இது தீபாவளி ஸ்பெஷல்----1
தங்கச்சரிகைச் சேலை.........
தங்கச் சரிகைச் சேலை எங்கும் பளபளக்க..........
தனியாக வந்தேனைய்யா.......
வந்து நின்று சபைக்கு...வந்தனம் தந்தேனய்யா......
இதோ ஆரம்பிச்சாச்சு தெருக்கூத்து. கட்டியக்கார(ன்)ர் வந்து விளக்கிட்டார் கதை என்னான்னு.
அயோத்தியாவுலே மக்கள் ஆடிப்பாடிக்கிட்டு இருக்காங்க. ரெண்டுபேர் வந்து ராமனையையும்சீதையையும் பத்திப் பேசிக்கிட்டு இருக்காங்க. அப்ப இதோ ராமரே வந்துட்டார். நல்ல தலை அலங்காரம்.சிவந்த உடுப்பு, காலிலே சலங்கை. தகதிமி தகதிமி தங்கத்தோம்....ஆடறார். அடுத்த நிமிஷம் சீதையும்வந்தாச்சு. தங்கச் சரிகைபோட்டச் சிகப்புச்சேலை என்ன, நகை நட்டென்ன, இடுப்பிலே ஒட்டியாணமென்ன,தலைக்குக் கிரீடம் என்ன, நீண்ட கூந்தலென்ன(இடுப்புக்குக்கீழேவரை) சலங்கையும் கொலுசும்போட்டகாலென்ன, ஒரே ஒருகாதில் மாட்டியிருந்த கம்மலென்ன ...ஆஹா ஆஹா ஆஹா....
நல்ல களைபொருந்திய அம்சமான முகம்.பையன் யாருன்னே பிடிபடலை. வேசம் கலைஞ்சாட்டிப் பார்க்கணும்.ராமனை விட்டுட்டு அந்த கதைபேசும் ரெண்டுபேரோட பயங்கர ஆட்டம் போடறாங்க சீதா. கொஞ்சநேரத்துலே ராமரும்சேர்ந்து ஆடிட்டு ஓய்வா உக்காந்துக்கறார். ஆனா சீதாவோட ஆட்டம்தான் தூள்!
ரெண்டுபேர் நாட்டுநடப்பையெல்லாம் சொல்லிக்கிட்டுப் பேசறப்போ ராவணனும் வந்துட்டார். அச்சு அசலா ராமனோட அலங்காரமேதான். ஆனா நிறம் மட்டும் வேற! நீலக்கலர். மீசையும் கொஞ்சம் பெருசு!
ராமாயணம்தான். மேடையைச் சுற்றி ஆடி ஆடி சண்டைபோட்டு ராவணனை சம்ஹாரம் செஞ்சுட்டார் ராமன்.
இங்கே கிறைஸ்ட்சர்ச் நகரத்துலே மொதல்முறையா தெருக்கூத்து.
அபி, யே லாஸ்ட் ஐட்டம் ஏக் ஃபன்னி தெர்க்கூத். லடுக்கன்லோக் பஹூத் கோஷிஷ்கர்க்கி ஆப்க்கோ ஹஸானாசாஹ்த்ரா.....
மேடையிலேயே நாலுபேர் ஓரமா உக்காந்து 'டோலக்,ஜால்ரா, பின்பாட்டுன்னு அமர்க்களப்படுத்தறாங்க.
நடுநடுவில் பத்து , இருபது நாற்பது நூறு,முன்னூறு ன்னு டாலர்ங்க சன்மானம் கிடைக்குது. பேரை அறிவிச்சும், எங்கெயிருந்து வந்தவுங்கன்னு சொல்லியும் காசு சேர்ந்துக்கிட்டே இருக்கு. மொய் வந்துக்கிட்டு இருக்கு:-))
காசு சேர்றதும் நல்லதுக்குத்தான். இன்னிக்கு கிட்டத்தட்ட 400 பேருக்கு இலவசமா சாப்பாடு பந்தி நடந்துருக்கு.இதுல்லாம இனியும் விசேஷங்கள் வருசம் முழுக்க நடக்கத்தான் போகுது.
அதுசரி. எதுக்காக இந்த விழான்னு யாருமே கேக்கலியே? சரி சரி நானே சொல்லிடறேன். சொல்லாட்டா விடவாபோறீங்க?:-))
எல்லாம் 'திவாளி'தான். இங்கே தீபாவளி சீஸன் ஆரம்பிச்சாச்சு! இந்தவருசம் ஒம்போது தடவை கொண்டாடணும்.
