Wednesday, October 26, 2005

Cell ஊஊஊஊஊஊஊஊ

அல்காடெல் வோடஃபோன் ப்ரீபெய்ட் ஒண்ணு 2000லே மகள் கொடுத்தா( அவளுக்குஜப்பான்லே இருந்து ஒண்ணு அப்பா கொண்டுவந்து தந்தாருல்லையா, அதனாலே பழசைக் கழிச்சுக்கட்டநான் இருந்தேனே!) அதையே வச்சுக்கிட்டு காலம் ஓட்டிக்கிட்டு இருந்தேன். வெறும் இன்கமிங் மட்டும்தான்.அதனாலே வருசாவருசம் 'டாப்' பண்ணறகாசு அப்படியே வளர்ந்துக்கிட்டு இருந்துச்சு.

அதுலேகூடப்பாருங்க ஒருவருசம் முடியறதுக்குள்ளே 'டாப்' பண்ணலேன்னா இதுவரை இருந்த காசெல்லாம் போயிருமாம். கவனமாத்தான் வருசாவருசம் 20 டாலர் போட்டுவச்சுடறது. ஒருக்கா பார்த்தா அதை மறந்துட்டேன்.அப்ப நான் ஊர்லெ இல்லே. வந்தபிறகுதான் ஞாபகம் வந்தது.

எப்பவாவது ஃபோனைக் கையிலே எடுத்துக்கிட்டுப் போனாத்தானே? அதுபாட்டுக்கு எப்பவும்போல சார்ஜர்லே குந்திக்கிட்டு இருக்கும், பாவமா. மிஸ்ஸுடு கால்ஸ்,டெக்ஸ்ட் ( இதுதானே எஸ் எம் எஸ்)வந்ததுன்னு மெயில் பாக்ஸ் ஃபுல்தான். 'வெளியே போறப்ப மறக்காமஎடுத்துக்கிட்டுப் போ'ன்னு கோபால் சொல்லிக்கிட்டே இருப்பார். ஞாபகமா மறந்துருவேன்!

அதுலே இருக்கற வசதிகளை ஒண்ணும் பயன்படுத்திக்கக் கத்துக்கவேயில்லை. இதுக்கு நடுவிலே வீட்டுலே ஒரு நகைசெட்டை எங்கியோ வச்சுட்டுத் தேடிக்கிட்டு இருந்தேன். வழக்கமா மகள்தான் அதைப் போட்டுக்கறது. அவள் கிட்டே கேட்டா,எடுக்கவே இல்லைன்னு சொல்லிட்டா. நித்தியப்படி வேலைகள்லே 'காணாமப் போனதைக் கண்டுபிடி'ன்னு ஒரு ஐட்டம்இருக்கு. (இப்பத் தேடல் லிஸ்டுலே இருக்கறது 150 வருச கமாமரேட் காசும், ஷிவாவோட டெத் சர்ட்டிஃபிகேட்டும்,மகள் 'டெண்டூல்கர்'பத்தி ஒரு ப்ரோஷர் செஞ்சு அதுலே அவரோட கையெழுத்து வாங்கிவச்சிருந்ததும். என்ன ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமில்லாமன்னு பார்க்கறீங்களா? எல்லாமே ஒரே கவர்லே போட்டு வச்சிருந்தேன். வீடு மாறுனப்பமிஸ்ப்ளேஸ் ஆயிருச்சு!)


ஒரு நாள் ஏதோ சேலையை எடுக்க பீரோலே அடித்தட்டுலே கையை விட்டப்ப ஒரு பெட்டி தட்டுப்பட்டுச்சு. எடுத்துப்பார்த்தா,'காணாமப்போன கார்னெட் செட்'! அடடா, மகளைக் குடைஞ்சுக்கிட்டு இருந்தோமேன்னு பாவமாயிருச்சு.அவளோ ஸ்கூலில் இருக்கா.


