கிறைஸ்ட்சர்ச்சில் விஜயதசமி
நம்ம வீட்டிலே விஜயதசமிக்கு ஒரு பூஜை நடந்தது. எல்லார்வீட்டுக்கும் நவராத்திரிக்குமஞ்சள் குங்குமம்/வெத்தலை பாக்கு வாங்கிக்கவும், சில வீடுகளுக்குக் கொலு பார்க்கவும்போற பழக்கம் இங்கே, இந்த ஊர்லே ஆரம்பிச்சுக் கொஞ்சநாளா நடந்து வருது.
வசதியை முன்னிட்டு, இதெல்லாம் வீக் எண்ட் மட்டுமுன்னு ஆகிப்போயிருச்சுல்லே. எல்லாருக்கும்ஒரு வழின்னா, இடும்பனுக்கு வேற வழி இல்லையோ? நான் தான் இங்கத்து 'இடும்பி'. அதனாலேகொலு முடிஞ்சு எல்லாரும்'அப்பாடா'ன்னு இருக்கறப்ப விஜயதசமிக்கு நம்ம வீட்டுக்குக் கூப்புடறதுவழக்கமாயிருக்கு. நம்ம வீட்டுலே 'சாமி' இருக்காருல்லே!
மொதல்லே எனக்கு 'சாமி வந்தது' எப்படின்னு சொல்லவா?
எடுங்க கொசுவத்தியை. ஆ.... கொளுத்தி பக்கத்துலே வச்சுக்குங்க. அந்தப் புகையை உத்துப்பாருங்க.அதுலே மசமசப்பாத் தெரியுதா... அதுதான்.....
வருசம் 1999. வெள்ளிவிழா மணநாள் கொண்டாட்டத்துக்காக உலகை 'இடம்' வந்துகிட்டு இருந்தோம்.இந்தியாவுலே 10 நாள். ஒம்போதாவதுநாள் வந்துச்சு. எல்லாஷாப்பிங்கும் முடிஞ்சது. பாக்கறவங்களைப் பார்த்து, சொந்தங்களைச் சந்திச்சு, திங்க ஆசைப்பட்டதுகளையெல்லாம் 'ஏக்கத்துடன் பார்த்து' முடிஞ்சது. பெட்டிகளையெல்லாம் அடுக்கியாச்சு.தைக்கக்கொடுத்த துணிகள் இன்னும் வரலை. அதுவந்தவுடனே எடுத்துவச்சுக்கிட்டுக் கிளம்பவேண்டியதுதான்.
பகல் சாப்பாட்டுக்குப் போயிட்டு அப்படியே ஸ்பென்சர் ப்ளாஸாவுலே ஒரு சுத்து. 'சிற்பி'னு ஒரு கடை கண்ணுலேபட்டுச்சு. ச்சும்மா ஒரு ரவுண்டு வரலாமுன்னு உள்ளே போனா, அன்பான வரவேற்பு. ச்சின்னதா எருக்கம் பிள்ளையார்இருந்தார். அவரைக் கொண்டுபோகலாமா, இங்கே உள்ளெ விடுவாங்களா இல்லை, மரம்ன்றதாலே தகராறு ஆயிடுமான்னுஒரேதா மனசுக்குள்ளெ குழப்பம்.
அப்ப ,'கண்டதை வாங்கறதுக்குப் பதிலா இந்தமாதிரி ஒண்ணு வாங்கிவையேன் வீட்டுலே'னு இவர் சொல்றார்.எந்தமாதிரின்னு திரும்பிப் பார்த்தா....... அட, ரோஸ்வுட்லே செஞ்ச அழகான ஸ்வாமி மண்டபம்!
