Monday, October 31, 2005

தீபாவளி வாழ்த்துக்கள்!!!!

சக வலைஞர்களே, வாசகர்களே, ரசிகப் பெருமக்களேன்னு ஆரம்பிக்கலாமுன்னு பார்த்தாஎங்கியோ போய் உக்காந்துக்கிட்டுச் சொல்றதுபோல இருக்கே(-:


சரி சரி, எதுக்கு இந்தக் கஷ்டமெல்லாம்? நம்ம வழியிலேயே சொல்லிறலாம்.
எல்லோருக்கும் என் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.


கோபாலும் தீபாவளி வாழ்த்துக்களை, அவர்சார்பா உங்களுக்குச் சொல்லும்படிதுண்டுக்கடுதாசியிலே எழுதிக்காமிச்சார்.


ஏன், ஏன் ஏன்? எழுதிக்காமிக்கணும்? சொல்லமாட்டாராம்மா?அது எப்படிங்க?
தீபாவ்ளி ஸ்வீட்டுன்னு, மேங்கோ பர்ஃபியா இல்லே அல்வாவான்னு தெரியாம ரெண்டுக்கும் இடைப்பட்ட சாதனம் ஒண்ணு செஞ்சேனில்லையா, அதை 'டேஸ்ட்'செஞ்சப்ப இருந்து வாயைத்திறக்காம, சத்தம்கித்தம் போடாம 'ச்சுப்'னு இருக்கார்.எல்லாத்துக்கும் செய்கை, இல்லேன்னா துண்டுக்கடுதாசின்னு ஆகிப்போச்சு.


இப்படின்னு தெரிஞ்சிருந்தா போனவாரமே தீபாவளி ஸ்வீட் செஞ்சுருக்கலாம்(-:


'guy-fawkes'அண்ணன் புண்ணியத்துலே பட்டாஸ் கிடைச்சுருது. டும் டம்னுவெடிக்கறதுக்குக் கிடைக்காது. ஒளிமட்டும்தான். ஒலிக்குத் தடா.
சாஸ்திரத்துக்கு(?) கொஞ்சம் கம்பி மத்தாப்பூக் கொளுத்தித் தீபாவளியை முடிச்சுக்கவேண்டியதுதான்.


அதான் டில்லியிலே, நம்ம அருணா சொன்னதுபோல 'தீபாவெடி' வெடிச்சுட்டாங்கல்லே(-:


இந்த வருசம் சந்தோஷமாக் கொண்டாட முடியாம மனசுக்குக் கஷ்டம் வர்றமாதிரிசில பல சம்பவங்கள் நடந்துருச்சு. இயற்கை அழிவு ஒரு பக்கமுன்னா, மனுஷங்களோடஅலட்சியத்தினாலும், கவனக்குறைவாலும், மத நல்லிணக்கம் இல்லாம மனுஷனைமனுஷனே எதிரியாப் பாவிக்கிற மனோவியாதியாலேயும் விரும்பத்தகாத பல நிகழ்வுகள்நடந்துக்கிட்டு இருக்கு.


இந்தக் கெட்டெண்ணங்கள் எல்லாம் ஒழிஞ்சு, நல்ல ஒரு புதிய சிந்தனையுள்ள உலகம்எல்லாருக்கும் கிடைக்கணும். இதுதான் நான் மனமார வேண்டறது. பண்டிகைக் காலத்தில்மனவெறுப்புங்களையெல்லாம் துடைச்சுப் போட்டுட்டு சந்தோஷமா இருக்கலாம், இருக்கமுடியும்,இருக்கணும்.


எல்லோருக்கும் தீபாவளி, ரமலான் நல்வாழ்த்துக்கள்.


என்றும் அன்புடன்,

துளசி.

19 comments:

said...

அதே அதே. உங்களுக்கும் அதே.
நன்றி ராஜ்

said...

தீபாவளி நல் வாழ்த்து

said...

தீபாவளி நல்வாழ்த்துகள்.

said...

இந்து சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உளம்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

தீபத்திருநாளில் உங்கள் உள்ளங்களும் இல்லங்களும் இறைவன் கருணை ஒளியில் நிரம்புவதாக!

said...

thulasi periyamma theepavali valthukal

said...

ச்சின்னப்பொண்ணு சிநேகிதி,

நலமா? தீபாவளி வாழ்த்துக்கு நன்றீ.
படிப்பு எப்படிப் போகுது?

ஹேப்பி தீபாவளி!

said...

என்னார், குமரன், விஜி,

வாழ்த்துக்கு நன்றி.

விஷ் யூ த சேம்.

ஜோ,
அருமையாச் சொல்லியிருக்கீங்க. நன்றி.

said...

உங்கள் குடும்பத்தார்க்கும், அனைத்து வலையாளர்களுக்கும், என் குடும்பத்தின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

உங்களுக்கு ஒரு கண்டனம் - சரி, கோபால் சார் வாயை மூடுவதற்கு ஒரு சாதனம் கண்டுபிடிச்சீங்க, அதை இப்படி விளம்பரமும் பண்ணனுமா? உங்கள் பதிவுகளைப் படிக்கும் கோடானு கோடி (சரி சரி - இதெல்லாம் சகஜமப்பா) ரசிகைகளுக்கு இன்ஸ்பிரேஷன் உண்டுபண்ணி, அவர்களின் அப்பாவிக் கணவர்களின் வாயை(யும்) அடைக்க தூண்டிவிட்டுவிட்டீர்களே!

said...

சுரேஷ்,

'அப்பாவிக்கணவர்களின்' சார்பாகக் குரல் குடுத்ததுக்கு இன்னும் யாரும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கலை பாருங்க.

இப்படியா ஆளுங்க ஒரேடியா 'அப்பாவிகளா' இருப்பாங்க?:-)))

சரி சரி, நானே அவர்கள் சார்பா நன்றி சொல்லிக்கிறேன்.

said...

தீபாவளி வாழ்த்துகள் :-)

said...

கிறிஸ்,

வாழ்த்துக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்கள்.

குழந்தை எப்படி இருக்கா? நலமா?
அனுவைக் கேட்டதாச் சொல்லுங்க.

said...

பாலா,

இதோ ஊருக்கு முந்தி நான் கொண்டாட ஆரம்பிச்சாச்சு:-)))

அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

said...

பிரியா,

நன்றி.

எங்கள் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்

said...

யக்கோவ் தீபாவளி வாழ்த்துக்கள்!!! கூடவே இதற்கும் http://dinamalar.com/2005oct01/flash.asp சேர்த்து :-)

said...

குசும்ப்ஸ்,

ரொம்ப தேங்க்ஸ் வாழ்த்துக்களுக்கு. உங்களுக்கும் ஹேப்பி தீவாளி சொல்லிக்கறோம்.

சுட்டி கொடுத்ததுக்கும் நன்றி, ஆடி கழிஞ்ச அஞ்சாநாள் கோழி அடிச்ச கதைன்னாலும்:-)))))

said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

அன்புடன்,
கோ.இராகவன்

said...

ராகவன்,

இந்த முறை 'வலி' இல்லாம 'வளி' கொண்டாடினீங்களா?

said...

அக்கா,
உங்களுக்கும், உங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

said...

// ராகவன்,

இந்த முறை 'வலி' இல்லாம 'வளி' கொண்டாடினீங்களா? //

ஆமாம். முன்வலி எதுவும் இல்லை. ஆனால் வளிக்குப் பின்வலி இருந்தது உண்மைதான். அதைப் பத்தியும் ஒரு பதிவு போடனும். எழுதீட்டு இருக்கேன். முடிஞ்சதும் போடுறேன்.