஆனா இதுக்கெல்லாம் காரணம் யாருன்னு 24 மணிநேர காமெடி நிகழ்ச்சி நடத்துற கேபிள் டிவி பசங்க கண்டு பிடிச்சிட்டாங்க.


இப்படி விழுந்தவங்க எல்லாம் யாராம்? கந்துவட்டி, மீட்டர் வட்டின்னு வட்டிக்கு விட்டு ஏழைகளைக் கசக்கிப் பிழிஞ்ச ஆளுங்கதான்.


விவசாயிகளுடைய கடன் தொல்லை, எப்படி எலிக்கறி வரைக் கொண்டு போச்சுன்னு சொல்றாங்க.


கேபிள் டிவிங்க எப்படி மக்களை வளைச்சுப் போட்டுருக்கு, இந்த நிகழ்ச்சி நடத்துறவங்க எப்படி ஷூட் செய்யறாங்க, மெகா சீரியல்கள் எடுக்கப்படும் விதம்னு பல காட்சிகள் உண்மையைச் சொல்லுது.


செல்லால் வரும் தொல்லகள் வேற சொல்லபடுது. அதென்னங்க ஆளாளுக்கு நாலு செல்லு?


பாட்டுங்க படு நீளம். நல்ல கருத்துக்கள் உள்ள பாட்டுக்கள்தான், இல்லேன்னு சொல்லலை.ஆனால்..... நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமா வரும்போது கொஞ்சம் சலிப்பாத்தான் இருக்கு.


கொஞ்சம் பிரச்சார நெடிவேற அடிக்குது.

நம்ம என்.எஸ்.கிருஷ்ணன் இருந்தாரே, அவரோட பேரனும், சுருளிராஜனோட பேரனும் நடிச்சிருக்கறதா(???)அட்டையிலே இருக்கு. என்.எஸ்.கே. பேரன் தெரியுது. ஆனா சு.ரா.பே. யாருன்னு தெரியலை( க்கும்...ரொம்ப முக்கியம்)நாகரீகக்கோமாளி கேபிள் டிவியிலே 4 பசங்க வேலை செய்யறாங்க அதுலெ யாராவேணா இருந்துட்டுப் போட்டும்.

அப்படியே அந்தக் கவர் அட்டையை உத்துப் பார்த்தா நமக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தர்கூட படத்துலே நடிக்கிறாங்கன்னு புரிஞ்சது. அந்தப் புள்ளி 'பரவை'தான்! படம் பூராவும் மதுரையிலே எடுத்திருக்காங்க.


நல்ல படம். கருத்து இருக்கு. ஆனா ஓடுமான்னு கேட்டா 'ம்ம்ஹூஊஊஊஊஊம்'ன்னுதான் சொல்லணும்.நாலு ஃபைட், 4 பாட்டு (அதுவும் எதோ ஒரு '......லாந்து'லேயோ, லெபனான்லேயோ இருக்கணும்) கனவுசீன்னு சொல்லிக்கிட்டுப் படு கவர்ச்சியா( முக்காவாசி அவுத்துப் போட்டுட்டு) இருக்கணும்,நாயகி 'மாடர்ன் ட்ரெஸ்'தான் போட்டுக்கணும் இந்த ஃபார்முலா ஒண்ணுமே இல்லாம இருந்தா...... .....? படம் பூரா புடவைதான்.ச்சீச்சீ........தலை அலங்காரமாவது நல்லா இருக்கா? அதுவும் வெறும் ஒத்தைச் சடைதான்.

கதாநாயகனை அடிச்சுப் போட்டா, அந்த ஆளு திருப்பிக் கையை ஓங்காம, அடி வாங்கிக்கிட்டு மயங்கி விழறார்.இப்ப நீங்களே சொல்லுங்க, இந்த மாதிரிப் படம் ஓடுமா ஓடாதா?


படத்தோட பேர் 'நாகரீகக் கோமாளி'

இயக்கம், இசை எல்லாம் யாருன்னு கேக்கப்போறவங்களுக்காக........

கதை, திரைக்கதை, வசனம், இசை இயக்கம் ராம்ஜி S. பாலன்

41 comments:

சிறில் அலெக்ஸ் said...

படம் நிச்சயம் ஓடும்...


எங்க வீட்டில்.

Nakkiran said...

நானும் இந்த படத்தைப் பற்றி கேள்வி பட்டேன் இன்னும் பார்க்கவில்லை..

துளசி கோபால் said...

வாங்க சிறில் & நக்கீரன்,

அப்ப இன்னும் ரெண்டு பேர் பார்க்கறது
கேரண்ட்டிதான் :-))))

siva gnanamji(#18100882083107547329) said...