'நிஜமாவே வாங்கிக்கட்டுமா?'ன்னு கேட்டேன். ஆமான்னு தலையை ஆட்டுறார். 'சாமி மண்டபம் மட்டும்வாங்குனா எப்படி? அதுக்குள்ளெ வைக்க 'சாமி' வேணாமா?'ன்னு கேட்டதுக்கு, 'என்ன வேணுமோ பார்த்துவாங்கிக்கயேன்'னு பதில் வருது. ஆஹா... இது போதாதா? வாழ்க்கையிலே மொதமொதலா நான் கேட்டு நச்சரிக்காமதானாய் வாங்கிக்கச் சொல்றார்:-)
அழகான மஹாவிஷ்ணு 40 செ.மீ. உயரம், அவருக்கு மேட்ச்சா ஒரு மஹாலக்ஷ்மி. போதுமா?ஊஹூம். போதாது. புள்ளையாரும் வேணுமே. நின்னுக்கிட்டு இருக்கற புள்ளையார். எல்லாரும்பயங்கரக்கனமா இருக்காங்க.
'அதெல்லாம் கவலைப்படாதீங்க, நாங்க நல்லா பேக் செஞ்சு அனுப்பிடறொம். 'ஸீ மெயிலில்' அனுப்புனாஅவ்வளவா செலவாகாது'ன்னு சொல்லிட்டாரு கடைக்காரர். அப்போ அங்கே ஒரு அருமையான சங்கீதம்,கேக்கறதுக்கு 'சாக்ஸஃபோன்'மாதிரி இருக்கு. ஆனா கர்நாடக சங்கீதம்! என்ன ம்யூஸிக் போட்டிருக்கீங்கன்னுகேட்டேன். அங்கெ இருந்த உதவியாளர் பெண்மணி, ஓடிப்போய் அந்த காஸட் கவரைக் கொண்டுவந்து காமிச்சாங்க.'கதரி கோபால்நாத்'னு போட்டிருக்கு. அதையும் மனசுக்குள்ளெ குறிச்சு வச்சுக்கிட்டேன்.
நாளைக்குக் காலையிலே உங்களுக்கு ஃபோன் செய்யறோம். நீங்க வந்து 'பேப்பர்ஸ்'லே கையெழுத்துப் போட்டுரணும்.மத்தவேலையெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்னு சொன்னாங்க.அங்கிருந்து கிளம்பி, பக்கத்துலெ ஒரு 'சோனி ம்யூஸிக்' கடையிலே நுழைஞ்சு அந்தக் கதரி கோபால்நாத், அப்புறம் இன்னும் சில ஸி.டிங்களை வாங்கிக்கிட்டுத் திரும்புனோம்.
இவ்வளவு நேரம் ஆனதுக்கப்புறம்கூட, என்னாலே என்ன நடந்துச்சுன்னு நம்பவே முடியலை. எதாவது வாங்கணுமுன்னு சொன்னாவே'எதுக்கும்மா கண்டதையும் வாங்கறே?'ன்னு சொல்றவர் தானே 'வாங்கிக்க வாங்கிக்க'னு எப்படிச் சொன்னார்?
'ஏங்க, சாமிக்கு இன்னும் சில பூஜைப்பொருட்கள் வாங்கணுமே'ன்னு சொல்லி தங்கமாளிகைக்குள்ளெ, கொஞ்சம்போலபூந்துவிளையாடிட்டு (நம்புங்க. எல்லாம் சாமிக்குத்தான்!)வீட்டுக்குப்போனோம்.
மறுநாள் காலையிலே பத்துமணிவாக்குலே ஃபோன் செஞ்சாங்க. போய் எல்லாவிவரமும் எந்த போர்ட், என்ன விலாசமுன்னு சொல்லி 'பேப்பர்ஸ்' எல்லாம் சரிபார்த்துக் கையெழுத்துப் போட்டுட்டுசொந்தக்காரங்களை, நண்பர்களைப் பார்த்துச் சொல்லிக்கிட்டு, இப்போதைக்குக் கடைசித்தடவையா நல்லஃபில்டர் காஃபி, முறுகலான நெய்ரோஸ்ட்ன்னு கொஞ்சம் உள்ளெ தள்ளிக்கிட்டு ஏர்ப்போர்ட்டுக்குப் போய் சேர்ந்தோம்.
