Wednesday, October 05, 2005

கொலு பாக்கலையோ கொலு.


நவராத்திரிக்கு கொலு வச்சா, எல்லோரையும் அழைக்கணுமா இல்லையா? அதுக்குத்தான் வலைவழியாக்
கூப்புடறேன். எல்லோரும் வந்து வெத்தலை,பாக்கு/மஞ்சள் குங்குமம் வாங்கிக்குங்க.( சுண்டலும் இருக்கு)

படம் போட்டாப் பத்தாது, கதையும் சொல்லணுமுன்னு நச்சரிக்கிற நண்பர்களுக்காக.

மொத்தம் அஞ்சே படிகள்.

முதல் படி: சாஸ்திர சம்பிரதாயத்தையொட்டி மரப்பாச்சிகள். பெருமாளும், தாயாரும். பக்கத்துலே ரெண்டு ச்சின்ன
அகல்விளக்குகள், நம்ம சித்ரா ரமேஷின் அன்பளிப்பு.

ரெண்டாம்படி: புள்ளையார் இல்லாம வேலை நடக்குமா? நடுவிலே நர்த்தன விநாயகர்( லேட்டஸ்ட் அடிஷன்
கோபால் பெங்களூரில் வாங்கிவந்தது)
அவருக்குத் துணையா ரெண்டு பவழப்பிள்ளையாரும், ரெண்டு பளிங்குப் பிள்ளையாரும். இதுலே பளிங்குப்
பிள்ளையார்கள் அமெரிக்கா ரிட்டர்ண்டு( கோபால் யு.எஸ்.லே இருந்து வாங்கியது)

மூணாம்படி: கண்ணப்பிள்ளையார் குழந்தை. சிங்கையில் வாங்கியது. குழந்தைன்னா பால் புட்டி வேணுமா இல்லையா?
ச்சின்னப்பாட்டில் பாலெல்லாம் யானைப்புள்ளையாருக்குப் பத்துமோ? அதாலே 'பால் கேன்' லே பாலும், பக்கத்துலே
இன்னொரு கேன் லே வெண்ணெயும்( கண்ணனுக்கு) வச்சிருக்கு.( இது ரெண்டும் ஜெனீவாவிலே வாங்குனது.
கூட இருக்கறது ரெண்டு தேவகன்னிகைகள்.( லோக்கல்)

நாலாம்படி: துளசி வீட்டுக்கொலுவிலே யானை இல்லாமயா? யானைகள், பூனை/புலி, பெங்குவின்( இருக்கற ஊருக்கு
அடையாளம் வேணாமா?) அப்புறம் உலக உருண்டை. அதோட தலையிலே ஒரு மவோரி அடையாளம்.

அஞ்சாம்படி: தீம் 'தாய்மை'

முயலம்மா குழந்தையைத் தொட்டில்லே போட்டுத் தூங்கவைக்குறாங்க. தாலாட்டு வேணுமா இல்லையா?
அதுக்கு மத்த முயல்குடும்ப அங்கத்தினர்கள் எட்டுப் பேர் உதவறாங்க. ட்ரம், அக்கார்டியன், ட்ரம்பெட்,வயலின்,
கிடார்னு அஞ்சுபேர் வாசிச்சுக்கிட்டு இருக்காங்க( விடிஞ்சது போ. இந்த சத்தத்துலே அந்தப் புள்ளை எப்படித்
தூங்கும்?) ஒருத்தர் பூக்கூடைநிறைய பூ கொண்டுக்கிட்டு வர்றார்.( மலர்ப்படுக்கையோ?) ரெண்டு பேர்
தர்ப்பூசணிப்பழமும்( ச்சும்மா ஒரு கீத்துதான்!) கேரட்டும் கொண்டுவந்திருக்காங்க.

'அம்மா'வையும் சேர்த்து ஒம்போது பேர். ஆக ஒரு குழந்தையை வளர்க்க ஒம்போது பேரு வேணுமுன்னு
சொல்லாமச் சொல்றாங்களோ இல்லை, ஒரு தாய்க்கு ஒம்போது வேலைங்க இருக்குன்னு சொல்றாங்களோ
தெரியலை.