எல்லாரையும் முந்திக்கிட்டு அக்டோபர் 22 சனிக்கிழமை ஃபிஜி சவுத் இந்தியன் சன்மார்க்கசங்கம் ( நம்ம குப்புசாமிபூஜை நடத்துவாங்களே, அவுங்கதான்) திவாளி கொண்டாடியாச்சு.
மொதல்லே ஒருமணிநேரம் பூஜை. அதுக்கப்புறம் 40 நிமிஷம் கலைநிகழ்ச்சி. அதுக்கப்புறம் சாப்பாடு. மெனு என்னான்னுசொல்லமாட்டேன். கண்ணு வைக்கிறாங்க சிலர்:-) அதுக்கப்புறம் இன்னும் சில நடனங்கள். அப்புறமாத்தான் தெர்க்கூத்.தமிழே தெரியாதவங்கன்னாலும் பாதிக்குப்பாதி கலைநிகழ்ச்சியிலும் தமிழ்ப்பாட்டுக்குத்தான் ஆடுனது.
என்னதவம் செய்தனை..... யசோதா.....
ரசிகா ரசிகா ரசிக ரசிக ரசிகா....
நெஞ்சினிலே நெஞ்சினிலே....(ஹிந்தி வெர்ஷன்)மதுபன்மே ...............ராதா கைசே ந ஜலே ராதா கைசே ந ஜலே (லகான் படப்பாட்டு)
ஏ.ஆர்.ரெஹ்மான் பாட்டுங்க இப்படி ரெண்டு மூணு, நாலு மொழிகளிலே வந்து நமக்கெல்லாம் நல்லது(!)செஞ்சுக்கிட்டு இருக்கு பாருங்க.
அப்புறம் ஒரு தில்லானா....
ச்சின்னக் குழந்தைகள் சேர்ந்து 'தர்ஷன் தோ கனுஷ்யாம்நாத் மோரே அக்கியான் ப்யாஸி...'பாட்டுக்குஅருமையா ஆடுச்சுங்க. நடுவிலே ஒரு குட்டிப் பாப்பா கையிலே குழலோட கிருஷ்ணனா. செல்லம்போலஇருந்தாங்க எல்லாரும்.
நிகழ்ச்சி முடியறப்பயே ராத்திரி பதினொன்னரை ஆயிருச்சு. நம்ம தெருவிலேயே இருக்கற ஹால்ன்றதாலேரெண்டு நிமிஷத்துலே வீட்டுக்கு வந்துட்டோம்.
இது தீபாவளி சீரி(ய)ஸ். ஒரேடியாச் சொல்லி உங்க வயித்தெரிச்சலை(மட்டும்) கொட்டிக்க விரும்பாததால் கொஞ்சம்கொஞ்சமாச் சொல்லி எல்லா எரிச்சலையும் கொட்டிக்கிறதா முடிவு:-)))))
இன்னும் வரும்
---------------------
தீபாவளி எப்பன்றதுலே சில பேருக்கு... சரி, ஒருத்தருக்குச் சந்தேகம் இருக்கு. அவுங்களுக்கு இந்தப் பதிவைசமர்ப்பணம் செய்யறேன். தீபாவளி, நம்ம வீட்டுலே இருக்கற காலண்டர்படி நவம்பர் 1.
Thursday, October 27, 2005
தங்கச்சரிகைச் சேலை.........
Posted by துளசி கோபால் at 10/27/2005 01:38:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
சாவித்திரியில் ஆரம்பித்து ரஹ்மான் வரை ஒரே பதிவில்-- துளசி ஸ்பெஷல்.
நவராத்திரி படம் பார்த்தீர்களா?
தீபாவளி அன்று வேலை நாள்.no party shoty-
பத்மா,
நவராத்திரி படம் பார்த்தேன்.
இங்கேயும் வேலை நாள்தான். கோபால் லீவு போடறேன்னு சொல்லியிருக்கார். உண்மைக்குமான்னு அன்னைக்குத்தான் தெரியும். ஆனா எனக்கு வேலைக்குப் போகணும். அரைநாள்தான். 12க்கு வந்துரலாம்.
துளசி: நீங்க ஹாஸ்பிடல்லே வேலை செய்றீங்களா? ஒரு சமயம் அதை பத்தி எழுதின நினைவு. புது துணி வாங்கீட்டீங்களா?