சிங்கப்பூர், சிட்னின்னு சுத்திட்டு ஒருவழியா இங்கே வந்து சேர்ந்துட்டோம். சாமி அடுத்த ஆறுவாரத்துலே வந்துருவாருன்னுசந்தோஷமா இருந்துச்சு. எண்ணி ரெண்டே வாரத்துலே இங்கே 'கஸ்டம்ஸ்'கிட்டே இருந்து ஃபோன்வருது, நமக்குஒரு பார்ஸல் இந்தியாவுலே இருந்து வந்திருக்குன்னு. யார் அனுப்பினாங்கன்னு கேட்டா நம்ம 'சிற்பி'யோட விலாசம்சொல்றாங்க. இவரோ ஊர்லே இல்லே. எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை. ரெண்டுவாரத்துலே எப்படி...? கொரியன் ஏர்வேஸ்லே பறந்துவந்திருக்கார். என்னைவிட்டுட்டு அவராலே இருக்க முடியலை:-)
எல்லாப்பேப்பர்களையும்( நம்ம காப்பி) எடுத்துக்கிட்டுப் போனேன். ட்யூட்டி கட்டணுமுன்னு சொல்றாங்க. அப்புறம்டீ செஸ்ட் லே வந்திருக்கு. ஃப்யூமிகேட் செய்யணும். அதுக்கும் கூடுதலாக் காசு கட்டணுமுன்னு சொன்னாங்க.'இது எங்க மதசம்பந்தமான விக்ரஹங்க. சொந்த உபயோகத்துக்குக் கொண்டுவந்திருக்கேன். ட்யூட்டி, ஜிஎஸ்டி ( இங்கே எல்லாத்துக்கும் goods & service taxes 12 1/2% கட்டிரணும்) கட்டுறேன். ஆனா ஃப்யூமிகேட் செய்யக்கூடாதுன்னு கொஞ்சம் வாக்குவாதம் செஞ்சு ஒரு கண்டிஷனோட ஜெயிச்சேன். பெட்டியைத் திறக்கறப்ப எதாவதுபூச்சி இருந்தா உடனே அந்த மரப்பொட்டியைக்(உள்ளெ இருக்கறதை எடுத்துக்கிட்டுத்தான்) கொளுத்திடணும்.அங்கே கிளியரன்ஸ் வாங்கிக்கிட்டு பெட்டியைவாங்கிக்க வேற இடத்துக்குப் போனேன்.
ஒரு க்யூபிக் மீட்டர் பொட்டி. அங்கே இருந்தவங்களே நம்ம வண்டியிலே ஏத்திட்டாங்க. சாமியோட வீட்டுக்குவந்தேன்.மகளும் ஸ்கூலிலே இருந்து வீட்டுக்கு வந்துட்டா. ரெண்டுபேருமாச் சேர்ந்து பொட்டியைத்திறந்து சாமிங்களை வெளியேஎடுத்தோம். பொட்டியிலே ஒரு பூச்சி பொட்டும் இல்லே.
நம்ம ஹாலிலே மண்டபத்தைச் செட் செஞ்சு சாமிங்களை வச்சாச்சு. அட்டகாசம இருக்காங்க. வீட்டுக்கே ஒரு அம்சம்வந்தமாதிரி இருக்கு. அன்னிக்குச் சின்னதா ஒரு பூஜை செஞ்சாச்சு. இவ்வளவுதூரம் மெனக்கெட்டு வந்தவங்களைச்சரியா உபசரிக்கவேணாமா? எனக்குக் கடவுள் மேலே பக்தி இருக்குன்னாலும், அவ்வளவா பூஜைபுனஸ்காரமெல்லாம்செய்யத்தெரியாது. நான் சோம்பேறி வேற.ஆனா ஒண்ணு, மனசாட்சிக்கு விரோதமில்லாம நடந்துக்குவேன். இந்த 'சாமி'யோ தானாய்த்தான் இங்கே நம்ம வீட்டுக்கு வந்திருக்கார். அவருக்குத் தெரியாதா, நான் எவ்வளவுதூரம் பூஜையெல்லாம் நியமப்பிரகாரம் செய்வேன்னு?