ஆகக்கூடி அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன். கட்டாயமா வாங்க.

56 comments:

said...

ஆமா நம்ம மாநாட்டு படம் மட்டும் என்னமோ டார்ச் லைட்ல எடுத்த படம் மாதிரி போட்ட்டுட்டு, இப்போ கொலுவுக்கு தெளிவா படம் போட்டத நியுஸி பிராந்திய உப-தலைவர்ங்கற முறைபடி ரொம்ப கண்டிக்கறேன். (அதுக்குள்ள புகைபட கருவிய மாத்தீட்டேன்னு சொல்லி தப்பிசுக்கலாம்னு நினைக்காதீங்க.)

said...

யக்காவ் சுண்டல இ-மெயில்ல அட்டாச் பண்ணி அனுப்புங்கோ...

said...

சுரேஷூ,

அந்தப் படங்கள் எடுத்தது யாருன்னு நீங்களே நேரிலே பார்த்தீங்கதானே?

இதெல்லாம் 'நான்' எடுத்தேன்.
( என்ன ஒரு அகம்பாவம்?)

முகமூடி,

சுண்டல்? பொல்லாத சுண்டல்! அனுப்பிறலாம். வந்து சேர்றதுக்குள்ளே 'ஊசி'டுமே:-)

said...

துளசி:
இது international கொலு மாதிரி இருக்கு. பேசாம சுண்டலுக்கு பதிலா பேக்கரி ஐட்டமா பண்னிடுங்க.

said...

பத்மா,

கொலு நல்லா இருக்கா?
தினமும் எதாவது பிஸ்கெட்டை வச்சுறலாமா? 'பேக்கரி அயிட்டம்'

ட்ரை ஃப்ரூட்ஸ் கூட வச்சிருவேன்.

said...

சூப்பர் கொலு துளசிக்கா..இதோ நான் பாடறதா நினைச்சுக்கங்க:

பாக்யாதா லஷ்மி பாரம்மா..
நம்மம்மா நீ செளபாக்யா தா லஷ்மி பாரம்மா...

said...

ரம்யா,

வந்ததுக்கு நன்றி.பேஷ் பேஷ் பாட்டு நன்னா இருக்கு.
ஆமா, என்ன ராகம் & தாளம்?

தெரியாம எப்படிப் பாடறது?:-)

said...

http://www.musicindiaonline.com/l/1/m/artist.14/

அக்கா, இந்த லிங்கிலே 5வது பாட்டு.. நான் பாடறதை விட இவங்க பாடினா உங்க வீட்டு கொலுக்கு ஓரு தெய்வீக களை உடனே வந்துடும்.

said...

ரம்யா,

அதே லிங்க்லே 7வது பாட்டு என்னோட ஃபேவரைட்டாச்சேம்மா!

எம்.எஸ். அம்மாவோட எல்லாப் பாட்டுமே ஒருவிதத்துலே ஃபேவரைட்தான்.
ஒண்ணையும் தள்ள முடியாது.

said...

//பாக்யாதா லஷ்மி பாரம்மா..

இதை பீம்சென் ஜோஷி பாடறதைக் கேட்டிருக்கீங்க்ளா?

கல்யாணம் ஆகிப் புகுந்த வீடு போன மகளை அப்பா அழைக்கிற மாதிரி கம்பீரமான அன்பும் வாஞ்சையும் குரலில் இழையிடும். அவரோட மராத்தி அபாங்க் கூட அப்படியே தான்.

said...

