Friday, October 14, 2005

நியூஸிலாந்து பகுதி 15

மவோரிகளின் வருகை.

கிட்டத்தட்ட 1200 வருசத்துக்கு முன்னே பாலினீஷியன்கள் சிலர் ஒரு படகுலே ஏறிக்கிட்டு வேற இடத்தைத் தேடிப்
போறாங்க. அந்தப் படகுங்க 15 முதல் 25 மீட்டர் நீளமுள்ளதாம். அதுக்குக் கையாலெ முடைஞ்ச பாய்களையே
செயிலாக் கட்டியிருந்திருக்காங்க. ராத்திரி நேரத்துலே நட்சத்திரங்களை வச்சுத் திசைதெரிஞ்சுக்கிட்டுப் போறதும், பகலிலே
கடல்லே நீர்மட்டம் உயர்றதைவச்சுப் போறதுமா இருக்காங்க. கடல்பறவைகள் கூட்டமா இருந்தா பக்கத்துலேயே
கரை வந்திருமுன்னு பார்த்துக்கிட்டே இருக்காங்க. கிழக்குப் பாலினீஷியாவுலே இருந்து, இங்கே வந்து சேர அந்தக்
காலத்துலே எவ்வளவு நாளாகி இருக்கும்?

இப்பக் கணினியைவச்சுக் கண்டுபிடிச்சிருக்காங்க, இதுக்கு ஒருமாசமாவது ஆகியிருக்குமுன்னு! வந்தவுங்க
இங்கே என்னென்ன கொண்டுவந்தாங்களாம்? அதானே, ஊருக்குப் போறப்ப வெறுங்கையாவாப் போவாங்க?

எலி, நாய், சக்கரைவள்ளிக் கிழங்கு, டாரோன்னு சொல்ற இன்னொருவகைக் கிழங்கு, 'யாம்' னு சொல்ற ஒரு கிழங்கு
அப்புறம் சில காய்கள்(gourd) இப்படி. கரைக்கு வந்தபிறகு இங்கே ஏராளமான உணவுவகைங்க கிடைச்சிருக்கு.
மீன் பிடிச்சுத் தின்னுருக்காங்க. பறவைகளையும் பிடிச்சு ஸ்வாகா. அப்ப இங்கே மோஆ ( Moa)ன்னு ஒரு பெரிய
பறவையினம் இருந்திருக்கு.ஒரு பறவை சுமார் 200 கிலோ வருமாம். பறக்கத்தெரியாத/முடியாத பறவையினம்.
போதாதா என்ன?

நிறைய படகுங்க வந்துச்சு, ஆனா அதுலே ஒண்ணு மட்டுமே கடலிலே மூழ்காம இங்கே வந்து சேர்ந்துச்சுன்னும் சொல்றாங்க.
இல்லையில்லே, சில படகுங்க வெவ்வேற காலக் கட்டத்துலே வந்துச்சுன்னும் சொல்றாங்க. இவுங்கதான் மவோரிங்க.
வந்து இறங்குனவுங்க கூட்டமாக் கொஞ்சநாள் இருந்துட்டுக் கொஞ்சம் கொஞ்சமா பிரிஞ்சு போய் வசிக்க ஆரம்பிச்சிருக்காங்க.
இப்படி ஒவ்வொரு குழுவாப் போனவுங்க அவுங்க குழுவுக்கு ஒரு பேர் வச்சிருக்காங்க. இந்தக் குழுவுங்கதான் 'இவி' (iwi)ன்றது.

இந்தக் குழு மொத்தமும் ராத்திரி தூங்கறதுக்கு ஒரு இடம் அமைச்சுவச்சுக்கிட்டாங்க. பகலெல்லாம் உணவு தேடி
அலையறதும் இரவானா எல்லோரும் ஒரு கூரையின்கீழ் தூங்கறதுமா வாழ்க்கை நடக்குது. பெண்கள் எல்லாம் இங்கே கிடைக்கிற
ஓலைமாதிரி இருக்கற ஃப்ளாக்ஸ் ( flax)செடியை எடுத்து முடையறது வழக்கமாம். பாய், கூடைன்னு பின்னிக்கிட்டு இருந்திருக்காங்க.

