Friday, July 07, 2006

நியூஸிலாந்து பகுதி 51

மவோரி இன மக்களை இனியும் வதைக்கிறது ஞாயமில்லை உணர்ந்த அரசு மவோரி கவுன்சில் ஒண்ணு 1961 ல் நிறுவுச்சு.நியூஸிலாந்து மக்களும், எங்கியோ இருக்கற பிரிட்டனை விட, இப்போ பஸிபிக் பிரதேசத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒண்ணுதான் நம்ம நாடுன்னு உறுதியா இருந்தாங்க.


அக்கம்பக்கத்து நாடுகளான மேற்கு சமோவா, டோங்காவிலே இருந்தெல்லாம் ஆளுங்க வந்து குடியேற ஆரம்பிச்சாங்க.தொலைக்காட்சியும் வந்துச்சு. ஆம்பிளைங்க செய்யற அதே வேலையைச் செய்யற பொம்பிளைங்களுக்கு எல்லாநாட்டுலேயும் அப்ப சம்பளம் கொறைச்சலாத்தான் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. அதை மாத்தி ஒரு வேலைக்குஒரு சம்பளம். அது ஆணா இருந்தாலும் சரி, பெண்ணா இருந்தாலும் சரின்னு சட்டம் வந்துச்சு. குறைஞ்சபட்சக் கூலிஇவ்வளவு...ன்னு நிர்ணயம் செஞ்சதும் அப்பதான்.


ஆனா இங்கே மறுபடி ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தணும். உலகத்துலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய முதல்நாடுன்ற பெருமை நியூஸிக்குத்தான். இதேபோல வயதான முதியவர்களுக்கு முதல்முதலா ஓய்வு ஊதியம் கொடுக்க ஆரம்பிச்ச நாடும் இதுதான்.


கவர்னர் ஜெனரல் பதவி, நாட்டோட தலைமை நீதிபதி ன்னு பெரிய பதவிகளில் பெண்கள் இருந்ததும் இந்த நாட்டுலேதான்.பெண்களுக்குச் சம உரிமை தந்து ஆண், பெண் இருவருமே சமம் என்ற நிலையைக் கொண்டுவந்ததும் இங்கேதான்.


இதுவரை இங்கிலாந்து போலவே இருந்த பவுண்ட், ஷில்லிங், பென்ஸ் எல்லாம் மாறி புதுசா டாலர், செண்ட்ன்னு காசை மாத்துனாங்க.


1970களில் கம்போடியா, வியட்நாம், லாவோஸ் இங்கெல்லாம் இருந்து அகதிகள் போக இடமில்லாம தவிச்சப்ப, இங்கத்து அரசாங்கமும் பலருக்கு இடம் கொடுத்துச்சு. 1973லே கச்சா எண்ணெய் விலை உலக மார்கெட்டுலே பயங்கரமா ஏறிடுச்சு. அதன் பலனா இங்கே வேலை இல்லாத நிலை.

நிறையப்பேர் அண்டைநாடான ஆஸ்தராலியாவுக்குப்வேலை தேடிப் போனாங்க.


வியட்நாம் வார் நடந்துக்கிட்டு இருந்துச்சு. இதெல்லாம் நியூஸி மக்களுக்கு, குறிப்பா இளவயதுக்காரங்களுக்குப் பிடிக்கலை.


இங்கே இப்படி இருக்கும்போது, உலகத்தோட அடுத்த பாதியிலே அணுகுண்டு, அணுசக்தின்னு ஒரே பேச்சு.பிரான்ஸ்,இங்கிலாந்து எல்லாம் அவுங்கவுங்க செய்யற அணு ஆயுதப் பரிசோதனைகளை , இங்கே பசிபிக் கடலோட தென் பகுதியிலே வந்து வெடிச்சுப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. 'என்னாத்துக்கு இங்கே வந்து பரிசோதனை செய்றீங்க'ன்னு இங்கத்து மக்கள் கேட்டதுக்கு, ப்ரான்ஸ் சொல்லுச்சாம், 'அது ஒண்ணும் ஆபத்தானது இல்லை'ன்னு.