இங்கே படம் ஜோரா ஓஓஓஓஓஒடுது--
தியேட்டரை விட்டு

மாணவர் மட்டம் போட்டால் பெற்றோரிடம் சொல்லலாம்;
ட்டீச்சரே மட்டம் போட்டால்.....

துளசி கோபால் said...

சிஜி,

டீச்சர் மட்டம் போட்டால்....

'பேராசிரியர்'கிட்டே சொல்லலாமே:-)))))

கோவி.கண்ணன் said...

//நல்ல படம். கருத்து இருக்கு. ஆனா ஓடுமான்னு கேட்டா //
படம் எப்பவோ தியேட்டரை விட்டு ஓடிவிட்டது :)))

துளசி கோபால் said...

கோவி.க,

//படம் எப்பவோ தியேட்டரை விட்டு ஓடிவிட்டது :)))//


அப்ப தியேட்டர் வரைக்கும் வந்துச்சா? பரவாயில்லையே!

வல்லிசிம்ஹன் said...

துளசி,இப்படி ஒரு படம் வந்ததா?
என்.எஸ்.கே வுக்காகப் பார்த்து இருக்கணுமே.

துளசி கோபால் said...

வல்லி,

பேத்தி வந்த குஷியிலே பேரனைக் கவனிக்கலையா?

இதுலே நடிக்கறது என்.எஸ்.கே பேரனாம்:-)))

நன்மனம் said...

மேடம், நேத்து தான் வந்தது, இந்த வார இறுதி காமெடியா நல்லா போகும்னு பாத்தா, இப்படி பயம் காட்டிட்டீங்களே!!!!

துளசி கோபால் said...

நன்மனம்,

நான் எங்கேங்க பயம் காட்டுனேன்?
படம் கருத்து இருக்கற படம்தான்.
'சிப்ஸி உங்கள் சாய்ஸ்' சீன் எல்லாம்
நல்ல சிரிப்புதாங்க.

தாராளமாப் பார்க்கலாம்.

டிபிஆர்.ஜோசப் said...

படத்தோட பேர் 'நாகரீகக் கோமாளி'/

இந்த மாதிரி படத்துல வர்ற ஹீரோ அடி வாங்கி மயங்கி விழாம வேறென்ன செய்வார்?

ஆனா ஒன்னுங்க நம்ம சுருளிராஜனோட காமடிய மறக்கவே முடியாது. அவர் எங்க பெரிய மாமா வீட்டுக்கு பக்கத்துல தேனாம்பேட்டையில குடியிருந்தார். மனுசன் குடிச்சி குடிச்சே அல்ப வயசுல இறந்துபோய்ட்டார்.

ஒங்கள் பாத்தா பொறாமையா இருக்குங்க. ஜாலியா இந்த மாதிரி படத்தையெல்லாம்கூட விடாம பாத்துக்கிட்டு.. ஹூம்.. அனுபவி ராணி அனுபவி.. எனக்கும் காலம் வராமயா போயிரும்!

துளசி கோபால் said...

சுருளிராஜன் காமெடி சில படங்களிலே நல்லாவே இருக்கும். அதுவும் அந்தக் கமலஹாஸன் & ஸ்ரீதேவி
நடிச்ச ஒருபடத்துலே ( பேர் ஞாபகம் வரலையே, சங்கர்லால்னு நினைவு) நல்லா இருந்தது.

ஜாலி என்ன ஜாலி. குளுருலே வெளியே தலை காட்ட முடியாதே(-:

siva gnanamji(#18100882083107547329) said...

"ரோடு மேலே காரு" படத்துக்கு
எப்ப விமர்சனம் எழுதுவீங்க்?

மணியன் said...

அப்பா, சூரியன் தன்னை விழுங்கிய பாம்பிடமிருந்து வெளிவந்ததுபோல் இருக்கிறதுதமிழ்மணம். ( அட, நிலவின் நிழலா.. ) நீங்களென்னவென்றால் குளிருக்கு இதமாக டி.வியின் சூட்டில் திரைப்படங்களை பார்த்து விமரிசனம் எழுதுகிறீர்கள். கோமா விழுந்திருச்சு - சிரிச்சு,சிரிச்சா ? எனக்குப் புரியவில்லை :(

Unknown said...

yes, nice movie,

நாகை சிவா said...