அப்பெல்லாம் இவுங்க வாழ்க்கை வெறும் முப்பதே வருஷம்தானாம். ரொம்பக் கொஞ்சம்பேர்தான் நாப்பதுவயசைத்
தாண்டி வாழ்ந்திருக்காங்க. இவுங்ககிட்டே மருந்துவகைகள் ரொம்ப இல்லையாம்.ஆனா அப்ப வியாதிகளும் அதிகம்
இல்லையாமே! இவுங்க ஊரான பாலினீஷியாவைவிட இங்கே குளுர் கூடுதலா இருந்ததாலெ அதுக்கேத்தமாதிரி
இவுங்க வாழ்க்கைமுறையும் கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டே வந்துச்சு.ஒருவிதமான பேப்பர்மல்பெரிச் செடியிலிருந்து
'தாபா'( tapa)ன்னு சொல்ற துணிகளை செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. கூடவெ ப்ளாக்ஸ் நாருலே பின்னிய மத்த உடைங்களும்.
குளுர் தெரியாம இருக்க வீடுகளையும் கட்ட ஆரம்பிச்சிருக்காங்க. குளுர் காலத்துலே சாப்பாட்டுக்காகச் சக்கரைவள்ளிக்
கிழங்கை பிடுங்கி வீட்டுக்குள்ளெ வச்சுக் காப்பாத்தியும், மிச்சம்வர்ற கிழங்குகளை காலநிலை மாறும்போது மறுபடி
நட்டுவச்சு விவசாயமும் செய்திருக்காங்க. ஆனா இந்த ஜனங்க அப்ப நல்ல உழைப்பாளிகளா இருந்திருக்காங்க.


அங்கங்கே பரவிப்போன குழுக்களுக்குள்ளே அப்பப்பச் சண்டை வர்ரதும் ஒரு கிராமத்தை இன்னொரு கிராமத்து ஜனங்க
அட்டாக் செய்யறதும் நடந்துக்கிட்டு இருந்துச்சு. வீடுங்க எல்லாம் ரொம்பச் சின்னச்சின்னதா இருந்திருக்கு. எல்லாம் மண்ணு
வீடுங்க. ஒவ்வொரு கிராமத்துலேயும் சாப்பாட்டுச்சாமான்களை ஒளிச்சுவைக்க ஒரு இடம் வச்சிருந்தாங்களாம்.
சண்டை வந்துருச்சுன்னா, தப்பி ஓடிரலாம். எதையும் எடுத்துக்கிட்டு நேரம் வீணாக்கவேணாம் பாருங்க.

ஒவ்வொரு கிராமத்திலும் தூங்கறதுக்குன்னே கட்டுன இடம்தான் ஃபாரெனூஇ (wharenui. இவுங்க உச்சரிப்புலே
wha வுக்கு ஃப ) இங்கே தான் ஒவ்வொரு ட்ரைபும் சாயங்காலம் ஒண்ணாக்கூடி அன்னைக்கு நடந்த நிகழ்வுகளையெல்லாம்
பேசி, புள்ளைங்களுக்கு கதைகள் எல்லாம் சொல்லி ராத்திரியானா தூங்கிடறது.

இந்த நாடு கடக, மகர ரேகையைவிட்டு வெகுதூரம் விலகி இருக்கறதாலே சூரியவெளிச்சம் கோடையிலே நிறையவும்,
குளுருலே சீக்கிரம் இருட்டறதுமா இருக்குல்லே. இவுங்களோ ட்ராப்பிகல் இடத்துலே இருந்து வந்தவுங்க.
இவுங்க மொதல்லே வந்தப்பக் கோடையா இருந்திருக்கும் போல. பகல் பொழுது ரொம்ப நேரத்துக்கு இருக்குல்லே.
காலையிலே நாலரைக்கே வெளிச்சம் வந்துருது. ராத்திரி ஒம்பதரை வரை பகல் வெளிச்சம் இருக்குதே. இதைப்
பார்த்து அதிசயிச்சு இந்த நாட்டுக்கு அவோடீரோஆ( Aotearoa = land of the long day light)ன்னு பேர் வச்சிருக்காங்க.
சிலபேர் இத்குக்கு அர்த்தம் land of the long white cloudனு சொல்றாங்க. ஆனாலும் முந்தினதுதான் சரியான
விளக்கமா இருக்குதுல்லே?

இவுங்க மொழிக்கு எழுத்துரு கிடையாது. படிப்புன்னா எல்லாமே ஒருத்தருக்கொருத்தர் பேசி சொல்லித்தர்றதுதான்.
மூதாதையரோட வீரம், அப்ப நடந்த நிகழ்ச்சிகள் எல்லாமெ செவிவழிச் செய்தியாத்தான் சந்ததிகளுக்குப் போய்ச்
சேர்ந்திருக்கு.

இப்படியே ஒரு ஆயிரம் வருசம் போயிருச்சு. வெள்ளைக்காரங்க இங்கே வந்தப்ப, இங்கே ஏற்கெனவே சுமார் ஒரு
லட்சம் மவோரிஜனம் இருந்திருக்கு. இந்த மவோரிங்க 175 செ.மீ. உயரம் ! நல்ல திடகாத்திரமா இருந்திருக்காங்க.
(அப்ப வெள்ளைக்காரங்களோட சராசரி உயரம் 160 செ.மீ இருந்துச்சாம். ) உழைப்புக்கு அஞ்சாம இருந்திருக்காங்க.
சம்பாரிச்சதையெல்லாம் சேர்த்துவைக்கணும், பிற்கால சந்ததிக்குக் கொடுக்கணும் என்ற எண்ணம் இல்லாம எல்லோரும்
சேர்ந்து கிடைக்கறதையெல்லாம் பகிர்ந்தே வாழ்ந்திருக்காங்க. ( இந்த சேர்த்துவைக்காம செலவு செய்யற வழக்கம்
இன்னும் இருக்குதான். அந்தந்த வாரம் கிடைக்குற காசை ரெண்டு மூணு நாளுலேயே செலவு செஞ்சுடறாங்க)



இன்னும் வரும்


*********************************************************************

13 comments:

said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!!