அன்பு அம்மையீர்,
கொலு பாத்தேன். சின்னதா இருந்தாலும் அழகா இருக்கு. தாயைச் சுற்றி 8 முயல்கள் இருப்பது எனக்கு என்னமோ ஆண்டவனின் 8 குணங்களைக் குறிப்பதாகவும், அவை தாயின் மூலம் குழந்தைக்கு கிடைப்பதாகவும் தெரிகிறது.
அன்னை இராஜ இராஜேசுவரியின் உருவம் கிடைத்தால் வாங்கி வையுங்க்ளேன்.
அத்துடன் தினம் அம்மையைப் போற்றி 1008 நாம ஜபம் செய்தால் நல்லது.
நம் "சித்தம்" குழுவில் அது இருக்கிறது. என்னால் உங்கள் வீட்டுக்குள் அதைப் பொட்டலமாகக் கட்டி போட முடியலே.
அன்பு,
ஞானவெட்டியான்

said...

அன்புள்ள இரா.மு,

//இதை பீம்சென் ஜோஷி பாடறதைக் கேட்டிருக்கீங்க்ளா?//

கேட்டதில்லை. அடுத்தமுறை பூனா போனால் வாங்கிவரணும்.

said...

ஞானவெட்டியாரே,
//அன்னை இராஜ இராஜேசுவரியின் உருவம் கிடைத்தால்..//

இங்கே கிடைக்காதே(-:
அடுத்தமுறை ஊருக்குப் போகும்போது வாங்க முயற்சிப்பேன்.
சித்தம் குழுவில் இருந்து எடுத்துக்கொள்கின்றேன்
என்றும் அன்புடன்,
துளசி

said...

டி ராஜ்,

இன்னும் சுண்டல் வந்து சேரலையா? அடக்கடவுளே!

said...

டி ராஜ்,
மெயில் பாக்ஸைப் பாத்துத் திறங்க. சுண்டல் அனுப்பி ரெண்டு நாளாச்சு:-)

said...

கண்ணப்பிள்ளையார் குழந்தை - Soooo cute!

உங்கள் வீட்டுக்கு நான் வரும்போது இந்தப்பிள்ளையாரை ஒளித்து வைப்பது பாதுகாப்பாக இருக்கும்! :O)

said...

இந்தமுறை யாருக்கு ஒருநாள் குறையுது / யார் யாரோட நாட்கள் overlap பண்ணுது?

said...

படிப்புக்குத்தான் நாள் குறையுது!
அதிகப்படிப்பு உடலுக்கு இளைப்பாமே ( பைபிள் சொல்லுது)

நவமியும் தசமியும்.

நவமி கொஞ்ச நேரம்தான்.

said...

ரெண்டாம் படியில என்னைத் தூங்க வச்சிட்டீங்களே :-)

முதல் படி கண்ணுல ஒத்திக்கலாம் போல இருக்கு. அது சரி ந்யூசி மொழியில சுண்டலுக்கு என்ன பெயர்??

ரெண்டாம் படியில ஒரு பாப்பா மேல பாதுக்கிட்டு இருக்கே அது யாரு ??

said...

கணேசா,

இது என்ன புது கன்ஃப்யூஷன்?

ரெண்டாம் படியிலே நீங்க 'நர்த்தனம்' செய்யறீங்க.
மூணாவது பையிலேதான் 'தாய்ச்சுண்டாச்சு'.
இதுலே மேலே பாக்கற பாப்பாவோட றெக்கையைக் கவனிக்கலையா?
அது சொல்றது, உங்க அம்மாட்டே' ஹப்பாடா, ஒரு வழியாத் தூங்குது இத்தனை நேரம் ப்ராணனை வாங்கிட்டு'ன்னு ஆயாசமா மனசுக்குள்ளே சொல்றது:-)

said...

http://www.nzmurugan.org.nz/Gallery/TemplePhotos/

You may use the Rajarajeswari photo printout as well.

said...

அதிகப்படிப்பு உடலுக்கு இளைப்பாமே

இது தெரிஞ்சுதான் மாணவர்களாயிருக்கு போது நிறைய ஓய்வு எடுத்துக் கொண்டோம் போல! ;O)

கணேஷ் கீழேருந்து எண்ணுறார் போல!!

said...

அலெக்ஸ் பாண்டியன்,

நன்றிங்க. இப்பத்தான் ஞானவெட்டியார் படத்தை அனுப்பிக் கொடுத்தார்.