இந்த படத்தை பத்தி நானும் கேள்வி பட்டேன். பசங்கள அனுப்ப சொல்லி இருக்கேன், பாப்போம்.
நம்ம இப்ப எல்லாம் ஆங்கில படம் தான் பாக்குறது. பாத்துட்டு அதுக்கு விமர்சனம் போட்டாச்சு. எல்லாம் உங்கள பாத்து தான். ஆனா ஒரு தப்பு பண்ணிட்டேன். உங்கள மாதிரி ஒவ்வொரு படத்துக்கும் தனி தனியா ஒரு பதிவு போட்டு இருக்கனும், சரி பரவாயில்ல அடுத்த தடவை பாத்துக்கலாம்.

G.Ragavan said...

என்னது வில்லன் அடிச்சா ஹீரோ கீழ விழுகுறாரா...ஐய்யய்ய....இதென்ன படம். ஷேம் ஷேம் பப்பி ஷேம்.

சரி...ஆஸ்திரியா, இந்தோனேஷியா, ஸ்லோவேகியா, இஸ்தான்புல்லுன்னு போயி பாட்டு எடுத்திருக்காங்களா?

உதித் நாராயணன் தமிழை உதுத்து உதுத்துப் பாடி அதுக்கு ஹீரோ குச்சா குச்சான்னு குதிக்கிறாரா?

இல்ல....காமெடி நடிகர் பொம்பள மாதிரியோ...நடிகை ஆம்பளை மாதிரியோ...வர்ராங்களா?

நீ திருந்தலைன்னா...நான் திருத்துவேன்...நீ சாப்பிடலைன்னா நான் சாப்பிடுவேன் மாதிரி வசனங்கள் இருக்கா?

இப்படியெல்லாம் இல்லாமப் படமெடுத்தா எப்படி? பொழைக்கத் தெரியாதவங்களா இருக்காங்களே!

Thekkikattan|தெகா said...

துள்சிங்க,

பரவாயில்லையே எல்லா படத்தையும் பார்த்துபுடுவீங்க போல. அப்படியே கொஞ்சம் அந்த சிடி எல்லாம் அட்லாண்டா பக்கம் அனுப்பி வையுங்களேன் உங்களுக்கு புண்ணியம போகட்டும்.

ஆன இப்பொ ஒரு படம் பார்த்து இருக்கீங்களே அது மாதிரி நீங்க சும்மா பஜ்ஜி, டீ எல்லாம் போட்டு கொடுத்து பார்க்க சொன்னலும் பார்கமாட்டேன் அமா. ;-)))

வல்லிசிம்ஹன் said...

சரி, கோமா'னா என்ன?மயங்கி விழுந்த்துட்டாங்களா/என்.எஸ்,கே வுக்காகன்னா அவர் பேரு வந்ததுக்காவதுனு சொன்னேன்.
ரோடு மேல காருனு ஒரு படமா?:-))
பேத்தி நல்லா இருக்கா:-)

வசந்தன்(Vasanthan) said...

நான் பார்த்தேன்.
பல இடங்களில் நாடகம் போல இருக்கிறது.
நாலு கோமாவா மூணு கோமாவா என்று தங்களுக்குள் சண்டைபோட்டுவிட்டு தலத்துக்கு விரைந்து போகும் இளைஞர் கூட்டத்துக்கு அங்குப் போன பின்புதான் கோமா என்றால் என்ன என்றே தெரிய வருகிறதாம். முனியம்மாவின் பாட்டுப் பிடித்திருந்தது.

கொஞ்சம் மினக்கெட்டு நல்ல முறையில் தந்திருக்கலாம்.
ஆனால் தெரிந்த முகங்களாக எவருமேயில்லாமல் போட்ட படத்தைத் திரும்ப எடுக்கலாமா என்பது சந்தேகம்தான்.

PRABHU RAJADURAI said...

படத்தோட டைரக்டர், தயாரிப்பாளர் நம்ம பிரண்ட்தான். நடிக்க ஆள் வேணும்னு என்னோட ஜூனியர் கூட போய் நடிச்சாரு...கதாநாயகி புத்தகம் அதிகம் படிப்பாரேமே...அவர் வீட்டு புத்தகமா நடிக்க என்னோட நண்பரோட புத்தகம் போய்ட்டு வந்தது. ஆனா நான் பாக்கிறதுக்குள்ள படம் போய்விட்டது. நீங்க எழுதியிருக்கிறத சொன்னா ரொம்ப ச்ந்தோஷப்படுவாரு!

துளசி கோபால் said...