ஒரு டெக்ஸ்ட் கொடுக்கலாமுன்னு பார்த்தா, எப்படின்னு படிச்சுருந்தாத்தானே? போன்கூட வந்த கைடை எடுத்துக்கஷ்டப்பட்டுப் படிச்சு ,எப்படியோ தட்டுத்தடுமாறி ஒரு டெக்ஸ்ட் அனுப்புனேன். 'கெஸ் வாட்? ஃபவுண்ட் நெக்லேஸ் செட். சாரி, ப்ளேம்டு யூ' உடனே அதுக்குப் பதில் வருது,'ஐ டிட்ன் ட் நோ யூகுட் டெக்ஸ்ட்'


இப்பத்தான் போன மாசம், வேற ஃபோன் வாங்கிக்கணுமுன்னு தோணுச்சு. வீட்டுலே அதைப் பத்திச் சொன்னதுக்குஆதரவும் எதிர்ப்பும் வருது. கோபால் ஆதரிச்சு. 'எந்த மாடல் வேணுமுன்னு பார்த்துச் சொல்லு. சிங்கையிலிருந்துவாங்கியாரேன்'னும், மகள், 'அது என்னத்துக்கு தண்டம். ச்சும்மா வீட்டுலே சார்ஜர்லே உக்காரவா? எனக்கு வாங்கித்தாங்க.என்னோடதை அம்மா எடுத்துக்கட்டும்'னும். ங்க்கும்..... எப்பப்பார்த்தாலும் எனக்கு பழசா? முடியாத்....


அப்பப் பழசை என்ன செய்யலாம்? 'தூக்கிப்போடு'ன்னு ரெண்டு குரலில் ஒரே பதில். அப்படி மனசு வந்துருதா என்ன?எதாவது 'ட்ரேட் இன் ஆஃபர்' வருதான்னு பார்த்துக்கிட்டு இருந்தேனா, ஆப்டுச்சு ஒண்ணு போன மாசம்.
ரெண்டு மூணு மாடல் இதுலே பட்டுச்சுதான். ஆனா காசை தண்டம் பண்ணவேணாமுன்னு தீர்மானிச்சுட்டு, 500 ஆஇருந்தது இப்ப சேல் ப்ரைஸ் 400. அதுக்கு ட்ரேட் இன் செஞ்சா இன்னும் 100 கம்மின்னு இருந்ததைப் பார்த்து300க்கு ஒண்ணு வாங்கினேன். அவுங்க போட்டது ஒரே ஒரு கண்டிஷந்தான். கனெக்ட்டடா இருக்கணும், சார்ஜரும் இருக்கணும்.அதான் இருக்கே:-)) கனெக்ஷன்ன்னு சொன்னப்பத்தான் நினைவுக்கு வருது ஒண்ணு சொல்லணுமுன்னு. ஒருக்கா'டாப் பண்ண' மறந்துட்டேன்னு சொன்னேன் பாருங்க, அது. மககிட்டே என்ன செய்யலாமுன்னு கேட்டா, 'அது எக்ஸ்பைரிஆனது, ஆனதுதான். வேற கனெக்ஷன் எடுக்கணும்'னுட்டா.

ஒரு ஈ மெயிலு தட்டிவிட்டேன். பதில் வந்துச்சு.

'ஊர்லே இல்லை. அதனாலே டாப் பண்ண மறந்துட்டேன்.'

'மன்னிக்கணும். இனி புதுசா கனெக்ஷன் எடுக்கணும்'

'அதெப்படி. என்னோட காசெல்லாம் போச்சே. ரெகார்டுலே பாருங்க.தவறாம டாப் பண்ணியிருக்கு இந்தமுறையைத் தவிர.'

'ம்ம்ம்ம்ம்ம்ம் ஆமாம். இப்ப என்ன செய்யலாம்?'

'இப்ப 20க்குப் பதிலா 40 டாலர் டாப் செய்யநான் ரெடி. ஆனா பழசும் போகக்கூடாது.அதுலே 60 டாலர்ஏற்கெனவே இருக்கு' கணக்கை நீங்க ஆக்டிவேட் செஞ்சா, உடனே 40 க்கு டாப்பிங் அப்'


'சரி. இப்ப ரீகனெக்ஷன் தரோம். நீங்க டாப் அப் செஞ்சுடுவீங்கெல்லே?'

'ஷ்யூர். இட்ஸ் அ டீல்'


விடாம மெயிலு போட்டுப் போட்டு உயிரைவாங்கி ரீகனெக்டட் ஆச்சு. இப்ப அக்கவுண்டுலே 100 டாலர்.


பொண்ணுகிட்டே சொன்னதுக்கு அவ ஒரே வார்த்தைதான் சொன்னா,'மைகாட்'னு.


