Friday, October 21, 2005

நியூஸிலாந்து பகுதி 20

மவோரி கதைகள் # 5



எமனை ஏமாத்த முடியுமா?


இறப்புக்குன்னே ஒரு சாமி இருக்காங்க. மக்கள் மண்டையைப் போட்டுட்டு மேலே போனபிறகு, அவுங்க ஆத்மாவைக்
காப்பாத்திப் பாதுகாக்கற சாமி. பேரு 'ஹினே நூயி டெ பொ'. இது மட்டும்தான் இங்கே பொம்பிளைசாமி!

பிறக்கற ஜனங்க சாகாம இருப்பாங்களா? இன்னிக்கும் மரணத்தை எப்படி வெல்லணுமுன்னு ஆராய்ச்சிங்க
நடந்துக்கிட்டுத்தானே இருக்கு. மக்களுடைய வாழ்நாள் நீண்டு இருக்கே தவிர, ஒருநாள் இல்லாட்டா ஒருநாள்
போகாம இருக்கவே முடியாது. ஆதிகாலத்துலே இருந்தே மனுஷன் மரணத்தை முறியடிக்கப் பாக்கறான்,இல்லே?

மொஇ ன்ற பேர் இருந்த ஒரு மவோரி , எப்படியாவது மரணத்தை வெல்லணுமுன்னு திட்டம் போட்டார். இந்த ஒரு
காரணத்துக்காகவே அவருக்கு 'ஹீரோ வொர்ஹிப்'!
அவர் நினைச்சார், 'இந்தமரணத்துக்குரிய சாமியை அழிச்சிட்டா(!) மக்கள் எல்லோரும் மரணபயம் இல்லாம ஜீவிக்கலாமே'ன்னு

இந்தக் காரியத்துக்கு யார்யார் கூட்டு சேரறீங்கன்னு ரகசியமா விசாரிச்சார். வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த சில
பறவைங்க ,'நாங்களும் உனக்குத் துணையா இருப்போம்'னு சொல்லுச்சுங்க. சரியான நேரத்துக்காக காத்துக்கிட்டு
இருக்காங்க.

ஒரு நாள், ஹினே நூயி டெ பொ நல்ல உறக்கத்துலே இருந்தாங்க. அப்ப மொஇ,மத்த பறவைங்க கிட்டே சொல்றார்,
நீங்க எல்லோரும் ஒரு அனக்கமும் இல்லாம கொயட்டா இருங்க. நான் போய் 'சாவுச் சாமி'மேலே பாய்ஞ்சு அதோட
உடம்புக்குள்ளே நுழைஞ்சு அவுங்களைக் கொல்லப்போறேன். இந்தத் திட்டம் 'பக்கா'வா இருக்குன்னு.

பறவைங்க எல்லாம் மூச்சை அடக்கிக்கிட்டு சைலண்டா நிக்குதுங்க. மொஇ மெள்ள ஓசைப்படாம தூங்கற சாமிகிட்டே
போறார். இதோ கிட்டப் போயாச்சு. இன்னும் ஒரு அரைநொடியிலே உடம்புலே புகுந்துரலாம். அப்பப் பார்த்து 'ஃபேன் டெயில்'
பறவை வாலைச ஆட்டிக்கிட்டே 'ஆ'ன்னு சத்தமாக் கத்திருச்சு.

சத்தம் கேட்டு திடுக்குன்னு எழுந்த 'சாவுச்சாமி எமனி'( எமனோட பெண்பால்?) நிலமை என்னன்றதை நொடியிலே
புரிஞ்சுக்கிட்டு, நம்ம மொஇ யை ப்பிடிச்சுக் கொன்னுருச்சு.

அதுக்கப்புறம் 'யாரும் மரணத்தை வெல்லமுடியாது,இருக்கறவரைக்கும் இருக்கலாம். நேரம்வரும்போது
போகலாமு'ன்னு இருந்துடறாங்க. ஜனங்களும் செத்துக்கிட்டேதான் இருக்காங்க.

பாதாள லோகத்துலே நம்ம சாவுச் சாமி 'ஹினே நூயி டெ பொ' இப்பவும் அவுங்க ஆத்மாவையெல்லாம் பாதுகாத்து
வச்சுக்கிட்டு இருக்கு.

இப்ப எங்கியாவது ஃபேன் டெயில் பறவையைப் பார்த்தீங்கன்னாகூட அது ச்சும்மாவே இருக்காது. வால் ஆடிக்கிட்டே இருக்கும்!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

4 comments:

said...

நன்றி , துளசி அக்கா !

எனக்கும் ஏன் என்று தெரியவில்லை .
மன்றத்தில் கேள்வி இருக்கிறது. யாரும் பதில் அளிப்பார்களா என்று தெரியவில்லை.

நான் எழுதுவது யாருக்கோ பிடிக்கவில்லை.


காசி மட்டுமே இதற்கு பதில் அளிக்கக்கூடும்.
நான் வேறு யாரோ என்று நினக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

said...

என்னது? யாரோன்னு நினைச்சுட்டாங்களா?
இதுக்குத்தான் இந்த 'பூனை'பேருஎல்லாம் இல்லாம சொந்தப் பேருலே எழுதணுங்கறது.

எல்லாரும் கொஞ்சம் உண்மைப்பேருலே வாங்க.

said...

பூனை பேர்ல வாங்கிற திட்டே போதலை, இதில சொந்த பேரில் வேற வாங்கனுமா ..

:-)

said...

இப்ப என்னாங்கறீங்க? நான் சினிமா விமரிசனம் எழுதலாமா கூடாதா?
இன்னும் திரைக்கே போகாத பலபடங்கள் எனக்குன்னே எடுத்து வந்திருக்கு. அதையெல்லாம் பார்த்துட்டு 'ச்சுப்'ன்னு இருக்கறதா இல்லே எழுதறதா?

ஒண்ணூம் புரியலை(-:


நீங்க எழுதுங்க. உங்களை வேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது. தீக்குளிப்போம் !