எங்க இவர் டூர் முடிச்சுத் திரும்பிவந்தபிறகு, ஒரு சனிக்கிழமையன்னிக்கு கொஞ்சம் விஸ்தரிச்சுப் பூஜை செய்யலாமுன்னுமுடிவு செஞ்சு, அதேபோல இங்கே இருக்கற நம்ம நண்பர்களைக் கூப்பிட்டு புள்ளையாருக்கும், பெருமாளுக்கும்,தாயாருக்கும் விசேஷ பூஜை செஞ்சுட்டு விஷ்ணு சகஸ்ரநாமம் படிச்சோம். பூஜை முடிஞ்சு பிரசாதம், இரவு சாப்பாடுன்னுஅமோகமா நடந்துச்சு. முப்பது பேருக்குச் சமைக்கவும் முடிஞ்சது. கொஞ்சம் திட்டம் போட்டுச் செஞ்சா மூணுநாள்வேலை. எங்க தோழி ஒருத்தர் பூஜையெல்லாம் நல்லா சம்பிரதாயமாச் செய்வாங்க. அவுங்களையே நம்ம வீட்டுப்பூஜைக்குப் 'பண்டிட்'டா நியமனம் செஞ்சுட்டோம். 'லேடி பண்டிட்!' எவ்வளவு முன்னேறிட்டேன், பார்த்தீங்களா?
அப்புறம் விஜயதசமியன்னிக்கு ஒரு பூஜை செய்யலாமுன்னு தோணிச்சு. அது அப்படியே வருசாவருசம் விஜயதசமிப்பூஜைன்னே ஆயிருச்சு.
இந்தவருசம் வீடு மாத்திவந்துட்டோமில்லையா. இந்த வீட்டுலே மொதத்தடவையாச்சேன்னு கொஞ்சம் கூடுதலானநண்பர்களைக் கூப்புட்டோம். நமக்குத் தெரிஞ்சவுங்கன்னு பார்த்தா ஒரு இருநூத்துக்குமேலே ஆட்கள் இருக்காங்கதான்.ஆனா வீடு கொள்ளாதே. அதனாலே ஒரு 60 பேரைக் கூப்புட்டோம். அதுலே ஒரு நாலுபேர் வரலை.
சாமிப் பிரசாதம் மட்டும் நான் செய்யலாமுன்னும், இரவுச் சாப்பாடு இங்கே இருக்கற இந்தியன் ரெஸ்டாரண்ட்டுலேஏற்பாடு செய்யலாமுன்னும் முடிவாச்சு.
சக்கரைப் பொங்கல்வெண்பொங்கல்எலுமிச்சை சாதம்தேங்காய் சாதம்தயிர் சாதம்சுண்டல்( வெள்ளைக்கடலை)பாயாசம்
இது பிர'சாத' வகை.
ஜீரா ரைஸ்நான் ரொட்டிஉருளை காலிஃப்ளவர் கறிசன்னா மசாலாமிக்ஸட் வெஜி. கறிமட்டர் பனீர்தயிர்வடைகுலாப் ஜாமூன்
இது வெளியிலே ஏற்பாடு செஞ்சது.
பொதுவா இங்கே விசேஷங்களிலே வேலை ஈஸியா இருக்கட்டுமுன்னு டிஸ்போசபிள் தட்டுதானேஉபயோகிக்கறோம். குழம்பு ஊத்துனா அது ஒருபக்கம் வழிஞ்சுக்கிட்டு ஓடுறப்ப ஒரு பதட்டம் வந்துருதில்லே?
நம்ம ரெஸ்டாரண்டு ஓனரே வீட்டு விசேஷங்களுக்கு இருக்கட்டுமுன்னு அம்பது ஸ்டீல் தட்டுங்களும்,அம்பது ஸ்டீல் க்ளாஸும் இந்தியாவுலே இருந்து கொண்டாந்திருக்கார். நம்ம வீட்டுப் பூஜைக்குத் தரேன்னுசொல்லிட்டார். புத்தம் புதுசு. நம்ம வீட்டுலேதான் ஓப்பனிங் செரிமனி. அதைவச்சு சம்பிரதாயமாபந்திவச்சு விளம்பி ஜமாய்ச்சாச்சு. ச்சும்மா சொல்லக்கூடாது. சாப்பாடு நல்ல ருசியா இருந்துச்சுன்னுஎல்லாரும் ஒண்ணுபோலச் சொன்னாங்க.