'ம்ம்ம்ம்ம்... அப்படியா? அப்ப உங்க ஊர்லே பாரிஸ் நகரத்துக்குப் பக்கத்துலேயே பரிசோதிச்சுக்க வேண்டியதுதானே?'


1973 லே முருரோஆ Mururoa லே ப்ரெஞ்சுக்காரர்கள் பரிசோதனை செய்யறாங்கன்னு கேள்விப்பட்டு, அப்ப இருந்த நியூஸிப் பிரதமர் நார்மன் கிர்க், ரெண்டு கடற்படைக் கப்பலை அனுப்பி என்ன நடக்குதுன்னு பார்க்கச் சொன்னார்.மக்கள் இந்த அணு ஆயுதத்துக்கு பலத்த எதிர்ப்பு தெரிவிச்சாங்க.


Whina Cooper ன்ற 80 வயசு மவோரிப் பெண்மணி, 'போனதெல்லாம் போட்டும், இனிமேலாவது மவோரி மக்களுக்கு பழையஅந்தஸ்த்தை மீட்டுக் கொடுக்கணுமு'ன்னு ஒரு குழுவை அமைச்சாங்க. Te Roopu o te Matakite ( The Peoplewith a Vision)ன்னு பேர். மவோரி நிலங்களை எடுத்துக்கிட்டதை எதிர்த்து ஒரு பேரணி நடத்துனாங்க.



அரசாங்கம் இந்த முறை அவுங்க குறைகளை கவனமாக் கேட்டுச்சு. வைட்டாங்கி ஒப்பந்தம் சரியா எழுதப்படலை.மவோரிகளை ஏமாத்திட்டாங்கன்னு இருந்த மவோரி மக்களுக்கு ஆதரவா, 'சரி. ரொம்ப அழுவாதீங்க. ஒரு ட்ரிப்யூனல்போட்டுறலாம். நில உரிமை, மீன் பிடிக்கற உரிமை, உங்க மொழி, சம்பிரதாயமான மற்ற பழக்க வழக்கங்கள் இதெல்லாம்தீர விசாரிச்சு, பரிசீலனை செய்யறோமு' ன்னு சொல்லுச்சு.அப்படி உருவானதுதான் இந்த வைட்டாங்கி ட்ரிப்யூனல் 1975லே.


பிள்ளைகளுக்கு மவோரி மொழியைச் சொல்லித் தர்றதுக்காக 'கொஹங்கா ரிஓ' ( Kohanga Rio - Language Nest) என்றஅமைப்பு உருவாச்சு.

பள்ளிக்கூடங்களிலே ச்சின்னச்சின்ன மவோரி வார்த்தைகள், ஒண்ணுலே இருந்து பத்துவரை மவோரியிலே சொல்றதுன்னு ஆரம்பம் ஆச்சு.


1979லே இன்னும் பல மவோரிகள் சேர்ந்து புதுசா ஒரு மவோரிக் கட்சியையும் உருவாக்குனாங்க. முக்கியமான ஊர்களிலே உள்ளூர் மவோரிகளுக்காக மராய் கட்டுனாங்க. வெளிநாட்டுச் சுற்றுலா ஆளுங்களுக்கு நம்ம கலாச்சாரத்தைக் காமிக்கிற ஒரு இடமாத்தான் இருக்கட்டுமே. நிறைய இளவயசு மவோரிகளுக்கே தங்களுடைய மூதாதையர்களோட பழக்கவழக்கங்கள் எல்லாம் புரிபடாம இருந்துச்சு.


மராய்ன்னு சொல்லுறது மவோரிகளுக்கு ஒரு முக்கியமான இடம். இதுவும் ஃபாரெனூயி போல ஒருவிதமான மீட்டிங் ப்ளேஸ்தான். ஆனா இந்த ஃபாரெனூயி இப்பெல்லாம் இல்லாமப் போயிருச்சு. அந்தக் காலத்துலே அதாவது இங்கே மவோரிகள் மட்டுமே வாழ்ந்திருந்த காலக்கட்டத்துலே ஒவ்வொரு குழுவுக்கும் அவுங்க கூடிப்பேசற இடமா, சுருக்கமாச்சொன்னா அவுங்களோட கம்யூனிட்டி ஹாலா இருந்ததுதான் இந்த ஃபாரெனூயி .