எலிய எதுக்கு முதக்காரியமா கொண்டு வந்தாங்க??

//இப்படியே ஒரு ஆயிரம் வருசம் போயிருச்சு. //
ஆயிரம் வருஷத்தை இவ்வளவு எளிமையா விளக்கமில்லாம பதிச்சதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன். இதுக்கு பின்னாடி ஆயிரம் வருஷத்தில இந்த பயலுக ஒண்ணுமே சாதிக்கலேங்கற பாசிஸ நிலைப்பாடு இருப்பதா தெரியுது!!! :P

said...

ராமநாதன் தம்பி,

எலி தானே படகுலே வந்து ஏறிக்கிட்டு இருந்துருக்கும்:-)

அதான் அங்கங்கே மோஆங்களை வேட்டையாடிக்கிட்டுக் குடும்பக்கதைகள் சொல்லிக்கிட்டுக் குடும்பத்தைப்
இப்ப மோஆ பறவைகளே உலகத்துலே இல்லே. சில குகைகளிலே இந்த எலும்புக்கூடைப் பார்த்துத்தான் இதுங்க இங்கே இருந்ததே தெரியவந்திருக்கு.

பெருக்கியிருக்காங்கல்லே.
//ஆயிரம் வருஷத்தில இந்த பயலுக ஒண்ணுமே சாதிக்கலேங்கற....//

சும்மார் 30 பெர் வந்தாங்களாம். 1000 வருசத்துலே அது ஒரு லட்சமாச்சுன்னா பாருங்களேன்.
இது சாதனையிலெ வராதா?

said...

எனக்கு இன்னும் அந்த 92,000 வரலை..ஆனா நியுசி பதிவு மட்டும் 15 பாகம் வந்தாச்சு..இது நல்லாயில்லே..

;;;; சுட , சுட பதிவு ..துளசியக்கா ஸ்பெஷல்... பார்க்க வீ எம் பக்கத்துக்கு போங்க......;;;

said...

//சேர்த்து வைக்காம செலவு செய்யிற பழக்கம்// அப்போ உங்க ஊர் பாங்க் எல்லாம் வேஸ்ட்தானா??

said...

வீ.எம்,

ஸ்பெஷல் பதிவு பார்த்தேன். அந்த ஈட்டியாலே குத்தப்படறது யாரு?

வலைப்பதிவாளர்களா?
வாசகர்களா?
இல்லை , கோபாலா?

said...

தாணு,

அதெப்படி? இங்கே அரசாங்கம் கொடுக்கற உதவிப்பணமே பேங்க் மூலமால்லே வரும்.

கை நீட்டி வாங்கவேணாம். தானே அவுங்க அக்கவுண்ட்டுலே 'டாண்'ன்னு வந்துரும்.

said...

துளசியக்கா,
நல்லா இருக்கீங்களா?. உங்க நியூசிலாந்து தொடர் நல்லா போகுது.

said...

அட, முத்துத்தம்பி!
எப்படி இருக்கீங்க? எங்கெ சொல்லாமக்கொள்ளாம ஆளையே ரொம்பநாளாய்க் காணோம்.

ஊருக்குப் போயிருந்தீங்கன்னு உங்க புதுப் பதிவு சொல்லுது.

நல்லா இருங்க.

said...

What is your Mail ID akka?

said...

V.M.

tulsigopal@xtra.co.nz

said...

ராமனாதன்,
நான் 'இங்க இன்னைக்கு வரலை'!எனக்கு இன்னைக்கு proxy கொடுத்துருங்க...சரியா?

said...

அடேங்கப்பா..........ஒரு இனத்தோட வரலாறையே கதை மாதிரி சொல்லீருக்கீங்க. பிரமாதம். அந்தளவுக்கு எளிமையான வரலாறாகவும் வாழ்க்கை முறையாகவும் இருந்திருக்கிறது. இன்னும் இருக்கிறது என்று நினைக்கிறேன். நல்ல தகவல்கள் நிறைந்த பதிவு.

அது சரி. இவர்களுடைய கலைகள் என்னென்ன?

said...

ராகவன்,

1000 வருசத்தை கொஞ்சம் நீட்டிமுழக்கிச் சொல்ல வேணாமா?
இதுக்கப்புறம் 2 பதிவு வந்துருச்சே இன்னும் பார்க்கலையா?

பொறுமை ப்ளீஸ்.