Tuesday, October 11, 2005

நியூஸிலாந்து. பகுதி13

இந்த நாட்டில் இல்லாதவை:

எருமை மாடு, பாம்பு, தேள், கரப்பான் பூச்சி,பல்லி,கொசு, எறும்பு பல இடங்களில் கிடையாது.

காட்டு மிருகங்களும் கிடையாது. அவைகளை இறக்குமதி செய்து உயிரியல் பூங்காக்களில் வைத்துள்ளனர்.

இந்த நாடு ஒரு தீவாக இருப்பதால் விஷப்பிராணிகளும் கிடையாது. இந்தத் தீவின் இயற்கை அழகைக் காப்பாற்றவும்,
மற்ற அழிவுகளில் இருந்து காப்பாற்றவும் பெரு முயற்சி எடுக்கப்படுகின்றது. எப்போதாவது இங்கே வரும் 'கண்டெயினர்
களில்' பாம்பு இருந்துவிடும். எல்லாவிதமான கண்டெயினர்களையும் ஃப்யூமிகேட் செய்துவிடுவதால் அந்த சாமான்களை
வெளியே எடுக்கும் போது செத்தபாம்பு அகப்படும். அந்தவாரம் முழுவதும் நமது தொலைக்காட்சிக்கு நியூஸ் கிடைத்துவிடும்.

அதன் காரணமாக பல விதமான பொருட்களை நாட்டின் உள்ளே கொண்டுவருவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.
நாட்டுக்குள் நுழையும்போது, உங்கள் பையில் ஒரு ஆரஞ்சுப் பழம் இருந்தால் கூட உடனடியாக 200 டாலர்கள் முதல்
10,000 டாலர்கள் வரை ( மூன்று லட்சம் ரூபாய்) வரை அபராதம் செலுத்த வேண்டும்!

பன்னாட்டு சேவைகள் உள்ள விமான நிலையங்களில் இதற்கான அறிவிப்பைப் பார்க்கலாம். 'நான் கவனிக்கவில்லை'
என்று யாரும் சொல்ல முடியாதபடி, உங்கள் கண்பார்வைக்குத் தப்பமுடியாத அளவில் அவை எங்கும் காணப்படும்.

செடி, விதைகள், பழங்கள், பறவை இறகுகள், முட்டை, கடல்பொருட்கள் சங்கு, பவழம் போன்றவை,பால் பொருட்கள்,
இறைச்சி என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். அதனால் உங்கள் 'ட்ராவல் ஏஜண்ட்' மூலம் நன்றாக விவரங்களைக்
கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

இங்கே வந்து வசிக்கும் எண்ணம் இருப்பவர்களுக்கு இதுவரை வந்த தகவல்கள் ஓரளவு உதவியாக இருக்கலாம்.
இந்த நாட்டின் நிறை குறைகளைத் தெரிந்துகொண்டுவந்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாமல்லவா?

********************************************************************

ஒருவழியா பழைய பாட்டு முடிஞ்சது. இனி நம்ம வழியைப் பாக்கலாம். இங்கே இருக்கும் 'பழங்குடி'யைப் பத்தி அடுத்து
ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்.

அதுக்கு முன்னாலே ஒரு விஷயம் இங்கே. நாளைக்குச் சொல்றேன். ரெண்டு படம் போட்டுரலாமுன்னா இந்த ப்ளொக்கர் சொல்பேச்சு கேக்கலையே(-:
*************************************************************************

12 comments:

said...

என்னது?? கரப்பான்பூச்சி இல்லையா? அது இல்லாத வீடு ஒரு வீடா? அந்த வீடு இருக்கற நாடு ஒரு நாடா??

:)

said...

ஆமாங்க இளவஞ்சி. நாங்க பிஜியிலே இருந்தப்ப அங்கே ஏகப்பட்டக் கரப்பான் பூச்சிங்க.
அதுவும் நடுராத்திரியிலே வந்து கிச்சன் விளக்கைப் போட்டாப் போதும். ஆயிரக்கணக்கானதுங்க
பதறி அடிச்சுக்கிட்டு ஓடும்.

ஒருதடவை நாங்க அங்கிருந்து இந்தியாவுக்குப் போயிட்டு ஒருமாசம் கழிச்சு திரும்பி
வந்துபார்த்தா, எங்கமேலே இருக்கற வெறுப்பைக் காமிக்கிறமாதிரி, மரக்கரண்டிங்களையெல்லாம்
கடிச்சுத்தின்னுருக்குங்க.