ஷ்ரேயா,

கீழிருந்தோ, மேலிருந்தோ எல்லாம் ஒண்ணுதான். இது நடுப்படி.( அடுப்படி இல்லை)

said...

http://www.musicalnirvana.com/hindustani/bhimsenjoshi.html
ஐயோ முருகா, என்னோட பேவரட்ட ஞாபகப்படுத்திட்டீங்களே! துளசி லிங்க் கொடுத்திருக்கேன். கேட்டு பாருங்க. முருகன்! "மாதவ நீ பா"-
கேட்டு இருக்கீங்களா? அதுல வரும் வரிகள்
" சோதர மாவன மடியலி மலகுவ" அதாவது தாய்மாமன் மடியில் உறங்கும் கிருஷ்ணா
என்று கற்பனை, புரந்தரதாசரின் கற்பனை வரிகள். கிருஷ்ணனுக்கு தாய்மாமன் யாரு? கம்சன் இல்லையா? புரந்தரதாசரை பற்றி
எழுத வேண்டும், நேரமும் காலமும் வர வேண்டும். பக்தி மட்டும் அல்லாமல் சோஷியலிச கருத்தும், கொஞ்சம் நாஸ்திக- யதார்த்தவாதமும்,
கேலியும், நகைச்சுவையும் இணைந்து ! இந்துஸ்தானித்தான் பிடிக்குது கர்நாடக சங்கீதத்தை விட.
உஷா

said...

ஆகா துளசியம்மா வீட்டுக் கொலு. ரொம்ப அழகா இருக்கு. அப்படியே ஒரு பக்கமா முருகனையும் நிக்க வெச்சிருக்கக் கூடாதா!

சுண்டல் எப்ப கிடைக்கும்? பெங்களூருக்கு பார்சல் வருமா?

said...

துளசி... அந்த மேஏஏஏல்படி ஜோடி எனக்கு ரொம்ப பிடிச்சுது. எங்க வீட்லயும் பிள்ளையார் கலெக்ஷன் இருக்கு. அதிலயும் டெரக்கோட்டா பிள்ளையார்களுக்கு தனி அழகிருக்கிற மாதிரி ஒரு தோணல். காசிக்குப் போறேன்னு சொன்னீங்கல்ல... அங்கே பிர்லா மந்திர்க்கு மறக்காம ஒரு விசிட் அடிங்க. அள்ளிட்டு வரலாம்.

ஆமா, இன்னிக்கு என்ன சுண்டல்?

நிர்மலா.

said...

அடுப்படிக்குப் போக எனக்குக் கடுப்படிக்கும்!

இதுலே நீங்க வேறே துளசியக் கேட்கிறீங்க "என்ன சுண்டல்"னு! எனக்குத் தெரிஞ்சதெல்லாம் கடலைச்சுண்டல்தான்!சிலவேளை அது கௌப்பி(ரெட் கிட்னி பீன்ஸ்), பயறு இதாயெல்லாம் அவதாரமெடுக்கும்! :OP

ஆனா இன்றைக்கு நல்லா ஒரு பிடி பிடிக்க ஒரு ஆன்ட்டி கூப்பிட்டிருக்கிறா. "ஆயத்தமாயிருக்கிறேன்" என்று வயிறு இப்பவே குரல் கொடுக்குது!! ;O)
2.5 hours to go!! :O(

said...

என்னடா இது?
துளசி அம்மா எப்ப காசிக்குப் பயணம்?
நானும் அண்ணியும் 6/11/2005 மாலை கிளம்பி 9/11/2005 காலை காசியில் இருப்போம். எனக்கு அங்கேதான் ருத்திர தீட்சை கிடைக்கப் போகிறது. சந்திப்போமா? ஏன்னா நியூசிலாந்து ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தூரம் இல்லையா?
அன்பு,
ஞானவெட்டியான்

said...

// மூணாவது பையிலேதான் 'தாய்ச்சுண்டாச்சு'. //
// கணேஷ் கீழேருந்து எண்ணுறார் போல!! //
ஓ சாரி சுண்டல் ஞாபகத்துல எண்ணிக்கையைக் கோட்ட விட்டுட்டேன்.