அதுக்கப்புறம் இங்கே வெள்ளைக்காரர்கள் வந்து குடியேறி, இந்த மக்களோட இரண்டறக் கலந்து(!) அந்த மவோரி இன மக்களும் இவுங்க மதத்தையும், நாகரீகத்தையும் பின்பற்றத் தொடங்கினவுடனே ஃபாரெனூயி மறைஞ்சேபோச்சு. ஆனா, கொஞ்சநாள் ஆனபிறகு அதாவது புது சொந்தம் எல்லாம் கொஞ்சம் பழசானபிறகு இந்த மவோரி இன மக்கள்,அடடா, நம்ம குழந்தைகளுக்கு எங்கே இந்தக் கலாச்சாரத்தைப் பற்றிய விவரம் இல்லாமல் அடியோடு மறைஞ்சிருமோன்ற விசாரத்துலே உருவானதுதான் இந்த மராய்.


'நம்ம கலாச்சாரத்தை இப்ப விட்டோமுன்னா அப்புறம் மெதுமெதுவா நம்ம இனமே அழிஞ்சுரும். அதைக் காப்பாத்தறது இனி உங்க பொறுப்பு.' அந்தப்புள்ளைங்களைக் கூட்டிவச்சு விளக்குனாங்க.



இதைக் கட்டுறதுக்கும், உள்ளே நுழையறதுக்கும், இங்கே தங்கறதுக்கும் பலவிதமான விதி முறைகள் இருக்கு.அதையெல்லாம் கட்டாயமாக் கடைப்பிடிக்கணுமுன்னும் சொல்லி வச்சாங்க.


அடுத்த வகுப்புலே மராய் விவரங்களைப் பார்க்கலாம்.

14 comments:

said...

//ஆனா இங்கே மறுபடி ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தணும். உலகத்துலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய முதல்நாடுன்ற பெருமை நியூஸிக்குத்தான். இதேபோல வயதான முதியவர்களுக்கு முதல்முதலா ஓய்வு ஊதியம் கொடுக்க ஆரம்பிச்ச நாடும் இதுதான்.//

தங்கள் நாட்டு வரலாற்றை தமிழில் கற்றுக் கொடுக்க ஒரு பெண் டீச்சரையும் தந்த நாடு. இதை விட்டுட்டீங்களே.

//'நம்ம கலாச்சாரத்தை இப்ப விட்டோமுன்னா அப்புறம் மெதுமெதுவா நம்ம இனமே அழிஞ்சுரும். அதைக் காப்பாத்தறது இனி உங்க பொறுப்பு.' அந்தப்புள்ளைங்களைக் கூட்டிவச்சு விளக்குனாங்க.//

உடனே அந்த பிள்ளைகளும் வலைப்பூ எல்லாம் தொடங்கி நீ வட மவோரி, நான் தென் மவோரின்னு எல்லாம் அடிச்சுக்கிட்டாங்களா? அதனால அவங்க கலாச்சாரம் அழியாம இருக்கா? :)

said...

சமீப காலத்திற்கு வந்திட்டிங்க.இனி
மெதுவா விளக்கமா எழுதலாமே

said...

கொத்ஸ்,
மவோரி பாஷைக்குத் தனி எழுத்து கிடையாது. இங்கிலீஷ் எழுத்துக்களை பயன்படுத்தறதாலே
ப்ளொக்தேசத்துலேதான் வலைப்பதிவு எழுதணும். எவ்வளோபேர் படிப்பாங்க?

//வட மவோரி, நான் தென் மவோரின்னு எல்லாம் ...//

ஐய்யோ, இதைவேற சொல்லிக்கொடுத்துறாதீங்க.... ஆபத்தா ஆயிரப்போகுது.

said...