//தீபாவளி எப்பன்றதுலே சில பேருக்கு... சரி, ஒருத்தருக்குச் சந்தேகம் இருக்கு. அவுங்களுக்கு இந்தப் பதிவைசமர்ப்பணம் செய்யறேன். தீபாவளி, நம்ம வீட்டுலே இருக்கற காலண்டர்படி நவம்பர் 1//
ஹிஹி.. ஹிஹி..
நன்றி நன்றி!
-மதி
பத்மா,
ஹாஸ்பிடல்லே 'நோயாளி'யாத்தான் வேலை செய்யணும்:-)
லைப்ரரியிலே வேலை பத்மா.
தனி 'மயிலு' வருது. பாருங்க.
ஹை மதி,
புரிஞ்சுருச்சா அந்த ஒருத்தர் யாருன்னு:-))))
நலமா மதி? நாளைக்கு ஃபோன் பண்ணவா? எந்த நேரம் சரிப்படும்?
//லைப்ரரியிலே வேலை பத்மா.//
ஜார்ஜ் ஆர்வெல்லும் ஒரு நூலகத்தில் தான் வேலை செய்தார் தெரியுமா?
நிறைய படிப்பாராம்.... அதனாலேயே அவருக்கு எழுத்துலகத்தின் மேல் ஆர்வம் வந்ததாம்
ஒருமுறை சொன்னாராம்..."I am not ready to argue with a person who writes more than what he reads"..... உங்ககிட்டயும் பாத்துதான் பேசணுமோ
துளசியக்கா,
"செல்லம்போலஇருந்தாங்க எல்லாரும்." -இதை நான் எங்க ஊர் பாஷைன்னு நினச்சுட்டு இருந்தேன் .உங்க ஊருலையும் இப்படி சொல்லுவாங்களா ? அல்லது நாகர்கோவில்-ல 2 வருஷம் இருந்தேன் -ன்னு குண்டைத் தூக்கி போடப்போறீங்களா?
திபாவளி ஏன் கொண்டாடுறோம்? கிருஷ்ணன் நரகாசுரன வதம் செய்த நாளா கொண்டாடுறோம்ன்னு இதுவரைக்கும் நினைச்சிட்டுயிருந்தேன், ஆனா, மஹாராஷ்டா பக்கம் கேட்டா, ராமன் போர்ல வெற்றிப்பெற்று இரவுல திரும்பி வந்த நாள தீபமேற்றி கொண்டாடுறோம் சொல்லுறாங்க ??
ரவிக்குமார், ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விளக்கம், அது ராமர் இரவில் அயோத்திக்கு திரும்பிய பொழுது அவருக்கு அயோத்தியை வெளிச்சமிட்டு காட்ட இந்த் ஏற்பாடு இது இன்னமும் டெல்லியில் உண்டு நம்மூர் கார்த்திகையைப்போல் அவர்கள் தீபாவளி அன்று வீட்டின் மாடிகளில் விளக்கேற்றுவதைப்பார்த்திருக்கிறேன்.
//கண்ணு வைக்கிறாங்க சிலர்//
இதென்ன இப்படி..டயட் மாபியாவுக்கு அடிபணியலாமா? என்ன சாப்டீங்கன்னு சொல்லாட்டி விட மாட்டோம்!
ரவிகுமார்,
//ஆனா, மஹாராஷ்டா பக்கம் கேட்டா, ராமன் போர்ல வெற்றிப்பெற்று இரவுல திரும்பி வந்த நாள தீபமேற்றி கொண்டாடுறோம் சொல்லுறாங்க //
இதுக்கும் மேல விஜயதசமி என்பது இராமன் இராவணனை வென்ற நாள்னு இந்த வருஷம் தான் ஒரு மராட்டி பையன் சொல்லக்கேட்டேன். நான் என்னவோ மகிஷனை கொன்ற நாள்னு நினச்சுக்கிட்டிருந்தேன். எப்படியும், அக்கா கொஞ்சம் கொசுவத்தி சுத்துனா தன் ஆரம்ப வாழ்க்கையில் நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்துட்டு போவுது? இல்லக்கா?
ஜோ,
//நாகர்கோவில்-ல 2 வருஷம் இருந்தேன் -ன்னு குண்டைத் தூக்கி போடப்போறீங்களா//
டார்டாய்ஸ் ரெடியா?