இங்கே எங்கேபார்த்தாலும் பசங்க கையிலே ஒரு செல்ஃபோன் ஒட்டிக்கிட்டு இருக்கு. டுக்குடுக்குன்னுஅதுங்க டெக்ஸ்ட் பண்ணிக்கிட்டே இருக்குதுங்க. 'டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்டு ஸோ மச்'


கைக்கு அடக்கமா புது போன் வந்துருச்சு. சோனி எரிக்ஸன் k700i. இதுலே கேமெரா, ஆர்கனைஸர்,மீடியாப்ளேயர்ன்னு 12 வசதிங்க இருக்காம். ஃபோனைவிட யூஸர் கைடு கனமா மொத்தையா இருக்கு.இன்னும் ஒண்ணும் படிக்கலை. இன்கமிங் கால் எடுக்க மட்டும் தெரிஞ்சுக்கிட்டேன்.


'அப்ப ஃபோனை வாங்கிட்டு என்னதான் செஞ்சே? இப்பவாவது வெளியே போறப்ப கையிலேகொண்டுபோறயா?'ன்னு கேக்கறீங்களா?


இனி ஒண்ணோண்ணாப் படிக்கணும்.


அப்ப ஃபோன்?


அது தன்பாட்டுக்கு தேமேன்னு சார்ஜர்லே குந்திக்கிட்டு இருக்கு!

21 comments:

Anonymous said...

எங்கள மாதிரி இத்தன பேர வச்சுக்கிட்டு., இப்பிடி ஒரு பதிவா? தட்ட வேண்டியதுதானே எங்களுக்கு., போர இடத்துல இருந்தெல்லாம் பேசுனிங்கன்னா... அது எத்தன பதிவாச்சு?..... அடிக்க வாரதுக்குள்ள எஸ்கேப்ப்ப்ப்..........

said...

Alcatel பற்றி தமிழ் தமிழ் வலைப்பூக்களில் பேசி பேசி என் கம்பெனி பெருமை காக்கும் அக்காவிற்கு நன்றிகள் !

இந்த விளம்பரத்தினாலாவது stock உயருதா பார்க்கலாம்

said...

மரம்,

நம்பர் இருந்தாத்தானே தட்டலாம்:-))

said...

அட! அல்காடெல் உங்க கம்பெனியா?

ஸ்டாக்கைப் பத்திச் சரியாத் தெரியலையே(-:

said...

எப்படி இதெல்லாம்? சாதாரணமா நீங்க எதை எழுதினாலும் அது படிக்கச் சுவையாக இருக்கிறது. இடையிடையே நகைச்சுவை!

சோனி எரிக்சன்தான் போன மாசம் எங்க வூட்டுக்காரம்மாளுக்கும் வாங்கிக் கொடுத்தேன். யாரோ நோக்கியாதான் நெம்பர் 1ன்னு கொளுத்திப் போட்டுட்டாங்க போல. என்கிட்ட கொடுத்திட்டுது. சரின்னு நோக்கியா சின்னதா ஒன்னு வாங்கிக் கொடுத்தேன். இப்ப லேடஸ்ட் நோக்கியாவுக்கு அழுகுது.

ரெண்டு மாசத்துல எத்தினி போன்தான் நான் வாங்கிக் கொடுக்குறது?!

said...

நன்றி விஜி, வந்து கண்டுக்கிட்டுப் போனதுக்கு.

said...

மூர்த்தித்தம்பி,

ரெண்டுமாசத்துலே மூணாவது ஃபோனா? இது அக்கிரமம்:-) தண்ணிகிட்டே சொல்லுங்க.

நான் என்னோட ஃபோனை ட்ரேட் இன் செஞ்சப்பக் கடைக்காரப் பையன் சொன்னது, 'ஹை, இது ஃபர்ஸ்ட்
ஜெனெரேஷன் ஃபோன்'

இது எப்படி இருக்கு?

said...

சோனி எரிக்சன் k700i நல்ல சாய்ஸ் தான்.இதில நாங்க செஞ்ச ஒரு மென்பொருளும் இருக்கு.நீங்களும் மிஸ்ட் கால் விட்ற பார்ட்டியா???

(தீவாளிப் பலகாரம் எல்லாம் செஞ்சாச்சா???)

said...

சுதர்சன்,

நான் மிஸ்டு கால் பார்ட்டியில்லே. இதுலே இருந்து காலே போட மாட்டேன். அதுக்கு வேற போன் இருக்கு.
லேண்ட்லைன்லே கூப்புடுவேன்.
செல்லுக்கு செல்லுன்னா அதுக்கும் வேற ஒண்ணு இருக்கு கோபாலோடது:-))))

தீபாவளிப் பலகாரம் இன்னும் ஆரம்பிக்கலை. இப்ப்வே செஞ்சா தீபாவளிக்குள்ளே அது காலி:-)

said...