//கீழிருந்தோ, மேலிருந்தோ எல்லாம் ஒண்ணுதான். இது நடுப்படி.( அடுப்படி இல்லை)//
ஓ இப்படியும் சொல்லலாமா அடுப்படி ஞாபகத்தில நடுப்படியை கவனிக்கல... :-)

said...

உங்க வீட்டு விஷேசதுக்கு நாங்களும் வந்தாச்சு

ஒரு சந்தேகம்...
யக்கா அதென்ன படிய மேல இருந்து கீழ எண்ணுறீக?
அப்படித்தான் எண்ணனுமா?
முதல் படினா எது மேல இருக்குறதா? கீழ இருக்கிறதுதான முதல் படி!

said...

கொலு சூப்பரா இருக்கு அம்மா, குறிப்ப்பா நம்ம தூங்குமூஞ்சி வினாயகர் சூப்பர் :D
பிரியமுடன்,
உங்கள்
ஸ்ரீஷிவ்...:)

said...

கொலு சூப்பரா இருக்கு ... kalakkal...

naanum oru kolu vekka poren.. innum oru vaaram poruthukonga.. namma veetla adutha varam posting oru golu dhan....

kandippa vaanga akka, appadi ramya akka, shreya akka kootittu vaanga.. gopal sir kooda varalam :)

innai dhan andha golu podalamnu parthen.. but neenga mundhikiteenga.. so, innai vera oru goinchaamy padhivu potuten... vandhu paarunga. next week goluku vaanga..

V M

said...

கொலு இல்லையான்னு கேட்டது நானு, எனக்கு ஒருவாய் சுண்டல் கூட அனுப்பலை! உங்க பேச்சு கா1

said...

கொலு சூப்பர்க்கா,

வந்தவங்களுக்கு என்ன வெச்சுக் கொடுக்கிறீங்க?

எங்கம்மா ஒவ்வொரு வருஷமும் அவங்களோட சேர்ந்து நர்ஸ், வேலை செய்யறவங்க போன்றவர்களை உள்ளடக்கிய "arts and crafts dept".. அதான்.. பழைய துணி கிழிக்கறது,கலர் கொடுக்கறதுன்னு அவங்க டிபார்ட்மெண்ட் மூலம் ஏதாவது செய்வாங்க. இந்த வருஷம் பேப்பர் கூடை!

சுண்டல் இமெயில் வர இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கணுமோ?

said...

கல்வெட்டு,

நான் எப்பவுமே மேலே இருந்துதான் எண்ணுவேன். சாமி இருக்கறது மொதப் படின்னு.
அவரு மேலே இருந்து இறங்கி அப்படியே மொதல்லே நின்னுருவாரில்லெ.

வீ.எம்,
இதோ கிளம்பிட்டேன். பொடிநடையாவந்தா அடுத்தவாரம் வந்து சேந்துரமாட்டோமா?

said...

சிவா,

குழந்தைப் பிள்ளையார் அழகா இருக்காரில்லே? சிங்கப்பூருலே கிடைச்சார். ஒரு விரலை
வாயில் வச்சுக்கிட்டுச் செல்லம்போல தூங்கறார்.

said...

ஞானவெட்டியாரே,

காசிக்குப் போய் கங்கையைப் பார்க்கணும்னு ஒரு வெறியே இருந்துச்சு. போக ஒண்ணும்
அமையலை. அப்ப ஒரு ஆகாசகங்கையைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைச்சது. அதுவே
மனசுக்கு திருப்தியா இருந்துச்சுங்க. ஆனாலும் நம்ம கங்கையைப் பார்க்கிற ஆசை
இன்னும் கொஞ்சம் மனசுலே ஒரு மூலையிலே ஒட்டிக்கிட்டு இருக்குதான். அதைத்தான்
நம்ம நிர்மலாகிட்டே சொல்லிவச்சிருந்தேன். வேளை எப்ப வருமோ தெரியலை.

