Thursday, October 20, 2005

உதவி செய்யுங்க.

தம்பிங்களா & தங்கைகளா,

வீட்டுக்கு ஒரு JAM வந்திருக்கு. Imatன்னு போட்டுருக்கு. PDA with phone etc.
கைக்கு அடக்கமா இருக்கு.

ச்சும்மா எக்ஸ்ப்ளோர் செஞ்சுக்கிட்டு இருந்தப்ப நம்ம தமிழ்ப்ளொக் சைட் அதுலே வருது!
ஆனா எழுத்துங்க மட்டும் குட்டிக்குட்டி சதுரம்(-:

'என்னவோ இருக்கு, ஆனா என்னன்னு தெரியலையே' சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்:-)

எப்படி ஃபான்ட் மாத்தணுமுன்னு தயவுசெஞ்சு சொல்லுங்க. கை துறுதுறுன்னு இருக்கு.

இப்படிக்கு
அக்கா
(கணினி கைநாட்டு)

11 comments:

said...

அக்கா,
i-mate-ஆ? வாழ்த்துக்கள். என் விஷ்-லிஸ்ட்ல இருக்கு.

அநேகமா, Encoding ல தான் பிரச்சனை. IE browser தானே அதிலேயும்? என்கோடிங் ஆப்ஷன் அந்த பிரவுசரில் இருந்தா - யுனிகோட்-னு (இப்போ Western European-ஆ இருக்குமுன்னு நினைக்கிறேன்) மாத்திப்பாருங்க.

இது வழக்கமான பி.ஸி.க்களில் செய்வது. அந்தப் போனிலும் விண்டோஸ்தாங்கறதால ட்ரை பண்ணிப் பாருங்களேன்.

said...

தம்பி,
என்கோடிங் ஆப்ஷன் வரமாட்டேங்குதே(-:

வியூ போனா அதுலே டூல் பார் ஸ்டேட்டஸ் பாரோட நின்னு போகுது.

ஒரேதா Western European மட்டும்தான் இருக்குபோல.

said...
This comment has been removed by a blog administrator.
said...

i know the technique. but i wont teach you since you addressed yourself as 'akkaa"!

by the by what is that thing..? hi...hi..

said...

Dharumi,

This is pocket PC with phone & camera.

In the view section, you can go into options and there are so many languages. But even I select UTF8
I am unable to get th text in Tamil.

Let some experts reply to the post.

said...

துளசி அக்கா,

நான் என்னுடைய கை கணிணியில் வலை மேய்வது உண்டு. தினமலர், விகடன் எல்லாம் தெளிவாக வருகிறது. அதற்கு font-ஐ இறக்கம் செய்து Start >> Programs >> File Explorer >> Show >> My Device >> Windows >> Fonts directory யில் நேரடியாக copy செய்து பார்த்தேன். விகடன், தினமலர் எல்லாம் சரியாக தெரிகிறது ஆனால் யுனிகோடு மட்டும் இப்படி செய்தவுடன் கட்டம் கட்டமாக தெரிந்தது மறைந்து எழுத்து தெரிகிறது. ஆனால் இகர உகரங்கள் உடைந்து தனித்தனியாக தெரிகிறது. இன்னும் முயற்சி செய்துவிட்டு உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

said...

நன்றி சுரேஷ். வெற்றிகிடைச்சவுடன் கட்டாயம் சொல்லித்தாங்க ப்ளீஸ்.

said...

என்ன துளசி
டமால்னு `நியூசி'யில் இருந்து `பிசி'க்கு தாவிட்டீங்க?

said...

என்ன செய்யரது தாணு.
கண்ணுமுன்னாலே 'JAM'இருக்கறப்போ Bread ஐத் தேடுறது சகஜமில்லையோ?

அதுலே தமிழ்ப்பதிவு( என்னத்துக்கு சுத்திவளைக்கரது, துளசிதளம்தான்) எப்படி வருதுன்னு பாத்துறவேணாமா?:-))))

said...

என்னக்கா,
any luck so far?

said...

தம்பி.

ஊஹூம்.....

ஆமாம், இது யாரு முக்காடு போட்டுக்கிட்டு?