அன்னைக்கு இரவு எல்லா விருந்தினர்களும் போனபிறகு, நம்ம நண்பர் 'கணேஷ்' வந்து பாத்திரங்களைச்சுத்தம் செய்யக் கைகொடுத்தார். அவர்மட்டும் வரலேன்னா, நாங்க காலி!
புள்ளையாரே 'கணேஷ்' ரூபத்துலே வந்துட்டார்.
இந்தவருஷம் அமோகமா நடந்துச்சு. அடுத்தவருசம்? பொழைச்சுக் கிடந்தாப் பாக்கலாம்.
பி.கு:
இந்தப் பதிவை தாணுவுக்குத் தெரியாமப் படிக்கவும்.

29 comments:
'சாமி இறங்கி' ஒரு ஆட்டம் போட்டுறீப்பீங்கன்னு நினச்சு வந்து பாத்தா..புஸ்ஸுன்னு போயிரிச்சி.
விருந்து போட்டோ ஒண்ணும் இல்லியா?
//'ஏங்க, சாமிக்கு இன்னும் சில பூஜைப்பொருட்கள் வாங்கணுமே'ன்னு சொல்லி தங்கமாளிகைக்குள்ளெ, கொஞ்சம்போலபூந்துவிளையாடிட்டு (நம்புங்க. எல்லாம் சாமிக்குத்தான்!)வீட்டுக்குப்போனோம்//
நம்புவதற்குக் கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஏற்கனவே நாங்க "அம்மன்" பத்தி தெரிஞ்சவங்களாச்சே!
அறுபது பேர் அழைக்கப்பட்டு 56 பேர் வந்து பரிசு கொடுத்துட்டுப் போன விவரம் இன்னும் தாணுவுக்குத் தெரியலையா?
தாணு வீட்டில்தான் இருக்கிறாரா உங்க புள்ளையார் 'கணேஷ்' ?
தருமி அவர்கள் சொன்னதுதான் நான் சொல்ல நினைத்ததும்...
தருமி & மூர்த்தி
போட்டேனே, படம் போட்டேனே. பந்தி என்ன, சாமி என்ன என்ன என என்ன....ஹூம்...
இந்த ப்ளொக்கருக்கும் எனக்கும் எதோ ஏழாம்பொருத்தம் போல(-:
ஒரு படத்தையும் உங்க கண்ணுலே காட்டமாட்டேங்குதே, நான் என்ன செய்ய?
மோகன்தாஸ் & ஐநோமீநோ
நன்றிங்க.
ராம்கி.
அந்த 56 பரிசெல்லாம் இல்லீங்க. நம்ம தாணு அனுப்பறவர் கொண்டுவந்தாத்தான் உண்டு
குமரேஸ்,
அதுவந்துங்க 'சாப்பாடுப் படமோ அல்லது விவரங்களோ' இருந்தால் நம்ம தாணுவுக்கு
சாமிவந்துரும். உடனே ஒரு டயட் சார்ட்டைத் தூக்கிக்கிட்டு இங்கே ஓடிவருவாங்க.ஆனா
கையிலே பரிசு ஒண்ணும் இருக்காதுன்றது வேற விஷயம்....
கணேஷ் நம்மகிட்டேதான் இருக்கார். அப்படி அனுப்பிறமுடியுங்களா?
அடடா! இதுதான் சாமி வந்த கதையா......அப்படியே பண்டிட்டாயிட்டீங்க வேற. இனிமே ஒங்கள பண்டிட்ஜீன்னும் கூப்பிடலாமா?
ராகவன்,
பண்டிட் நானில்லை. இங்கே இருக்கற நம்ம தோஸ்துதான்.
கோயமுத்தூர்காரங்க.