இன்னோரு விஷயம் அப்பத்தெரிஞ்சுக்கிட்டது. மெரீன் பெயிண்ட் இருக்கு பாருங்க
இந்த போட்டுங்களுக்கெல்லாம் அடிப்பாங்களெ அது, அதைக் கிச்சன் கப்போர்டுகளிலே உள்ளே அடிச்சா
கரப்பு வராதாம்!

said...

ர்ர்ரீஈஈஈஈஈஈஈஈங்ங்ங்... என்னன்னு உங்களுக்குத் தெரியாதே இப்ப...எங்க கொசுவின் ரீங்காரம்தாங்க...அந்தப் பாட்டைக் கேட்காம எப்படிதான் தூங்குவீங்களோ...பாவம் நீங்க..

இங்க வந்திரலாம்னு சொன்னீங்களே..இதல்லாம் இப்ப தாங்குவீங்களா?

சரி டீச்சர், போர்ஷன் முடிஞ்சி போச்சு; பரிச்சை ஒண்ணும் இல்லியே?

said...

தருமி,

என்னாது போர்ஷன் முடிஞ்சுபோச்சா? இனிமேதான் இருக்கு:-)
இதுவரை வந்ததெல்லாம் ஒரு பத்திரிக்கைக்குப் போகுதேன்னு கொஞ்சம் நாகரிகமா எழுதுனது.
இனிமேப்பட்டு நம்ம 'நடை' வந்துரும் பாருங்க.

said...

//இந்த நாடு ஒரு தீவாக இருப்பதால் விஷப்பிராணிகளும் கிடையாது//

மெய்யாலுமா??

அதாகப்பட்டது, நம் குடும்பத்துக்குள் குழப்பம் விளவிச்ச விஷ ஆளூ! :P

// உங்கள் பையில் ஒரு ஆரஞ்சுப் பழம் இருந்தால் கூட உடனடியாக 200 டாலர்கள் முதல்
10,000 டாலர்கள் வரை ( மூன்று லட்சம் ரூபாய்) வரை அபராதம் செலுத்த வேண்டும்!
//

ஞானப்பழத்துக்கு என்ன விலைன்னு கேட்டுச்சொல்லுங்க!

said...

ஞானப்பழத்துக்கு விலையா?

பழம் நீ அப்பா ஞானப் பழம் நீ அப்பா.......

தமிழ்ஞானப் பழம் நீ அப்பா.....

said...

இதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

நம்ப முடியவில்லை.......இல்லை..........இல்லை.......

அதெப்படி கொசுவே இல்லாம இருக்க முடியும்? மழை பொழிகிறது. பூமி நனைகிறது. தண்ணீர் தேங்குகிறது. அங்கே கொசுக்கள் வளராதா? பூச்சிகள் பெருகாதா? இதில் ஏதோ சூது இருக்கிறது.

அனேகமா அந்த நாட்டு மண்ணுல சத்தே இல்லைன்னு நெனைக்கிறேன். அதான் புழு பூச்சிக கூட இருக்க மாட்டேங்குது. ஹி ஹி

said...

ராகவன்,
இங்கே மலைஅடிவாரம், காட்டுக்குள்ளெ போனால் 'சேண்ட் ஃப்ளை'ன்னு ஒரு பூச்சி இருக்கு. கொசுவைவிடக் கொஞ்சம் பெருசு. கடிச்சா நாமெல்லாம் வயலின் வாசிக்கணும். இதெல்லாம் ரெமோட் ஏரியாவுலேதான். ரெயின் ஃபாரெஸ்ட் உள்ள இடங்களீல் மட்டும்தான்.

said...

//எருமை மாடு, பாம்பு, தேள், கரப்பான் பூச்சி,பல்லி,கொசு, எறும்பு பல இடங்களில் கிடையாது.//

ஆச்சர்யமான தகவல்.

said...

கல்வெட்டு,

'எருமை'க்கு பதிலா நாங்க இருக்கோம்:-)

கொஞ்சம் வெய்யில் வந்தா ஈ வந்துரும். அது எக்கச் சக்கம். அதுவும் ரொம்ப ஆரோக்கியமான ஈங்க. நம்ம இந்தியா ஈ 4 சேர்ந்தா இது ஒண்ணு.

said...

//'எருமை'க்கு பதிலா நாங்க இருக்கோம்:-) //

:-))))))

said...

ஹை பலூன் மாமா,

வாங்க வாங்க.

இங்கே பலூன் நிறைய விக்கறாங்க. வந்து வாங்கிக்கிட்டுப் போங்க.