உங்க ஊர் தீபாவளியில் பட்டாசெல்லாம் உண்டா?
மெனு என்னன்னு எனக்கு மட்டும் மயில் மூலம் அனுப்பப் போறீங்களா?
எண்ணெய்க் குளியலுக்கு உங்க ஊர் வசதிப்படுமா?
கணேஷ்
துளசியைப் பார்க்காமல்தானே பேசிட்டு இருக்கோம்?
கணேஷ்,
நான் டெல்லி வரும்போது பாத்துப் பேசலாம்:-)
அய்யய்யோ, அது நாகர்கோயில் பாஷையா?
தெரியாமப்போச்சே ஜோ. ஒருவேளை நாகர்கோயிலுக்கு ஒரு டூர் அடிச்சேனே ( அரைநாள்தான்)அப்ப ஒட்டிக்கிட்டு வந்திருக்குமோ?
ரவிகுமார்,
நம்ம மோகன்தாஸ் சொல்றதும் சில இடத்துலே இருக்குதான்.
விஜயதசமிக்கு வேற ஒண்ணும் சொல்வாங்க. பாண்டவர்கள் பகடை ஆடி தோத்துட்டாங்கல்லே. அப்ப,
அவுங்க காட்டுக்குப் போகணும். அதுலேயும், அவுங்க யாருன்னு ஒருத்தருக்கும் சொல்லாம ஒருவருஷம்
மறைஞ்சுவாழணுமுன்னு துரியோதனன் போட்ட ஒரு நிபந்தனை இருந்துச்சுல்லே. அதன்படி ஒரு
ஊர்லே ஒளியப்போறதுக்கு முன்னாலே அவுங்ககிட்டே இருந்த ஆயுதமெல்லாத்தையும் ஒரு வன்னி
மரத்துலே ஒளிச்சுவைக்கிறாங்க. இல்லாட்டி அர்ஜுனனோட வில்லையும் பீமனோட கதையையும்
பார்த்தவுடனே அவுங்க யாருன்னு ஜனங்களுக்குத் தெரிஞ்சிடுமே.
அந்த வருஷம் முடிஞ்சுவந்து திரும்ப ஆயுதத்தை எடுத்தநாள்தான் விஜயதசமின்னும் ஒரு கதை இருக்கு.
ராமன் சீதை வனவாசம் முடிஞ்சு அயோத்திக்கு புஷ்பகவிமானத்துலே திரும்பறாங்க. அப்ப ரன்வே இல்லாட்டா
எப்படி விமானம் தரை இறங்கும்? அதுக்குத்தான் தீபவரிசை (தீபாவளி) வச்சது:-))))
ராம்ஸ்,
தனியா சொல்றேன் என்ன சாப்பாடுன்னு:-)))
மோகன் தாஸ் ,
நீங்க சொன்னதும் சரிதான்.
நீங்க பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கலை; இது என்ன வழக்கம். நான் இப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்படியெல்லாம் பண்றீங்க. நம்ம என்ன அப்படியா பழ்கியிருக்கோம்? என்ன போங்க!
எனக்கு எதற்கு சமர்ப்பணம் எல்லாம்? என்ன நீங்க...!
புஷ்பகவிமானம் இருந்தால் ராமர் ஏன் பாலம் கட்டுறார் இலங்கைக்கு, சும்மா கதையெல்லாம் விடாதீங்க துளசிக்கா :-) எங்களுக்கு சரித்திரம் தெரியுமாக்கும். :-)
தாணு,
அதெல்லாம் 'குறையொன்றுமில்லை மறைமூர்த்திக் கண்ணா'தான்.
இப்ப இதயம் நல்லெண்ணெய் கிடைக்குது இங்கே. நம்ம கை ஃபாக்ஸ்
புண்ணியத்துலே பட்டாசும் கிடைக்குது. இந்தவருஷம் வெள்ளைக்கார
நரகாசுரன் கைஃபாக்ஸ்க்கு 400 வருஷமாம். அதாலே இன்னையிலிருந்தே
பட்டாஸ் விற்பனைக்கு வந்திருச்சு!
அடக்கடவுளே!
புஷ்பகவிமானம் வந்தது ராவணனை அழிச்சபிறகுதான். 'போர் முடிஞ்சு' இலங்கையிலிருந்து திரும்ப
தனுஷ்கோடி வராங்க. அப்பவே 14 வருஷம் முடிவடையற நாளாம்.