சிஜி,

அப்டீங்கறீங்க? 1988க்கு அப்புறம் விளக்கமா எழுதுனாப்போகுது.:-)))

said...

'நம்ம கலாச்சாரத்தை இப்ப விட்டோமுன்னா அப்புறம் மெதுமெதுவா நம்ம இனமே அழிஞ்சுரும். அதைக் காப்பாத்தறது இனி உங்க பொறுப்பு.' அந்தப்புள்ளைங்களைக் கூட்டிவச்சு விளக்குனாங்க.//

இந்த மாதிரி இங்கயும் செய்யணும். இல்லன்னா கொஞ்ச நாளைக்குள்ள (அதாவது இருபது இருபத்தஞ்சு வருசத்துக்குள்ள) இந்திய கலாச்சாரமா அது என்னப்பான்னு கேட்டாலும் கேக்குங்க நம்ம பிள்ளைங்க..

said...

//ப்ளொக்தேசத்துலேதான் வலைப்பதிவு எழுதணும். எவ்வளோபேர் படிப்பாங்க?//

:)))

said...

' முதியவர்களுக்கு முதல்முதலா "//
ஹௌஸ்வைஃபுக்கும் உண்டா?

ஓய்வு ஊதியம்?
தங்க நாட்டைப் பத்தி எழுதற

பெண்ணைப் பற்றித் தெரியுமா.
88 லே ஏதொ இருக்குனு தெரியறது. சிக்கிரம் போடுங்க..

said...

வாங்க டிபிஆர்ஜோ.

அதான் தமிழை 'செம்மொழி' ஆக்கி இருக்காங்களே.
அதுவுமில்லாமல் நம்ம தமிழ் சினிமா உலகம் நம்ம கலாச்சாரத்தைக் காப்பாத்தாதா? :-)))

said...

நன்றி மணியன்

said...

மானு,

ஒரு முக்கியமான சரித்திர நிகழ்வு நடந்தது 1988. அதனாலெதான் அப்படிச் சொன்னேன்.

அப்புறம் ஹெளவுஸ் ஒய்ஃப்க்கு ஏதுங்க ஓய்வு? அது இருந்தாத்தானே ஓய்வூதியம் கேக்கலாம்? :-)))

இங்கே 65 வயசுக்கப்புறம் 'New Zealand Superannuation' உண்டு. இதுலே ஆண் பெண் எல்லாரும்
ஒண்ணுபோல.

said...

பண்பாடுகளைக் காப்பாற்றுவது என்பது மிகக் கடினம். மாறுதல் இல்லாததே கிடையாது. எகிப்திய, ரோமானியப் பண்பாடுகளும் வழிபாட்டு முறைகளும் கிரேக்கர்களில் செழிப்பு மிகுந்த அறிவும் கலையும் இன்று இல்லையே. ஆனாலும் அவைகளை அருங்காட்டியகத்தில்தானே காண்கிறோம். இந்த நிலை எங்கும் வரும். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில. கால வகையினானே.

said...

1988
1988
1988
1988
1988
ஒரு மாபெரும் சரித்திர ட்டீச்சர்
நியூஸீல்ந்திற்கு புலம்பெயர்ந்தாங்க
அப்படித்தானே?

said...

ராகவன்,

நீங்க சொல்றது சரின்னாலும்,குறைஞ்சபட்சம் இது எப்படி இருக்குமுன்னு பிற்காலச் சந்ததிகள்
விஷூவலா விலாவரியாத் தெரிஞ்சுக்க முடியுங்கற அளவுக்கு விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் எல்லாம்
இப்ப இருக்கேப்பா.

முந்தி இப்படி வசதிகள் இல்லாததாலே தெரியற கொஞ்சூண்டை வச்சு பாக்கியைக் கற்பனைதானே
பண்ணிக்க முடியுது.

said...

சிஜி,

என்னங்க இப்படி போட்டுத்தள்ளீட்டீங்க?:-)))