பெரிய இடத்துப் பெண்" - ஒண்ணுமில்லை; நம்ம எம்.ஜி.ஆர். பட டைட்டில். அத இந்தப் பதிவுக்குத் தலைப்பா இருந்தா எப்படின்னு யோசிச்சேன்.

said...

தருமி,

'நாடோடி' இது எப்படி இருக்கும்? இதுவும் எம்ஜியார் நடிச்ச படம்தான்:-))))

said...

சரி துளசியக்கா... தண்ணிகிட்டே மறக்காம சொல்லிப்புடுறேன்.

said...

மூர்த்தி,
விசா கிடைச்சதுக்குப் பார்ட்டி இல்லையா? அங்கே வர்றப்ப தண்ணிகிட்டே கேக்கணும்.

said...

ம்ம்ம்.... எங்கம்மாவுக்கும் சொல்லித்தரணும்.....

said...

நானும் குறுந்தகவல் அனுப்புவதில் படுசோம்பேறி - பெரும்பாலும் பேசிடுவேன்.

கீழே கண்ட தகவலையனுப்ப எவ்ளோ நேரம் ஆகுதுன்னு பார்த்துட்டு... இங்க போய் பாருங்க! உங்களுக்கும் $17000 வெள்ளி அடுத்தமுறை கிடைக்கலாம்:)

The razor-toothed piranhas of the genera Serrasalmus and Pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality they seldom attack a human.

அது தன்பாட்டுக்கு தேமேன்னு சார்ஜர்லே குந்திக்கிட்டு இருக்கு!
அதுக்குப் பாவம் போரடிக்கப்போகுது, ஒரு ப்ளூடூத் ஹெட்செட் ஒண்ணு வாங்கி பக்கத்துல போட்டுவைங்க:)

said...

K700 பத்தி எழுதிட்டீங்களே.. வெந்த புண்ல வேல... இன்னொரு சாபம் திருடுனவனுக்கு இன்னிக்கு.

//Alcatel பற்றி தமிழ் தமிழ் வலைப்பூக்களில் பேசி பேசி என் கம்பெனி பெருமை காக்கும் அக்காவிற்கு நன்றிகள் !//
அக்கா, டைட்டில் ஸ்பான்ஸர் ரெடி! இல்லியா ஆனந்த்?

//லேண்ட்லைன்லே கூப்புடுவேன்//
இங்க லேண்ட்லைன்லேர்ந்து கூப்டீங்கன்னா எடுக்கவே மாட்டோம். பின்ன எங்களுக்கு பில் எகிறிப்போய்டுமே!


//யாரோ நோக்கியாதான் நெம்பர் 1ன்னு கொளுத்திப் போட்டுட்டாங்க போல
//
ஆமாம் மூர்த்தி.. அதென்னவோ தெரியல. எல்லோரும் நோக்கியா நோக்கியான்னு பறக்கறாங்க. என்ன தான் இருக்கோ தெரியல. எனக்கு அலர்ஜி!

said...

எங்க ஊர்லே அல்காடெல் சர்வீஸ் பண்ண ஆள்கிடைக்காமல் என் பையனுக்கு பிரித்து படித்து விளையாடக் கொடுத்திட்டேன்

said...

சரி..உங்களுக்கும் வேணாம்; எனக்கும் வேணாம்.."நாடோடி மன்னி' அப்டின்னு வச்சுக்குவோம்.

said...

ராம்ஸ்,

இங்கே 'லேண்ட்லைன்'தான் ச்சீப். மாசாமாசம் 36 $ டெலிகாம் அடிச்சுடுதுல்லையா.
இங்கே லோகல் கால்ஸ் எல்லாமே இலவசம்(?). போனை யூஸ் செய்யறமோ இல்லியோ 36$ அழுதுரணும்.

அக்கம்பக்கதூருங்களுக்கு மட்டும் டோல்கால்.

said...

தாணு,

பையன் பெரிய எஞ்சிநீயராவான். நல்லதுதான்.

said...

தருமி,
உங்க ஆசையைக் கெடுப்பானேன்?
அப்படியே ஆக்கட்டும் என்று 'உத்தரவிடுகின்றேன்'

என்ன இருந்தாலும் மன்னி இல்லையா? பாருங்க உடனே பந்தா வந்துட்டது:-)