தீபாவளிக்கு அடுத்தவாரம் உங்களுக்கு 'கங்காஸ்நானமா'? நம்ம அன்னபூரணியைக்
கேட்டதாச் சொல்லுங்க.

said...

நிர்மலா,

பார்க்கலாம் காசிக்குப் போக எப்ப சந்தர்ப்பம் கிடைக்குதுன்னு. கட்டாயம் பொம்மைகளை
வாரிக்கிட்டு வந்துரணும். இல்லே?

தாணு,

என்னங்க நீங்க. காயெல்லாம் விட்டுட்டீங்க. அதையே பழுக்கவச்சுருங்க. பிரசாதம்
ஆயிரும்.
சுண்டல் எல்லாம் முதல் & கடைசி நாளுக்குத்தான். செஞ்சா சாப்பிட ஆளு இல்லையே(-:
மத்த நாளிலே ஜஸ்ட் ட்ரை ஃப்ரூட்ஸ்.

said...

வ.மீ.க போட மறந்துட்டீங்களே! ;O)

said...

ஷ்ரேயா,

வ.க.வே யில்லை. அப்புறம் எங்கே வ.மீ.க? அவருக்குத்தான் இந்தப் பக்கம் திறக்கவே முடியலையாமே

said...

நம்ம விசுவையும், அன்னபூரணியும் கேட்டுவிட்டு வந்து பதில் சொல்றேன்.
இப்படி எழுதுவது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. ஊரோடு ஒத்து வாழ்.
அன்பு,
ஞானவெட்டியான்

said...

ஞானவெட்டியாரே,

உங்களை சங்கடத்தில் ஆழ்த்திட்டேனா என் எழுத்தால்?

மன்னிச்சுடுங்க ப்ளீஸ்.

எனக்கு எப்பவுமே சாமி உயிர்நண்பன் தான். தனியா எங்கியோ வச்சுப் பார்க்கமுடியலை. என்கூடவே இருந்து நான் சிரிச்சா கூடவே சிரிச்சு, அழுதா கூடவே அழுதுன்னு எல்லாசமயமும் என்னை ஒட்டியே இருக்கற ஆப்த நண்பன்.

இது தவறா இல்லை சரியான்னு தெரியாது. ஆனா அப்படித்தான் இதுவரை இருக்கு.

எப்பவும் நான் அவன்/அவள்கூட எதாவ்து பேசிக்கிட்டே இருக்கேன்( வெளிப்படையாவும் பலசமயம் மனசாலும்)
சிலநாள் சண்டையும் உண்டு.

said...

அன்பு அம்மா,
"சங்கடத்தில் ஆழ்த்தி விட்டேனா?"
எதற்கு? இதில் சங்கடம் சங்+கடம் எங்கே வந்தது?
ஆமா. இந்த சாமி யார்? புரியலயே!!
"நான் விசுவையும் அன்னபூரணியையும் நண்பன்போல்தான் பாவிக்கிறேன். அதனால்தான் கேட்டுவந்து சொல்லுகிறேன்" என்றேன்.
நான் திட்டுவது உண்டு; கெஞ்சுவது உண்டு; வணங்குவது உண்டு; உண்ணும்போது ஊட்டுவதும் உண்டு.
சாமானிய மனிதரிடம் பகிர்ந்துகொள்ளமுடியாத எல்லாவற்றையும் கொட்டித் தீர்ப்பதும் உண்டு. இதில் தவற் இருப்பதாகத் தெரியவில்லை. என் இயல்பான நடையிலிருந்து சாத்தாரணமாகப் பேச்சுப் புழக்கத்தில் எழுதுவதுதான் கடினமாயிருக்கிறது என்றேன்.
ஒன்று மட்டும் தெரிந்துகொள்ளுங்கள். கோபம், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றைத் துறந்தால்தான் மனம் இலவம் பஞ்சாகும். அது இல்லையெனில் சித்தம் குரங்குதான்.
கோபம் ஏதுமில்லை.
அன்பு,
ஞானவெட்டியான்

said...