பரதன் முன்பே ராமன் கிட்டே சொன்னது என்னன்னா, 14 வருஷ வனவாசம் முடிஞ்சவுடனே திரும்ப வந்துரணும்.
அப்படி வரலேன்னா நான் பதினாலு வருசம் முடிஞ்சோடனே தீக்குளிப்பேன்னு. அங்கே தீ ரெடியாயிருச்சாம்.
இவுங்க நடந்து ஆற அமர வந்தால் பரதன் தீயிலே விழுந்துருவானேன்னு தேவர்கள் கொடுத்த புஷ்பகவிமானத்தில்
பறந்துவந்தார்னு சொல்றது ஐதீகம்.
சரி, சரி. ராமகதை கேட்டவங்கல்லாம் தட்டிலே தட்சிணையை தாராளமாப் போடுங்கோ.
அந்த பகவான் ஸ்ரீ ராமனே உங்களை நன்னா வச்சுப்பன்.
தருமி,
:-)))))))))
ஆனாலும் ரொம்பத்தான்.
ரொம்ப நன்றி உங்கள் விளக்கத்துக்கு, நான் சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன் நீங்கள் பதில் சொல்லிவிட்டீர்கள், என்னிடம் சுத்தமாய் பணம் இல்லையாகையால், உங்களுக்கு விருப்பப்பட்ட ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ ஆண்டவனை பிராத்திக்கிறேன். ஏதோ இந்த ஏழையால் முடிந்தது. அப்படியே எனக்கு சேரவேண்டிய ராமனுடைய புண்ணியத்தையும் உங்களுக்கே அளிக்கிறேன்.
இது தீபாவளி சிறப்புப் பதிப்பா!
சரி. எல்லாருக்கும் ஒரு விஷயம் தெரியுமா! தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடத் தொடங்குனதே திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்துலதான். அதுக்கு முன்னாடி சேர சோழ பாண்டிய நாடுகள்ள தீபாவளி கிடையாது. எந்த இலக்கியத்த எடுத்துப் பாத்தாலும் தீபாவளி கிடையாது. இன்னைக்கும் சேர நாட்டில் தீபாவளி கிடையாது. எப்படியோ.....பண்டிகைன்னா கொண்டாட....சந்தோஷமா இருக்க. ஆகையால கொண்டாடுவோம். சந்தோஷமா இருப்போம்.
ஆமா ராகவன்.
.
எல்லாரும் நல்லா இருக்கணுமுன்னு ஆண்டவனை மனசார வேண்டிக்கிட்டு பண்டிகையைச் சந்தோஷமாக் கொண்டாடணும். அதுதான் முக்கியம்
// நலமா மதி? நாளைக்கு ஃபோன் பண்ணவா? எந்த நேரம் சரிப்படும்? //
தொலைபேசியில் பேசும்போது அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லுங்கள்
அதற்குத்தான் பேசப்போகிறீர்கள் என்றுதான் எங்களுக்குத் தெரியுமே:-))
பாலராஜன்,
என்ன இப்படி போட்டு உடைச்சிட்டீங்க?
கீதா எப்படி இருக்காங்க?
கேட்டதாச் சொல்லுங்க.
துளசி, முதன்முதலாய் உங்கள் பதிவைப் படிக்கிறேன். நன்றாய் இருக்கிறது.
ராகவன், நீங்க சொல்வது சரிதான். இதுவரை எனக்கு அது தோன்றவில்லை. தமிழ் இலக்கியங்களில் தீபத்திருவிழா என்றால் கார்த்திகைத் தீபத்திருவிழாதான்.
குமரன்,
முதல்முதலா வந்துருக்கீங்க.
வாங்க வாங்க,வணக்கம். நல்லா இருக்கீங்களா?
வந்ததுக்கு நன்றி.இனியும் அடிக்கடி வாங்க.
இல்லை ப்ரியா(-:
தமிழ்ச்சங்க தீபாவளிக்கு அதுதான் கட்டக்கடைசி நவம்பர் 12.
அதுக்குப் பாடலாமான்னு ஒரு யோசனை.
அக்கா!
ராமாயணக் கேள்விகளுக்கும் 'விரல் நுனியில் பதில்' கலக்குங்க!
ந்ல்லா தீபாவளி கொண்டாடுங்க.
Post a Comment