சிஜி,

நீங்க பாட்டுக்குப் படத்தை எடுத்துட்டு இன்னும் ரிலீஸ் பண்ணாம வச்சிருந்தா எப்படி
விமரிசனம் எழுதறதாம்?
அட்லீஸ்ட் ஃபாரின் ரிலீஸ் இல்லைன்னா உள்ளூர்லே ஒரு பிரிவியூ போடலாமுல்லெ?
இப்பப் பாருங்க நம்ம வல்லிவேற கேக்கறாங்க:-))))

துளசி கோபால் said...

வாங்கமணியன்.

இந்தக் கோமா அநியாய வட்டிக்குக் கடன் கொடுக்கறவங்களுக்கு. தமிழ்மணத்துக்கு
இப்ப ராகு காலம். அதான் பாம்பு விழுங்கப் பார்க்குது:-)))
இன்னும் ஒரே வாரத்துலே நிலமை பழையபடி ஆயிருமுன்னு பாலத்துஜோசியன்
சொல்லிட்டாராம். கிரகச்சாரம் படுத்துதாமே!

துளசி கோபால் said...

டெல்ஃபீன்,

வாங்க. நல்லா இருக்கீங்களா? நல்ல படம்னு நீங்களும் சொல்றீங்க. ஆனா இதுமாதிரிப்படம்
ஓடாதுங்களே. நிஜத்தைப் பார்க்க மக்களுக்குப் பிடிக்கறதில்லை(-:

துளசி கோபால் said...

நாகை சிவா,

நான் ஆங்கிலப்படங்களைப் பார்க்கறதை விட்டு ரொம்ப நாளாச்சு. காமெடின்னா மட்டும்
பார்க்கறேன். அதுவும் கொஞ்சம் டீஸண்டான காமெடி. அச்சுபிச்சுன்னு இப்பெல்லாம்
பார்க்கப் பொறுமை இல்லை.

ஜேம்ஸ் பாண்ட் மொத்த செட்டும் வாங்கி இருக்கு. அதைத்தான் எப்பவாவது ஒவ்வொண்ணாப்
போட்டுப் பார்க்கறது. இளமைக்கால நினைவுகளுக்கு அதுவும் ஒரு கொசுவர்த்தி.

துளசி கோபால் said...

ராகவன்,

அதானே...தமிழ்ப் படங்களுக்கு வேண்டிய மேற்படி லட்சணம் ஒண்ணுகூட இல்லையேப்பா.
உண்மையிலேயே பொழைக்கத்தெரியாத ஆளுங்கதான் போல.

துளசி கோபால் said...

தெ.கா,

என்ன பஜ்ஜி & டீயா...? இந்த ஆசை வேற இருக்கா?

துளசி கோபால் said...

வல்லி,

கோமாலெ விழுவறதுன்னா, குளோரஃபார்ம் ஊசி போட்டு மயங்கி விழ வைச்சுடறதாம்!
சாக மாட்டாங்க. 'ரோடு மேலே காரு' வைப் பத்தி சிஜிதான் சொல்லணும். அவரோட
சொந்தத்தயாரிப்பு அது :-)))) ஆல் இன் ஆல் அவரேதான்:-))))

துளசி கோபால் said...

வசந்தன்,

கருத்து இருந்தாலும், நீங்க சொல்றதுபோல கொஞ்சம் மெனெக்கெட்டு இருந்தால் போட்ட காசையாவது எடுத்துருக்க
வாய்ப்புக் கிடைச்சிருக்கும்.

துளசி கோபால் said...

பிரபு,

வாங்க வாங்க. நல்லா இருக்கீங்களா? உங்க ஜூனியர் கோர்ட் சீன்லே இருந்தாரா?
நல்ல கருத்துள்ள படம்தான். இன்னும் கொஞ்சம் கவனமா நல்லா எடுத்திருக்கலாம்.
உங்க நண்பர் ராம்ஜி பாலன்கிட்டே சொல்லுங்க. இப்பெல்லாம் உள்ளெ இருக்கற சரக்கை விட
பேக்கிங்தான் நல்லா இருக்கணுமாமே.

கோபால், போனவாரம் ச்சீனா போயிட்டு வந்தப்ப அங்கே அன்பளிப்பாக் கிடைச்சதுன்னு
ஒரு பரிசு கொண்டு வந்திருந்தார். லெதர் மாதிரி ஒரு கேரி பேக். உள்ளெ அழகான
பெரிய பெட்டி. அதோட பித்தளைக் கேட்ச் அருமை. திறந்து பார்த்தா உள்ளே
மஞ்சள் கலர் ஸாட்டின், தெர்மாகோல் அச்சுக்குள்ளெ அழகா
உக்கார்ந்திருக்கற ரெண்டு பீங்கான் கேனிஸ்ட்டர். அதுக்குள்ளெ க்ரீன் டீ லீவ்ஸ்.

எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, அந்தப் பெட்டியை எடுத்து வச்சுக்கிட்டேன்.
அருமையான நகைப்பெட்டி:-)))))

இதுதான் காலம்.

Hariharan # 03985177737685368452 said...

துளசியக்கா,

நீங்க சொல்லித்தான் கை வந்த கலையும், பாரிஜாதமும் பார்த்தேன். அட்லீஸ்ட் எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கிற மிருகத்தை இந்தப் படங்கள் எழுப்பவில்லை.

நாகரீகக் கோமாளி ட்ரை ப்ண்ணுகிறேன் இன்று.

என்ன நம்ம விடியோ லைப்ரரிக்காரர் ஏற்கனவே என் மகள்களுக்கு காட்டுவதற்காக சாமி, புராணப் படங்கள் (தெய்வ பக்தி) கேட்டப்போவே இந்தக் காலத்திலயும் "லூசு" இருக்கத்தான் செய்கிறது என்று ஸ்பெஷல் லுக் விட்டார்.

நாகரீக கோமாளி கேட்டா அவருக்கு நான் "லூசுதான்"னு கன்பர்ம் ஆயிடும்.

துளசி கோபால் said...

ஹரிஹரன்,

இந்த 'லுக்'குக்கெல்லாம் பயந்தா முடியுமா? நம்ம வீரத்தையும், மனோ தைரியத்தையும் காமிக்கும் காலம் வந்துருச்சுன்னு நினைச்சுக்கணும்.

நானும் சாமிப் படங்கள் எல்லாம் மகளுக்குக் காமிச்சேன். பலன்?

இப்ப சாமின்னு ஒண்ணு இல்லைன்னு சொல்றாள். Atheist.

பாரதிய நவீன இளவரசன் said...

i wholeheartedly welcome Nagariga Komali to set a trend in the tamil film industry.... The director could be excused for the attempted ideological indoctrination and for the lack of professional touch on the technical side, as he deserves kudos for this bold venture. A low budget, new faces, strong message, a honest narration and to cap it all, decent portrayal of woman/heroine all makes the film worth watching.

பாரதிய நவீன இளவரசன் said...

i wholeheartedly welcome Nagariga Komali to set a trend in the tamil film industry.... The director could be excused for the attempted ideological indoctrination and for the lack of professional touch on the technical side, as he deserves kudos for this bold venture. A low budget, new faces, strong message, a honest narration and to cap it all, decent portrayal of woman/heroine all makes the film worth watching.

துளசி கோபால் said...

வாங்க நவீன இளவரசரே.

மொதமுறையா வந்துருக்கீங்க போல!
நல்லா இருக்கீங்களா?

தமிழ் சினிமா உலகில் அதுதாங்க ஒரு சாபம். நல்ல கதை அம்சம் இருந்தாலும், நல்ல விஷயம் சொன்னாலும் மக்களுக்குப் பிடிக்காதாம்(-:

எங்கெபோய் முட்டிக்க?

பாரதிய நவீன இளவரசன் said...

by the way, this is not the first time i comment on your blog, i have visited on more occassions....and will continue to ....

right now, i face some problems in my computer, so i could not post any blog....anyhow, hoping to blog after few weeks....

there was a comments long back during my school days - Definition for Good Film : films that r screened only few occassions and viewed only be few people...

துளசி கோபால் said...

நவீன இளவரசரே,

கட்டாயம் அடிக்கடி வாங்க. நாந்தான் தப்பா நினைச்சுக்கிட்டேன் போல நீங்க இப்பத்தான் மொதல்முறையா வந்தீங்கன்னு(-:

'நல்லதுக்குக் காலமில்லை, நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
சொல்லப்போனால் வெட்கக்கேடு
உலகம் பலவிதம்'னு ஒரு சினிமாப்பாட்டு வந்துருக்கு.

என்ன செய்யறது சொல்லுங்க?

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ.இப்படி நடக்கிறதா மதுரையிலே!
நான் என்னவோ சீரியல் பாத்து அந்த ஸ்டேஜுக்குப் போயிட்டாங்களோனு நினைச்சேன்.

துளசி கோபால் said...

வல்லி,

//என்னவோ சீரியல் பாத்து அந்த ஸ்டேஜுக்குப் ....//

இதுதான் நல்ல ஜோக். இப்ப வர்ற சீரியல்கள் இப்படித்தான் இருக்கு:-))))

துளசி கோபால் said...

சவுந்தர்,

சுட்டிகளுக்கும், வருகைக்கும் நன்றிங்க.