என்னடா இழுழுழுழுழவ..மேட்டருக்கு வா..
கும்பிட போன தெய்வம் ..குறுக்கே வந்ததடா -ரேஞ்சுக்கு நம்ம துளசியக்க ஏதோ அராஜகம் பண்ணிருங்காங்க போலன்னு விழுந்தடிச்சு வந்து பாத்தா ,பக்தி பழமா உக்காந்திருக்கீங்க
உங்களுக்கு நிஜமாகவே சாமி வந்து டேய் கோபால் எங்கடா ஆத்தா கேட்ட 200 பவுன் நகை என்று நீங்கள் சாமியாடினால் கோபால் என்ன செய்வார்.
அட கோயமுத்தூர்க்காரங்களா!
சரி வேற பேரு வைக்கனுமே........
கடவுள் வந்த கலையரசின்னு பட்டம் கொடுக்கலாம். இந்தப் பதிவோட பேரத்த்தான் செந்தமிழ்ல மாத்தீருக்கேன். எப்படியிருக்குன்னு சொல்லுங்க. கெசட்டுல மாத்தீருவோம்.
நாமெல்லாம் உலகை வலம் வரும்போது இடும்பர்கள் `இடம்’ தான் போவாங்க போலிருக்கு. காலையிலிருந்தே நச் நச்ன்னு தும்மல். யாரோ ரொம்ப அன்பா நினைக்கிறாங்கன்னு பார்த்த துளசியோட கிசுகிசுப்பு ( தாணுவுக்கு தெரியாமல் படிக்கவும்னு) பதிவுலே பறந்துகிட்டு இருக்கு. நிஜமாவே உங்களுக்கு ஒரு டயட் சார்ட் ரெடி பண்ணவேண்டியதுதான்.
ஜாலியாக படிக்க துளசியின் பதிவுக்கு போங்கன்னு என் பதிவில் கேன்வாஸ் பண்ணியதற்காகவாவது அந்த `சுண்டல் பாயாசம்’ ரெசிபி அனுப்பி வையுங்க.
அன்பளிப்பு கலாசாரத்தை அந்த 56 பேருக்கு துளசி சொல்லிக்கொடுக்கலை போலிருக்கு ராம்கி.
என்ன செய்யறது ஜோ, வயசாகிக்கிட்டு வருதுல்லே! அப்பப்ப கொஞ்சம் பக்திப் பழமாவும் ஆனாத்தானே மேலே போய் கணக்கு ஒப்பிக்கலாம்:-)
ரவி,
நீங்க கேட்டத கோபால்கிட்டே சொன்னேன்.
அவர் 'பழம் நீ'க்கு ஒன்வே டிக்கெட் எடுத்துவச்சிருக்காராம்:-)))
தாணு,
பாயசம் ரெஸிபியா? அஞ்சு முந்திரி போட்டது வேணுமா?
ராகவன்,
'கெஸட்' லே மாத்தீரலாமா? இதுலே 'கோயமுத்தூர் குசும்பு' ஒண்ணும் இல்லையே?:-)))
ஏதோ மாரியம்மா மாரியம்மான்னு ஆடப்போறீங்கன்னு பாத்தா, கலக்கலா சாப்பிட்டு அடக்கி வாசிச்ச்ருகீங்க..
கலக்குங்குங்க..
'மயில்' வந்துதா???
ராமநாதன் தம்பி,
'மயிலை' மாமாவுக்குத் தூது விட்டிருக்கேன்.
இங்கே அடக்கி வாசிச்சேன்னு சொல்லிட்டு அங்கே தாணுவோட பதிவுலே
// சாமி வந்துருச்சுன்னு இன்னிக்கும் சாப்பாட்ட பத்தி பெரிய புராணம் எழுதியிருக்காங்க. உங்கள பாத்து வேற ஒரு நக்கல்..//
இப்படிப் போட்டுக்குடுக்கறதா?:-))))
இப்பத்தெரிஞ்சுபோச்சு. இனி தினம்தினம் சோறே:-)))
// ராகவன்,
'கெஸட்' லே மாத்தீரலாமா? இதுலே 'கோயமுத்தூர் குசும்பு' ஒண்ணும் இல்லையே?:-))) //
கவக, கோயமுத்தூர் குசும்பு நம்ம கிட்ட ஏது? தூத்துக்குடில பொறந்தவன் கிட்ட கோவையக் கேட்டா எப்படி!