ஞானவெட்டியாரே,

//. இந்த சாமி யார்? புரியலயே!!//

நாராயணா! நாராயணா!

எல்லாம் எம்பெருமா(ள்)ன்தான்.
வேற யார்?

said...

அன்பு அம்மா,
அந்த நாராயணந்தான் நம்ம தலைக்குள்ள முகுளமாகப் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறானே. அந்த பெரிய மாயைதான் மனத்திற்கு அதிபதி. கடலில் அலைகள் கிளம்புவதுபோல் மனமும் அலை பாயும். அதனால்தான் "அலைபாயுதே கண்ணா" என்று பாடினார்கள்.
எப்படியோ. அங்கு "சுனாமி" வீசாமலிருப்பதால் பிழைத்தோம்.
அன்பு,
ஞானவெட்டியான்

said...

துளசிம்மா

தாமதமாய் வந்தாலும் பிரசாதம் கிடைக்கும் தானே

எனக்கு பஜன் ரொம்ப இஷ்டம்
ஆனா வெள்ளிமூக்கு குதிரைக்குட்டிங்க வந்திடக்கூடாதில்லையே

அதனால இங்கயே ரெண்டு பாடல் பாடிக்கறேன்

said...

ஞானவெட்டியான் ஐயாகூட வந்தாச்சு போலிருக்கு

ஐயா அம்மா நலம் தானே
நலம் விசாரித்ததைச் சொல்லுங்கள்

திண்டுக்கல்லில் தானே இருக்கிறீர்கள்
சித்தம் குழுவுக்கு வர இயலவில்லை

காசி பயணம் இனிதாயிருக்கட்டும்

said...

மகளே மதுமிதா,

கவலையை விடுங்க. நம்மகிட்டே நேத்து ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சுன்னு இருக்கா?

பிரசாதம் தாரளமா உண்டு. அதான் ஒம்போது நாளைக்கும் சேத்து செஞ்சுவச்சாச்சே:-)

தாரளமாப் பாடுங்க. அந்த 'வெள்ளி மூக்குக் குதிரைங்க' இங்கே நியூஸியிலே கிடையாதே..ஆஹா...

நானெ இங்கத்து மதுமிதாவுக்கு இந்தியாவுலே வந்துதான் காமிச்சேன். அருமையான ஃபோட்டோக்கூட இருக்கு.

said...

அன்பு மகளே மது,

வீட்டில் எல்லோரும் நலம்தானே. நான் நடத்தும் "சித்தம்" குழுமததி் அம்மாவும் ஒரு அங்கம். என் வீட்டு கொலுவுக்கு வாங்கன்னு கூப்டாங்க. வந்துட்டேன்.

நானும் அம்மாவும் எப்பொழுதும்போல் திண்டுக்கல்லில் நாளொரு நோயும் பொழுதொரு அவத்தையுமாய் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். பேத்தி நன்கு படிக்கிறாளா? மாப்பிள்ளை இராஜா, அப்பா ஆகியோரும் நலமா?
அன்பு,
ஞானவெட்டியான்

said...

அடாடா!!
மறந்துட்டேன் போங்க.
இந்தப் பொடியனுக்கு html தெரியாது. மதுரைப் பாண்டியனார் ஒரு உரெல் (அதாங்க url)குடுத்தார். அதைப் புடிச்சுப் படிச்சு பின்னாடி நான் ஒரு குச்சு(சிறிய அல்ல) வீடு (BLOG) கட்டியிருக்கேன். எல்லோரு வாங்க. வாங்க. வந்து பாத்து எல்லோரும் அவங்க அவங்க பின்னூட்டுகளை (comments)குடுங்க.
வான்வெளி முகவரி -
http://njaanavelvi.blogspot.com/

மதுரை அரசன் பாண்டிக்கு நன்றி.
அன்பு,
ஞானவெட்டியான்

said...

கொலு சூப்பரா இருக்குது. கொலுவுக்கு அழைத்ததுக்கு நன்றி (இப்பதான் காதுல இல்ல கண்ணுல பட்டுதான்னு கேட்காதீங்க... பாருங்க வெற்றிகரமான 51 இப்ப:)

இங்க நண்பர் வீட்டுல வருடாவருடம் கூப்பிடுவாங்க அவங்க இந்தமுறை இந்தியா போயிருக்கிறதால போகமுடியல. இப்ப உங்க வீட்டு கொலுவுக்கு வந்தாச்சு.

அதென்ன... இங்க ரெண்டு நண்பர்கள் வீட்டுள்ள கொலுவெல்லாம் வக்கல... வந்து வெத்தலை/பாக்கு வாங்கிட்டு போயிடுங்கன்னு அழைப்பு விடுறாங்க!? அப்படியும் வழக்கம் இருக்குதா!?
(அதையேம்பா இங்க வந்து கேக்குறேன்னு... நீங்க மனசுக்குள்ள கேட்டுட்டு பதிலை மட்டும் இங்க சொல்லுவீங்கன்னு தெரியும், நன்றி:)

said...

அன்பு,
கொலுவுக்கு வந்ததுக்கு நன்றி. வீட்டம்மாவையும், மகளையும் கூட்டிக்கிட்டு வந்திருக்கலாமுல்லே?

கொலு வைக்கறதுன்றது அவுங்கவுங்க வீட்டுப் பழக்கமாம். சிலசமயம் அம்மாவீட்டுலே கொலுவைக்கற பழக்கம் இருந்து,
கல்யாணம் கட்டிக்கிட்டுப்போற வீட்டுலே இது இல்லாமலும் இருக்கலாம். சில நோம்புங்க கூட இப்படித்தான்.

நவராத்திரின்றது பெண்கள் பண்டிகைன்றதாலே கொலுவைக்காட்டியும் சிலபெண்களைக் கூப்பிட்டு வெத்தலை பாக்கு,
மஞ்சள் குங்குமம்னு கொடுக்கற வழக்கம் இருக்கு. இது ஆந்திர தேசத்துலே பரவலா இருக்கு.

வெளிநாட்டுலே இப்படி வந்துசேர்ந்துட்ட நம்ம ஜனங்க, பொம்பிளைகளைத் தனியாக் கூப்பிடாம, வீட்டுலே எல்லோரையும்
கூப்பிட்டு அதை ஒரு சின்ன 'கெட் டுகெதர்'ஆ ஆக்கிடறது இப்பெல்லாம் வந்த இன்னோரு வழக்கம்.( பட்டுப்பொடவை
கட்டிக்கிட்டு கசங்காம 'தானே' கார் ஓட்டிக்கிட்டு நண்பர்கள் வீட்டுக்குப் போற அசெளகரியம் வேற இருக்கே. அதான்
வீட்டுக்கார் கொண்டு போய்விட்டுக் கூட்டிக்கிட்டு வர்றது!)

பாருங்க, காலப்போக்கிலே நவராத்திரி பெண்களுக்கானதுன்ற வழக்கு ஒழிஞ்சிடும்.

said...

எழிலையும் கூப்பிட்டு காட்டினேன் உங்க கொலுவை...
//பாருங்க, காலப்போக்கிலே நவராத்திரி பெண்களுக்கானதுன்ற வழக்கு ஒழிஞ்சிடும்.//

நீங்க சொல்லித்தான் இந்தவிஷயமே தெரியும். இதுவரை சென்றெதெல்லாமே குடும்பத்தோடுதான்:)

said...

அன்பு,

உங்க 'சிங்கை'யிலே கோயிலிலேயும் கொலு வைக்கற வழக்கம் இருக்குதானே?
போய்வந்தீங்களா?

said...

பாலகிருஷ்ணரைப் போல் படுத்திருக்கும் பாலப்புள்ளையார் ரொம்ப க்யூட்:)!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

உங்கள் வருகையால் பாலகிருஷ்ணப்பிள்ளை(யாரு)க்கு மறு ஜென்மம்:-))))))