பின்குறிப்பு - கவக என்பது கடவுள் வந்த கலையரசி என்பதன் சுருக்கம்.
துளசி
இப்பல்லாம் வீரப்ப சாமி கூட வர்ரதா விகடனல்ல படிச்சேன். அதப்பத்தி ஏதோ எழுதி இருக்கீங்கன்னு வந்து பார்த்தா வேறா கதை.
இந்தியாவிலிருந்து இது மாதிரி சாமான்ல்லாம் ஒழுங்கா அனுப்புறங்க. அழக்கா சுத்தி, காப்பீடு எடுத்து..
ஹை, வீரப்பசாமி வந்துருச்சா?
அப்ப இந்த வருசக்கொலுவுலே இடம் பிடிச்சிருக்குமே:-))
ஆமாம் பத்மா. நல்லா பேக் செஞ்சு அனுப்பறாங்கதான். நம்ம கடைக்குச் சாமான்கள்
அப்படித்தான் வந்துக்கிட்டு இருந்தது.
அத ஏன் கேக்கறீங்க. வீரப்பன் சமாதியில் ஒரு பொண்ணுக்கு சாமி வந்து என்ன கொன்னவங்கள பழிவாங்காமே விடமாட்டேன் அப்ப்டீன்னு சபதம் போட்டதா விகடனில் எழுதி இருக்கிறாங்க. இன்னும் கொஞ்சநாள் போனா வீரப்பன் கோவில் கூட வரும்
paati how to maintain sami vikraham(abishekam like).....what yoiu do?
வாங்க நான்.
இந்தக்குளிரில் அபிஷேகம் எல்லாம் செஞ்சால் சாமிக்கு ஜலுப்புப் பிடிச்சுக்கும்.
மானசீக அபிஷேகமும் அளவிலா அன்பும்தான் அவருக்கு.
இந்தியாவுக்குக் கொண்டு போன சமயம் நிறைய அபிஷேகம் செஞ்சுக்கிட்டார். தனியா ஒரு ப்ளாஸ்டிக் தொட்டி அவருக்குன்னே
வாங்கினேன்.
மத்தபடி நம்ம விக்கிரஹங்களுக்கு ஆடை அலங்காரம் எப்பவும் உண்டு. நானே பட்டுப்பாவாடைகள் விதவிதமான காம்பினேஷனில் தைச்சுருவேன்.
ஒன்னு இருந்தால் ஒன்னு இல்லை என்பது நம்ம சாமிகளுக்கும் பொருந்தும்:-)
உங்க சாமி கோவிலுக்கு போன த்ருப்திய குடுத்துட்டாங்க . எல்லாரும் அழகா இருக்காங்க . பாத்து பாத்து அலங்கரிச்சு இருக்கீங்க . அழகா set பண்ணி இருக்கீங்க .
வாங்க சசி கலா.
மனசுக்கு தோணும் காம்பினேஷனில் பட்டுப்பாவாடை தைச்சுப்போடுவேன்.
என்னோட பார்பி டால் அதுன்னு மகள் சொல்கிறாள்:-)))
இப்ப நகையும் நட்டும் கொஞ்சம் கூடிப்போச்சு:-))))
மயிலை விஜயா ஸ்டோர்ஸ் வாழ்க!
\\மனசுக்கு தோணும் காம்பினேஷனில் பட்டுப்பாவாடை தைச்சுப்போடுவேன்.
என்னோட பார்பி டால் அதுன்னு மகள் சொல்கிறாள்:-)))\\
படங்களைப் பார்க்கும்போது எனக்கும் உங்கள் மகள் சொன்னது சரிதான் என்று தோன்றுகிறது. கொடுத்துவைத்தக் கடவுளர்கள்.
Post a Comment